Saturday, May 8, 2010

சேரிடம் சேராதவை


08.05.2010

எஸ்ஜி,

எண்களுக்கும் எனக்குமான விளையாட்டு என்றுமே ஓயாத ஒன்று. யாவுமே என் நினைவுத்திறனைக் கேலி செய்பவை. ஆனால் இன்று 'மே 8'. இது வெறும் எண்ணாகவோ, ஒரு தேதியாகவோ மட்டும் இருந்துவிடமுடியாது.

நான் என்னவெல்லாமாகவோ இருந்துகொண்டிருக்கிறேன். என்னை நானாக உணர வரும் சந்தர்ப்பங்கள் அரிதானவை. நீ அரிதானவள். என் உலக கோபத்தையும் உன் மீது மட்டுமே நான் கொண்டிருக்க என்னிடமிருக்கும் காரணங்கள் போதுமானவைதான். ஆனால் அது என்னால்தான் முடிவதில்லை. கோபத்தில் என் கன்னத்தைக் கீறிய நகங்கள் என் பிள்ளையின் பிஞ்சு விரல்களுடையவை. அவன் மீது நான் கொண்ட அளவிலேயே என் கோபம் உன் மீதானதும்.

ஸ்டிக்கர் பொட்டினை தன் குட்டிக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு அடிக்கடி எடுத்துப்பார்த்துக் கொள்ளும் ஒரு சின்னஞ்சிறுமியின் ஆர்வத்தை ஒத்ததாக இருக்கிறது, உன் நினைவுகள் எனக்கு. காலம் அடித்துச் சென்றுவிடாமல் அடிக்கடி எடுத்துத் துடைத்துப் பார்த்துக் கொள்கிறேன். குறுகுறுவென ஏதோ உள்ளுக்குள் ஓடும் அந்த சுகம் போதையாக இருக்கிறது.

வெடித்துக்கிடந்த பூமியில் விழும் முதல் துளியைப் போல எதற்காக இப்போதைய உனது அரிதான அலைபேசி அழைப்புகள்? எதைச் சொல்ல விழைகிறாய்? என்னிடம் கேள்விகளே இல்லாத போது.

இப்படியே இருக்கவிடு இறக்கும் வரையிலும். இன்றைக்கான வாழ்த்துகள் எஸ்ஜி.!

-கேகே.

எஸ்ஜி எழுதிய ஒரு கடிதம் இங்கே.
இன்னொரு 'மே 8' நினைவோடை இங்கே.
ஒப்புமை கொண்ட இன்னொரு புலம்பல் இங்கே.

23 comments:

dheva said...

//அருமை// வாழ்த்துக்கள்!

குசும்பன் said...

வர வர விஷேசத்தை கூட புனைவா அல்லது பின்நவினத்துவமா சொல்ல ஆரம்பிச்சிட்ட தல! இப்படியே போனா அய்யனார் கோயிலில் மண்ணு அள்ளிவெச்சிடுவேன் ஜாக்கிரதை!:)))))

எனிவே வாழ்த்துக்கள்!:)))

நாடோடி இலக்கியன் said...

நல்லாயிருக்கு ஆதி தலைப்பும்.

வால்பையன் said...

உங்க தைரியம் எனக்கும் வந்தா, மாசத்துக்கு பத்து வாழ்த்து சொல்லனுமே!

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////ஸ்டிக்கர் பொட்டினை தன் குட்டிக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு அடிக்கடி எடுத்துப்பார்த்துக் கொள்ளும் ஒரு சின்னஞ்சிறுமியின் ஆர்வத்தை ஒத்ததாக இருக்கிறது, ////////


மிகவும் ரசிக்க வைக்கிறது உங்களின் எழுத்து நடை . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்குங்க ஆதி

கார்க்கி said...

:((

Cable Sankar said...

/ஸ்டிக்கர் பொட்டினை தன் குட்டிக் கைப்பைக்குள் வைத்துக்கொண்டு அடிக்கடி எடுத்துப்பார்த்துக் கொள்ளும் ஒரு சின்னஞ்சிறுமியின் ஆர்வத்தை ஒத்ததாக இருக்கிறது, உன் நினைவுகள் எனக்கு.//

க்யூட்

எம்.எம்.அப்துல்லா said...

சேரிடம் சேருபவை பெட்டக்ஸ். சேரிடம் சேராதது என்னண்ணே???

அளவில்லா டவுட்டுடன்,
அப்துல்லா.

நேசமித்ரன் said...

//எதைச் சொல்ல விழைகிறாய்? என்னிடம் கேள்விகளே இல்லாத போது. இப்படியே இருக்கவிடு //

இந்த வரிகளுக்குள்தான் எத்தனை இரவுகளின் அடர்த்தி ... எத்தனை பகல்களின் வெக்கை

எம்.எம்.அப்துல்லா said...

//இந்த வரிகளுக்குள்தான் எத்தனை இரவுகளின் அடர்த்தி ... எத்தனை பகல்களின் வெக்கை

//

நேசமித்திரண்ணே, நல்லாருந்த ஆதி உங்களோடு சேர்ந்துதான் கெட்டுப்போய்ட்டாரு :))

குசும்பன் said...

எம்.எம்.அப்துல்லா PM சேரிடம் சேருபவை பெட்டக்ஸ். சேரிடம் சேராதது என்னண்ணே???//

இதை படிச்ச பிறகும் இனி ஆதி பதிவு எழுதுவாருன்னு நினைக்கிறீங்க:)))))))))))))

சுசி said...

//இப்படியே இருக்கவிடு இறக்கும் வரையிலும்.//

இது வரை நான் படிச்ச உங்க எழுத்துக்கள்ல ரொம்ப ரசிக்க வச்சது இதுதான்..

உடனவே இணைப்புக்களையும் படிச்சிட்டேன்.

ரொம்ப நல்லா இருக்கு ஆதி..

பிள்ளையாண்டான் said...

//எதைச் சொல்ல விழைகிறாய்? என்னிடம் கேள்விகளே இல்லாத போது.//

உணர்வுகளின் அப்பட்டமான உண்மை!! அருமை!!!

முந்தைய பதிவுகளின் இணைப்பிற்க்கு நன்றி!!

ஒன்று மட்டும் புரியவில்லை. மே-8 என்ன நாளாக இருக்கும்?? யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம்!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி திவா.!
நன்றி குசும்பன்.!
நன்றி இலக்கியன்.!
நன்றி வால்பையன்.!
நன்றி பனித்துளி.!
நன்றி கதிர்.!
நன்றி கார்க்கி.!
நன்றி கேபிள்.!

நன்றி அப்துல்லா.! (என்னடா குசும்பன் அமைதியா போறாரே மழைவந்துடுமோன்னு நினைச்சேன். அதானே, யாராவது ஒருத்தர் இருக்கணுமே.! இல்லன்னா எப்பிடி நைட்டு தூக்கம் வரும்?)

நன்றி நேசமித்திரன்.!
நன்றி சுசி.!
நன்றி பிள்ளையாண்டான்.!

கே.ஆர்.பி.செந்தில் said...

சேரிடம் சேரவில்லை எனினும்
எபோதும் இதயத்துள் ....

இரசிகை said...

vali.....:(

பா.ராஜாராம் said...

ஒரு சீரியசான பதிவு வாசித்த நிறைவு போச்சு அப்துல்லா.:-))

சரி,

அளவில்லா சிரிப்புடன்-வாழ்த்துகள்!

அறிவிலி said...

///வெடித்துக்கிடந்த பூமியில் விழும் முதல் துளியைப் போல எதற்காக இப்போதைய உனது அரிதான அலைபேசி அழைப்புகள்? ///

?!

அறிவிலி said...

//எம்.எம்.அப்துல்லா May 8, 2010 4:43 PM
சேரிடம் சேருபவை பெட்டக்ஸ். சேரிடம் சேராதது என்னண்ணே???

அளவில்லா டவுட்டுடன்,
அப்துல்லா. //

Piles வந்தா அதுவும் சேராது. :-)))

நல்லா கேக்குறாங்கப்பா டீடெயிலு...

ஆதிமூலகிருஷ்ணன் said...

செந்தில், இரசிகை, பாரா, அறிவிலி.. நன்றி.

Saravana Kumar MSK said...

//நேசமித்ரன்

May 8, 2010 4:46 PM

//எதைச் சொல்ல விழைகிறாய்? என்னிடம் கேள்விகளே இல்லாத போது. இப்படியே இருக்கவிடு //
இந்த வரிகளுக்குள்தான் எத்தனை இரவுகளின் அடர்த்தி ... எத்தனை பகல்களின் வெக்கை//


//ஆனால் உன்னால் காதல் கொல்லப்பட்டபோது நான் உன்னைக்கொன்றேன். காமம் தனித்துவிடப்பட்டது. உடலில் வேர் பிடித்து காமம் தனித்தே திரண்டு வளர்ந்திருக்கும் இப்போது உனது அழைப்பு.. கண்ணியமா? அப்படியென்றால்.?

நான் உன் கண் பார்த்தே பேசுவேன்..

“ஆகாஷ், நடக்க ஆரம்பிச்சுட்டானா.?”//


ஒரு கடப்பாறையை நெஞ்சில் குத்தியது போலிருக்கிறது

SanjaiGandhi™ said...

குசும்பனை வழி மொழிஞ்சி வாழ்த்து சொல்லிக்கிறேன்.. கொய்யால 4 இளநீர் ரெடியா இருக்கு.. வாடி அடுத்தவாட்டி ஹெவியா கவனிச்சிடறோம்..