Wednesday, July 14, 2010

யார் கல்யாணம் பண்ணிப்பாங்க.?

விடுமுறையில் போனதில் அலுவலகத்தில் நிறைய வேலைகள் பாக்கி இருந்தன. நேற்று காலையில் அலுவலகம் போய் வேலையில் மூழ்கிய கொஞ்ச நேரத்துக்கெல்லாம் போன் வந்தது கண்ணனிடமிருந்து. எடுத்த எடுப்பிலேயே,

“அறிவு கெட்ட முண்டங்கள், லூசு மண்டையனுங்க, பைத்தியக்கார மடப்பசங்க, மற கழண்டவனுங்க..”

“நீ சொன்ன எல்லாத்துக்கும் ஒரே அர்த்தம்தான், விஷயத்தச் சொல்லுடா.. நிறைய வேலையிருக்குது”

“இவுனுங்க எல்லாம்தான் கல்யாணம் பண்ணிப்பானுங்க..”

“மரியாதையாப் பேசு, நீயும் நானுமே கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கிறோம்”

“அதிலென்னடா சந்தேகம்? நீ ஒரு மாங்கா மண்டையன், நா ஒரு தேங்கா மண்டையன்”

“மெதுவா பேசுடா.. ஏன் கத்துற? ஆபீஸ்ல இருக்கியா? வீட்லயா? மீரா பக்கத்துல இருக்கப்போறா..”

“எவ பக்கத்துல இருந்தா எனக்கென்ன? உண்மையைச் சொல்றதுல என்னடா தயக்கம்? நான் என்ன உன்ன மாதிரி பிளாகரா? நீயும் நானும் லூசுப்பசங்க.. கல்யாணம் பண்ணிக்கிட்டவனுங்க எல்லாரும் லூசுப்பசங்க.. லவ் பண்றவனுங்க அதவிட மோசம்.. என்ன இப்ப? இல்லேன்னுடுவியா நீயி.?”

“நான் எப்ப சொன்னேன் இல்லேன்னு.? எங்கடா இருக்க? காலையிலயே தண்ணி போட்டுருக்கியா?”

“போடா லூசுப்பயலே.. உண்மையைச் சொல்றதுக்கு தண்ணி போடணுமா என்ன?”

“அதச் சொல்லலடா, உண்மையெல்லாம் ரொம்பப் பெரிய விசயம். அதெதுக்கு நமக்குன்னுதான்.?”

“நா அப்பிடித்தான் சொல்லுவேன், இப்ப என்னாங்குறே?”

“இல்லடா.. இப்ப என்ன நடந்துச்சு? அதச் சொல்லாம குதிச்சேன்னா என்ன அர்த்தம்?”

“..த்த்தூ..”

“ஆங்.. இப்பதான் தெரிஞ்சுதா? நீ ரொம்ப லேட்டுடா.. அப்பிடி துப்பிட்டு ஆக வேண்டிய வேலையப் பாரு. சாய்ங்காலம் கால் பண்றேன்.!”

லைனைக் கட் பண்ணிவிட்டு வேலையில் மூழ்கினேன்.

.

21 comments:

இராமசாமி கண்ணண் said...

ஒன்னியும் புரியல.

KKPSK said...

தொடர் தானே? நல்லா இருக்குண்ணே

ஈரோடு கதிர் said...

||உண்மையைச் சொல்றதுக்கு தண்ணி போடணுமா என்ன?||

தண்ணின்னா!!!!!

Saravana Kumar MSK said...

அந்த மனுஷனுக்கு எவ்ளோ அடியோ??

Saravana Kumar MSK said...

//“ஆங்.. இப்பதான் தெரிஞ்சுதா? நீ ரொம்ப லேட்டுடா.. அப்பிடி துப்பிட்டு ஆக வேண்டிய வேலையப் பாரு. சாய்ங்காலம் கால் பண்றேன்.!”//

:)))

தமிழ்ப்பறவை said...

//அறிவு கெட்ட முண்டங்கள், லூசு மண்டையனுங்க, பைத்தியக்கார மடப்பசங்க, மற கழண்டவனுங்க..//
ஏன் உங்களைப் பன்மையல கூப்பிட்டாரு...
மத்தபடி ஒண்ணுமே இல்லாத மேட்டரைக்கூட ரசிக்கும்படி ப்ளாக்கியிருக்கீங்க.குட்...

ப்ரியமுடன் வசந்த் said...

//“நான் எப்ப சொன்னேன் இல்லேன்னு.? எங்கடா இருக்க? காலையிலயே தண்ணி போட்டுருக்கியா?”

“போடா லூசுப்பயலே.. உண்மையைச் சொல்றதுக்கு தண்ணி போடணுமா என்ன?”
//

ரிப்ளை டாப்பு..

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

//
லைனைக் கட் பண்ணிவிட்டு வேலையில் மூழ்கினேன்.
//
அவர் திரும்பவும் கால் பண்ணி திட்டினாரே, அதைப்பத்தி எப்போ எழுதுவீங்க...

rk guru said...

ரொம்ப புலம்பிட்டிங்கலே பதிவாய்.......

டம்பி மேவீ said...

"இராமசாமி கண்ணண் said...

ஒன்னியும் புரியல."

அப்பன்னா கட்டாயம் இது இலக்கிய பதிவாக தானிருக்க வேண்டும் ....


(ஒடுங்க ஒடுங்க ...அது நம்மள நோக்கி வருது)

டம்பி மேவீ said...

"This blog does not allow anonymous comments."

கருத்து சுகந்திரத்துக்கு விடப்பட்ட சவால் ....

ஹி ஹி ஹி ஹி

டம்பி மேவீ said...

நீங்க எப்படி எழுதினாலும் vote விழுதே ....அது எப்படிங்க

கபிலன் said...

இப்படி மறைமுகமாக மனைவியர் குலத்தை அவமதித்த
ஆணாதிக்க ஆதியை வன்மையாக கண்டிக்கும் என் மனைவி சார்பில்...
வருத்தங்களையும்...என் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் மற்றுமோர்...ஆணாதிக்க...

கபிலன்...

தராசு said...

இதுக்கு அடுத்த பாகம் வருமா தல

Thenral said...

Hmmm...Eppadi onnume illadha oru vishayaththa ivlo interesta ezhuduringalo?Atleast avar appadi sonnadhukku kaaranam terinchirunthaalum edho oru meaning irundhirukkum.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராமசாமி.
நன்றி KKPSK.
நன்றி கதிர். (Water.! :-)
நன்றி MSK.
நன்றி தமிழ்ப்பறவை.
நன்றி வசந்த்.
நன்றி வழிப்போக்கன்.
நன்றி குரு.
நன்றி மேவீ.
நன்றி கபிலன்.
நன்றி தராசு.
நன்றி தென்றல்.

டம்பி மேவீ said...

"ஆதிமூலகிருஷ்ணன்
July 15, 2010 10:23 AM

நன்றி இராமசாமி.
நன்றி KKPSK.
நன்றி கதிர். (Water.! :-)
நன்றி MSK.
நன்றி தமிழ்ப்பறவை.
நன்றி வசந்த்.
நன்றி வழிப்போக்கன்.
நன்றி குரு.
நன்றி மேவீ.
நன்றி கபிலன்.
நன்றி தராசு.
நன்றி தென்றல். "

சார் ....கொஞ்சமாச்சு கருணை காட்டுங்க . வெறும் நன்றி மட்டும் தானா

தனி காட்டு ராஜா said...

//அறிவு கெட்ட முண்டங்கள், லூசு மண்டையனுங்க, பைத்தியக்கார மடப்பசங்க, மற கழண்டவனுங்க..//

yes correct............Read also..

http://thanikaatturaja.blogspot.com/2010/07/blog-post_09.html

அமுதா கிருஷ்ணா said...

ஊர்ல என்னமோ நடந்து இருக்கு ஆதி...

ஆதிமூலகிருஷ்ணன் said...

தனிக்காட்டுராஜா, அமுதா.. நன்றி.

நல்லவன் கருப்பு... said...

கல்யாணமாகிட்டாலே இந்த மாதிரி புலம்பல் என்கிட்டுருந்துதான் வருது ??? உண்மையான புலம்பல் :)