Monday, May 10, 2010

கோடைக் கொண்டாட்டம்

தற்போது ஏதோ ஒரு டிவி சானலில் ஏறத்தாழ இப்படியொரு விளம்பரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

“கோடைமழை கொண்டாட்டம்.. தினமும் காலை 6 மணியிலிருந்து இரவு 12 மணி வரை ஒளிபரப்பாகும் அத்தனை நிகழ்ச்சிகளையும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். நிகழ்ச்சிகளின் இடையிடையே கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் எழுதுங்கள். அதிர்ஷ்டசாலிகளுக்குக் கிடைக்கும் சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா, தவறவிடாதீர்கள் கோடைமழை கொண்டாட்டம்..”

எனக்கு என்ன ஆச்சரியம் என்னவென்றால் இரவு 12 மணியிலிருந்து காலை 6 மணி வரைக்காவது மக்கள் தூங்கித்தொலையட்டும் என்ற நல்லெண்ணமாவது இவர்களுக்கு மிச்சமிருக்கிறதே என்பதுதான்.

*********************

நண்பனொருவன் இருக்கிறான். நான் ஒரு நாலு பக்க சிறுகதையை படித்து முடிப்பதற்குள் நானூறு பக்க நாவலை/ புத்தகத்தை வாசித்து முடித்து தூக்கிப்போட்டுவிடுவான். ‘என்னடா டுபாகூர் விடுறியா’ என்று புத்தகத்திலிருந்து கேள்வி கேட்டாலோ, கதையைச் சொல்லச்சொன்னாலோ கரெக்டாகச் சொல்லிவிடுவான். நமக்கும் இப்படி வாசிக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என நினைத்துக்கொள்வேன்.

அப்புறம் மேலும் பேசிக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, அவன் சொய்ங்கென்று போய்க்கொண்டிருக்கும் போது சில வரிகளை, சில பாராக்களை, தேவைப்பட்டால் சில பக்கங்களையே ஜம்ப் செய்துவிடுகிறான் என்று. நானோ ஒவ்வொரு எழுத்தாக, வரியாக ரசித்து உள்வாங்கிப் படிப்பவன். தேவைப்பட்டால் சில வரிகளில் தொடர் சிந்தனையில் வீழ்ந்து பின் எழுந்து வாசித்து முடிப்பேன். சில வரிகளோ, பாராக்களோ, அத்தியாயங்களோ புரியாமலோ, படு போராகவோ இருந்தால் முழுமையற்ற உணர்வு கிடைக்கும் என்பதால் தொடர்ந்து வாசிக்காமல் விட்டுவிடுவேன். இப்படி பாதியில் நிற்கும் புத்தகங்களும் அனேகம் உண்டு.

இந்நிலையில் அவன் செய்வது சரியல்ல என்று சொன்னால் அவன் சொல்கிறான், “படைப்புகளின் லட்சணத்தைக் கருத்தில் கொண்டு அவ்வாறு செய்வதில் தவறொன்றுமில்லை. அப்படி நிதானித்துக்கொண்டிருந்தால் லிஸ்டில் இருக்கும் புத்தகங்களை என்றைக்கு வாசித்து முடிப்பது?”. இது சரியா.?

********************

அவரது விகடன் காலத்திலிருந்தே சிம்புதேவனின் ரசிகன் நான். ‘முரட்டுச்சிங்கத்தை’ ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எனது எதிர்பார்ப்புகளைத் தவிடுபொடியாக்கி ஏமாற்றியிருக்கிறார் சிம்புதேவன்.

விதம்விதமான ரசனையான காரெக்டர்கள், வித்தியாசமான கதைக்களம், இரண்டு கிராமங்கள், வில்லன்கள், புதையல் வேட்டை, வைரம் என ஸ்கோப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தும் மகா மட்டமான திரைக்கதையால் தியேட்டரில் இருந்து பாதியிலேயே வெளியே போய்த்தொலைவோமா, எப்போ படம் முடிந்து தொலையும் என்று எண்ணவைத்துவிட்டார். ஆங்காங்கே தெரியும் ரசனையான காட்சிகள் அத்தனையும் படத்தால் வேஸ்ட்டாகித் தொலைகிறது. பெருத்த ஏமாற்றம்.

**********************

கிழக்கு வெளியீடான சிபி.கே.சாலமன் எழுதிய டெக்னிகல் ஆட்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான அனைவருக்குமான ‘6 சிக்மா’, ‘TQM’ போன்ற நூல்களை சமீபத்தில் வாங்கினேன். இவற்றைப்பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் வாங்கவோ, படிக்கவோ நான் ஆர்வம் காண்பித்ததில்லை. ஏனெனில் பொதுவாக இவை எனக்கு படிக்க போரடிக்கக்கூடியவை. ஆனால் சில மாற்றங்கள் நிகழும் நேரத்தில் தெரிந்தவையானாலும் ஒரு முறை வாசித்து வைப்போம் என்ற எண்ணத்திலும் தமிழில் எப்படி இவை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று திடீரென எழுந்த ஆவலிலும் வாங்கினேன். முழுதுமாக வாசிக்கவில்லை. ஒரு பறவைப்பார்வை பார்த்த நிலையில் எனக்குத் தோன்றுவது யாதெனில், இந்தப் புத்தகங்களை வாசித்த யாராவது எனது டெக்னிகல் பதிவுகளை வாசிக்க நேர்ந்தால், ‘ஆஹா, என்னமா லவட்டியிருக்கான்யா..’ என்று நினைக்கபோவது நிச்சயம். அவ்வளவு ஆர்டராக இருக்கின்றன டாப்பிக்ஸ்.! அது சரி, ‘அஞ்சையும், அஞ்சையும் கூட்டினா எவ்ளோ’னு கேட்டா சிபி.கே.சாலமன் சொல்வதைத்தானே நானும் சொல்லமுடியும். இருந்தாலும் அவ்வ்வ்வ்வ்..

சில நண்பர்கள் சொல்வதுண்டு. உங்கள் டெக்னிகல் பதிவுகளைப் புத்தகமாக்கலாமே என்று. அதற்கு அவசியமேயில்லாமல் செய்துவிட்டன இந்தப்புத்தகங்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். முழுவதும் வாசித்தபின் தனிப்பதிவாக பகிர்ந்துகொள்கிறேன்.

**********************

நீ ஒன்றுமே செய்யவேண்டாம்

சம்மதம் மட்டும் சொல்

உனக்கும் சேர்த்து

நானே காதலிக்கிறேன்.

-தபூ சங்கர்

**********************

கிரியேடிவ்வான ஆனால் பதறவைக்கும் ஒரு விளம்பரம், யார் செய்தது எனத் தெரியவில்லை. மெயிலில் வந்தது. வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசாதீர்கள் என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்லும் படம்.

Drive

.

27 comments:

padma said...

நல்ல பகிர்தல்.
தபு சங்கர் கவிதை கிளாஸ் .
இந்த செல் போன் படமும் கூட
நானும் எல்லாவரிகளியும் படிப்பேன் தான் .என்னை பொறுத்த வரை அது எழுதுபவர்களுக்கு செய்யும் மரியாதை .படித்தாகவே வேண்டும் என்ற கட்டாயம் என்ன? இல்லையா? பொறுமையா படிச்சா போச்சு

பிரசன்னா said...

என் நண்பன்(ர்கள்).. நான் ஆங்கில நாவல் படித்தால், என்னடா ஆங்கில அறிவு வளர்கிறாயா என்று கேட்பான். தமிழ் படித்தால் என்னடா ஏதும் competitive examsகு (!) தயாராகிறாயா என்று கேட்பான். மெதுவாக படித்தால் ஏண்டா போர் அடிக்கவில்லையா, எப்போ தான் முடிப்பாய் என்று கேட்பான்..

'ரசிப்பதற்காக மட்டும்' படிக்கவே கூடாதோ.. நாம் தான் வேஸ்ட் செய்கிறோமா என்று கூட தோன்றி விடும் :)

பிரசன்னா said...

அவர் சமீபத்தில் தான் திருமணம் முடிந்தவர் என்றும் அழகாக சொல்லுகிறது அந்த புகைப்படம்.. நன்று :)

தருமி said...

//முழுதுமாக வாசிக்கவில்லை. ஒரு பறவைப்பார்வை பார்த்த நிலையில்...//

அப்போ நீங்களும் உங்கள் நண்பர் மாதிரிதானோ?! (நான் ஒரு நாலு பக்க சிறுகதையை படித்து முடிப்பதற்குள் நானூறு பக்க நாவலை/ புத்தகத்தை வாசித்து முடித்து தூக்கிப்போட்டுவிடுவான்.)

Cable Sankar said...

நீங்களும் நொந்து போயிட்டீங்களா.. ஆதி.. சிங்கத்தை பார்த்து..? :(

அந்த விளம்பரப் படம் அருமை.

கே.ஆர்.பி.செந்தில் said...

//என்றைக்கு வாசித்து முடிப்பது?”. இது சரியா.?//

சரியில்லை ...

வானம்பாடிகள் said...

தபு=தபு. உங்கள் நண்பர் அப்படி படிச்சா அது தப்பு. ஆனா பேஜ்ரீடிங் டெக்னிக் இருக்கு. தேவை கொஞ்சமே கொஞ்சம் பயிற்சி. விளம்பரம் சரி, ஆனா பின்னாடி உக்காந்து காது பக்கத்துல புடிச்சிட்டில்ல போறாய்ங்க..அவ்வ்வ்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks to..

Padma,

Prasanna ('ரசிப்பதற்காக மட்டும்' படிக்கவே கூடாதோ.. ):-),

Tharumi (athu vEra, ithu vEra),

Cable,

Senthil,

Vanambadigal.!

கார்க்கி said...

இகோமுசி... சிலர் ஆஹா ஓஹோவென சொல்கிறார்களே... :))

விளம்பரம்.. எதிர்முனையில் பேசுபவர்களையெல்லாம் யோசிக்க வைக்கிறது...

தபு.. எப்பவுமே டாப்பு

பேஜ் ரீடிங்... அது எந்த மாதிரியான புத்தகம் என்பதை பொறுத்தது.. நான் உங்க பதிவை ஒவ்வொவொரு வார்த்தையாக படிப்பேன்... ஆனால் என் பதிவை நீங்க ஜம்ப் செய்து படிக்கலாம். தவறில்லை. :)

டெக்னிக்கல் புக், அந்த இட்லி மாவு உதாரணம் தந்திருக்காரா என்ன? அதான் சகா மேட்டர் :)

மங்களூர் சிவா said...

வாகனம் ஓட்டுபவர்களிடம் செல் பேசாதீர்கள் அந்த படத்தை போட்டிருக்கலாம் ஒரு விழிப்புணர்வா இருந்திருக்கும்.

பிள்ளையாண்டான் said...

நல்லாயிருக்கு!!

படிக்க‌க் கூடிய‌ புத்த‌க‌த்தை பொறுத்த‌து!!!

நேசமித்ரன் said...

:)

செல் படம் நல்லா இருக்கு

புத்தகம் : ம்ம் விவேகானந்தர் பத்தின கதை உங்களுக்கு தெரியும்தானே

அதிஷா said...

புத்தகம் படிக்கும் போது எனக்கு தெரிந்த சில நண்பர்களும் இப்படி செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனோ எனக்கும் உங்களைப்போலவே அதே டிரபிள்! ஒருஒருஎழுத்தாக எழுத்துக்கூட்டி முழு புத்தகத்தையும் படித்தால்தான் முழு சிகரட் அடித்த திருப்தி

புன்னகை said...

பத்தகம் எப்போ வெளியிடப் போவதாக முடிவு?

நாய்க்குட்டி மனசு said...

not all books.
நிறைய பேர் இப்படித் தான் கடனேன்னு வாசிக்கிறாங்க. உங்களை மாதிரி வாசிக்கிறவங்க எல்லாம் வலைப்பூ போட்டு விட்டார்கள்.
அந்த போட்டோ வில் உள்ள மெகந்தியை ஒருவர் கவனித்து பின்னோட்டம் போட்டிருக்கிறார். அருமை. நான் நிறைய இடங்களில் சொல்வது இது தான் கூப்பிடுறவங்க கூப்பிடட்டும், வண்டி ஓட்டும் போது செல் போன் எடுக்காதீர்கள். இது அனைவருக்குமான வேண்டுகோள் .
Time is precious; but life is more precious

விஜய் said...

புகைப்படம் மிக வித்யாசமாக இருக்கிறது

நானும் உங்க நண்பர் மாதிரி வேகமாக படிக்க கூடியவன்தான்.

விஜய்

இராமசாமி கண்ணண் said...

நல்ல பகிர்தல். செல்போன் ப்டம் வாகனம் ஒட்டிக்கொண்டே செல்போனில் பேசுபவர்களின் செவிட்டில் அறைவது போலிருந்தது.
நன்றி பகிர்ந்ததுக்கு.

ஈரோடு கதிர் said...

அந்த விளம்பரப் படம் பெங்களூரைச் சார்ந்த ஒரு கம்பெனி செய்தது என நினைக்கிறேன்....

ச.முத்துவேல் said...

இது சரியா.? என்று
புத்தக வாசிப்புப் பற்றி கேட்டிருக்கிறீர்கள். நானும் உங்களைப்போல்தான்.
எதற்காகப் படிக்கிறோம் என்பதைப் பொறுத்தது இது.

KVR said...

//சில நண்பர்கள் சொல்வதுண்டு. உங்கள் டெக்னிகல் பதிவுகளைப் புத்தகமாக்கலாமே என்று. அதற்கு அவசியமேயில்லாமல் செய்துவிட்டன இந்தப்புத்தகங்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். முழுவதும் வாசித்தபின் தனிப்பதிவாக பகிர்ந்துகொள்கிறேன்//

க்வாலிட்டியில் TQM, 6 sigma இல்லாமல் இன்னும் எவ்வளவோ இருக்கே!

//வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசாதீர்கள் என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்து சொல்லும் படம்//

நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுடற மாதிரி சொல்லி இருக்காங்க. இந்தப் படத்தை சென்னையின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் ஒட்டி வைக்கணும் :-(

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி (முழுசா படிக்கலை, படிச்சுட்டு சொல்றேன்),

மங்களூர் சிவா (என்ன சொல்றீர் ஓய்? புரியலை. அதான் படத்தைப் போட்டிருக்கேன்ல),

பிள்ளையாண்டான்,

நேசமித்திரன் (ஸ்கேன் பண்ணுவது போல படிப்பார். சரியா கேள்விப்பட்டது?),

அதிஷா (நீ என்னை மாதிரிடா செல்லம்),

புன்னகை,

நாய்க்குட்டி,

விஜய் (நண்பர் மாதிரின்னா? வேகமாகவா? பக்கங்களை ஸ்கிப் பண்ணியா?),

இராமசாமி,

கதிர்,

முத்துவேல்,

கேவிஆர் (படத்தைப்பார்த்தாலே பகீர்ங்குதுல்ல..)

அனைவருக்கும் நன்றி.

குசும்பன் said...

//அப்புறம் மேலும் பேசிக்கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது, அவன் சொய்ங்கென்று போய்க்கொண்டிருக்கும் போது சில வரிகளை, சில பாராக்களை, தேவைப்பட்டால் சில பக்கங்களையே ஜம்ப் செய்துவிடுகிறான் என்று. நானோ ஒவ்வொரு எழுத்தாக,//

பாஸ் எழுத்துக்கூட்டி படிக்க டிலே ஆவுதா?

அப்புறம் நான் சொய்ய்ய்ங் செய்து கடைசி பாராவுக்கு வந்துட்டேன், அப்ப நானும் உங்க நண்பன் மாதிரிதானே?:))))))

குசும்பன் said...

//‘6 சிக்மா’, ‘TQM’ //

யோவ் நீயும் இந்த இரண்டு வார்த்தையும் இதுவரை 20001 சொச்சம் தடவை பதிவில் எழுதிட்ட, இன்னொரு தபா சொன்ன, நான் அப்புறம் OCE, KODAK Nexpress என்று பேச ஆரம்பிச்சிடுவேன் ஜாக்கிரதை!

குசும்பன் said...

//நீ ஒன்றுமே செய்யவேண்டாம் சம்மதம் மட்டும் சொல் //

இதை தானே பாஸ் கட்டகாலிபயலுவோ கேட்டுக்கிட்டு இருக்கானுங்க:)))

விக்னேஷ்வரி said...

இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் சொதப்பலா? :( நான் பார்க்கலாம்னு நினைச்சேனே... இதுவும் போச்சா...

தபூ சங்கர் எப்போவாச்சும் தான் அளவா, அழகா எழுதுவாரு. அதுல இது ஒண்ணு. நல்லாருக்கு ஆதி.

காவேரி கணேஷ் said...

tqm பத்தி புக் எழுத சொல்லி எவ்வளவு நாள் ஆச்சு , பாரு இன்னொருத்தர் எழுதிட்டார்.

sriram said...

நல்ல பதிவு நன்றி ஆதி...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்