Thursday, May 6, 2010

வேங்கை

பூதச்சாமி, வடக்குவாச்செல்லியம்மன் கோயிலைத் தாண்டி கருங்குளத்துக் கரை மீது ஏறியபோது நன்றாக இருட்டியிருந்தது. கரையின் வலது புறம் பெரிய கரும்பனைகள் வரிசையில் நின்றிருந்தன. அதற்குக்கீழே துவங்கியிருந்தன கண்ணுக்கெட்டிய தூரம் வரை விளை நிலங்கள். அது நடவு முடிந்திருந்த காலம். இடதுபுறம் கரைமுட்ட தண்ணீர் நிரம்பியிருந்த கருங்குளம். குளத்துக்கரை மாட்டு வண்டி செல்லுமளவில் நல்ல அகலமானது. இருபுறமும் புதர்கள் மண்டிக்கிடந்தன. இடையிடையே இருந்த ஆலமரங்கள் அந்நேரத்துக்கு பெரும் அச்சத்தைத் தருவதாக இருந்தன. பூதச்சாமி இதற்கெல்லாம் அஞ்சுகிறவனில்லை. இடைகாலுக்கு சென்று திரும்பும்போது தாமதமாகிவிட்டால் இந்த வழியாக நடந்து திரும்புவது வழக்கமான ஒன்றுதான். இந்தக்கரையில் இரவு நேரங்களில் நரிகள் நடமாட்டம் இருப்பதாக பேச்சு இருந்தது. இவன் கண்டதில்லை எனினும் இடுப்பைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். வலுவான மடக்குக்கத்தியொன்று தோல் பெல்டுக்குள் சிக்கியிருந்தது. அவனது வலது கையில் உரச்சாக்கு ஒன்றை கொத்தாக பிடித்துக்கொண்டிருந்தான். அதனுள் உருண்டையாக எதுவோ இருந்தது.

மாலையில் பெய்திருந்த மழையில் வழியெங்கும் சேறும் சகதியுமாயிருந்தது. அதனால் அவனால் வேகமாக நடக்கமுடியவில்லை. அமாவாசையை நெருங்கிக்கொண்டிருந்த நாளெனினும் தேய்ந்த நிலவையும் கூட அன்று காணமுடியவில்லை. இருட்டு அசாத்தியமாக இருந்தது. சரியாக கரைப்பாதையில் நடுவில் வலது புற சரிவில் பொலிமாடன் கோவில் ஒன்று இருந்தது. கோவில் என்பதைவிட புதர்களுக்கு நடுவே ஓர் ஒற்றைப்பீடம் என்று சொல்லலாம். அதை நெருங்கியதும் சரிவில் இறங்காமல் பாதையிலிருந்த படியே கையிலிருந்த சாக்குப்பையை பீடத்தினருகே விழுமாறு வீசினான் பூதச்சாமி. பை அதையும் தாண்டி கீழே விழுந்தது. அது சரிவில் புதர்களில் சிக்கிக்கொண்டதா? அல்லது அதையும் தாண்டி கீழே முதல் வயலிலேயே விழுந்துவிட்டதா தெரியவில்லை. அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட நேரமில்லாமல் பூதச்சாமி ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

சற்று தூரம் கூட சென்றிருக்கமாட்டான், திடீரென என்ன நினைத்துக்கொண்டானோ இடது புறம் குளத்துக்குள் இறங்கினான். சகதியில் கால்கள் புதைய சற்று தூரம் நடந்து நீந்தத்துவங்கியவன், கரைக்கு இணையாக சற்று தூரத்தில் நீந்தி ஒரு வளைவில் மீண்டும் கரையேறினான். வேட்டியை அவிழ்த்துப் பிழிந்து தலையைத் துவட்டிக்கொண்டே ஊரை நோக்கி நடக்கத் துவங்கினான்.

ன்றிலிருந்து ஆறு நாட்களுக்கு முன்னர்..

பொலபொலவென பொழுது விடிந்துகொண்டிருக்கும் ஒரு அதிகாலை நேரத்தில் பரமசிவமும், பூதச்சாமியும் கிழக்கே பனங்காட்டுக்குள் உட்கார்ந்துகொண்டிருந்தனர். ஏற்கனவே கலயத்திலிருந்த பாதிக் கள்ளைக் குடித்திருந்தனர். 'யண்ணே.. போதுமா இன்னொன்னு தரவா?' என்று கேட்டுவிட்டு பதிலை எதிர்பாராமல் மற்றவர்களைக் கவனிக்கப் போனான் வியாபாரி. அவனைக் கண்டுகொள்ளும் நிலையில் இவர்கள் இருவருமே இல்லை. பரமசிவம் ஒரு பீடியைப் பற்றவைத்துக்கொண்டான். பூதச்சாமிக்கு அந்த பழக்கம் இல்லை ஆதலால் அவன் இவனை கேட்கவும் இல்லை.

பரமசிவத்தின் கடும்கோபம் அவன் முகத்திலேயே தெரிந்தது. பதற்றமாக இருந்தான். கலயத்திலிருந்த மிச்சத்தை காலி செய்யத்துவங்கினான். ஏற்கனவே அவன் கோபத்துக்கான காரணத்தைச் சொல்லியிருந்ததால் பூதச்சாமியும் அதிர்ச்சியிலிருந்தான். இருப்பினும்,

"என்ன மாப்ள நீயி, மெதுவாக் குடி.."

"என்னல நாயம் இது.? நா மூணு பிள்ளையள வச்சிக்கிட்டு நாயி படாத பாடு படுதேன். கொஞ்ச கூட ஈவு எரக்கமே இல்லாம இப்பிடி பண்ணிப்புட்டானுவளே.."

"பொறுமையா இரு மாப்ள.. என்ன பண்ணுததுன்னு பாக்கலாம்"

"என்னத்த பொறுமையா இருக்கச்சொல்லுத.. நா என்ன பூராத்தையுமா கேட்டேன். எனக்கு வாழ வழியா ஒத்த வீடும், குறுணி வரப்பாடுந்தானே.. அதக்கூட குடுக்க மனசில்லன்னா என்னல மனுசங்க இவுங்க.. எல்லாத்துக்கு காரணம் அந்த மெட்ராஸ்காரந்தான்.. தாயோளி ஒத்தப்பைசா தராம ஏமாத்திட்டானே.." மனசு கொப்பளிக்க குபுக்கென கண்ணீர் பொங்கியது பரமசிவத்துக்கு.

"பொறுடா.." அவனை சமாதானப்படுத்த வார்த்தைகளில்லாமல் திணறினான் பூதச்சாமி.

"எல்லாவனையும் அந்தாளு படிக்கவச்சான், எக்கச்சக்கமா சொத்து சேத்து வச்சான். அவம் இருக்கும் போதே எங்களுக்கும் எதையாவது செஞ்சுட்டு போயிருக்கலாம்.. ஒரு எழவும் இல்ல.. எங்காத்தா, மூதேவிக்கி பொறந்தவ சாவுத வரைக்கிம் அவங்கிட்ட ஒத்த பேச்சு பேச மாட்டேனுட்டா.. இவுனுங்க பாத்து பண்ணுவானுங்கன்னு அவனும் போய்ச்சேந்துட்டான். அவம் இருக்கும் போதும் ஒண்ணும் பண்ணல.. செத்தும் ஒரு மண்ணும் கெடக்கல.. அவம் இருந்த இருப்புக்கு அவம் புள்ளன்னு நா சொல்லிகிட்டு இருக்குததுக்கு பிள்ளயளுக்கு மருந்த அரச்சிக் குடுத்துட்டு நானும் போய்ச்சேந்திரலாமான்னு இருக்கு.."

"என்ன பேச்சு பேசுத? எவன நம்பி நாம இருக்கோம்? நம்ம கையில நாம பொழச்சிருக்கணும் மாப்ள.."

"நா எதுக்கு சாவணும். திரும்பவும் போயிக் கேக்கேன், நானும் அவங்கப்பனுக்கு பொறந்தவந்தானே.. என்னமாது தரல, தாயோளி போட்டுத்தள்ளிட்டு வந்துருதேன். என்ன நடக்குதுன்னு பாத்துரலாம்"

"அவசரப்படாத மாப்ள.. யோசிச்சு செய்வோம். அத்தாளநல்லூர் பெரியவர வச்சி பேசுவம்.."

"அதெல்லாம் ஒண்ணும் வேலையாவாது.. அதுவே சாவக்கெடக்குது. அது வந்து பேசி என்னாவப்போவுது? அதும் பேச்சயும் இவுனுவ கேக்கமாட்டானுவ.. பாத்தாச்சி, நா சொல்லுததுதான் ஒரே வழி.." குமுறினான் பரமசிவம்.

எட்டூருக்கும் தெரிய வாழ்ந்தவர் பரமசிவத்தின் அப்பா சிவனு பாண்டியன். அவரின் சேத்துக்கிட்டவளுக்கு பிறந்தவர்கள்தான் இந்த பரமசிவமும் அவன் தங்கை சண்முகத்தாயும். சிவனு பாண்டியனின் மூத்த சம்சாரத்திற்கு பிறந்த ஆறு ஆண்பிள்ளைகள் செய்த துரோகத்தால்தான் பரமசிவம் இன்று கொதித்திக்கொண்டிருக்கிறான். சிவனு போய்ச்சேர்ந்து வருடம் பத்தாயிற்று. சில வருசங்களிலேயே பரமசிவத்தின் அம்மாவும் போய்ச்சேர்ந்துவிட சொத்துப்பிரச்சினையில் இவனுக்கும், இவன் தங்கைக்கும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார்கள் மூத்தாள் பிள்ளைகள். ஒருத்தன் வெளிநாட்டில் இருக்க, ஒருத்தன் சென்னையில் வக்கீலாக கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்தான். ஏனைய நால்வரும் சிவனு எங்கெல்லாம் தோட்டம் துரவென்று பெருக்கிவைத்திருந்தாரோ அங்கெல்லாம் விகே புரம், இடைகால், ஆலங்குளத்தில் என பரவியிருந்தனர் குடும்பம் குட்டிகளோடு.

இது நாள் வரை இழுத்துப்பிடித்தவர்கள் இதோ சென்ற வாரம் தங்களுக்குள் பாகம் பிரித்துக்கொண்டுவிட்டிருந்தனர். இவன் விஷயம் பற்றி பேச்சு வந்தபோது, 'எங்கப்பந்தான் ஊருக்கு ஒருத்தியன்னு வச்சிக்கிட்டு திரிஞ்சாரு, அத்தனப் பேத்துக்கும் பிரிச்சிக்குடுத்துட்டு நாங்க என்ன மணியாட்டிட்டு போறதா..' என்று மெட்ராஸ்காரன் சொல்லிவிட்டிருந்தான். அது விஷயமே இன்றுதான் பரமசிவத்துக்கு தெரியவந்தது. பத்து வருஷ போராட்டமும் தோல்வியில் முடிந்த ஆற்றாமையில் அழுதுகொண்டிருக்கிறான் இப்போது.

"மெட்ராஸ்காரன் வந்து பத்து நாளாச்சு, இன்னும் போகல.. எடகால்காரன் வீட்லதான் இருக்கான். என்னன்னு பாத்துருதுதேன் இன்னிக்கு.." பரமசிவத்தின் கோபம் அனைத்தும் ஆத்திரமாக அவன் கண்களில் மின்னியது.

ன்ன நடந்ததென பூதச்சாமிக்கு தெரியவில்லை. அன்றிலிருந்து ஐந்தாவது நாள் பரமசிவம் இடைகால் கல்குவாரி குட்டையில் செத்துக்கிடந்தான். காலம் பூராவும் கூட வந்தவன். புழுதித்தெருக்களிலும், சகதிக்காடுகளிலும் சுற்றித்திரிந்த நட்பு, தண்ணீரில் ஊதி உடல் பெருத்துக்கிடந்தது. எதற்குமே கலங்காத பூதச்சாமியின் கல்நெஞ்சம் கண்ணீர் கோத்தது. எட்டு வயதிலும், பத்து வயதிலும் அநாதையான அவன் பிள்ளைகள் அழுது அரற்றியதைக் காணச் சகியாமல் இறுதிச்சடங்கிலும் கூட நிற்காமல் கோபாலசமுத்திரம் வழியாக இடைகால் நோக்கி நடக்கத்துவங்கினான். தன்னிச்சையாக அவன் இடுப்பைத் தொட்டுப்பார்த்துக்கொண்டான். அவனது மடக்குக்கத்தி பசியோடு திமிறிக்கொண்டிருந்தது தோல் பெல்டுக்குள்.

.

33 comments:

நாய்க்குட்டி மனசு said...

'நான் முதல்' னு துள்ளுரதிலேயும் ஒரு குழந்தைத்தனமான சந்தோசம் இருக்கத்தான் செய்யுது. மண் வாசனை மிகுந்த நல்ல கதை. நீங்களும் நம்மூரு தானா? நினைச்சேன்.

புன்னகை said...

Thanks for dis one! :-)

தராசு said...

அருமை தல.

வட்டார மொழியில பேசறதுக்கு உங்களுக்கு சொல்லியா குடுக்கணும்.

வாழ்த்துக்கள்.

செல்வேந்திரன் said...

ஆமூகி ராக்ஸ்!

காவேரி கணேஷ் said...

வாலே, போட்டு தள்ளிட்டோம்ல,
எம்மூட்டு கூட்டாளிய போட்டு தள்ளிட்டா எங்கையி மசிரா புடுங்கும், உசிரல்ல எடுக்கும்.

எல ஆதி, இத்தினிகுண்டு இருந்துக்குட்டு நீயால்ல கத எழுதுனே, சும்மா எம்மனச கொள்ளையடிச்சிட்டல....

யப்பா பாண்டி, ஆதிக்கு ஒரு கலயம் நீச்ச தண்ணீ குடுல வெங்கோடைக்கு இதமா சாப்டுட்டு , அடுத்த கத எழுதும்..

வானம்பாடிகள் said...

அருமை ஆதி.

அனுஜன்யா said...

'வட்டார மொழி', 'மண் வாசனைக் கதை' போன்ற அரசியல் சரிநிலைகளுக்கு அப்பால்...இது ஒரு சராசரிக் கதை. ஆனால் நீங்களும் தான் என்ன செய்வீர்கள்? கொஞ்சம் தைரியமாக 'திரிபுகளின் வேர்' என்று கதை சொன்னால், முற்போக்காளர்களிடம் 'ஆணாதிக்கவாதி' பட்டம் கிடைக்கிறது. ஆனாலும், இன்னும் அதிகம் உங்க கிட்ட எதிர் பார்க்கிறேன்.

அனுஜன்யா

குசும்பன் said...

முருங்கை

தேக்கு

சவுக்கு

அரசமரம்

ஆலமரம்

☼ வெயிலான் said...

நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருக்கலாம் ஆதி!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நாய்க்குட்டி மனசு.
நன்றி புன்னகை.
நன்றி தராசு.
நன்றி செல்வேந்திரன்.
நன்றி காவேரிகணேஷ்.
நன்றி வானம்பாடிகள்.

நன்றி அனுஜன்யா. (கொஞ்சம் சுமார்தானோ..)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன். (யோவ் மரமண்டை, வேங்கைன்னா மரம் இல்லைய்யா..:-)

நன்றி வெயிலான். (டீல் ஓகே. ரைட்டு விடு)

நர்சிம் said...

ஆதி, கொஞ்ச நாட்களாக உங்கள் புனைவு எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். அற்புதமாய் வந்திருக்கிறது. உங்களின் வட்டார வழக்கு கதைகளைக் குறித்தும் இந்தக் கதை குறித்தும்,கதைமாந்தர்கள் குறித்தும் தனிப்பதிவாக எழுதவேண்டும் போல் உள்ளது. இந்தக் கதை அதை உறுதியும் படுத்திவிட்டது. எழுதுவேன்.

மிகப்பிடித்திருந்தது சொல்லிய விதம்.

Hanif Rifay said...

நல்லாருக்கு தல... அருமை...

பிள்ளையாண்டான் said...

நான் கூட‌ வேங்கைனா ம‌ர‌ம்னு தான் நினைச்சேன்!! க‌தை ந‌ட‌ந்த‌ ஊரு பேரா? ஹி ஹி...

செம‌ வாச‌னை... சூப்ப‌ர்!

குசும்பன் said...

ஆன் பிஹாப் ஆதி டுடே ஐ ஆம் கோயிங் டூ சே நன்றி எவ்ரிபடி!


//மண் வாசனை மிகுந்த நல்ல கதை. // எழுதும் பொழுது கொஞ்சம் ஈர மண்ணு தலையில் இருந்து கீபோர்ட் மேல விழுந்துச்சு அந்த வாசமாக இருக்கும் நாய்க்குட்டி மனசு


புன்னகை நான் தாங்க உங்களுக்கு நன்றி சொல்லனும் என் கதைய படிச்சதுக்கு!

தராசு ஒரு 90 உள்ளே போனதுக்கு நான் பேசும் எல்லாமே வட்டாரவழக்குதான்...கொஞ்சபோச்சுன்னா என்மேலேயே விழும் வழக்கு. லீனா மணிமேகலை மாதிரி.

செல்வேந்திரா ரஸ்குன்னு தானே டைவ் செய்யநினைச்சீர்?

//இத்தினிகுண்டு இருந்துக்குட்டு நீயால்ல கத எழுதுனே//
என்னை குண்டுன்னு சொல்லிறீயாலே! இல்ல குள்ளமுன்னு
சொல்லுறீயாலே?

வானம்பாடி என் அருமை உங்களுக்காச்சும் புரிஞ்சுதே!

அனுஜன்யா உளவு துறை தேடிக்கிட்டு இருக்கு, மாவோயிஸ்ட்டுகளுக்கு
ட்ரைனிங் கொடுக்கும் ஆள் மாதிரி எழுதும் பிளாக்கருக்கு எல்லாம்
ட்ரைனிங் கொடுக்கும் ஆள் யாருன்னு ஓடிபோய்டுங்க...

குசும்பன் நீ ஒருவன் தான்யா என் பதிவை ரெகுலரா படிச்சிட்டு
ஊக்கம் கொடுக்கும் ஆள்! டேங்ஸ்பா!

நன்றி வெயிலான், நகைங்களுக்கி கில்டிங் கொடுக்கும் ஆளுங்க
கிட்ட கொடுக்கிறேன் மெருகேற்றிதருவாங்க வீட்டில் ப்ரேம் போட்டு
வெச்சிக்குங்க!

நன்றி நர்சிம் //கொஞ்ச நாட்களாக உங்கள் புனைவு எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். //
ஒரே ஒரு டவுட் இதுக்கு பேருதான் புனைவா??

//உங்களின் வட்டார வழக்கு கதைகளைக் குறித்தும் இந்தக் கதை குறித்தும்,கதைமாந்தர்கள் குறித்தும் தனிப்பதிவாக எழுதவேண்டும் போல் உள்ளது.//
கலக்கலன்னு ஒரு வரி போடாம இம்மாம் பெரிய பின்னூட்டம் போட்டு ஒரு புல் அடிச்ச மாதிரி
என்னை மட்டையாக்கிட்டீறே இதுவே போதும்ய்யா!

நன்றி Hanif

நன்றி பிள்ளையாண்டான், இங்க என்னா முனியாண்டி விலாஸ் பிரியாணியா
போடுறோம் வாசனை சூப்பர், உப்பு தூக்கல்ன்னுக்கிட்டு:)))

வி.பாலகுமார் said...

நல்ல வேகமான நடை, பூதச்சாமியினுடையது.

ஆதி, சமீபத்தில் "கோபல்ல கிராமம்" படிச்சீங்களா?. எனக்கு இதை வாசிக்க ஆரம்பிக்கையில், நினைவு வந்தது.

குசும்பன் said...

நன்றி வி.பாலகுமார்

//நல்ல வேகமான நடை, பூதச்சாமியினுடையது.
// ஆமாங்க அவருதான் வேக நடை போட்டியில் மூன்று முறை சாம்பியன் சிப் ஷீல்ட் வாங்கியவர்!

//ஆதி, சமீபத்தில் "கோபல்ல கிராமம்" படிச்சீங்களா?. //

கோபல்ல கிராமத்துக்கு போனீங்களான்னுதானே கேட்கனும்.. இவரு படிச்சிங்களான்னு கேட்கிறாரு, சரி ஏதோ புக்கு இருக்கும் போல.. ஆமாங்க ஆமாங்க படிச்சேன் ரொம்ப நல்ல கவிதை புக்குங்க:)))

வி.பாலகுமார் said...

நன்றிக்கு நன்றி குசும்பன் :)

நன்றிகளுக்கு நன்றி குசும்பன் (இது ஆமுகி சார்பாக!)

கார்க்கி said...

ஆதி சார்பாக நன்றி சொல்லும் குசும்பனுக்கு நன்றி

அனுமதித்த ஆதிக்கு நன்றி

நன்றி வாங்கும்படி பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி

ஆணிகளையும், கடப்பாறைகளையும் தந்து ஆதியை அப்பீட் ஆக்கிய அவர் மேலாளருக்கும் நன்றி

கமெண்ட் பெட்டி உருவாக்கிய பிளாக்ருக்கும் நன்றி.

கணிணி தயாரித்து தந்த டெல்லுக்கு நன்றி

இணைய சேவை வழங்கும் ஏர்டெல்லுக்கு நன்றி

பில்கேட்ஸூக்கு நன்றி

NHM ரைட்டர் தந்தவர்களுக்கு நன்றி

மின்சாரம் தந்த ஆற்காட்டாருக்கு நன்றி

இன்னும் மிச்சமிருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

குசும்பன் said...

//(இது ஆமுகி சார்பாக!)//

பாலகுமார் என்னங்க இது ஆமுகி காலையில் முக்கி முக்கி ஆய் போவதுக்கு பதில் ஆமுகி ஆமுகி ஆமுகின்னு பத்து முறை சொன்னா சுலுவா போகும் போல:))))))) ஏதும் மந்திரமா?

*************
//கார்க்கி said...
ஆதி சார்பாக நன்றி சொல்லும் குசும்பனுக்கு நன்றி
//

நன்றிக்கு நன்றியா என்ன மன்னா இது?
புறாவுக்கு போரா பெரும் அக்கபோரல்லாவா இருக்கிறது:))))

தராசு said...

ஆரம்பிச்சுட்டாங்கைய்யா, ஆரம்பிச்சுட்டாங்கைய்யா,

எங்கிருந்துதான் வருவாங்களோ, இப்படி கண்ணு மண் தெரியாம அடிக்கறாய்ங்களே

பிரேமா மகள் said...

nice tamil...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி நர்சிம். (பெரிய பாராட்டு, நன்றி பாஸ்)

நன்றி ஹனிஃப்.

நன்றி பிள்ளையாண்டான். (மரமா? வேங்கைன்னா புலிய்யா புலி. அடுத்ததா கொட்டை எடுத்ததா? எடுக்காததான்னு கேக்காதீங்க. :-)) சும்மாயே சாமி வந்த மாதிரி ஆடுவாங்க, இந்த அழகில் நீர் வாசனை சூப்பர்னு எழுதினா என்னாகும்? கீழ பாத்தீங்கள்ல..ஹூம்)

நன்றி பாலகுமார். (கிரா எனது ஆதர்ஸம். ஆனால் கோபல்லகிராமம் இன்னும் படிக்கவில்லை :-(

ஆதிமூலகிருஷ்ணன் said...

எதிரிகள் நடமாட்டம் கொஞ்சநாளா அதிகமாகிக்கொண்டே போகிறது. நான் முடிவு எடுத்துட்டா அப்துல்லா பேச்சையே கேக்கமாட்டேன். ஜாக்கிரதையா இருந்துக்குங்க..

எதிரி நம்பர் 1 : முதல் எழுத்து 'கு'. இரண்டாவது எழுத்த சொல்லமுடியாது.

நம்பர் 2 : முதல் இரண்டு எழுத்துகள் 'கார்'.

பாலா அறம்வளர்த்தான் said...

அனு சொன்னதுபோல் கதை சராசரிதான் பாஸ். But, வட்டார மொழியும் சொல்லிய விதமும் நன்றாக வந்திருக்கிறது.

கதை சொல்லும் அந்த Craft நன்றாக கைகூடுகிறது - அதை வைத்துக் கொண்டு இனி என்ன சொல்லப் போகிறீர்கள்? அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள் :-)

Cable Sankar said...

வட்டார மொழி, கிராமம் என்பதை மீறி சொல்ல வந்தது மிக சாதாரணமாய் இருப்பது கொஞசம் வருத்தமே.. இன்னும்.. இன்னும் மெருகேத்தியிருக்கலாமே..

பி.கு.: நர்சிம் சொல்றதை நம்பாதீங்க..:)

பிரசன்னா said...

ஸ்க்ரீன்ப்ளே ரொம்ப வித்தியாசமா நல்லா இருக்கு..

ஆமா.. கிராமங்களில் உண்மையிலேயே இவ்வளவு கொலைகள் நடக்குதா..

Vidhoosh(விதூஷ்) said...

அய்.... அது நர்சிம்மா.. இப்போ டூப்ளிகேட்டு நிறையா இருக்கு ஆதி.. நம்பிடாதீங்க மக்கா....

கதை நல்ல கதையால்ல இருக்கு.

Vidhoosh(விதூஷ்) said...

அப்துல்லாவையும் குசும்பனையும் காணும்.. வெண்பூ வரல.. என்ன நடக்குது இங்க.

பாலா அறம்வளர்த்தான் said...

நான் நர்சிம்மை புரிந்தவரையில் அது நர்சிம்மின் பின்னூட்டமாய்த் தெரியவில்லை. சில நாட்களாய் என்ன நடக்கிறது என என்னால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. 'போலி டோண்டு' என்று ஒரு விஷயத்தைப் பற்றி இப்போதுதான் படித்து தலை சுற்றிப் போய் இருக்கிறேன் :-) யாரவது உங்கள் நண்பர்கள் விளையாடினால், இது விளையாட்டுதான் என சீக்கிரம் சொல்லி விடுவது நல்லது எனத் தோன்றுகிறது.

இரசிகை said...

//
கார்க்கி said...
ஆதி சார்பாக நன்றி சொல்லும் குசும்பனுக்கு நன்றி

அனுமதித்த ஆதிக்கு நன்றி

நன்றி வாங்கும்படி பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றி

ஆணிகளையும், கடப்பாறைகளையும் தந்து ஆதியை அப்பீட் ஆக்கிய அவர் மேலாளருக்கும் நன்றி

கமெண்ட் பெட்டி உருவாக்கிய பிளாக்ருக்கும் நன்றி.

கணிணி தயாரித்து தந்த டெல்லுக்கு நன்றி

இணைய சேவை வழங்கும் ஏர்டெல்லுக்கு நன்றி

பில்கேட்ஸூக்கு நன்றி

NHM ரைட்டர் தந்தவர்களுக்கு நன்றி

மின்சாரம் தந்த ஆற்காட்டாருக்கு நன்றி

இன்னும் மிச்சமிருக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
//


:)))


aathi sir.....
unga kathai/punaivu nallaayirunthuchchu!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பிரேமாமகள்.!
நன்றி பாலா.!
நன்றி கேபிள்.!
நன்றி பிரசன்னா.!
நன்றி விதூஷ்.!
நன்றி இரசிகை.!

@பாலா, விதூஷ் : நர்சிம் இட்டுள்ள பின்னூட்டம் ஒன்றும் என்னைத் திட்டவில்லையே, அவர் என் பதிவை பிடித்திருக்கிறது என்று சொன்னது அவ்வளவு ஆச்சரியமா உங்களுக்கு? அவர் நர்சிம்தானா என்று சந்தேகிக்கும் அளவுக்கு.? அவ்வ்வ்வ்.. அவர் நர்சிம்தான்.

அதிஷா said...

நல்ல புனைவு நன்றி குசும்பன்