Wednesday, June 30, 2010

சிறந்த பல்புகள் –டாப் 10

10. நமது ஞாயிற்றுக்கிழமைக்கும் சேர்த்து வேட்டு வைக்கிறமாதிரி ஆபீஸில் ஃபீல்டு விசிட்டுக்கு ‘வெள்ளிக்கிழமை கிளம்பி திங்கள் கிழமை திரும்பறோம்’ ங்கற மாதிரி தேதி குறிக்கும்போது.

9. பலராலும் கொண்டாடப்பட்டு நாம் ரொம்ப நாளாக படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளரின் ஆகச்சிறந்த(?) ஒரு படைப்பு நம் கையில் முதல்முறையாக கிடைக்க, விபரம் தெரியாமல் அதைப் படித்து டரியலாகும் போது.

8. பலவித தடங்கல்களுக்குப் பிறகும் ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி சென்று உட்கார்ந்ததும், நாயகன் அறிமுகமாகும் போதோ, அறிமுகமாகி ஐந்து நிமிடத்திலோ அது எப்பேர்ப்பட்ட கதையாக இருந்தாலும் அந்த நாயகன் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தெருவில் ஆண், பெண் கூட்டத்தோடு கும்மாங்குத்து போடும்போது.

7. சரியாக டியூ நாளில் அமவுண்டை கட்டிய பிறகும், ஆட்டோ டெபிட்டில் அதே அமவுண்டை பிடித்து கிரெடிட்கார்ட் கடங்காரன் நம்ப பட்ஜெட்டில் குழப்பம் விளைவிக்கும் போது.

6. ரிப்போர்ட் தர ரெண்டு மணி நேரம் தாமதமானதால் மானேஜர் தரும் மூன்று மணி நேர அறிவுரைகளை கேட்க நேரும் போது.

5. பெட்ரோல் போட மறந்து பாதிவழியில் வண்டி நின்று அவஸ்தைக்குள்ளாகி, பிரம்மப்பிரயத்தனம் செய்து பெட்ரோலுடன் ஆளை வரவைத்து, கிளம்பிய பின்னர் ஒரே கிலோமீட்டரில் பஞ்சரும் ஆகித்தொலைக்கும் போது.

4. நேற்றைய சண்டையை சமாதானப்படுத்தும் பொருட்டு இன்று மார்னிங் ஷோ போய்விட்டு, மதியம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு முகத்தில் சிறிது புன்னகை வரத்துவங்கியிருக்கும் நேரத்தில் ரமாவின் கண்களில் நல்லி சில்க்ஸ் பட்டுத்தொலைக்கும் போது.

3. ஒருவாரம் கழித்து பதிவெழுதி அது நல்லா(?) வந்திருப்பதை கண்டு மகிழ்ந்துவிட்டு ஏற்றப்போகையில் கரண்ட் போய் தொலைக்கும்போது.. அல்லது அது செம ஹிட்டாகி 50 ஹிட்ஸும், ரெண்டு பின்னூட்டமும் வாங்கி சாதனை படைக்கும் போது.

2. இந்த ரயில் பயணத்திலாவது இந்த புத்தகத்தை முடித்துவிடவேண்டும் என்று நாம் மறக்காமல் எடுத்துச்செல்லும் அந்த நாளில்தான் நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.

1. தவறாமல் ஒவ்வொரு அப்ரைஸலின் போதும்..

(உங்களுக்கான தற்போதைய பல்பு : இது மீள்பதிவு வேறு தலைப்பில்.. ஹிஹி)

.

40 comments:

கார்க்கி said...

யோவ்..யோவ்..யோவ்

முதல் பின்னூட்டமே பாராட்டி வரும்ன்னு நினைச்சு வந்தா...

உங்களுக்கும் பல்பு

கார்க்கி said...
This comment has been removed by the author.
உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பிரைட் "பல்பு"

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ரிப்போர்ட் தர ரெண்டு மணி நேரம் தாமதமானதால் மானேஜர் தரும் மூன்று மணி நேர அறிவுரைகளை கேட்க நேரும் போது//

இது பல்போ.............பல்பு.

ஹி...ஹி......சேம் ப்ளட்!

பிரதீபா said...

//குழப்பம் விழைவிக்கும் போது// - எழுத்துப்பிழை இல்லையே ?

மற்றபடி..
எல்லா பல்பும் பல்பல்ல ஆதியார்
ரமாக்கா பல்பே பல்பு

:))

Saravana Kumar MSK said...

//பிரம்மப்பிரயத்தனம் செய்து பெட்ரோலுடன் ஆளை வரவைத்து, கிளம்பிய பின்னர் ஒரே கிலோமீட்டரில் பஞ்சரும் ஆகித்தொலைக்கும் போது.//
//அது செம ஹிட்டாகி 50 ஹிட்ஸும், ரெண்டு பின்னூட்டமும் வாங்கி சாதனை படைக்கும் போது//

கலக்கல்.. :)

//எல்லா பல்பும் பல்பல்ல ஆதியார்
ரமாக்கா பல்பே பல்பு//

இது அட்டகாசம்.. ;)

sriram said...

பல்பு:
உங்களோட டாப் டென் எல்லாமே ரமா கிட்ட நீங்க வாங்கினதா இருக்கும்னு சிரிச்சிக்கிட்டே வந்தா ஒன்பது மேட்டர் வேறன்னு தெரியும்போது நாங்க வாங்குவது

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

இது என்னங்க பெரீய்ய விசயம். ரொம்ப கஷ்டப்பட்டு வார கணக்கில் தகவல் தேடித் தேடி நல்ல பதிவா போட்டா ஈ காக்காய் கூட எட்டிப்பாக்காது. ஏதாவது லூசுத்தனமா எழுதினா குறைஞ்சது 20 வோட்டு கிடைக்கும். அப்ப கிடைக்கிற பல்ப் இருக்கே. அது தான் பல்ப்புன்னா பல்ப்பு.

veeramanikandan said...

பெட்ரோல் போட மறந்து பாதிவழியில் வண்டி நின்று அவஸ்தைக்குள்ளாகி, பிரம்மப்பிரயத்தனம் செய்து பெட்ரோலுடன் ஆளை வரவைத்து, கிளம்பிய பின்னர் ஒரே கிலோமீட்டரில் பஞ்சரும் ஆகித்தொலைக்கும் போது. excellent... idha yean vittuteenga? clutch wire mathittur over bridgela pogum podhu accelerator wire cut agaradhu...

நாய்க்குட்டி மனசு said...

ஐந்தாவது பல்ப் தான் ஆகச் சிறந்த பல்ப். தானும் எரிந்து நம்மையும் எரிய வைக்கும்.
//அது செம ஹிட்டாகி 50 ஹிட்ஸும், ரெண்டு பின்னூட்டமும் வாங்கி சாதனை படைக்கும் போது.//
அது தான் எனக்கும் புரிய மாட்டேங்குது. வோட் அதிகம் விழுந்தா பின்னூட்டம் புஸ்.

கபிலன் said...

பெரிய எடிசனா இருப்பீங்க போல?

புதுசா பதிவெழுத வந்து...படிச்சு சொல்லுங்க சார்-ன்னு சொன்னா
இந்தா வாரேன் அந்தா வாரேன் சொல்லி எஸ்கேப் ஆனிங்கல்ல......
நல்லா வேணும். :-D

அத்திரி said...

மிகப்பெரும் பலபு ஆராய்ச்சியாளர் அண்ணன் ஆதி வாழுக

அத்திரி said...

பல்புல புள்ளி வைக்க மறந்துட்டேன்

Rangan Kandaswamy said...

நம் நாட்டை பற்றி கவலைபடுங்கள்.

Mahesh said...

ஆரம்பிச்சுட்டாருய்யா... இன்னும் எத்தனை 10 வரப் போகுதோ :(

தராசு said...

மறுபடியும் ஒரு 10 களின் சுற்றா???

வாழ்க பல்பு வாங்குவோர் சங்கம்.

Cable Sankar said...

நெ.2 மேட்டர் அட்டகாசம்..

Mythili said...

inniku unga spot romba pragasama iruku..pinna 10 blub + pinnutathil kodukra blubs AAAHHHAAA...

வால்பையன் said...

//நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.//

இதெப்படி பல்பாகும்!, புத்தகத்தை விட அருமையான அனுபவம் அல்லவா உங்களுக்கு கிடைத்திருக்கிறது!, காஷ்மீர் சென்று இயற்கையை ரசிப்பீர்களா, புத்தகத்தை படிப்பீர்களா!?
இயந்திரத்துடன் வேலை செய்து இயந்திரமாகவே மாறி விட்டீர்கள் போல!

தாரணி பிரியா said...

பல்பு பத்தி ஆராய்ச்சி பலமா இருக்கு ரமாகிட்ட வாங்கறது பத்தாது போல இனிமேல சுபாகிட்டயும் வாங்கினா சரியாகிடும் :)

முரளிகண்ணன் said...

:-))))))

மங்களூர் சிவா said...

ரைட்டு!

veeramanikandan said...

nice

சுசி said...

பல்பு நம்பர் ஒன்.. ரெண்டு வாரம் முன்னாடி வாங்கினேன் ஆதி.. இன்னமும் பிரகாசம் குறையாம எரிஞ்சு கிட்டு இருக்கு..

அவ்வவ்..

Anonymous said...

ஆமாம் .சைட்ல இருக்கறது மிஷல் ரோட்ரிகஸ் ஆச்சே. நீங்க மிஷல் கானர் னு பேர் போட்டிருக்கீங்க. அம்மணிக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்ன

vinu said...

i wish and greet you this post also should get 10000 hits and only 26 comments.

pazikku pazi..............gorrrrrrrrrrrrrrr nageallam suRa padathaiyea theaterla poi paathavanga niyabagam irrukkattum

பா.ராஜாராம் said...

மீளுக்கு நன்றி! :-)

கார்க்கி, :-))

அன்புடன் அருணா said...

பல்புகள் நல்லா பளிச்சுனு எரியுது!

மோகன் குமார் said...

//நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.//

:))

கும்க்கி said...

:))

மீள் புன்னகைதான்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி, (பல்பெல்லாம் இல்லை, பதிவு செம ஹிட்டு, 1500 ஹிட்ஸ், நம்பவே முடியலை.. அதுவும் மீள்பதிவு)

உலவு,

பெ.சொ.வி,

பிரதீபா (பிழைதான், திருத்திவிட்டேன், நன்றி பிரதீபா)

MSK,

ஸ்ரீராம்,

அனாமிகா (ஹிஹி.. பலருக்கும் அப்பிடித்தான் ஆகும்),

மணிகண்டன்,

நாய்க்குட்டி (அவ்வளவு சிம்பிளா புரிஞ்சுட்டா எப்பிடி?),

கபிலன் (ஸாரி கபிலன், வர்றேன், கொஞ்சம் பிஸி)

அத்திரி,

ரங்கன்,

மகேஷ்,

தராசு,

கேபிள்,

மைதிலி,

வால்பையன் (வர வர ரொம்பத்தான்யா லாஜிக் பாக்குறீரு, சேர்க்கை அப்பிடி.. ஹிஹி),

தாரணி,

மங்களூர்,

சுசி (ROTFL),

அம்மிணி (அலோ.. அது ரோட்ரிகெஸ்தானுங்க, மூலையில போட்டிருப்பதால் Corner. இதென்னடா வம்பாப்போச்சுது?)

வினு,

பாரா,

அருணா,

மோகன்,

கும்க்கி..

அனைவருக்கும் நன்றி.!!

ஈரோடு கதிர் said...

தலைவர் தலைமையில சிறந்த பல்புக்கு சிறப்பு விருதுன்னு ஒரு விழா எடுத்துடலாமா

பரிசல்காரன் said...

சமீபத்துல நீங்க ஊமைச்செந்நாய் படிச்சுட்டிருந்தீங்கன்னு நெனைக்கறேன்...

Anand said...

Hi,

Happy to see your twitter update in Vikatan issue this week, along with Writer Payon tweet.

Congrats !!

Ananth
Chicago.

RAMYA said...

//

10. நமது ஞாயிற்றுக்கிழமைக்கும் சேர்த்து வேட்டு வைக்கிறமாதிரி ஆபீஸில் ஃபீல்டு விசிட்டுக்கு ‘வெள்ளிக்கிழமை கிளம்பி திங்கள் கிழமை திரும்பறோம்’ ங்கற மாதிரி தேதி குறிக்கும்போது.
//

ஐயோ பாவம்! ஹாலிடே போச்சா:)//
9. பலராலும் கொண்டாடப்பட்டு நாம் ரொம்ப நாளாக படிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளரின் ஆகச்சிறந்த(?) ஒரு படைப்பு நம் கையில் முதல்முறையாக கிடைக்க, விபரம் தெரியாமல் அதைப் படித்து டரியலாகும் போது.
//

ம்ம்ம்... நல்லா இருக்கு:) என்ன செய்ய காசு கொடுத்து வாங்கிட்டீங்கல்லே படிக்க வேண்டியதுதான் :)

RAMYA said...

//
8. பலவித தடங்கல்களுக்குப் பிறகும் ஒரு படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி சென்று உட்கார்ந்ததும், நாயகன் அறிமுகமாகும் போதோ, அறிமுகமாகி ஐந்து நிமிடத்திலோ அது எப்பேர்ப்பட்ட கதையாக இருந்தாலும் அந்த நாயகன் கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தெருவில் ஆண், பெண் கூட்டத்தோடு கும்மாங்குத்து போடும்போது.
//

ஆமாம் ஆதி! இது பார்க்க ரொம்ப எரிச்சலாதான் இருக்கும்:(

//
7. சரியாக டியூ நாளில் அமவுண்டை கட்டிய பிறகும், ஆட்டோ டெபிட்டில் அதே அமவுண்டை பிடித்து கிரெடிட்கார்ட் கடங்காரன் நம்ப பட்ஜெட்டில் குழப்பம் விளைவிக்கும் போது.
//

ஆட்டோ டெபிட்லே என்னோட அக்கௌன்ட் நம்பரை கொடுத்திடுங்க:)

இது போல நடக்காது:)

//
6. ரிப்போர்ட் தர ரெண்டு மணி நேரம் தாமதமானதால் மானேஜர் தரும் மூன்று மணி நேர அறிவுரைகளை கேட்க நேரும் போது.
//

ஆஹா! நான் ஒரு ஐடியா தரேன், அந்த கடுப்பை பக்கத்துலே இருக்கறவங்க கிட்டே காட்டினா பல்பு சரியா வேலை செய்யும் :)

RAMYA said...

//
5. பெட்ரோல் போட மறந்து பாதிவழியில் வண்டி நின்று அவஸ்தைக்குள்ளாகி, பிரம்மப்பிரயத்தனம் செய்து பெட்ரோலுடன் ஆளை வரவைத்து, கிளம்பிய பின்னர் ஒரே கிலோமீட்டரில் பஞ்சரும் ஆகித்தொலைக்கும் போது.
//

ஆஹா இது சூப்பர் எப்படி எல்லாம் ஜனங்க கஷ்டபடுராங்கையா சாமி:)

//
4. நேற்றைய சண்டையை சமாதானப்படுத்தும் பொருட்டு இன்று மார்னிங் ஷோ போய்விட்டு, மதியம் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு முகத்தில் சிறிது புன்னகை வரத்துவங்கியிருக்கும் நேரத்தில் ரமாவின் கண்களில் நல்லி சில்க்ஸ் பட்டுத்தொலைக்கும் போது.
//

ட்ரிங் ட்ரிங்.... ரமா மேடம் சென்னை சில்க்ஸ்லே கூட எல்லாம் சூப்பரா இருக்கும்:-)

அடுத்தவாரம் ட்ரை பண்ணி பாருங்க:-)

அப்பா சரியா போட்டு கொடுத்தாச்சு!வந்த வேலையும் முடிஞ்சமாதிரிதான் தோணுது:)

RAMYA said...

//
3. ஒருவாரம் கழித்து பதிவெழுதி அது நல்லா(?) வந்திருப்பதை கண்டு மகிழ்ந்துவிட்டு ஏற்றப்போகையில் கரண்ட் போய் தொலைக்கும்போது.. அல்லது அது செம ஹிட்டாகி 50 ஹிட்ஸும், ரெண்டு பின்னூட்டமும் வாங்கி சாதனை படைக்கும் போது.
//

அது சரி இப்போ எல்லாம் அவ்வளவுதான் பின்னூட்டம் வருது ஆதி:(

பின்னூட்டங்கள் நிறைய வந்த காலங்கள் எல்லாம் மலை ஏறிபோச்சு:)

//
2. இந்த ரயில் பயணத்திலாவது இந்த புத்தகத்தை முடித்துவிடவேண்டும் என்று நாம் மறக்காமல் எடுத்துச்செல்லும் அந்த நாளில்தான் நமது பக்கத்து சீட்டில் அழகான இளம்பெண்கள் இடம்பெற்று முதல் பக்கத்திலேயே மூன்றுமணி நேரம் முண்டிக்கொண்டிருக்கும் போது.
//

ஹையோ ஹையோ இது அநியாயம்:௦)

ரமா மேடத்துக்கு தெரியுமா:)

RAMYA said...

//
1. தவறாமல் ஒவ்வொரு அப்ரைஸலின் போதும்..
//

ஐயோ! இது கொஞ்சம் பயம்தான்.. சரி சரி இந்த முறை அப்ரைசல் சூப்பரா அமையும் போங்க :)

//
(உங்களுக்கான தற்போதைய பல்பு : இது மீள்பதிவு வேறு தலைப்பில்.. ஹிஹி)
//

அது சரி:)

இருந்தாலும் நான் பழைய பல்பை படிக்கலை:)

இப்போ படிச்சிட்டேன். நல்லாவே பல்பு வேலை செய்யிது போல:)

விக்னேஷ்வரி said...

நாலாவது தான் டாப் ஆதி ;)