Wednesday, June 9, 2010

ஒற்றைச் சொல் கவிதைகள்

தம்பி இது என்னது?

டுண்டு (துண்டு)

இது?

அம்மா சேல

அது என்னது?

அப்பா சட்ட

இது?

தலானி (தலையணை)

இது?

போவர (போர்வை)

அது?

கன்னானி (கண்ணாடி)

அது?

டீப்ரைட்டு (ட்யூப் லைட்)

இது என்னது?

முக்கு (மூக்கு)

இது?

கண்ணு

இது?

காது

தம்பி காதை அப்பா கடிக்கட்டுமா?

கடிவ்வேண்டா (கடிக்க வேண்டாம்)

டிவி பார்க்க போலாமா? உனக்கு என்ன வைக்கணும்?

சுட்டிட்டீ (சுட்டி டிவி)

உனக்கு என்ன பாட்டு பிடிக்கும்?

அடதா மழதா (அடடா மழைடா)

இது என்னது சொல்லு?

சொல்லும்மா?

சொல்லு தம்பி?

சொல்லு புஸ்தகம். புஸ்தகம்னு சொல்லு.?

எவ்ளோ நேரமா கத்திக்கிட்டிருக்கேன். வர்ற கோவத்துக்கு முதுகுல ரெண்டு போட்டம்னா.. மரியாதையா சொல்லிரு. புஸ்தகம்..

ஆள்காட்டி விரலை உயர்த்தியவாறே சத்தமுச்சு.. (சத்தம் மூச்.!)

அவ்வ்வ்வ்வ்..

.

40 comments:

பரிசல்காரன் said...

மழலைச் சொல்லுக்கு நிகரான கவிதையேது நண்பா?

அனைத்தும் அருமை. அவர்கள் குரலிலேயே படித்தேன் அனைத்தும் ஒரு படித் தேன்.

(உங்காளு ஸ்டைலு...)

ச்சின்னப் பையன் said...

சூப்ரு (சூப்பரு).

ILA(@)இளா said...

நெல்லா இருக்கு

கார்க்கி said...

அவரு சுபா இல்லை.. பாசு..உங்களுக்கே பாஸ்..

sriram said...

ஆதி
அனைத்தையும் ரசித்தேன்..

//உங்காளு ஸ்டைலு// - பரிசல் உங்க உள்குத்தையும் ரசித்தேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பா.ராஜாராம் said...

அப்புறம்! (அற்புதம்) :-)

சுசி said...

ஹஹாஹா.. அந்த பயம் இருக்கட்டும்.

தலைப்புக்கேற்ப கவிதைகள் அத்தனையும் சூப்பர்.

வானம்பாடிகள் said...

//ஆள்காட்டி விரலை உயர்த்தியவாறே சத்தமுச்சு.. (சத்தம் மூச்.!)//

:)). எதிர்கால பதிவருக்கு கட்டைவிரல் உயர்த்த சொல்லி குடுங்க பாஸ்:))

பிரதீபா said...

ஹா ஹா.. ரொம்பரொம்ப அருமையா இருக்குங்க தலைப்பு. எத்தன கோடி ரூபா குடுத்தாலும் மழலைய கேக்கற சுகத்த ஈடு செஞ்சிட முடியாது. கொஞ்ச நாள்-ல அங்கேர்ந்தும் அடி கிடைக்கும், அதையும் பதிவுல தனி label போட்டு எழுத ஆரம்பிங்க.. :-)

இனியா said...

Good one Aadhi!!!

சத்ரியன் said...

ஆமா ஆதி,

மழலையின் ஒவ்வொருச் ’சொல்’லும் பல கவிதைதள் ’சொல்லும்’.

என்ன பண்றது? பயபுள்ளைகள பயமுறுத்தித்தான் படிக்க வைக்க வேண்டியதா இருக்கு.ஹூம்..!

மணிநரேன் said...

:)

கே.ஆர்.பி.செந்தில் said...

இதுதான் கவிதை .. நகைச்சுவை அல்ல ...

நாய்க்குட்டி மனசு said...

கணினி, வலைப்பூ, பதிவு னு கேட்டிருந்தா டான், டான், னு சொல்றப்போற பிள்ளைகிட்ட போய் புஸ்தகத்தை காட்டினா, போங்க சார், அடிக்க வேண்டியது குழந்தையை இல்ல.

தராசு said...

கடைசில சுபா கிட்டயும் பல்புதானா!!!!!!

குழல் இனிது யாழ் இனிது என்பர்.....

Mahesh said...

அய்... நல்லாக்கு !!!

மகேஷ் : ரசிகன் said...

அழகு.

:))))))

கும்க்கி said...

ஓவ்..

சத்தமுச்சு.

அன்புடன் அருணா said...

தலானி,கன்னாமி....என்னா ஒரு ரைமிங்க்! சூப்பர்!

அமுதா கிருஷ்ணா said...

பாவம் தான் நீங்க அம்மா மாதிரியே குழந்தையும் உங்களை அதட்டுகிறது...

புதுகைத் தென்றல் said...

அழகு

பாவம் தான் நீங்க அம்மா மாதிரியே குழந்தையும் உங்களை அதட்டுகிறது...//
ஆமாம்ல., பாவம் ஃப்ரெண்ட் நீங்க

Karthik said...

:-) :-)

வால்பையன் said...

சிறந்த தமிழன்!

புஸ்தகம் என்பது வடமொழி சொல் என்பதால் சொல்ல மறுக்கிறான்!

கனிமொழி said...

:-)
அழகு.

Phantom Mohan said...

Superb One!

பையன் தீர்க்கதரிசி!

க.பாலாசி said...

//வால்பையன்
சிறந்த தமிழன்!
புஸ்தகம் என்பது வடமொழி சொல் என்பதால் சொல்ல மறுக்கிறான்!//

:-)

//வர்ற கோவத்துக்கு முதுகுல ரெண்டு போட்டம்னா..//

நல்லாதான போயிட்டிருந்துச்சு...

முரளிகுமார் பத்மநாபன் said...

அண்ணே, சூப்பரு...
ஆமா அந்த பச்ச புள்ளைய மிரட்டுறமாதிரி என்னபுத்தகத்தை காட்டினிங்க?

:-)

குசும்பன் said...

ஆதி இதில் 16 கேள்வி இருக்கு, திரும்ப ஒரு கெட்ட ஆட்டம் ஆரம்பிக்குமா?

Anonymous said...

அத்தனையும் அழகு. ரசித்தேன் ஆதி

நேசமித்ரன் said...

//குசும்பன் said...
ஆதி இதில் 16 கேள்வி இருக்கு, திரும்ப ஒரு கெட்ட ஆட்டம் ஆரம்பிக்குமா?
//

எப்பிடி இதெல்லாம்

அவ்வ்வ்வ்

மறுபடியும் முதல்ல இருந்தா ...


இடுகை சூப்ப்ராக்கு !

கண்ணகி said...

உங்க பையன் ரொம்ப சுட்டி...

ஷர்புதீன் said...

குறைந்த பட்சம் இருபது பின்னூட்டமாவது வரணும்தானே ., இப்பவே முப்பத தாண்டிடுச்சி... ஆகவே இனி நான் உங்க சைட்ட பார்க்கும் பொழுது இருபதுக்கு மேல இருந்தா டி குடிக்க போவேன் என்று இதன் மூலம் தெரிவித்து கொ'ல்'கிறேன்

ஷர்புதீன் said...

குசும்பன் அவர்களுக்கு கருட புராண தண்டனை கொடுக்கு மாறு ஆதி அவர்களை கேட்டுகொ'ல்'கிறேன்

Cable Sankar said...

அதான் கவிதைன்னு சொல்லிட்டீங்க இல்ல.. அப்புறம் பிராக்கெட்டுல விளக்கம் எதுக்கு..?:)

Saravana Kumar MSK said...

மறுபடியும் பேட்டியா??

Saravana Kumar MSK said...

பதிவு கலக்கல்.. :)

// அமுதா கிருஷ்ணா said...
பாவம் தான் நீங்க அம்மா மாதிரியே குழந்தையும் உங்களை அதட்டுகிறது...//

//Cable Sankar said...
அதான் கவிதைன்னு சொல்லிட்டீங்க இல்ல.. அப்புறம் பிராக்கெட்டுல விளக்கம் எதுக்கு..?:)//

ரிப்பீட்டு..

நாடோடி இலக்கியன் said...

ம‌ழ‌லை ம‌ழைல‌ ர‌சித்து ந‌னைந்தேன்

நாடோடி இலக்கியன் said...
This comment has been removed by the author.
ஆதிமூலகிருஷ்ணன் said...

பரிசல், ச்சின்னவர், இளா, கார்க்கி, ஸ்ரீராம், பாரா, சுசி, வானம்பாடிகள், பிரதீபா, இனியா, சத்ரியன், நரேன், செந்தில், நாய்க்குட்டி, தராசு, மகேஷ், ரசிகன், கும்க்கி, அருணா, அமுதா, தென்றல், கார்த்திக், வால், கனிமொழி, மோகன், பாலாசி, முரளி, குசும்பன், அம்மிணி, நேசமித்திரன், கண்ணகி, ஷர்புதீன், கேபிள், சரவணா, இலக்கியன்..

அனைவருக்கும் நன்றி.

ILA(@)இளா said...

சிபஎபா உங்கள் பதிவை நான் இணைத்திருக்கிறேன்