Monday, June 14, 2010

எதிர் திசையில் பயணிக்கும் பெஞ்சமின்

ஒவ்வொரு காலகட்டங்களிலும் இது போல விபரீதங்கள் நிகழத்தான் செய்கின்றன. குனிஞ்சு மண்ணெடுக்க முடியாமல் கிட்டத்தட்ட வெண்பூ போல தொப்பை வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதால் அலுவலக நண்பர்கள் போனவாரம் குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு ஆஃபீஸ் ஜிம்முக்குள் கொண்டு போய்விட்டனர். அந்த மெஷினரிஸுடன் அவர்கள் மல்லுக்கட்டுவதைப் பார்த்தே எனக்கு வியர்த்துவழிந்தது. சுயமாக ஆர்வத்தை உண்டுபண்ணிக்கொள்ள புதிய விளையாட்டுச் சப்பாத்துகளெல்லாம் (குசும்பன் கவனிக்க.. சப்பாத்தி இல்ல, சப்பாத்து) கூட வாங்கப்பட்டுள்ளது. மெதுவாக மேல் வலிக்காமல் டேபிள் டென்னிஸில் துவங்கியிருக்கிறேன். பார்ப்போம் இது எத்தனை நாளைக்கு என்று.. ஏற்கனவே நமது 'நாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்' பதிவைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். முதல் நாள் சக்ஸஸ்ஃபுல்லாக விளையாடியதால் அதைக்கொண்டாட தாம்பரம் அஞ்சப்பர் போய் சிக்கன் டிக்கோ, மட்டன் கபோப், பிரிங் ரோல், டக்கீலோ என கட்டு கட்டு என கட்டியது இங்கு தேவையில்லாத விஷயம் என நினைக்கிறேன்.

*******************

சுபாவை ப்ரிகேஜி சேர்க்க அப்ளிகேஷன் வாங்கப்போனேன். அப்போது பிள்ளை ப்ளேஸ்கூல் போறானா என்று கேள்வி வந்தது. இப்போதே இரண்டரை வயதுதான் ஆகிறது. இன்னும் ஒன்று, இரண்டு எல்லாமே ட்ரஸில்தான் போய்க்கொண்டிருக்கிறான். இந்த அழகில் ப்ரிகேஜிக்கும் முன்னதாக ப்ளேஸ்கூல் என்றால் எந்த வயதில்தான் ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள் இவர்கள்? நான் வேறு எல்கேஜி, யுகேஜிக்கு முன்னதாக இருப்பதால் ப்ரிகேஜிதான் ப்ளேஸ்கூலும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

*******************

banjaminbuttonart

The Curious Case of Benjamin Button.. பழுத்த கிழமாக பிறக்கும் ஒரு குழந்தை வளர வளர ரிவர்ஸில் இளமையை நோக்கி பயணித்து சிறுவனாகி குழந்தையாகி இறக்கிறது. மிக வித்தியாசமான அல்லது அபத்தமான கதைகளை அல்லது சிந்தனைகளைக் கூட, இந்த ஹாலிவுட்காரர்கள் மக்கள் ஏற்பார்களா இல்லையா என்றெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல் படமாக எடுக்க இறங்கிவிடுகிறார்கள். ஆனால் அதையும் அதற்குரிய லாஜிக்குகளுடன், உணர்வைத்தொடுமளவு சிறப்பாக எடுக்க அவர்களால்தான் முடிகிறது. இளமையை நோக்கி வளரும் பெஞ்சமின் காரக்டரில் பிராட் பிட் (Brad Pitt) வியப்பூட்டுகிறார். அவர் முதியவராக இருக்கையில் சின்னஞ்சிறுமியாய் சந்திக்கும் டெய்ஸியுடன், அவரவர் நடுவயதில் காதலாகி இணைகின்றார். பின்னர் சிறிது காலத்தில் சிக்கல் கருதி பெஞ்சமின் பிரிந்து செல்கிறார். பின்னர் சில வருடங்களில் டெய்ஸி நாற்பதைக் கடந்திருக்க, ஒரு முறை டெய்ஸியையும் குழந்தையையும் பார்த்துச்செல்ல மிக இளைஞராய் (இருபதுகளைப் போல) பெஞ்சமின் வரும் காட்சி அனைத்திலும் உச்சம். பிராட் பிட்டை விடவும் டெய்ஸியாக வரும் கேட் பிளான்ஷெ (Cate blanchett) ஒருபடி மேல் எனுமளவு அவரது 20 வயதிலிருந்து 40 வயது வரையான காட்சியமைப்புகளில் நடிப்பில் பிரமிக்கவைக்கிறார். மேக் அப் கேட்கவும் வேண்டுமா? படம் ஆர்ட், மேக் அப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது. அதானே.. இல்லையென்றால்தான் ஆச்சரியப்படவேண்டும்.

*********************

கொஞ்ச நாட்களாக அர்ச்சனை ரொம்ப ஓவராக போய்க்கொண்டிருந்ததால் வம்படியாக இன்டெர்நெட்டை மூடிவைத்துவிட்டு இந்த சனி, ஞாயிறு ரமாவுக்கு ஹெல்ப் பண்ணியே தீருவது என்று இருந்தேன். ஒட்டடை அடித்தல், .:பிரிட்ஜ் கிளீன் செய்தல், குழாய் அடைப்புகளை சரிசெய்தல், .:பேன் கழற்றி மாட்டுதல் என வேலைகள் பென்ட் நிமிர்ந்தன. அடுத்து வேண்டாத வேலையாக இன்றைக்கு நான் சமைக்கிறேன் பார் என்று இன்னொரு பதிவுலக நண்பர் தந்த ஒரு ரெஸிபியைத் முயற்சித்தேன். வந்தது வினை. அடுக்களை இரண்டானது ஒருபுறமிருக்க ரெஸிபியில் ஏதோ கோளாறாகி அரிசி முதலான அனைத்தும் வீணானது இரண்டாம் புறமிருக்க, மீண்டும் அவர் சமைத்து சாப்பிட ஆகிவிட்ட தாமதத்தில் அவர் ஏதோ சொல்ல நான் ஏதோ சொல்ல தகராறு வளர்ந்து வாய்ச்சண்டையாகி பிறகு கத்திச்சண்டை வரை போய்விட்டது. ஒழுக்கமாக இண்டெர்நெட்டிலாவது உட்கார்ந்து தொலைத்திருக்கலாம்.

.

28 comments:

அன்பரசன் said...

//தகராறு வளர்ந்து வாய்ச்சண்டையாகி பிறகு கத்திச்சண்டை வரை போய்விட்டது. ஒழுக்கமாக இண்டெர்நெட்டிலாவது உட்கார்ந்து தொலைத்திருக்கலாம்.//

புலம்பல்கள் பயங்கரம் போங்க.

ILA(@)இளா said...

//தகராறு வளர்ந்து வாய்ச்சண்டையாகி பிறகு கத்திச்சண்டை வரை போய்விட்டது.//
அவுங்க கத்திப் பேச நீங்க, கையில கத்தி எடுத்துகிட்டு ”பேசாம இரும்மா, இல்லையானா குத்திக்குவேன்”னு கத்திய காட்டி மிரட்டியிருப்பீங்க. அதானே? அதானே கத்திச்சண்டைன்னு சொல்ல வர்றீங்க?

தமிழ் பிரியன் said...

2 1\2 தானே ஆகுது.. அதற்குள் என்ன அவசரம்.. கொஞ்சம் நாள் ஆகட்டுமே.

அப்புறம் சண்டை பெரிசோ? எப்படியும் பாதிப்பு உங்களுக்காத் தான் இருந்திருக்கும்.. ;-)) அடி பலமோ?

பாலா said...

இப்போ வலி எப்படி இருக்கு? ? குறைஞ்சுருக்கா இல்ல ???@@$

நிலாரசிகன் said...

அன்புள்ள ஆதி,

இன்று மாலைதான் உங்களை நினைத்துக்கொண்டிருந்தேன். வெகு நாட்களாய் உங்கள் வலைப்பக்கம் வர இயலாமல் போயிற்று. இன்று வந்து,வாசித்தேன்.
மொழியாளுமை - எல்லோருக்கும் கைகூடாது. நீங்கள் மொழியாளுமை மிக்கவர். படைப்பிலக்கியத்தில் அதிக ஆர்வம் கொள்ள வேண்டுமென்பது என் விருப்பம். ஒரு மிகச்சிறந்த சிறுகதையாளனை மொக்கை(உங்கள் ஸ்டைலில்)களில் இழந்துவிடலாகாது.
புரிந்துகொள்வீர்கள் என்றெண்ணுகிறேன்.
எப்போதும் நட்புடன்,
நிலாரசிகன்.

நிலாரசிகன் said...

For comments follow up :)

shrek said...

Hi Aadhi, Thats blanche(like -blan-itch-)+ ett

good post btw.

shortfilmindia.com said...

எழுத்தாளர் ஆதி.. வாழ்க..

பேசாம.. ரெஸிபி சொன்னவர் வீட்டிலேர்ந்துபார்சல் வாங்கி வந்திருக்கலாம்.

sriram said...

//ஒரு ரெஸிபியைத் முயற்சித்தேன்.//

ஏன் இந்த வேண்டாத வேலை??
நீங்க பேட்டி எடுத்தாலும் பிரச்சனை ஆகுது, சமைச்சாலும் பிரச்சனை ஆகுது, உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஆதி???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சுசி said...

//இளமையை நோக்கி வளரும் பெஞ்சமின் காரக்டரில் பிராட் பிட் (Brad Pitt) வியப்பூட்டுகிறார். //

நானும் பார்த்து வியந்தேன்.

அத்திரி said...

//ஒழுக்கமாக இண்டெர்நெட்டிலாவது உட்கார்ந்து தொலைத்திருக்கலாம். //

அதுக்குத்தாம்ணே நமக்கு தெரிஞ்ச வேலைய செஞ்சாலே போதும்..எதுக்கு இந்த ரிஸ்க்??

Mahesh said...

தொர இங்கிலீஸ் படமெல்லாம் பாக்குது........

இதயும் படிங்க http://thuklak.blogspot.com/2009/04/blog-post_13.html

கத்திச்சண்டையா... கத்தி கத்தி சண்டையா??

பரிசல்காரன் said...

படம் பார்க்கத் தூண்டும் விமர்சனம்.

நாய்க்குட்டி மனசு said...

கடைசி வரி ரமா சொன்னது உங்களுக்கு கேட்டுருச்சா?

தராசு said...

யாருங்க இது எதிர் திசையில் பயணிக்கிறது. எங்கயோ கேட்ட பெயர் மாதிரி இருக்கே.

அப்புறம் அந்த கத்தி சண்டை எப்படி தலைவா, அடுத்த பதிவு கத்தி சண்டை போடுவது எப்படின்னு எழுதப் போறீங்களா??

புதுகைத் தென்றல் said...

சீக்கிரம் நல்லபடியாக உடற்பயிற்சி செய்ய வாழ்த்துக்கள்.

ப்ளேஸ்கூல் என்பது பிள்ளைகள் வீட்டைவிட்டு வந்து கொஞ்சம் செட்டிலாகி விளையாட்டு, அதிலேயே சில கற்றுக்கொள்ளல்கள் எல்லாம் கற்கும் இடம். இப்படி சென்ற பிள்ளைகளுக்கு வகுப்பில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் கைவந்த கலையாக இருக்கும்.

கடைசி பாரா படிக்கும்போது நீங்க பட்ட கஷ்டம், திட்டுனா வாங்கினா எப்படி இருந்திருக்கும் எல்லா கற்பனை செஞ்சு படிச்சேன். :))
(ரசிச்சேன்னு சொல்லலை)

புதுகைத் தென்றல் said...

”பேசாம இரும்மா, இல்லையானா குத்திக்குவேன்”னு கத்திய காட்டி மிரட்டியிருப்பீங்க. அதானே? அதானே கத்திச்சண்டைன்னு சொல்ல வர்றீங்க?//

ஹா ஹா ஹா ஹா

அன்புடன் அருணா said...

உங்க சமையல் அனுபவம் கலக்கல்ஸ்!

கார்க்கி said...

அண்ணே... நீங்க ”மூன்”னாண்ணே???

அமுதா கிருஷ்ணா said...

ஓ அது தான் அன்னைக்கு ஸ்கூலுக்கு கையில் கட்டோடு போனீங்களா??

ஷர்புதீன் said...

அர்னால்ட் ஆதி !!!
எனகென்னவோ நிலாரசீகன் உங்களின் "அந்த" பேட்டியை மனதில் வைத்து உசுப்பெத்துகிறார் என்று தோன்றுகிறது

இப்படிக்கு
எதையாவது எதுவோடுவாவது ஒப்பிட்டு குழப்புவோர் சங்கம்

Anonymous said...

ரங்க்ஸ் கிட்ட அடிக்கடி நான் சொல்ற டயலாக்
" உதவி செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருங்க "

ரமா கிட்டயும் சொல்லி வையுங்க :)

அறிவிலி said...

//Mahesh June 15, 2010 7:00 AM தொர இங்கிலீஸ் படமெல்லாம் பாக்குது........

இதயும் படிங்க http://thuklak.blogspot.com/2009/04/blog-post_13.html//

லொள்ளு பண்ணிப்புட்டு,வெளம்பர தட்டி வேற வெச்சுருக்காரு பாருங்களேன்.

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... நல்ல அனுபவப் பகிர்வு. நீங்க சமையலறையில் இப்படியெல்லாம் செய்வீங்கன்னு தெரிஞ்சு தான் நான் யோகியை எப்போவும் கிச்சனுக்குள்ள விடுறதில்லை. ரமா பாவம்.

ஹுஸைனம்மா said...

/இப்போதே இரண்டரை வயதுதான் ஆகிறது. இன்னும் ஒன்று, இரண்டு எல்லாமே ட்ரஸில்தான் போய்க்கொண்டிருக்கிறான்.//

இரண்டரை வயசுலேயே நீங்க ஏன் ஸ்கூல் தேடி போறீங்க?

//இந்த அழகில் ப்ரிகேஜிக்கும் முன்னதாக ப்ளேஸ்கூல் என்றால் எந்த வயதில்தான் ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார்கள் இவர்கள்?//

அப்புறம் இப்படியும் புலம்பிக்கிறீங்க!!

4 வயதில்தான் எல்.கே.ஜி.யில் சேர்க்க வேண்டும். 3 வயதில், (அவசியப்பட்டால் மட்டும்) ப்ரீ.கே.ஜி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அன்பரசன்.

நன்றி இளா. (வாய்ச்சண்டைன்னா பக்கத்து வீட்டுக்கு கேக்குற மாதிரி போடுறது. கத்தி சண்டைன்னா பக்கத்து தெருவுக்கே கேக்குற மாதிரி போடுறது. இது தெரியாதா.? ஹிஹி..)

நன்றி தமிழ்பிரியன். (பிரி போகாம எல்கேஜி அனுப்பலாம்னு ஆசைதான். சேப்பாங்களாமா?)

நன்றி நிலா. (நாளைக்கு போடலாம்னு ஒரு கதை எழுதி வச்சிருக்கேன். இப்போ இதை வேற சொல்லிட்டிங்களா? ஊரே சிரிக்கப்போவுது. Jokes apart. டானிக் பின்னூட்டம். நன்றி.)

நன்றி ஷ்ரெக். (பெயர்ச்சொல்தானே.. விட்டுத்தள்ளுங்க.. இருப்பினும் திருத்திட்டேன்)

நன்றி கேபிள்.

நன்றி ஸ்ரீராம். (ஆமாங்க :-()

நன்றி சுசி.

நன்றி அத்திரி.

நன்றி மகேஷ்.

நன்றி பரிசல்.

நன்றி நாய்க்குட்டி.

நன்றி தராசு.

நன்றி தென்றல். (நமக்கொரு கஷ்டம்னா உங்களுக்கு சிரிப்பு பொத்துக்குமே)

நன்றி அருணா.

நன்றி கார்க்கி. (ஏன் இந்த பொறாமை? ஒருத்தர் நம்பள நல்லதா சொல்லிடப்பிடாதே)

நன்றி அமுதா.

நன்றி ஷர்புதீன். (விளங்குச்சு)

நன்றி அம்மிணி.

நன்றி அறிவிலி.

நன்றி விக்னேஷ்வரி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஹுஸைனம்மா. (டவுட் 1 : பிரிகேஜி போகாமல் எல்கேஜியில் சேத்துப்பாங்களா? டவுட் 2 : 3ன்னா அடுத்த ஜூனில் வயது மூன்றரை ஆயிடுமே. நடுவில் நவம்பரில் ப்ரிகேஜி சேத்துப்பாங்களா?)

புதுகைத் தென்றல் said...

நடுவில் நவம்பரில் ப்ரிகேஜி சேத்துப்பாங்களா//

அதுக்கும் முன்னாடி விஜயதசமின்னு ஒரு பண்டிகை வரும். அன்னைக்கும் சேத்துக்குவாங்க ஃப்ரெண்ட்