Monday, July 26, 2010

கொடுங்கனவு

நேற்று ஒரு கனவு கண்டேன். சொன்னால் நிச்சயமாக அடிக்க வருவீர்கள்.

அது யாதெனின், நான் வரும் 31ம் தேதி மாலை ஊதிய அறிக்கையை (ஹிஹி.. Salary Alert) வழக்கம் போல ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நிறைய ஒதுக்கீடுகள் செய்யவேண்டியதிருக்கிறது. ஒரு வழியாக அறிக்கைக் குறுஞ்செய்தியும் வந்து சேர்கிறது அந்த இடிச்செய்தியோடு. ஆம் ஐயா, மிகச்சரியாக பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. என்ன கூத்து இது? பாங்க் கடங்காரன் ஏதாவது செய்துவிட்டானா? எந்த பாக்கியும் வைக்கவில்லையே. அலுவலகத்தில் நிதித்துறையில் ஏதும் கோளாறு செய்துவிட்டார்களா? ஐயகோ என்று அலறிவிட்டு, சரி ஏதும் தவறுதான் நடந்திருக்கவேண்டும் நாளை அலுவலகம் போய் அறிந்துகொள்ளலாம் என்று ஆறுதலடைந்தேன்.

ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் போன் கால்கள், SMS, டிவி செய்திகள் என நாடே அல்லோலகல்லோலப் படுகிறது. முதலில் எனக்கும் நண்பர்களுக்கும்தான் இந்தப் பிரச்சினை என நான் நினைக்க, அடுத்த கொஞ்ச நேரத்தில் நாடு முழுதும் இந்தப் பிரச்சினை எனத் தெரிகிறது. அப்படி என்ன காரணம் எனக்கேட்க யாரோ சொல்கிறார்கள், 'ஐயா, அரசாங்கத்துக்கு ஏதோ ஒரு பெரும் நெருக்கடியாம். அதனால்தான் இந்த ஒரு மாதம் மட்டும் இப்படி 50 சதவீதத்தை மக்களிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம் என திட்டமிட்டுச் செய்திருக்கிறார்களாம். முன்னமே அறிவித்திருந்தால் பெரும் குழப்பம் நேர்ந்திருக்கும் எனவும், இந்த எதிர்பாராத காரியத்துக்காக அரசு வருந்துவதாகவும் அறிக்கை வந்துள்ளது' என்கிறார். அதன் பின் மக்கள் கொந்தளித்தார்களா? போராட்டம் ஏதும் நடந்ததா என்றெல்லாம் தெரியவில்லை. கனவு அதற்குள் முடிந்துவிட்டது.

இந்த மாதிரி ஏதும் நடந்தா என்னை தேடி வந்து உதைக்கமாட்டீங்க.?

***************

வலையுலகம் வந்து (நல்லா கவனிக்கவும் எழுத வந்து இல்ல) சுமார் இரண்டு வருடங்கள் கழிந்த இவ்வேளையில் 3 லட்சம் ஹிட்டுகளைத் தந்து, வெளியே சொல்லிக்கும் படியான எண்ணிக்கையில் ஃபாலோவும் செய்து ஆதரவளித்து வரும் அன்பு நண்பர்களனைவருக்கும் என் நன்றி.

****************

சுயபுகழ்ச்சிக்காக அல்லாது ஒரு விழிப்புணர்வுப் பகிர்தலுக்காக மட்டுமே இந்தச்செய்தி. சென்ற வாரம் அலுவலகத்தில் நடந்த ரத்த தான முகாமில் நானும் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தேன். நம்மைப் போல அல்லாமல் ஆஜானுபாகுவாக இருக்கும் நண்பர் ஒருவர் மட்டும் ரத்தம் கொடுத்து முடித்து படுக்கையிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் படுக்கையிலேயே 'சொய்ய்ங்' என விழுந்தது ஒரு சுவாரசியம். மனதில் எழுந்த குழப்பங்கள் காரணமாக இருக்கலாம்.

என்னுடையது O+. பரவலான வகை என்பதாலேயே முன்பு நான் அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை. ஆனால்..

"My blood is common. I don't think there will be demand for it" - That is why the demand for your type is greater than for rare types.

*****************

டிவியில் சில ரியல் எஸ்டேட் விளம்பரங்களைப் பார்க்கும் போது எனக்கு இப்படித் தோன்றுகிறது. இது நிஜமாக இருக்குமா என்று நீங்களே கூறுங்கள்.

'சென்னையிலிருந்து சில நூறு கிமீக்கள் தொலைவில் ஏதோ ஒரு கிளைச்சாலையின் அருகே சில ஏக்கர் நிலங்களை வாங்க வேண்டியது. கட்டம் பிரித்து மஞ்சள் கற்களை நடவேண்டியது. தெருக்கள் போல தோற்றமளிக்க ரெண்டு லாரி மணலை கொட்டி சமன்படுத்த வேண்டியது. ஏதோ ஒரு பாபா நகர் என்று பெயர்ப்பலகையை வைத்து மாலையை போட்டுவிடவேண்டியது. இதற்கு அப்புறம்தான் சுவாரசியமே. ஒரு அழகான டிவி காம்பியரை அழைத்துக்கொண்டு போய், அகேலா கிரேன் கொண்டு சும்மா சுற்றிச் சுற்றி படம் பிடித்துவிட்டு, சென்னையிலிருந்து 123 நிமிட பயணநேரம் (பந்தயக்காரில் போனால் அவ்வளவு நேரமாயிருக்கும்), 17 கிமீயில் ஒரு கல்யாணமண்டபம் இருக்கிறது (நாம் ஏதோ மாதம் ஒருவாட்டி கல்யாணம் செய்துக்கப்போவதைப் போல) அப்புறம் இஷ்டத்துக்கு.. 17 கிமீயில் உங்களுக்கு ஆட்டோ வசதி கிடைக்கும், 34 கிமீயில் ஒரு பப்ளிக் டாய்லெட் இருக்கிறது, 23 கிமீயில் ஒரு அடிபம்பு இருக்கிறது என்று அடித்துவிட்டு அரைகிரவுண்டு மூன்றே லட்சம்தான். முன்பதிவு செய்தால், பத்திரம் இலவசம், தங்கக்காசு இலவசம், கார், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மிஷின், கிரைண்டர், கம்யூட்டர்.. போன்ற நிச்சயப்பரிசுகள்'

.

39 comments:

Mahesh said...

வாழ்த்துகள் ஆதி !!!

நமமாளு... அதுவும் நம்ம கவிதை வாத்தியார்... 3லட்சம் ஹிட் அடீச்சுருக்கீங்க... சூப்பர் !!!

Cable Sankar said...

மூணுக்கு வாழ்த்துக்கள்.

வர்ற கனவுல கூட பிடுங்கிட்டுஓடுற கனவுதானா வரணும்..

ரியல் எஸ்டேட் நிகழ்ச்சியை எல்லாம் ந்லம் வாங்கிறதுக்கு பாக்க கூடாது.. காம்பய்ரரை சைட் அடிக்கத்தான் பாக்கணும்

கரிகாலன் said...

நல்ல பதிவு.. 34 கிமீயில் ஒரு பப்ளிக் டாய்லெட் அருமை.

@கேபிள்,

சார் நீங்க யூத்துதான். ஒத்துக்கறோம்.. அதுக்காக இப்பிடியா? (நீங்க அசிஸ்டன்ட் டைரக்டர் ஆனதுகூட ஹீரோயின சைட் அடிக்கத்தானா?)

இராகவன் நைஜிரியா said...

நல்லாத்தான் கனவு காண்கிறீங்க. கனவுல வேற யாரும் வரமாட்டாங்களா?

// என்னுடையது O+.// நாங்க எல்லாம் be positive.

தராசு said...

உங்களுக்கு மாத்திரம் ஏந்தான் இப்பிடி கனவெல்லாம் வருதோ??? நல்லதே யோசிக்க மாட்டீங்களா????

வானம்பாடிகள் said...

3 லகரம் அடி(ஹிட்) வாங்கியமைக்கு வாழ்த்துகள். வடிவேலுக்கு அடுத்தபடி வாங்கின அடியை பெருமையா சொல்லிக்கிறது பதிவர்கள்தான் இல்லையா ஆதி?:))..

ஹி ஹி சேம் ப்ளட்.

அப்புறம் ரியல் எஸ்டேட்ல முக்கியமான அம்சமா வத்திப்போன குட்டையை இங்கதான் ஸ்விம்மிங் பூல் வருதுன்னு வேற அவுத்து வுடுவானுவளே:))

Karthik said...

வாழ்த்துக்கள்ங்ணா. :)

ப.செல்வக்குமார் said...

வாழ்த்துக்கள் அண்ணா ..
அப்பஉரம் தயவு செய்து இனிமேல் தூங்காதிங்க .. அப்புறம் இதவிட பயங்கர கனவு கண்டேன் அப்படின்னு புலம்புவீங்க ..!!

வழிப்போக்கனின் கிறுக்கல்கள்... said...

வாழ்த்துகள் ஆதி.....
//
இந்த மாதிரி ஏதும் நடந்தா என்னை தேடி வந்து உதைக்கமாட்டீங்க.?
//

இல்லீங்க ..........
எதிர்காலத்தை எடுத்து சொல்லும் "தாமிரானந்த்தா"ன்னு பட்டம் கொடுத்து ECR
ரோட்டு புளியமரத்துக்கு கீழே ஆசிரமம் அமைச்சிருவோம்ல......

பின்னோக்கி said...

அரசாங்கத்துக்கு வரிகட்டியே மூச்சு வாங்குது. இதுல இந்த மாதிரி கனவு வேற கண்டு, அத எழுது, எல்லாரு வயித்தயும் கலக்கிட்டீங்க. ஏங்க டாப் ஆபீசர்ஸ் எல்லாம் ப்ளாக் படிக்கிறாங்களாமே. எதுக்கும் உங்க கனவ பதிவுல இருந்து எடுத்துடுங்கோவ்வ்வ்..

பின்னோக்கி said...

3 லட்சம் ஹிட்ஸ்க்கு வயித்தெரிச்சலுடன் வாழ்த்துக்கள் :)

புன்னகை said...

இப்படியெல்லாம் தான் உங்களுக்குக் கனவு வரும்னா, நீங்க தூங்கவே வேண்டாம் ஆதி! ;-)

அமுதா கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள்...

வெடிகுண்டு முருகேசன் said...

இந்த மாதிரி ஏதும் நடந்தா என்னை தேடி வந்து உதைக்கமாட்டீங்க.?
//


வூடு பூந்து வெட்டுவோம்

வெடிகுண்டு முருகேசன் said...

நல்ல அருமையான விவரிப்பு

தொடர்ந்து எழுதுங்கள்

வெடிகுண்டு முருகேசன் said...

சில ரியல் எஸ்டேட் விளம்பரங்களைப் பார்க்கும் போது
//


வீட்டுல சண்டை வருமே !!!

வெடிகுண்டு முருகேசன் said...

நல்லாத்தான் கனவு காண்கிறீங்க. கனவுல வேற யாரும் வரமாட்டாங்களா?
//


வருவாங்க ஆனா அதெயெல்லாம் பப்ளிக்குல சொல்ல முடியுமா கதை புனைவில் தேடி பாருங்க

வெடிகுண்டு முருகேசன் said...

சுயபுகழ்ச்சிக்காக அல்லாது ஒரு விழிப்புணர்வுப் பகிர்தலுக்காக மட்டுமே இந்தச்செய்தி.
//

அப்ப மத்ததெல்லாம்.. :)

சின்ன அம்மிணி said...

//இப்படி 50 சதவீதத்தை மக்களிடமிருந்து எடுத்துக்கொள்ளலாம்//

ஆஸி நியூஸில எல்லாம் கிட்டத்தட்ட இப்படித்தான். சம்பளத்துல 30% - 40% டாக்ஸ்ல புடிச்சுட்டுதான் குடுப்பாங்க.

Balaji saravana said...

நைட்டு வீட்ல அடி வாங்கினீங்களா ஆதி? இவ்வளவு பயங்கரமா கனவு வந்திருக்கு! ( ஹே யாருப்பா அது, அப்ப தினமும் கனவு வருதானுன்னு கேக்குறது) ஹி ஹி...

மூணு லட்சம் ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள் அண்ணே!

//ரியல் எஸ்டேட் நிகழ்ச்சியை எல்லாம் நிலம் வாங்கிறதுக்கு பாக்க கூடாது.. காம்பய்ரரை சைட் அடிக்கத்தான் பாக்கணும் //
சூப்பரு!!!

நட்புடன்,
பாலாஜி

பா.ராஜாராம் said...

:-))

வாழ்த்துகள் ஆதி!

தராசு said...

அப்புறம் அந்த மூணு லட்சம்..... வாழ்த்துக்கள் தல

நாய்க்குட்டி மனசு said...

வாழ்த்துக்கள் ஆதி!
நல்லா கண்டீங்க கனவு! ஏற்கனவே எங்க நிறுவனம் நிஷ்டத்தில sorry நஷ்டத்தில ஓடுதுன்னு சொல்லி புளியைக் கரைக்கிறாங்க. நீங்க வேற ஏங்க இப்படி?
பிளாட் போட்டு விக்கிற 'படத்தில' முடிவை சொல்லாம விட்டுடீங்க?

அறிவிலி said...

ஹிட்ஸ் - வாழ்த்துகள்.

//வெளியே சொல்லிக்கும் படியான எண்ணிக்கையில் //

ஐ ஸ்ட்ராங்லி அப்ஜெக்ட். நாங்களும் வெளியில சொல்லிக்குவோம்.பத்து முத்துக்கள்னாலும் முத்துக்கள்தானே. :-)))

உங்க கனவு பலிக்கட்டும். :-)))

நாம எல்லாரும் ஸ்ரீமான் பொது ஜனம்.(O+)

கார்க்கி said...

வாழ்த்துகள் சார்

பத்மா said...

punnakai said
இப்படியெல்லாம் தான் உங்களுக்குக் கனவு வரும்னா, நீங்க தூங்கவே வேண்டாம் ஆதி! ;-)

நா சொல்றேன்
அதுவும் ஆபீஸ்ல ..

நல்ல பீதிய கிளப்புறீங்க பா .நிஜம்மா இதை எவனாவது படித்துவிட போறான் !

அத்திரி said...

3லட்சத்துக்கு வாழ்த்துக்கள்.....

அன்புடன் அருணா said...

3 லட்சம் ஹிட்ஸ்க்குப் பூங்கொத்து!

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் ஆதி

சில ரியல் எஸ்டேட் விளம்பரத்துல கார் சர்சர்னு வரும் பாருங்க... தொடர்ந்து பத்து நாள் பாத்தா தற்கொலை நிச்சயம்

மங்களூர் சிவா said...

ரியல் எஸ்டேட் விளம்பரம்!

தூள்.

அதுல நம்ம ஆளுக மஞ்சபைல காசு எடுத்துகிட்டு போய் க்யூல நின்னு கட்டி அந்த இலவச சோப்பு டப்பா வாங்குவானுங்களே அது இன்னும் தூள்!!

மங்களூர் சிவா said...

terror கனவுகள் வேணாமே!

தாரணி பிரியா said...

வாழ்த்துகள் ஆதி சார் :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மகேஷ். (உங்களுக்கு நான் கவிதை வாத்தியாரா? ஏன் யாராவது என்னை உதைக்கணும்னு எவ்வளவு நாளாய்யா கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறீர்.?)

நன்றி கேபிள்.
நன்றி கரிகாலன்.

நன்றி இராகவன். (நீங்க B+ வா இல்லாம இருந்தாத்தான் அதிசயமய்யா)

நன்றி தராசு.

நன்றி வானம்பாடிகள். (உங்களுக்கும் வாழ்த்துகள் தாத்தா)

நன்றி கார்த்திக்.
நன்றி செல்வக்குமார்.

நன்றி வழிப்போக்கன். (வெளங்குச்சு)

நன்றி பின்னோக்கி.
நன்றி அமுதா.
நன்றி புன்னகை.
நன்றி வெடிகுண்டு.

நன்றி அம்மிணி.
நன்றி பாலாஜி.
நன்றி பாரா.

நன்றி நாய்க்குட்டி.
நன்றி அறிவிலி.
நன்றி கார்க்கி.

நன்றி பத்மா.
நன்றி அத்திரி.
நன்றி அருணா.

நன்றி கதிர்.
நன்றி சிவா.
நன்றி தாரணி.

அப்பாவி தங்கமணி said...

பொதுவா உங்க கனவு பலிக்க வாழ்த்துக்கள்னு சொல்லுவோம்... இப்ப சொன்னா ஆட்டோ வருமோ...

//நாம் ஏதோ மாதம் ஒருவாட்டி கல்யாணம் செய்துக்கப்போவதைப் போல//

இது தான் நிஜ கனவோ... சும்மா கேட்டேனுங்க...

RAMYA said...

3லட்சத்துக்கு வாழ்த்துக்கள்:)

கனவுகள் ம்ம்ம் அற்புதம், அதுவும் சம்பளம் பற்றிய கனவு ரொம்ப புடிச்சிது, அது உங்களுக்கு மட்டும்தான் ஆதி எங்களுக்கு செல்லாது!! செல்லாது!! :-)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஆஹா என்னை போலவே நீங்களும் அதிகமாக கனவு காண்கிறீங்க . . நல்ல இருக்கு தல . பகிர்வுக்கு நன்றி

sweatha said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

vanila said...

ஏலகிரி, ஜலகம்பாறை ...உங்கள் பார்வையில் ...???.

ஆதிமூலகிருஷ்ணன் said...

தங்கமணி, ரம்யா, பனித்துளி, ஸ்வேதா, வனிலா (அவன்தான் அழகா எழுதிட்டானே? இன்னொரு வாட்டி ரிப்பீட்டு போடணுமா என்ன?)..

நன்றி.