Monday, June 28, 2010

சில புத்தகங்களும், ஒரு ஊமைச்செந்நாயும்

தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான ‘சீவக சிந்தாமணி’ யை எளிய தமிழில் அதுவும் நாவல் வடிவில் தருவது என்பதை ஒரு அசாத்தியமான பணியாகவே நான் கருதுகிறேன். அதைச் சாதித்திருப்பது நம் சக பதிவர் ராம்சுரேஷ் (அன்புக்குரிய பினாத்தல் சுரேஷ்). தமிழறிஞர்களுக்கு அல்லாது தமிழ் இலக்கியங்களை எட்டாக்கனியாக கருதும் இன்றைய இளைய தலைமுறையினருக்காக என்ற முகப்புடன் ராம் சுரேஷ் செய்திருக்கும் இந்தப் பணிக்கு நம் மனமார்ந்த வாழ்த்துகள்.

Seevakan

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

*****

சினிமாவின் கிரியேடிவ் பக்கத்தின் செய்திகளையே பார்த்தும் படித்தும் வந்திருக்கும் நமக்கு அந்த பிரமாண்டக் கனவுத்தொழிலின் இன்னொரு பக்கமான வியாபார செய்திகள் குறித்த புத்தகம் புதிய அனுபவமாக இருக்கிறது. முன்னர் இதுபோன்ற ஒரு புத்தகம் வந்ததாகத் தெரியவில்லை. தன் வலையில் நீண்டதொரு தொடராகத் தந்த ‘சினிமா வியாபாரத்’தை புத்தகமாக்கியிருக்கிறார் சக பதிவர் சங்கர் நாராயண் (பிரியத்துக்குரிய கேபிள் சங்கர்). அவருக்கு நம் வாழ்த்துகள்.

Cinema Viyabaram

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

*****

தற்போதைய தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் சிறப்புகளை நாம் அறிவோம். அவரை விடவும் ‘பல்கலை வித்தகர்’ என்ற பதத்துக்கு உதாரணமாக வேறொருவர் இருந்துவிட முடியாது. அவரது அத்தனை முகங்களையும் பதித்துவிடுவது ஒரு எளிய காரியம் இல்லை எனினும் தமிழ் சினிமா சார்ந்து அவர் இயங்கிய பகுதியை புத்தகமாக்கியிருக்கிறார் சக  பதிவர் நம் மரியாதைக்குரிய டி.வி.ராதாகிருஷ்ணன். நமது அன்பான வாழ்த்துகள் அவருக்கு உரியதாகட்டும்.

TVR wrapper final

வெளியீடு : நயினார் பதிப்பகம்

*************************

ஊமைச்செந்நாய்

கடைசியாக வாசித்த புத்தகம் ஜெயமோகனின் ஊமைச்செந்நாய். இது ஜெயமோகனின் சிறப்பான சிறுகதைத் தொகுதிகளுள் ஒன்று என நண்பர்கள் பலரும் பிரமித்தது. இது புத்தகம் குறித்த விமர்சனமோ, பகிர்வோ அல்ல. மீள் வாசிப்பிற்கு பின்னர் இயன்றால் அதைச்செய்கிறேன். இப்போது என் பிரமிப்பைப் பதிவு செய்தாக வேண்டும். புத்தகத்தை முடித்ததும் நாமும் அவ்வப்போது சிறுகதை எழுத முயல்கிறோம் என்ற உண்மை முதுகைச் சுரண்டியது. ‘போய்யா.. அதெல்லாம் ஒண்ணும் தப்பில்லை.. அப்புறம் நாங்களும் எப்பதான் எழுதறதாம்..’ என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.

ஊமைச்செந்நாய் என்ற தலைப்புக் கதையை மட்டும் எடுத்துக்கொண்டாலே எத்தனை பிரம்மாண்டம், எத்தனைத் தகவல்கள், எத்தனை உட்செய்திகள், எத்தனை அடர்த்தி, என்ன ஒரு நடை, வாசிப்புக்குப் பின்னால் கிளர்ந்தெழும் தொடர் சிந்தனை, அத்தனையும் விறுவிறுப்புக் குறையாத நடையில். படித்து முடித்தால், எழுத எத்தனை உழைப்பும், பொறுப்பும், திறனும் தேவையென்ற உண்மையும் கொஞ்சம் அதிகமாகவே சுடத்தான் செய்கிறது. என் வீட்டில் ஒரு செஸ் போர்ட் இருக்கிறது. நான் செஸ் விளையாடுகிறேன். விஸ்வநாதன் ஆனந்தும்தான் செஸ் விளையாடுகிறார்.

.

29 comments:

உடன்பிறப்பு said...

ஜெயமோகனையும் வாசிக்கிறீங்க கலைஞரையும் பாராட்டுறீங்க, எப்படிங்க?

கார்த்திகைப் பாண்டியன் said...

பதிவுலக நண்பர்களுக்கு வாழ்த்துகள்..:-)))

”ஊமைச் செந்நாய்” ஜெமோவோட கிளாசிக்.. அதே மாதிரி ஒரு மனுஷனால இத்தனை விவரங்களை சேகரிச்சு எழுத முடியுமான்னு "மத்தகம்” படிச்சு நொந்திருக்கேன் ஆதி... அருமையான புத்தகம்..:-)))

மதுரை சரவணன் said...

பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

sriram said...

//நான் செஸ் விளையாடுகிறேன். விஸ்வநாதன் ஆனந்தும்தான் செஸ் விளையாடுகிறார்.//

என்னாதிது - சின்னப்புள்ளத்தனமா இதுக்கெல்லாம் கவலை பட்டுகிட்டு??
நான் கூடத்தான் பிளாக்கர்னு சொல்லிக்கிட்டுத் திரியறேன் - என்னால உங்கள மாதிரியெல்லாம் எழுத முடியுமா என்ன??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Saravana Kumar MSK said...

புத்தகங்களின் பகிர்வுக்கு நன்றிங்க்னா.. :)

//@sriram

நான் கூடத்தான் பிளாக்கர்னு சொல்லிக்கிட்டுத் திரியறேன் - என்னால உங்கள மாதிரியெல்லாம் எழுத முடியுமா என்ன??//

ரிப்பீட்டு.. :)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் . விமர்சனம் சிறப்பு . பகிர்வுக்கு நன்றி

நேசமித்ரன் said...

சக பதிவர்களுக்கு வாழ்த்துகள்

ம்ம் உங்க ஸ்டைலில் வாசிக்கனும் விமர்சனத்தை ஊமைச் செந்நாய்

எழுதுங்க பாஸ்!!!

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு.

ப்ளங்-ன்னு ஒரு சத்தம் ஆதி. வாசிப்பெல்லாம் முடிஞ்சு போச்சு. பதிவுலகம்தான் இப்ப தீணி.

அழியாச்சுடரில் மீண்டும் மாடன் மோட்சம் வாசித்து, மீண்டும் அதே ப்ளங். பார்த்தா, பிழைச்சுதான் இருக்கேன்.

தராசு said...

ஜெமோ - பிரமிப்புதான்.

சீவக சிந்தாமணி - வாசிக்கணும் தலைவரே.

பகிர்வுக்கு நன்றி. பதிவர்கள்/எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஷங்கர் said...

ஆதி ,
நீங்க மத்தகம் என்ற குறு நாவலை படித்து பாருங்க it is a excellant master piece of jeyamohan i really like it

ஷங்கர் said...

புத்தகம் எழுதிய அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Cable Sankar said...

கடைசி வரி அட்டகாசம்.. ஆதி..

முரளிகண்ணன் said...

சூப்பர் பஞ்ச் ஆதி

ஆதிமூலகிருஷ்ணன் said...

உடன்பிறப்பு,
கார்த்திகைப்பாண்டியன்,
சரவணன்,
ஸ்ரீராம் (ஹிஹி),
MSK,
சங்கர்,
நேசமித்திரன் (இன்னுமா இந்த ஊர் நம்பள நம்புது?),
பாரா,
தராசு,
ஷங்கர்,
கேபிள்,
முரளி..

நன்றி. நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஆதி

முரளிகுமார் பத்மநாபன் said...

நானும் இப்போதான்ணா படிக்கிறேன், ஊமை செந்நாயில் மத்தகம் கூட அப்படித்தான், இல்லையா?

அன்புடன் அருணா said...

/நான் செஸ் விளையாடுகிறேன். விஸ்வநாதன் ஆனந்தும்தான் செஸ் விளையாடுகிறார்./
நானும்தான்!! ஹிஹி!

கார்க்கி said...

ஊமை செந்நாய் குறித்து அந்த லூசு எழுப்பின டவுட்ட இங்க போடலையா பாஸ்????

ஷர்புதீன் said...

உங்களின் இடுக்கையை சாருக்கு அனுப்பிவைக்கவா......?!!!

என் வீட்டில் ஒரு செஸ் போர்ட் இருக்கிறது. நான் செஸ் விளையாடுகிறேன். விஸ்வநாதன் ஆனந்தும்தான் செஸ் விளையாடுகிறார். - cute line....

சுசி said...

முடிவு சூப்பர் ஆதி.

ஈரோடு கதிர் said...

இன்னும் நிறைய புத்தகங்கள் வரட்டும்

அனைவருக்கும் வாழ்த்துகள்

ச.முத்துவேல் said...

சீவக சிந்தாமணி அறிமுகம், எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஜெயமோகன் விசயம். சேம் பிளட்.இன்று அவரோட கன்னியாகுமரி நாவல் முடிச்சேன்.ம். பெருமூச்சுதான்.

Karthik said...

அடுத்து உங்களுதுதானே?

ராம்சுரேஷ் said...

நல்ல அறிமுகங்களுக்கு நன்றி ஆதிமூலகிருஷ்ணன், நன்றி என் புத்தக அறிமுகத்துக்கு மட்டும் இல்லை :-)

அ.வெற்றிவேல் said...

”ஊமைச் செந்நாய்” -ஜெயமோகனின் க்ளாஸிக். நன்றாக எழுதுகிறீர்கள்.. வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

டிவிஆர்,
முரளிகுமார்,
அருணா,
கார்க்கி,
ஷர்புதீன்,
சுசி,
கதிர்,
முத்துவேல்,
கார்த்திக் (கொலவெறி),
ராம்சுரேஷ் (ஹிஹி),
வெற்றிவேல்..

நன்றி.!

Anonymous said...

ஆதி, அதில் மத்தகம்னு ஒரு கதை இருக்கும் படிங்க. அற்புதமான ஒரு கதை. அதைபற்றி நானும் அனுஜன்யாவும் ஒரு நள்ளிரவு முழுதும் பேசிப் பேசி மாய்ந்திருக்கிறோம்.

சுரேகா.. said...

ஆமாங்க! ஊமைச்செந்நாய் பற்றி நீங்க சொன்னது முழுக்க முழுக்க உண்மை!

Mahesh said...

//‘போய்யா.. அதெல்லாம் ஒண்ணும் தப்பில்லை.. அப்புறம் நாங்களும் எப்பதான் எழுதறதாம்..’//

அதானே !!!