Monday, May 10, 2010

பன் பிக்சர்ஸ்.. குசும்பன் நடிக்கும் ‘எறா’

தி.நகர் அருணா உணவகத்தில் ஒரு பெரும் பதிவர் கூட்டமே காத்திருந்தது. அனைவரின் கண்களிலும் சோகம். பல முக்கிய பதிவரைக் காணாமல் ஏரியாவே அல்லோல கல்லோல பட்டது. பார்ட்டிக்கு மிகவும் தாமதமாகிவிட்டதால் பீச்சில் காந்திசிலை அருகே நடந்த பதிவர் சந்திப்பு முடிந்து வேறு வேறு திசைகளில் போயிருந்தனர் பதிவர்கள். அவர்களை தேடிப்பிடித்து பலரையும் பைக்குகளிலும், கார்களிலும் பிடித்துவந்துகொண்டிருந்தனர் மீட்புக்குழுவினர். ஒரு கட்டத்தில் எல்லோரும் வந்துவிட்டார்கள் என்று நினைத்தபோதுதான் வெங்கி 'எறா' இன்னும் வரவில்லை என்பதை உணர்ந்து, உணர்ச்சிப்பெருக்கோடு அப்துல்லாவிடம் கெஞ்சினார்.

"ஐயா வேண்டிய‌வ‌ங்க‌ எல்லோரும் வ‌ந்துட்டாங்க‌, ஆனா முக்கிய‌மான‌ ஒருத்த‌ர் ம‌ட்டும் இன்னும் வ‌ர‌லைங்கையா.."

"விட்டுடுங்க வெங்கி. எல்லோரும் வந்தாச்சுல்ல.. ஒரு பதிவருக்காக பிரச்சினையை பெருசாக்காதீங்க. இத்தனை பேர் வந்தத நினைச்சு சந்தோசப்படுங்க. ட்ரிங்க்ஸுல்லாம் வேற ஆர்டர் பண்ணிட்டோம்."

அப்போது சஞ்சய், சந்தோஷ், ஆதவன் அனைவரும் கண்ணீரோடு அப்துலிடம் முறையிட்டனர், "ஐயா, எறா இல்லாமல் எங்களுக்கு இந்த பார்ட்டியே தேவையில்லை ஐயா, உங்க‌ளுக்கு அவ‌ன‌ப்ப‌த்தி தெரியாதுங்க‌ ஐயா.. அவ‌ன் மொக்கை போடுற‌துல 10 கார்க்கிக்கு ச‌ம‌ம். கும்மிய‌டிக்குற‌துல 20 வெண்பூவுக்கு ச‌ம‌ம். க‌லாய்க்கிற‌துல 30 அதிஷாவுக்கு ச‌ம‌ம். சாப்பிடுற‌துல 40 வெங்கிக்கு ச‌மம்ங்கையா.. அவ‌ன் எங்க‌ளுக்கு வேணும்ங்கையா.. வேற மாதிரி சொல்றதுன்னா திங்கிறதுல அவன் 10 யானைக்கு சமம். சுறுசுறுப்புல 20 எருமைக்கு சமம். அறிவுல 30 வாத்துக்கு சமம்ங்கையா.. அவ‌ன் எங்க‌ளுக்கு வேணும்ங்கையா.."

அப்துல் ஆன‌ந்த‌க்க‌ண்ணீர் வ‌டித்து, "உங்க‌ளிட‌மெல்லாம் இவ்வ‌ள‌வு அன்பையும், ப‌ண்பையும், புண்ணாக்கையும், கிழிஞ்ச டவுசர்களையும் ச‌ம்பாதித்து வைத்திருப்ப‌வனை ஒரு நாய் கூட நெருங்கமுடியாது, நீங்க க‌வ‌லைப்ப‌டாதீங்க, நான் ஹெலிகாப்டரை விட்டு சே, ஆஃபீஸ் காரை அனுப்பி தேடச்சொல்றேன். வ‌ந்துருவான். நீங்க‌ போய் ஆர‌ம்பிங்க.." என்கிறார்.

உள்ளே போய் எல்லோரும் விருந்தை ஆரம்பிக்க எத்த‌னித்த‌ விநாடியில் 'ட‌மார்'என்று பாத்ரூம் க‌த‌வுக‌ளை திற‌‌ந்துகொண்டு சொய்ங்கென்று வெளியே வ‌ருகிறார் ந‌ம் குசும்ப‌ன் என்ற‌ 'எறா'. அவர் வெளிவந்த‌‌ அதிர்ச்சியில் தாமிராவின் கையிலிருந்த‌ ட‌ம்ள‌ர் குலுங்கி அதிலிருந்த 90 சித‌றுகிற‌து. வெண்பூ வாயில் போட்ட‌ சுண்ட‌லில் ரெண்டு கீழே விழுகிற‌து. கார்க்கியின் டிஷர்ட் டர்ர்ராகிற‌து. ந‌ர்சிம்மின் கூலிங் கிளாஸ் ந‌ழுவுகிற‌து. பைத்திய‌க்கார‌ன் கையில் வைத்திருந்த 'ஃபூக்கோ : ஒரு ஆய்வும் மண்டைக்குடைச்சலும்' புத்த‌க‌ம் ப‌ற‌க்கிற‌து. ஜ்யோவ்ராமின் பின் ம‌ண்டை முடியிலிருந்து ந‌டும‌ண்டைக்கு ஏற‌முய‌ன்ற‌ பேன் ஒன்று வ‌ழுக்கி மீண்டும் பின் ம‌ண்டைக்கே செல்கிற‌து. ஹோ... என்று உற்சாக‌க்கூச்ச‌ல் எழுப்புகின்ற‌ன‌ர் ச‌ந்தோஷ், ஆத‌வன், மின்னல் கூட்ட‌ணி.

"நான் வ‌ந்து ஒண்ணேமுக்கா ம‌ணிநேர‌ம் ஆவுது. கொஞ்ச‌ம் வயிறு சரியில்ல‌.. அதான் உள்ள‌ உக்காந்திருந்தேன்..ஹிஹி" தொட‌ர்ந்து ப‌ஞ்ச் ட‌ய‌லாக்.

"நான் வ‌ர‌வேண்டிய‌ நேர‌த்துல‌யும் க‌ரெக்டா வரமாட்டேன். நேரங்காலம் தெரியாம வரக்கூடாதது வந்தாலும் கரெக்டா‌ போயிடுவேன்" என்று டாய்லெட்டைப்பார்க்க, அதிஷா மூக்கைப் பொத்திக்கொள்கிறார்.

தொட‌ர்ந்து அனைவ‌ரும் உற்சாக‌மாக‌ விருந்தைத் துவ‌க்குகின்ற‌ன‌ர்.

Sura4

சில நாட்களுக்குப்பின்னர்..

தண்டோரா ஆபீஸில் கூட்டம் அலைகடலென திரண்டிருக்கிறது. உ.த அண்ணாச்சி தலைமை வகிக்கிறார். பதிவர் கூட்டமே அழுது புலம்பிக்கொண்டிருக்கிறது.

"அய்யகோ.. எங்கள் பதிவெல்லாம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதே. ஒரே நாளில் 1340 குடிசைகள், சே.. பிளாக்குகள் ஹேக் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டதே.. நாங்களெல்லாம் என்ன செய்யப்போகிறோம்.? ஒரு வழியுமில்லாம சுவத்துல எழுதிக்கிட்டிருக்கோமுங்கய்யா.. ஏதாவது வழி சொல்லுங்க.."

கூட்டத்தில் கடைசியாக நின்று கொண்டிருந்த ஜோஸப்பும், ஜீவ்ஸும் ‘ங்கொய்யால, இப்பதாண்டா மக்கள் நிம்மதியா இருக்காங்க, இப்படியே தொலைஞ்ச பிளாக்குகள் கிடைக்காம போய்த்தொலையட்டும்” என்று யாருக்கும் கேட்டுவிடாமல் முணும்ணுக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் முழங்குகிறார், "இதுக்குதான் பிளாகர் குழுமம் உண்டாக்கி என்னைத் தலைவராக போடுங்கள் என்று சொன்னேன். யாரு கேட்டீங்க? அன்னிக்கு கேள்வி மேல கேள்வியா கேட்டு என்னை வாயடைச்சிட்டீங்க.. எம்பேச்ச கேட்காம அந்த எறா பின்னாடி போனீங்கள்ல.. நல்லா வேணும் உங்களுக்கு.."

ரொம்ப‌ ந‌ல்ல‌வ‌ர் போல‌ கேபிள், "உங்க‌ எல்லாத்துக்கும் ஒண்ணு சொல்றேன். ந‌ட‌ந்த‌து ந‌ட‌ந்துப்போச்சுது. பேசாம‌ என் செல‌வுல‌ ஒரு சைட் கிரியேட் ப‌ண்ணித்தாரேன். அதுல‌ வேணும்னா எல்லோரும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌ம் குரூப்பா எழுதிக்குங்க‌? பிளாக்கை ம‌ற‌ந்துடுங்க‌.." என்கிறார். (த‌ன் பிளாகை போட்டியில்லாமல் த‌னிப்பெரும் புகழ் பெற‌வைக்க‌ ச‌தித்திட்ட‌ம் தீட்டிய இவ‌ர்தான் வில்ல‌ன்).

இதுவாவது கிடைத்ததே என்று எல்லோரும் மகிழ்ந்து "நீங்க‌ ந‌ல்லாருக்க‌ணும்யா.." என்று சொல்லிவிட்டு புதிய தளத்தின் ஐடி, பாஸ்வேர்டை வாங்கிக்கொண்டு வெளியே வ‌ருகிறார்க‌ள். அதுவ‌ரை காணாம‌ல் போய் விட்ட‌தாக‌ நினைத்த‌ 'எறா' எதிரே வ‌ருகிறார். ஹேக்கிங்கை த‌டுப்ப‌த‌ற்காக‌ தாம்ப‌ர‌த்துக்கும், அண்ணாந‌க‌ருக்கும் ந‌டையாக‌ ந‌ட‌ந்து ப‌திவ‌ர்க‌ள் வீட்டுக்கு சென்ற‌தில் ட‌ய‌ர்டாகியிருந்தார். இவ‌ர்க‌ளைப்பார்த்து கொதிக்கிறார்,

"அவ‌ன் ஒத்தை சைட் த‌ர்றான்ன‌தும் எல்லோரும் ஒத்துக்கிட்டீங்க‌ளே, எல்லோரும் ஒண்ணை யோசிச்சீங்க‌ளா? இனிமே எப்பிடி மொக்கை போடுவீங்க‌? எங்கே போய் கும்மிய‌டிப்பீங்க? பின்னூட்டம் போடமுடியுமா? அவ‌ச‌ர‌த்துக்கு ஒரு அனானி க‌மென்டுதான் போட‌முடியுமா உங்க‌ளால‌.?"

எல்லோருக்கும் அறிவு வந்துவிட‌ மீண்டும் ஆபீஸுக்குள்ளே போய் ஐடி பாஸ்வேர்டை கேபிளின் மூஞ்சியிலேயே போட்டுவிட்டு வ‌ந்துவிடுகிறார்க‌ள்.

கேபிளும், எறாவும் நேருக்கு நேர்.

"டாய்.. என் திட்ட‌த்தையெல்லாம் த‌விடுபொடியாக்கிட்ட‌யில்ல‌.. உன்ன‌ என்ன‌ ப‌ண்ற‌ன் பாருடா லூசுப்பயலே.."

"ஒரு முறை திட்ட‌ற‌துக்கு முன்னாடி 100 தடவை ந‌ல்லா யோசிச்சு திட்டு. ஒரு த‌பா திட்டீட்டேன்னா.. அப்புற‌ம் ங்கொய்யால பதிலுக்கு கெட்டவார்த்தையில 1000 பின்னூட்டம் போடுவேன்”

பப்ளிக் இருந்ததால் கேபிள் அமைதியாகிவிடுகிறார். மேலும், “நான் குடுக்குற சைட்டு கூட வேண்டாம்னா என்னடா பண்ணப்போறீங்க, சுவத்துல எழுதிட்டு திரியப்போறீங்களா?” என்று கேட்க.. ஆவேசமாக கண்கள் சிவக்க ‘எறா’ சபதமெடுக்கிறார்.

“இன்னும் மூணே நாளுல 3000 பிளாக் ஓபன் பண்ணி எங்க பதிவர்களுக்கு இலவசமா கொடுக்கல.. எம்பேரு ‘எறா’ இல்லடா..” ஹோய்.. ஹோய்ய்.. என்று கத்திவிட்டு போய்விடுகிறார்.

றாவின் அப்பா வயதான வடகரை வேலன், சர்ச் ஃபாதர் அனுஜன்யாவிடம் பிள்ளையைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்க ஃபாதர் அனுஜன்யா அவரைத் தேற்றுகிறார்.

“ஐயா, ஊரு உலகத்துல அவங்களுக்குன்னு ஒரு பிளாக் வச்சுக்கிட்டு நாலு பின்னூட்டம், நாப்பது ஹிட்ஸுன்னு சந்தோஷமா வாழத்தான் ஆசப்படுவாங்க. ஆனா உங்கப் பிள்ளை கேடியில ஒருத்தன். ஊர்ல இருக்குற எல்லாத்துக்கும் பிளாக் கிடைக்கணும்னு நினைக்கிறான். அவன் உறுதியில இரும்பு மாதிரி. நாளைக்கு என்னாவான்னு யாருக்கும் தெரியாது. கம்ப்யூட்டரும் கிடையாது, இன்டர்நெட்டும் கிடையாது. ஆனாலும் எப்பிடி 3000 பிளாக் ஓபன் பண்றான்னு பாக்கலாம்.. அவன் சாதிப்பான்யா.. நீங்க வயசான காலத்துல கீழ விழுந்து வைக்காமல் வீட்டுக்குப்போற வழியப்பாருங்க.. லொக் லொக்..”

தொடரும்..

(சும்மனாச்சுக்கும். அதெல்லாம் தொடராது. மொக்கை போடுறதுக்கும் ஒரு அளவு இருக்குதுல்ல.. ஹிஹி)

68 comments:

Anonymous said...

எலேய் ராசா,

இதுதாம்ல தாமிரபரணிக்காரங் குசும்பு.

இராமசாமி கண்ணண் said...

அண்ணா பதிவ படிக்கவே இல்ல. அந்த போட்டோ ஒன்னே போதுன். குசும்பனுக்கே குசும்பா. மீஜிக் ஸடாட்ஸ் நவ். நாளைக்கு பாக்கறப்போ எப்படியும் ஒரு கமெண்ஸ் 200 வது இருக்கும் போங்க.

நாடோடி இலக்கியன் said...

ஹா ஹா.

மங்களூர் சிவா said...

:))

கும்க்கி said...

:))

லெப்ட்டு.

அதிஷா said...

எங்கள் ஆரஞ்சுத்தமிழன் அண்ணன் குசும்பன் அவர்களை கலாய்த்த உங்களை அகில உலக குசும்பன் குசுகுசு மன்றம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்

வெண்பூ said...

ஆதி.. சான்ஸே இல்லை.. இன்னிக்கு குசும்பன் போட்ட பதிவை தூக்கி சாப்பிட்டுட்டீங்க... கலக்கல்..

நந்து f/o நிலா said...

Intha pathivai verithanmaga aatharikkiren.

sriram said...

கலக்கல் ஆதி :)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அதிஷா said...

யோவ் வெண்பூ அங்க போய் குசும்பன ஏத்தி வுடறது இங்க வந்து இந்த ஆள ஏத்தி வுடறது ரெண்டுபேரும் கலாச்சுப்பாங்க .. உங்களுக்கு என்டெர்டயின்மென்ட்.. குசும்பன் அவர்களின் அடுத்த டார்கெட்டில் ஆதியோடு உங்களையும் சேர்க்க அவருடைய ரசிகர் மன்றம் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்

வெண்பூ said...

அதிஷா, நானெல்லாம் குசும்பன் லிஸ்ட்ல ஆயுட்கால மெம்பர்... நான் வேணாம்னு சொன்னாலும் அவரு என்னை விடப்போறதில்ல... :)))

ஷர்புதீன் said...

:)

கார்க்கி said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இப்ப நான் என்ன செய்யனும்????

குசும்பனையே கலாய்த்த ஆதி இன்றுமுதல் கலாய்த்தலில் கம்பவுண்டர் பட்டம் பெற்ற்வர் என அழைக்கபடுவீர்

Cable Sankar said...

ஐ.. நான் தான் வில்லனா.. அப்ப .. நான் எறாவை கெட்டவன், புத்திகெட்டவன், சோமாறி, பேமானி.. ந்னு திட்டிட்டிருக்கிறவனா..? :)(

மணிஜீ...... said...

பார்கலாம்டா....வாழ்க்கை ஒரு வட்டத்துக்குள் ,சதுரத்துக்குள் செவ்வகம்டா..இதுல எப்படி நீ காம்பஸை கேம்பஸசுக்குள் கொண்டு வர்ரன்னு...

Jeeves said...

இந்தப் பதிவு நூறு பின்னூட்டங்கள் காண வாழ்த்துகிறேன். அண்ணன் ஆதி.. வாழ்க வாழ்க

☀நான் ஆதவன்☀ said...

குசும்பனோட அமீரக கொல வெறிப்படைக்கு மட்டும் நீங்க குசும்பரை கலாய்க்கிறது தெரிஞ்சா அவ்வளவு தான்....... உங்களை உண்டு இல்லைன்னு பண்ணி..... பாராட்டு விழா எடுத்திடுவாங்க :)))) அம்புட்டு குஷி பயபுள்ளைங்களுக்கு :))))

பிள்ளையாண்டான் said...

சான்ஸே இல்ல! அட்டகாசம்.. அதகளம் பண்ணி இருக்கீங்க!

நட்ட நடு ராத்திரில தனியா கொல சிரிப்பு சிரிச்சிட்டு இருக்கேன்!!!

சுசி said...

அசத்திட்டிங்க ஆதி..

சிரிப்பு தாங்கல..

இராகவன் நைஜிரியா said...

ஆடு ராஜா ஆடு... நல்லாவே ஆடியிருக்கீங்க.

பா.ராஜாராம் said...

//மீட்புக்குழுவினர். //

// பைத்திய‌க்கார‌ன் கையில் வைத்திருந்த 'ஃபூக்கோ : ஒரு ஆய்வும் மண்டைக்குடைச்சலும்' புத்த‌க‌ம் ப‌ற‌க்கிற‌து. ஜ்யோவ்ராமின் பின் ம‌ண்டை முடியிலிருந்து ந‌டும‌ண்டைக்கு ஏற‌முய‌ன்ற‌ பேன் ஒன்று வ‌ழுக்கி மீண்டும் பின் ம‌ண்டைக்கே செல்கிற‌து//

//"நான் வ‌ந்து ஒண்ணேமுக்கா ம‌ணிநேர‌ம் ஆவுது. கொஞ்ச‌ம் வயிறு சரியில்ல‌.. அதான் உள்ள‌ உக்காந்திருந்தேன்..ஹிஹி" தொட‌ர்ந்து ப‌ஞ்ச் ட‌ய‌லாக். "நான் வ‌ர‌வேண்டிய‌ நேர‌த்துல‌யும் க‌ரெக்டா வரமாட்டேன். நேரங்காலம் தெரியாம வரக்கூடாதது வந்தாலும் கரெக்டா‌ போயிடுவேன்" என்று டாய்லெட்டைப்பார்க்க, அதிஷா மூக்கைப் பொத்திக்கொள்கிறார்.//

//எறாவின் அப்பா வயதான வடகரை வேலன், சர்ச் ஃபாதர் அனுஜன்யாவிடம் பிள்ளையைப் பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருக்க ஃபாதர் அனுஜன்யா அவரைத் தேற்றுகிறார். “ஐயா, ஊரு உலகத்துல அவங்களுக்குன்னு ஒரு பிளாக் வச்சுக்கிட்டு நாலு பின்னூட்டம், நாப்பது ஹிட்ஸுன்னு சந்தோஷமா வாழத்தான் ஆசப்படுவாங்க. ஆனா உங்கப் பிள்ளை கேடியில ஒருத்தன். ஊர்ல இருக்குற எல்லாத்துக்கும் பிளாக் கிடைக்கணும்னு நினைக்கிறான். அவன் உறுதியில இரும்பு மாதிரி. கம்ப்யூட்டரும் கிடையாது, இனடர்நெட்டும் கிடையாது. ஆனாலும் எப்பிடி 3000 பிளாக் ஓபன் பண்றான்னு பாக்கலாம்.. அவன் சாதிப்பான்யா.. நீங்க வயசான காலத்துல கீழ விழுந்து வைக்காமல் வீட்டுக்குப்போற வழியப்பாருங்க.. லொக் லொக்..” //

ஆதி,

:-))))))

பா.ராஜாராம் said...

அப்புறம் இந்த தலைப்பும்..

ரொம்ப நாள் ஆச்சு ஆதி, இப்படி சிரிச்சு.

thanks.

டம்பி மேவீ said...

பதிவுல ஆதிமூலகிருஷ்ணன் ங்கிற நல்லவர் பெயர தேடிகிட்டு இருக்கேன் :)

வானம்பாடிகள் said...

அய்யோடா:)))))

மணிநரேன் said...

சிரித்துக்கொண்டே இருக்கின்றேன்..;)

கோவி.கண்ணன் said...

எப்டி இப்டி எல்லாம் ? :)

Anonymous said...

hahaha..

anna padivey padika

padikka

siripu vanthu officela ellam ennaiya oru mathiri parka vachtengaley anney..

enna nadakuthu enga...hahaha..

ennaium aattathila sethukonga......................

erunga 3paartha padichuerken..padichutu aprum vanthu cholren..

varta.

varuthapadtha vaasipor sangal
nirvaga thalapathi.
complan surya

*இயற்கை ராஜி* said...

:-)))))))

Chanceless... super inga:-)))

Venky said...

ஜீப்பரு... நான் இத வெறித்தனமா கன்னா பின்னா வெண ஆதரிக்கிரேன்...

Sivasubramanian said...

ஆதி சார்.,

நல்லா ரசிக்கும் படியா இருந்துச்சு...

சுறா செத்து போச்சு....ஆனா
எறா......? பாத்து, புலி பதுங்கி இருக்குன்னு நினைக்கிறேன்.
அலர்ட்டா இருங்க.....

சந்தோஷ் = Santhosh said...

ஆதி,
சூப்பரு..செம நக்கலு.. குசும்பா இப்ப என்னா பண்ணுவ இப்ப என்னா பண்ணுவ.. ஊருல இருக்குறவங்க எல்லாரையும் கலாச்சிட்டு இருந்த இப்ப கிளம்பிட்டோமுல்ல :)..

கே.ஆர்.பி.செந்தில் said...

சும்மா அதிருதுல்ல

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

எலேய் குசும்பா..

இந்த ஆதியை கண்ஜாடையிலேயே வைச்சுக்கடா..

என்னிக்காச்சும் ஒரு மீட்டிங்ல கலகம்ன்னா போட்டுத் தாக்கிருவோம்..!

Sukumar Swaminathan said...

வாவ்.. ஐ லைக் இட் தல...

சிட்டுக்குருவி said...

//அவ‌ன் மொக்கை போடுற‌துல 10 கார்க்கிக்கு ச‌ம‌ம். கும்மிய‌டிக்குற‌துல 20 வெண்பூவுக்கு ச‌ம‌ம். க‌லாய்க்கிற‌துல 30 அதிஷாவுக்கு ச‌ம‌ம். சாப்பிடுற‌துல 40 வெங்கிக்கு ச‌மம்ங்கையா.. அவ‌ன் எங்க‌ளுக்கு வேணும்ங்கையா.. வேற மாதிரி சொல்றதுன்னா திங்கிறதுல அவன் 10 யானைக்கு சமம். சுறுசுறுப்புல 20 எருமைக்கு சமம். அறிவுல 30 வாத்துக்கு சமம்ங்கையா.. அவ‌ன் எங்க‌ளுக்கு வேணும்ங்கையா.."//

கலக்கலோ கலக்கல் நால்ல்ருக்கு

:)))

Jeeves said...

//அவன் 10 யானைக்கு சமம். சுறுசுறுப்புல 20 எருமைக்கு சமம். அறிவுல 30 வாத்துக்கு சமம்ங்கையா.. அவ‌ன் எங்க‌ளுக்கு வேணும்ங்கையா.."//

குசும்பனை குறைத்து மதிப்பிட்டதற்காக குசும்பக் கலாய்ப்புச் சங்கம் சார்பில் கண்டத்தை பதிவு செய்கிறோம்

இவன்
குசும்பனைக் கலாய்ப்போர் சங்கம்
பெங்களுர் கிளை

Jeeves said...

கூட்டத்தில் கடைசியாக நின்று கொண்டிருந்த ஜோஸப்பும், ஜீவ்ஸும் ‘ங்கொய்யால, இப்பதாண்டா மக்கள் நிம்மதியா இருக்காங்க, இப்படியே தொலைஞ்ச பிளாக்குகள் கிடைக்காம போய்த்தொலையட்டும்”//

நிம்மதியா இருக்க விடமாட்டாங்களே :(( போன அந்த ப்ளாக்குகள் எறாவால் திரும்பக் கிடைத்ததா... விரைவில்.. உங்கள் கணினித் திரையில் ... "எறா"

Jeeves said...

அனுஜன்யா இந்த படத்துல கவுஜ எழுதறாரா ? அவரோட சிஸ்யக் கேடி கணேஷுக்கு எதாச்சும் ரோல் இருக்கா ?

ஈரோடு கதிர் said...

எப்படியோ....

தின்ன சுறாவ இங்க வாந்தியெடுக்கறீங்க!!!
:))))

தமிழ் அமுதன் (ஜீவன்) said...

;;)))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குசும்பன் சாமியோவ்!

நீங்க தானுங் அடுத்த மொதல்வரு!

விசையோட கேண்ட்சமா இருக்கியள்!

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

குட். கடை ரொம்ப நாளுக்கப்புறம் களை கட்டியிருக்கே..

வேலன்,
இராமசாமி,
இலக்கியன்,
மங்களூர்,
கும்க்கி,
அதிஷா,
வெண்பூ,
நந்து,
ஸ்ரீராம்,
ஷர்புதீன்,
கார்க்கி (விளங்கிரும்),
மணிஜி,
கேபிள் (வாங்க வில்லன், கிளைமாக்ஸ்ல வைக்கிறதுக்கு குண்டு ரெடி பண்ணிட்டீங்களா?),
ஜீவ்ஸ்,
ஆதவன்,
பிள்ளயாண்டான்,
சுசி,
இராகவன்,
பாரா (அனுஜி இருமுனதக் கவனிச்சிங்கதானே? ஹிஹி),
மேவீ,
வானம்பாடிகள்,
மணிநரேன்,
கோவிஜி,
சூர்யா,
ராஜி,
வெங்கி,
சிவசுப்ரமணியன்,
சந்தோஷ்,
செந்தில்,
உ.த.அண்ணன் (அட போங்கண்ணே, உங்களுக்கு எப்பயும் ஒரே வெளாட்டுதான்),
சுகுமார்,
சிட்டுக்குருவி,
கதிர்,
அமுதன்,
ஜோதிபாரதி (ஊரு வெளங்கிரும்)..

அனைவருக்கும் நன்றி.

குசும்பன் said...

இப்படி எல்லாம் போட்டா, உன் பதிவுக்கு வந்து கும்மி அடிப்பதை ஸ்டாப் செஞ்சுடுவோம் என்று கணவு கானதடீ செல்லம்!

அக்ரிமெண்ட் போட்டு குத்தகை எடுத்திருக்கோ உன்னை 99 வருசம் கும்முவோம் சாக்கிரதை!:)))


//வேற மாதிரி சொல்றதுன்னா திங்கிறதுல அவன் 10 யானைக்கு சமம். சுறுசுறுப்புல 20 எருமைக்கு சமம். அறிவுல 30 வாத்துக்கு சமம்ங்கையா.. //

சத்தம் போட்டு சிரிச்சேன் ஆதி! கலக்கல்!

குசும்பன் said...

அம்புட்டு பயபுள்ளையும் நம்ம மேல இவ்வளோ பாசமா இருக்கா? நோட் செஞ்சுக்கிறேன் யார் யார் ஓவர் பாசத்தில் இருக்கிங்க என்று:))))

Anonymous said...

குசும்பன் சாமியோவ்!

நீங்க தானுங் அடுத்த மொதல்வரு!----sema commedyna...
hio hio..
vairu ellam valikkuthupa sirichu sirichu..

இரசிகை said...

//வேற மாதிரி சொல்றதுன்னா திங்கிறதுல அவன் 10 யானைக்கு சமம். சுறுசுறுப்புல 20 எருமைக்கு சமம். அறிவுல 30 வாத்துக்கு சமம்ங்கையா.. //


:))

thalaippilayirunthey.....sirikka aarambichchaachu!

Killivalavan said...

நல்ல முயற்சி!

Mallika said...

கலக்கல்!!!!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

superrrrrrrrrp... :)))

அனுஜன்யா said...

இந்தத் தாமிரா...லொக் லொக் ...இப்படி குசும்பன ....லொக் லொக்...சரி கர்த்தர் எல்லோருக்கும்...லொக் லொக் ...அருள் புரியட்டும்...லொக் லொக்

அனு லொக் ஜன்யா

அமுதா கிருஷ்ணா said...

இது தான் ஆதி!!!

abdul said...

superrrrrrrrrrrrrrrrr.........

அபி அப்பா said...

ஆட்ராட்ரா நாக்கமுக்க நாக்கமுக்க அட்ரார்டா நாக்கமுக்க :-)))))))))))

Anonymous said...

ஆஹா, இந்தப்பதிவை யாராவது பொன்னெழுத்து பொறிச்சா நல்ல இருக்குமே. குசும்பான பதிவு

Anonymous said...

மூணே வினாடின்னாலும் அந்த விடியோ டெரர். :)

நேசமித்ரன் said...

:)

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா...
சூப்பரப்பு!

குட்டி said...

குசும்பனுக்கு:
"ஆதி பதிவுக்கு பதில் சொல்லுபவர்கள், இங்கே குமுறவும்" ன்னு சும்மா ஒரு லைன் மட்டும் எழுதி போஸ்ட் பண்ணி பாருங்க; எவ்வளோ பின்னூட்டம்ன்னு..... (மறுபடியும் கொலைவெறி..)

Kumar said...

மூணே வினாடின்னாலும் அந்த விடியோ டெரர். :)

Repeattuuuuu.. :)

Deivasuganthi said...

:-))

Mrs.Menagasathia said...

haa haa superrr!!!

புன்னகை said...

God!!!!!!!!!! Such an amazin one!!! Kalakkitteenga Aadhi!!! My profile changed today, so pudhu profile la settle aaguradhukke oru naal aagittu n cudn check ur post from mornin... Ippo dhaan velai ellam mudinjudhu... Irundha thalai vali ellam pochu siricha sirippula! Thanks for dis one! Keep rocking!!! :-)))))))))

Rajalakshmi Pakkirisamy said...

Excellent!!!

~~Romeo~~ said...

ஜாலியோ ஜிம்ம்கானா .. கலக்கல் பதிவு

எனது வலைத்தளம் மாற்றப்பட்டு உள்ளது. நேரம் இருப்பின் வந்துசெல்லவும்.

http://romeowrites.blogspot.com/

பா.ராஜாராம் said...

அனுஜன்யா said...


//இந்தத் தாமிரா...லொக் லொக் ...இப்படி குசும்பன ....லொக் லொக்...சரி கர்த்தர் எல்லோருக்கும்...லொக் லொக் ...அருள் புரியட்டும்...லொக் லொக்

அனு லொக் ஜன்யா//

ஹா..ஹா..

இது அனு!

ராமலக்ஷ்மி said...

:))))!

அன்புடன் அருணா said...

/தொடரும்..

(சும்மனாச்சுக்கும். அதெல்லாம் தொடராது. மொக்கை போடுறதுக்கும் ஒரு அளவு இருக்குதுல்ல.. ஹிஹி) /
அதானே பார்த்தேன் பயந்தே போயிட்டேன்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

குசும்பன்,
சூர்யா,
இரசிகை,
கிள்ளிவளவன்,
மல்லிகா,

பாலபாரதி (என்ன அதிசயம், ஊர்லதான் இருக்கீங்களா தல.?)

அனுஜன்யா (ரசனை),

அமுதா,
அப்துல்,

அபிஅப்பா (உங்களை வரவைக்க குசும்பனை டேமேஜ் பண்ணவேண்டியதா இருக்கே. :-)),

அம்மிணி,
நேசமித்திரன்,
விக்னேஷ்வரி,
குட்டி,
குமார்,
சுகந்தி,
மேனகா,
புன்னகை,
ராஜலக்ஷ்மி,
ரோமியோ,
ராமலக்ஷ்மி,
அருணா மேடம்..

அனைவருக்கும் நன்றி.!!