Friday, May 21, 2010

காதலிக்க நேரமில்லை

சமீபத்தில் டிவியில் ஒரு பிளாக்&ஒயிட் படம் ஓடிக்கொண்டிருந்தது. சானல் மாற்றும் முன்னர் சில காட்சிகள் பார்க்க நேர்ந்தது. ஹீரோயின் படித்த, பணக்கார கர்வத்தில் ஹீரோவை பிரிந்து வாழ்கிறார் என்ற முன்கதையை புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் மழைக்காக ஒரு வீட்டில் ஒதுங்க அந்த வீட்டுப்பெண் அன்போடு மழைவிடும் வரை வீட்டுக்குள் வந்து உட்காரச்சொல்ல இவரும் உட்செல்கிறார். இவரை ஹாலில் அமரவைத்துவிட்டு பக்கத்து அறையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருக்கும் அவரது கணவருக்கு பணிவிடைகள் செய்கிறார் அவர். சட்டை மாட்டிவிடுகிறார், காபி தருகிறார், பை, மற்றும் மதிய உணவு எடுத்துத்தந்து அன்பொழுக காதல் வார்த்தை கூறி அனுப்பி வைக்கிறார். வாசல் வந்தவருக்கு ‘அடடா மறந்துட்டீங்களே, குடை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று குடை எடுத்துத்தருகிறார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹீரோயின், அவரது கணவர் சென்றவுடன் அந்தப்பெண்ணிடம், ‘ஏதேது உங்கள் கணவர் என்ன குழந்தையா? நீங்கள்தான் வேலைக்காரியா? இப்படி பணிவிடை செய்கிறீர்களே..’ என்று கேட்க அவர் இப்படி பதிலளிக்கிறார்,

“ஆமம்மா, என்னை பொறுத்தவரை என் கணவர் ஒரு குழந்தைதான். மேலும், வெளியே வேலைக்குச் செல்லும் ஆண்கள் அங்கே ஒரு வேலைக்காரரைப்போல நடத்தப்படுகிறார்கள் எல்லாவிதத்திலும். பாவம், குறைந்த பட்சம் வீட்டிலாவது ஒரு எஜமானரைப்போல இருக்கட்டுமே..”

இதெதற்கு இப்போ என்கிறீர்களா? ஏதோ சொல்லணும்னு தோணுச்சுது. ஹும்.!

**************************

சகோதரனின் திருமணத்தில் இருக்கும் பரபரப்பு மற்றும் பணிகள் சகோதரியின் திருமணத்தில் இந்தப்பெண்களுக்கு இருக்காது போலும். ரமா தன் சகோதரியின் திருமணத்தில் ஒரு விருந்தினரைப்போல பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த என்னருகிலேயே நிறைய நேரம் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தார்.  காலையில் எனக்கு மாட்டிவிடப்பட்டிருந்த செயின் வெளியே தெரியும்படி இருக்கிறதா, ப்ரேஸ்லெட்டின் கொக்கி சரியாக மாட்டியிருக்கிறதா, சட்டையை ஒழுங்காக இன் செய்திருக்கிறேனா என்று என்னைச் செக் பண்ணுவதிலேயே அவருக்கு பாதி நேரம் கழிந்திருந்தது.

சிவப்புப் பட்டுப்புடவையிலும், தளர்த்திக்கட்டப்பட்டிருந்த கூந்தலில் நிறைந்திருந்த மல்லிகையிலும் ரொம்ப நாளைக்குப் பின்னர் அவர் ரொம்ப அழகாக இருந்ததாக எனக்குப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் காதலித்துக்கொண்டிருக்க முடியாமல் நான்தான் அன்று மாலையே கிளம்பவேண்டியதாயிற்று. ஹும்.!

**************************

நண்பரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை டு கோவைக்கு தரை, வான், தண்ணீர் எந்த வழியிலும் டிக்கெட் கிடைக்காத கடுப்பில் சென்னையிலிருந்து இன்னும் 20 ரயில்கள் கோவைக்கு விடப்பட்டாலும் இந்தக்கூட்டத்துக்கு பற்றாது என புலம்பிக்கொண்டிருந்தார். நான் என்ன சொல்கிறேன் என்றால் சென்னையிலிருந்து இன்னும் 40 ரயில்கள் தென்திசைக்கு (மதுரை, நெல்லை, கன்யாகுமரி) விடப்பட்டாலும் பற்றாது. தட்கலில் எடுத்துக்கொள்ளலாம் என இருந்தவனுக்கு காலை 8 லிருந்து 8.10க்குள் லைன் கிடைக்காமல் திணறி, பின் லைன் கிடைத்தவுடன் ஸ்டேடஸ் சொல்கிறது வெயிடிங் லிஸ்ட் 100க்கு மேல். அப்புறம் பிரைவேட் பஸ்களிலும் கூட இடம் கிடைக்காமல் நான் ஊர் போய் செல்வதற்குள் விளங்கிவிட்டது.

மேலும் ரயில்களை வரவிடாமல் செய்வதில் இந்த பிரைவேட் பஸ் நிறுவனங்களின் பங்கு பெருமளவு இருப்பதாக விஷயம் தெரிந்த ஒரு நண்பர் புலம்பிக்கொண்டிருந்தார். அது சரியாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஹும்.!

****************************

ஏராளமான தமிழ் வலைப்பூ திரட்டிகளின் மத்தியில் இன்னுமொரு திரட்டி ‘தமிழ்பிளாகர்’ (www.tamilblogger.com) உருவாகியிருக்கிறது. இதன் முகப்பு மற்றும் வடிவமைப்பு பிறவற்றிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்படுவதாலேயே நன்றாக இருக்கிறது எனலாம். அனைவருக்குமான இடமாக அல்லாமல் 101 பிரபல வலைப்பூக்கள் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கின்றன. அதென்ன பிரபலம் என்கிறீர்களா? அதெல்லாம் அவர்களுடைய சொந்தத்தேர்வாக இருக்கலாம்.

போய்ப்பாருங்கள், என்னுடையது 101 வது இடத்திலிருக்கிறது. ஹும்.!

.

57 comments:

Cable Sankar said...

101க்கு வாழ்த்துக்கள்.:)

Anonymous said...

:)) 108 க்கு போகாம இருக்கே.. :)

philosophy prabhakaran said...

நல்ல தொகுப்பு... காதலைப் பற்றி இன்னும்கூட சொல்லியிருக்கலாமே...

அன்புடன் அருணா said...

/சமீபத்தில் டிவியில் ஒரு பிளாக்&ஒயிட் படம் ஓடிக்கொண்டிருந்தது./
அட குழந்தையும் தெய்வமும் படம்தானே!

கார்க்கி said...

சாருவின் லிங்க்குக்கு கீழே என் பிளாக். நல்ல வேளை அதிஷா குறுக்கில் வந்து என்னைக் காப்பற்றியிருக்கிறார்

வானம்பாடிகள் said...

வேலைக்குப் போற இடத்துலதான் அடிமை மாதிரி நடத்துறாங்கன்னா வீட்டுக்கு வந்தா வேலைக்காரி மாதிரியா நடத்துறீருன்னு இன்னும் கொஞ்சம் வன்முறைய தூண்டுற வேலைதான இது!:))//

புன்னகை said...

//“ஆமம்மா, என்னை பொறுத்தவரை என் கணவர் ஒரு குழந்தைதான். மேலும், வெளியே வேலைக்குச் செல்லும் ஆண்கள் அங்கே ஒரு வேலைக்காரரைப்போல நடத்தப்படுகிறார்கள் எல்லாவிதத்திலும். பாவம், குறைந்த பட்சம் வீட்டிலாவது ஒரு எஜமானரைப்போல இருக்கட்டுமே..”//
நீங்கள் சொல்லியது போல அது 'பிளாக் & ஒயிட்' காலம். இப்பல்லாம் ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் தானே அலுவலகத்தில் வருத்தெடுக்கிறார்கள்? ஆக, பெருமூச்சை உள்வாங்கிக் கொள்ளவும்! ;-)

நாய்க்குட்டி மனசு said...

congrats for 101, escaping 102

நர்சிம் said...

//சிவப்புப் பட்டுப்புடவையிலும், தளர்த்திக்கட்டப்பட்டிருந்த கூந்தலில் நிறைந்திருந்த மல்லிகையிலும் ரொம்ப நாளைக்குப் பின்னர் அவர் ரொம்ப அழகாக இருந்ததாக எனக்குப் பட்டது. இன்னும் கொஞ்ச நேரம் காதலித்துக்கொண்டிருக்க முடியாமல் நான்தான் அன்று மாலையே கிளம்பவேண்டியதாயிற்று. ஹும்.!//

எல்லா இடத்திலும் ரமா ரமான்னு எழுதுறவரு இங்கு மட்டும் “அவர்”னு பொதுவாக சொல்லியதில் இருக்கும் உள்ளர்த்தம் தெரிந்ததது தலைவா.. வாழுங்க..வாழுங்க.

சுசி said...

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க கல்யாணம்னா நாலு நல்லதும் கெட்டதும் நடக்கும்னு..

வாழ்த்துக்கள் ஆதி.

அதிஷா said...

நைஸ் போஸ்டிங் பிரதர்

அமுதா கிருஷ்ணா said...

முதல் மற்றும் இரண்டாவது ஹும் நல்லாயிருக்கு.ஆனால்,இரண்டாவது ஹும் நர்சிம் பின்னூட்டம் படித்ததற்கு அப்புறம் சந்தேகமாதான் இருக்கு...

நேசமித்ரன் said...

நல்ல இடுகை பாஸ் ..

காதலைப் பேசும் விதம் ஆதி ஸ்பெசல்

101 என்ன சார் மொய் வைக்குற மாதிரி :)

அப்புறம் இந்த நம்பர்ல அடங்குறதா இந்த இடுகைல பேசி வாசிக்குறவங்களுக்கு கடத்தி இருக்கும் அருமையான உணர்வு

ஈரோடு கதிர் said...

//செயின் வெளியே தெரியும்படி இருக்கிறதா//

ஆதி,

புலி நகமுமா!!!???

ராமலக்ஷ்மி said...

101-க்குள் நானும்:)!

தொகுப்பு அருமை.

பிள்ளையாண்டான் said...

குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும்.....??

நர்சிம்... சபாஷ், குட் கேட்ச்..

மத்தபடி, 101-யை நானும் பார்த்தேன்..

என்னைப் போன்ற வளர்ந்து வரும் பதிவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களே....

நீங்க எல்லாம் ஸ்டார் பதிவர்கள்... உங்களுக்கு ராங்க எல்லாம் ஒரு மேட்டரா..

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள் (எதுக்குதான் வாழ்த்துறதுன்னு இல்லையாய்யா?),

மயில் (என்னா ந‌ல்லெண்ண‌ம்? 101தாங்க‌ க‌டைசியே),

பிரபாகரன் (காத‌ல்ங்கிற‌ லேபிளை கிளிக் ப‌ண்ண‌வும்),

அருணா (ஆங், அதுதான். குட்டி பத்மினி கூட அழகா இருக்கும்),

கார்க்கி (அதிஷா எப்பயுமே ரொம்ப நல்லவன்),

வானம்பாடிகள் (வெளங்குச்சு),

புன்ன‌கை (எப்பிடியோ முடிவு ப‌ண்ணியாச்சு, அப்புற‌ம் என்ன‌?),

நாய்க்குட்டி (ஹிஹி),

ந‌ர்சிம் (யோவ்.. ந‌ல்லாரும்யா..),

சுசி (வாழ்த்து எதுக்கு?),

அதிஷா (தேங்ஸ் பிர‌த‌ர்),

அமுதா (நீங்க‌ளுமா?),

நேச‌மித்திர‌ன் (நீங்க‌ளும் என்னென்ன‌மோ சொல்லிதான் என்னை தேத்த‌ப்பாக்குறீங்க‌..ஊஹூம்),

க‌திர் (என்னைப்பார்த்தா என்ன‌ வில்ல‌ன் மாதிரியா இருக்குது? ந‌ற‌ந‌ற‌..),

ராம‌ல‌க்ஷ்மி (நீங்க‌ள் இல்லாவிட்டால்தான் ஆச்ச‌ரிய‌ம். :‍)),

பிள்ளையாண்டான் (வ‌ள‌ர்ந்த‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு பின்னுரிமை கொடுத்திருக்கிறார்க‌ள் போலிருக்கிற‌து. அப்ப‌டிப்பார்த்தா நான்தான் முத‌ல். :‍)) நான் சும்மா 101, 101 என்ற சுவார‌சிய‌த்துக்குதான் அப்ப‌டி எழுதினேன். ஆக்ஷுவ‌லா அது அந்த‌ப்ப‌க்க‌த்துக்குள் வலைப்பூக்கள் ரேன்ட‌மாக‌ சுழ‌ன்று வ‌ருகின்ற‌ன‌.)

..... அனைவ‌ருக்கும் அன்பார்ந்த‌ ந‌ன்றி. என்ன‌ பின்னூட்ட‌ம் க‌ம்மியாக‌ இருக்கிற‌து? இன்னொரு மொக்கை போட்டுற‌வேண்டிய‌துதானா.!

நாடோடி இலக்கியன் said...

//இன்னும் கொஞ்ச நேரம் காதலித்துக்கொண்டிருக்க முடியாமல்//

ரசனைக்காரன்யா நீங்க.

ஈரோடு கதிர் said...

மீ த 19

ஈரோடு கதிர் said...

மொக்கையில வருத்தப்பட்ட ஆதிக்கு சமர்ப்பனம்

மீ த 20..

மங்களூர் சிவா said...

அதான் 20 தேறிடுச்சில்ல அப்புறம் எதுக்குடா சிவா நீ வேற!

ரைட்டு விடு!

மின்னுது மின்னல் said...

me 22 :)

மின்னுது மின்னல் said...

மொக்கையில வருத்தப்பட்ட ஆதிக்கு சமர்ப்பனம்
//

what mokkai ??


pathivu??

Joseph said...

நான் சொல்ல நினைச்சத நர்சிம் அண்ணண் சொல்லிட்டாரு.

மின்னுது மின்னல் said...

நான் சொல்ல நினைச்சத Joseph அண்ணண் ??? சொல்லிட்டாரு.


::))

தாரணி பிரியா said...

:)

Tanvi said...

பாவம்யா நீர். ஹூம்!

கும்க்கி said...

நான் சொல்ல நினைச்சத மின்னல் அண்ணன் சொல்லீட்டாரு..

::::)))

கும்க்கி said...

கார்க்கி said...
சாருவின் லிங்க்குக்கு கீழே என் பிளாக். நல்ல வேளை அதிஷா குறுக்கில் வந்து என்னைக் காப்பற்றியிருக்கிறார்

ஏண்டாப்பா அம்பி.,

அந்த போட்டோவ சித்த மாத்தக்கூடாதோன்னோ...சகிக்கலை.

கும்க்கி said...

ஏதோ சொல்லணும்னு தோணுச்சுது. ஹும்.!

எங்களுக்கும் இப்படித்தாம் பாஸ்..எதோ சொல்லனும்னு தோனுது...ஆனா.....

கும்க்கி said...

எல்லா இடத்திலும் ரமா ரமான்னு எழுதுறவரு இங்கு மட்டும் “அவர்”னு பொதுவாக சொல்லியதில் இருக்கும் உள்ளர்த்தம் தெரிந்ததது தலைவா.. வாழுங்க..வாழுங்க..

குடும்பத்துல குண்டு வைச்சுடுவார் போலருக்கே........

☼ வெயிலான் said...

இது ஆதி கேட்டு வாங்கிய பின்னூட்டம் ;)

இராகவன் நைஜிரியா said...

வணக்கம்.

101க்கு வாழ்த்துகள் நானும் தெரிவிச்சுகிறேன்.

Palay King said...

Good...

Congrats for 101

இராகவன் நைஜிரியா said...

நானும் என்னோட பின்னூட்டத்தை போட்டு என்னோட இருப்பை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

இராகவன் நைஜிரியா said...

// சமீபத்தில் //

சமீபத்தில் ????

இராகவன் நைஜிரியா said...

// “ஆமம்மா, என்னை பொறுத்தவரை என் கணவர் ஒரு குழந்தைதான். மேலும், வெளியே வேலைக்குச் செல்லும் ஆண்கள் அங்கே ஒரு வேலைக்காரரைப்போல நடத்தப்படுகிறார்கள் எல்லாவிதத்திலும். பாவம், குறைந்த பட்சம் வீட்டிலாவது ஒரு எஜமானரைப்போல இருக்கட்டுமே..” //

விடுங்க... அது சினிமா ... அதுல அப்படித்தான் காண்பிப்பாங்க. இதுக்கெல்லாம் பீல் பண்ணிகிட்டு.

இராகவன் நைஜிரியா said...

// இதெதற்கு இப்போ என்கிறீர்களா? ஏதோ சொல்லணும்னு தோணுச்சுது. ஹும்.! //

இந்த வரியில் அந்த ஹூம் போட்டீங்க பாருங்க... அது... எங்கேயோ போயீட்டீங்க

இராகவன் நைஜிரியா said...

// ரமா தன் சகோதரியின் திருமணத்தில் ஒரு விருந்தினரைப்போல பார்வையாளர்கள் வரிசையில் உட்கார்ந்திருந்த என்னருகிலேயே நிறைய நேரம் வந்து உட்கார்ந்துகொண்டிருந்தார். //

கண்காணிப்பு வலையத்திற்குள்ளா?

இராகவன் நைஜிரியா said...

// செயின் வெளியே தெரியும்படி இருக்கிறதா, ப்ரேஸ்லெட்டின் கொக்கி சரியாக மாட்டியிருக்கிறதா, சட்டையை ஒழுங்காக இன் செய்திருக்கிறேனா என்று என்னைச் செக் பண்ணுவதிலேயே அவருக்கு பாதி நேரம் கழிந்திருந்தது. //

அது சரி... சின்ன குழந்தை மாதிரி எங்காவது தொல்லைச்சிற போறீங்கன்னு, அது மாதிரி பண்ணியிருப்பாங்க.

ஊருக்கு கிளம்பும் போது எல்லாத்தையும் பிடிங்கி கிட்டு அனுப்பினாங்களே அதை சொல்லவேயில்லை?

இராகவன் நைஜிரியா said...

// அவர் ரொம்ப அழகாக இருந்ததாக எனக்குப் பட்டது. //

இங்கு சொல்லப்பட்ட அவர் யாருங்கண்ணே?

இராகவன் நைஜிரியா said...

// இந்தக்கூட்டத்துக்கு பற்றாது என புலம்பிக்கொண்டிருந்தார். //

உங்க கிட்டயே புலம்பலா? அது சரி புலம்பல்களிடம் புலம்பாமல் வேறு யாரிடம் புலம்புவது.

இராகவன் நைஜிரியா said...

// நான் என்ன சொல்கிறேன் என்றால் சென்னையிலிருந்து இன்னும் 40 ரயில்கள் தென்திசைக்கு (மதுரை, நெல்லை, கன்யாகுமரி) விடப்பட்டாலும் பற்றாது //

அது சரி... நம்ம ஆளூங்க யாராவது ரயில்வே மந்திரியானால் தான் அது நடக்கும்.

இராகவன் நைஜிரியா said...

// அப்புறம் பிரைவேட் பஸ்களிலும் கூட இடம் கிடைக்காமல் நான் ஊர் போய் செல்வதற்குள் விளங்கிவிட்டது. //

ரயிலில் இடம் கிடைக்கவில்லை என்றால் பஸ்ஸிலும் கிடைக்காது என்பது நன்கு எங்களுக்கு விளங்கியது.

இராகவன் நைஜிரியா said...

// மேலும் ரயில்களை வரவிடாமல் செய்வதில் இந்த பிரைவேட் பஸ் நிறுவனங்களின் பங்கு பெருமளவு இருப்பதாக விஷயம் தெரிந்த ஒரு நண்பர் புலம்பிக்கொண்டிருந்தார். //

விஷயம் தெரிஞ்ச நண்பரே புலம்பினா, விஷயம் தெரியாத நாமெல்லாம் என்ன செய்வது.

இராகவன் நைஜிரியா said...

// ஏராளமான தமிழ் வலைப்பூ திரட்டிகளின் மத்தியில் இன்னுமொரு திரட்டி //

இன்னொரு திரட்டியா?

இராகவன் நைஜிரியா said...

// ☼ வெயிலான் said...
இது ஆதி கேட்டு வாங்கிய பின்னூட்டம் ;) //

ஆதி கேட்காமல் வாங்கிய பின்னூட்டம் இது.

இராகவன் நைஜிரியா said...

மொத்தத்தில் அருமை

இராகவன் நைஜிரியா said...

மீ த 49

இராகவன் நைஜிரியா said...

மீ த 50

இராகவன் நைஜிரியா said...

அப்பாடா ஆதி ஆசப் பட்டபடி போட்டுத் தாக்கியாச்சு..

அக்கௌண்ட்ல பணத்த போட்டுவிடுங்க.

மறந்தும் இருந்து விடாதீர்கள்... இருந்தும் மறந்துவிடாதீர்கள்

~~Romeo~~ said...

101 நம்பர்க்கு போன் பண்ணா பயர் சர்வீஸ்க்கு போகுமா இல்ல உங்க மொபைல்க்கு லைன் போகுமா .. ஹி ஹி ஹி

அத்திரி said...

//இதெதற்கு இப்போ என்கிறீர்களா? ஏதோ சொல்லணும்னு தோணுச்சுது. ஹும்.!//

இப்ப யோசிச்சி என்ன பண்றது அண்ணே..........

அத்திரி said...

அண்ணே உங்களுக்கு எப்பவும் நைன்ட்டிதான அப்புறம் எதுக்கு 101.....அவ்வ்வ்.தாங்காது அண்ணே

CINEMA GALLARY said...

ஸ்ருதி ஹாசன் ஹாட் - Sruthi Hasan Hot http://cinema-gallary.blogspot.com/2010/05/sruthi-hasan-hot.html

Mahesh said...

நீங்க நல்லாத்தான் பொலம்பறீங்க... நமக்குத்தான் எழுத வர மாட்டேங்குது... ஹூம் !!!

KVR said...

//சகோதரனின் திருமணத்தில் இருக்கும் பரபரப்பு மற்றும் பணிகள் சகோதரியின் திருமணத்தில் இந்தப்பெண்களுக்கு இருக்காது போலும்//

சகோதரர் திருமணத்திலே சகோதரிக்கு மெயின் ரோல் இருக்கும். நாத்தனார் விளக்கு பிடிப்பதில் இருந்து இன்னும் பல கடமைகள், சகோதரிக்கு அப்படி இல்லை. நமக்கும் அப்படி தானே! சகோதரி கல்யாணத்திலே பயங்கர பிஸியா இருப்போம், சகோதரர் கல்யாணத்திலே ரிலாக்ஸ்டா இருப்போம்.

//தளர்த்திக்கட்டப்பட்டிருந்த கூந்தலில் நிறைந்திருந்த மல்லிகையிலும் ரொம்ப நாளைக்குப் பின்னர் அவர் ரொம்ப அழகாக இருந்ததாக எனக்குப் பட்டது.//

விரைவில் வீட்டில் இரண்டாவது ஜூனியர் வர வாழ்த்துகள் (நாங்க ரொம்ப ஃபாஸ்ட்டா யோசிப்போம்ல ;-) )