Thursday, June 3, 2010

சிங்கம் : விமர்சனம்

பொதுவாக ரமா சினிமா பார்க்க அவ்வளவாக விரும்புவதில்லை. இருப்பினும் எப்போதாவது நான் கொஞ்சம் நச்சரித்தால் ஒப்புக்கொள்வார். அவ்வாறு நாங்கள் தேர்வு செய்யும் படங்கள் பெரும்பாலும் அயன், ஆதவன் போன்ற படங்களாகத்தான் இருக்கும். சுபா வந்த பிறகு கூட இந்த இரண்டு வருடங்களில் இரண்டல்லது மூன்று படங்கள் அவனோடு போயிருக்கிறோம். பாதியில் அழுது வெளியேற வைத்துவிடுவானோ என்ற பயமிருந்தாலும் அவ்வளவாக படுத்தாமல் பாதியைத் தூங்கியும், மீதியை சகித்துக்கொண்டும் பார்த்துவிடுவான். ஆகவே தயக்கமின்றி அவனையும் தூக்கிக் கொண்டே சென்றோம்.

டைட்டில் துவங்கியது. டமா டுமா.. சன் பிக்சர்ஸ்.. கடா முடா கலாநிதி மாறன், சொய்ங் பொய்ங் தடபுடா தடபுடா வழங்கும் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வ்வோஓஓஓ க்க்க்வோர்ர்ர்ர்ர் சிங்கம் என்று துவங்கி கிராஃபிக்ஸ் சிங்கம் பாய, காமிரா ஒரு இடம்னு இல்லாமல் சொய்ங் சொய்ங் என பறக்க க்க்கோர்ர்ர்ர்ர்ர் என சூர்யா சிங்கம் போல பறந்து படம் துவங்கிய ஐந்து நிமிடத்துக்கு ஃபைட்டர்களை பறக்கவிட.. தியேட்டர் அலற.. கண்டும் காணாததற்கு ரசிகர்கள் வேறு துவக்கக்கூச்சலிட நமக்கே எங்கோ கலவரத்தில் சிக்கிக்கொண்டோமோ என்ற பயம் ஏற்படுகிறது. பாவம் இரண்டரை வயதுதான் ஆகிறது சுபாவுக்கு. அழுது அலறிவிட்டான். ஒழுங்கா படம் பார்க்க வந்துகொண்டிருந்த பிள்ளையை இப்படிப் பண்ணிவிட்டீங்களே, அடப்பாவிகளா.. பின்னணி இசை பண்ணிய புண்ணியவான்களா.. நீங்க நல்லாவேயிருங்க.!

நல்லவேளையாக வீடு பக்கத்திலிருந்ததால் ஆட்டோ பிடித்து ரமாவையும், அவனையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் படத்தைத் தொடர்ந்தேன். ஹூம்.!

*****************

சிங்கம்

சொத்தையான கிளைமாக்ஸைத் தவிர படம் பரபரன்னு போகுது. செமையான ஹீரோவும் செமத்தியான வில்லனும் மோதிக்கொள்கிறார்கள். ஓரளவு புத்திசாலித்தனமான இயல்பான (? அதாவது மற்ற ஹீரோக்களை ஒப்பிடுகையில் இதுவே பெட்டரான இயல்பு என்று எண்ணும் நிலைக்குத் தள்ளிவிட்டுவிட்டார்கள்) ஹீரோ, வலுவான வில்லன் (கொஞ்சம் மொக்கை போட்டாலும்) இருவருக்குமான பரபரவென லாஜிக் மீறாத (? அதாவது.. என்ன போதுமா? சரி.) திரைக்கதை என விறுவிறுவென செல்கிறது படம். தூத்துக்குடியில் துடிப்பான SI ஆக இருக்கும் சூர்யா, பெயிலுக்கான போலிக்கையெழுத்து பிரச்சினையில் பிரகாஷ்ராஜை ஒரு காட்டு காட்டிவிட தீப்பற்றுகிறது. சென்னை மாற்றலான பின் வில்லன் இம்சையில் தயங்கி ஊருக்கு ஓடிப்போக முடிவெடுப்பது, பின் (? ஹீரோயின் புண்ணியத்தில்) மாற்றிக்கொள்வது இயல்பாக இருக்கிறது. இதைப்போன்ற காட்சிகள்தான் படத்துடன் நாம் ஒன்ற காரணமாகின்றன. இருவருக்குமிடையேயான அடுத்தடுத்த அதிரடி மூவ்கள் சுவாரசியம்.

singam

கதையெல்லாம் விடுங்க.. ஹீரோவின் பராக்கிரமங்கள், தூள் பறக்கும் சண்டைக்காட்சிகள், அனுஷ்கா பிடிக்குமென்றால் தாராளமாக பார்க்கலாம். சூர்யாவும் அழகாகவே இருக்கிறார். மைனஸ் என்றால் விவேக் மற்றும் பாடல்கள். அதுவும் ஒரு பாடல் வருகிறது பாருங்கள். ‘என் இதயம் இப்போ துடிக்கிறது..’ ட்யூன், குரல்கள் எல்லாம் ஓகேதான், ஆனால் லிரிக்ஸ் பாருங்கள், அடப்பாவிகளா.. அநியாயம்.! கபிலனாக இருப்பாரோ என்று சந்தேகித்தால் நா. முத்துக்குமாராம். சத்தியமாக நம்பமுடியவில்லை. முந்தின சீட்டில் இருந்தவர் தலையில் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.

நம்பிக்கைக்குரிய மிகச்சிலரில் ஒருவரான சூர்யாவும் கமர்ஷியல் திசையில் ஆழமாக கால்பதிப்பது வருத்தமாகவே இருக்கிறது. நீங்கள் இன்னும் நிறைய பண்ணவேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் விஜய் வகையறாக்களிடம் விட்டுவிடுங்களேன் சூர்யா. இந்தக்கதை விஜய் நிராகரித்ததாம். இந்தக் கமர்ஷியல் ஹிட் விஜய் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாகயிருந்திருக்குமே என எண்ணினேன். அடுத்த கணமே ஹீரோ போலீஸ்யா என்ற எண்ணம் வந்தது. விஜயே அதை எண்ணித்தான் மறுத்திருப்பாரோ.? ஹிஹி.!

.

18 comments:

தமிழ் அமுதன் said...

ரைட்டு...!

ஷர்புதீன் said...

subha and your family members are lucky....

you logged with that film., i know its all because of us. am i right aathi?

மதன் said...

Sari..appo padatha pakkalamnu solringa.. rightu pathuruvom..

Vijay ya ninaicha romba pavama irukku

விந்தைமனிதன் said...

//விஜயே அதை எண்ணித்தான் மறுத்திருப்பாரோ.? //

பாவங்க அவரு... திரையில அவரு அடிக்கிற அடிக்கெல்லாம் வட்டியும் முதலுமா இந்த அடி அடிக்கிறீங்க!

ILA(@)இளா said...

நீங்களும் பார்த்தாச்சா.. சேம் பிளட்

பிள்ளையாண்டான் said...

அந்த பாட்டுல தான் அனுஷ்கா அட்டகாசமா இருக்காங்க!

என்னா சார் நீங்க, வரியெல்லாம் போய் கவனிச்சுரிக்கங்க! நீங்க ரொம்ப மோசம்!

***
வசனங்களைப் பற்றி....?
****

சூர்யா உங்களுக்கு பிடிக்குமா அல்லது அண்ணிக்கா?

அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் படத்தை பார்த்திருக்கிறீர்கள்.

பெண்ணியவாதிகள் சண்டைக்கு வந்துவிட போகிறார்கள்.

சுசி said...

//நாங்கள் தேர்வு செய்யும் படங்கள் பெரும்பாலும் அயன், ஆதவன் போன்ற படங்களாகத்தான் இருக்கும். //

ஓக்கே ஓக்கே..

// டைட்டில் துவங்கியது. //

இங்க சிரிப்பும் தொடங்கிச்சு.. சூப்பர் ஆதி.

// நான் படத்தைத் தொடர்ந்தேன். //

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

RR said...

//நல்லவேளையாக வீடு பக்கத்திலிருந்ததால் ஆட்டோ பிடித்து ரமாவையும், அவனையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் படத்தைத் தொடர்ந்தேன். ஹூம்.!//

வாசகர்களை ஏமாத்த கூடாதுன்னு என்ன ஒரு கடமை உணர்ச்சி......hats off :-)

நாய்க்குட்டி மனசு said...

முந்தின சீட்டில் இருந்தவர் தலையில் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது.//
அவர் என்ன பாவம் பண்ணினார், பாவம் .

Cable Sankar said...

முந்தின சீட் ஆள் என்ன பாவம்செய்தார்...

Mahesh said...

//ஹீரோ போலீஸ்யா // இருக்கட்டுமே... என்ன கெட்டுப் போச்சு? கலெக்டர், மேஜர் எல்லாம் பாத்தவங்களுக்கு இதைப் பாக்க முடியாதா?

க.பாலாசி said...

//அடுத்த கணமே ஹீரோ போலீஸ்யா என்ற எண்ணம் வந்தது//

எனக்கு தெரியும்...நீங்க நல்லவரு....

Karthik said...

நல்லது இன்று செல்கிறேன். கூடவே ஒரு A4 ஷீட்டும். :)))

அமுதா கிருஷ்ணா said...

வித்யாவில் சிங்கமா ஓடுது.இது தெரியாமல் என் தம்பி மகன்(4 வயது)நச்சரித்தான் என்று பி.வி.ஆர் போனேன்.சுபாக்கு இன்னும் 2 வயது போகட்டும் அப்புறம் சுறா,சிங்கம் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

டோய்.. என்னாங்கடா இது? குறைஞ்சது 20 பின்னூட்டம் வரலைன்னா கோபப்படுவேன்னு தெரியாதா உங்களுக்கு? சரி சரி இன்னைக்கு நல்ல மூட்ல இருக்குறதால மன்னிச்சு வுட்டுடுறேன். பொழச்சிப் போங்க..

தமிழமுதன்,

ஷர்ஃபு,

மதன்,

விந்தைமனிதன்,

இளா,

பிள்ளையாண்டான் (யோவ்வ்..),

சுசி,

RR,

நாய்க்குட்டி (அவன் மட்டும் எப்படி நிம்மதியா படம் பாக்கலாம்?),

கேபிள்,

மகேஷ்,

பாலாசி,

கார்த்திக்,

அமுதா (சம்பவம் நடந்தது பாளையங்கோட்டை 'பாம்பே' தியேட்டரில்)

அனைவருக்கும் நன்றி.!

நாய்க்குட்டி மனசு said...

படம் பார்த்தது பாளையம்கோட்டை பாம்பே தியேட்டரா? பார்த்து, முன்னால இருக்கிறவன முட்டினா புடிச்சிக்கிட்டு போக அங்க ஆள் இருக்காங்களாம். பாம்பே இல இருந்து எங்க வீடு பத்து நிமிடம் தான்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@நாய்க்குட்டி மனசு,

மூகாம்பிகை நகரில்தான் என் மனைவியாரின் தாய்வீடு இருக்கிறது. :-))

PADIKATHAVAN said...

Arasu Athikariku vanakam. yenoda petiyum potingana nanum pemas akiduven