Monday, May 3, 2010

கொஞ்ச‌ம் டெக்னிகல் : TQM

முன்குறிப்பு :

‘என்ன இருந்தாலும் டெக்னிகல் பதிவுகள் எழுதி நிரம்ப நாட்களாகிவிட்டன’ என குறைப்பட்டுக்கொண்ட நண்பர்களின் ஆர்வத்துக்கு நன்றி. நான் எந்த ஒரு வேலையைச் செய்தாலும் அதில் எனக்கு முழு திருப்தியே இருப்பதில்லை. இந்த டெக்னிகல் பதிவுகளிலும் அதே நிலைதான் எனினும், கொஞ்சமாக இருந்தாலும் அவற்றை நான் கையாளும் விதம் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன். ஒத்த ரசனையுள்ள நண்பர்களுக்கும் ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றி. உங்களாலேயே நான் தொடர்ந்து இயங்க முடிகிறது.

புதிய நண்பர்களுக்காக சில குறிப்புகள். உற்பத்தித் தொழிற்துறையின் தர மேலாண் பிரிவில் பணிபுரிந்து கொண்டிருப்பவன் நான். என்னளவில் என் துறை சார்ந்து எனக்குத் தெரிந்தவற்றை விதிமுறைகள் மீறாது பகிர்ந்து கொள்ளக்கூடியவைகளை முடிந்த வரை எளிமையாக 'டெக்னிகல்' என்ற லேபிளில் அவ்வப்போது எழுதிவருகிறேன். அவை நிச்சயமாக குவாலிடியில் பணிபுரிபவர்களுக்காக மட்டுமே அல்ல. அவர்களுக்கு டெடிகேடட் ஆக‌ பாட‌ம் ந‌ட‌த்த‌ என‌க்கு த‌குதியும் இல்லை, அத‌ற்கு இது சரியான இட‌மும் இல்லை. என‌து க‌ட்டுரைக‌ள் அனைத்து துறைக‌ள் சார்ந்த‌வ‌ர்க‌ளுக்கும் அல்ல‌து பொது வாச‌க‌ர்க‌ளுக்கும் பொருத்த‌மான‌தாக‌வும், ஒரு ப‌கிர்த‌லாக‌வும், சுவார‌சிய‌மான‌தாக‌வும் இருக்க‌வேண்டும் என‌ விரும்புகிறேன். அதற்கு பொருந்துகின்ற‌ செய்திக‌ளை ம‌ட்டுமே எழுதிவ‌ருகிறேன். இந்தக் கட்டுரைகளில் இடம்பெறும் வார்த்தைகள், அவற்றிற்கான விளக்கங்கள் முந்தைய கட்டுரைகளில் இடம்பெற்றிருக்கும் வாய்ப்பிருப்பதால் முந்தைய கட்டுரைகளையும் பார்த்துவிடுவது இன்னும் எளிமையாக இருக்கக்கூடும்.

எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் எனது அனுபவம் சார்ந்தே இருப்பதால் ‘டெக்னிகல்’ தகவல்களில் தவறுகள் இருக்கலாம். அவ்வாறான சமயங்களில் தயைகூர்ந்து திருத்துங்கள். அது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

TQM

அந்த‌ வ‌ரிசையில் இன்று TQM (Total Quality Management) என்ற‌ ச‌ப்ஜெக்ட் குறித்துப் பார்ப்போம். மிகப்பழமையான இந்த விஷயத்தைப் பற்றி இன்னும் தெளிவில்லாத நிலையில் பலரும் வேறு விஷயங்களைப் பற்றி பேசுகையில் இதையும் நினைவு கூறுகிறார்கள். ‘என்னது?’ ன்னு கேட்டா ‘இன்னது’ என்று பதில் சொல்லிவிடமுடியாதபடிக்கு இதுவும் ஒரு வழிமுறையியலே (Methodology) என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். இது முன்னெப்போதோ கருக்கொள்ளப்பட்டு 1980 களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் பலராலும் கைவிடப்பட்ட, இன்றைய நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் பின்பற்றப்படுவதாகும். இது எட்வர்ட் டெமிங் (W. Edwards Deming) மற்றும் சில குவாலிடி குருக்களால் முன்மொழியப்பட்ட வழிமுறையியலாகும். இவ்வளவு பழமையான விஷயத்தைப்பற்றி இப்போது என் பேசுகிறோம்.? இன்னும் இது குறித்த தெளிவின்மையால் புதுசா, பழசா, இருக்கா, போச்சா என்பதே தெரியாமல் இது பற்றி மக்கள் இன்னும் பல சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பிக்கொண்டேயிருக்கின்றனர். அதைக்கொஞ்சம் கிளியர் பண்ணலாமேன்னுதான் இது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் ஏற்கனவே சொன்னதுபோல ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள், மற்றும் சில என TQM கான்செப்டுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வழக்கம் போல ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் இதைப்பற்றி பெரிதாக கவலை கொள்வதில்லை என்றே நான் எண்ணுகிறேன். மேலும் குவாலிடியைப் பொறுத்தவரை முழுதுமாக அடாப்ட் செய்துகொள்ளவேண்டிய அல்லது விலக்கவேண்டிய என்பது போல தத்துவங்கள் கிட்டத்தட்ட கிடையாது. ஒன்றின் தேர்ந்த இன்னொரு / முன்னேறிய வடிவமாகத்தான் இன்னொன்று இருக்கும். தரக் கட்டுப்பாடு (Quality Control) என்பது பழமை, தர உறுதிப்பாடே (Quality Assurance) சிறந்தது, ஆகவே நாம் இன்றிலிருந்து இதற்கு மாறுகிறோம் என்று சொல்லிவிட்டு பழைய கம்ப்யூட்டரை தூக்கிப்போட்டுவிட்டு புதிது வாங்கிவைத்து விடுவதைப் போல டப்பென்றெல்லாம் செய்துவிடுகிற காரியங்களில்லை இவை. ஒன்றோடு ஒன்று பிணைந்தவை.

மேலும் ஏதாவ‌து ஆங்கில‌ எழுத்துக்க‌ளின் கூட்டைச்சொல்லி நாளுக்கு நாள் ப‌ர‌ப‌ர‌ப்பைக் கிள‌ப்புவ‌து குவாலிடி துறையின் வாடிக்கைதான். அவ‌ற்றை ப‌த‌ற்ற‌மில்லாம‌ல் அணுகினால் அவை பெரும்பாலும் ச‌ப்பை மேட்ட‌ராக‌த்தான் இருக்கும். ஆக‌வே இதுபோன்ற‌ சொற்க‌ளைக் கேட்கும் போது பிர‌மிக்காம‌ல் 'அப்பிடின்னா?' என்று எதிர்கேள்வி கேட்க‌த்துவ‌ங்குங்க‌ள். அத்த‌னையும் புரித‌லுக்கு எளிமையாக‌த்தான் இருக்கும் அல்ல‌து விஜ‌ய் ப‌ட‌ம் போல‌ ஏற்க‌ன‌வே அரைத்த‌ மாவாக‌த்தான் இருக்கும்.

குவாலிடி துறையின் அரிச்சுவ‌டி சோதித்த‌ல் (Quality Inspection) என்பதாகும். தொட‌ர்ந்த‌து, த‌ர‌க்க‌ட்டுப்பாடு (Quality Control). அத‌ற்கும் அடுத்து விளைந்த‌து த‌ர‌ உறுதிப்பாடு (Quality Assurance). அத‌ற்கும் அடுத்த‌ வெர்ஷ‌ன்தான் முழுமையான‌ த‌ர‌ ஆளுமை (Total Quality Management -TQM) எனப்படுகிறது. கீழ்வருமாறு நான் முறுக்கு சுற்றுகிறேன், உங்களுக்கு புரிகிறதா பாருங்கள்.

Inspection என்ப‌து ஒரு பொருளை சோதித்‌து ச‌ரியான‌வை, த‌வ‌றான‌வை என‌ப் பிரித்த‌ல் (Seggregation) ஆகும். அதாவ‌து அந்த‌ப்பொருள் அத‌ற்காக‌ விதிக்க‌ப்ப‌ட்ட‌ அள‌வுக‌ளுட‌ன், த‌குதிக‌ளுட‌னும் இருக்கிற‌தா என்ப‌தை உறுதிசெய்து கொள்ளும் ந‌ட‌வ‌டிக்கை ம‌ட்டுமே. இத‌ற்கு அடுத்த‌ நிலையான‌ Quality Control என்ப‌து த‌வ‌றான‌ பொருட்க‌ளை க‌ண்டு ஒதுக்குவ‌தோடு நில்லாம‌ல் அத‌ற்கான‌ கார‌ண‌த்தையும் ஆய்ந்து அதைக் க‌ளையும் வேலையையும் (Correction) செய்கிற‌து. அடுத்த‌தான‌ Quality Assurance என்ப‌து அந்த‌த் த‌வ‌றுக‌ளை மீண்டும் ஏற்ப‌டாம‌ல் பார்த்துக்கொள்வ‌து (Prevention), மற்றும் அதை ஒத்த‌ இட‌ங்க‌ளுக்கு ப‌ர‌வ‌ச்செய்த‌ல் (Horizontal deployment) ஆகிய‌வ‌ற்றையும் த‌லையாய‌ க‌ட‌னாக‌க்கொள்கிற‌து.

மேற்க‌ண்ட‌ அனைத்தோடு கூட‌ தொட‌ர் முன்னேற்ற‌த்துக்கான (Continuous Improvement) வாய்ப்புக‌ளை ஆய்ந்த‌றிந்து அவ‌ற்றை ந‌டைமுறைப்ப‌டுத்துத‌ல் (Implementation), அவ‌ற்றை நிலைக்க‌ச்செய்த‌ல் (Continual Improvement) ஆகிய‌ ப‌ணிக‌ளையும் கொண்டுள்ள‌ அமைப்பே TQM என‌ப்ப‌டுகிற‌து என ஒரு மாதிரியாக TQM க்கு விளக்கம் சொல்லலாம்.

இன்னும் சிம்பிளாக சொல்வதானால் நான் எழுதுகிற 10 பதிவுகளை எடுத்துக்கொண்டு 8 தான் எக்ஸலண்டாக இருக்கிறது (ஹிஹி), 2 மோசமாக இருக்கிறது என நீங்கள் அடையாளம் கொண்டு அவற்றை ஒதுக்கிவிடுவது ஜஸ்ட் இன்ஸ்பெக்ஷன் (Inspection). அதற்கும் பின்னூட்டம் போட்டு என்னை நீங்கள் திருத்த முயன்றால் என்னை கண்ட்ரோல் (Control) செய்கிறீர்கள் எனலாம். வலுக்கட்டாயமாக போன் செய்து, மெயில் போட்டு இனி அது போல பதிவு வந்தால் நேரில் வந்து மூக்கில் குத்துவேன் என்று என்னைக் கட்டுக்குள் வைத்து அதுபோன்ற பதிவுகள் வராமல் செய்தீர்கள் என்றால் அது தர உறுதிப்பாடு (Assurance) எனலாம். அதற்கும் மேலே சென்று நேரிலேயே வந்து புத்தகங்கள், சிடிக்கள், மேற்படி விஷயங்களை எனக்கு பிரசண்ட் பண்ணி என் ரசனையை, படிப்பறிவை உயர்த்தி, என்னை தொடர்ந்து ஊக்குவித்து எல்லா பதிவுகளையும் தரமானதாக எழுத வைப்பீர்களானால் அதை TQM என்று சொல்லலாம். ஹிஹி..

இன்னும் விளக்கம் வேண்டும் எனில் TQM என்பது டெமிங்கினால் வரையறுக்கப்பட்ட ‘அனைத்துப்பகுதிகளிலும் தொடர் முன்னேற்றம்’, ‘டார்கெட்ஸ், கோல்ஸ் என எண்ணிக்கையினாலான விஷயங்களை குழுக்கள் மீது திணிக்காமலிருத்தல்’, ‘கோட்பாடுகளுடன் இயைந்திருத்தல்’, ‘நம்பிக்கை மற்றும் தலைமைப்பண்புகளை பரவலாக்குதல்’.. போன்ற 14 விதிகளை நடைமுறைப்படுத்துதலை சேர்த்துக் கொள்ளலாம். குவாலிடி என்பது அந்த டிபார்ட்மெண்டின் வேலை மட்டுமே இல்லை என்பதும், ஒவ்வொரு டிபார்ட்மெண்டின் பணிகளும் வரையறுக்கப்பட்டு, காரணகாரியத்தோடு அமைக்கப்பட்டு ஒத்திசைந்து இயங்கவேண்டும் என்ற பண்பாட்டையும் (Culture) TQM வலியுறுத்துகிறது.

இல்லை சப்ஜெக்டிவாக சொல்லவேண்டும் என்றால் ‘வாடிக்கையாளர்களின் தேவையைப் பொறுத்து உருவாகும் நிறுவனத்தின் உள்ளமைப்புகளின் தேவையுடன் சரியாக பொருந்திப்போகும் (Conformance) பொருளை, சேவையை உறுதி செய்வதே TQM’ எனலாம். புரிஞ்சுதா.?

TQM Vs Six Sigma

சிக்ஸ் சிக்மா இங்கே எங்கே வந்தது என்கிறீர்களா? இரண்டுக்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. TQM ம்மின் திருத்தப்பட்ட மறுபதிப்புதான் சிக்ஸ் சிக்மா என்று சொல்லிவிடமுடியாது எனினும் சொல்லவும் செய்யலாம். ஹிஹி.. தேவையுடன் பொருந்திப்போதலால் (Conformance to the Requirements) குவாலிடியை உயர்த்துவது TQM என்றால், வீணாவதை குறைப்பதால்/ தடுப்பதால் (Reduction in Rejection) குவாலிடியை உயர்த்துவது சிக்ஸ் சிக்மா. நோக்கம் ஒன்றுதானே.. TQM மொத்தத்துக்குமானது எனில் Six Sigma ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கானது அல்லது ஒரு பிராஜக்ட் போல தனித்தியங்கக்கூடியது எனவும் சொல்லாம். ஆனால் இரண்டிலும் பயன்படுத்தப்படக்கூடிய கருவிகள் என்னவோ பொதுவானவைதான்.

TQM Vs TPM

நிறுவனத்தின் எல்லா பிரிவுகளின் வேலைகளிலும் குவாலிடி இருக்கவேண்டும் என்ற வகையில் குவாலிடிக்கும் TPM க்கும் இருக்கும் தொடர்பைத் தவிர வேறில்லை என்பதால் இது அவுட் ஆஃப் சிலபஸ் என விட்டுவிடலாம். ஆனால் சொற்கள், கேட்க ஒரே மாதிரி இருப்பதால் இதைப்பேசும் போது அதையும் பேசி குழப்பிக்கொள்வது நம் வாடிக்கை. பணியாளர்கள், அவர்களின் ஊக்கம், எந்திரங்கள், கருவிகள் அவற்றின் திறன், தகுதி, பராமரிப்பு, செயல்கள் அவற்றின் விதிமுறைகள் இவையெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு குறையற்ற பொருட்களை நிறைவாக (Productive) உற்பத்தி செய்வது குறித்த இன்னொரு வழிமுறையியலே TPM (Total Productive Maintenance) என்று மட்டும் நினைவில் கொண்டு இந்தக்கட்டுரையை நிறைவு செய்வோம். சுபம்.. சுபம்.!

யேய்ய்ய்.. யாருபா அது குறட்டை விட்டு தூங்குறது.? பாடம் முடிஞ்சு போச்சுது, எழுந்திருங்கப்பா. கொஞ்சம் ட்ரை சப்ஜெக்டுதான், அதுக்காக.? அடுத்த முறை தூங்கினா மண்டையில் கொட்டிப்புடுவேன்.!

36 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

அழகாக விவரித்திருக்கிறீர்கள் ஆதி...
வாழ்த்துக்கள்

ஆயில்யன் said...

//TQM என்பது டெமிங்கினால் வரையறுக்கப்பட்ட ‘அனைத்துப்பகுதிகளிலும் தொடர் முன்னேற்றம்’, ‘டார்கெட்ஸ், கோல்ஸ் என எண்ணிக்கையினாலான விஷயங்களை குழுக்கள் மீது திணிக்காமலிருத்தல்’, ‘கோட்பாடுகளுடன் இயைந்திருத்தல்’, ‘நம்பிக்கை மற்றும் தலைமைப்பண்புகளை பரவலாக்குதல்’.. //

தட்ஸ் ஆல் டோட்டலா புரிஞ்சுடுச்சு!

கோட்பாடுகளுடன் இயைந்திருத்தல் - எச்சாட்டிலி சரியான வார்த்தை பயன்பாடு :)

ஆயில்யன் said...

அடுத்த பதிவு /அவ்வப்போது பதிவுகள் வர்லின்னா மண்டையில் கொட்டிட ஆளை அனுப்ப வேண்டியிருக்கும்!

cheena (சீனா) said...

எல்லாம் சரி ஆதி

நான் ஜூட்ட்ட்டு

நல்வாழ்த்துகள் ஆதி
நட்புடன் சீனா

க‌ரிச‌ல்கார‌ன் said...

சூப்ப‌ர் த‌ல‌

க‌ரெக்ட்டா தான் சொல்றீங்க‌ அப்புற‌ம் எதுக்கு அங்க‌ங்க‌ ஹி ஹி???

*இயற்கை ராஜி* said...

நல்ல விளக்கம். அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்

தராசு said...

கொஞ்சம் ஆழத்துல போயிட்டீங்க தல. ஆனால், சொல்லப்பட்டவை அனைத்தும் டாப் கிளாஸ்.

வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

நல்லா இருக்கு

இருந்தாலும் அந்த இட்லி கடை மாதிரி ஒரு நச் உதாரணம் மிஸ்ஸீங்...


அப்புரம் எஸ்&எஸ், ஓக்கே என்று ரிப்போர்ட் சொல்கிறது.

தாரணி பிரியா said...

மீ டெக்னிக்கலி ரொம்பவே வீக் என்பதால் ரெண்டு மூணு தடவை படித்த பிறகு விளங்கியது. கொஞ்சம் கஷ்டப்பட்டு புரிஞ்சுக்க வேண்டி இருக்கு :)

KVR said...

welcome back :-)

//அவை நிச்சயமாக குவாலிடியில் பணிபுரிபவர்களுக்காக மட்டுமே அல்ல//

அப்போ நான் உள்ளே வரலாம் :-)

//Quality Assurance என்ப‌து அந்த‌த் த‌வ‌றுக‌ளை மீண்டும் ஏற்ப‌டாம‌ல் பார்த்துக்கொள்வ‌து//

இந்தத் தர உறுதிப்பாடு என்பது தவறுகள் (defects) மட்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ள முடியுமா? ஒரு பொருள் இன்ன தரத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து அந்தக் கட்டுக்குள் (boundaries) இருக்கிறதா என்று உறுதி செய்துக்கொள்வது என்று சொல்லலாமா?

//(Continues Improvement)//

Continuous Improvement (Kaisan) - noun/verb மாறி இருக்கு.

// TQM மொத்தத்துக்குமானது எனில் Six Sigma ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கானது அல்லது ஒரு பிராஜக்ட் போல தனித்தியங்கக்கூடியது எனவும் சொல்லாம். //

இது கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கு.

//த‌லையாய‌ க‌ட‌னாக‌க்கொள்கிற‌து//

கடனா கடமையா?

TPM பற்றி அறியத்தந்தமைக்கு நன்றி ஆதி.

வழக்கம் போல பாடுற பாட்டு தான் - அப்பப்போ உங்க டெக்னிகல் பதிவு ரசிகர்களுக்கு இப்படி கொஞ்சம் தீனி போடுங்க :-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[யேய்ய்ய்.. யாருபா அது குறட்டை விட்டு தூங்குறது.? பாடம் முடிஞ்சு போச்சுது, எழுந்திருங்கப்பா. கொஞ்சம் ட்ரை சப்ஜெக்டுதான், அதுக்காக.? அடுத்த முறை தூங்கினா மண்டையில் கொட்டிப்புடுவேன்.!]]]

இதை மட்டும்தான் நான் படிச்சேன்..! சூப்பரப்பூ..!

குசும்பன் said...

//‘என்ன இருந்தாலும் டெக்னிகல் பதிவுகள் எழுதி நிரம்ப நாட்களாகிவிட்டன’ என குறைப்பட்டுக்கொண்ட நண்பர்களின் ஆர்வத்துக்கு நன்றி.//

இந்த கருங்காலிங்க யார் யார் என்ற விவரம் வந்தாக வேண்டும்!

இப்படிக்கு
தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆலோசனை குழு

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆரூரன்.!

நன்றி ஆயில்.! (ஹோய்.. இவருக்கு புரிஞ்சிடுச்சாம்ப்பா.. மடக்கிப்புடிச்சு கேள்வி கேப்பமா?)

நன்றி சீனா.!
நன்றி கரிசல்.!
நன்றி ராஜி.!

நன்றி தராசு.!
நன்றி கார்க்கி.!
நன்றி தாரணி.!

நன்றி உண்மைத்தமிழர்.!

குசும்பன் said...

//அவை நிச்சயமாக குவாலிடியில் பணிபுரிபவர்களுக்காக மட்டுமே அல்ல//

அப்போ நான் உள்ளே வரலாம் :-)

//

குவாலிட்டி பிரிவில் குவாலிட்டி இல்லாத ஆட்களுக்கு என்னவேலை?

மங்களூர் சிவா said...

/
மேலும் ஏதாவ‌து ஆங்கில‌ எழுத்துக்க‌ளின் கூட்டைச்சொல்லி நாளுக்கு நாள் ப‌ர‌ப‌ர‌ப்பைக் கிள‌ப்புவ‌து குவாலிடி துறையின் வாடிக்கைதான். அவ‌ற்றை ப‌த‌ற்ற‌மில்லாம‌ல் அணுகினால் அவை பெரும்பாலும் ச‌ப்பை மேட்ட‌ராக‌த்தான் இருக்கும்.
/

இப்ப புரிஞ்சது!
இப்ப புரிஞ்சது!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கேவிஆர்.!

அப்போ நான் உள்ளே வரலாம்//

வெல்கம்.

இந்தத் தர உறுதிப்பாடு என்பது தவறுகள் (defects) மட்டும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ள முடியுமா? ஒரு பொருள் இன்ன தரத்தில் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து அந்தக் கட்டுக்குள் (boundaries) இருக்கிறதா என்று உறுதி செய்துக்கொள்வது என்று சொல்லலாமா?//

சொல்லலாம்.

Continuous Improvement (Kaisan) - noun/verb மாறி இருக்கு.//

நன்றி. (திருத்திவிடுகிறேன் மாலையில் வீடு திரும்பியவுடன்)

இது கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கு.//

தள்ளி உட்கார்ந்துகொள்ளவும். :-)

கடனா கடமையா?//

இரண்டுக்கும் ஒரே அர்த்தமும் உண்டு.

ஆயில்யன் said...

அட!

ரைட்டு மோதி பார்த்துடறதுன்னு முடிவேட களமிறங்கியாச்சா ?

[கேள்விகளையும் கேளுங்களேன் எதிர்பார்க்கின்ற/எதிர்பாராத பதில்களையும் பெறக்கூடும் என்னிடத்தில் மட்டுமின்றி மேலும் பலர் நம்மை போன்று துறை சார்ந்தவர்களிடத்திலிருந்தும் - இது #ரிக்வெஸ்டும் கூட]

எம்.எம்.அப்துல்லா said...

//புதிய நண்பர்களுக்காக சில குறிப்புகள் //

புதுசாவெல்லாம் வேற வர்றாய்ங்களா!!

இராகவன் நைஜிரியா said...

A perfect article on TQM.

நாடோடி said...

TPM & TQM இது ந‌டைமுறையில் சாத்திய‌மா?... என‌க்கு என்ன‌வோ இவை எல்லாம் போஸ்ட் மார்ட்ட‌ன் வேலை என்று தான் சொல்வேன்... செத்த‌ பின்பு அந்த‌ ரிப்போட்டை வைச்சு அன‌லைஸ் ப‌ண்ணி என்ன‌ ப‌ண்ணுற‌து....

இப்ப‌டிக்கு,
குவாலிட்டி டிபாட்மென்டை குறை சொல்லியே... கால‌த்தை ஓட்டும் புட‌ர‌க்ச‌ன் டிபாட்மெண்ட்

நாடோடி said...

அழ‌காக‌ புரியும் ப‌டி விவ‌ரித்து உள்ளீர்க‌ள்...

மேலே சொன்ன‌தை த‌ப்பா எடுத்துக்க‌ வேண்டாம்.. சும்மா நானும் இந்த‌ பீல்டில் கொஞ்ச‌ம் கால‌ம் வேலை செய்திருக்கிறேன்..

Engineering said...

தெளிவாக விளக்கி உள்ளீர்கள் ...
நன்றி...

Joseph said...

இனிமே ஒழுங்கா மரியாதையா மாசம் ஒரு துறை சார்ந்த பதிவு போடனும். புரியுதா ?

மிக நல்லா எளிய முறையில சொல்ல்யிருக்கீங்க. அதோட தமிழ்ல விளக்கியிருக்க விதம் அருமையா இருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

சொன்ன விதம் நன்று

Jeeves said...

குவாலிடி டிப்பார்ட்மெண்டு அப்படின்னு ஒண்ணு இல்லாம இருந்திருந்தா
///

ஹ்ம்ம்ம்ம்... நல்லா தான் இருக்கு நினைச்சு பாக்க

VAAL PAIYYAN said...

SUPER ARTICLE
VISIT MY BLOG
www.vaalpaiyyan.blogspot.com

காவேரி கணேஷ் said...

ஆதி,

தொடர்ந்து இந்த கட்டுரையை எழுதுங்கள்.

ஒரு புத்தகமாக வரகூடிய எல்லா தகுதிகளும் இருக்கிறது.

வாழ்த்துக்கள்

sriram said...

என்னய மாதிரி பாமரர்களுக்கும் புரியும் வகையில் இருந்தது ஆதி, நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

NESAMITHRAN said...

நல்ல விளக்கம்

5 S அடிப்படை மற்றும் Ecovas உடன் எப்படி லின்க் ஆகிறது என்பதையும் விளக்க வேண்டுகிறேன்
:)

மிக்க நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி குசும்பன்.! (ரெண்டு பேர் இங்க பின்னூட்டம் போட்டுருக்காய்ங்க.. முடிஞ்சா புடிச்சுக்கங்க)

நன்றி மங்களூர்.!

நன்றி ஆயில்.! (யோவ்.. சும்மனாச்சுக்கும் சொன்னேன்யா)

நன்றி அப்துல்.! (நல்லாரும்யா)

நன்றி இராகவன்.!

நன்றி நாடோடி.! (நடைமுறை சாத்தியமா என்று கேட்க நிறைய விஷயங்கள் இருகின்றன பாஸ். அதே போல போஸ்ட்மார்ட்டம் வேலைகளும் நிறைய உள்ளன. இவை அல்ல, தெளிவாக சொல்லியிருக்கிறேனே பிரதர்.)

நன்றி இஞ்சின்.!
நன்றி ஜோஸப்.!
நன்றி உழவன்.!
நன்றி ஜீவ்ஸ்.!

நன்றி வால்பையன்.! (உங்கள் பெயரில் மிகப்பிரபலமான பதிவர் ஏற்கனவே இருப்பதால் நீங்கள் பெயர் மாற்றிக்கொள்ளலாமே தோழரே..)

நன்றி கணேஷ்.! (கொஞ்சம் ஓவரா இருக்கோ?)

நன்றி ஸ்ரீராம்.!

நன்றி நேசமித்திரன்.! (5S குறிப்புகள் ஏற்கனவே எழுதப்பட்டுள்ளன, Ecovas என்றால் என்னவென்று தெரியவில்லையே, தெரிந்ததைப் பகிரலாமே..)

இராமசாமி கண்ணண் said...

நல்லாதான் சொல்லிருகீங்க. இன்னும் விபரமா சொல்லுங்க. நன்றி.

RR said...

கலக்கல் ஆதி. நான் முதன் முதலில் உங்கள் பதிவிற்கு கருத்து தெரிவித்ததும், தனி ஒரு ஈமெயில் அனுப்பியதும் ஒரு டெக்னிக்கல் பதிவை படித்த பின்புதான். உங்களிடம் இருந்து இதுபோன்ற டெக்னிக்கல் பதிவு நிறைய எதிர்பார்கின்றேன்.

KVR said...

// ஆதிமூலகிருஷ்ணன் said...
நன்றி குசும்பன்.! (ரெண்டு பேர் இங்க பின்னூட்டம் போட்டுருக்காய்ங்க.. முடிஞ்சா புடிச்சுக்கங்க)//

பத்த வச்சிட்டியே பரட்ட :-)))))))))

kggouthaman said...

நல்ல முயற்சி. நன்றாக உள்ளது. தொடர்ந்து இந்த வகையில் எழுதுங்கள்.
Continuous Improvement cited in one of the comments above refers Kaisan. It has to be Kaizen.
Kai = change
Zen = good.
Kaizen means change for good.

என்னடா தேசம் said...

அருமையான தர விளக்கங்கள்... நன்றி

KR said...

நல்ல விளக்கம்...வாழ்த்துக்கள்