Wednesday, July 21, 2010

பிரபல பத்து பதிவர்களுக்கு விழுகிறது குத்துகள்

1. போனில் எப்போ பேசினாலும் 'மெயில் படித்துக்கொண்டே.. சாப்பிட்டுக்கொண்டே.. கதை டைப் பண்ணிக்கொண்டே..' உனக்கு இவ்வளவு கவனம் போதும்டா என்பது போல பேசும் பரிசல்காரன் கையில் மாட்டினால் விழும் முதல் குத்து.. (அவ்வப்போது பதிவுலகில் பத்தோமேனியா, குத்தோமேனியா என்று எதையாவது உருவாக்குவதற்காக எக்ஸ்ட்ராவாக ஒரு ஸ்பெஷல் குத்து)

2. சாய்ங்கால நேரமா கூப்பிடுறாங்களேன்னு அரக்கப்பறக்க பீச்சுக்கோ ஹோட்டலுக்கோ கசங்கிய சட்டையில், முடி கலைந்து, தாடியோடு பக்கி எஃபெக்டில் நாம் போய் சேர்ந்த பின்பு நிதானமாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த தும்பைப்பூ வெள்ளை ஜிப்பாவில் ஈ என்று இளித்தபடி ஃபிரெஷ்ஷாக வந்து கடுப்பேற்றும் அப்துலுக்கு விழுகிறது இரண்டாவது குத்து.. (எல்லாவற்றிலும் தாராள பிரபு என்பார்களே என்று அவர் கையிலிருக்கும் நாம் ரொம்ப நாளாக வாங்க ஆசைப்பட்ட புத்தகத்தை ஏக்கத்தோடு பார்த்தால் புக்கை டாஷ்போர்டில் போட்டு பூட்டிவிட்டு ‘அப்புறம்’ எனும் சந்தர்ப்பங்களுக்காக விழுகிறது எக்ஸ்ட்ரா குத்து)

3. எப்போ எங்கே கூப்பிட்டாலும் 'ஆஃபீஸுக்கு போகணும், அம்மா பால் வாங்கச் சொன்னாங்க, பப்லுவுக்கு பானிபூரி வாங்கணும்..' என்று எஸ்கேப்பாகும் சகா கார்க்கிக்கு விழுகிறது மூன்றாவது குத்து.. (தோழிக்கு சுடிதார் வாங்கப்போவது போன்ற ஸ்பெஷல் காரணங்களுக்கு ஸ்பெஷல் குத்து ஒன்று)

4. உணர்வதுதான் முக்கியம், கூடிச் செல்வோம் வாருங்கள் என்றால் இன்னும் பிகு பண்ணிக்கொண்டிருக்கும் நர்சிம்முக்கு ஓங்கி விழுகிறது அடுத்த குத்து.. (சவுண்டு விடுதல் போன்ற ஆஃபீஸ் மேனரிஸங்களை அவ்வப்போது நண்பர்களிடமும் காண்பிப்பதற்காக விழுவது ஒரு ஸ்பெஷல் குத்து)

5. 'யு நோ.. எங்க வீட்ல சிக்கன் பிரியாணியும், இஞ்சித் துகையலும் ரொம்ப நல்லாப் பண்ணுவாங்க..' என்று நாக்கில் ஜலம் வரவைத்துவிட்டு, 'வீட்டுக்கு வாங்களேன், இந்த சண்டே' என்று சொல்லமாட்டாரா என் மூஞ்சியையே பார்க்க வைக்கும் வெண்பூவுக்கு விழுகிறது மற்றொரு குத்து.. (கையை மோந்து பாக்கறீங்களா என ஆதாரமும் காண்பிக்கும் சமயங்களுக்காக ஒரு எக்ஸ்ட்ரா குத்து)

6. 'விகடன்ல கதை வந்துருக்கு, கல்கியில வந்துருக்கு, இவுங்க என்னோட புக்க போட்டாங்களா? அடுத்து அவுங்க போடப்போறாங்க. நாளைக்கு ஜெயாடிவில வர்றேன் யு நோ. அப்புறம் கிழக்குல இன்னைக்கு காலையில கூப்பிட்டு..' என்று எப்போதும் வயித்தெரிச்சல் நியூஸ்களை முதல் ஆளாக கூப்பிட்டு சொல்லும் கேபிள்சங்கருக்கு விழுகிறது ஒரு குத்து.. (நீங்களும் நல்லாத்தான் எழுதறீங்க, இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா பெரியாளா வருவீங்க என்று அப்படியே மருந்தும் போடுவதற்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

7. பதிவில், மெயிலில், குழுமத்தில் கலாய்ப்பது பத்தாதென்று குரல் அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியாத ஏதோ ஒரு ஃபோபியா இருக்கிறது என்று தெரிந்தும் போனில் யார் யாரையோ போல் பேசி கலாய்க்கும் குசும்பனின் கரிய மூக்கில் ஓங்கி விழுகிறது அடுத்த குத்து.. (நல்ல அரசியல் பார்வை இருந்தும் அவற்றை பகிர்ந்துகொள்ளாமல் கலாய்த்தலே கதியென இருப்பதற்காக விழுவது எக்ஸ்ட்ரா)

8. பதிவுக்கும் வர்றது கிடையாது, பின்னூட்டமும் போடறது கிடையாது. போனும் கிடையாது, மெயிலும் கிடையாது. ஆனால் நேர்ல பார்க்கும் போது மட்டும் 'நீதான் செல்லம் என் ஆதர்சம்' என்று பாசம் பொழியும் அதிஷாவுக்கு விழுகிறது ஒரு வலுவான குத்து.. (காரணமே இல்லாவிட்டாலும் அந்த அழகிய வழுக்கை மண்டைக்காக ஒரு எக்ஸ்ட்ரா குத்து)

9. கமர்ஷியல் எழுதாம பிரபலமாவதா? சான்ஸே இல்லை என்ற நினைப்புக்காக வெட்கம் வரவைத்து கிட்டத்தட்ட எல்லா பதிவுகளையுமே சமூக அக்கறையுடன் எழுத முடியும் என்று காட்டிக்கொண்டிருக்கும் ஈரோடு கதிருக்கு விழுகிறது வீங்கும்படியாக ஒரு குத்து.. (வயதில் மூத்திருந்தும் பதிவுலகில் இளைஞர்களான எங்களை சீனியராக்கி ஒதுக்கி புதிய பதிவுலகக் குழுமத்தை உருவாக்கிய சாதனைக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

10. 'ஜெமோவின் மத்தகம் படிச்சீங்களா? நாஞ்சிலின் சூடிய பூ சூடற்க படிச்சீங்களா? மனோஜின் புனைவின் நிழல் படிச்சீங்களா? ஜீ முருகன் படிச்சீங்களா? பிரபஞ்சன் படிச்சீங்களா? எழில்வரதன் படிச்சீங்களா? எம்ஜி சுரேஷ் படிச்சீங்களா?..' என்று கேட்டு கேட்டு அதன் உள்ளர்த்தமாய் ..நீயெல்லாம் கதையெழுதறேன்னு கீ போர்டை தூக்கிட்டு அலையுறே.. ன்னு கேட்காமல் கேட்கும் செல்வேந்திரனுக்கு விழுகிறது ஒரு கும்மாங்குத்து.. (அவ்வப்போது ஏதாவது ஒரு கதையை விளக்கவும் செய்து நம்மை குற்ற உணர்வுக்கு ஆளாக்கச் செய்யும் தருணங்களுக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)

இன்னும் நிறைய குத்துகள் பாக்கியிருக்கின்றன, இருப்பினும் எனது ஸ்பெஷலைசேஷன் தங்கமணி குத்து பதிவை போடவிடாமல் முந்திக்கொண்டு குத்திவிட்ட வடகரை வேலன் மூஞ்சியில் அதற்காக ஒரு சிறப்புக் குத்தை குத்திவிட்டு.. இதுக்கு மேலும் இழுத்துக்கொண்டு போனால் விழப்போகும் உங்கள் குத்துக்கு பயந்து பத்தோடு எஸ்கேப்புகிறேன். மீ பாவம்.!

64 comments:

ரமேஷ் வைத்யா said...

:-)

இராமசாமி கண்ணண் said...

:))

Jeeves said...

:)))

வால்பையன் said...

//அந்த அழகிய வழுக்கை மண்டைக்காக ஒரு எக்ஸ்ட்ரா குத்து//


என்னா கொலைவெறி!


அப்புறம் உங்க பதிவு தெரியல, ரீடர்ல படிச்சு பின்னூட்டம் போடுறேன், என்னான்னு பாருங்க!

வால்பையன் said...

இப்ப தெரியுது, இப்ப தெரியுது!

வால்பையன் said...

// ரமேஷ் வைத்யா said...

:-) //

என் செல்லத்தை யாரும் குத்திறாதிங்கப்பா!, அந்த வாய்ப்பு எனக்கு மட்டும் தான்!

:)

க.பாலாசி said...

//வயதில் மூத்திருந்தும் பதிவுலகில் இளைஞர்களான எங்களை சீனியராக்கி ஒதுக்கி புதிய பதிவுலகக் குழுமத்தை உருவாக்கிய சாதனைக்காக விழுவது எக்ஸ்ட்ரா குத்து)//

அவ்வ்வ்வ்வ்வ்... இதுக்கெல்லாமா குத்துவீங்க...??

ஜாக்கி சேகர் said...

படிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன் பாஸ்

வசந்திரன் said...

இப்படி காக்கா பிடிச்செல்லாம் ஒரு பொழைப்பு... ச் தூ...(நன்றி மாதவராஜ்)
விட்டுப்போட்டு உருப்படியா ஏதாவது எழுதுற வழியைப் பாரு

நீ காக்கா பிடிச்ச அல்லக் கைகள் இதுக்கு ஓட்டுப் போட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில பரிந்துரைக்கப் பட்ட இடுகையாக்கி விடுவானுகள்.

கொடுமைடா சாமி

ஜாக்கி சேகர் said...

பதிவுக்கும் வர்றது கிடையாது, பின்னூட்டமும் போடறது கிடையாது. போனும் கிடையாது, மெயிலும் கிடையாது. ஆனால் நேர்ல பார்க்கும் போது மட்டும் 'நீதான் செல்லம் என் ஆதர்சம்' என்று பாசம் பொழியும் அதிஷாவுக்கு //


உங்ககிட்டயும் அப்படிதானா?....

தமிழ் அமுதன் said...

///நிதானமாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த தும்பைப்பூ வெள்ளை ஜிப்பாவில் ஈ என்று இளித்தபடி ஃபிரெஷ்ஷாக வந்து கடுப்பேற்றும் அப்துலுக்கு விழுகிறது இரண்டாவது குத்து.///


;;)))

Anonymous said...

ராசா,

நீ எப்பவும் தங்கமணிகளைக் கலாய்ச்சுப் பதிவு போடுவே, நான் அதுக்கு எதிர்ப்பதிவு போடுவேன்.

நம்ம விசராமன் என்னை ஆணாத்திக்கவாதின்னு சொல்லிட்டதால இப்படிப் போடவேண்டியதாச்சு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

ரமேஷ் அண்ணன் (எங்க போனீங்க இவ்ளோ நாளா? சென்னைல இருக்கீங்களா இல்லையா?),

இராமசாமி,
ஜீவ்ஸ்,
வால்பையன்,
பாலாசி,
ஜாக்கிசேகர்,

வசந்திரன் (இதுக்கு பேர் காக்கா பிடிக்கிறதாங்க? இதுமாதிரி அறிவார்ந்த அறிவுரைகளையெல்லாம் உங்கள் சொந்த ஐடியிலேயே வந்து சொல்லலாம் பாஸ். நான் தப்பா எடுத்துக்கமாட்டேன்),

தமிழமுதன்,
வடகரை வேலன்..

அனைவருக்கும் நன்றி.

Karthik said...

ஸ்டாட் மீசிக்..:)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ஆஹா சரியான குத்து :)

sriram said...

கலக்கல் குத்து ஆதி, சிரிச்சி மாளலை..
தமிழ் மணத்தை ஏன் விட்டுட்டீங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Sukumar Swaminathan said...

நைஸ்...

இனியா said...

kalakkal thaamira...

நேசமித்ரன் said...

:)

அன்புடன் அருணா said...

செம குத்து!

விஜய் ஆனந்த் said...

:-)))...

வானம்பாடிகள் said...

:)). அத்தனை பேரும் ஆளுக்கு ஒரு ரீஸன் சொல்லி திருப்பி குத்துவாங்களே என்ன பண்ணப்போறீங்க ஆதி?:))

பா.ராஜாராம் said...

ஐ!

அம்மா குத்து
அப்பா குத்து
பிள்ளையார் குத்து
பிடிச்ச்ச்ச்ச்சிக்க குத்து!

ஜாலி ஆதி! :-))

மங்களூர் சிவா said...

:)))

Jey said...

நான் புதுசு, அதனால் குத்துவதை வேடிக்கை பார்ப்பதற்காக மட்டும் இங்கே.....

ஸ்வாமி ஓம்கார் said...

இந்த லிஸ்டில் அனேகரை எனக்கு தெரிந்திருப்பது மகிழ்ச்சி.. இப்பதிவை போன வாரம் போட்டிருந்தால் உங்களை நேரில் ‘குத்து’ மதிப்பா பாராட்டி இருப்பேன் :)

கார்க்கி said...

பயப்படாதிங்க சகா. எல்லார் சார்பாகாவும், அதை தாண்டியும் நிறைய குத்துகளை ரமாக்காவே குத்தி விடுவதால் எங்க சார்பா உஙக்ளுக்கு பத்துதான் போடுவோம். அந்த வகையில் இன்றுப் போடப்பட்ட எல்லா பத்துகளும் உங்களுக்காக ஸ்பெஷல் ட்ரீட்மெnட்டாக எடுத்துக் கொள்ளவும்.

☼ வெயிலான் said...

// தாடியோடு பக்கி எஃபெக்டில் நாம் போய் சேர்ந்த பின்பு நிதானமாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த தும்பைப்பூ வெள்ளை ஜிப்பாவில் ஈ என்று இளித்தபடி ஃபிரெஷ்ஷாக வந்து கடுப்பேற்றும் அப்துலுக்கு விழுகிறது இரண்டாவது குத்து.//

என்னைச் சிரிக்க வைத்த குத்து.

என்ன இருந்தாலும், உங்களை நீங்களே பெருமையா சொல்லும் போது சிரிப்பாணி வந்துருது ஆதி.

இராகவன் நைஜிரியா said...

ம்... அப்புறம்..

பாலா அறம்வளர்த்தான் said...

குத்து வாங்குவதற்கு கூட லாயக்கில்லாதவர்கள் இந்த பெண் (பிரபல) பதிவர்கள் என சொல்லாமல் சொல்லி, நீங்கள் ஒரு ஆணாதிக்கவாதி என்று மீண்டும் நிருபிக்கிறீர்கள் :-)

தெய்வசுகந்தி said...

lol!!!

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அடேயப்பா இதனைக் குத்துகளா ! ஆமா உங்களுக்கு கை வலிக்கவில்லையா ?

வெடிகுண்டு முருகேசன் said...

மே ஐ கம் இன் :)

Cable Sankar said...

yoov.. உண்மைய சொன்னா.. அதுக்கு குத்துவிடுவியா.. நல்லாத்தானே எழுதற..? இந்த வாங்கிக்க.. கும்மாங்குத்து.:)

வெடிகுண்டு முருகேசன் said...

நான் உங்களை கேபிள் மாதிரி குத்தமாட்டேன்

ஏன்னா வீட்டுல வாங்குற அடியே ரெண்டு ஜென்மத்துக்கு தாங்கும் ::))

வெடிகுண்டு முருகேசன் said...

குசும்பன் சும்மாவே உங்களை கும்முவாரு
இதுல வேலியில் போறதை வேற...

வெடிகுண்டு முருகேசன் said...

ரொம்ப நாளாக வாங்க ஆசைப்பட்ட புத்தகத்தை ஏக்கத்தோடு பார்த்தால்
//

ஒரு 30 வருசமா வாங்க ஆசைபட்ட புக்கு தானே ’அது’

வெடிகுண்டு முருகேசன் said...

நீ காக்கா பிடிச்ச அல்லக் கைகள் இதுக்கு ஓட்டுப் போட்டு இன்னும் கொஞ்ச நேரத்தில பரிந்துரைக்கப் பட்ட இடுகையாக்கி விடுவானுகள்.
//


தமிழ்மணத்தை கொஞ்சம் திரும்பி பார்த்து அல்லகைகளை துப்பிடு போ..

அட போ...

ஷங்கர் said...

////'ஜெமோவின் மத்தகம் படிச்சீங்களா? ////

http://www.aathi-thamira.com/2010/06/blog-post_28.html
இதில் நானும் உங்களுக்கு பரிந்துரைத்துள்ளேன் !!!!!!..
இதனால் ஒரு கடை நிலை வாசகனையும் குத்திவிடீர்கள்;)

SurveySan said...

ஏதோ கசமுசான்னு வந்தா, மொக்கைய பதிவு போட்ட உங்களுக்கும் ஒரு செம குத்து :)

மணிநரேன் said...

:)

டம்பி மேவீ said...

anne nangalum pottu irukkom la..

piragu padivu nalla irukkunne

மேனஜர் முகத்தில் குத்து விட நினைக்கும் பத்து தருணங்கள்

பிரசன்னா said...

ஆ கும்மாங்குத்தோபதி, கும்மாங்குத்தோபதி

பரிசல்காரன் said...

எல்லாரும் ஒரே ஆளை பத்து குத்து குத்திட்டிருக்கறப்போ, நீங்க பல பேரை ரெண்டு ரெண்டு குத்தா குத்திருக்கீங்க.. நல்லாருக்கு!


(btw, ரமேஷ் வைத்யா நேத்து கௌஹாத்தில இருந்தாரு. இன்னைக்கு எங்கன்னு தெரியல)

பரிசல்காரன் said...

முக்கியமா எல்லாருக்கும் லிங்க் குடுத்து பதிவிட்ட உங்கள் சிரத்தைக்காக உங்களுக்கு ஒரு ஸ்பெஷல்... குத்துல்ல.. பூங்கொத்து!

sweatha said...

ஆண்-ஆண் மணம் - Jeejix.com

ஈரோடு கதிர் said...

அண்ணாச்சி..

குத்தாலத்துல் உக்காந்து யோசிச்சீங்ளாக்கும்

செம குத்து

அடேய்.. பாலாசி
உனக்கு இருக்குடி ஆப்பு

வெண்பூ said...

ஏன் இந்த‌ கொலைவெறி ஆதி உம‌க்கு? ஹி..ஹி.. ஆனா எல்லா குத்துமே பொருத்த‌மா இருந்த‌து. :)

தராசு said...

kalakkal

மோகன் குமார் said...

அருமைய்யா. குறிப்பா கேபிள் & அப்துல்லா மிக ரசித்தேன்

மோகன் குமார் said...

அப்புறம்.... கார்க்கி இப்படியெல்லாம் சொல்வாரா என்ன??

குசும்பன் said...

நீ குத்து செல்ல நீ குத்தாம வேற யாரு குத்த போறா:))

குசும்பன் said...

நீ குத்து செல்ல நீ குத்தாம வேற யாரு குத்த போறா:))

அமுதா கிருஷ்ணா said...

http://amuthakrish.blogspot.com இந்த குத்துக்களையும் பார்க்கவும்...குத்துக்கள் அனைத்தும் ஆகா ஓகோ...

vanila said...

யார் "ஆ" ணாதிக்கவா "தி" ... என்பதை எல்லோரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்..

அதிஷா said...

வினவுகிட்ட போட்டுகுடுத்தாதான் அடங்குவீங்க போலருக்கே! ஏலே எழுதுடா பதிவ ! அனுப்புடா வினவுக்கு

புன்னகை said...

எப்படி இப்படியெல்லாம்? விழுந்து விழுந்து சிரித்தேன்!

புன்னகை said...

//பப்லுவுக்கு பானிபூரி வாங்கணும்..//
இது சுத்தப் பொய்... அவர் பானிபூரி வாங்குவதும் கூட தோழிக்காக தான் என்று நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி வந்துள்ளது!

புதுகைத் தென்றல் said...

:)))

Anonymous said...

ரமா கிட்ட சொல்லி ஒரு ஸ்பெஷல் குத்து விடசொல்லணும்

செல்வேந்திரன் said...

குசும்பனின் ‘கரிய மூக்கில்’ // ஹி... ஹி... ஹி... ஹி....

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்த்தி, ஜில், ஸ்ரீராம், சுகுமார், இனியா, நேசமித்திரன், அருணா, ஆனந்த், வானம்பாடிகள், பாரா, சிவா,

ஜெய் (புதியவர்களும் குத்தலாம், பூரா டம்மி பீஸுங்க.. ஹிஹி)

ஸ்வாமி, கார்க்கி,

வெயிலான் (என்னைய கோமாளிக் கோலத்துல பாக்குறதுன்னா உங்களுக்குதான் எவ்ளோ மகிழ்ச்சி),

இராகவன்,

பாலா (என்ன கொடும பாலா இது?),

தெய்வசுகந்தி, பனித்துளி, வெடிகுண்டு, கேபிள், ஷங்கர், சர்வேசன், நரேன், மேவீ, பிரசன்னா, பரிசல், ஸ்வேதா, கதிர், வெண்பூ, தராசு, மோகன், குசும்பன், அமுதா, வனிலா, அதிஷா, புன்னகை, தென்றல், அம்மிணி, செல்வேந்திரன்..

நன்றி. நன்றி.!

ஞெலிநரி வெய்யோன் said...

குத்து வாங்க நான் அணியமாய் உள்ளேன்! குத்த நீங்க அணியமா?

*குத்துங்க எசமான், குத்துங்க...
;)

ஊர்சுற்றி said...

:)