Thursday, June 24, 2010

பல்பு வாங்க மறக்காதீங்க..

அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தேன். காலையிலிருந்தே ஒரு விஷயத்தை நினைவுக்குக் கொண்டுவர தீவிரமாக முயற்சித்தும் நினைவுக்கு வராமல் படுத்திக்கொண்டிருந்தது. அது மூன்று நாட்களுக்கு முன்னால் ரமாவும் நானும் எந்த விஷயத்துக்காக சண்டை போட்டுக்கொண்டோம் என்பதுதான். இரண்டு நாட்களாக அவருடன் பேசவில்லை. இரண்டு நாட்கள் பேசவில்லை என்றாலே இந்தக் காதல் எங்கேதான் ஒளிந்திருக்குமோ டப்பென்று பூக்கத் துவங்கிவிடுகிறது. நான் அடுக்களைக்குள் எட்டிப்பார்ப்பதும், அவர் புரிந்துகொண்டு சாப்பாடு கொண்டு வந்து டக்கென்று வைப்பதும் ரெண்டு நாட்களுக்கு மேல் சகிக்காது. ஆனால் எதற்கு சண்டை போட்டோம் என்பது தெரிந்தால்தானே பேச்சைத்துவங்க வசதியாக இருக்கும். ஒரு தடவை இரண்டு தடவை சண்டை போட்டாலல்லவா காரணம் ஞாபகமிருப்பதற்கு. இந்த மறதியினால் இது போன்ற சில சிக்கல்களும் இருக்கத்தான் செய்கின்றன. ம்ஹூம்.. நினைவுக்கு வரவில்லை.

பேசவேண்டும் என்று முடிவு செய்தாயிற்று. அதற்கு மேல் என்ன இருக்கிறது? இதை விட எத்தனையோ கொலைவெறி சம்பவங்களையே கடந்துவந்திருக்கிறோம். இதிலென்ன காரணம் பெரிதாக இருந்துவிடப்போகிறது? காலையில் பேப்பரை கீழிருந்து எடுத்து வரும்போதே ரமா காதில் விழும்படி புலம்பலை ஆரம்பித்துவிட்டேன்.

பேப்பரை எடுத்து வந்ததற்காக, "எல்லா வேலையும் நாமே செய்யவேண்டியிருக்கிறது, ஹும்.. யாரிருக்கா இந்த வீட்டில்.?"

ரிமோட்டை கட்டிலுக்கு அடியிலிருந்து தேடியெடுத்துவிட்டு, "இந்த வீட்டில் யாருக்கு பொறுப்பிருக்கிறது. ஒரு பொருளும் இருக்கவேண்டிய இடத்தில் இருக்காதே.."

சுபா, நடு வீட்டில் ஒன் பாத்ரூம் போய் வைத்திருந்தமைக்கு மேட்டை எடுத்துப்போட்டுவிட்டு, "கிளீனிங் வேலையைக் கூட நாமதான் பாக்குறோம். யாரு நம்மை ரெஸ்பெக்ட் பண்றா இந்த வீட்டில்?"

பாதி குளித்துக் கொண்டிருக்கும்போது பாத்ரூமில் தண்ணீர் போய்விட மோட்டர் போடச் சொல்வதற்காக டுபாக்கூராக கத்தினேன், "அய்யய்யோ யாராவது காப்பாத்துங்களேன், சோப்பு கண்ணு எரியுதே.."

கிளம்பிய பின்னர் மேஜையிலிருந்த ஓட்ஸ் கஞ்சியைப் பார்த்தபடி, "ஹூம்.. டெய்லி கஞ்சிதானா? ஒரு டிபன் பண்ணித்தரக்கூட நாதியில்லை.."

இதிலெல்லாம் ஒரு ரிஸ்க் இருக்கிறது. ஏதாவது ஒன்றில் அவர் கடுப்பாகிவிட்டால் மீண்டும் ஒரு போர்க்களம் காணவேண்டியது வரலாம். அல்லது ஏதாவது ஒரு கமெண்டிற்காக 'களுக்'கென சிரித்துவிட்டால் ஆட்டம் ஓவர், ராசியாகிவிடலாம். ஆகவே கவனமாகவே கமெண்டுகளை அடித்துக்கொண்டிருந்தேன். சுபா இப்போதுதான், பெயர்ச் சொற்களைத்தாண்டி வினைச்சொற்களையும் பேசத்துவங்கியிருக்கிறான். அந்த ஆர்வத்தில்,

தலையணையில் இருந்து தரையில் குதித்துவிட்டு, "அப்பா.. குடிச்சுட்டேன்.."

அதிலேயே கொஞ்சம் தடுமாறிவிட்டால், "அப்பா.. டொம்னு உழுன்டுட்டேன்.."

டம்ளர் தண்ணீரை கொட்டிவிட்டு, "அப்பா.. தண்ணி கொட்டிட்டேன்.."

சேரில் ஏறிவிட்டு, "அப்பா.. ஏறிட்டேன்.."

ஃபிரிட்ஜை வம்படியாக திறந்து மூடிவிட்டு, "அம்..ப்பா.. மூடிட்டேன்.." (வழக்கம் போல அம்மா என்று ஆரம்பித்து, உடனே ரியலைஸ் செய்துகொண்டு வருவதுதான்.. அம்..ப்பா.)

மீண்டும் தலையணை, "அப்பா.. டொம்னு உழுன்டுட்டேன்.."

அவன் விழுந்ததற்கு சத்தமாக சிரிக்கவேண்டும். "ஓஓஓவ்வ்.. தம்பி டொம்னு உழுந்துட்டான்.." என்று ஒவ்வொரு முறை விழும் போதும் சத்தமாகச் சொல்லிக்கொண்டு சிரிக்கவேண்டும். அவனும் கண்ணில் நீர் வர சிரித்துவிட்டு மீண்டும் தலையணையிலிருந்து குதிக்க தயாராவான்.

இவ்வாறாக அவனுக்கும் கம்பெனி கொடுத்துக்கொண்டு ரமாவுடனும் வம்பு வளர்த்துக்கொண்டிருந்தேன்.

கடைசியாக அயர்ன் செய்த சட்டைகள் ஏதுமில்லாமல் அவசரமாக ஒரு சட்டையை அயர்ன் செய்துகொண்டு, "என்ன அநியாயம்? ஒரு அயர்ன் பண்ணித்தரக்கூட ஆளில்லையா? இல்லைன்னா முன்னாடியே சொல்லித்தொலைக்கலாம் இல்லையா.. இப்போ ஆஃபீஸ்க்கு டைமாயிடுச்சே.?"

பட்சி வலையில் விழுந்தது. "முதலிலேயே சொல்லியிருந்தா அயர்ன் பண்ணிக்கிழிச்சுட்டுதான் மறுவேலை பாப்பீங்களா? இல்லைன்னா ஆஃபீஸ்க்குதான் டெய்லியும் டைமுக்கு போய்க்கிழிக்கிறீங்களா.?"

பதிலை யோசித்துக்கொண்டு அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டிருந்ததில் அவர் சிரித்துவிட நானும் சிரிக்க சுபாவும் ஹிஹுஹிஹு என்று சிரிக்க பிரச்சினை தீர்ந்து சுபமானது சூழல். கிளம்பியபின் கிடைத்த வாசல் முத்தம் ஒரு போனஸ்.

******

(ஹேப்பி எண்டிங் தேவைப்படுவோர் அதோடு முடித்துக்கொள்ளவும்.)

தி ரியல் கிளைமாக்ஸ் :

முத்தத்துக்குப் பின் வண்டியை ஸ்டார்ட் செய்ததும் அவர் சொன்னது, "வரும் போது மொளகாப்பொடி, தோசைமாவு, ஆப்பிள் பழம், ஐஸ்கிரீம், நைட் லாம்ப், பீடியாஷ்யூர் வாங்கிட்டு வந்துடுங்க, எதையாவது மறந்துடாதீங்க.. அப்படியே சீக்கிரம் வந்துடுங்க, ஹாஸ்பிடல் போகணும்.."

"டமால்.."

(ஒரு கடைக்குப்போவதே எரிச்சல் கிளப்பும் ஒரு செயல். சொல்லப்பட்டுள்ள பொருட்களை வாங்க எத்தனைக் கடைகளுக்குப் போகவேண்டும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். எச்சரிக்கைச் செய்வது என் கடமை. அப்புறம் உங்கள் இஷ்டம்.)

.

40 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

ரியல் கிளைமாக்ஸ் எல்லோர் வீட்டிலும் நடப்பதுதானே அண்ணாச்சி

சுசி said...

ஹஹாஹா..

எதுக்கு சண்டை போட்டோம்கிறது உங்களுக்கு மறந்திருக்கலாம். ரமாவுக்கு நினைவிருக்கும்.

//ஆகவே கவனமாகவே கமெண்டுகளை அடித்துக்கொண்டிருந்தேன். //

இப்டி என்னவர் ரிஸ்க் எடுக்கிறப்போ என் அக்காவுக்கு ஃபோன் பண்ணி சொல்வேன்.. அத எதுக்கு இங்க சொல்ணும்.. என் பதிவில சொல்லிக்கிறேன்.

பதிலுக்கு பாயிண்ட் எடுத்து குடுத்தத்துக்கு நன்றி ஆதி.

வானம்பாடிகள் said...

இதுக்கு சட்டையேயில்லாம ஆஃபீஸ் போயிருக்கலாம்:))

ஷர்புதீன் said...

:)

தமிழ் பிரியன் said...

இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில் சகஜமய்யா... ;-))

இராமசாமி கண்ணண் said...

//இதுக்கு சட்டையேயில்லாம ஆஃபீஸ் போயிருக்கலாம்:)) //

ரிப்பிட்டு.

sriram said...

நீங்க உங்க தங்க்ஸ் கிட்ட இதுவரை வாங்கின பல்புகளை சென்னை மாநகராட்சிகிட்ட கொடுத்தா ஒரு வருட பல்பு வாஙகும் செலவு மிச்சமாவும் போலிருக்கே

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பரிசல்காரன் said...

செமயான ஃபார்ம் தலைவரே!

மின்னுது மின்னல் said...

::))

டம்பி மேவீ said...

"வரும் போது மொளகாப்பொடி, தோசைமாவு, ஆப்பிள் பழம், ஐஸ்கிரீம், நைட் லாம்ப், பீடியாஷ்யூர் வாங்கிட்டு வந்துடுங்க, எதையாவது மறந்துடாதீங்க.. அப்படியே சீக்கிரம் வந்துடுங்க, ஹாஸ்பிடல் போகணும்.."

சமுதாயத்தில் ஒரு இலக்கியவாதியை யாருமே புரிந்து கொள்வதில்லை .....

பிரதீபா said...

// ஓட்ஸ் கஞ்சியைப் பார்த்தபடி, "ஹூம்.. டெய்லி கஞ்சிதானா? //

எங்கூட்டுலேயும் காலைல காஞ்சி தானுங்கோவ் !! ரங்கமணியோட விருப்பம். அதனால புலம்பல் தங்கமணி கிட்டிருந்து வரும் :-)

மனுஷன் எத்தன சம்பாதிச்சு என்ன புண்ணியம், வகை வகையா சோறு தின்ன முடியுதா? ஊர்ல எங்க டையட் பத்தி சொன்னா, காச்ச வந்தவங்களாட்டமா கஞ்சியக் குடிச்சுட்டு ரொட்டியத் தின்னுக்கிட்டுங்கறாங்க !! ஹ்ம்ம்..

யாசவி said...

செம செம சூப்பர்

நாய்க்குட்டி மனசு said...

நீங்க ஒரு வகுப்பு எடுக்கலாம் போல இருக்கே . ' சமாதானம் ஆவது எப்படி' வாசல் முத்தம் கொடுத்தது எழுதியது தங்கமணிக்கு தெரியுமா அடுத்த சண்டை ஆரம்பிச்சிடப் போகுது.

தராசு said...

அப்ப எப்பவுமே நீங்கதான் வெள்ளைக் கொடி காட்டுவீங்களா பிரதர்!!!!!

கபிலன் said...

அன்பின் ஆதி...

பரிசலின் புதிய பதிவான "அந்தரங்கம்" - க்கு இப்போதுதான் ஒரு ஆத்திர பின்னூட்டமிட்டேன்.
இங்கே வந்து பார்த்தால்...அடடா...ஒரு இந்தியக் குடும்பத்தை கண் முன் காட்டியிருக்கிறீர்கள்.
சின்னச் சின்ன ஊடல்களில்......வாழ்வின் இனிமை தெரிகிறது.
சுத்திப்போடுங்கள்......உங்கள் குழந்தைக்கும்...உங்களவர்க்கும்......
காலையிலேயே படித்து விட்டேன்.
இப்பொது பின்னூட்டமிடுகிறேன். அமெரிக்க அர்த்தமில்லா இரவு.
என் குழந்தையின், மனைவியின் நினைப்பின் ஏக்கத்தை இன்னும் இன்னும் அதிகப்படுத்திய பதிவுக்கு....
ஹூம்....என்னத்தை சொல்ல....
மறக்காமல் உங்களுக்கும் சுத்திப்போடச் சொல்லுங்கள்...
மறக்காமல் நீங்களும் அதில் சம்பிரதாயமாக துப்புங்கள்....

அன்புடன் ஆதி....அடச் ச்சே....கபிலன்.
(கரோனா படுத்தும் பாடு.....)

ப.செல்வக்குமார் said...

சுவாரசியமான பதிவு .... அருமை ...!!!

அன்புடன் அருணா said...

அட!இதெல்லாம் தெரிந்தே வாங்குற பல்புதானே!

மோகன் குமார் said...

சுவாரஸ்யம்... ஆனா நீங்க எழுதிய பொருட்களில் பல்பு தவிர மற்றவை ரிலையன்ஸ் அல்லது அது போன்ற சூப்பர் மார்க்கட்டில் கிடைக்கும் நண்பா.. ஹவுஸ் பாஸ் சொல்ற பொருட்களை நான் மறப்பதுமில்லை; வாங்காம போவதுமில்லை !!:)

புன்னகை said...

ஹேப்பி எண்டிங் எனக்குப் பிடிக்கலைங்க ஆதி! பின்ன என்ன? ஆதி, ரமா அக்கா கிட்ட கொட்டு வாங்கினா தானே எங்களுக்கு மகிழ்ச்சி? அப்போ தானே இது போல இன்னும் பல பதிவுகள் கிடைக்கும்? நான் அதா சொன்னேங்க! :-)

Mohan said...

வீட்டில் இருக்கும் இவ்வளவு பணிகளுக்கு நடுவில் இலக்கியப் பணியும் ஆற்றும் உங்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது :‍)

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ


ஏற்கனவே நமக்கு சில அனுபவங்கள் இருக்குங்க

இந்த கல்யாணமாகத பசங்கள இன்னும் நல்ல எச்சரிக்கனும்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆதி, சூப்பர்!

Sabarinathan Arthanari said...

:)

அத்திரி said...

மீண்டும் பழைய ஆதி அண்ணன்......................ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் கலக்குங்க

அத்திரி said...

எப்படியண்ணே சண்ட போட்டுட்டு ரெண்டு நாள் தாக்குப்பிடிக்கிறிங்க??? அந்த ரகசியம் எனக்கு மட்டும் சொல்லவும்..................


சுபா குட்டியை கேடதாக கூறவும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உங்களுக்கு ரொம்ப தில்லுதான் தல, நம்ம சண்டையெல்லாம் ஆறு மணிநேரம் கூட தாங்க மாட்டேங்கிது!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி செந்தில்.!

நன்றி சுசி.! (இதில் கூட்டுச்சதி வேறயா?)

நன்றி வானம்பாடிகள்.!
நன்றி ஷர்புதீன்.!
நன்றி தமிழ்.!
நன்றி இராமசாமி.!

நன்றி ஸ்ரீராம்.! (ஹிஹி. பரிசல் திருப்பூர்ல பல்பு கடை வச்சிருக்குறது உங்களுக்கு எப்பிடித் தெரியும்?)

நன்றி பரிசல்.!
நன்றி மின்னல்.!
நன்றி மேவீ.!
நன்றி பிரதீபா.!
நன்றி யாசவி.!
நன்றி நாய்க்குட்டி.!
நன்றி தராசு.!

நன்றி கபிலன்.! (யோவ்.. நான் பல்பு வாங்குறது ஒனக்கு பொறாமையா இருக்கா? இன்னா நக்கல் வுடுறியா? நீயும் சீக்கிரமே இங்க வந்து செட்டிலாயி நிறைய பல்பு வாங்கும்படி சாபம் குடுக்குறேன் :-))

நன்றி அருணா.!
நன்றி செல்வகுமார்.!

நன்றி மோகன்குமார்.! (அலுவலகத்திலிருந்து திரும்பும் வழியில் சூப்பர்மார்கெட் இல்லை)

நன்றி புன்னகை.! (எத்தினி பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி. ஏற்கனவே மண்டை வீங்கிப்போய் கிடக்குது)

நன்றி மோகன்.! (உங்களுக்காக என்னெல்லாம் பண்ணவேண்டியிருக்குது பாத்தீங்களா?)

நன்றி வேலு.!
நன்றி சபரிநாதன்.!
நன்றி அத்திரி.!

நன்றி சுந்தர்ஜி.! (குறிஞ்சிமலரைப் பார்ப்பது போல இருக்குது குருஜி, உங்கள் வரவு)

நன்றி ராம்சாமி.!

Anonymous said...

அருமை. சில சமயம் சண்டை போட்டதே மறந்து போகும். அப்பறமாதான் ஞாபகம் வரும். நம்ம பேசவே கூடாதுன்னு இருந்தோம்னு.
சரி அடுத்த சண்டை வராமயா போகும். பாத்துக்கலாம்னு விட்டுடுவேன் :)

ஸ்ரீவி சிவா said...

ஓபனிங் & முதல் கிளைமாக்ஸ் நல்லாத்தான் இருந்தது. ஆனா எப்பவுமே பினிஷிங்ல ஒரு பீதியை கெளப்பிர்றீங்க பாஸு...

நல்ல பீதி.. நன்றி ஆதி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

:) ரெண்டு பேருக்கும் இடையில் விழுந்து எழுந்திருக்கும் சு.பா. தான் சூப்பர்.

குசும்பன் said...

அவுங்க கல்யாணம் செஞ்சுக்கிட்டதே ஒரு டியூப் லைட்டை அப்பயிருக்கும் பொழுது ஏன் பல்ப் வாங்கிவர சொல்றாங்க?

குசும்பன் said...

பொண்டாட்டி கூட எல்லாம் யாருனாச்சும் சண்டை போட்டுக்கிட்டு பேசாம இருப்பாங்களா பாஸ்?
இப்படி எல்லாம் ஊர் உலகில் நடக்குமா? ரொம்ப ஆச்சர்யமாக இருக்கிறது.

அமுதா கிருஷ்ணா said...

கடைக்கு போய் நாங்க எல்லாம் பல்பு வாங்கணும்..உங்களுக்கு வீட்டிலேயே ஏகப்பட்ட பல்பு கிடைக்குதே..

ஹுஸைனம்மா said...

இன்னும் ஒரு ரெண்டு நாள் ரமாவை நிம்மதியா இருக்க விட்டிருக்கலாம்!! பாவம் ரமா!

vinu said...

chumma solla koodathu nallavea bulp vange irrukkeenga

ஆதிமூலகிருஷ்ணன் said...

அம்மிணி (அதேதான் இங்கேயும்),

ஸ்ரீவி சிவா,

அமித்துஅம்மா (என்ன ரொம்ப நாளா ஆளைக்காணோம்?),

குசும்பன்,

அமுதா,

ஹுஸைனம்மா (வித்தியாசமா இருக்குது :-)),

வினு..

நன்றி அனைவருக்கும்.!!

Saravana Kumar MSK said...

ஹா.. ஹா. ஹா..

செம.. செம.. :)

Saravana Kumar MSK said...

குறிப்பாக..

//சுபா இப்போதுதான், பெயர்ச் சொற்களைத்தாண்டி வினைச்சொற்களையும் பேசத்துவங்கியிருக்கிறான்.//
இந்த வரியிலிருந்து

//அவனும் கண்ணில் நீர் வர சிரித்துவிட்டு மீண்டும் தலையணையிலிருந்து குதிக்க தயாராவான்.//
இந்த வரி வரை, செம கலக்கல்.. செம எழுத்து.. Rocking.. :)

ILA(@)இளா said...

<a href="http://vivasaayi.blogspot.com/2010/06/june-28-2010.html>போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா)</a>, இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.

பா.ராஜாராம் said...

haa..haa..haa..

enjoyed aathi. fantastic!