Sunday, May 23, 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

குறள்- 972

அரசியல் கருத்து மாறுபாடுகள், காழ்ப்புணர்ச்சிகள் ஆகியவற்றை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு இது கொண்டாட்டத்திற்கான நேரம் என்பதை நாம் அனைவருமே உணர்வோம் என நம்புகிறேன். ஒரு பெரிய நிகழ்வின் போது நிகழும் சிறு பிழைகளை ஊதிப் பெரிதாக்கி ஒரு சார்போடு, முன் முடிவோடு அணுகாமல் நேர்பார்வையில் கொள்வோம்.

உலகத் தமிழாய்வு நிறுவனத்தால் துவக்கத்திலும் பின் அதனுடன் தமிழக அரசு இணைந்தும் உலகளாவிய தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன் முதன் மாநாடு ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பெயரில் முதன் முறையாக 1966ல் கோலாலம்பூரில் நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மாநாடு 1968ல் சென்னையில் பேரறிஞர் அண்ணாவின் காலத்தில் நடத்தப்பட்டது. அதன் நிகழ்வுகளில் ஒன்றாகத்தான் சென்னை கடற்கரையில் தமிழறிஞர் சிலைகள் நிறுவப்பட்டன. மூன்றாவது (1970) பாரிஸ் நகரிலும், நான்காவது (1974) யாழ்ப்பாணத்திலும் நடைபெற்றது. ஐந்தாவது மாநாடு எம்ஜிஆர் அவர்கள் ஆட்சிக்காலத்தில் 1981ல் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து ஆறாவது மாநாடு (1987) கோலாலம்பூரிலும், ஏழாவது (1989) மொரீஷியஸிலும் நிகழ்த்தப்பட, எட்டாவது மாநாடு தஞ்சாவூரில் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1995ல் நிகழ்ந்தது.

இந்நிலையில் ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு –2010’ வரும் சூன் 23ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரையில் கோவையில் நடைபெற இருக்கிறது.

எந்த இரு மாநாடுகளுக்கும் இடையே இவ்வளவு கால இடைவெளி இருக்கவில்லை. மேலும் வரலாற்றில் அரிதாகவே காணப்படும் ஆட்சி அதிகாரமும் மொழியார்வமும் ஒருங்கே பெற்ற தலைவர்களில் ஒருவரான கலைஞர் ஐந்து முறைகள், 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்காலத்திலிருந்தும் அவரது காலத்தில் இதுவரை தமிழ் மாநாடுகள் நிகழவில்லை என்பது வியப்பே.! அதன் முற்றாக பிரமாண்டமான முறையிலே மாநாட்டு ஏற்பாடுகளும் நிகழ்வுகளும் இருக்கப்போகின்றன என்பதை அறிய வருகிறோம். இதுகாறும் இருந்த ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பெயர்ப் பதம், ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ என்பதாக மாற்றம் கொண்டுள்ளது.

மேலும் 1997லிருந்து பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் இணைய மாநாட்டின் ஒன்பதாவது நிகழ்வும் இப்பெரு நிகழ்வின் ஒரு பகுதியாக அமைகிறது.

தமிழ் இலக்கியங்கள், தொல்காப்பியம், திருக்குறள் முதலான தலைப்புகளில் முதன்மை அரங்கங்களும், பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள், பொழிவரங்கங்கள், 50க்கும் மேற்பட்ட தலைப்புகளில் அமர்வரங்கங்களும் நிகழ இருக்கின்றன. பேரணி, கலை நிகழ்ச்சிகளும் விழா நிகழ்ச்சி நிரல்களில் உள்ளன. மேலும் இதுகுறித்த தகவல்களை அறிந்துகொள்ள ‘உலகத் தமிழ்ச்செம்மொழி மாநாட்டு’க்கான தனித் தளத்திற்குச் செல்லலாம்.

இணையத் தளம் : www.ulakathamizhchemmozhi.org

இவ்விணையத்தளத்தில் தமிழின் வரலாற்றுச்சிறப்புகளும்  மாநாடு நிகழவிருக்கும் கோவையின் சிறப்புகளும் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. மேலும் படைப்பு மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்து விழாவில் நாம் பங்கேற்கவும் இத்தளம் வாய்ப்பினை வழங்குகிறது. 

மாநாட்டுக்கான இலச்சினை.

World_Tamil_Conferance_Logo(Tamil)

மாநாட்டுக்கான மைய நோக்கப்பாடல் :

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் -
பிறந்த பின்னர், யாதும் ஊரே, யாவரும் கேளீர்!

உண்பது நாழி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம் - உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர்தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன் மொழியாம்!
போரைப் புறம் தள்ளி
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழி காட்டும்
அன்பு மொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பை பகுத்துக் கூறும்
ஒல்காப் புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடு
ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும்
சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தமிலாது இருக்கின்ற இனியமொழி -
ஓதி வளரும் உயிரான உலகமொழி -
நம் மொழி - நம் மொழி - அதுவே
செம்மொழி - செம்மொழி - நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!

-மு.கருணாநிதி

பாடலின் இசை வடிவம் இங்கே. காணொளி வடிவம் யாரிடமாவது இருப்பின் பகிர்ந்துகொள்ளலாம்.

இசையமைத்தவர் : ஏ.ஆர்.ரகுமான்

பாடியவர்கள் : 30க்கும் மேற்பட்ட தென்னிந்தியாவைச் சார்ந்த மூத்த மற்றும் இளைய திரையிசைப் பாடகர்கள்.

பெருமைக்குரிய பெருவிழா சிறப்போடு நிகழ்ந்திட, பயன் மிகுந்ததாய் அமைந்திட நம் விருப்பங்களும் வாழ்த்துகளும்.!

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக!
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

-பாரதி

.

45 comments:

பிள்ளையாண்டான் said...

எல்லாம் சரி...

மாநாட்டில், தமிழ் மொழியின் அருமை பெருமைகளையும், தமிழின் வளர்ச்சிக்கும் ஏதாவது பேசினால் நன்று...

மாநாடு கண்ட முதல்வரே, செம்மொழி பெற்று தந்த ஆசானே என்று, முதல்வரைப் பாராட்டி ஒவ்வொருவரும் முன்னுரையை முடிப்பதற்க்குள் நமக்கு வெறுப்புத்தான் வரும்!

ஜில்தண்ணி said...

ம்ம்ம் கலைஞர் அவர்களால் ஒரு முறை தான் நடத்தப்பட்டாலும்,சிறப்பாக அமைய வேண்டும் என் எதிர்ப்பார்ப்போம்

பாடல் வரிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

Indian said...

//அரசியல் கருத்து மாறுபாடுகள், காழ்ப்புணர்ச்சிகள் ஆகியவற்றை சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு இது கொண்டாட்டத்திற்கான நேரம் என்பதை நாம் அனைவருமே உணர்வோம் என நம்புகிறேன்.//

அப்படியா? அப்ப சரி.

Indian said...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.


// மேலும் வரலாற்றில் அரிதாகவே காணப்படும் ஆட்சி அதிகாரமும் மொழியார்வமும் ஒருங்கே பெற்ற தலைவர்களில் ஒருவரான கலைஞர் ஐந்து முறைகள், 18 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்காலத்திலிருந்தும் அவரது காலத்தில் இதுவரை தமிழ் மாநாடுகள் நிகழவில்லை என்பது வியப்பே.! அதன் முற்றாக பிரமாண்டமான முறையிலே மாநாட்டு ஏற்பாடுகளும் நிகழ்வுகளும் இருக்கப்போகின்றன என்பதை அறிய வருகிறோம். இதுகாறும் இருந்த ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பெயர்ப் பதம், ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ என்பதாக மாற்றம் கொண்டுள்ளது.//

ஒன்பதாவது மாநாடு

எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி 2010 இல் கோவையில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார்[3]. பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 ஆம் ஆண்டு ஜூலையில் கோவை நடக்கும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார்[4][5].

குசும்பன் said...

//இசையமைத்தவர் : ஏ.ஆர்.ரகுமான்
30க்கும் மேற்பட்ட தென்னிந்தியாவைச் சார்ந்த மூத்த மற்றும் இளைய திரையிசைப் பாடகர்கள்.//

குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி பாடச்சொல்லுகிற உலகம், மயிலை புடிச்சி காலை ஒடைச்சி ஆடச்சொல்லுகிற உலகம்... அது எப்படி பாடும்ய்யா அது எப்படி ஆடும்மையா ...ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

பெண் சிங்கம் வரட்டும் அப்புறம் இருக்குடி உங்களுக்கு!

நேசமித்ரன் said...

நல்ல பகிர்வு

:)

ஈரோடு கதிர் said...

அதென்னங்க சூன் 23-27

ஏன்... ஆனி 9-13னு போட்டிருந்தா அது தமிழுக்கு ஒவ்வாமையோ!!!

//"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.."//
இதற்கும் இந்த தமிழ் மாநாட்டிற்கும் என்ன தொடர்புங்க

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

பா.ராஜாராம் said...

//பெருமைக்குரிய பெருவிழா சிறப்போடு நிகழ்ந்திட, பயன் மிகுந்ததாய் அமைந்திட நம் விருப்பங்களும் வாழ்த்துகளும்.!//

ஆம்,..

அதிஷா said...

நிச்சயமாக இது கொண்டாடவேண்டிய தருணம்தான் ஆதி!

வாங்க எல்லாரும் செத்து செத்து கொண்டாடலாம்

ஷர்புதீன் said...

தலைவரே., வோட்டு போட்டுட்டேன்., ஏதோ தமிழ் மாநாட்டுக்கு என்னால் முடிந்தது...

:)

கே.ரவிஷங்கர் said...
This comment has been removed by the author.
கே.ரவிஷங்கர் said...

”செம்மொழியாம்” பாட்டு விமர்சனம் படிக்க:

http://raviaditya.blogspot.com/2010/05/blog-post_22.html

May 23, 2010 7:48 PM

கார்க்கி said...

//ஈரோடு கதிர் May 23, 2010 2:20 PM
அதென்னங்க சூன் 23-27//

அதாங்க.. ஸ்டாலின் பேரை “சுடாலின்”ன்னு எழுதினா ஒத்ஹ்டுக்குவாரா? பெயர்ச்சொல்லை இப்படி திரிப்பது எந்த மொழியிலும் ஏற்றுக் கொள்ள முடியாது செயல். அறியாமைன்னு கூட சொல்லலாம்.. ஜூன் என்று எழுதனும். இல்லைன்னா ஆனின்னு எழுதனும். அது என்ன சூன்?? இது கூட தெரியாம மொழி மாநாடாம்.. :)))

kathir said...

உலகத் தமிழ் மானாடு மன்னிக்கவும்.முதல் உலகத் தமிழ் செம்மொழி மானாடு பதிவு கண்டேன்.சமயத் தமிழை புறக்கணித்துவிட்டு னடைபெரும் இம் மானாடு எப்படி முழுமை பெறும்?

அதிலை said...

maanaadu... mayilaaduma?

என். உலகநாதன் said...

ஆதி,

நான் சொல்லவிருந்த கருத்தினை நண்பர் இன்ந்தியன் சொல்லிவிட்டார்.

இனி என் சந்தேகங்கள்:

01. செம்மொழி என்றால் என்ன?
02. தமிழ் செம்மொழி ஆனதால் என்ன பயன்?
03. இவ்வளவு செலவு செய்து இந்த மாநாடு தேவையா?
04. அதனால் சாதிக்கப்போவது என்ன?

தயவு செய்து விளக்க முடியுமா?

புருனோ Bruno said...

//01. செம்மொழி என்றால் என்ன?//

இதற்கான வரைமுறைகள் தெளிவாக உள்ளன.
A classical language, is a language with a literature that is classical— i.e., it should be ancient, it should be an independent tradition that arose mostly on its own, not as an offshoot of another tradition, and it must have a large and extremely rich body of ancient literature. (UC Berkeley linguist George L. Hart)

//02. தமிழ் செம்மொழி ஆனதால் என்ன பயன்?//

தமிழ் அந்த காலத்திலில் இருந்தே செம்மொழிதான்.
நீங்கள் MCOM, AICWA, ACS Final என்று படித்ததால் என்ன பலன்
ஏன் படிக்காமல் இருந்திருக்கலாமே

---


//03. இவ்வளவு செலவு செய்து இந்த மாநாடு தேவையா?//

இவ்வளவு செலவு செய்து படிக்க வேண்டுமா. எழுத படிக்காமல் இருந்திருக்க வேண்டியது தானே :) :) :)

ஏன் (இணையத்திற்கு) செலவு செய்து வலைப்பதிவு எழுதுகிறீர்கள் :) :) :)

ஏன் இணைய இணைப்பிற்கு செலவு செய்து மறுமொழி எழுதுகிறீர்கள் :) :) :) :)

//04. அதனால் சாதிக்கப்போவது என்ன?//

நீங்கள் படித்ததினால் சாதித்தது என்ன
சாதித்துள்ளீர்கள் தானே

படிக்காமல் இருந்திருந்தால் இந்த அளவு சாதித்திருப்பீர்களா

குறைந்த பட்சம் இப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பது உங்கள் கல்வியினால் தானே

//தயவு செய்து விளக்க முடியுமா? //
விளக்கியுள்ளேன் என்றே நினைக்கிறேன்

தூங்குபவர்களை எழுப்ப முடியும்

தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது

அதே போல் (மொழியுணர்வு) செத்து போனவர்களையும் எழுப்ப முடியாது

நீங்கள் விழித்துக்கொண்டீர்கள் தானே

புருனோ Bruno said...

இந்தியன் மற்றும் உலகநாதன்

--

திருமணம் செய்ய வேண்டுமென்றால் ஒரு ஆணும் பெண்ணும் போதும்

ஏன் ஊர் கூட்டி மண்டபம் பிடித்து செய்கிறார்கள்

கொண்டாட்டம் என்பது சமுக வளர்ச்சியில் ஒரு பகுதி

அது சமூகத்தின் அங்கம்

---

பகிர்தல் என்பது சமுக பரிணாமத்தின் முக்கியம்

---

நீங்கள் தீபாவளி பொங்கல் எல்லாம் கொண்டாடுவதில்லையா

ஏன் பணவிரயம் என்று நினைத்து கொண்டாடமல் விட்டு விட்டீர்களா

---

புருனோ Bruno said...

என். உலகநாதன் சார்

நான் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை

பதில் இல்லாமல் என்று இல்லை

நேரடியாக பதில் அளித்தால் உங்கள் ஒரு கேள்விக்கு மட்டும் தான் பதிலளிக்க முடியும்ம்

இப்பொழுது மேலும் எழக்கூடிய சில கேள்விகளையும் சேர்த்தே கவனித்திருக்கிறேன்

--

தூங்குபவர்களை எழுப்ப முடியும்
தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது
அதே போல் (மொழியுணர்வு) செத்து போனவர்களையும் எழுப்ப முடியாது

நீங்கள் விழித்துக்கொண்டீர்கள் தானே

புருனோ Bruno said...

ஆதி பாஸ்

கம்பநாட்டாழ்வாரும் கவியரசி அவ்வவை நல்லாளும்
எம்மதமும் ஏற்று புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
புத்தாடை அனைத்திற்க்கும்
வித்தாக விளங்கும் மொழி

வரிகளை விட்டு விட்டீர்கள்

கார்க்கி said...

புருனோ சார், உங்க விளக்கத்தோடு 100% நான் ஒத்துப் போகிறேன்..

அப்படியே சூன், சுடாலின் மேட்டரும் புரிய வைத்து விடுங்களேன். மண்டை காய்கிறது

செல்வேந்திரன் said...

‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ என்ற பெயர்ப் பதம், ‘உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு’ என்பதாக மாற்றம் கொண்டுள்ளது. // அது ஏன்னு தெரியுமா ஆதி?!

Cable Sankar said...

இப்ப என்ன பிரச்சனை..?

தராசு said...

இப்ப எதுக்கு இந்த மாநாடு????

சூன் சரியா, ஜூன் சரியா?????

லட்சுமண் சரியா, இலக்குவன் சரியா????

இப்ப இங்க என்ன பிரச்சனைன்னு கேக்கறீங்களே கேபிள் அண்ணே, இதுக்கும் மேல ஒரு பிரச்சனை வேணுமா?????

என். உலகநாதன் said...

டாக்டர் புரூனோ சார்,

உங்கள் பதில்களுக்கு நன்றி.

உண்மையாகவே தெரியாமல்தான் கேட்டேன். ஏற்கனவே மோகன்குமார் பதிவிலும் கேட்டு இருக்கிறேன்.

நான் சாதாரணமாகத்தானே கேட்டேன். அதற்கு இவ்வளவு கோபமாகவும், காட்டமாகவும் பதில் தருவதுதான் முறையா?

நான் இதுவரை யார் மனதையும் புண்படுத்தியது இல்லை.

அப்படி நீங்கள் நினைத்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஆதி,

தயவு செய்து என் பின்னூட்டத்தை நீக்கி விடுங்கள்.

மின்னுது மின்னல் said...

வழக்கம் போல் கலக்கல் பாஸ்

!

ஆதிமூலகிருஷ்ணன் said...

'கனியிருப்பக் காய்கவர்ந் தற்று'

-அன்பு நண்பர்களே..

ஓரிருவரைத்தவிர யாருமே மகிழ்ச்சியையோ, நல்லெண்ணத்தையோ, வாழ்த்துகளையோ பகிர்ந்துகொள்ளவில்லை. கிண்டலும், வீண் விவாதங்களுக்கான துவக்கமாகவும்தான் பின்னூட்டங்கள்ள் இருக்கின்றன. பதிவின் நோக்கம் புரிந்துகொள்ளப்படவில்லை. இதற்கான பெரும்பான்மையும் அரசியல் காரணங்களே என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது.

நேர்மையற்ற, அடிப்படை ஒழுங்கற்ற, வெற்றுக்கூச்சல் நிரம்பிய, ஊழல் மலிந்த மனங்கள் கொண்ட மக்கள் நிரம்பிய ஒரு சமுதாயம். அதையாளும் ஒரு மன்னன். எனது எதிர்பார்ப்புகள் மிகக் கொஞ்சமானவையே.!

அப்படியும் எந்த அரசியல் நோக்குமில்லாமல், ஒரு மொழிப்பற்றில்தான் இந்த செய்திப்பகிர்வைச் செய்தேன்.

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.

@இந்தியன், செல்வேந்திரன் :

'உலகத் தமிழாய்வு நிறுவனம்' இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பதாலேயே இந்தப் பெயர் மாற்றம் மற்றும் இது ஒன்பதாவது உலகத்தமிழ் மாநாடு அல்ல. இது கலைஞரால் நிகழ்த்தப்படும் தன்னிச்சையான மாநாடு, அவ்வளவே.. என்ற செய்தியை ஊடகங்கள் தெளிவாக பேசவில்லை (நான் ஒரு வேளை கவனிக்காமலிருந்திருக்கலாம்). அரசியல் காரணங்களாக இருக்கலாம். அது உண்மையாயின் செய்திக்கு நன்றி.

மேலும் அதனாலேயே இந்த விழாவை ஒதுக்கித்தள்ளுவோம் என்று சொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன்.

நெடும்பாதை கொண்ட தமிழுக்கும், அதன் ஆய்வுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட மாநாடுகள் நிகழ்வதும் மகிழ்ச்சிக்குரியதே. அது கலைஞர் முயற்சியாயினும், அல்லது யாரது முயற்சியாயினும்.

@ஈரோடு கதிர், கார்க்கி :

பெயர்ச்சொற்கள் மொழிமாற்றம் செய்யப்படாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் ஒரு சிக்கலாக தமிழில் இல்லாத ஒலிக்குறிப்புகளைக் குறிக்க நாம் பயன்படுத்தும் ஸ, ஷ, ஜ, ஹ, ஃ for F போன்ற எழுத்துகள் பயன்படுத்தப்படுகின்றன. 'இவற்றைப் பயன்படுத்தேன், என் மொழி தூயது' என்ற வரட்டுப்பிடிவாதம் எனக்கில்லை என்பதை அறிவீர்கள். ஸ்டாலின், ஜூன் என்பதே சரி. பெரும்பாலும் அவ்வாறே பயன்படுத்திவருகிறேன், வருகிறோம். இந்தக்கட்டுரையைப் பொருத்த வரை தமிழக அரசின் பல்வேறு அறிவிப்புகளில் இருந்தபடியால் மட்டுமே 'சூன்' என்று பயன்படுத்தியுள்ளேன். விதிவிலக்குகள் கொள்ளத்தக்க விஷயமே இது என நம்புகிறேன்.

ஆனி ஏன் கூடாது? திருவள்ளுவர் ஆண்டு ஏன் கூடாது? வேட்டி ஏன் கூடாது? என்று ஆண்டாண்டு காலத்திற்கும் கேட்கப்படும் தொடர் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருந்தால் இருக்கும் நான்கைந்து முடிகளும் கொட்டிப்போகும் எனவும் நம்புகிறேன்.

'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்..'

@என். உலகநாதன்

முந்தைய கருத்துகளின் தொடர்ச்சியாகவே பின்னூட்டங்கள் புரிந்துகொள்ளப்படும். நானும் அவ்வாறே நினைத்தேன். உங்கள் கேள்விகளுக்கு டாக்டர் தேவையான பதில்களைத் தந்துவிட்டார் என நினைக்கிறேன்.

அனைவருக்கும் பொறுப்பிருக்கக்கூடிய இதைப்போன்ற உரிமையான கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்காமல் அந்த நேரத்தை அதற்கான விடைகளைத் தேடுவதில் பயன்படுத்துவதே நியாயமாக இருக்கமுடியும். புத்தகங்கள் இருக்கின்றன.. இணையம் இருக்கிறது..

@புரூனோ

முனைப்பான பகிர்வுக்கும், பதில்களுக்கும் நன்றி டாக்டர்.

என். உலகநாதன் said...

//அனைவருக்கும் பொறுப்பிருக்கக்கூடிய இதைப்போன்ற உரிமையான கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்காமல் அந்த நேரத்தை அதற்கான விடைகளைத் தேடுவதில் பயன்படுத்துவதே நியாயமாக இருக்கமுடியும். புத்தகங்கள் இருக்கின்றன.. இணையம் இருக்கிறது..//

விளக்கத்திற்கு நன்றி ஆதி!

இனி நான் உங்களிடம் எந்த கேளிவியும் கேட்க மாட்டேன்.

என்னால் உங்கள் மனம் காயப்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

என்றும் நட்புடன்
என்.உலகநாதன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அன்பு உலகநாதன், தொடர்ச்சியாக கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் உங்களிடம் உள்ள உரிமையாலேயே அவ்வாறு சொல்ல நேர்ந்தது. உங்களை வருந்தச்செய்துவிட்டதாக கணிக்கமுடிகிறது. மன்னிக்க..

கார்க்கி said...

தலைவரே, நீங்க ஏன் சூன் என்று போட்டிங்கன்னு கேட்கல.. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரக்ளைத்தான் கேட்டேன்..

மேலும் இன்னிகழ்வு முடிவான போது எவ்வளவு ஆரவ்த்துடன் இருந்தேன் என்பது ஞாபகமில்லையா? இப்போதும் எனக்கு இது பிடித்தமான கொண்டாட்டமே.. ஆனா சூன் தான் வருத்தம் தருகிறது. இது எவ்வளவு பெரிய அபத்தம், அறியாமை என்பது தெரிந்தத்தாலே சொல்கிறேன்..

புருனோ Bruno said...

கார்க்கி பாஸ்

அருண் என்ற பெயரை ஆங்கிலத்தில் Arun என்று எழுதுகிறீர்கள்

அதே நேரம் ஆறுமுகம் என்ற பெயரையும் ஆங்கிலத்தில் Arumugam என்றே எழுதுகிறீர்கள்

ஆங்கிலத்தில் இருப்பது ஒரே r தானே. ”பெரிய” ற இல்லை என்பதால் நீங்கள் ஆறுமுகம் என்பதை Aறumugam என்றா எழுதுகிறீர்கள்

அப்படி இருக்கும் போது June என்பதில் உள்ள J க்கு ஈடான எழுத்து தமிழில் இல்லை

இருக்கும் எழுத்துக்களில் மிக அருகில் உள்ள ”ச”வை பயன்படுத்தில் சூன் என்று எழுதலாமே

தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் Tamil Nadu என்று தானே எழுதுகிறார்கள்

Tamiழ் நadu என்றா எழுதுகிறார்கள்

ந,ன,ண எல்லாமே ஆங்கிலத்தில் n தானே

---

சில எழுத்துக்களில் சில மொழியில் இருக்காது. இல்லை என்றால் அதற்கு அருகில் ஒலிக்கும் எழுத்தை பயன்படுத்துவது தான் மரபு. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.

---

d / t ஆகிய இரு ஆங்கில் எழுத்துக்களுக்கு ஒரே ட வை பயன்படுத்தும் போது ஏன் j/s ஆகிய இரண்டிற்கும் (உச்சரிப்பை பொருத்து) ஒரே ச வை பயன்படுத்தக்கூடாது

---

வடமொழி ஒலிகளை அப்படியே எழுத வேண்டும் என்றால் ஆங்கிலம் என்ன பாவம் செய்தது.

பிரடெரிக், பயர்பாக்ஸ் போன்ற பெயர்களை தமிழில் அப்படியே எழுதமுடிவதில்லையே

வேண்டுமானால் ஜ,ஷ,ஸ வுடன் Fவையும் தமிழ் எழுத்தாக ஆக்கி விடலாமா

---
கார்க்கி பாஸ் என்று எழுதுவதற்கு பதில் கார்க்கி பாசு என்று எழுதலாமே என்று நீங்கள் கேட்கிறது காதில் விழுகிறது.

ஒரேயடியாக மொத்தமாக மாற வேண்டாம். சிறிது சிறிதாக மாறுவோம் என்பது என் கருத்து

புருனோ Bruno said...

//உண்மையாகவே தெரியாமல்தான் கேட்டேன். ஏற்கனவே மோகன்குமார் பதிவிலும் கேட்டு இருக்கிறேன்.

நான் சாதாரணமாகத்தானே கேட்டேன். அதற்கு இவ்வளவு கோபமாகவும், காட்டமாகவும் பதில் தருவதுதான் முறையா?//

நான் ஏற்கனவே கூறிவிட்டேனே. இந்த பதில் உங்களுக்காக மட்டும் அல்ல !!

நீங்கள் தெரியாமல் கேட்டீர்கள் (தூங்கினீர்கள்)

ஆனால் நிறையபேர் தெரிந்து கொண்டே பிரச்சனை பண்ண வேண்டும் என்று கேட்பார்கள் (தூங்குவது போல் நடிப்பவர்கள்)

அது போன்ற நபர்களின் கேள்விகளுக்கும் சேர்த்து தான் என் பதில்

//நான் இதுவரை யார் மனதையும் புண்படுத்தியது இல்லை.
அப்படி நீங்கள் நினைத்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.//

என் பதிலில் உங்கள் மனது புண்பட்டிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்

இராமசாமி கண்ணண் said...

:-)

என். உலகநாதன் said...

டாக்டர்,

இன்று மதியம் இரண்டு முறை உங்களுக்கு மலேசியாவில் இருந்து போன் செய்தேன். நீங்கள் எடுக்கவே இல்லை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

பிள்ளையாண்டான், ஜில்தண்ணி, இண்டியன், நேசமித்திரன், குசும்பன், ஈரோடு கதிர், ராமலக்ஷ்மி, பாரா, அதிஷா, ஷர்புதீன், ரவிஷங்கர், கார்க்கி, கதிர், அதிலை, உலகநாதன், புரூனோ, செல்வேந்திரன், கேபிள்சங்கர், தராசு, மின்னல், இராமசாமிகண்ணன் அனைவருக்கும் நன்றி.

@கார்க்கி :

விஷயத்தை விடயம் என்று எழுதும் போது வராத வருத்தம், ஹனுமானை அனுமான் என்று எழுதுகையில் வராத வருத்தம் ஏன் 'சூன்' என்று எழுதுகையில் வருகிறது என்று புரியவில்லை. நாம் பழகிய சொற்கள் வித்தியாசமாகத் தெரிகிறது, அவ்வளவே.. மூத்தவர்கள் அவ்வெழுத்துகளை முற்றிலும் பயன்படுத்தியிருக்க வேண்டும் அல்லது முற்றிலும் விலக்கியிருக்கவேண்டும். அவர்கள் இரண்டையுமே செய்ததால் நாமும் தொடர்கிறோம். நாமும் தொடரலாம் அல்லது சரிசெய்து கொள்ளலாம். எதுவும் தவறில்லை.

ஆனால் 'பெரிய அபத்தம், அறியாமை' என்றெல்லாம் நீ யாரைச்சுட்டுகிறாய் எனத் தெரியுமா? கடந்த நூறாண்டுகளின் நூற்றுக்கணக்கான தமிழ் எழுத்தாளர்களை.!!

இதில் 'பெரிய அபத்தம், அறியாமை' என்றெல்லாம் சொல்லுமளவில் எதுவுமில்லை என உணர்ந்தால் மகிழ்ச்சி.

புருனோ Bruno said...

//டாக்டர்,

இன்று மதியம் இரண்டு முறை உங்களுக்கு மலேசியாவில் இருந்து போன் செய்தேன். நீங்கள் எடுக்கவே இல்லை.
//

மன்னிக்கவும்

இன்று மதியம் எனக்கு எந்த தொலைபேசி அழைப்பும் வரவில்லை.

என். உலகநாதன் said...

டாக்டர்,

இது உங்கள் நம்பர் இல்லையா?

0091 9842111725

உங்கள் வலைப்பூவில் இருந்து, தொடர்பு பகுதியில் இருந்து இந்த நம்பரை கண்டுபிடித்தேன்.

புருனோ Bruno said...

That is my number only . But i did not get any calls yesterday from new numbers. You can try today after 2 pm ist

புருனோ Bruno said...

உலகநாதன் சார்
உங்கள் எண்ணை தாருங்கள்
நான் தொடர்பு கொள்கிறேன்

பழமைபேசி said...

எத்தனையோ மனத்தாங்கல் இருப்பினும், கலந்து கொள்ள வேண்டும் என்கிற தணியாத ஆவல் இருக்கிறது.

நாம் வாழும் காலத்தில் நடக்கும் மொழிக்கான ஒரு மாநாட்டைத் தவற விடுவதில் வருத்தமே!

மேலும் மாநாட்டின் காணொளிகளைக் காண ஆவலாய் இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி!

Indian said...

கோவையில் வருகிற 23ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான நிகழ்ச்சி நிரல்

தொடக்க விழா கோவை மாநாட்டு அரங்கில் 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்று பேசுகிறார்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் மாநாட்டை தொடங்கி வைத்து, “கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை” பின்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு வழங்குகிறார். தமிழக ஆளுநர் பர்னாலா மாநாட்டு சிறப்பு மலரை வெளியிடுகிறார். அமைச்சர் அன்பழகன் தகுதியுரை நிகழ்த்துகிறார்.

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), வா.செ. குழந்தைசாமி, கா. சிவத்தம்பி (இலங்கை) ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். தலைமை செயலாளர் ஸ்ரீபதி நன்றி கூறுகிறார்.

23ம் தேதி மாலை பிரமாண்டப் பேரணி

23-ந்தேதி மாலை 4 மணிக்கு உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பேரணி நடைபெறுகிறது. இது கோவை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கி, அவினாசி சாலை வழியாக சென்று மாநாட்டு வளாகத்தை அடைகிறது.

“இனியவை நாற்பது” என்ற தலைப்பில் இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் இலக்கியம், கலை, வரலாறு ஆகியவற்றை நினைவூட்டும் அலங்கார வண்டிகள், கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

24ம் தேதி மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி

24-ந்தேதி காலை 10.30 மணிக்கு லாரன்ஸ் குழுவின் மாற்று திறனாளிகள் வழங்கும் கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. பகல் 12 மணிக்கு பொது கண்காட்சியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி திறந்து வைக்கிறார். மலேசிய மந்திரி சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

புத்தக கண்காட்சியை ஜி.கே. வாசன் திறந்து வைக்கிறார். மாலத்தீவு அமைச்சர் அகமது நசீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இணைய தள கண்காட்சியும் திறக்கப்படுகிறது.

அப்துல் ரகுமான் தலைமையில் கவியரங்கம்

பிற்பகல் 2.30 மணிக்கு “புதியதோர் உலகம் செய்வோம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் அப்துல் ரகுமான் தலைமை தாங்குகிறார். வ.மு. சேதுராமன், பொன்னடியான், ஆண்டாள் பிரியதர்சினி, வின்சென்ட் சின்னத்துரை, கவிதை பித்தன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

மாலை 4 மணிக்கு “சமயம் வளர்த்த தமிழ்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு சுந்தரலிங்க சாமியடிகளார் தலைமை தாங்குகிறார். பேராயர் சின்னப்பா, ஸ்ரீபால், சாரதாநம்பி ஆரூரான், காதர் மொய்தீன் உள்பட பலர் பேசுகிறார்கள். இரவு முதல்-அமைச்சர் கருணாநிதி எழுதிய “போர் வாளும் பூவிதழும் நாட்டிய நிகழ்ச்சியை பத்மா சுப்பிரமணியம் குழுவினர் வழங்குகிறார்கள். நடனம், நாடகம், இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன.

Indian said...

25ம் தேதி கிளம்பிற்று காண் தமிழ்ச் சிங்க கூட்டம்

25-ந்தேதி காலை 10 மணிக்கு “கிளம்பிற்று காண் தமிழ்ச்சிங்க கூட்டம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமை தாங்குகிறார். ஈரோடு தமிழன்பன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட பலர் கவிதை படைக்கிறார்கள்.

11.30 மணிக்கு “தமிழர் வாழ்வோடு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, இன்றைய இலக்கியமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. சோ. சத்தியசீலன் நடுவராக பங்கேற்கிறார். குமரி அனந்தன் உள்பட பலர் பேசுகிறார்கள்.

25ம் தேதி கருணாநிதி தலைமையில் கருத்தரங்கம்

மாலை 4 மணிக்கு “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடக்கிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

இதில் தங்கபாலு, சீத்தாராம் யெச்சூரி எம்.பி., கி. வீரமணி, டாக்டர் ராமதாஸ், இல. கணேசன், டி. ராஜா எம்.பி., ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன், ஸ்ரீதர் வாண்டையார், காதர் மொய்தீன், ஜெகன்மூர்த்தி, செல்லமுத்து, தாவூத் மியாகான், திருப்பூர் அல்தாப், சந்தானம் பஷீர் அகமது ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

26ம் தேதி வாலி தலைமையில் கவியரங்கம்

26-ந்தேதி “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடக்கிறது. இதற்கு கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். கவிஞர்கள் மு. மேத்தா, பா. விஜய் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

அடுத்து வா.செ. குழந்தைசாமி தலைமையில் “செம்மொழி தகுதி” என்ற தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் உள்பட பலர் பேசுகிறார்கள். இதையடுத்து க.ப. அறவாணன் தலைமையில் “கடல் கடந்த தமிழும் தமிழரும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

நடிகை ரோகினியின் நாட்டிய நாடகம்

மாலை 4.30 மணிக்கு சாலமன் பாப்பையா நடுவராக பங்கேற்கும் பட்டிமன்றம் “தமிழ் வளர்க்கும் பெரும் பொறுப்பு வெள்ளித் திரைக்கே, சின்னத்திரைக்கே, அச்சுத்துறைக்கே” என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் பாரதிராஜா, நடிகர் சந்திரசேகர், லியோனி, எஸ்.வி. சேகர், நக்கீரன் கோபால் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இரவு கொடிசியா வளாகத்தில் நடிகை ரோகிணி நடிக்கும் “பாஞ்சாலி சபதம்” நாடகம் நடக்கிறது.

27-ந்தேதி காலை 10 மணிக்கு “வித்தாக விளங்கும் மொழி” என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கத்துக்கு நடிகர் சிவக்குமார் தலைமை தாங்குகிறார். சுப. வீரபாண்டியன், திருச்சி செல்வேந்திரன், ஜெகத்கஸ்பார் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையடுத்து கலை நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.

பிரணாப் தலைமையில் நிறைவு விழா

மாலை 4 மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடக்கிறது. மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை தாங்குகிறார். ப. சிதம்பரம் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு தபால் தலையை மத்திய அமைச்சர் ராசா வெளியிடுகிறார்.

முதல்வர் கருணாநிதி, “சிறந்த தமிழ் மென் பொருளை உருவாக் கியதற்கான “கணியன் பூங்குன்றனார்” விருது வழங்கி மாநாட்டு நிறைவுரை ஆற்றுகிறார். முன்னதாக தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்கிறார். முடிவில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு தனி அதிகாரி அலாவுதீன் நன்றி கூறுகிறார்.

ponsiva said...

நல்ல பதிவு ஆதி அவர்களே..
புருனோ அவர்களின் கருத்து சரிதான்..
கருத்து வேறுபாடு இருப்பினும் தமிழன் என்கிற உணர்வோடு கலந்துகொள்வோம்.
இயலவில்லையெனில் கவனிப்போம்..

நண்பர் கார்க்கியின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவே இல்லையே ..
அது மட்டும் ஏன் புருனோ அவர்களே ..
அது என்ன சூன் .. ?..இவளோ தூரம் கடுமையாக தமிழ் உணர்வோடு பதில் அளித்த நீங்களும் அதே தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லா தமிழர்களும் இதை தவறு என ஒப்புக்கொள்ள தான் வேண்டும் ..!

செம்மொழி கலைவிழாவில் எனது அனுபவத்தை எழுதி உள்ளேன் படித்து கருத்து சொல்லுங்கள் ..
http://ponsiva-chumma.blogspot.com/2010/06/blog-post_20.html

அன்புடன்
பொன்.சிவா

புருனோ Bruno said...

//நண்பர் கார்க்கியின் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவே இல்லையே ..//

நான் கூறியுள்ளேன். விரிவாகவே பதலளித்துள்ளேன்

புருனோ Bruno
May 24, 2010 6:27 PM ல் நான் எழுதிய மறுமொழியை பாருங்கள்

அங்கு ஒரு சுட்டி அளிக்கப்பட்டுள்ளது
அதையும் பாருங்கள்

//இவளோ தூரம் கடுமையாக தமிழ் உணர்வோடு பதில் அளித்த நீங்களும் அதே தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லா தமிழர்களும் இதை தவறு என ஒப்புக்கொள்ள தான் வேண்டும் ..!//
மன்னிக்கவும். உங்கள் கருத்துடன் முரன்படுகிறேன்

காரணத்தை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

நீங்கள் கேட்பதால் மீண்டும் ஒரு முறை

அருண் என்ற பெயரை ஆங்கிலத்தில் Arun என்று எழுதுகிறீர்கள்

அதே நேரம் ஆறுமுகம் என்ற பெயரையும் ஆங்கிலத்தில் Arumugam என்றே எழுதுகிறீர்கள்

ஆங்கிலத்தில் இருப்பது ஒரே r தானே. ”பெரிய” ற இல்லை என்பதால் நீங்கள் ஆறுமுகம் என்பதை Aறumugam என்றா எழுதுகிறீர்கள்

அப்படி இருக்கும் போது June என்பதில் உள்ள J க்கு ஈடான எழுத்து தமிழில் இல்லை

இருக்கும் எழுத்துக்களில் மிக அருகில் உள்ள ”ச”வை பயன்படுத்தில் சூன் என்று எழுதலாமே

தமிழ்நாடு என்பதை ஆங்கிலத்தில் Tamil Nadu என்று தானே எழுதுகிறார்கள்

Tamiழ் நadu என்றா எழுதுகிறார்கள்

ந,ன,ண எல்லாமே ஆங்கிலத்தில் n தானே

---

சில எழுத்துக்களில் சில மொழியில் இருக்காது. இல்லை என்றால் அதற்கு அருகில் ஒலிக்கும் எழுத்தை பயன்படுத்துவது தான் மரபு. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.

---

d / t ஆகிய இரு ஆங்கில் எழுத்துக்களுக்கு ஒரே ட வை பயன்படுத்தும் போது ஏன் j/s ஆகிய இரண்டிற்கும் (உச்சரிப்பை பொருத்து) ஒரே ச வை பயன்படுத்தக்கூடாது