Monday, August 23, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -2

(பகுதி –1)

அவ்வளவு கொடூரமாக ஒரு மரணம் கண்முன் நிகழ்ந்ததில் வெங்கட் மிகவும் உடைந்துபோயிருந்தான். அதுவும் உயிரான தோழன், தனது பிஸினெஸின் முக்கியமான தூண், வெற்றிக்கான சாரதி எனக் கருதியிருந்த ப்ரவீனின் இழப்பு வெங்கட்டுக்கு மிகப் பெரியது. அதற்கான காரணம் புரியாததுமாய், அமானுஷ்யமானதுமாய் இருந்ததில் இன்னும் குழப்பமும், யாரைப்பார்த்தாலும் கோபம் கோபமாய் வருவதுமாக அமைதியிழந்து தவித்தான். அலுவலகம் போக முடியவில்லை. அவனது அப்பா இவனை ரிலாக்ஸ் செய்துகொள்ளச் சொல்லிவிட்டு அவரே அலுவலக வேலைகளைக் கவனித்துக்கொண்டார்.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் மினி ஹைதராபாத்திலிருந்து வந்தவள் இவனுடன் ஒரு வாரம் தங்கியிருந்த பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீள ஆரம்பித்தான். இவனது இழப்பை முழுதும் அறிந்தவள் அவள்தான். அவர்களுக்கிடையே இருந்த நட்பு, இவனது எதிர்கால பிஸினெஸ் லட்சியங்கள் என எல்லாவற்றையுமே அறிந்தவள் அவள்.

மினி..

வெங்கட்டின் ஒற்றை வாழ்வு முழுவதும் இந்த இரட்டை எழுத்துக்களாய் நிறைந்தவள். இந்த துரதிருஷ்டமான வேளையில் அவள் அழகை விவரிப்பது பொருத்தமாக இருக்காது. இப்போதைக்கு அவள் ஒரு 23 வயது தேவதை என்று மட்டும் வைத்துக்கொள்ளுங்கள். வெங்கட்டின் தூரத்து உறவினளான மினி சின்னஞ்சிறு பெண்ணாக இருந்தபோதே அவளது தந்தை ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆனவர். இரண்டு குடும்பங்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது. அவளது தந்தை என்ன நினைத்துக்கொண்டாரோ தெரியவில்லை, இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிடிவாதமாக மீண்டும் இந்தியா வந்து ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். ஒருநாள் தன் அப்பாவுடன் மினி மரியாதை நிமித்தமாக வெங்கட்டின் அப்பா ராஜகோபாலைச் சந்திக்க வீட்டுக்கு வந்தாள். அந்த நாள் வெங்கட், மினியின் வாழ்நாளில் மறக்க இயலாத ஒரு நாளாக மாறிவிட்டிருந்தது. இரண்டு புறமும் தோள்களில் பாப் செய்யப்பட்டிருந்த கூந்தல் விளையாட இறுக்கமான வெள்ளை நிறச் சுடிதாரில் அவள் வந்ததில் ஒரு தேவதையாகவே வெங்கட்டின் நெஞ்சில் நிரந்தரமாக தங்கிவிட்டிருந்தாள். இப்போதும் கிசுகிசுப்பான நேரங்களில் அவன் அவளை 'ஏஞ்சல்' என்றுதான் அழைக்கிறான்.

இப்போது இந்த மழை தூவும் மாலை நேரத்தில் இருவரும் அண்ணாநகரில் இருந்த அவர்களது கெஸ்ட் ஹவுஸில் இருந்தனர். 3 மணிதான் ஆகியிருந்தது. ஆயினும் கருமேகங்கள் சூழ்ந்திருந்ததாலும், மெல்லிய மழை பெய்துகொண்டிருந்ததாலும் மாலை முடிந்து இரவு துவங்கியிருப்பதைப் போலவே ஒரு தோற்றம் நிலவியது. மினி ஹைதராபாத்திலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அவள் தங்குவது இங்கேதான். அவள் சென்னையில் இருக்கும் நாட்களில் பெரும்பாலும் வீட்டை மறந்து பகலும் இரவும் அவளுடனும், இந்த கெஸ்ட் ஹவுஸுடனுமே கழியும் அவனுக்கு.

பால்கனியில் நின்று கொண்டிருந்தவனை இரண்டு தேநீர்க் கோப்பைகளுடன் நெருங்கினாள். ஒரு மின்னல் முத்தத்துடன் ஒரு கோப்பையை வாங்கியவனை நோக்கினாள் மினி.

"நாளைக்கு கிளம்பறேன் வெங்கட். டிக்கட் புக் பண்ணனும். நாளைக்கு ஆஃபீஸ்க்கு போகணும்ன்னு சொல்லியிருக்கே. அட்லீஸ்ட் ஈவினிங் ஏர்போர்ட்ல டிராப் பண்ணவாவது வந்துடு, ப்ளீஸ்.."

"மினி, இன்னும் ரெண்டு நாள் இரேன். சண்டே கிளம்புறியா.? இப்பதான் கொஞ்சம் ஃப்ரீயா ஃபீல் பண்ணிகிட்டிருக்கேன்.."

"இல்ல வெங்கட், அப்பா டெல்லி போயிருக்காராம். அம்மா கூப்பிடுறாங்க.. எல்லா வேலையும் அப்படியே கிடக்குதுல்ல.. நீ கொஞ்சம் அதுல கான்செண்ட்ரேட் பண்ணேன். நான் வேணும்னா இந்த மந்த் எண்ட்ல இன்னொரு தடவை வர்றேன்.. என்ன சொல்றே.?"

யோசனையில் மெதுவாக தலையாட்டியவாறே "..டீல்.."

அவனது வலது கை விரல்களைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தவள் மெதுவாக அவன் கண்களைப் பார்த்து புன்னகைத்தாள்.

"ஈவினிங் வெளியே எங்காவது போலாமா?"

அவளுக்கு பதில் சொல்ல வாயெடுக்கவும் செல்போன் அழைத்தது. லைனில் அவனது அப்பா ராஜகோபால், தொழிற்சாலையிலிருந்து. கண்களிலேயே அவளிடம் அனுமதியை வாங்கிவிட்டு போனை எடுத்தான்.

"சொல்லுங்க டாடி.."

"நாளைக்கு வர்றதா இருந்த ப்ரேஸில் கிளையண்ட்ஸோட இண்டியன் ஷெட்யூல்ல சேஞ்ச்சாம். ஏதோ அவசர வேலை இருந்ததால இன்னிக்கு ஆஃப்டர்நூனே வந்துட்டாங்க.. அவங்களுக்கு ஓகேயாம். வீக்48ல சாம்பிள்ஸ் வேணும்கிறாங்க. நானே பேசிமுடிச்சுட்டேன். ஆனா மிஸ்டர். ஜெர்மி உன்னைப் பார்க்கணும்ங்கிறாரு. ஒரு 10 நிமிஷம் வந்துட்டு போயிடுறயா.?"

"ஷ்யூர் டாடி.. இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்"

"இல்லல்ல, நீ ட்ரைவ் பண்ணவேண்டாம். நான் அல்ரெடி, என் ட்ரைவரை அனுப்பியிருக்கேன். இன்னும் ஃபைவ் மினிட்ஸ்ல வந்துடுவான். ரெடியா இரு. போகும் போது வேணும்னா என் காரையே எடுத்துக்கோ.."

"ஓகே டாடி, அப்போ நாளைக்கு நான் வரவேண்டியிருக்காதா?"

"தட்ஸ் யுவர் சாய்ஸ்.! புது ப்ராஜக்ட் வேலையா நட்ராஜனோட மீட்டிங் ஷெட்யூல் இருக்கு.. பாத்துக்கோ" மெலிதாக சிரித்துக் கொண்டே போனை வைத்தார் ராஜகோபால்.

"அப்போ நாளைக்கு ஆஃபீஸ் போகவேண்டாமாமா?" மினி கேட்டாள்.

"இல்லை, போன வாரமே நடந்திருக்கவேண்டிய இண்டர்னல் மீட்டிங் ஒண்ணு ரீஷெட்யூல் பண்ணியிருக்கோம். ஆனா முக்கியமா பிளான் பண்ணினது ப்ரேஸில் கிளையண்ட்ஸ் விசிட்தான். அதை இன்னிக்கு முடிச்சுட்டு வந்துடறேன். நாளைக்கு போகணுமான்னு அப்புறம் டிஸைட் பண்ணிக்கலாம்"

அடுத்த ஐந்தாவது நிமிடம் அப்பாவின் காரில், அவரது ட்ரைவர் குமார் இவனை பிக்அப் பண்ணிக்கொள்ள வந்துவிட்டார். இவன் மினியிடம் 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவதாக கூறிவிட்டு கிளம்பினான்.

அடுத்த முப்பதாவது நிமிடம் கார், பைபாஸில் ஸ்ரீபெரும்புதூரை நோக்கி பறந்துகொண்டிருந்தது. லாப்டாப்பை மூடி பின் சீட்டில் போட்டுவிட்டு வெங்கட், ட்ரைவர் குமாரிடம் பேச்சுக்கொடுத்தான்.

"குழந்தைங்க எப்பிடி இருக்காங்க குமார்?"

"நல்லாயிருக்காங்க ஸார்"

"எத்தனை தடவை சொல்றது குமார். ஸார் சொல்லாதீங்க, பேர் சொல்லி கூப்பிடுங்கன்னு.."

சிரித்துக்கொண்டே குமார், "சரி தம்பி. ஆனா யாராவது கெஸ்ட் முன்னாடி அது மாதிரி சொல்லிடப்போறேன்.."

"அதனால என்ன.? ஆமா, பெரியவன் முத்து என்ன படிக்கிறான் இப்ப.?"

"செவன்த் படிக்கிறான். நல்லாப் படிக்கிறான், 3 ராங்க்குள்ள வந்துடுவான் தம்பி"

"நல்லா படிக்கச்சொல்லுங்க, அக்காவ கேட்டதாச் சொல்லுங்க. ஒரு நாள் சண்டே எல்லோரையும் கூப்பிட்டுட்டு வாங்களேன். பார்த்து ரொம்ப நாளாகுது.."

"சரி தம்பி" குமார் 20 வருடங்களாக ராஜகோபாலிடம் ட்ரைவராக இருக்கிறார். சிறு வயதில் வெங்கட்டை பள்ளிக்கு நாள் தவறாது அழைத்துச் சென்றவரே அவர்தான். இவன் என்றால் அவருக்கு ரொம்பப் பிரியம். இன்றைக்கும் குமார் இல்லையெனில் ராஜகோபால் அவரே ட்ரைவ் பண்ணுவாரே தவிர வேறு யாரையும் அவரது காரை ட்ரைவ் செய்ய அனுமதித்ததில்லை.

"என்ன தம்பி, அப்பாவும் இதப்பத்தி பேசவே மாட்டேங்கிறாங்க. நீங்களும் அமைதியாவே இருக்கீங்க. பொண்ணுதான் யார்னு முடிவாயிடுச்சுல்ல, கல்யாணம் பண்ணிக்கிறதுதானே.. வயசு கூடிக்கிட்டே போகுதில்ல?"

கொஞ்சம் சிரித்துக்கொண்டே, "எனக்கு என்ன அவசரம்? இன்னும் 2 வருஷம்தான் போகட்டுமே.. இல்ல குமார், புது ஃபாக்டரி கட்டி முடிஞ்சதும் கல்யாணம்தான்"

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?"

"வேகமா நடக்குது. அடுத்த ஜூலைக்குள்ள முடிக்கணும்னு பிளான் பண்ணியிருக்கோம்"

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?" குமாரின் குரல் மாறியிருந்தது.

"சொல்றேன்ல குமார், அடுத்த ஜூலைன்னு.."

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?" சத்தமும், தொனியும் மாறி அடித்தொண்டையிலிருந்து குரல் அனலாக வந்தது.

அடுத்த விநாடியே வெங்கட்டுக்கு சகலமும் ஆடிப்போனது. ஜிஆர்டியில் ப்ரவீன் நிகழ்வு நினைவிலாட திகீரென இதயம் படபடக்க கத்தினான்.

"குமார்.. ஸ்டாப் தி கார்.."

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?" குமாரின் கால் ஆக்ஸிலேட்டரில் அழுந்தியபடியே இருக்க கைகள் ஸ்டியரிங்கை விட்டு டாஷ்போர்டில் இருந்த அன்றைய பேப்பரை எடுத்து வசதியாக ஸ்டியரிங் மேல் வைத்து பேனாவை எடுத்து அதில் கிறுக்க ஆரம்பித்தன.

"குமார்.. ஸ்டாப்.. தி.. கார்.." உச்சபட்ச டெசிபலில் கத்திக்கொண்டே குமாரின் இடது தோளைப் பற்றி உலுக்கினான்.

"ஃபாக்டரி வேலை எப்ப முடியும் தம்பி?" பேப்பரை இடது புறம் இவனை நோக்கி வீசினார் குமார்.

கார் அடுத்த இரண்டே விநாடிகளில் வந்த மீடியன் ப்ரேக்கில் ஒரு அம்பைப்போல துளி வேகமும் குறையாமல் வலது புறம் ட்ராஃபிக்குக்கு எதிர்புறமாய்ப் பாய்ந்தது. எதிரே வந்த கண்டெயினர் லாரி நொடியில் அதிர்ந்து வலது புறம் ஒதுங்க யத்தனித்துத் தோற்க, கார் தனது வலது புறப் பாதியை, லாரியின் வலது புறப் பாதியில் முழு வேகத்துடன் செருகியது. வேகம் ஒரு கத்தியைப்போல காரின் வலது புறத்தை அறுத்துத் தள்ள.. ஸ்டியரிங், .:பிரேம்ஸ் என ஒரு இரும்புக்குழம்பு, ரத்தம் சிதறித்தெறிக்க குமாரை ஒரே விநாடியில் நசுக்கித் தள்ளியது. எல்லாம் சில விநாடிகளில் முடிந்திருந்தது. குமாரின் ரத்தம் வெங்கட்டின் உடையில் சிதற, சகல அதிர்விலும் ஒரு மயக்கத்தின் ஆழத்துக்குப் போய்க்கொண்டிருந்தான் அவன்.

DSC00115

தொடரும்..

(பி.கு : ஐந்து பகுதிகள் கொண்ட மினி தொடரின் இரண்டாம் பகுதி இது. அடுத்த மூன்று பகுதிகளும் இந்த வாரத்திலேயே.. கருத்துகள் கூறவும்)

.

39 comments:

கனவுகள் விற்பவன் said...

பயமா இருக்கு...Part-3 க்காக ஆர்வமாய் Waiting..தொடருங்கள்...

கனவுகள் விற்பவன் said...
This comment has been removed by the author.
கனவுகள் விற்பவன் said...

2பேரும் ஒரே matterஅ கிறுக்கிருக்காங்க..."Stop To __" ங்றா மாதிரி...
சீரியஸா போய்ட்டுருக்கு.கடைசில காமெடி கீமெடி பண்ணிடாதீங்க ஆதி!!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

nice

tempo!!!!!

me the waiting for next part

கெக்கே பிக்குணி said...

அந்த பேய் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கா, எப்படியாவது மினியை சீக்கிரம் கல்யாணம் செய்ய வைக்கணும்னு?

இண்ட்ர்நேஷனல் பேய் கதையா இருக்கும் போலிருக்கே?

சுசி said...

”அடுத்த பகுதி எப்போ எழுதுவிங்க -
ஆதி?”

”அடுத்த பகுதி எப்போ எழுதுவிங்க -
ஆதி?”

”அடுத்த பகுதி எப்போ எழுதுவிங்க -
ஆதி?”

அய்யய்யோ.. இப்டி புலம்ப விட்டிங்களே..

திகிலோட வெயிட்டிங்..

Balaji saravana said...

செம திகில் ஆஆஆதி!

முகிலன் said...

நல்ல விறுவிறுப்பா போவுது சார்.. வேகமா அடுத்த பகுதி குடுங்க.

sriram said...

அட்டகாசம் ஆதி, அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்..

எல்லா பகுதியும் எழுதி முடிச்சிட்டீங்கன்னா, மின்மடலில் அனுப்பிடுங்களேன், வெயிட் பண்ண முடியல.
ராஜேஷ் குமாரின் நாவல்கள் அனைத்தையும் (நான் படித்த வரை) ஒரே மூச்சில் படிப்பதே என் வழக்கம். அதே இண்டரஸ்ட் இந்த தொடரில் வரவழைத்து இருக்கீங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

R Gopi said...

பின்னூட்டத்தைத் தலைப்பில் இருந்து திருடி இருக்கிறேன். ஒருமையில் விளிப்பதை மன்னிக்கவும்.

என்ன செய்யப் போகிறாய் ஆதி?

மின்னுது மின்னல் said...

இது வரை எழுத்தாத புதிய நடையில் நல்லா இருக்கு ஆதி

Cable Sankar said...

raightu

sivakasi maappillai said...

interesting....

thigil mannan aathi...

கார்க்கி said...

//சுசி August 23, 2010 3:13 AM
”அடுத்த பகுதி எப்போ எழுதுவிங்க -
ஆதி?”

”அடுத்த பகுதி எப்போ எழுதுவிங்க -
ஆதி?”

”அடுத்த பகுதி எப்போ எழுதுவிங்க -
ஆதி?”

அய்யய்யோ.. இப்டி புலம்ப விட்டிங்களே..

திகிலோட வெயிட்டிங்.//

ரிப்பீட்டேய்

Mohan said...

அடுத்த கொலைக்கு ஆவலோடு வெயிட்டிங்!

Thenral said...

Suspese nallaa irukku.Adutha paguthiyai edhirnokki....!

பாலா அறம்வளர்த்தான் said...

இந்த போட்டோவில் எழுதி இருப்பது பாதி நியூஸ் பேப்பரில் இருக்கிறது - மீதி எழுதி இருப்பது இன்னொரு பேப்பரிலா டேஷ்போர்டு ஸ்டீரிங் ... குழப்பமாக இருக்கிறதே..அல்லது இதில்தான் க்ளூ இருக்கிறதோ?

பிற்பகுதியில் தடதடக்க வைக்கிறீர்கள். ஆனால், முன் பகுதியில் இன்னமும் கொஞ்சம் வேறு நடையில் (உங்கள் ரொமேன்டிக் நடையில் :-) ) எழுதி இருக்கலாமோ என்று தோன்றியது.

வானம்பாடிகள் said...

ம்ஹூம். இது குரல்ல இல்ல ஆதி பேனால புகுந்திருக்கு ஆவி. யப்பே. அடுத்த சங்கு யாருக்கு. :-??

arul said...

Amazing.....Dont let down the tempo till the end.

Rajalakshmi Pakkirisamy said...

Interesting....

மவ ராசன்...... said...
This comment has been removed by the author.
மவ ராசன்...... said...
This comment has been removed by the author.
மவ ராசன்...... said...

ராஜேஷ் குமாரின் நாவல்கள் அனைத்தையும் (நான் படித்த வரை) ஒரே மூச்சில் படிப்பதே என் வழக்கம். அதே இண்டரஸ்ட் இந்த தொடரில் வரவழைத்து இருக்கீங்க
same blood

GHOST said...

eduku inda varam varai wait panrenga, plz ippove post pannungalen, romba interesting ga iruku

அறிவிலி said...

மொளகா கடிச்சாப்புல இருக்கு.

அருண் said...

நல்லாயிருக்கு,என்ன ட்விஸ்ட்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.கனவுகளை விற்பவன் சொன்ன மாதிரி கடைசியில காமெடி பண்ணிராதிங்க.

மறத்தமிழன் said...

ஆதி,

விருவிருப்பு..

சுவாரசியம் குறையாமல்...

நல்லாயிருக்கு..

அந்த பொன்னு பேரு மினியா ? இல்ல முனியா?

5 பகுதி வரை காத்திருக்க வைப்பது ரொம்ப ஓவர்.

அடுத்தபகுதியில் முடித்து விடுங்கள்...

வாழ்த்துகள்...

இரும்புத்திரை said...

நான் சொன்ன மாதிரியே தொடரும் போட்டு அடி வெளுக்குறீங்க போல.

ஆனாலும் சைக்கிள் அளவுக்கு இந்த கதை வோர்த் இல்ல

நாய்க்குட்டி மனசு said...

thriller எழுதுறது உங்களுக்கு சூப்பெரா வருது ஆதி ,
well done

பரிசல்காரன் said...

என்னய்யா இவ்ளோ மிரட்டலா போகுது தொடர்?

சுசி.. உங்க கமெண்ட்டை மிகவும் ரசிச்சேன்... அந்த கதைல வர்ற மாடுலேஷன்லயே உங்க பின்னூட்டத்தையும் படிச்சேன்..!

இராமசாமி கண்ணண் said...

சூப்பர் :)

நாடோடி இலக்கியன் said...

ஆதி,
மிர‌ட்ட‌றீங்க‌.செம்ம‌ விறுவிறுப்பு..
அடுத்த‌ பார்ட்டுக்கு வெயிட்டிங்..

Raghav said...

அடுத்த பகுதிக்கு காதிருகிறோம்...
பின்ன்றீங்க கதைல...

சைக்கிள் காணாம போன கதைகும் இதுக்கும் என்ன ஒரு அசுர வளர்ச்சி!!!

ஆனா எனக்கு அந்த கதையும் நல்லா இருந்துச்சு, மோசமா இல்ல :)

முத்துசிவா said...

எனக்கு என்னவோ வெங்கட் தான் ப்ரவீன போட்டு தள்ளிருப்பாருன்னு தோணுது தல :-)

சந்தோஷ் = Santhosh said...

நல்லா விறு விறுப்பா போவுது.. வெயிட்டிங் பார் த நெக்ஸ்டு பகுதி...

திருஞானசம்பத்.மா. said...

//.. யப்பே. அடுத்த சங்கு யாருக்கு. :-?? ..//

மினிக்கு தான்..!!

வணங்காமுடி...! said...

அய்யா ஆதி,

அடுத்த பகுதி எப்போ வரும் ?

ஆஃபிஸ்ல உக்காந்து கிட்டு, அடிக்கடி ஓபன் பண்ணி பாக்க முடியல, பாக்காம இருக்கவும் முடியல...

சீக்கிரமா வாங்கய்யா...

--சுந்தர்
ருவாண்டா

Saravana Kumar MSK said...

interesting.. wen 'll b d next??

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கனவுகள்விற்பவன் (யாவாரம் நல்லா போகுதா?)

நன்றி பாலகுமாரன்.

நன்றி சுசி. (மூணாவது போட்டாச்சு)

நன்றி பாலாஜி.
நன்றி முகிலன்.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி கோபி.
நன்றி மின்னல்.
நன்றி கேபிள்.
நன்றி சிவகாசி.
நன்றி கார்க்கி.
நன்றி மோகன்.
நன்றி தென்றல்.

நன்றி பாலா. (அது முழுதும் பேப்பர்தான். சிவப்பு நிறத்தில் இருப்பது பேப்பரில் உள்ள ஏதோ விளம்பரம்)

நன்றி வானம்பாடிகள்.

நன்றி அருள். (முயற்சி பண்றேன் :-))

நன்றி ராஜலக்ஷ்மி.
நன்றி மவராசன்.

நன்றி கோஸ்ட். (இன்னும் எழுதி முடிக்கலைங்க. ஹிஹி)

நன்றி அறிவிலி.
நன்றி அருண்.
நன்றி மறத்தமிழன்.
நன்றி அரவிந்த்.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி பரிசல்.
நன்றி இராமசாமி.
நன்றி இலக்கியன்.
நன்றி ராகவ்.
நன்றி முத்துசிவா.
நன்றி சந்தோஷ்.
நன்றி சம்பத்.
நன்றி வணங்காமுடி.
நன்றி சரவணா.