Sunday, June 13, 2010

குறும்படம் எடுப்பது எப்படி?

பரிசல், செல்வேந்திரன், வெயிலான் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் விருட்டென எழுந்து ஒரே குரலில், “அப்ஜெக்ஷன் யுவர் ஹானர், எதிரணி வழக்கறிஞர் என்ன தகுதியிருக்கிறது என இந்த வழக்கில் இப்படியொரு அரிய வாதத்தை துவக்குகிறார் எனத் தெரியவில்லை. ஆகவே அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.

நீதிபதி வடகரை வேலன், “அப்ஜக்ஷன் ஓவர் ரீல். தாமிரா புதியவராக இருந்தாலும், மிக இளமையானவராகவும் இருப்பதால் அவரை ஊக்குவிக்க வேண்டியது நம் கடமையாகிறது. நீங்கள் துவங்குங்கள் தாமிரா”

இப்போ அவுரு இளமையைப் பற்றி யாரு பேசினது? இப்பிடித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசுவாரய்யா இவுரு என்று முனகியவாறு தாமிராவை முறைத்தவாறே வெயிலான் அமர்கிறார். பார்வையாளர் பகுதியில் விசிலடிக்காத குறையாக அப்துலும், வெண்பூவும் அமர்ந்திருக்கின்றனர். வெண்பூ கையில் சமோசா பொட்டலம் இருக்கிறது.

தாமிரா, “தேங்க்யூ யுவர் ஹானர்”... வழக்கு தொடர்கிறது.

************

நமக்கு என்ன அடிப்படைத்தகுதி இருக்கிறது என்று இறுதியில் பார்த்துக்கொள்ளலாம். முதலில் விஷயத்துக்குள் போகலாம்.

டெக்னிகல் :    முதலும் முக்கியமானதும் ஆன டெக்னிகல் தேவை என்று ஒன்று உள்ளது. அதுதான் காமிரா மற்றும் கம்ப்யூட்டர். ஆபீஸ் கம்ப்யூட்டரை நம்ப முடியாது. ஏனெனில் ஏற்கனவே பாதி நேரம் பிளாக்கை நோண்டிக்கொண்டிருப்பதால் நம்மைக் கட்டம் கட்டி வைத்திருப்பார்கள். இந்த லட்சணத்தில் இந்த வேலையையும் ஆபீஸில் திட்டமிட்டீர்கள் என்றால் முழு நேரமும் பொங்கலாகிவிட சீட்டு ‘டும்மா’வாகிவிடும்.

ஆகவே வீட்டிலோ, நண்பர் வீட்டிலோ கம்ப்யூட்டரை பயன்படுத்த ஏற்பாடுசெய்துகொண்டுதான் களத்திலேயே இறங்கவேண்டும். எடுத்த கிளிப்பிங்குகளை வெட்டி ஒட்டி, பின்னணி இசை, ஒலி சேர்க்கப்போகிறோம் என்பதால் அதில் குறைந்த பட்சமாக ‘நீரோஸ்மார்ட்’டோ, ‘வின்மூவிமேக்கரோ’ இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு காமிரா. நம்மிடம் இருக்கும் சொம்பை ‘H3’ யில் போட்டோதான் புடிக்கமுடியும் என்பதால் எப்பிடியாவது ஆட்டையைப் போட்டு நண்பரிடமிருந்து ஒரு நல்ல ‘மூவிகேமை’ பத்து நாளைக்கு இரவல் வாங்கிவிடுங்கள். குறிப்பாக உங்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் சக ஊழியர்களை விசாரித்தால் தண்டத்துக்கு வாங்கி பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதை படம்பிடித்துவிட்டு தூசியடைய போட்டிருப்பார்கள். எதற்கு என்று கேட்டால் ஏதாவது சொல்லி சமாளியுங்கள். உண்மையைச்சொன்னால் அவர்களுக்கும் நடிக்க சான்ஸ் கொடுக்கவேண்டியது நேரலாம்.

பார்ட்னர் : நடிகர்கள் தவிர பெரும்பாலும் கூட்டம் சேர்க்காதீர்கள். ஒரே ஒருவரை மட்டும் அசிஸ்டெண்டாக வைத்துக்கொள்வது நலம். உங்கள் நெருங்கிய நண்பராக (மேலே கம்ப்யூட்டருக்கு நாடினோமே அவராக இருந்தால் நலம்) கொஞ்சம் சமோசா, டீ, செலவு பாராதவராக பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி ஒண்ணும் திரைக்கதை அறிவோ, ஆர்வமோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இருந்தால் நீங்கள் அசிஸ்டெண்டாக மாறிவிடக்கூடிய ஆபத்திருக்கிறது. ஆனாலும் அவருடனும் அவ்வப்போது கதைவிவாதம் பண்ணுங்கள். நம்மைவிட உருப்படியான யோசனைகள் வந்தாலும் வரலாம்.

கதை : உண்மையிலேயே இந்த ஏரியா மிகவும் சிக்கலானது. உங்கள் மனதில் உங்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நீங்காத கதை இருக்கும். அது வேண்டாம், அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். எப்படியாவது குப்புறப்படுத்து யோசித்தாவது ஒரு கதையை பிடித்துவிடுங்கள். வேறு யாரிடமும் நாம் காண்பிக்கப்போவதில்லை என்பதால் ஏதாவது பழைய எழுத்தாளர்களின் கதையை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பாருங்கள் அவர்கள் கதையை நாம் எடுத்துமுடித்திருக்கும்போது நமக்கே குற்ற உணர்ச்சி வந்துவிடக்கூடாது. டிவியிலிருந்தோ, வார இதழ்களிலிருந்தோ சுடலாம் என்று பார்த்தால் அதைவிட நீங்கள் யோசித்துவைத்திருப்பதே நல்ல கதையாக தோணும்.

கதையை முடிவு செய்யும் முன்னர் நான் கூறும் விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஹீரோ பிளைட்டில் இருந்து இறங்கி, பென்ஸ் காரில் கிளம்பி வீட்டுக்குப்போகிறார் என்பது போல காட்சிகள் இருக்கக்கூடாது. பட்ஜெட் தாங்காது. அதற்காக பஸ்ஸில் போகிறார் என்பதாகவும் வேண்டாம். அது முன்னதைவிடவும் ரொம்பக்கஷ்டம். காதல் கதையாக இருந்தால் நடிக்க ஆள் கிடைப்பது ரொம்ப கஷ்டம். இல்லை உங்கள்/அல்லது நண்பரின் காதலி இருக்கிறார் என்றால் அவரின் அழகு உங்கள் கதைக்கு போதுமானதா என்பது சிக்கலாகிவிடும். மேலும் நீங்களோ, உங்கள் நண்பரோ ஹீரோவாக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும். நமது பிரதான குறிக்கோள் இயக்கமே தவிர நடிப்பது அல்ல, ஏனெனில் அது எவ்வளவு சிரமம் என்பதை நீங்கள் அறிவீர்கள். உதாரணத்துக்கு ஏதாவது விஷால் படத்தைப் பார்த்துக்கொள்ளவும். கவனம், அதைப்பார்த்து நாமும் நடித்தால் என்ன என்ற தைரியம் வந்துவிடக்கூடாது. பெரும்பாலும் ஆண்களும், தேவைப்பட்டால் குழந்தைகளும் வருவது போன்ற, மொத்தத்தில் நான்கைந்து கேரக்டர்கள் கொண்ட ஒரு கதையை அமைத்துக்கொள்ளுங்கள். இவ்வளவு கண்டிஷன் போட்டதால் பெரும்பாலும் கமர்ஷியல் கதையாக இல்லாமல், ஒரு ஆர்ட் பிலிம் ரேஞ்சுக்கு கதை வந்திருக்கும். ஒருவழியாக கதை முடிவு செய்தபின்னர் நண்பருடன் அமர்ந்து திரைக்கதை எழுதுங்கள். அதற்கும் முன்னதாக சில வெற்றிபெற்ற திரைப்படங்களின் திரைக்கதைப்புத்தகங்களை வாசித்துவிடாதீர்கள். பிறகு திரைக்கதை என்றால் என்ன என்ற பெருத்த சந்தேகம் வந்து விட்டால் கதை கந்தலாகிவிடும்.. அதோடு வசனங்களையும் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

லொக்கேஷன் : பெரும்பாலும் உங்கள் வீடு, தோட்டம்(இருந்தால்), மொட்டைமாடி, அதிகபட்சம் உங்கள் தெரு இதற்குள்ளாகவே கதை நிகழும்படி பார்த்துக்கொள்ளுங்கள். மகாபலிபுரத்தில் சில காட்சிகள் வைத்துக்கொள்ளலாம். ஒரே நாளில் அந்தப்பகுதியை ஷூட்டிங் முடித்து வந்திடலாம் என குறுக்கு வழியில் சிந்திக்காதீர்கள். பின்னால் மேலும் இரண்டு தடவை போக வேண்டி வந்து பிராஜக்ட் பாதியிலேயே நின்று வருத்தப்படும்படி ஆகிவிடும்.

நடிப்பு : நான் சொல்லும் முன்னரே நண்பர்களையோ, உறவினர்களையோ அரை நாள்தான், ஒருநாள்தான் என்று கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க வைத்திருப்பீர்கள்.. நமக்கும் அவர்களை விட்டால் வேறு கதியில்லை என்றாலும் ரொம்ப இறங்கிப்போக வேண்டியதில்லை. முதலிலேயே 'கொஞ்சம் கோபப்படுங்கள், சோகமாக இருங்கள்' என்று நடிக்கச்சொல்லி சாம்பிள் பார்த்துவிடுங்கள். இல்லையென்றால் பின்னர் சிக்கலாகிவிடும். கொஞ்ச காட்சிகள் லாங் ஷாட்டில் ஒப்பேற்றிவைத்திருப்பீர்கள், பின்னர் குளோஸப் வரும்போது சொதப்பி, பாலாவைப்போல வேறு நடிகரைப் போட்டு ரீஷூட் பண்ண வேண்டியநிலை வந்துவிடும். கதையெல்லாம் அவர்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. சொன்னால் ஓடிவிடக்கூடும். ஆகவே சொன்னதைச்செய்தால் போதும் என்று ஸ்ட்ரிக்ட் ஆன இயக்குனர் போல நடந்துகொள்ளுங்கள். குழந்தைகள் சினிமாவில் அழகாக நடிப்பதைப்பார்த்திருப்பீர்கள். நிஜத்தில் அது ரொம்ப கஷ்டம், படுத்திவிடுவார்கள். ஆகவே குழந்தை காரெக்டர் கதையில் இருந்தால் ஜாக்கிரதை.

ஷூட்டிங் : எல்லாம் தயாராகிவிட்டதால் அடுத்து ஷூட்டிங்தான்..

(ரிப்பீட்டு போடுகையில் எல்லா பாகங்களையுமா போடமுடியும்.? பிச்சுடப்போறாங்க.. இது பிடிச்சிருந்ததுன்னா நீங்களே போய் மற்றதையும் படிச்சுக்கங்க..)

பாகம் 2 , பாகம் 3.

.

24 comments:

ஆயில்யன் said...

//குறிப்பாக உங்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் சக ஊழியர்களை விசாரித்தால் தண்டத்துக்கு வாங்கி பிள்ளையின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதை படம்பிடித்துவிட்டு தூசியடைய போட்டிருப்பார்கள்//

டெக்னிகலா தகவல்கள் நிறைய சேகரிச்சிருக்கீங்க!

குறும்படம் எடுப்பதற்கான நிறைய உழைப்பு பிரதிபலிக்கிறது! :)

Software Engineer said...

அன்பு பதிவாளரே - முதல் முறையாக மூன்று பதிவுகள் போட்டு இருக்கிறேன். தயவு செய்து பார்த்து கமெண்ட் போடவும்!
http://kaniporikanavugal.blogspot.com/ மிக்க நன்றி!

Cable Sankar said...

அவ்வள்வு ஆணியா..? :((

சுசி said...

நன்றி ஆதி.

Anonymous said...

//ஆகவே குழந்தை காரெக்டர் கதையில் இருந்தால் ஜாக்கிரதை.//

சுபா கிட்ட பட்ட அனுபவமொ :)

வவ்வால் said...

Stamp size photo eduthu vachiruken atha kurum padamnu sollikalama?

Cellphone camerala kurumpadam edukalamnu irukken , appadi edutha oscar awardku anupalama?

sriram said...

நீங்க சொல்ற மாதிரியெல்லாம் செஞ்சு படம் எடுத்தா, உலகத் தொல்லைகாட்சிகளிலேயே முதன் முறையாகன்னு சன் டிவி யில போடுவாங்களா ஆதி???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ILA(@)இளா said...

நல்லா வாயில வருது...

நாய்க்குட்டி மனசு said...

குழந்தைகள் சினிமாவில் அழகாக நடிப்பதைப்பார்த்திருப்பீர்கள். நிஜத்தில் அது ரொம்ப கஷ்டம், படுத்திவிடுவார்கள்.//
அனுபவம் பேசுகிறது.

கார்க்கி said...

அண்னே, எந்த ஒரு க்லைஞனுக்கு அவனது முதல் படைப்பே மாஸ்டர் பீசாக அமைவது வரம். அந்த வகையில்..

ஹிஹிஹிஹிஹி

புன்னகை said...

//உதாரணத்துக்கு ஏதாவது விஷால் படத்தைப் பார்த்துக்கொள்ளவும். கவனம், அதைப்பார்த்து நாமும் நடித்தால் என்ன என்ற தைரியம் வந்துவிடக்கூடாது.//
ஆதி டச்! :-)

குசும்பன் said...

இதெல்லாம் ஒரு பொழப்பு! இந்த பொழப்புக்கு என்னை படம் புடிச்சு பதிவில் போட்டு கடைய நடத்தலாம்!:)))

Rajakamal said...

நீங்கள் சொன்ன விதம் மிகவும் நகைசுவையாக இருந்தது, அதோட உங்க அப்ரோச் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

KVR said...

//இதெல்லாம் ஒரு பொழப்பு! இந்த பொழப்புக்கு என்னை படம் புடிச்சு பதிவில் போட்டு கடைய நடத்தலாம்!:)))//

கடைக்கு வர்ற ஒண்ணு ரெண்டு பேரும் வராமப் போகவா?

பரிசல்காரன் said...

அற்புதமான ஒரு பதிவு என்பது பதிவின் ஆரம்ப வார்த்தையிலேயே தெரிகிறது.

ஹி..ஹி...ஹி...

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆயில்யன், சாப்ட்வேர் (முதலில் நல்ல பெயரா வைத்துக்கொள்ளுங்கள் ஸார்), கேபிள், சுசி, அம்மிணி, வவ்வால், ஸ்ரீராம் (கண்டிப்பா), இளா, நாய்க்குட்டி, கார்க்கி, புன்னகை, குசும்பன், ராஜ்கமல், கேவிஆறர்..

நன்றி.

தராசு said...

ஆஆஆஆஆஆஆஆஆணி அதிகமோ?????

Mahesh said...

ஒவ்வொரு ரெண்டாம் இடுகையும் மீள் இடுகை... ஏங்க இதுக்கெல்லாம் காலாவதி தேத் கிடையாதா?

☼ வெயிலான் said...

மூத்த வழக்கறிஞர்..... :)

Karthik said...

இந்த இயக்குனர்கள் தொல்லை..:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

தராசு, வெயிலான், மகேஷ், கார்த்திக்.. நன்றி.

sinhacity said...

வலையுலகில் இன்றைய டாப் இருபது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

puthiyavanprakash said...

சார் இது உண்மைலேய் எனக்கு வழிகாட்டிய இருதுச்சு\ இனியும் இருக்கணும்
வாழ்த்துக்கள்

Suresh Ginger said...

வணக்கம் நண்பரே , என் பெயர் சுரேஷ்.
உங்கள் ப்ளாக் அருமை.
என் குறும்படம் அடுப்பது எப்படி என்பதை விளக்கும் வீடியோவை ,
உங்கள் ப்ளாக்கில் இடம் பெற செய்ய கோரி ஒரு அன்பு வேண்டூகொள் .
நன்றி. உங்கள் ப்ளாக் பணி தொடர என் வாழ்த்துக்கள்

http://www.youtube.com/watch?v=xWvV2Bn4S1Q