Friday, July 9, 2010

மோகம் 30 நாள்

டிஸ்கி : எனக்கே கொஞ்சம் கலவரமாகத்தான் இருக்கிறது. தலைப்பு கொஞ்சம் டூ மச்சாக இருக்கிறதோ? நமக்கு ஒழுங்கா நூறடி ரோட்டிலேயே சலம்பாம நடக்கத்தெரியாது. இந்த லட்சணத்துல கயித்து மேல பயணமா? பார்ப்போம்..


கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
(குறள் : 1092)

என்ன சொல்கிறது வள்ளுவம்? தலைவன் அறியாமல் அவனை விழுங்கும் தலைவியின் சிறு பார்வை மட்டுமே காமத்தின் பாதியளவு கூட இல்லை.. அதை விடவும் பெரிது என்கிறது. வெறும் பார்வைக்கு மட்டுமே இவ்வளவு எனில்.. அடுத்து.. அதற்கடுத்து.. எவ்வளவு பெரிய விஷயம் இது.!

‘இத்தப்போயி எவண்டா 30 நாள்னு சொல்லிக்கினான்? கையில கெடச்சான்னா தாராந்துடுவான் மவனே.?’

‘லூஸ்ல வுடு மாமே.. இதுல வேறெதுனாக் கீதானு பாக்குணும்.. ஏதா பொடி வெச்சி சொல்லிட்டிருப்பானுங்கோ..’ என்று கண்ணன் என்னை அமைதிப்படுத்தினான்.

என்ன இந்த காமம்? 60 வருட வாழ்நாளில் முப்பதே நாட்களில் விடைபெற்றுச் செல்லுமளவில் ஒரு சிறிய விஷயம்தானா.? இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.? நகர மறுக்கும் வருடங்களில் கோரத்தவம் கொண்டது இந்த அற்ப வரத்துக்காகவா.? தெரியாதப் பொருளைத் தெரிந்து கொள்ளும் வரையிருந்த ஆர்வம் தெரிந்ததும் வடிந்துபோவது இதற்கும் பொருந்துமா.? செவி கேட்கும் மொழி வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்க உடல் கேட்கும் மொழிக்கு இவ்வளவு அற்ப ஆயுளா? காதோடு காதாய் கிசுகிசுத்துக் கொண்ட அந்த அற்புதம் வெறும் நீர்க்குமிழிதானா? மோகம் 30 நாள் மட்டும்தானா.?

நேற்று நான் 90யை நெருங்கிக்கொண்டிருந்த போது 270யை தாண்டிக்கொண்டிருந்த கண்ணனின் சொற்பொழிவு இதோ..

‘மாப்ள.. கலியாணம் ஆவுற வரைக்கும் காஞ்சு கெடக்குறோமா? ஆவுதுன்னு வெச்சுக்கோ.. அன்னிக்கிருந்தே கணக்குல வெய்யி.. ஒரு பேச்சுக்கு சொல்லுதேன்.. நுப்பதாவது நாளே உண்டாயிட்டான்னு வெச்சுக்கோ.. போச்சா.. அப்பாலிக்கு டாக்டரு, டெஸ்ட்டுக்குன்னு அலைவியா? அவன் முத மூணு மாசம் வாணாம், கடேசி மூணு மாசம் வாணாம்பானா? நடுவாலிக்கா நீயே பக்கத்துல போக மாட்டியா.. புள்ள பொறந்தப்பொறவு எவுனும் சொல்லாமலே மூணு மாசம் போ மாட்டியா? அப்பாலிக்கா ரெண்டாவுது இப்ப வாணானு அவ சொல்லுவாளா.? அப்போ அதச்செய்யி, இதச்செய்யாத, அதப்பண்ணு, இதப்பண்ணாத ஒரு பெரிய லிஸ்டே இருக்குமா? என்னத்த.. அதுக்குள்ள ரெண்டு வருஷம் ஓடிப்போயிருமா? இன்னொண்ணு பிளான் பண்ணினன்னு வெய்யி அடுத்தால இன்னும் மூணு வருசம் ஓடிருமா? எல்லாம் முடிஞ்சு பாக்கும் போது நீ ஓஞ்சி போயிடுவயா? அது கெடக்குது கழுதன்னு ஆயிப்போயிடுமா? இப்ப கணக்குப் பாரு.. எவ்ளோ நாளு.. அந்த முத நுப்பது நாளுதானே.. அதான் மோகம் நுப்பது நாளு.. அதுனால ‘போனா வராது, விடிஞ்சா இருக்காது.’ கவனமா இருந்துக்கோ.. அப்பயே ஜாலி பண்ணிக்கோன்றேன் நா.. இப்டிதான் நா திங்க் பண்ணிகினுருக்கேன்.. நீ இன்னா சொல்ற.?’

விட்டால் ஆன்மீக உரையைத் தொடரக்கூடும் என்பதால் கைத்தாங்கலாக அவனை படுக்க வைத்துவிட்டு நானும் சோபாவிலேயே சரிந்தேன்..

இவன் கூறும் நாள் கணக்குதான் அந்த பழமொழிக்குப் பொருத்தமாக இருக்கிறது. எனினும் இன்னொரு கோணமும் இருக்கிறது. அது ‘தேவை’ என்ற பசி நோக்கில் மட்டுமே இருக்குமானால் முப்பது நாளென்ன, மூன்றே நாட்களில் கூட வடிந்துபோகலாம். ஆனால் ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே..

kaamam[3]

ரமாவை கனவில் எதிர்பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன்.

.

33 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

நேரமின்மையால் மீண்டுமொரு ரிப்பீட்டு பதிவு.

மேலும் நான்கு நாட்கள் ஊருக்குச் செல்லவிருப்பதால் அடுத்த புதன் வரை கடைக்கு லீவு விடப்படுகிறது. அது வரை போரடிக்காமல் பழைய பதிவுகளைப் படித்து பின்னூட்டங்கள் போட்டு வைக்கவும். :-)

பை பை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஆங்.. சொல்லமறந்துட்டனே.. திருநெல்வேலி பதிவர்கள் யாரையும் இதுவரை சந்தித்ததில்லை. ஆவல் இருக்கிறது. விருப்பமிருப்பவர்கள் தொடர்பு கொள்ளலாம். சந்திப்போம்.

10.07.10 லிருந்து 13.07.10 வரை. முன்பே அழைக்கவும். எண் : 9789066498.

ப்ரியமுடன் வசந்த் said...

கண்ணனின் சொற்பொழிவு விளக்கம் அட்டகாசம்...

தலைவா பி.ப.கள் எல்லாம் மீள்ஸ் போடுவதன் மர்மமென்ன?

sriram said...

நல்லா இருந்தது பிரபலம். மொதோ வாட்டி எழுதின போது மிஸ் பண்ணிட்டேன், மறு வாய்ப்புக்கு நன்றி..

ரமாவின் அருமை தனியா திருநெல்வேலி போனாத் தெரியுமோ??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

தராசு said...

//இந்த லட்சணத்துல கயித்து மேல பயணமா//

சரியாத்தான நடந்திருக்கீரு, அப்புறம் எதுக்கு இந்த தன்னடக்க பில்டப்பு??

Cable Sankar said...

பிரியமுடன் வசந்த், உங்களை பி.ப என்று சொல்லியிருக்கிறார். அது ஒரு கெட்ட வார்த்தையாம் பா.ரா நேற்றுதான் சொன்னார். திட்டுவதற்கான வார்தையாம்.. :)

கார்க்கி said...

தேவையில்லாத பதிவாக தெரிகிறது. சாரி

வால்பையன் said...

அதெல்லாம் சங்ககாலம்!
இது தங்க காலம்!

Sabarinathan Arthanari said...

அனுபவ பகிர்வு (?) மிக நன்றாக இருக்கிறது !

புன்னகை said...

தலைப்பைப் பார்த்ததுமே தெரிஞ்சு போச்சு மீள் பதிவுன்னு... இந்தப் பதிவு சென்ற வருடம் மார்ச் 19ஆம் வந்த பதிவு! சரியா???

புன்னகை said...

//‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’//
அழகான வரிகள் :-)

rk guru said...

பதவு நல்ல இருக்கு...

விக்னேஷ்வரி said...

‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே.. //

அதே தான். கனவு காணுங்கள். வாழ்க்கை இனிக்கும்.

கண்ணகி said...

ஆனால் ‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது. அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே..

இதுதான் உண்மையான காதலின், வெற்றிகரமான வாழ்வின் புரிதல்..

வழிப்போக்கன் said...

//இதற்காகவா இளமை கொப்பளிக்க இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கிறோம்.?//

இப்படிதான் இருக்கோம்

அமுதா கிருஷ்ணா said...

வயதான காலத்தில் என்ன புலம்பல்..

சுசி said...

//‘பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.. பேசிக் கொண்டேயிருக்கலாம்.. என் கனவுகளுக்கான நிஜம் இவள்’ என்று தோன்றும் காதல் பெண்ணுடனான காமத்துக்கு நாட்கணக்கு அற்பமானது.//

அவ்வ்வ்..

//அது வாழ்நாளெல்லாம் தொடரும் அற்புதமே..//

ஆவ்வ்வ்..

ஆதி.. இது ஆ க :))

சுசி said...

//ரமாவை கனவில் எதிர்பார்த்துக் கொண்டே தூங்கிப்போனேன். .//

அச்சோ.. ச்சமத்து..

இன்னமும் நான் இது படிக்கலை.. ரிப்பீட்டுக்கு நன்றிஸ்ஸ்ஸ்..

Anonymous said...

//அமுதா கிருஷ்ணா
July 9, 2010 1:15 PM

வயதான காலத்தில் என்ன புலம்பல்..
//

ஹிஹிஹிஹி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

vanila said...

we want narsim back ...

இதைத்தொடர்ந்து, கம்பர் , தொல்காப்பியர், சேக்கிழார், நக்கீரர், சீத்தலை சாத்தனார்.. தாங்க முடியாது சாமி...

Atleast for this we want Narsim BACK..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

சொற்பொழிவு விளக்கம் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி .

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////Cable Sankar said...
பிரியமுடன் வசந்த், உங்களை பி.ப என்று சொல்லியிருக்கிறார். அது ஒரு கெட்ட வார்த்தையாம் பா.ரா நேற்றுதான் சொன்னார். திட்டுவதற்கான வார்தையாம்.. :)
///////////


அஹா என்ன சொல்றிங்க . கெட்ட வார்த்தையா !

Sakthi Ganesh said...

நண்பர் ஆதி தாமிரா அவர்களே! நீங்கள் தமிழில் ட்விட் செய்பவர் என்பதை அறிந்து மகிழ்ந்தோம்? அதே நேரம் " ட்விட்டரிலும் மொக்கையே ஆட்சி புரிகிறது" என்கிற உங்கள் ஆதங்கத்தையும் படித்து அறிந்தேன். என்ன செய்வது சரியான தகவல்களை விடுத்து , நிறைய நபர்களை பின் தொடர்வதே முக்கியம் என தவறாக கருதுவது கூட அதன் காரணமாக இருக்கலாம். என்னடா ட்விட்டரில் கூறியதற்க்கு இங்கே மறுமொழி கூறுகிறேன் என் நினைக்க வேண்டாம் அங்கே அதற்கான அம்சங்கள் அங்கு இல்லை என்பது தங்களுக்கு தெரிந்ததே!( இதுவும் கூட ட்விட்டரில் மொக்கைகள் மட்டும் பெருகியதற்க்கு காரணம். என் கருத்து மட்டுமே!)

சரி விஷயத்திற்கு வருகிறேன்.உங்களுக்கேன்றே முற்றம்.காம் என்ற பெயரில் முழுக்க தமிழில் ட்விட் செய்யக்கூடிய தளம் இயங்கிவருகிறது. முற்றம்.காம் தமிழுக்கான டுவிட்டர் என்று கூட குறிப்பிடலாம் ஏனென்றால் டுவிட்டர் வலைபின்னலில் உள்ள அத்துனை சிறப்பு அம்சங்களும் இதில் உண்டு. அது மட்டுமல்லாது இதன் வாயிலாக படங்கள்,ஒளித்தடம் அகியவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும். டுவிட்டர் போல் அல்லாது முற்றம் , முழுமையாக தமிழுக்கென்றே ‍ தமிழ் எழுத்துருவில் தகவல்களை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வலைபின்னல் ஆகும்.

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட எனது பதிவினை பாருங்கள்
தமிழர் கருத்துக்களம்


தளத்தினை பயன்படுத்தி பாருங்கள் ,ஏற்புடையதாக இருந்தால் எங்களைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் !. அன்புடன் மு.சக்தி

Anonymous said...

இதெல்லாம் எப்புடி குப்புற படுத்துகினு யோசிச்சதா? சும்மா சொல்லக்கூடாது, வகையான ஆராய்ச்சி.

ஸ்ரீவி சிவா said...

என்னமோ பாஸ்... என்னை விட அனுபவத்தில, வயசுல (பத்து பன்னிரண்டு வயசு கூட இருக்கும்) மூத்தவரு...
நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்.

நல்லா சொல்லியிருக்கீங்க!

ஸ்ரீவி சிவா said...
This comment has been removed by the author.
Karthik said...

ஹிஹி கருத்து சொல்ல க்வாலிபிகேஷன் கம்மிங்ணா. :)

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்சிபஎபா இந்த இடுகைய சேர்த்திருக்கேன்.நன்றி!

தமிழ்ப்பறவை said...

கலக்கலக்கல் பதிவு... ரசித்தேன்...

விக்னேஷ்வரி said...

நானே சிந்திச்சேன்//
ஆஹா, இதை இப்போ தான் பார்த்தேன். கண்ணை சிமிட்டிக்கிட்டு இதை நீங்க சொல்றதா நினைச்சுப் பார்த்தேன். சிப்பு சிப்பா வருது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வசந்த். (ரொம்ப முன்னாடி எழுதி மக்கள்ஸ் கண்டுக்காம விட்ட பதிவுகளை அட்லீஸ்ட் புதுசா வந்தவங்களாவது கண்டுக்கிறாங்களான்னு பார்க்கத்தான் மீள்ஸ் போடுறது :-(

நன்றி ஸ்ரீராம்.
நன்றி தராசு.

நன்றி கேபிள். (அப்ப நீங்க யாராம்?)

நன்றி கார்க்கி.
நன்றி வால்பையன்.
நன்றி சபரிநாதன்.
நன்றி புன்னகை.
நன்றி குரு.
நன்றி விக்கி.
நன்றி கண்ணகி.
நன்றி வழிப்போக்கன்.

நன்றி அமுதா. (அலோ.. என்ன நக்கலா?)

நன்றி சுசி.
நன்றி அம்மிணி.
நன்றி TVR.

நன்றி வனிலா. (நான் குறளை பயன்படுத்தியதற்காக இப்படிச் சொல்கிறீர்களா? நான் குறளுக்கோ, இலக்கியங்களுக்கோ உரை எழுத முயன்றவனுமில்லை, அதற்கான தகுதியும் எனக்கில்லை. ஆனால் எழுத வந்ததிலிருந்தே மேற்கோளுக்காக குறள்களைப் பயன்படுத்தியே வந்திருக்கிறேன். இந்தப்பதிவிலும் அவ்வாறே. நர்சிம்முடன் ஒப்பிட்டு நீங்கள் செய்திருக்கும் கிண்டலை ரசிக்கமுடியவில்லை, ஸாரி. மற்றபடி உங்களைப் போலவே நர்சிம் எழுத வரவேண்டும் என்பது நண்பர்களாகிய எங்கள் விருப்பமும்தான். அதை நாங்கள் மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பதைவிட உங்களை போன்ற வாசகர்களும் மெயிலில் அவருக்குச் சொல்லலாம்)

நன்றி பனித்துளி.

நன்றி சக்தி கணேஷ். (நல்ல முயற்சி, வாழ்த்துகள்)

நன்றி தருமி.
நன்றி ஸ்ரீவி.
நன்றி கார்த்திக்.
நன்றி இளா.
நன்றி தமிழ்பறவை.
நன்றி விக்கி.

Anonymous said...

நேரம் கிடைக்கும்போது படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும்

http://dharoomi.blogspot.com/2010/07/18.html