Thursday, June 17, 2010

ஸாரி, திவ்யா.!

ந்த நேரமும் போனும் கையுமாக என்பதை விட குறுஞ்செய்தியும் கையுமாக என்றால் சரியாக இருக்கும், இது ஷ்யாம்ஷண்முகத்தின் அடையாளம் எனலாம். வேலை நேரத்தில் கலாய்ப்பும், கலகலப்பாகவும் இருக்கும் அந்த டீமின் முக்கியமான ஆள். ரொம்பக் கவனமான ஆள்தான் எனினும் அவனுடைய திவ்யாவுக்குப் போகவேண்டிய ஒரு குறுஞ்செய்தியை அவசரத்தில் டீமின் இன்னொரு நபர் ஜெய்க்குத் தவறுதலாக அனுப்பியதில் வந்தது வினை. எதிர்பாராத நேரத்தில் எலி சிக்கியது பொறியில் என்பதாக ஆகிவிட்டது ஷ்யாமின் நிலை.

யாரு திவ்யா? என்ன வயசு? எந்த ஊரு? எங்க வேலை? ஸ்டூடண்டா? எந்த காலெஜு? அத்தை பெண்ணா? இல்ல ஓமனப்பெண்ணா? ரெண்டு பேருக்கும் இடையில் என்ன கசமுசா?  இவ்ளோ நாள் விஷயத்தை மறைச்சதுக்கு என்ன காரணம்? ஏன் திருட்டுத்தனம்? எல்லாம் ஓகேன்னா எப்போ ட்ரீட்? இரண்டு நாட்களாக இதே பேச்சுதான். டீ பிரேக், லஞ்ச் பிரேக், ஷட்டில் டைம்.. ஏன்.. மீட்டிங்கில் கூட சைலண்ட் டிஸ்கஷனாக இந்த டாபிக்தான் ஓடிக்கொண்டிருந்தது.

ஷ்யாம் ஒரு வழியாகியிருந்தான். முக்கியத் தடயமாக அந்த குறுஞ்செய்தி இருந்தது.

‘Really I’m Sorry for the Yesterday’s issue Divu’

அப்படி என்ன இஷ்யூ? அது முதலில் தெரியணும். மண்டை வெடித்துவிடும் போலிருந்தது ஜெய்க்கு. கூடவே பாண்டியன், மாதவ், அஜய், உமா என அனைவரும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருக்க ஷ்யாமுக்கு உண்மையைச் சொல்வதைத் தவிர வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.

வெளச்சேரி ஷ்யாம் தங்கியிருக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனரின் பெண். ‘ஹேய்ய்.. ஓமனப் பெண்ணேதானா.?’ அதெல்லாமில்லை. சென்னை ஆட்கள்தான். ஆக்ஸென்ச்சர். ‘ஹேய்ய்.. ஓமனா போலாரிஸ், திவ்யா ஆக்ஸென்ச்சரா? டேய் இதுக்குதான் உன் ரூமில் வேறு யாரையும் சேத்துக்கலியா.?' எவ்ளோ நாளா போயிக்கிட்டிருக்குது?’ இப்ப ஒரு ஆறு மாசமாத்தான், வீட்ல சொல்லத்தான் நாள் பார்த்துக்கிட்டிருக்கேன். அவங்களும் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருக்காங்க, சரியா இருக்கும். ‘ஹேய்ய்.. ட்ரீட்டு ட்ரீட்டு..’

‘ட்ரீட்டு இருக்கட்டும் ஒரு பக்கம், அதை சண்டே பாத்துக்கலாம். நேத்திக்கு என்ன பிரச்சினை அதச்சொல்லு முதல்ல? நடந்தது என்ன? குற்றம்..’

பாண்டியன் கேட்டுக்கொண்டிருக்க ஏதோ நினைவிலிருந்த ஜெய் கேட்டான், ‘அப்புறம் என்ன ஆச்சு?’

ஷ்யாம் நேற்று மாலை அறைக்கு மாடியேறிச் செல்லும் போதே கவனித்துவிட்டான், கீழே வீட்டில் யாருமேயில்லை. பூட்டியிருந்தது. ஏற்கனவே திவ்யா சொன்னது போல அவளது பேரண்ட்ஸ் கோவை போயிருக்காங்க.. இவன் மேலே சென்ற அடுத்த அரைமணிக்கெல்லாம் வெளிகேட்டின் கதவுகள் திறப்பதும் திவ்யாவின் ஸ்கூட்டி உள்ளே வரும் சத்தத்தையும் கேட்டான். ஏனோ உள்ளே குறுகுறுப்பு துவங்கியது. அடுத்த பத்தாவது நிமிடம் ஷ்யாம் டிஷர்ட், ஷார்ட்ஸில் கீழே வந்தான். ‘திவூ’ என்றவாறே ஹாலில் காலை வைக்கவும் திவ்யா பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு ஃபிரெஷ்ஷாகி வருவதற்கும் சரியாக இருந்தது.

அப்போதுதான் குளித்திருக்க வேண்டும். நீல நிறப் பூக்கள் சிதறியிருந்த கைகளில்லாத வெள்ளை நைட்டியில் ஈரம் ஆங்காங்கே படர்ந்திருந்தது. இன்னும் காயாத கூந்தல் அலைபாயமுடியாமல் தளர்ந்திருந்தது. இளமைத் துள்ளலாக இருந்தாள் திவ்யா. திவ்யாவின் கால்களுக்காகவே அவளை காதலிக்க ஆரம்பித்தோமோ என்ற சந்தேகம் ஷ்யாமுக்கு அவ்வப்போது வரும். இவள் நடக்கிறாளா? மிதக்கிறாளா? பாதத்தின் தோல்நிறமும் கால்களின் தோல்நிறமும் எந்த இடத்தில் கலக்கின்றன என்று தெரியாமலே கலந்திருந்தது. இவ்வளவு அழகான கணுக்கால் பகுதி, மேல் பாதம், விரல்கள் மிகவும் அரிதான ஒன்றுதான். அவள் அருகிலிருந்தால் அவள் காலைத் தொட்டுக்கொண்டு பேசிகொண்டிருப்பான். கால்களிலிருந்து துவங்கிப் பயணித்து மேலே வந்த போது கடுகடுப்பான முகம் இவனைப் பார்த்துக்கொண்டிருந்தது.

‘என்ன.?’

‘சாப்பாடு கிடைக்குமா? இல்ல ஹோட்டலுக்குதான் போகணுமான்னு கேட்க வந்தேன்’

‘என்ன இது புது பழக்கம். நேற்றே சொன்னேன்ல அவங்க இல்லாத ரெண்டு நாளும் மறந்தும் கீழ வரக்கூடாதுன்னு.. ஓடிப்போயிரு..’

‘ஓகே விரட்டாத, போயிடுறேன்.. ஒரே ஒரு நிமிஷம் உன்னைப் பார்த்துட்டுப் போயிடுறேன்’

‘ஒண்ணும் பாத்துக் கிழிக்கவேண்டாம், கிளம்பு முதல்ல..’

மிரட்டும் பெரிய பெரிய கண்கள் இவனை மேலும் கிறக்கியது. அவள் உதட்டழகிற்கு ஒப்பு சொல்ல ஒரு வாழ்வு வேண்டும். பாயிண்டை முன்வைத்தான் ஷ்யாம்.

‘ஒரே ஒரு முத்தம் குடு. போயிடறேன்’

விறுவிறுவென இவனை நோக்கி வந்தவள் எந்த பேரமும் இல்லாமல் தழுவுவதைப்போல நெருங்கி அவன் உதடுகளோடு தன் உதடுகளைப் பதித்தாள். அவளை இடுப்போடு பிடித்து அணைத்தபடியே சோபாவின் அருகிலிருந்த சுவற்றோடு சாய்ந்தான் ஷ்யாம். அடுத்த சில நிமிடங்களில் ஷ்யாமின் நோக்கத்தை, அவனது கைகளும், மூச்சுக்காற்றும் காட்டிக்கொடுத்தன. திவ்யா அவனை பலம்கொண்ட மட்டும் விலக்கித் தள்ளினாள்.

‘திஸிஸ் டூ மச்.. இதுக்குதான் கொஞ்சமும் இடம் குடுக்கக்கூடாதுங்கிறது. இல்லைன்னா இப்பிடித்தான் ஆகும்..’

‘இப்ப என்ன? இதுனால என்ன? நாம எந்த காலத்துல இருக்கோம்? உங்க பாட்டி காலத்துலயா? கல்சுரல் மண்ணாங்கட்டியா? ஒய் நாட்? இல்ல எம்மேல நம்பிக்கையில்லையா?’ ஏமாற்றத்தில் கேள்விகள் கிளம்பின ஷ்யாமிடமிருந்து.

‘உம்மேல நம்பிக்கையில்லாமல்லாம் இல்ல.. அப்பிடியே நீ போய்த் தொலைஞ்சாத்தான் என்ன பண்ணமுடியும்? .:ப்ராடு பையன்கிட்டல்லாம் நியாயம் எதிர்பார்த்துக்கிட்டிருக்க முடியாது என்னால.. போடான்னு போயிக்கிட்டேயிருப்பேன். அப்புறம் இந்த கல்சுரல் மண்ணாங்கட்டி வேற பல விஷயங்கள்ல நான் பாத்தாலும் இந்த விஷயத்துல  கிடையாது. தி ரீஸன் இஸ் வெரி சிம்பிள். செல்ப் கண்ட்ரோல். அதீத ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயத்துக்காக நான் கட்டுப்பாடு சிதறுவேனா என்பது நான் என்னைக் கேட்கும் கேள்வி. அதற்காக முயற்சிக்கிறேன் நான். முடிஞ்சா இன்னும் என்னை டெம்ட் பண்ணாம எனக்கு ஹெல்ப் பண்ணு.. அவ்ளோதான்’

‘ஸாரி திவ்யா..’ இப்போது ஷ்யாம் திவ்யாவுக்கு தந்த முத்தம் சில்லென்றிருந்திருக்கவேண்டும். அதோடு வெளியேறினான்.

ஜெய் கேட்டான், ‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘என்னது நொப்புறம் என்ன ஆச்சு? நான் இன்னும் ஒண்ணும் சொல்லவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள நீங்களா எதுனா கற்பனை பண்ணிக்கிட்டு அப்புறம் என்னாச்சு? இப்புறம் என்னாச்சுன்னா என்ன அர்த்தம்? நேத்து நீங்க நினைக்கிறா மாதிரில்லாம் ஒண்ணும் நடக்கலை. முந்தாநாளு அவ ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு வைக்கச்சொன்னா. மறந்துட்டேன். ஆஃபீஸ் போகும் போது பாதி வழியில ட்ரை ஆகி தள்ளிகிட்டு போகும்படி ஆயிடுச்சாம். அதான் அவ கத்த, நான் கத்தன்னு ஒரு சின்ன சண்டையாகிப்போச்சு. அதுக்குதான் ஸாரி சொல்லி எஸ்ஸெம்மெஸ் பண்ணினேன். போதுமா.?’

ஷ்யாம் முடித்துவிட்டு டீயை சுவாரசியமாக குடிக்க ஆரம்பிக்க, டீமுக்கு கொஞ்சம் சுவாரசியம் கம்மியாக்தான் போயிருக்கும். இல்லையா.?

.

33 comments:

sriram said...

மொக்க கதை ஆதி

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Cable Sankar said...

க்ளைமாக்ஸ்.. ஆதி..

சுசி said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

ஏமாற்றம் டீமுக்கு மட்டுமைல்லை..

இராமசாமி கண்ணண் said...

:-).

புன்னகை தேசம். said...

‘உம்மேல நம்பிக்கையில்லாமல்லாம் இல்ல.. அப்பிடியே நீ போய்த் தொலைஞ்சாத்தான் என்ன பண்ணமுடியும்? .:ப்ராடு பையன்கிட்டல்லாம் நியாயம் எதிர்பார்த்துக்கிட்டிருக்க முடியாது என்னால.. போடான்னு போயிக்கிட்டேயிருப்பேன். . தி ரீஸன் இஸ் வெரி சிம்பிள். செல்ப் கண்ட்ரோல். ]]


அருமை...

Sangkavi said...

நல்லாயிருக்குங்க... .

பரிசல்காரன் said...

நல்லா இருக்கு ஆதி. நடை ரொம்ப மாடர்னா இருக்கு. பத்திரிகைக்கு முயற்சித்திருக்கலாம்.

உலக இலக்கியமெல்லாம் அப்பறம் படைச்சுக்கலாம். இப்படி ஆரம்பிங்க ஃபர்ஸ்ட். ஓகேவா?

நெகடீவ் கமெண்ட்ஸை கண்டுக்காதீங்க. ஆல் த பெஸ்ட்.

ஷர்புதீன் said...

entry
:)

நாய்க்குட்டி மனசு said...

பாதத்தின் தோல்நிறமும் கால்களின் தோல்நிறமும் எந்த இடத்தில் கலக்கின்றன என்று தெரியாமலே கலந்திருந்தது.//
உன்னிப்பான கவனிப்பு. கதை சுவாரஸ்யம் .

LK said...

mokkaa

நாடோடி இலக்கியன் said...

ந‌ல்லாயிருக்கு ஆதி.

ஷ‌ண்முக‌நாத‌னும் வேண்டும் ஷ்யாமும் வேண்டும்.

தராசு said...

பஹூத் அச்சே, பஹூத் அச்சே.

கமால் கர்தியா ஆப்னே.

(நல்லாருக்கு, சூப்பராயிருக்குன்னு சொன்னா, ஏன்யா டெம்பிளேட்டுன்னு திட்டுவீங்க, அதனால தான்)

பாலா அறம்வளர்த்தான் said...

எனக்கு பிடிச்சிருக்கு ஆதி!!! வட்டார வழக்கிலிருந்து வெளியில் வந்து நீங்க எழுதிய கதைகளில் இது பெஸ்ட்.

திருநெல்வேலி கிராமங்களிலிருந்து நீங்கள் வெளியில் வந்தால் கொஞ்சம் நெகட்டிவ் கமெண்ட்டுகள் வரலாம். :-) பரிசலை வழிமொழிகிறேன்.

குசும்பன் said...

//நடை ரொம்ப மாடர்னா இருக்கு. //

ஆங் கத நாயகில் பேண்ட் டீ சர்ட் போட்டு நடந்தா மாடர்னா இருக்கும்..

மடிசார் புடவை கட்டி நடந்தா மடியா இருக்கும்..வாய்யா வா உன்னைதான் தேடிக்கிட்டு இருக்காய்ங்க!

குசும்பன் said...

//திவ்யாவின் கால்களுக்காகவே அவளை காதலிக்க ஆரம்பித்தோமோ என்ற சந்தேகம் ஷ்யாமுக்கு அவ்வப்போது வரும். இவள் நடக்கிறாளா? மிதக்கிறாளா? பாதத்தின் தோல்நிறமும் கால்களின் தோல்நிறமும் எந்த இடத்தில் கலக்கின்றன என்று தெரியாமலே கலந்திருந்தது. இவ்வளவு அழகான கணுக்கால் பகுதி, மேல் பாதம், விரல்கள் மிகவும் அரிதான ஒன்றுதான்//

கால் விரல்களிலேயே தேங்கிவிடாமல் நீங்கள் கடக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது மிஸ்டர்.ஆதி

இவன் சிவன் said...

தல... அருமையான கதை சொல்லல்... கொஞ்சம் நவீனமான முயற்சி.... உங்களோட எழுத்தை தொடர்ந்து படிச்சிகிட்டே வரேன்... நிறைய எழுத வாழ்த்துக்கள்!!!

Sabarinathan Arthanari said...

//அதீத ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயத்துக்காக நான் கட்டுப்பாடு சிதறுவேனா என்பது நான் என்னைக் கேட்கும் கேள்வி. அதற்காக முயற்சிக்கிறேன் நான். முடிஞ்சா இன்னும் என்னை டெம்ட் பண்ணாம எனக்கு ஹெல்ப் பண்ணு.. அவ்ளோதான்/

ரொம்ப நல்லா இருக்குங்க

Shanmugam said...

நல்லா இருய்யா நீ..

Karthik said...

ஷ்யாம்ஷண்முகம். மணிரத்னம் பட ஹீரோ பேர் மாதிரி இருக்கு. (குரு மாதவன் - ஷ்யாம் சரவணன்) இதை குறும்படமா எடுப்பீங்களா? :)

சாந்தப்பன் said...

எல்லா ரொமான்சும் ப‌ண்ணிட்டு, க‌ன‌வா... சே! செம‌ கிளைமேக்ஸ்! அட்டகாச‌ம்!!

// தி ரீஸன் இஸ் வெரி சிம்பிள். செல்ப் கண்ட்ரோல். அதீத ஆர்வத்தைத் தூண்டும் ஒரு விஷயத்துக்காக நான் கட்டுப்பாடு சிதறுவேனா என்பது நான் என்னைக் கேட்கும் கேள்வி. //

முதல் வரி கலக்கல். இரண்டாவது வரி..ஞெ!

இவ்ளோ சுத்த தமிழிலா கம்பியூட்டர் பொண்ணுங்க பேசுறாங்க.. அதுவும் கோபத்தில் இருக்கும் போது!! கொஞ்ச‌ம் நெருட‌ல்.. இந்த‌ இட‌த்தில் தான் க‌தையோட‌ ப்லோ போய், ஆதியோட‌ தமிழார்வ‌ம் வ‌ந்துடுச்சோன்னு தோணுது!

குறை சொல்றேன்னு த‌ப்பா நினைச்சுக்காதீங்க‌!

அமுதா கிருஷ்ணா said...

ம் நல்லாதான் இருக்கு...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீராம். (திட்டுங்க, ஆனா நடுவுலயோ, கடைசியாவோ திட்டுங்க.. ஹிஹி.. முதல்லயே திட்டினீங்கன்னா அடுத்தடுத்து வர்றவங்களும் அதே மூட்ல காய்ச்சிடுவாங்க)

நன்றி கேபிள்.
நன்றி சுசி.
நன்றி இராமசாமி.
நன்றி புன்னகை.
நன்றி சங்கவி.

நன்றி பரிசல். (நான் எப்பம்யா உம்மகிட்ட இலக்கியமெல்லாம் படைக்கப்போறேன்னு சொன்னேன்? அவ்வ்)

நன்றி ஷர்புதீன்.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி எல்கே.

நன்றி இலக்கியன். (பண்ணிடலாம்)

நன்றி தராசு. (ஹிஹி)

நன்றி பாலா. (ஊக்கம்)

நன்றி குசும்பன். (தாக்கம்)

நன்றி இவன்.
நன்றி சபரிநாதன்.
நன்றி சண்முகம்.
நன்றி கார்த்திக்.

நன்றி சாந்தப்பன். (ரெண்டு வார்த்தை தமிழ்ல பேசிட்டா ஒடனே தமிழார்வமா? சமயங்கள்ல சீரியஸா பேசும்போது நானும் அப்பிடித்தான்ங்க பேசுறேன். மத்தவங்களையும் அப்பிடி பேசவெச்சு பார்க்குறதுல ஒரு மகிழ்ச்சி. ஹிஹி)

நன்றி அமுதா.

பா.ராஜாராம் said...

:-))

ஜாலி, ஆதி!

//பத்திரிகைக்கு முயற்சித்திருக்கலாம்//

ஆம்.

கும்க்கி said...

நடை நகரியமா இருக்கு..

(நமக்கெதுக்கு பொல்லாப்பு)

sriram said...

//திட்டுங்க, ஆனா நடுவுலயோ, கடைசியாவோ திட்டுங்க.. ஹிஹி.. முதல்லயே திட்டினீங்கன்னா அடுத்தடுத்து வர்றவங்களும் அதே மூட்ல காய்ச்சிடுவாங்க)//

தோஸ்த்.. எனக்கு பெரிசா விமர்சனமெல்லாம் எழுதத் தெரியாது. கதையோ / திரைப் படமோ என் மனசுக்கு பட்டதை சுருக்கமா சொல்லிடுவேன், அம்புட்டுதேன்..
பின்னூட்டம் போட்டப்புறம்தான் மீ த ஃபர்ஸ்ட்டுன்னு தெரிஞ்சிக்கிட்டேன் (மட்டுறுத்தல இருக்கா இல்லயான்னு மொதல்ல தெரியாது). இனிமே எல்லா கதைக்கும் ”அருமை”ன்னு பின்னூட்டம் போடறேன்னு சொல்ல மாட்டேன் (நீங்களும் விரும்ப மாட்டீங்கன்னு தெரியும்), பிடிக்கலைன்னா பத்து பேர் பின்னூட்டம் போட்டப்புறம் போடறேன்.
டீல் ஓகேவா???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அன்புடன் அருணா said...

நல்ல நடை!

மங்களூர் சிவா said...

/
ஜெய் கேட்டான், ‘அப்புறம் என்ன ஆச்சு?’

‘என்னது நொப்புறம் என்ன ஆச்சு? நான் இன்னும் ஒண்ணும் சொல்லவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள நீங்களா எதுனா கற்பனை பண்ணிக்கிட்டு அப்புறம் என்னாச்சு? இப்புறம் என்னாச்சுன்னா என்ன அர்த்தம்? நேத்து நீங்க நினைக்கிறா மாதிரில்லாம் ஒண்ணும் நடக்கலை. முந்தாநாளு அவ ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு வைக்கச்சொன்னா. மறந்துட்டேன். ஆஃபீஸ் போகும் போது பாதி வழியில ட்ரை ஆகி தள்ளிகிட்டு போகும்படி ஆயிடுச்சாம். அதான் அவ கத்த, நான் கத்தன்னு ஒரு சின்ன சண்டையாகிப்போச்சு. அதுக்குதான் ஸாரி சொல்லி எஸ்ஸெம்மெஸ் பண்ணினேன். போதுமா.?’

ஷ்யாம் முடித்துவிட்டு டீயை சுவாரசியமாக குடிக்க ஆரம்பிக்க, டீமுக்கு கொஞ்சம் சுவாரசியம் கம்மியாக்தான் போயிருக்கும். இல்லையா.?
/

கதை முடிஞ்சதுக்கப்புறம் இந்த மூனு பாரா எதுக்கு???

:))

மங்களூர் சிவா said...

/

கால் விரல்களிலேயே தேங்கிவிடாமல் நீங்கள் கடக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது மிஸ்டர்.ஆதி
/

ரிப்பீட்டு!

உமாஷக்தி said...

பாலா அறம்வளர்த்தான்னு என்னோட ப்ளாக்ல கமெண்ட் பாத்ததும் குழம்பினேன். நம்ம ஊர்தான் பேர்லேயே தெரிஞ்சுது. லிங்க் பாத்து வந்தா தாமிரா எங்கின்ற ஆதி என்கின்ற பாலா புலம்பல்கள், முதல் முத்தம், பின் தொடரும் நிழல்...(என்னுடைய வலைத்தளமும் இணைத்திருப்பதற்கு நன்றி) கலக்குங்க;))

சொல்ல மறந்துட்டேனே...கதை நல்லாயிருக்கு பாலா அறம்வளர்த்தான் தாமிரா ஆதிமூலக்கிருஷ்ணன் ;))

ஆதிமூலகிருஷ்ணன் said...

பாரா,
கும்க்கி,
ஸ்ரீராம் (டீல் ஓகே),
அருணா,

உமாஷக்தி (இதென்ன கூத்து? நான் பாலா இல்லை. எப்பிடி இப்பிடில்லாம் யோசிக்கிறீங்க? ஹிஹி)..

அனைவருக்கும் நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@உமாஷக்தி : பாலா தனக்கென்று பிளாக் வைத்துக்கொள்ளாததும், அவர் ஃபாலோ செய்யும் ஒரே நபர் நானென்பதாலும் நீங்கள் தவறாக புரிந்துகொள்ள ஏதுவாயிற்று என்பது அறிகிறேன். அப்படியாயின் பாலா என்ற பெயரிலேயே என்னை நானே எப்படி பாராட்டிக்கொள்வேன் (காண்க: முந்தின பின்னூட்டம்) என்றாவது யோசித்திருக்கலாம்.. ஹிஹி.. இருவருக்கும் நன்றி.

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்தப் பதிவு என்பார்வையில, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.இந்த இடுகையைச் சேர்த்திருக்கேன்

vinu said...

final touch nacchunu irrunthathu pa