Thursday, July 15, 2010

மதராசபட்டினம் : வியப்பு

தமிழில் பீரியட் படம் என்ற விஷயத்தில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இருந்ததில்லை. ஏனெனில் நம்மவர்களின் திறமை மேல் அப்படியொரு நம்பிக்கை. மேலும் நம் பட்ஜெட்டும் அப்படி. அந்த நம்பிக்கையைத் தகர்த்திருக்கிறது இந்தப்படம். 1940 களின் சென்னையில் நிகழும் ஒரு அழகிய காதல் கதையை படமாக்கியிருக்கிறார்கள், மனதைத் தொடும்படியாக. குறைந்த பட்ஜெட்டில் பீரியட் படமென்றால் ரிஸ்க் அதிகம்தான். பிசிறடித்துவிடும். அதனால் மற்ற பிளஸ் பாயிண்டுகளும் கூட அடிபட்டுப்போய்விட வாய்ப்பிருக்கிறது. அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை இங்கே. எதிர்காலத்தில் நம்மவர்கள் இன்னும் கூட பிரமாதம் பண்ணுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தருகிறது இந்தப்படம்.

லண்டனில் இருந்து சென்னை வரும் ‘சென்னை மாகாண’ கவர்னரின் பெண் எமி (எமிஜாக்சன்), ஒரு சாதாரண சலவைத் தொழிலாளியான பரிதி (ஆர்யா) மீது ஈர்ப்பாகிறார். பெரும் போராட்டத்துக்குப்பின் பிரிகிறது ஜோடி. பின்னர் 60 ஆண்டுகளுக்குப் பின் மரணம் துரத்தும் நிலையில் முன்னாள் காதலனைத் தேடி சென்னை வருகிறார் எமி. அதற்கு ஒரு அழகிய காரணம். இடைப்பட்ட காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற லாஜிக்கை மட்டும் விட்டுவிடலாம். அவர்களுக்கே தெரியாமல்தான் ‘விதி’ என்று சிம்பிளாக எமியின் வாயாலேயே சொல்லிவிடுகிறார்கள். பரிதியை அவர் சந்தித்தாரா? வேறென்ன நிகழ்ந்தது? என்பதை அழகாக சொல்லுகிறது படம்.

madharasapattinam-movie-stills054 

சென்ட்ரல் ரயில் நிலையம், கூவம் நதி, சில காட்சிகளில் மவுண்ட் ரோடு, கார்கள், ட்ராம்ஸ்.. இன்னும் நுண்ணிய சித்தரிப்புகள் என இயன்றவரை 40 களின் சென்னையை கண்முன் தந்திருக்கிறார்கள். கூடுமானவரை குறைவான அவுட்டோர், காமிரா கோணங்கள், கொஞ்சம் சிஜி, புத்திசாலித்தனமான காட்சியமைப்புகள் என கலந்துகட்டி இயக்குனர், ஆர்ட் டைரக்டர், காமிராமேன் கூட்டணி இதைச் சாதித்திருக்கிறது. நிகழ்வுகளை மெல்லிய நீலத்திலும், வின்டேஜ் காட்சிகளை பிரவுன் டோனிலும் படமாக்கியிருப்பது சிறப்பு. படத்தின் இன்னொரு பெரிய பலமாக எமி, பரிதியின் உயிரோட்டமான காதல் காட்சிகள். அவ்வளவு அழகாக காட்சிகள் வந்திருக்கின்றன. மொழி தெரியாத சிக்கல்கள் காதலில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத விஷயம்தான். காதலுக்கு ஏது மொழி? கண்டம் தாண்டியும் மலரும் காதல் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. எமி அவ்வளவு அழகாக இருக்கிறார். ஆர்யா அவ்வளவு கம்பீரமாக இருக்கிறார். ஆர்யா, எமியின் நடிப்பு சிறப்பான பங்களிப்பு.

amy-jackson-wallpaper04

இன்னும் படம் நெடுக சின்னச் சின்னதாய் ஏராளமான காரெக்டர்கள் பக்குவமாக செதுக்கப்பட்டிருப்பது, ரசனை. இடைவேளைக்குப் பின்னான சேஸிங் காட்சிகளில் படம் கொஞ்சம் தொய்வடைகிறது, அவ்வாறே சில பாடல் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் புதிய அனுபவத்தைக் கொஞ்சம் சிதைப்பதாக உள்ளன. ஹீரோயின் காரெக்டரும், கதை சொல்லும் ஸ்டைலும் லேசாக ‘டைட்டானிக்’ ஸ்மெல் தருவதை தவிர்க்கமுடியாதுதான். மற்றபடி படம் நிறைவைத் தருகிறது.

மொத்தத்தில் லாஜிக்கலான நல்ல ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்த்தது போன்ற உணர்வு. கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத படம்.

.

28 comments:

MANO said...

NICE REVIEW

MANO

பிரபாகர் said...

விமர்சனம் அழகு. கண்டிப்பாய் வார இறுதியில் பார்க்கிறேன்..

பீரியட் படம் தமிழில் பற்றி உங்கள் எண்ணம்தான் எனக்கும். இந்த படத்தின் விமர்சனம் படிப்போரைப் பார்க்கத் தூண்டும், பார்த்தபின் உங்களைப் பாராட்டத் தோன்றும்...

பிரபாகர்...

நாடோடி இலக்கியன் said...

சொல்லிட்டீங்க‌ல்ல‌ பாத்துடுவோம்.

யுவகிருஷ்ணா said...

விமர்சனம் ‘நறுக்’கென்றிருக்கிறது தோழர். இப்படியெல்லாம் இப்போது தரமான விமர்சனங்களை பதிவுலகில் எதிர்பார்க்க முடியவில்லை!

அறிவிலி said...

ரொம்ப நாளுக்கப்பறம் தியேட்டர் பக்கம் போகணும் போல இருக்கே

பா.ராஜாராம் said...

நான் வாசித்ததில் ரொம்ப பிடிச்ச விமர்சனம் ஆதி.

கார்க்கி said...

நேத்து நைட்டா? ரைட்டு

எம்.எம்.அப்துல்லா said...

//யுவகிருஷ்ணா July 15, 2010 5:24 PM
விமர்சனம் ‘நறுக்’கென்றிருக்கிறது தோழர். இப்படியெல்லாம் இப்போது தரமான விமர்சனங்களை பதிவுலகில் எதிர்பார்க்க முடியவில்லை!

//கேபிளை நேரடியாகத் திட்டலாமே?!?

(ரைட்டு, இன்னைக்கு வேலை ஒவர்)

:))

யுவகிருஷ்ணா said...

ஒரு உடன்பிறப்பு இன்னொரு உடன்பிறப்பை மாட்டிவிடலாமா?

எல்லாரும் நியாயத்தை கேளுங்க சார்! :-)

எம்.எம்.அப்துல்லா said...

// யுவகிருஷ்ணா said...
ஒரு உடன்பிறப்பு இன்னொரு உடன்பிறப்பை மாட்டிவிடலாமா?

எல்லாரும் நியாயத்தை கேளுங்க சார்! :-)

//

ஒரு உடன்பிறப்பினைச் சமாளிக்க இன்னோரு உடன்பிறப்பால்தான் முடியும் என்ற ஒரு வரலாற்று உண்மையும் இங்கே நிறுவப்பட்டுள்ளதே :)))

Mohan said...

விமர்சனம் அருமை!

Mahesh said...

ஹை... நீங்களே சொல்லிட்டீங்க...

உடன்பிறப்பு said...

எக்ஸ்கியூஸ்மீ, மே ஐ கம் இன்

அன்புடன் அருணா said...

கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத விமரிசனமும் கூட!

அத்திரி said...

பார்க்கனும்........ அண்ணே களவாணி பார்த்திட்டீங்களா???

மிஸ் பண்ணிடாதிங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

விமர்சனம் அழகு

நாய்க்குட்டி மனசு said...

மதராசப்பட்டினம் பார்த்தாச்சா?
இன்று என்ன படம்?
தேவைக்கு அதிகமாய் ஒரு வார்த்தை கூட இல்லாத விமர்சனம்

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நான் படம் பார்த்து என்ன சொல்ல நினைத்தேனோ அதை அப்படியே அழகாக சொல்லி உள்ளீர்கள்.. விமர்சனம் அருமை.. நிரவ்ஷா புகுந்து விளையாடி உள்ளார்.. அனால எதனையும் பார்க்க விடாமல் கண்ணைக் கூட இமைக்க விடாமல் செய்து விடுகிறார் எமி ஜாக்சன்... அப்பா.. என்ன ஒரு அழகு.. முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது.. அந்தப் பெண்ணின் முக பாவனைகள் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது... கதையை நன்கு உள்வாங்கி நடித்துள்ளார் ஆர்யா.. நல்ல ரவுண்டு வருவார்... முதல் பாதியை கலகலப்பாக வைக்க பெருது உதவி உள்ளவர் ஹனீபா.. சிறு சிறு நகைச்சுவைக் காட்சிகள் முதல் வரிசை ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருந்ததை தியேட்டரில் உணர்ந்தேன்.. விஜய் அவர்களின் உழைப்பு அபாரம்.. ஆனால் மீண்டும் சொல்கிறேன்.. இவர்களின் அனைவரது உழைப்பையும் தூக்கி சாப்பிட்டு விட்டார் நமது அழகு தேவதை.. அம்மா நம்ம ஊரு கதா நாயகிகளா.. அந்த பொண்ணு பாடல் காட்சிக்கு வாயசைப்பதை கொஞ்சம் பாருங்கம்மா... தொழில் பக்தின்னா இது தாம்மா.. இனிமே எனக்கு டமில் தர்யாது என்று சொல்வதை மாற்றிக் கொள்ளுங்கள்..

நன்றி...

நேசமித்ரன் said...

நேர்த்தியான விமர்சனம் ஆதி !

அக்பர் said...

நல்லதொரு விமர்சனம்.

ஈரோடு கதிர் said...

நல்ல படத்துக்கு நல்ல விமர்சனம்

Cable Sankar said...

நான் ஊரில் இல்லாவிட்டாலும் நம்மை பற்றி திட்டியாவது லைவாக வைத்திருக்கும் லக்கிக்கு நன்றி..:)

தமிழ்ப்பறவை said...

review நைஸ்தான்... ஆனா....

தராசு said...

விமர்சனம் சூப்பர்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மனோ.
நன்றி பிரபாகர்.
நன்றி யுவா. (என்ன சீனியர் திடீர்னு?)
நன்றி இலக்கியன்.
நன்றி அறிவிலி.
நன்றி பாரா.
நன்றி கார்க்கி.
நன்றி அப்பு. (ஒருத்தரு நம்பள பாராட்டினா புடிக்காதே..)
நன்றி மோகன்.
நன்றி மகேஷ்.
நன்றி உடன்பிறப்பு.
நன்றி அருணா.
நன்றி அத்திரி.
நன்றி டிவிஆர்.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி பிரகாஷ். (மறைந்த கலைஞர் விஎம்சி.ஹனீபாவின் பங்களிப்பைப்பற்றி பதிவில் குறிப்பிடத் தவறிவிட்டேன். நினைவூட்டலுக்கு நன்றி.)
நன்றி நேசமித்திரன்.
நன்றி அக்பர்.
நன்றி கதிர்.
நன்றி கேபிள்.
நன்றி தமிழ்பறவை.
நன்றி தராசு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

.

எம்.எம்.அப்துல்லா said...

//Cable Sankar July 15, 2010 11:22 PM
நான் ஊரில் இல்லாவிட்டாலும் நம்மை பற்றி திட்டியாவது லைவாக வைத்திருக்கும் லக்கிக்கு நன்றி..:)

//

இந்த பதிலை உங்களுக்குக் கத்துக் குடுத்ததும் எங்க கலைஞர்தான் கேபிள். மறக்க வேண்டாம் :))

Thenral said...

Ennanga paadalgalai paththi ivlo simpla sollitinga.Romba naalaikkappuram oru padaththula ella paattum nalla irukkunna athu ithulathannu ninaikkiren.