Monday, August 30, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -4

பகுதி -1

பகுதி -2

பகுதி -3

அத்தனை பேரும் ஆடிப்போயிருந்தனர். வெங்கட்சாமிநாதன் அந்த முகம் தெரியாத எதிரியின் மீதான கொலைவெறியில் இருந்தான். அவன் வாழ்நாளில் யார் மீதும் அப்படியொரு கோபத்துடன் இருந்ததில்லை. அண்ணாநகர் கெஸ்ட் ஹவுசில் சிறை வாழ்க்கையைப்போல இருந்தது அவன் நிலைமை. தன்னை இயங்கவிடாமல் செய்ததில் எழுந்த ஆற்றாமை அவனை கடும் எரிச்சலில் தள்ளியிருந்தது. அவன் எப்போதும் இப்படி இருந்தவனில்லை. நினைத்ததைச் செய்யும் சுதந்திரம், துணிவு, வேகம் என ஒரு துள்ளலோடு இருந்தவன்.

வெட்டி வா எனில் கட்டிவரும் தோழமையான சுனில் மற்றும் குமரகுருபரன் இருவரும் எந்நேரமும் அவனுடனே இருந்தனர். இந்த ஆறு நாட்களில் வெங்கட்டுக்கு பர்சனல் என்ற ஒன்றே இல்லாமல் போயிற்று. அவன் அல்லது அவர்கள் தூங்கும் போதும், இயற்கை உபாதைகளின் போதும் அவன் தனியே விடப்பட்டான் அல்லது இருவரும் உடனிருந்தனர். மினியோ, அவனது பெற்றோரோ, அலுவலகப்பணியோ யாருடனும் அவன் தனித்துவிடப்படவில்லை. அலுவலகத்துக்கோ, அல்லது வேறெங்குமோ அவன் போகமுடியவில்லை. கார் பயணத்தை முற்றிலுமாக தவிர்த்திருந்தான். ஆனால் இவையெல்லாமே அவனது முடிவுகள்தான். அவன் முன்னிருக்கும் ஆபத்தை அவன் தெளிவாக உணர்ந்திருந்தான். ஆனால் அடுத்து என்ன என்பதில்தான் அவனுக்கு சிறிது குழப்பம் இருந்தது.

டாக்டர் செல்வகுமாரின் மும்பை நண்பர் டாக்டர் அமித்ராயை தொடர்பு கொள்ளவும், வரவழைக்கவும் அவனது அப்பா தீவிரமாக இருந்தார். அமித்ராய் அவரது அப்பாயிண்ட்மெண்ட்களை கான்சல் செய்துவிட்டு இன்னும் இரண்டொரு நாட்களில் வருவதாகத் தெரிந்தது. இன்னொரு புறம் போலீஸ் எந்தவிதமான லீடும் இல்லாமையால் துளி கூட கேஸில் முன்னேற்றம் இல்லாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தது. துப்பாக்கி ஏந்திய இரண்டு காவலர்கள் இவனுக்கு பாதுகாப்பாக இவன் இருந்த வீட்டுக்குக் காவலாக இருந்தனர். அதனால் எந்த பயனுமில்லை என்பதையும், எதிரி அரூபமானது என்பதையும் வெங்கட், கார் ஆக்ஸிடெண்டில் குமாரை இழந்தபோதே உணர்ந்துவிட்டிருந்தான்.

மினி ஹைதராபாத்தை மறந்து இவனது அப்பா அம்மாவுடனே தங்கியிருந்தாள். தனிமையில் மினியைச் சந்திக்கவேண்டும் போல இருந்தது வெங்கட்டுக்கு. அவளிடம் பேச பல விஷயங்கள் இருந்தன அவனுக்கு. மினிக்கு டயல் செய்யத்துவங்கினான்.

இன்றிலிருந்து சரியாக ஒரு வருடத்துக்கு முன்னர்..

வெங்கட், ப்ரவீன், உமாசௌந்தரி மூவரும் ராடிஸனில் ஒரு மதிய வேளை உணவுக்காக அமர்ந்திருந்தனர்.

உமா துவங்கினாள், "என்ன வெங்கட், ஸோடியம் ஹைட்ராக்ஸைட் ப்ரொட்யூஸ் பண்றதுல என்ன பெரிய சாலஞ்ச் இருக்கப்போவுது? அதுல அவ்வளவு பெரிய பிஸினெஸ் ஸ்கோப் இருக்குதா என்ன.? வேறெதுவாவது பண்ணலாமே.."

வெங்கட், "எங்கிட்டயே பிஸினெஸ் பத்தி சொல்றயா? யு நோ.. ரெண்டு வருஷமா ஸிங்க் பிளேடிங் ஃபாக்டரியின் எல்லா ஆபரேஷன்ஸும் நான்தான் பார்த்துக்கறேன். எங்க ஃபாக்டரிக்குத் தேவையான NaoH க்காக ஸோர்ஸிங் தேடினப்போதான் அதற்கான எவ்ளோ பெரிய மார்க்கெட் இருக்குதுன்னு தெரிஞ்சது. அப்பா வேற ஃபாக்டரி எக்ஸ்பேன்ஷன் போகணும்னு முடிவுபண்ணியிருக்கார். நான்தான் வேணாம், அதற்குப் பதிலா வேற ஜெனர்க்கு போகலாம்னு சொல்லியிருக்கேன். ஆனா அதே சமயம் ஸிங்க் ப்ளேடிங் ஃபாக்டரியையும் ஃபுல்லி மாடர்னைஸ் பண்ணி ரன் பண்ணத்தான் போறேன். அதை விட்டுடறதா எனக்கு ஐடியா ஏதும் கிடையாது. எங்கே நான் அதை விட்டுடுவேனோன்னு அப்பாவுக்கு ஒரு சின்ன டவுட். நாம NaoH ப்ரொட்யூஸ் பண்றதால எங்க ஃபாக்டரிக்குத் தேவையான NaoH சும் கிடைச்சுடும். அதே சமயம் வெளிமார்க்கெட்டுக்குத் தேவையானதையும் நாம மீட் பண்ணமுடியும். NaoH க்கான தேவை நீங்க நினைக்கிற மாதிரி இல்லை, ரொம்ப அதிகம். இது வெறும் இண்டஸ்ட்ரியல் ப்ராடக்ட் மட்டுமில்ல, கமர்ஷியல் ப்ராடக்ட்ஸ்க்குத் தேவையான முக்கியமான ரா மெட்டீரியல். இதுல சாலஞ்ச்னு பாத்தா ஒண்ணுமில்லதான். ஆனா நாம பிஸினெஸ் பண்ணப்போறோமா? இல்ல சேலஞ்ச் பண்ணப்போறோமா? ஸ்கோப் இருக்காங்கிறதுதான் முக்கியம். என்ன சொல்றீங்க.?"

"நீ என்ன சொல்ற ப்ரவீன்?"

"நான் எப்பவோ ஓகே சொல்லிட்டேன். எப்படியும் வேறெந்த கம்பெனியிலயாவது வேலைக்கு ஜாயின் பண்ணத்தான் போறே. அப்படியிருக்கிறப்போ வெங்கட் தர்ற நல்ல ஆஃபரை ஏன் வேணாங்கணும்? என்னைப்பொறுத்தவரை வெங்கட்டோட வொர்கிங் பார்ட்னராகறதுல எனக்கு டபுள் ஓகேதான். நான் அல்ரெடி அவனோட ஸிங்க் பிளேட்டிங் ஃபாக்டரியிலதான் இருக்கேன். அல்ரெடி நாங்க ப்ராஜக்ட் ஸ்டார்ட் பண்ணிட்டோம். நீ வர்றதானா எங்களுக்கு கூடுதல் ஸ்ட்ரெங்க்த். நீ மட்டும்தான். மற்றபடி குமரகுரு, அனிதா, பிரகாஷ் இவங்கெல்லாரையும் ப்ராஜக்ட்டுக்குள்ள இழுக்கறதா ஐடியா இருக்கு, ஆனா பார்ட்னர்ஸா இல்லை, நல்ல போஸ்டிங்ஸுக்கு. குமரகுரு உன் ஃபிரெண்ட்தானே.. உள்ள இழுத்துப்போடேன். வி நீட் டேலண்ட்ஸ்.."

"டேய்.. எல்லாம் முடிவு பண்ணிட்டுதான் என்கிட்ட பேசறீங்களா? அப்ப முதல்லயே சொல்றதுக்கென்ன? சரி ஜாயின் பண்ணிக்கிறேன். பேப்பர்ஸ் மூவ் பண்ணுங்க.. என்னோட திருப்திக்கு ஒருவாட்டி NaoH சோட ஸ்கோப் எப்பிடி இருக்குதுன்னு பாத்துக்கறேன்.. வெங்கட் வேற யாரெல்லாம் உள்ள வரணும்னு நினைக்கிறே.? ஃபாக்டரி கெப்பாஸிடி என்னங்கிற மாதிரியான விஷயங்கள இப்பவே அப்டேட் பண்ணினேன்னா நல்லாயிருக்கும்.."

வெங்கட், ப்ரவீனைப் பார்த்தான், "பார்த்தியா.? ஏன் உமா வேணும்னு கேட்டேன்னு இப்ப புரிஞ்சுதா? ஒத்துக்கிட்டு ஒரு நிமிஷம் கூட ஆகலை.. அதுக்குள்ள வேலையை ஆரம்பிச்சுட்டா.."

உமாவும், ப்ரவீனும் சிரித்தனர்.

"பேப்பர்ஸ் எல்லாம் இன்னிக்கே உனக்கு மெயில் பண்ணிடுறேன். டீல்.?"

"..டீல்.."

அன்றிலிருந்து ஒரே மாதத்தில் உமாசௌந்தரி, ப்ரவீன் இருவரையும் ஒர்க்கிங் பார்ட்னராகக் கொண்ட வெங்கட்டின் கெமிகல் ஃபாக்டரிக்கான துவக்க வேலைகள் முழுவேகத்தில் துவங்கின. இவர்களின் கெமிகல் என்ஜினியரிங் கல்லூரித்தோழர்களான குமரகுரு, பிரகாஷ், அனிதா, சுனில் போன்ற பலரும் முக்கியப்பொறுப்புகளுக்கு பணியமர்த்தப்பட்டனர்.

புதிய‌ தொழிற்சாலைக்கான கட்டிட வேலைகள் நடந்துகொண்டிருந்த நிலையில் இவர்களுக்காக‌ ஸிங்க் பிளேடிங் தொழிற்சாலையின் அலுவலக வளாகத்தினுள்ளேயே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அலுவலகத்துக்கு வரத்துவங்கியிருந்தனர்.

ஒருநாள் புயலைப் போல உமா, வெங்கட்டின் அறைக்குள் நுழைகையில் ப்ரவீன் அங்கேதான் இருந்தான்.

"வெங்கட்.. நீயா இதைப் பண்றே? ஐ காண்ட் பிலீவ் இட்.!!" அதிர்ச்சியும், ஆவேசமுமாய் வெங்கட்டை நோக்கி வெடித்தாள்.

"கூல் உமா, என்ன ஆச்சு? என்ன நடந்ததுன்னு சொல்லு.."

"உண்மையைச் சொல்லு. நீ ப்ரொட்யூஸ் பண்ணப்போறது ஸோடியம் ஹைட்ராக்ஸைட் மட்டும்தானா?" ஒரு கத்தலாக வெளிவந்தது அவள் குரல்.

வெங்கட், ப்ரவீனைப் பார்க்க இருவரும் கலவரமாகி அவளை அமைதிப் படுத்த முயன்று தோற்றனர்.

"இஃப் ஐம் கரெக்ட் யுர் கோயிங் டு ப்ரொட்யூஸ் 'டிடிடி' (DDT). அது எவ்ளோ பெரிய ஹஸார்டஸ் தெரியுமா? எத்தினி கண்ட்ரிஸ்ல பேன்ட் பன்னியிருக்காங்க தெரியுமா? அதோட அட்மாஸ்பியர் டேமேஜ், எஃபெக்ட்ஸ் ஆன் ஹ்யூமன் தெரியுமா? 'டிடிடி'க்குதான் உன்னோட மார்க்கெட் எவால்யூஷன் பண்ணினியா? இனடர்நேஷனல் பிளாக் மார்கெட்தான் உன்னோட குறியா.? எவ்வ‌ளவு ஈஸியா என்னை ஏமாத்திட்டீங்க.. ஹௌ ஸ்டுபிட் அயாம்.?"

"ஸாரி உமா, கூல் டவுன். இதுக்கு மேல மறைக்கமுடியாது. 'டிடிடி'க்கு நீ சொன்ன மாதிரி இல்லாம சில பாஸிடிவ் ஸைட்ஸும் இருக்குது உமா. நாம உக்காந்து பேசலாம்.."

"இதுக்கு மேல பேச என்ன இருக்குது, ஸ்டுபிட் செல்ஃபிஷஸ். என்னால நம்பவே முடியலை.. கடைசியில உங்க ரெண்டு பேரோட டேலண்டெல்லாம் இவ்ளோ பெரிய துரோக வேலைக்காகவா பயன்படுது.? ஷேம் ஆன் யூ.!!"

ப்ரவீன் அவளை சேரில் அமர்த்தினான், "பேசலாம் உமா.."

"நோ வே.. இப்பவே பாண்டை உடைக்கிறேன். ஒரே சொல்யூஷன்தான். நீ இந்த ஃபாக்டரியை இப்பவே இப்படியே குளோஸ் பண்றே. அப்படியப்படி பிரிஞ்சு போறோம். இல்லைன்னா நேரே போலீஸ்தான்.. வாழ்நாளைக்கும் ஜெயில்ல இருக்கவேண்டியது வரலாம்.. ஃப்ரெண்ட்ஸுங்கிறதாலதான் இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்கேன்"

"உடனே அப்படி முடிவு பண்ணிட்டா எப்பிடி உமா.? கொஞ்சம் டைம் குடு.."

"நோ வே.."

பேசிப் பிரயோஜனமில்லை. மறுநாள் மாலை ஏழு மணியளவில் பிளேட்டிங் தொழிற்சாலையின் தொழிலாளிகள் ப்ரேக்கில் இருந்த போது 90 டிகிரி செண்டிகிரேடில் தகித்துக்கொண்டிருந்த ஸோடியம் ஹைட்ராக்ஸைடு டாங்கில் மிதந்துகொண்டிருந்தாள் உமாசௌந்தரி. கால் தவறி விழுந்துவிட்டதாக கம்பெனி முழுதும் பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தனர்.

இன்று..

'பிக் அப் மினி..' என்று மனதுக்குள் நினைத்த வாக்கியம் மெலிதாக வாயிலிருந்து வழிந்தவாறே இரண்டாவது முறையாக டயல் செய்துகொண்டிருந்தான் வெங்கட். இரண்டாவது முறையாகவும் முழுதாக ரிங்டோன் போய் கட்டானது.

800px-DDT-3D-balls

தொடரும்..

(பி.கு : மினி தொடரின் 4ம் பகுதி இது. தொடருக்கான தொடரும் ஆதரவுக்கு நன்றி. கதையின் இறுதிப் பகுதி வரும் புதன் அன்று.)

.

27 comments:

பிரதீபா said...

ஹைய்யா ... நான் தான் முதல்-ல

இராமசாமி கண்ணண் said...

நல்லா கொண்டுபோறீங்க..

பிரதீபா said...

ரொம்ப அருமையா இருக்குங்க.. ஊருக்குப் போயிருந்ததால நாலு பகுதியையும் ஒண்ணா படிக்க வேண்டியதாப் போயிடிச்சுங்க. குறுநாவல் ஒன்னு படிச்சுட்டு இருக்கும்போது யாரோ நடுவுல பிடுங்கிட்டு போன மாதிரி ஒரே மண்டை கொடையுது.. கடைசி பகுதி நாளைக்கே போடக்க கூடாதா நீங்க?
ராஜேஷ் குமார் நாவல் இப்போ எல்லாம் அவ்வளோ விருவிருப்பா இல்லை ..ரொம்ப வருஷம் முன்னாடி அவர் எழுதிட்டு இருந்தாரே, அந்த நாவலிசத்துக்கு இணையா இருக்குங்க இந்த தொடர்-நிறையத் தகவல்களுடன்

ஆனா இதை டைப் பண்றதுக்குள்ள தான் கஷ்ட்டம் ஆகிரும்.. இது மாதிரி அப்பப்போ எழுதுங்க. வாழ்த்துக்கள் ஆதியண்ணே!!

பரிசல்காரன் said...

பிரதீபாவை முழுமையாய் வழிமொழிஞ்சுக்கறேன்...

கக்கு - மாணிக்கம் said...

அய்யா சாமி, ஓட்டும் போட்டாச்சு. ஆனா ஒரு விஷயம், பிலேட்டிங் பண்ணுன் இடத்தில் 90 டிகிரி யில் NaOH கொதிக்க வேண்டிய அவசியமே இல்லையே ராஜா. :)
ஓகே take it easy.
--

சுசி said...

இந்த கொலைய நான் எதிர்பார்க்கலை ஆதி.. நல்ல திருப்பம்..

அப்புறம் //வரும் புதன் கிழமை// எம கண்டம், கரி நாள், புதன் பார்வை ரெம்ப மோசமா இருக்குமாம்.. அன்னிக்கு போயா முடிவை சொல்ல போறிங்க??

நாளைக்கு எல்லாம் கூடி வர சுப யோக சுக தினமாம்.

என்னமோ யோசிச்சு செய்ங்க டைரக்டரே :))))

வணங்காமுடி...! said...

வாவ்... 4-வது பார்ட் வந்திருச்சு....எவ்வளவு காக்க வச்சிட்டீங்க ஆதி...

உமா முடிவு... பயங்கரம்...

அதுக்காக, உமா தான் ஆவியா வந்து கொலை பண்றதா நினைக்க முடியல. கண்டிப்பா எதாவது டுவிஸ்ட் வச்சிருப்பீங்க...

காத்திருந்து படிச்சுர வேண்டியது தான்...

-சுந்தர்
ருவாண்டா

பாலா அறம்வளர்த்தான் said...

சுசி மேடம் - என்னகென்னமோ இந்தவாரம் கொலை இல்லை. கதையின் தலைப்பை வைத்து பார்க்கும்போது மினி கொலை செய்யப்படவில்லை என்றே தோன்றுகிறது. ஆவியோ..ஆதியோ இந்த மூன்று அப்பாவிகளின் கொலைக்கு காரணம் தெரிஞ்சாகனும் சாமி!!!

BTW ஆதி - புதன்கிழமைக்கு ஆஸ்த்ரேலிய நேரப்படி இன்னமும் 11 மணி நேரம்தான் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் :-)

வானம்பாடிகள் said...

யப்பா. கையக் கொடும்.அருமையாப் போகுது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பிரதீபா. (புகழ்ச்சி லிமிட் தாண்டுது, ஜாக்கிரதை. :‍-))

நன்றி பரிசல்.

நன்றி இராமசாமி.

நன்றி மாணிக்கம். (கொதிக்கும் அல்ல, தகிக்கும்.. ஒரு ஃப்ளோவில் எழுதிட்டேன். திருத்தியாச்சு. அப்புறம் கால்வனைஸிங் எனப்படும் ஸிங்க் பிளேட்டிங்கின் முதல் படிநிலையில் அல்கலைன், ஸோடியம் ஹைட்ராக்ஸைடு நீர்ம நிலையில் 90 டிகிரியில் இருக்கவேண்டும் என படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன். தவறெனில் திருத்தலாமே நண்பரே.!)

நன்றி சுசி.

நன்றி வணங்காமுடி. (டுவிஸ்டு, டுவிஸ்டுனு உடம்ப புண்ணாக்குங்க.. இன்னுமா இந்த ஊரு நம்பள நம்புது?)

நன்றி பாலா. (ஓவர் எதிர்பார்ப்பு உடம்புக்கு நல்லதல்ல.. அவ்வ்வ்)

நன்றி வானம்பாடிகள்.

Thenral said...

Oh so interesting!Adutha partukkaaga eagerly wai.......ting!!

♠ ராஜு ♠ said...

எல்லாஞ்சேரி..! ஒரு முடிவு யார் எழுதப் போறா..?
இரண்டாவது முடிவு யார் எழுதப் போறா..?

:-)

sivakasi maappillai said...

good flow

Mahesh said...

ஆதிமூலராஜேஷ்குமார்... கதை சூப்பரா போகுது....

மாணிக்கம் அண்ணாச்சி சொல்லியாச்சு... இருந்தாலும் "நாலும்" தெரிஞ்ச நாமளும் சொல்லிடணுமில்ல... கால்வனைசிங்க்கு சோடியம் ஹைட்ராக்சைடு அவசியமில்லைன்னே நினைக்கிறேன். சரி பாத்துக்கறேன். அதேமாதிரி DDT ப்ரொடக்ஷனும் வேறமாதிரி.....

அதெல்லாம் விடுங்க.... கதை சூப்பர்!!!

//ஸோடியம் ஹைட்ராக்ஸைடு டாங்கில் மிதந்துகொண்டிருந்தாள் // என்னோட கதை மாதிரியே இருக்கு :)))))

vanila said...

பிரதிபாவை வ மொ பரிசலை வ மொ.

arul said...

Hackers!! please help me...I want to immediately hack a computer. The owner of the computer is AA!!!!!!!!!!thi

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

basheer said...

ஏமாந்துட்டேனே.
இந்த ட்விஸ்ட்ட நான் எதிர்பாக்கல.

முத்துசிவா said...

தலைவா சூப்பர்..உங்கள பாத்து inspire ஆகி நானும் ஒரு கதை எழுத try பண்ணிருக்கேன். பாத்துட்டு சொல்லுங்க தல

http://muthusiva.blogspot.com/

Ŝ₤Ω..™ said...

அண்ணா.. 4 பகுதியும் இப்போ தான் படிச்சேன்.. ஒரு மாதிரி பரபரப்பா போகுது.. ரொம்ப காக்க வைக்க வேண்டாம்ண்ணே..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தென்றல்.

நன்றி ராஜு. (என்ன நக்கலா? :-))

நன்றி மகேஷ். (DDT ப்ரொடக்ஷனைப் பத்தி நான் பேசவேயில்லையே. அதெல்லாம் விடமுடியாது. கருத்துப்பிழைன்னா என்ன பிழைன்னு விளக்கிச் சொல்லணும்.)

நன்றி வனிலா.

நன்றி அருள். (ஹிஹி)

நன்றி டிவிஆர்.

நன்றி பஷீர்.

நன்றி முத்துசிவா.

நன்றி சென். (சொன்னாமேரி நாளைக்கு போட்டுடறேன் தல)
நன்றி சுசி.

கக்கு - மாணிக்கம் said...

மெட்டல் ப்லேட்டிங் ஆக இருந்தாலும், கால்வனைசிங் (Hot-Dip Galvanizing) ஆக இருந்தாலும் De-greasing எனப்படும் கட்டமே ஆரம்ப நிலை. உலேகா பரப்பின் மீதுள்ள எண்ணெய் பிசுக்குகளை நீக்கும் கட்டம் இது. இங்கு சோடியம் ஹைடாக்சிட்/காஸ்டிக் சோடா பயன்படுகிறது. நீரில் கரைக்கப்பட்டு,சூடான நிலையிலேலே இதில் உலோக பகுதிகள் சில நிமிடங்கள் ஊறவைகப்பட்டு,பின்னர் நல்ல நீரில் அலசப்பட்டு அடுத்த நிலைக்கு செல்லும் போது உலோக பரப்பின் மீது படிந்த எண்ணெய் பசை, பிசுக்குகள் முழுவதும் அகற்றபடுகிறது. இல்லையேல் உலகோ பரப்பில் ப்லேடிங் அல்லது கால்வனைசிங் செய்ய இயலாது.

சரி,
நீரில் ஒரு குறிப்பிட்ட அடர்வு இருக்குமாறு கரைந்துள்ள சோடியம் ஹைட்ராக்சிட் வெப்பநிலை 45 - 50 டிகிரி சென்டிகிரேடில் வைத்துக்கொளப்படுகிறது. 50 டிகிரி சென்டிகிரேட் க்கு மேல சென்றால் நீர்மம் மிக எளிதில் ஆவியாகிவிடும். அதானல் இழப்பு ஏற்படும். இதே முறைதான் மேல் சொன்ன இரண்டு வேலைகளிலும்.

அல்லாமல், 90 டிகிரியில் ஒரு நீர்மம் கொதித்துக்கொண்டு இருந்தால் அதுவும் மோசமான அரிக்கும் / எரிக்கும் நெருப்பின் குணமுள்ள ஒரு பொருள் கரைந்த நீர்மம் அந்த தொட்டியில் அருகில் வேலை செய்யும் நபர்களின் கதி என்னாவது? 90 டிகிரி என்பது தவறான தகவல் அன்பரே! இதனையே நீங்கள் 90 டிகிரி Fahrenheit என்று அலகை மாற்றினாலும் அது வெறும் 32 டிகிரி சென்டிகிரேட் தான். இந்த வெப்ப நிலையில் சோடியம் ஹைட்ராக்சை நல்ல
De-greasing ஆக வேலை செய்யாது.

NaoH- இவ்வாறு குறிப்பிட மாட்டார்கள். NaOH என்றுதான் குறிப்பிடுவார்கள். (இது கொஞ்சம் ஓவர்தான். ) ஆனால் கதைகளில் இந்த குறியீடுகளை தவிர்த்து அதன் முழு பெயரையும் எழுதினால் மட்டுமே வாசகர்களுக்கு ஏற்றது. குறியீடுகள் - அது புரியாதவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

நன்றி.

கக்கு - மாணிக்கம் said...

ஒரு வேலை இப்படியும் எடுத்துகொள்ளலாம். அந்த பெண்ணை கொலை செய்யும் நோக்கத்தோடு அந்த தொட்டியின் வெப்ப நிலையை 90 டிகிரி உயர்திவிடபட்டது என்று. ஆனால் இந்த முறையில் திட்டம் போட்டால் ஆப்பை தேடி சென்று அதில் உட்கார்ந்து கொள்வது போன்றது. :)))))

ஆதிமூலகிருஷ்ணன் said...

@கக்கு-மாணிக்கம்

விளக்கமான பதிலுக்கு நன்றி.

உங்கள் முதல் பாராவில் இருந்த கருத்துப்படியேதான் நானும் கதையில் சோடியம் ஹைட்ராக்ஸைடை பயன்படுத்தியிருக்கிறேன்.

தவறு என நீங்கள் குறிப்பிடும் வெப்பநிலையை ஒரு நிறுவனத்தின் ப்ராஸஸ் ஷீட்டை ரெஃப்ர் செய்த பின்புதான் 90 என குறிப்பிட்டிருக்கிறேன். இருப்பினும் நான் ரெஃபர் செய்த டாகுமெண்டும் கூட தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. நிஜத்தில் நானே இன்ஸ்பெக்ட் செய்த ஒரு சமயத்தில் 60 டிகிரி அளவிட்டதாக ஞாபகம்.

NaOH என்பதே சரி. திருத்திக்கொள்கிறேன். நான் கெமிஸ்ட்ரியில் கொஞ்சம் 'டுமீல்' பார்ட்டி என்பதை இங்கே தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (அப்படியிருக்க கெமிஸ்ட்ரியை பேஸ் பண்ணி கதை எழுதினது கொஞ்சம் ஓவர்தான் இல்ல.?)

கடைசியாக கெமிகல் குறியீடு கதையில் இடம்பெறுகிறது என்பதால் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் NaOH மட்டுமே, அதுவும் கொஞ்சமாகவே.

நன்றி.

சந்தோஷ் = Santhosh said...

Good Twist ஆதி.. நல்லா விறு விறுப்பா போவுது.. கொஞ்ச சீக்கிரமா அடுத்த பாகத்தை போடு..

கக்கு - மாணிக்கம் said...

அய்யா சாமி , profile லில் உங்க படத்த பாத்தா வயித்த கலக்குது (நா ரொம்ப பயந்துக்குவேன்) வேற, சிரிச்ச மொகமா இருக்கிற மேரிக்கி மாத்துவீங்களா ?? :)))))))))

vinu said...

sorry pa konjam late aayiduchu athukkullea eathini pearuuuuuuuuuuuuuuuuuuuuuuuu


really going good but i still belive all this not happening by some thng lie aavi peai pisasu

i am not beliving in all those so there might be some reason behind all this.....