Monday, June 7, 2010

நான் ரசித்த பாடல்கள் : டாப் 5

எனது இசையார்வத்தின் அதிகபட்ச உயரம் தமிழ் திரைப்பாடல்கள் மட்டுமே. அதுவும் எனக்கு பிடிக்கவேண்டுமானால் அந்தப்பாடல் இசை தவிர மேலும் சில ரசனையான விஷயங்களையும் கொண்டிருக்கவேண்டும். ஏராளமான பாடல்களுக்கிடையே சில விதி முறைகளை வைத்துக்கொண்டு நான் ரசித்த, ரசிக்கும் டாப் 5 பாடல்களைத் தருகிறேன். மிக முக்கியமான விஷயம் 2009-10 ல் வந்த பாடல்கள் மட்டுமே ஆட்டத்துக்கு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் ரசனையான ஒளிப்பதிவு, ரகளையான ஹீரோ, ஹீரோயின், அழகான இசை, கவிதைத்தனமான பாடல் வரிகள், உணர்வைத்தொடும் குரல், கொஞ்சம் காதல் என பல விஷயங்களையும் கணக்கில் கொண்டு வரிசைப்படுத்தியிருக்கிறேன். சேம் பிளட்டாக இருந்தால் ஒரு பின்னூட்டத்தைப் போட்டு வையுங்கள்.

5. ஒரு கல் ஒரு கண்ணாடி..

sms-1

ப‌ட‌ம் : சிவாமனசுலசக்தி இய‌க்க‌ம் : எம்.ராஜேஷ் ஜோடி : ஜீவா, அனுயா ஒளிப்ப‌திவு : சக்திசரவணன் இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : நா.முத்துக்குமார் குர‌ல் : யுவன்ஷங்கர்ராஜா

4. மழை பெய்யும் நேரம்..

Renigunda

ப‌ட‌ம் : ரேனிகுண்டா இய‌க்க‌ம் : ஆர்.பன்னீர்செல்வம் ஜோடி : ஜானி, சனுஷா ஒளிப்ப‌திவு : சக்தி இசை : கணேஷ்ராகவேந்திரா பாட‌ல் : யுகபாரதி குர‌ல் : ஹரிஷ்ராகவேந்திரா

3. மழையே மழையே..

eeram_movie_vijay_tv_telecast

ப‌ட‌ம் : ஈரம் இய‌க்கம் : அறிவழகன் ஜோடி : ஆதி, சிந்துமேனன்  ஒளிப்ப‌திவு : மனோஜ்பரமஹம்ஸா இசை : எஸ்.தமன் பாட‌ல் : விவேகா குர‌ல் : ரஞ்சித்

2. மன்னிப்பாயா..

VV150110_1

ப‌ட‌ம் : விண்ணைத்தாண்டி வருவாயா இய‌க்க‌ம் : கௌதம்வாசுதேவ்மேனன் ஜோடி : சிலம்பரசன், திரிஷா ஒளிப்ப‌திவு : மனோஜ்பரமஹம்ஸா இசை : ஏஆர்.ரஹ்மான் பாட‌ல் : தாமரை குர‌ல் : ஏஆர்.ரஹ்மான், ஷ்ரேயாகோஷல்

1. ஒரு தேவதை பார்க்கும் நேரமிது..

vamananorg

ப‌ட‌ம் : வாமனன் இய‌க்க‌ம் : ஐ.அகமது ஜோடி : ஜெய், பிரியா ஒளிப்ப‌திவு : அரவிந்த்கிருஷ்ணா இசை : யுவன்ஷங்கர்ராஜா பாட‌ல் : நா.முத்துக்குமார் குர‌ல் : ரூப்குமார்ரதோட்

.

(முந்தைய டாப் 5 பாடல்கள்)

.

17 comments:

விஜய் said...

மன்னிப்பாயா ஒன்று மட்டும் எனது விருப்பத்தில் தேறுகிறது

வாழ்த்துக்கள்

விஜய்

மதுரை சரவணன் said...

அனைத்தும் ரசிக்கக்கூடியவைத்தான். வாழ்த்துக்கள்

RR said...

இதில் ஒரே ஒரு படத்த மட்டும் தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது; அதிலும் அனைத்து பாட்டுக்கும் எந்திருச்சி தம் அடிக்க வெளியே போய்விட்டேன்.....ஜாரி!

சுசி said...

//இசை தவிர மேலும் சில ரசனையான விஷயங்களையும் கொண்டிருக்கவேண்டும்.//

ஓஹோ..

நல்ல ரசனை ஆதி.

எனக்கு 2, 3, 1, 4, 5 :))))

ர‌கு said...

2ம், 3ம் சூப்ப‌ர்....ம‌த்த‌தெல்லாம்.......ச‌ரி விடுங்க‌ ஒவ்வொரு ம‌னுஷ‌னுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் ;)

Saravana Kumar MSK said...
This comment has been removed by the author.
Saravana Kumar MSK said...

அன்பில் அவன் - விண்ணைத்தாண்டி வருவாயா
ஆரோமலே - விண்ணைத்தாண்டி வருவாயா
ஓ மனப் பெண்ணே - விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் வி.தா.வின் மற்ற பாடல்களும்
என் காதல் சொல்ல - பையா
இது வரை - கோவா
மழை பெய்யும் நேரம் - ரேணிகுண்டா
ஒரு கல் ஒரு கண்ணாடி - சிவா மனசுல சக்தி
ஒரு வெட்கம் வருதே - பசங்க (சோபி கண்ணு :))
லேசா பறக்குது மனசு - வெண்ணிலா கபடி குழு
நான் போகிறேன் - நாணயம்

இதெல்லாம் எனக்கு பிடிச்ச பாடல்கள்.. இன்னும் கொஞ்சம் இருக்கு, டைப் பண்ண சோம்பேறித்தனம்.. :)

டம்பி மேவீ said...

ஹ்ம்ம் ...

இந்த பாட்டையெல்லாம் தனிமையான இரவொன்றில் குளுமையான காற்றை அனுபவிதப்படி கேட்க எனக்கு பிடிக்கும்

விக்னேஷ்வரி said...

வித்தியாச ரசனையா இருக்கு. நல்லா இருக்கு.

தராசு said...

சேம் பிளட் இல்லை.

தாரணி பிரியா said...

ஒரு கல் ஒரு கண்ணாடி. & மன்னிப்பாயா மட்டும்தான் சேம் பிளட் :)

Karthik said...

ரேணிகுன்டா பாடல் மட்டும். :)

ஓ ஈஸா - ஆயிரத்தில் ஒருவன் ஆரோமலே, அன்பில் அவன் - விதாவ, ஏழேழு தலைமுறைக்கும் - கோவா.. இவ்ளோதான் ஞாபகம் வருது. இப்ப ராவணன்.

புன்னகை said...

மன்னிப்பாயா மட்டும் தான் சேம் பிளட்! ரேனிகுண்டா, ஈரம் பாடல்களைக் கேட்டது கூட இல்லை!
ஒரு வெட்கம் வருதே (பசங்க) பாடல் பிடிக்காதா உங்களுக்கு?

கார்க்கி said...

சின்னத்தாமரை?

நான் நடந்தா?

தமிழன் வீரத்தமிழன்?

இதெல்லாம் இல்லையா??????????

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
ஸ்ரீவி சிவா said...

பாஸ்.. சொன்னா நம்புவீங்களான்னு தெரியல.
அஞ்சுமே சேம் பிளட்... :))))
தர வரிசை மாறலாம்.
எனக்கு இன்னும் சில பாடல்கள் பிடிக்கும்.

#இது வரை..(கோவா),
#ஓமனப் பெண்ணே &
#ஆரோமலே(வி.தா.வ )
மாலை நேரம்(ஆ.ஒருவன்)
#லேசா பறக்குது மனசு(வெண்ணிலா க.குழு)

மற்றும் சில....

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒரே ஹீரோவுக்கும், ஒரே படத்துக்கும் ரெண்டு கிடையாதுன்னு ரூல்ஸ் சொல்ல மறந்துட்டேன்.

வி.தா.வ வின் மேலும் சில பாடல்கள், கோவாவின் இதுவரை ஆகியனவும் தேர்வில் இருந்தன.

ரசனையைப் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.