Thursday, August 26, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -3

பகுதி -1

பகுதி -2

வெங்கட் ‘மியாட்’ மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலின் இண்டென்ஸிவ் கேர் யூனிட்டில் இரண்டாவது முறையாக கண்விழித்த போது கலங்கிய கண்களுடன் கண்ணிலும் நினைவிலும் முதலில் பட்டவள் மினி. கூடவே நின்று கொண்டிருந்தது அப்பா, அம்மா, ஒரு நர்ஸ், டாக்டர் தேவராஜன். சில விநாடிகளிலேயே மீண்டும் நினைவுகளில் அந்த கார் ஆக்ஸிடெண்ட் உறைத்து உடல் உதறியது. அவனுக்கு அதை இப்போது நினைக்கவும் உடலும் உள்ளமும் நரகத்தைத் தொட்டு வந்தது போல ஒரு அதிர்ச்சி. குமார் பிழைத்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை.

“என்னாச்சு டாடி.?” மெதுவாக கேட்டான்.

ராஜகோபால் டாக்டரைப் பார்க்க டாக்டர் தேவராஜன் இவனருகே வந்தார்.

“கூல் வெங்கட். எதையும் நினைச்சு கன்ஃப்யூஸ் பண்ணிக்காதீங்க.. யுர் ஸோ லக்கி, ஒரு கீறல் கூட இல்லாம தப்பிச்சிருக்கீங்க. அன்ஃபார்சுனேட்.. ட்ரைவர் குமாரை காப்பாத்த முடியலை. மெண்டலி ரொம்ப டிஸ்டர்ப் ஆயிருப்பீங்க. ரெண்டு நாள் நல்லரெஸ்ட் எடுத்துக்கங்க. அப்புறம் எல்லாத்தையும் பேசிக்கலாம்..”

“அப்பா..”

“சொல்லு வெங்கட்..” மெதுவாக அருகில் வந்தார்.

“குமார்..” குரல் உடைந்தது வெங்கட்டுக்கு. கண்களில் கண்ணீர் பொங்கியது. தொடர்ந்தான், “யு லாஸ்ட் எ கிரேட் மேன் டாடி..”

கண்கள் தளும்ப அவனது கைகளைப் பற்றிக்கொண்டு, “நோ வொர்ரிஸ் வெங்கட். இப்போ உனக்கு தேவை பீஸ்.. டேக் கம்ப்ளீட்ரெஸ்ட்..”

அம்மா அவனது நெற்றியில் விழுந்த தலைமுடியைக் கோதிவிட்டு, “இப்போ எப்பிடி இருக்குது வெங்கட்?”

“ஒண்ணும் பிராப்ளம் இல்லைம்மா. ஐம் ஆல்ரைட்..”

“குமார் பத்தி வொர்ரி பண்ணிக்காதே. ஹிஸ் ஃபேமிலி இஸ் அவர்ஸ் நௌ..”

டாக்டர் தேவராஜன் கண்களால் சைகை காண்பிக்க மினியைத் தவிர அனைவரும் கிளம்ப எத்தனித்தனர். மினி அவனது இடதுபுறம் அவனது இடது கரத்தை தன் கைகளுக்குள் வைத்தவாறே கட்டிலுக்கு அருகே முட்டியிட்டு அமர்ந்திருந்தாள். வெங்கட் மீண்டும் அப்பாவை அழைத்தான்.

“யெஸ் வெங்கட்.."

"ஐ’வ் மெனி திங்ஸ் டு டிஸ்கஸ். இன்னிக்கு ஈவினிங்கே நான் சைக்யாட்ரிஸ்ட் செல்வகுமார் அங்கிளைப் பாக்கணும். அரேஞ்ச் பண்ணச் சொல்லுங்க..”

தேவராஜனை நோக்கியவாறே, “வி அல்ரெடி கெஸ்டு ஸோ, அவர்கிட்ட பேசிட்டேன். அவர் ஒரு கான்பரன்ஸ் விஷயமா பெங்களூர்ல இருக்கார். உனக்கு ஆக்ஸிடெண்ட்ன உடனே கிளம்பினவர்தான்.. நான்தான் உனக்கு ஒண்ணும் பிரச்சினையில்ல, கான்பரன்ஸ் முடிச்சுட்டே வாங்கன்னு சொல்லிட்டேன். நாளை மறுநாள் காலை இங்க இருப்பார். நீயும் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தமாதிரி இருக்கும்னு தேவராஜனும் ஃபீல் பண்றார்..”

இவன் மெலிதாக தலையாட்ட, அனைவரும் வெளியேற.. இப்போது மினியின் பிடி இறுகியது. கைகளை விடாமலே எழுந்தவள் பக்கவாட்டில் நின்றவாறே நெஞ்சோடு நெஞ்சணைத்து அவன் கழுத்தில் முகம் புதைத்தாள். அவள் பதற்றத்தை அவளது நடுக்கத்திலேயே உணர்ந்தான் அவன். “ஐம் ஸ்கேர்டு வெங்கட்..” மெதுவாக முனகினாள் காதோடு. மெதுவாக தலையை உயர்த்தி கன்னத்தில் உதடுகளால் உராய்ந்து மேலெழுந்து உதடுகளை உரசியபடியே அவன் கண்களைப் பார்த்தாள். அவளது கண்கள் தளும்பியது. அவளது முதுகில் இடது கையை வைத்து மெலிதாக அழுத்தியபடியே, “கார் ரைட்ல பாயும் போது உன் நினைப்புதான் மினி ஃபிளாஷ் மாதிரி. எங்கே உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு பயந்துட்டேன்.. நோ டியர்ஸ்..”

“கிஸ் மீ..”

பேச்சுக்களற்ற சில நிமிடங்களுக்குப் பிறகு மெதுவாக ஆரம்பித்தான். “அந்த பேப்பரை நான் திருப்பவும் பாக்கணும். எங்க இருக்கு அது?”

“அது போலீஸ்கிட்டதான் இருக்கு. ப்ரவீன் கேஸ்ல இருந்த டிஷ்யூ பேப்பரும் இதுவும் கம்ப்ளீட் சிமிலாரிடி. நான் உனக்கு அதை ஈவினிங் கொண்டு வரச்சொல்றேன். எப்பிடியும் உன்கிட்ட நாளைக்குதான் என்கொயரி பிளான் பண்ணியிருக்காங்க. உங்கஅப்பா ஆர்டர்..”

“ஐம் ஆல்ரைட் மினி. இப்போவே வீட்டுக்குப் போகலாம்னு கூட தோணுது.. ஓகே லீவ் தட். அந்த பேப்பர்ஸ்ல என்ன இருந்ததாம்.? சொன்னாங்களா.?”

“இல்லை..”

“அவங்க கண்டுபிடிச்சாங்களா தெரியலை. பட் ஐ நோ தட். அதுல இருந்த வேர்டிங்ஸ் ‘Stop to survive’ அதற்கு முன்னாடி இருந்த கிறுக்கல் அரைகுறையான பென்சின் ரிங்க்ஸ். டிஷ்யூ பேப்பர்ல ரெண்டுக்கும் நடுவுல இருந்தது N அப்படின்னு எடுத்துகிட்டா இதுல இருந்தது a. மொத்தத்துல அந்த எழுத்துக்களும் ரிங்ஸும் ‘ஸோடியம் ஹைட்ராக்ஸைடை’ (NaoH) டிநோட் பண்ணுதுன்னு ஈஸியா புரிஞ்சுக்கலாம். ஆனா எனக்கு இன்னும் நிறைய குழப்பங்கள் இருக்கு. திஸ் இஸ் சம்திங் ஹாரிபிள் அண்ட் ஸ்ட்ரேஞ்ச். அங்கிள் செல்வக்குமார்தான் இதற்குச் சரியான ஆள். ஹி இஸ் எ ஃபேமஸ் சைக்யாட்ரிஸ்ட் அண்ட் ஸ்காலர் இன் திஸ் அனானிமஸ் திங்ஸ். எங்க அம்மாவோட ரிலேடிவ். உனக்குத் தெரியுமா அவரை.?”

"இல்லை.."

"அவர் வந்ததும் நான் பேசிக்கறேன். யு டோண்ட் வொர்ரி.."

"அப்படின்னா புது ஃபாக்டரியை ஸ்டாப் பண்றதுக்குதான் இந்த வார்னிங்கா வெங்கட்?"

"ஐ கெஸ் ஸோ. பட் தட்ஸ் மை ட்ரீம் மினி. ஐ டோண்ட் வாண்ட் டு ஸ்டாப் தட் அட் எனி காஸ்ட்.. ஐ ஹோப் தெர் வில் பி எ சொல்யூஷன் ஃபார் திஸ் பிராப்ளம். அண்ட் தட்ஸ் டூ ஃப்ரம் செல்வகுமார் அங்கிள்.."

அன்றிலிருந்து நான்காவது நாள் அடையாரில் வெங்கட், அவனது அங்கிள் சைக்யாட்ரிஸ்ட் 'டாக்டர் செல்வகுமாரி'ன் கிளினிக்கில் அவருக்கு முன்னால் அமர்ந்து கொண்டிருந்தான். நல்ல பெரிய 15mm தடிமனில் அகன்ற கண்ணாடி மேஜை. முன்னாலிருப்பவரை தொடமுடியாத அளவு அது நல்ல விஸ்தீரமாக இருந்தது. செல்வகுமார் நல்ல பழுத்த பழமாக இருந்தார். தலையில் இருந்த முடிகளை எண்ணிவிடலாம். அழகிய ஃபிரேமில் சிறிய கண்ணாடி அணிந்திருந்தார். அதனுள் நல்ல கூர்மையான, தீர்க்கமான கண்கள். கம்ப்ளீட் ஷேவ் செய்து பளீரென இருந்தார். பார்த்தவுடன் அவரை பிடித்துப்போகும். அவர் சொல்வதை உடனே கேட்டுக்கொள்ளலாம் போன்ற மெஸ்மரைஸிங்கான முகம். நல்ல உயரம். அவருக்கு முன்னால் கால்வாசி திறந்திருந்த அவரது லாப்டாப், அதற்கு இடது புறம் இரண்டு ஃபைல்கள், வலப்புறம் ஒரு கடிகாரத்துடன் கூடிய மேஜை அலங்காரப் பொருள், அவரது ஸ்டெதாஸ்கோப் என கிளீனாக இருந்தது அவரது மேஜை.

"சொல்லு வெங்கட். ஹவ் யூ ஃபீல் நௌ.?"

"கன்ஃப்யூஸிங் அங்கிள். தோணுறது எல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டேன். மேல நீங்கதான் சொல்லணும்"

"ரெண்டு பேப்பர்ஸையும் பாத்தேன். ரொம்ப ஆச்சரியமான விஷயம். இது மாதிரி சில விஷயங்கள் என் அனுபவத்தில் இங்க அமானுஷ்ய விஷயங்கள் நடந்திருந்தாலும், இந்த மாதிரி ரொம்ப ஹாரிபிள், கொலைகளை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனா ஃபாரின்ல இந்த மாதிரி நிறைய கேஸஸ் நடந்திருக்கிறதா படிச்சிருக்கேன். உனக்கு ஆவி சமாச்சாரங்கள்ல நம்பிக்கை இருக்கா இல்லையா வெங்கட்?"

"இப்போ நீங்க என்ன சொன்னாலும் நம்புற நிலைமையிலதான் நான் இருக்கேன்"

"அந்த மாதிரியான நிறைய விஷயங்கள் இருக்குது வெங்கட். இது அது மாதிரி ஒரு விஷயம்தான்னு நான் நினைக்குறேன். நீ ஏற்கனவே சொன்னமாதிரி மோட்டிவ் உன்னோட புது ஃபாக்டரிதான். உன்னோட அல்லது உன் அப்பாவோட பிஸினெஸ் எதிரிகள், அவங்க உயிரோட இருப்பவங்களாக, அல்லது இறந்து போனவங்களாகவும் இருக்கலாம். அல்லது வேறு மாதிரி யோசிச்சா நீ ப்ரொட்யூஸ் பண்ணப் போற ஸோடியம் ஹைட்ராக்ஸைடு, அதோட பை பிராடக்ட்ஸ் எல்லாவற்றோட சைட் எஃபெக்ட்ஸ் பிடிக்காத ஒருவராகவும் இருக்கலாம்.."

"அது சம்பந்தமா டெக்னிகல் டீடெய்ல்ஸ் வேணுமா அங்கிள்?"

"அது பற்றி அப்புறமா பேசலாம். முதல்ல இதற்கு சொல்யூஷன் என்னன்னு பார்ப்போம். எனக்கு நேரடியா இதுல அனுபவம் இல்லை. மும்பைல என்னோட படிச்ச ஒரு டாக்டர் இருக்கார். அவரை நாம் கன்ஸல்ட் பண்ணுவோம் இன்னிக்கே. அதுக்கு முன்னாடி, என்னோட அட்வைஸ் என்னான்னா இது மாதிரி சம்பவங்கள்ல எதிரியை Xனு வச்சுகிட்டா அதில் பலவகைகள் இருப்பதுதான் சிக்கல். கூட்டமா பலரை கொலை பண்றது, ஒரே நேரத்துல இரண்டு வெவ்வேறு இடத்துல நடக்கிறது, அல்லது நம்பர் 1 அப்பிடிங்கிறதால சம்பந்தப்பட்டவரையே அதாவது உன்னயே கொலைபண்றதுன்னு நிறைய வகைகள் இருக்குது. இந்தக் கேஸ்ல Xக்கு உன்னைக் கொலை பண்றது நோக்கமில்லை. ஆனா ஃபாக்டரியை நிறுத்தணும். வார்னிங் ரொம்ப கிளியரா, பவர்ஃபுல்லா இருக்கு. NaoH ங்கிறதுல Na ஆயிடுச்சு, இத முக்கியமான க்ளூவா எடுத்துகிட்டா இன்னும் இரண்டே வாய்ப்புதான் உனக்கு. கேட்கலைன்னா அடுத்து நீதான். இந்த இரண்டிலும் கூட நீ இழக்கப்போவது உனக்கு வேண்டிய இரண்டு முக்கியமான நபர்களை. அது உன் அப்பாவா இருக்கலாம். ஏன், மினியாகவும் இருக்கலாம். நமக்கு நேரமில்லை, நீ இப்போதைக்கு ஃபாக்டரியை நிறுத்திவைப்பது போல நடிக்கவும் முடியாது. ஏனெனில் நிச்சயம் இது ரொம்ப அப்நார்மல், அனானிமஸ் கேஸ். X சினால் உன்னோட மைண்ட்ல இருக்கறதை ரீட் பண்ணமுடியலாம். என்னோட ஃபைண்டிங்ஸ்ல ஒரே நல்ல விஷயம்னா, அது கூட கெஸ்தான்.. இதத் தள்ளிப்போட.. ஒண்ணு நீ தனியா இரு. அப்பாவோ, அம்மாவோ, மினியோ.. யாரா இருந்தாலும் சரிதான். இல்லைன்னா, எப்போதும் கூடவே இரண்டு பேருக்கு மேல ஆட்கள் இருக்குற மாதிரி பாத்துக்க. அதுவும் 24 அவர்ஸ் ப்ரிஸ்க்கா யாராவது உன் ஃப்ரெண்ட்ஸ் 3 பேர பக்கத்துல அலர்ட்டா வச்சுக்க.. என்னோட கெஸ் படி இரண்டு பேருக்கு மேல உன் கூட யாரும் இருந்தா இதுமாதிரி நடக்காது. அப்படியே யாராவது இது மாதிரி பிகேவ் பண்றமாதிரி இருந்துச்சுன்னா செகண்ட்ஸ் கூட வேஸ்ட் பண்ணாம அவங்கள ப்ரொடக்ட் பண்ணனும். சில விநாடிகள்தான் ரெகவர் ஆகிடுவாங்க. அஃப்கோர்ஸ், என்ன நடந்துச்சுன்னு கூட அவங்களால ஞாபகப் படுத்திக்க முடியாது.."

"பயமா இருக்கு அங்கிள். அப்பாவும், எல்லாரும் ரொம்ப பயந்து போய் இருக்காங்க. எப்படி இதிலிருந்து எஸ்கேப் ஆகிறது.?"

"எனக்கு இன்னும் இரண்டே நாள் மட்டும் டைம் கொடு. விஷயத்தை வெளியே இழுத்துப்போட்டுடறேன்.."

"யு'ர் மை ஒன்லி ஹோப் அங்கிள்.."

"டோண்ட் வொரி. தட்ஸ் மை ட்யூட்டி."

"மும்பை டாக்டரோட எப்ப பேசறது? நான் இருக்கணுமா அங்கிள்.?"

"டோண்ட் வொரி. தட்ஸ் மை ட்யூட்டி." டாக்டர் செல்வகுமாரின் குரல் மாறியது.

"அங்கிள்.."

"டோண்ட் வொரி. தட்ஸ் மை ட்யூட்டி." கரகரப்பான குரல் ஒலிக்க, பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்து, மேஜை மேலிருந்த அவரது ப்ரிஸ்கிரிப்ஷன் பேப்பரில் வேகமாக கிறுக்க ஆரம்பித்தார்.

"அங்கிள், கண்ட்ரோல் யுவர் செல்ஃப்.." வெறிவந்தவனைப் போல கத்திக்கொண்டே சேரை பின்னுக்குத்தள்ளி எழுந்து டேபிளைச் சுற்றிக்கொண்டு அவரை நோக்கி ஓடினான்.

"டோண்ட் வொரி. தட்ஸ் மை ட்யூட்டி." அந்த வயதிலும் அவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது தெரியவில்லை. எழுதிய பேடை முன்னோக்கி தள்ளிவிட்டு எழுந்தவர், வெங்கட்டின் பிடியில் சிக்குமுன்னரே.. யாரோ தலையைப்பிடித்து ஓங்கி மேஜையில் அடிப்பதைப் போல நடு மேஜையில் ஒரு கடும் வேகத்தில் மோதினார். ஒரே மோதல்தான்.. ஸ்கல் உடைந்திருக்கவேண்டும், அத்தனை தடிமனான கண்ணாடி மேஜை மோதிய இடத்திலிருந்து மூன்று பெரும்பாளமாக உடைந்து அதன் கால்களிலிருந்து நழுவி உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் சரிய அதன் மீதே ஒரு வெட்டப்பட்ட வாழையைப் போல ரத்தக் குழம்போடு சரிந்தார்.

DSC00117

தொடரும்..

(பி.கு : ஐந்து பகுதிகள் கொண்ட மினி தொடரின் மூன்றாம் பகுதி இது)

.

35 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஸாரி ஃபிரெண்ட்ஸ்.. காக்க வைக்கவேண்டும் என்பது நோக்கமில்லை. வீட்டில் நெட் வேலைசெய்யவில்லை, அலுவலகத்தில் இயலாது. ஆகவே தாமதமாகிவிட்டது. தொடருக்கான தொடரும் ஆதரவுக்கு நன்றி.

மின்னுது மின்னல் said...

மீ ஃபஸ்ஸ்டு

படிச்சிட்டு வருகிறேன்

Thenral said...

Super!Swarasyamaa poguthu."Marma desam" effectla irukku.I guess minithan culprita?(titleai vaichu keten).Seekiram mudinga boss!

SenthilMohan said...

ராஜேஷ்குமார் novel மாதிரி இருக்குதுங்க. எனக்கு venkat மேல டவுட்.
அடுத்து Suicide பண்ணப்போவது யார் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு குச்சி மிட்டாய், குருவி ரொட்டியுடன் சேர்த்து அண்ணன் ஆதி அவர்களின் சிறப்பு பரிசு ஒன்றும் காத்திருக்கின்றது.

Mohan said...

கதை மிகவும் நன்றாகப் போய்கொண்டிருக்கின்றது.பொதுவாக டாக்ட‌ரருங்க கையெழுத்து புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இருக்கும். ஆனால் மற்ற இருவர் எழுதியதை விட டாக்டர் எழுதியிருப்பது எளிதில் புரிந்துகொள்ளும்படி உள்ளது:-).அடுத்த பகுதிக்காக ஆவலுடன்!

Anonymous said...

சுவாரஸ்யாமா போயிட்டு இருக்கு. மூணையும் படிச்சேன். ஆனா அந்த பேப்பர்ல கிறுக்கியிருக்கறது என்னான்னே தெரியலை

Rajalakshmi Pakkirisamy said...

Excellent....Interesting...

rajeshwaran said...

Really Superb..
Its very interesting...
The story and narration (third part) is perfect.
unexpected turning points that is death of that doctor selvakumar makes the story more effective and interesting..

சந்தோஷ் = Santhosh said...

ஆதி நல்ல விறுவிறுப்பா போவுது.. டாக்டருக்கே ஆப்பா நான் இதை யோசிக்கலை.. அருமையான திருப்பம்..

ரொம்ப டெரரா யோசிக்கிறயா நீயி.. :)

Balaji saravana said...

ஆதி சான்சே இல்ல, செம சூப்பரா போகுது! 5 பகுதிதான?

வணங்காமுடி...! said...

வெங்கட், மினி கூட ஹாஸ்பிடல்ல பேசிகிட்டு இருக்கும்போதே, அடுத்தது மினி தானோன்னு நினைச்சு குப்புன்னு வேர்த்துருச்சு. பக்கு பக்குன்னு நெஞ்சு அடிச்சுகுது...

என்னங்க இப்படி பயமுறுத்துறீங்க...

அடுத்த பகுதிக்காக ஆவலோட வெயிட்டிங்....

--சுந்தர்
ருவாண்டா

அதிஷா said...

இது புத்தகமாக எப்போ வெளிவரும்!

மறத்தமிழன் said...

ஆதி,

நல்ல விவரிப்பு..

நீங்க டேபிள் கண்ணாடி15 னு பில்டப் கொடுக்கும்போதே நினைச்சேன்..அது உடையப்பொகுதுன்னு..அதே மதிரி உடைச்சிட்டங்க...

எல்லாத்துக்கும்...மினிதான் காரணமா..

இராமசாமி கண்ணண் said...

சூப்பருங்க :)

vinu said...

i doubt this all does by MiNI because who ever start talk about her immediately they lose their control and commits suside lets see aht's the end.........


interestingly go...........[this DOTs meants goingggggggggg]

arul said...

Aathi...You are blasting....

Dont allow us to blast you in the climax.

நர்சிம் said...

ஹாட் ஆதி.

sriram said...

என் யூகம் சரியென்றால், கொலைகாரன் வெங்கட்தான். சரிதானே ஆதி??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வானம்பாடிகள் said...

ஒரு ஒரு பாகத்துலயும் ‘கொல்றீரு’:)

மின்னுது மின்னல் said...

எனக்கெனவோ வெங்கட் அப்பா மேல் டவுட் இருக்கு

என்ன செய்யப் போகிறாய் மினி?

:))

பாலா அறம்வளர்த்தான் said...

படபடப்பாத்தான் இருக்கு.

கதை மட்டுமல்ல - இத்தனை பேருடைய எதிர்பார்ப்புகளையும் எப்படி சமாளிக்கப் போகிறீர்களோ என்பதற்காகவும்.

நாய்க்குட்டி மனசு said...

பதிவு முடியப் போகும் போது கை கால் எல்லாம் உதறுது.
அதிக ஆங்கில வசனங்களை தவிர்த்திருக்கலாம் னு எனக்கு தோணுது. keep rocking aathi

சுசி said...

அம்மா.. எனக்கு பயமா இருக்கு..

இருந்தாலும் அடுத்தது யார்னு படிச்சிடுவேன் சாமிய வேண்டிக்கிட்டே..

அடுத்தது எப்போ??

Saravana Kumar MSK said...

i like dis mini.. :))))

பரிசல்காரன் said...

ஆதியின் கதை வேகம்... அதிவேகம்!

வலசு - வேலணை said...

நல்ல விறுவிறுப்பா எழுதுகின்றீர்கள். வாழ்த்துக்கள்

வழிப்போக்கன் - யோகேஷ் said...

விறு விறுப்பா போகுது........

விஜய் ஆனந்த் said...

wow!!!

basheer said...

""நல்ல பெரிய 15mm தடிமனில் அகன்ற கண்ணாடி மேஜை. முன்னாலிருப்பவரை தொடமுடியாத அளவு அது நல்ல விஸ்தீரமாக இருந்தது.""
நெனச்சேன்.
என் யூகம் சரியாயிருக்கும் பட்சத்தில் வெங்கட்டின் அப்பா.
அப்படி இருப்பின் நீங்கள் இதை மாற்றவும் முனையலாம்.
பேனா உங்கள் கையில்.மன்னிக்கவும் தட்டச்சு.

வணங்காமுடி...! said...

Mistrust the obvious-ங்கறது போலீஸ் பாலபாடம். அப்படி பாத்தா, மினி, வெங்கட், வெங்கட்டோட அப்பா இவுங்க யாரும் காரணமா இருக்க முடியாது. ஒரு வேளை, ஆதி தான் இதுக்கெல்லாம் காரணமோ? :-)

--சுந்தர்
ருவாண்டா

sivakasi maappillai said...

நல்லா இருக்குங்க ஆதி....

அருண் said...

பாலா அறம்வளர்த்தான் said...
//படபடப்பாத்தான் இருக்கு.

கதை மட்டுமல்ல - இத்தனை பேருடைய எதிர்பார்ப்புகளையும் எப்படி சமாளிக்கப் போகிறீர்களோ என்பதற்காகவும்//
ஆமா ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கோம்.

vinu said...

from morning to till now i searched every other's blog to find at whom's blog i read this story now only i foung this location success fully, so i plan to put a link in my blog too............


because again i can't search this much far to read the next part of this story


we are waiting pa seekiram next part post pannungaaaaaaaaaaaaaaaaa

ராம்.CM said...

nice.im wait part 4.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மின்னல்.
நன்றி தென்ற‌ல்.
நன்றி செந்தில்.
நன்றி மோகன்.
நன்றி அம்மிணி.
நன்றி ராஜலக்ஷ்மி.
நன்றி ராஜேஷ்வரன்.
நன்றி சந்தோஷ்.
நன்றி பாலாஜி.
நன்றி வணங்காமுடி.

நன்றி அதிஷா. (உன்னையை யாரு இங்க வரச்சொன்னது? ஓடிப்போயிரு)

நன்றி மறத்தமிழன்.
நன்றி இராமசாமி.
நன்றி வினு.

நன்றி அருள். (அவ்வ்வ்வ்வ்)

நன்றி நர்சிம்.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி வானம்பாடிகள்.

நன்றி பாலா. (அதை நினைச்சாதான் பயம்மா இருக்குது. ஆனா முடிவு எப்படியிருந்தாலும் இப்படியொரு எதிர்பார்ப்பை கிரியேட் பண்ணவாவது நம்மால முடியுதேன்னு ஒரு சின்ன மகிழ்ச்சி)

நன்றி சுசி.
நன்றி சரவணா.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி பரிச‌ல்.
நன்றி வேலணை.
நன்றி யோகேஷ்.
நன்றி ஆனந்த்.
நன்றி பஷீர்.
நன்றி சிவகாசி.
நன்றி அருண்.
நன்றி ராம்.