Friday, May 28, 2010

ரசி

சமயங்களில் நனைந்த இறகைப் போல மனசு கனமாக உணர்கிறேன். அகமும் புறமும் அழுத்துகிறது. நான் தனிமை விரும்பிதான். ஆனால் ஆச்சரியகரமாக இப்போதெல்லாம் அப்படி இல்லை. நீ இல்லாத தருணங்கள் பெரும்பான்மையும் கனமாகத்தான் போய்விடுகின்றன. காற்றிலே மிதக்க நீ வேண்டும்.

உள்ளிழுக்கும் புத்தகம் ஒன்று. ஊதி விளையாடும் ஒரு கவிதை. கவனம் மொத்தத்தையும் குவித்துக்கொள்ளும் ஓவியம். வெள்ளைப் பேப்பரில் பரவும் பென்சிலின் கார்பைட் படலம். ஜன்னலின் ஒருபுறம் சாரல், மறுபுறம் புகைந்துகொண்டிருக்கும் ஒற்றைச் சிகரெட். எதிர்பாராத ஒரு தருணத்தில் உறையச்செய்யும் வான்நிலா. அஃறிணைகள் அள்ளிக்கொள்ளும் ரசனைகளுக்கான பட்டியல் மிகப்பெரிது. ஒற்றை உயர்திணையாய் இப்போது உயர இருப்பது நீ மட்டுமே..

நீ முந்திக் கொண்டது எப்படி? எண்ண எண்ண வியப்புதான். நீயே ஒரு வியப்பு.

Rosy

உன் அழகா இழுத்தது என்னை? இருக்கும். வேறெங்கும் காணக்கிடைக்காத ஒரு புதுவழகாய் இருக்கிறது உனது. முன்னமே நான் தூங்கிப்போன ரகசிய இரவுகளின் இருட்டிலிருந்து உனக்கான அழகை வடித்தெடுப்பதாய் நான் சந்தேகிக்கிறேன். ஒருநாள் ரகசியமாய் விழித்திருந்து உன்னைப்பிடிப்பேன். கூந்தலில் துவங்கி உன்னழகை விவரிக்கத்துவங்கினேன் என்றால் அவை விரிந்துகொண்டேபோகும். என்னால் முடியாது. அப்புறம் உன் விழிகள். அவற்றில் இருப்பது பேரழகென என்னால் சொல்லிவிடமுடியாது. அது வேறு. அதற்காக ஒரு புதிய சொல்லைத்தான் நான் வார்த்தெடுக்க வேண்டும். அது உன்னாலே என்னால் செய்யப்பட்ட தமிழின் புதிய சொல்லாக இருக்கும். ஒவ்வொன்றுக்குமான தனித்தனியான உன் சிரிப்புக்களையும் கூட நான் அழகில் சேர்த்துவிடமுடியாது. அது இன்னொரு மொழி. அதற்கு அர்த்தம் சொல்ல விளைவது கவிதைகளுக்கு அர்த்தம் சொல்வதாய் அறியாமையில் முடியும். திளைத்துக்கொண்டேயிருக்கலாம் போன்ற சுகம் அது.

உன் துள்ளல் என் ரசனை. அது பெண்களுக்குரியதாய்ப் படவில்லை எனக்கு. ஒருவேளை தேவதைகளுக்குரியதாய் இருக்கலாம், தவறி உனக்குத் தரப்பட்டிருக்கவேண்டும். உன்னிடமிருந்து நீயிருக்கும் இடங்களைச் சிதறிப்பற்றுகிறது அது. உன் அறிவின் அற்புதப் பக்கங்களும் சரி, அலட்சியப் பக்கங்களும் சரி இரண்டுமே ஒன்றாகத்தான் படுகிறது எனக்கு. உன் அன்பு மழையைப்போல.. தயக்கமின்றி யாரையும் தொட்டுப்பரவுகிறது. பாரபட்சமில்லாத அதனாலேயே நான் உன்னிடம் வீழ்ந்திருக்கிறேன். நான் நல்லவனில்லை, உள்ளூர அத்தனையையும் எனக்கே பொழிந்துவிடேன் என்று எண்ணியிருக்கிறேன், சமயங்களில். உன்னைத் தழுவுவது என்பது பெருங்கருணையில் புதைதல். கோபம், குரோதம், வன்மை, அதிகாரம் போன்ற அகப்பிணிகளுக்கான ஔடதம் அது. அவை கரைவதை பல சமயங்களிலும் உணர்ந்திருக்கிறேன்.

உன் காமம் என்பது எனக்கானது. இப்போது உன்னைத் தழுவுவது என்பது அதீதம். உனது இதழ்களிலிருந்து வெளியாகும் சொற்களற்ற ஒலிக்குறிப்புகள் என் வாழ்வின் உச்சம். அதிலிருந்து விளைகின்ற முத்தமோ என் மொத்தம்.

நீ வந்திருக்கவில்லையெனின் இல்லாத ஒன்றிற்கான தேடலாகவே என் வாழ்வு முடிந்திருக்கும். அதற்காக நித்தமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்.. நன்றி.!

.

28 comments:

கார்க்கி said...

கடைசி இரண்டு பத்தி கலாசல்..

ஆதி ஆதிதான்

sriram said...

ஒன்னும் புரியல ஆதி..
ஆஜர் மட்டும் போட்டுக்கறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஷர்புதீன் said...

ஏதோ புரியிற "மாரி" இருக்கு தலைவா., ஆனா ஒன்னும் புரிலே தல... ஆனா பாருங்க தல வோட்டே போட்டுட்டேன்

அத்திரி said...

கவிதையா எழுதியிருக்கலாமே..........................என்ன அண்ணே ரொம்ப ரொமான்ஸ் மூடுல இருக்கீங்க போல

Cable Sankar said...

கவிதையாய் ஒரு கட்டுரை..

தராசு said...

இது கட்டுரையாய் ஒரு கவிதை.

வார்த்தைகள் கோர்த்திருப்பது சூப்பர் தல.ஒவ்வொரு வரியும் ரசிக்க வைத்தது.

செம ஃபார்ம்ல இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

ர‌சிச்சாச்சு.

தமிழன்-கறுப்பி... said...

எப்பொழுதேனும் இப்படி எழுதச்செய்துவிடுகிற அவளுக்கு வெறுமனே நன்றிகள் மட்டும் சொல்வதில் விருப்பமில்லை எனக்கு. nice தாமிரா...

:)

ஜெனோவா said...

அள்ள அள்ளக் காதல் !!!

மிக அருமை ஆதி !

புன்னகை said...

இது கட்டுரையா கவிதையா இல்ல காதலா? ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகு! மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன், இந்தப் பதிவின் அற்புதப் பிடியிலிருந்து மீள முடியாமல். என்னை மிகக் கவர்ந்த வரிகள் சில,
//முன்னமே நான் தூங்கிப்போன ரகசிய இரவுகளின் இருட்டிலிருந்து உனக்கான அழகை வடித்தெடுப்பதாய் நான் சந்தேகிக்கிறேன்.//
//அது உன்னாலே என்னால் செய்யப்பட்ட தமிழின் புதிய சொல்லாக இருக்கும்.//
//உன் அறிவின் அற்புதப் பக்கங்களும் சரி, அலட்சியப் பக்கங்களும் சரி இரண்டுமே ஒன்றாகத்தான் படுகிறது எனக்கு.//
//நீ வந்திருக்கவில்லையெனின் இல்லாத ஒன்றிற்கான தேடலாகவே என் வாழ்வு முடிந்திருக்கும்.//

முடிந்தால், ஒரு பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் அக்காவிடம் குடுங்க. கலக்கிட்டீங்க ஆதி! :-)

கார்க்கி said...

//இது கட்டுரையா கவிதையா இல்ல காதலா? //

கொயப்பமா கீது இல்ல. தலீவரும் அப்பி ஒரு மைண்ட்செட்டுலதான் எய்தி இருப்பாரு

// மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்/

அபப்வும் பிரியலைன்னா விட்டுறது சோக்கு

//என்னை மிகக் கவர்ந்த வரிகள் சில,
//முன்னமே நான் தூங்கிப்போன/

அதானே.ஸ்லீப்பேங் தானே நீங்க ரொம்ப லைக் பன்ணுவீங்க

ஒரு டவுட்டு. எந்த அக்காவிடம்????

அழகான பதிவுக்கு திருஷ்டி பொட்டு வைக்க வேணாமா? அதாம்ப்பா இப்படி ஒரு கமெண்ட்டு

வானம்பாடிகள் said...

இது வரைக்கும் அஞ்சு தடவ படிச்சிட்டேன். இன்னும் எத்தனை முறை படிப்பேன் தெரியாது. இடுகை நாயகிக்கு தகும். நல்ல எழுத்துக்கு நன்றி ஆதி.

நர்சிம் said...

//ஔடதம்//


//வானம்பாடிகள் said...
இது வரைக்கும் அஞ்சு தடவ படிச்சிட்டேன். இன்னும் எத்தனை முறை படிப்பேன் தெரியாது. இடுகை நாயகிக்கு தகும். நல்ல எழுத்துக்கு நன்றி ஆதி.
//

MANO said...

அட்டகாசம் BOSS.

MANO

அன்புடன்-மணிகண்டன் said...

L-O-V-E-L-Y... :)

ஸ்ரீவி சிவா said...

//காற்றிலே மிதக்க நீ வேண்டும்//

//உன்னைத் தழுவுவது என்பது பெருங்கருணையில் புதைதல்//

பின்னுறீங்க பாஸ். நல்ல உணர்வு. எடுத்து கோர்த்தால் ரெண்டு மூணு கவிதைகள் கிடைக்கலாம்.

அது சரி... இன்னிக்கு உங்க கல்யாண நாளா? :-)

நர்சிம் said...

By the way…

பொண்டாட்டி ஊர்ல இருந்தா புலம்பல்கள்ன்னு எழுதுறது.. இல்லேன்னதும், சரி விடுங்க..

பிரதீபா said...

"வெள்ளைப் பேப்பரில் பரவும் பென்சிலின் கார்பைட் படலம்"-- இது அருமையான சித்தரிப்பு.(நாவல்ல மட்டும் தான் இந்த மாதிரி வரணுமா என்ன?)

"ஒற்றை உயர்திணையாய்","பெருங்கருணையில்..........ஔடதம் " -நீங்க ரசித்த விதத்தை விட அழகானது எழுதப்பட்ட இந்த வரிகள்.

"ஒருநாள் ரகசியமாய் விழித்திருந்து உன்னைப்பிடிப்பேன்"- வாய்ப்பே இல்லாத ரொமான்சுங்க இது!!

"நீ வந்திருக்கவில்லையெனின் இல்லாத ஒன்றிற்கான தேடலாகவே என் வாழ்வு முடிந்திருக்கும். அதற்காக நித்தமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்"-பின்னி பின்னி பிச்சு ஒதறிட்டீங்க போங்க !!

இன்னும் சொல்லிக்கொண்டே போனால் எல்லா வரியையும் சுட்டி, பக்கம் பெரிதாகி விடும்.
மொத்தத்தில் தமிழ் மொழியின் மேல் ரொம்பவும் காதல் வரத்தூண்டுகிறீர்கள்.
கண்டிப்பா கவிதையாக்கப்பட வேண்டிய ரசனைங்க இது !!

ப்ளீஸ், எங்களுக்காக இதை கவிதையாக்கம் செய்யவும். ப்ளீஸ்.

நாய்க்குட்டி மனசு said...

ellorum ippo ippadi aarambichchaachaa?

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி,

ஸ்ரீராம் (கொஞ்சம் ஃபீலிங்ஸ் வுட்டா 'புர்ல'ன்னு பிட்டப் போட்டுடுவீங்களே),

ஷர்ப்பு,
அத்திரி,
கேபிள்,
தராசு,
இலக்கியன்,

தமிழன் (இதுமாதிரி எழுதுனாத்தான் வருவீங்களா? இப்ப்படி எழுதுனா பலர் ஓடிப்போயிடுறாங்களே?),

புன்னகை (கார்க்கியை கொஞ்சம் கவனிக்கவும்),

வானம்பாடிகள் (பாருங்கப்பா, யாராரு ஃபீலிங்ஸ் காமிக்கிறதுன்னே இல்லையா?),

நர்சிம்,
மனோ,
மணிகண்டன்,
ஸ்ரீவி,

பிரதீபா (ஹிஹி.. ரொம்ப புகழறீங்க, அப்படியே சைட்ல ஃபீலிங்க்ஸ், காதல்ங்கிற லேபிளை கிளிக் செய்தால் இதுபோஅ பதிவுகள் கிடைக்கும். அதையும் படித்துவிட்டு இன்னும் கொஞ்சம் புகழ்ந்து வைக்கவும். ஹிஹி),

நாய்க்குட்டி..

அனைவருக்கும் நன்றி.!

வானம்பாடிகள் said...

/வானம்பாடிகள் (பாருங்கப்பா, யாராரு ஃபீலிங்ஸ் காமிக்கிறதுன்னே இல்லையா?), /

கோழியப்பாத்து கத்துக்குங்கப்பா:))

சுசி said...

அனைவருக்கும் நன்றி சொல்லி கடைய மூடிட்டீங்களா ஆதி..

சொல்லு சொல்லா படிச்சிட்டு அத வசனமா சேர்த்து படிச்சு.. அப்டியே வசனங்களா படிச்சு.. யப்பா.. எம்புட்டு "ரசி"ச்சு படிச்சேன்.. அதான் டைமாச்சு..

எழுதின உங்க மேலவும், எழுத வச்ச அவங்க மேலவும் ரொம்ம்ம்ப பொறாமையா இருக்கு..

சுசி said...

அடர் சிவப்பில ரோஜாக்கள் செம பொருத்தம்..
ரசனை.. ரசனை..

கனிமொழி said...

அருமை.... :-)

பிரதீபா said...

நீங்க எழுதி இருக்கற எல்லாப் பதிவுகளையும் மொத்தமா எப்பவோ படிச்சிட்டேங்க. அதனால தான் ரசிச்சதை line by line comment போட முடியல. சமீப காலங்களில் ஒழுங்காக அவ்வப்போது படிக்கிறதால, இனிமே அவ்வப்போது புகழறேங்க.. :-)

கும்க்கி said...

அடப்போங்கய்யா...

கொன்னுட்டீங்க.....

ஆதி...ஆ?

கலாநேசன் said...

மெல்லுணர்வின் வெளிப்பாடு

மிகவும் அருமை

விக்னேஷ்வரி said...

எழுத்தாளர் ஆதி, தலைப்பு எழுத்துப் பிழையா? ரமா என்றது ரசி என்று வந்துள்ளதே... ;)

இரண்டாவது பத்தியை மிகவும் ரசித்தேன்.