Tuesday, May 25, 2010

தரமான ஒரு பதிவு

எழுத வந்து இரண்டு வருடமாகிவிட்டது, 2.5 லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 350 பதிவுகள் எழுதி பிரபல பதிவராகவும் ஆகியாச்சு (எவ்வளவு வாங்கிக்கட்டினாலும் உரைக்காதாப்பா உங்களுக்கு?), பல விருதுகளையும், பாராட்டுகளையும் வாங்கியாச்சு (இது எப்போ நடந்தது?).. இப்பேர்ப்பட்ட நேரத்தில் நமக்கு பொறுப்பு கூடிவிட்டது என்பதை உணர்வதால் இனி முன்போல அவ்வப்போது கூட‌ மொக்கைப்பதிவுகள் போடமுடியாது போல தெரிகிறது. மீறிச்செய்தால் நாலு பேரின் கேள்விக்கு ஆளாகிவிடும் சூழல் தெரிகிறது. ஆகவே இனி தரமான பதிவுகள் மட்டும்தான் எழுதுவது என்று முடிவு செய்தாயிற்று. ஆகவே அப்படிப்பட்ட தரமான பதிவுகளை எப்படி எழுதலாம் என்ற ஒரு சின்ன முன்னேற்பாடுதான் இந்தப்பதிவு.

முதலில் நாம் அப்படியான பதிவுகள் ஏதாவது எழுதியிருக்கிறோமா என்ற வரலாறைத் திரும்பிப்பார்த்தோமானால் கடந்துவந்த பாதை காய்ந்து போய் கிடப்பதைக் காணமுடிகிறது. பிறகு ஏன் நம்மிடம் போய் அதை எதிர்பார்க்கிறார்கள்.?

அந்தப்படம் சரியில்லை, இந்தப்படம் நொள்ளை, ஏன் இந்த ஹீரோ ஷேவ் பண்றதேயில்லை என்றவாறு சினிமா குறித்து கருத்தோ, விமர்சனமோ எழுதலாம் என்று பார்த்தால் அதை யாரும் விரும்புவதில்லையாம் (சினிமா பதிவுகள் யாருக்குமே புடிக்காதாமே, ஒரு புள்ளி விவரம் சொல்லுது). ஆகவே அதுகுறித்து எழுதமுடியாது.

அனுபவம் என்ற பெயரில் சின்ன வயசு சம்பவங்கள், ஊர், கல்லூரி நினைவுகளை கொசுவத்தியாக சுத்த‌லாம் என்று பார்த்தால் இந்த சப்ஜெக்டில் நம்ப பதிவர்கள் பழம் தின்று கொட்டையைப் போட்டுவிட்டார்கள். என்ன எழுதினாலும் முன்னமே யாரோ எழுதியதைப்போலவே இருக்கிறது. சரி படிக்கும் புத்தகங்களைப்பற்றி (அப்படியே படிக்கிறோம் என்று பீலா விட்டுக்கலாம்) எதையாவது எழுதிவைக்கலாம் (வேறென்ன விமர்சனம்தான்.. தடியெடுத்தவன்லாம் தண்டல்காரன்கிற மாதிரி பிளாக் இருக்கிறது. ச.தமிழ்செல்வனைக்கூட சக பதிவர் என்றோ, எஸ்ராவை சக எழுத்தாளர் என்றோகூட டப்பென்று சொல்லிவிடலாம். கேட்க யார் இருக்கிறார்கள்?) என்று பார்த்தால் எதையாவது படித்தால்தானே ஆச்சு? புத்தகமா.. பேப்பர்ல பிரின்ட் பண்ணி பைன்ட் பண்ணியிருப்பாங்களே அதுதானே? என்று கேட்கக்கூடிய நிலைமை.

சரி விடு. இருக்கவே இருக்கு தங்கமணி பதிவுகள், டெக்னிகல் பதிவுகள் என்று பார்த்தால் அட என்னப்பா இவன் கேஸட்டை திருப்பி திருப்பி போட்டுகிட்டிருக்கான் என்று முனகல் சத்தம் கேட்கிறது. எவ்வளவுதான் நைஸாக அரைத்தாலும் அரைச்ச மாவு என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். சரி நாம்தான் காதலைப் புழிவதில் கொஞ்சம் அனுபவம் வைத்திருக்கிறோமே அதில் இன்னும் கொஞ்சம் புழிந்தால் என்ன என்று யோசித்தால் வீட்டில் நிலைமை எப்படியிருக்கிறது.? போராட்டக்களத்தில் பூங்குயில் கூவுவதா? சான்ஸேயில்லை.

ஒரே வழி சிறுகதைதான். புனைந்து தள்ளிவிடலாம், ஒரு பய தரமற்ற பதிவுன்னு சொல்லமுடியாது. வேண்டுமானால் நல்லாயிருக்கு, நல்லாயில்லை அவ்வளவுதான் சொல்லமுடியும் அப்படின்னு யோசிச்சு சிறுகதை எழுதலாம்னு உட்கார்ந்தா அதுக்கு ஏதோ 'நாட்' வேணுமாமே. நானும் எவ்வளவோ ரோசனை பண்ணி பார்க்குறேன், அப்படி ஒண்ணு வந்து விழுந்து தொலைக்கமாட்டேங்குது. நான் என்ன பண்றது? சரிதான், பதிவர் வம்புதும்பு, கிசுகிசுக்கள், அறுவை ஜோக், பத்திரிகை செய்திகள், சுண்டல் செய்வது எப்படி போன்று மொக்கை போடலாம் என்று பார்த்தால் அவையெல்லாம் தரமான பதிவுகள் இல்லையாமே..

என்னதான் பண்றது? எழுத வந்து இரண்டு வருடமாகிவிட்டது, 2.5 லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 350 பதிவுகள் எழுதி பிரபல பதிவராகவு…… (திரும்பவும் முதல்லேர்ந்தா.. சை.!)

35 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

நேரமின்மையால் போன வருடம் எழுதிய ஒரு பதிவு ரிப்பீட்டு செய்யப்படுகிறது. பொறுத்துக் கொள்ளவும்.

இராமசாமி கண்ணண் said...

நல்லா இருக்குங்க இந்த மொக்கையும் :-). இன்னும் நெரைய பேரு வந்து கும்முவாங்கன்னு நெனைக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

//பொறுத்துக் கொள்ளவும்.//

ம்.

இராமசாமி கண்ணண் said...

வேர் இஸ் மிஸ்டர் குசும்பன். நீங்க இதுக்கு என்ன சொல்ல போறீங்க :-).

ILA(@)இளா said...

சே, நன்றி கூட காப்பி பேஸ்டா?? என்ன பண்ண நம்மளையும் நாலு பேரு தொடராங்களேன்னு இப்படியுமா?

சுசி said...

நல்லவேளை நான் முதல் தடவையா படிச்சேன்..

நான் உங்கள எப்போதுமே பிரபல பதிவர் ஆதினுதான் பேசுவேனாக்கும்.

அப்புறம்..
//போராட்டக்களத்தில் பூங்குயில் கூவுவதா? //
இது சூப்பரு..

அப்டியே தமிழிஷ்லவும் இணைச்சிருந்தா அங்கனவும் ஓட்ட குத்தியிருப்பேன்ல..

வானம்பாடிகள் said...

இதுக்குதானா இவ்ளோ அலப்பறை:))

நேசமித்ரன் said...

ரிப்பீட்டா ....

ரைட்டு !

அறிவிலி said...

தரமான பதிவு.

ராமலக்ஷ்மி said...

பாருங்களேன் பத்தாவதா வந்தாலும் நான்தான் முதலில் சொல்கிறேன்:)

வாழ்த்துக்கள் ஆதி.

Mahesh said...

அதானே பாத்தேன்... எங்க நல்ல புத்தி வந்துருச்சோனு திக்குனு ஆயிடுச்சு !!!

மொக்கை போட்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றோர் யோசித்தே நோவார் !!

அதிஷா said...

வாசிப்பனுபவத்திற்காக எதையும் செய்யலாம் .
நேற்று கூட வாசிப்பதற்காக வெறி கொண்டு மைலாப்பூர் கோவிலில் நாதஸ்வரவித்வானோடு பயங்கர சண்டை.. வாசிப்பே மூச்சு.. என்ன செய்ய ப்ச்!

Anonymous said...

இந்த பதிவை பத்திர படுத்தி வைங்க, அடுத்த வருசமும் தேவைப்படும்:))

Anonymous said...

இதுக்கு நீங்க ஏன் ஒரு புத்தகம் வெளியிட கூடாது? எளக்கியவாதி இல்லன எளுத்தாலர்ன்னு போட்டுக்கலாம் :)

(ஐடியா ராயல்டி கொண்டது)

Cable Sankar said...

சூப்பர்..
இதுவும் ஒரு மீள் பின்னூட்டம்:)

தராசு said...

//மீறிச்செய்தால் நாலு பேரின் கேள்விக்கு ஆளாகிவிடும் சூழல் தெரிகிறது//

இந்த நாலு பேர் யார்னு சொல்லுங்க, ஒரு வழி பண்ணிடலாம்.

Vidhoosh(விதூஷ்) said...

///அதிஷா
May 26, 2010 7:17 AM

வாசிப்பனுபவத்திற்காக எதையும் செய்யலாம் .
நேற்று கூட வாசிப்பதற்காக வெறி கொண்டு மைலாப்பூர் கோவிலில் நாதஸ்வரவித்வானோடு பயங்கர சண்டை.. வாசிப்பே மூச்சு.. என்ன செய்ய ப்ச்!
/////

நல்ல பின்னூட்டம் நன்றி வித்வான்

~~Romeo~~ said...

ரீப்பீடே இத்தனை மொக்கைய இருக்கே ..

LK said...

hm hm hm

அமுதா கிருஷ்ணா said...

ஆதி எதை எழுதினாலும் நல்லாயிருக்கில்ல...

குசும்பன் said...

//நேரமின்மையால் போன வருடம் எழுதிய ஒரு பதிவு ரிப்பீட்டு செய்யப்படுகிறது. பொறுத்துக் கொள்ளவும். //

ஆக நீ போன வருசமே 2.5 லட்சம் ஹிட்ஸ் வாங்கியாச்சு, 350 பதிவுகள் எழுதிட்டன்னு சொல்லற, அதை நம்ம நாங்க என்ன லூசா? அடிங்க இதுமாதிரி கதை விட்டுக்கிட்டு இருந்தன்னு வை, ஆள் ஆளுக்கு குத்தகை எடுத்து கும்முவோம்!!!

புன்னகை said...

ஏன் இப்படி? :-)

நர்சிம் said...

இதுவும் தரமான பதிவுதான் ஆதி.

நர்சிம் said...

//அதிஷா said...

வாசிப்பனுபவத்திற்காக எதையும் செய்யலாம் .
நேற்று கூட வாசிப்பதற்காக வெறி கொண்டு மைலாப்பூர் கோவிலில் நாதஸ்வரவித்வானோடு பயங்கர சண்டை.. வாசிப்பே மூச்சு.. என்ன செய்ய ப்ச்!//

நல்ல பின்னூட்டம் நன்றி அதிஷா.

கார்க்கி said...

ங்கொய்யல....

malgudi said...

மொக்கை எண்ட போர்வைக்குள் சக்கைப் போடு போட்டீங்க

Sukumar Swaminathan said...

தரமான பதிவு எழுதுவது எப்படி என்று சொல்லிக்கொடுத்தற்கு நன்றி சார்...

Kousalya said...

நல்லாத்தான் புலம்புறீங்க.... ஆனா எனக்கு என்னவோ வஞ்சபுகழ்ச்சி மாதிரி தோணுது!!

விக்னேஷ்வரி said...

அடிங்...

ஸ்ரீவி சிவா said...

தலைப்பை பார்த்து பதறியடிச்சு வந்து பார்த்தால்... ம்ம்ம்.. என்னா பீலிங்கு!

இப்படியே தரமான, வித்தியாசமான பதிவு எழுதனும்னு யோசிச்சிட்டு இருந்தா, நாலு வயசு ஏறி நாப்பத்தஞ்சுல வந்து நிக்க போவுது. ;-) வர்ற மொக்கையை அடிச்சு விடுங்க ஆதி!

Anonymous said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

நேரமின்மையால் போன வருடம் எழுதிய ஒரு பதிவு ரிப்பீட்டு செய்யப்படுகிறது. பொறுத்துக் கொள்ளவும்.//

இதையும் பதிவுல டிஸ்க்ளெய்மரா போட்டிருக்கலாம் :)

மணிகண்டன் said...

//நல்ல பின்னூட்டம் நன்றி அதிஷா //

நல்ல பின்னூட்டம். நன்றி பத்ரி.

தாரணி பிரியா said...

அடுத்த முறை இதை மீள் பதிவா போடும்போது " 400க்கு மேற்பட்ட பாலோயரும் கிடைச்சாச்சு" இதையும் சேர்த்துகோங்க. அப்ப புது போஸ்ட் ஆகிடுமே

ஆதிமூலகிருஷ்ணன் said...

இராமசாமி கண்ணன்,
இலக்கியன்,
இளா,
சுசி,
வானம்பாடிகள்,
நேசமித்திரன்,
அறிவிலி,
ராமலக்ஷ்மி,
மகேஷ்,

அதிஷா (ROTFL.. ரசனைக்காரண்டா நீ, உன் நட்புக்கு மகிழ்கிறேன்),

மயில்,
கேபிள்,
தராசு,
விதூஷ்,
ரோமியோ,
LK,

அமுதா (என்ன நக்கலா?),

குசும்பன்,
புன்னகை,
நர்சிம்,
கார்க்கி,
மால்குடி,
சுகுமார்,
கௌசல்யா,
விக்கி,

ஸ்ரீவி (ஆறுதல் பின்னூட்டம்),

அம்மிணி,
மணிகண்டன்,
தாரணி..

அனைவருக்கும் நன்றி.!!

மதுரை சரவணன் said...

நல்லா இருக்குங்க...வாழ்த்துக்கள்