Sunday, July 4, 2010

டிஸ்கவரி தமிழ்

குறும்படங்கள் எடுத்து ரொம்ப நாட்களாகிறதாகையால் எதையாவது செய்து உங்கள் பொறுமையை சோதிக்கலாம் என்று ஒரு ஐடியா. இந்த சினிமாக்காரர்கள் மாதிரி எல்லா பொறுப்புகளையும் நாமே பார்ப்பதைவிடுத்து, அட்லீஸ்ட் கதையையாவது பிரெஷ்ஷா உன் பிரண்ட்ஸ்கிட்டயிருந்து வாங்குடா.. அப்பதான் ஒரு ப்ரொபஷனல் லுக் கிடைக்கும் என்றான் கண்ணன். சரிதான் என்று நண்பர், பிரபல எழுத்தாளர், சக பதிவர் ஒருவருக்கு போனைப் போட்டேன். ஐயா இந்த மாதிரி, இந்தமாதிரி விஷயம்.. கதை வேணும் என்றேன். சடாரென்று அவர் பதில் தந்தார்.

“எந்த மாதிரி வேணும்? லவ்? ஆக்ஷன்? கிரைம்? காமெடி? இல்லன்னா சமூகத்துக்கு நீதி சொல்லணுமா?”

யோவ்.. இன்னா? எந்த ஸ்டாப்பிங்க்ல இறங்கணும்ங்கிற மாதிரி சமூகத்துக்கு நீதி சொல்றதுல்லாம் அவ்வளவு ஈஸியாப்போச்சா உமக்கு.?

********************

நான் கொஞ்சம் டிவி பைத்தியம். எல்லா தமிழ் டிவிக்களும் சேர்ந்து நல்ல நல்ல நிகழ்ச்சிகளாக போட்டு என்னை டிவி பார்க்கவிடாமல் செய்து காப்பாற்றி வைத்திருந்தார்கள். எப்போதாவது காமெடி சானல்கள் பார்ப்பதோடு சரி. இப்போது புதிதாக ‘டிஸ்கவரி தமிழ்’ பார்க்கத் துவங்கியுள்ளேன். எத்தனை எத்தனை விதமான அறிவியல்பூர்வமான நிகழ்ச்சிகள். முன்னமே பரிச்சயம் எனினும் தமிழில் பார்ப்பது இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது. நிச்சயமாகச் சொல்லலாம், வேறெந்த சானலிலும் இல்லாத அளவில் நிகழ்ச்சியின் தமிழாக்கம் மற்றும் டப்பிங் இருக்கிறது. தமிழ் சானல்களில் கூட இல்லாத அளவில் மிகக்குறைவான ஆங்கிலக்கலப்பில் ஆனால் பேச்சு மொழியில் டப்பிங் கேட்க இதமாக இருக்கிறது.

போலீஸால் தாக்கப்பட்ட ஒரு பெண் தரும் பேட்டி இவ்வாறு டப் செய்யப்பட்டிருக்கிறது, “நான் கூட்டத்திலருந்து ஓரமாத்தான் நின்னுட்டிருந்தேன். ஆனாலும் ஒரு காவலர் பலமா என்னத் தாக்கிட்டாரு, நான் காயம் பட்டு விழுந்துட்டேன். அப்புறம் மருத்துவமனைலதான் கண்விழிச்சேன்”

*********************

அன்பு நண்பர்களே.. நான் நேரமின்மையால் பிளாக் தவிர ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற வேறெந்த பொதுத்தளங்களிலும் இயங்குவதில்லை. டிவிட்டரில் மட்டும் இயங்க முயற்சித்துவருகிறேன். ஆகவே மெயிலுக்கு வரும் பல கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டியதிருக்கிறது. தவறாகக் கொள்ளவேண்டாம்.

*********************

puthagam

பதிவுலகிலிருந்து புத்தகங்கள் வரவு அதிகரித்திருப்பது மகிழ்வான செய்தி. அதில் லேட்டஸ்ட், நண்பர் பழமைபேசியின் “ஊர்ப் பழமை..”. அவருக்கும், அதைப் புத்தகமாக்கிய பதிவர் 'ஆரூர் விசுவநாதனு’க்கும் நம் நல்வாழ்த்துகள். புத்தகத்தின் அட்டைகளை அலங்கரிப்பது நம் PIT குழும நண்பர்களில் ஒருவரான சுரேஷ்பாபுவின் (கருவாயன்) படங்கள். அவருக்கு நம் நன்றிகள். அட்டை உருவாக்கத்துக்கு பெரும்பாலும் எங்கோ நெட்டில் கிடைக்கும் படங்களை எடுத்து முடிந்தவரை போட்டோஷாப் வேலைகளை செய்து பயன்படுத்துகிறோம். அதனால் ஒரிஜினாலிடி இல்லாது போகிறது. பதிலாக PIT கலைஞர்களின், நம் நண்பர்களின் சிறப்பான படைப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம், அவர்கள் அனுமதியுடன். அதற்கு இது ஒரு நல்ல துவக்கமாக அமையட்டும்.

*********************

கல்யாணம் ஆனால் அடுத்து என்ன.? அதேதான். அதை மட்டும் கரெக்டாக செய்துவிடுகிறார்கள். மீரா பிரசவத்துக்காக தாய்வீடு சென்றுவிட்டாள். அம்மா வேறு அக்காவைப் பார்க்க ஊருக்குப் போய்விட்டதால் நீண்ட சுதந்திரத்தில் கண்ணன் அழிச்சாட்டியம் செய்துகொண்டிருக்கிறான். காலை ஒன்பது மணிக்கெல்லாம் SMS வருகிறது.

“ஷேவ் பண்ணி குளிச்சு பிரெஷ்ஷா ரெடியாகியாச்சு? பூஜை சாமான்லாம் ரெடி. ஒவன்ல சிக்கன் 65 பொறிஞ்சிக்கிட்டிருக்கு. எதற்கா? மார்னிங் பூஜைக்குதான். வர்றியா? ஹெஹே..”

*********************

வெகு சமீபத்தில் மணவிழா கண்டிருக்கும் நண்பர் நாடோடி இலக்கியனுக்கு நம் நல்வாழ்த்துகள்.

*********************

ரமா இரண்டு நாட்களாக இடது கன்னத்தில் ஒரு பருவோடு அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறார். அது அவரது பிற பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. நான் பாட்டுக்கு நிம்மதியாக என் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நேற்று அழகாக ஷேவ் செய்துகொண்டு ஆஃபீஸ் கிளப்பிக்கொண்டிருந்தேன். எதற்கோ அருகில் வந்தவர், ஒரு மாதிரியான தொனியில், ‘ஏங்க உங்களுக்கெல்லாம் பருவே வரமாட்டேங்குது.?’

நான் அதிர்ந்தேன். இதிலென்ன அதிர்ச்சி வேண்டியிருக்கிறது என்கிறீர்களா? வார்த்தைகள்தான் அப்படியிருந்தன. அதன் உள்ளர்த்தமாக எனக்குத் தோன்றியது என்ன தெரியுமா? ‘நான் அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கும் போது உங்களுக்கென்ன பளபளப்பு வேண்டிக்கிடக்குது? என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது. இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கும் பரு வந்தாகணும்.!’

.

37 comments:

விக்னேஷ்வரி said...

சமூகத்துக்கு நீதி சொல்றதுல்லாம் அவ்வளவு ஈஸியாப்போச்சா உமக்கு.? //
குறும்படங்கள் எடுத்து மக்களை சோதிக்காதேன்னு நீதி சொன்னா தேவலை. ;)

நான் கொஞ்சம் டிவி பைத்தியம். //
இங்கே டி.வி.ங்குற வார்த்தை தெரியாம வந்திடுச்சோ ஆதி...

மெயிலுக்கு வரும் பல கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டியதிருக்கிறது. தவறாகக் கொள்ளவேண்டாம். //
கொஞ்சம் பிரபலம் ஆகிட்டாலே இப்படித் தான்.

நாடோடி இலக்கியனுக்கு என் வாழ்த்துகளும்.

இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கும் பரு வந்தாகணும். //
ஹிஹிஹி...

தமிழ்ப்பறவை said...

hi...hi...
இது மீள்பதிவா...?
//வெகு சமீபத்தில் மணவிழா காணவிருக்கும் நண்பர் நாடோடி இலக்கியனுக்கு நம் நல்வாழ்த்துகள்.//
அவர் மணவிழா கண்டுவிட்டார் என எண்ணுகிறேன்...

‘பரு’வமே.. புதிய பாடல் பாடு...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

////வெகு சமீபத்தில் மணவிழா காணவிருக்கும் நண்பர் நாடோடி இலக்கியனுக்கு நம் நல்வாழ்த்துகள்.////


வாழ்த்துக்கள் !

சுசி said...

நீங்க மட்டும் என்ன செய்திங்களாம்??

உங்களுக்கு ஒரு விருது கொடுத்திருக்கேன் ஆதி.
(திட்டாம) பெற்றுக் கொண்டு விருதை பெருமைப்படுத்தவும்.

நேசமித்ரன் said...

நல்லத் தொகுப்பு ஆதி !

நண்பருக்கு வாழ்த்துகள்

LK said...

// இன்னும் ரெண்டு நாள்ல உங்களுக்கும் பரு வந்தாகணும்.!’

.//

hehehehe

கார்க்கி said...

//நான் கொஞ்சம் டிவி பைத்தியம். //
இங்கே டி.வி.ங்குற வார்த்தை தெரியாம வந்திடுச்சோ ஆதி...//

aav..ithu en comment..vadai pocha????

//“எந்த மாதிரி வேணும்? லவ்? ஆக்ஷன்? கிரைம்? காமெடி?/

stronga, sakkarai kammiyaa, soodu illaama oru special tea...

தராசு said...

பரு மேட்டர் கலக்கல்.

பழமை பேசிக்கு வாழ்த்துக்கள்.
//
மெயிலுக்கு வரும் பல கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டியதிருக்கிறது. தவறாகக் கொள்ளவேண்டாம். //
கொஞ்சம் பிரபலம் ஆகிட்டாலே இப்படித் தான்.//

ரிப்பீட்டேய்......

ஷர்புதீன் said...

இருபது பின்னூட்டம் வேணும்ன்னு அடம்பிடிப்பீன்களே., இப்ப பாருங்க.,
9

சுரேகா.. said...

கதையில்லாத குறும்படத்துக்கு வெய்ட்டிங்!

நன்றி ! டிஸ்கவரி தமிழில் எனக்கும் ஒரு பங்கு!

பரு! :) எல்லா வூட்லயும் அப்படித்தானா?

குசும்பன் said...

// ‘டிஸ்கவரி தமிழ்’ பார்க்கத் துவங்கியுள்ளேன். //

NDTVக்கு அடுத்து டிஸ்கவரி சேனலிலும் தாங்கள் தோன்ற வாழ்த்துக்கள்! அடுத்து உங்கள் இலக்கு அனிமல் பிளானட்டாக இருக்கட்டும்!:))

குசும்பன் said...

//அன்பு நண்பர்களே.. நான் நேரமின்மையால் பிளாக் தவிர ஃபேஸ்புக், ஆர்குட் போன்ற வேறெந்த பொதுத்தளங்களிலும் இயங்குவதில்லை. //

அறுக்கதெரியாதவன் இடுப்பில் 98 அறுவாலாம்!

வானம்பாடிகள் said...

//நேற்று அழகாக ஷேவ் செய்துகொண்டு ஆஃபீஸ் கிளப்பிக்கொண்டிருந்தேன்.//

ஷேவ் செய்து கொண்டு அழகாகன்னு சொல்லல பாருங்க. அந்த நேர்மைய நான் பாராட்டுறேன்:)

அமுதா கிருஷ்ணா said...

அதானே பரு இல்லாமல் ஒரு முகமா?

மறத்தமிழன் said...

ஆதி,

நீங்க சொல்ர மாதிரி சமூகத்திற்கு மட்டும் நீதி சொல்ல ஆள் ஆளுக்கு கிளம்பிடுராய்ங்க...

டிஸ்கவரி தமிழ் ‍ எந்த மொழியில் கேட்டிருந்தாலும் தாய் மொழியில் கேட்பது
போல் வருமா..

24 மணிநேரத்தை கொஞ்சம் அதிகப்படுத்தினாத்தான் எல்லாத்திலயும் இயங்கமுடியும்..

நண்பர் பழமைபேசி,ஆரூரான்,சுரேஷ்பாபு,நாடோடி இலக்கியன்,குறும்படம் மற்றும் பூஜைக்கும் வாழ்த்துகள்..

கடைசி...உங்க ஏரியா...வழ‌க்..கலக்..

குசும்பன் said...

//ஏங்க உங்களுக்கெல்லாம் பருவே வரமாட்டேங்குது.?’ //

அவுங்களுக்கு நான் சொன்னேன் என்று இந்த ஐடியாவை சொல்லுங்க கடுகு தாளிக்கும் எண்ணெய்யை கொஞ்சமா எடுத்து சூடு செஞ்சு டபுக்க்குன்னு உன் மூஞ்சில் ஊத்த சொல்லிடுங்க, பரு மாதிரி லைட்டா சின்ன சின்ன கொப்பளம் வந்துடும்! கொஞ்சம் சமாதானம் ஆகிடுவாங்க!

rk guru said...

நல்லா பதிவு...வாழ்த்துகள்

புன்னகை said...

குறும்படம் எடுங்க ஆதி வேணாம்னு சொல்லல... ஆனா, பழைய ஹீரோ மட்டும் வேணாம்!!!!! ;-)

Mohan said...

ஏதாவது ஒரு ஒட்டு மரு கன்னத்தில் ரெண்டு நாளைக்கு வைச்சுக்கங்க! ஆனால் சில பேருக்கு உங்கள அடையாளம் தெரியாமல் போயிடுற வாய்ப்பிருக்கு!

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு.

பழமைபேசி, சுரேஷ்பாபு இருவருக்கும் வாழ்த்துக்கள். ஆருரான் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

// பதிலாக PIT கலைஞர்களின், நம் நண்பர்களின் சிறப்பான படைப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம், அவர்கள் அனுமதியுடன். அதற்கு இது ஒரு நல்ல துவக்கமாக அமையட்டும்.//

என் விருப்பமும் அதுவே:)! நல்ல கருத்தை முன் வைத்துள்ளீர்கள்.

அட, இதுதான் அந்த இருபதாவது கமெண்ட்:)! ஷர்புதீன், சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

பரிசல்காரன் said...

PIT குறித்த உங்கள் பத்திக்கு என் வழிமொழிதல்கள்.

விரைவில் குறும்படத்திற்கு நல்ல கதை கிடைக்கட்டும்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி விக்கி. (டேமேஜ் ஜாஸ்தியா இருக்குது. அவ்வ்..)

நன்றி தமிழ்பறவை.
நன்றி பனித்துளி.
நன்றி சுசி.
நன்றி நேசமித்திரன்.
நன்றி LK.
நன்றி கார்க்கி.
நன்றி தராசு.

நன்றி ஷர்புதீன். (நம்பரிங் ரொம்ப பழய மொக்கை. போரிங். அதான் அழிச்சுட்டேன், ஸாரி பாஸ்)

நன்றி சுரேகா. (அனிமல் பிளானட்டுக்கு ஏதாவது புரொகிராம் பண்ண அனுமதி வாங்கித்தருவீங்களா? குசும்பனை பேட்டி எடுத்துத்தரேன்)

நன்றி குசும்பன். (என்ன இருந்தாலும் உங்களை மாதிரி வருமா பாஸ் -மூன்று கமெண்டுக்குமே இது பதில்-)

நன்றி வானம்பாடிகள்.
நன்றி அமுதா.
நன்றி மறத்தமிழன்.
நன்றி குரு.
நன்றி புன்னகை.
நன்றி மோகன்.

நன்றி ராமலக்ஷ்மி.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பரிசல்.! (பாத்தீங்களா பரிசல், கடைசி வரைக்கும் அந்த எழுத்தாளர் நீங்கதான்னு நான் சொல்லவேயில்லைல்ல..)

ஆரூரன் விசுவநாதன் said...

அன்பிற்கு நன்றி ஆதி....

அன்புடன்
ஆரூரன்.

ஈரோடு கதிர் said...

பாரிக்கு வாழ்த்துகள்

|| வானம்பாடிகள் said...
ஷேவ் செய்து கொண்டு அழகாகன்னு சொல்லல பாருங்க. அந்த நேர்மைய நான் பாராட்டுறேன்:) ||

கண்டபடிக்கு ரிப்பீட்டிபை
:)))

அறிவிலி said...

ரெண்டு நாளாச்சு... எனி இம்ப்ரூவ்மெண்ட்?

KKPSK said...

பதிவு பட்டை தல..குசும்பன் கமெண்ட்..அதிலும் அருமை.

உங்களுக்கு மட்டும் அவர் கமெண்ட் ஸ்பெஷல் எப்போவுமே..மணி-க்கான ரஹ்மான மற்றும் வைரமுத்துவின் வரிகள் போல :)

நாடோடி இலக்கியன் said...

வாழ்த்துக‌ளுக்கு ந‌ன்றி ஆதி.

ம‌ண‌விழா க‌ண்டு 10 நாட்க‌ளாச்சு. த‌ங்க‌ளின் ஞாப‌க‌ ச‌க்தியை மெச்சுகிறேன்.
:))))))))))))))))))))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆரூரன்.
நன்றி கதிர்.

நன்றி அறிவிலி. (யோவ்..)

நன்றி . (அவ‌ன் சும்மாவே என்னை கும்முவான். இதில் அவனுக்கு பெஸல் பாராட்டு வேற‌யா.?)

நன்றி இலக்கியன். (ஹிஹி.. ஜாரி பாஸ். திருத்திவிடுகிறேன். ஆனால் ந‌ண்ப‌ரின் அப்டேட் அந்த‌ அழ‌கில் இருக்கிற‌து என்றும் கொள்ள‌லாம் அல்ல‌வா?)

புதுகைத் தென்றல் said...

http://appavithangamani.blogspot.com/2010/07/vs.html

இந்தப் பதிவை கண்டிப்பா படிங்க ஃப்ரெண்ட் :)

Karthik said...

குறும்படம் ஹீரோ ஆடிஷன் எப்போ சார்?

ஆதிமூலகிருஷ்ணன் said...

Test comment.

ஷர்புதீன் said...

//நன்றி ஷர்புதீன். (நம்பரிங் ரொம்ப பழய மொக்கை. போரிங். அதான் அழிச்சுட்டேன், ஸாரி பாஸ்)//

....ஆகவே விடை பெறுகிறேன் http://rasekan.blogspot.com/2010/07/blog-post_06.html

வால்பையன் said...

பரு வரணும், இல்லைனா வரவழைக்கப்படும்!

சி. கருணாகரசு said...

தொகுப்பு... மிக சிறப்பு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

தென்றல், கார்த்திக், வால்பையன், கருணாகரசு.. நன்றி.

காவேரி கணேஷ் said...

உங்களுக்கெல்லாம் வீட்டுல அடி விழாதா?

என்ன நக்கல், என்ன ஒரு நையாண்டி..

சும்மா குற்றால அருவி நீர் போல என்ன ஒரு flow

வாழ்த்துக்கள் பா...