Sunday, August 1, 2010

பார்த்தல்

பொதுவாக ரசிப்பு அதிகமிருந்தால் ‘பார்த்தல்’ அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும் இல்லையா? ஆனால் பார்த்தல் (Sight) என்பது என் வாழ்வில் மிக மிகக் கொஞ்சமாகத்தான் இருந்து வந்திருகிறது என்பது வருத்தமான உண்மையே. அதற்குக் காரணங்கள் பலப் பல. பார்த்தல் ஆர்வம் ஏற்படும் வயதிலேயே ஒற்றைப் பெண்ணுக்கான ‘காத்திருத்தல்’ சுகமாக இருந்து தொலைத்துவிட்டது. பின்னர் வேலை, திருமணம், குழந்தை என்ற பெயர்களில் பிஸியாக இருந்துவிட்டதால் முகம் முற்றிய தேங்காய் போல ஆகும் வரை அது இயலாமலே போய்விட்டது.

‘அதெப்படி? ‘பார்த்தல்’ என்பது வேறு. நீங்கள் சொல்லும் வாழ்க்கைக்கான கமிட்மெண்ட்ஸ் என்பது வேறு. கிடைக்கும் நேரங்களிலெல்லாம், கிடைக்கும் ஃபிகர்களையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருப்பதற்கும் மற்ற விஷயங்களில் பிஸி என்பதற்கும் என்ன சம்பந்தம்? ஊஹூம், இது போங்காட்டம்’ என்கிறீர்களா?

நீங்கள் சொல்வது சரிதான். பேருந்துகள், பேருந்து நிலையங்கள், ரயில்கள், ரயில் நிலையங்கள், திருமண நிகழ்வுகள், கண்காட்சிகள், கோவில்கள், திருவிழாக்கள், திரையரங்குகள், அலுவலகக் காத்திருப்புகள் இன்னும் இன்னுமென ஃபிகர் ‘பார்த்தலு’க்கான சந்தர்ப்பங்கள் அன்றாட வாழ்க்கையின் வழிநெடுக இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அதெப்படி முடியாமல் போகும்? ரசனைகெட்ட முண்டங்கள் வேண்டுமானால் அதுபோன்ற தருணங்களில் கூட புத்தகங்களை படித்துக்கொண்டே இருந்துவிடலாம், அல்லது செல்போன்களை நோண்டிக்கொண்டே இருந்துவிடலாம். சரிதான் நானும் கூட அதுபோல ஒரு ரசனைகெட்ட மாங்காய் மாதிரிதான் இருந்துவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் என்னை நீங்கள் அதுமாதிரி திட்டுவீர்கள் என்றால் உங்களிடம் எதிர்த்துக்கேட்க என்னிடமும் ஒரு புள்ளி (சே.. பாயிண்ட்டுங்க) உள்ளது.

ஆமாம்ங்க.. சும்மா போய்க் கொண்டே இருக்கும் ஃபிகர்களை தேமேவென பார்த்துக்கொண்டிருப்பதில் என்ன ரசனை இருக்கமுடியும்? பதிலுக்கு அந்தப் பக்கத்திலிருந்தும் ஒரு முத்துச் சிரிப்பு, கள்ளப் பார்வை.. இவையும் இருந்தால்தான் இந்தப் ‘பார்த்தல்’ வைபவம் முழுமையாகவும், ரசனையாகவும் இருக்கும்? பார்த்தீர்களா? நீங்களே ஆமாம் என மண்டையை ஆட்டுகிறீர்கள். இப்படி எதிர்பார்த்ததால் கூட என் வாழ்க்கையில் ‘பார்த்தல்’ மிகக்குறைவாக இருந்திருக்கலாம் அல்லவா.? என்ன இந்த நெடிய பயணத்தில் இது போல ஒரு நான்கைந்து சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் கூட அதிகம் என்றுதான் எண்ணுகிறேன்.

இன்று ஸ்பென்ஸரில் இருந்து தாம்பரம் செல்வதற்காக ஒரு மாநகர குளிர்சாதனப் பேருந்தில் ஏறுகிறேன். பயணச்சீட்டை வாங்கிவிட்டு வழக்கம் போல கையில் வைத்திருந்த, ‘காவலன் காவான் எனின்’ (என்ன நிகழும்?) என்ற நாஞ்சிலின் கட்டுரைத் தொகுப்பில் மூழ்கினேன். ஒரு கட்டுரையைக் கூட முடித்திருக்கவில்லை. சைதாப்பேட்டையில் ஒரு கொத்து சுடிதார் பூக்கள் பேருந்தில் ஏறி இருக்கையில்லாத காரணத்தால் சரியாக எனக்கு முன்னர் குழுமுகின்றனர். சரியாக 11 பேர். தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் நாஞ்சிலுக்குள் நுழைகிறேன். ஒரு நிமிடம் கூட கடந்திருக்காது. இந்த டெலிபதி, ஸ்ரீபதி, சபாபதி என ஏதோ ஒன்று இருந்துதான் தொலைக்கிறது. நிமிர்கிறேன். உயரக் கைப்பிடியைச் சற்று சிரமத்துடனே எட்டிப் பிடித்தபடியே ஒருத்தி.

அழகு.. அழகு தெரிந்ததுதானே. பொங்கும் பாலைப் போன்று வழியும் அழகு. சே.. நான், ‘நாம் வழியும்’ அழகைச் சொல்லவில்லைங்க. அந்தப் பெண்ணே அவ்வளவு அழகு என்று சொல்ல வருகிறேன். நான் அவளைப் பார்க்கிறேன். அவள் தளம் பார்க்கிறாள். (பேருந்து என்பதால் தளம், தரை என்றால் நிலம் என்று சொல்லியிருப்பேன்). நான் வேறெங்கோ பார்ப்பதைப்போல நடிக்குங்கால் அவள் எனைப் பார்க்கிறாள். ஏதோ கணங்களில் எங்கள் பார்வை மோதி வீழ்கிறது அல்லது மோதி மீள்கிறது. அடச்சே இந்த வயதிலும் எனக்கு எங்கேயிருந்துதான் இந்த வெட்கம் வந்து தொலைக்கிறதோ? கூடவே அடப்பாவி அந்தப் பெண்ணுக்கு என்ன வயது இருக்கும்? நியாயமா இது? என்ற பபிள் (நீர்க்குமிழி)த்தனமான சிந்தனையும் எழுந்து தொலைக்கிறது. காதலுக்கு மட்டுமல்ல ‘பார்த்தலு’க்கும் வயது ஒரு தடையில்லையடா முண்டமே என்ற பாலபாடம் நினைவுக்கு வர அந்த எண்ணத்தை உடனே ‘ஆல்ட்+டெலிட்’ செய்துவிட்டு, முதல் வேலையாக நாஞ்சிலை மூடிவைக்கிறேன்.

இப்போது அவளைக் கவனிக்கிறேன். தோழியரோடு பேசுவதைப் போன்ற பாவனையிலேயே அவள் செலுத்தும் விழியம்புகள் என்னை வீழ்த்துகின்றன. பளபளப்பான கண்கள். அதே பாழாப் போன கூர்மையான மூக்கு. வலது மடலில் இவளுக்கும் மச்சமிருக்கிறதா என்ன? போச்சு. இது போன்ற மூக்குகள் இருப்போரையெல்லாம் நான் போகாத நாட்டுக்கு நாடு கடத்தச் சொல்லிவிடலாம். கண்களுக்கு சொல்லிவிட்டால் என்ன அதே பளபளப்புதான் உதடுகளுக்கும்.

நான் எதற்காக ஸ்பென்ஸர் வந்தேன்? இப்போ எங்கு செல்கிறேன்? மாலை என்ன? நாளை என்ன? வழக்கமான சிந்தனைகளை உடைத்துப் போட்டிருந்தாள் அவள்.

பல்லாவரத்தில் அவள் இறங்கிய போது நானும் பல்லாவரத்துக்கு வந்து சேர்ந்தேன். வெளிச்சம் குறையத் துவங்கியது. இறங்கிய பெண்களைக் கடந்து பேருந்து நகர்கிறது. நான் ஜன்னல் வழியாகப் பார்க்கிறேன் அந்தக் கூட்டத்தை. நகரும் ஜன்னல்களில் தேடி என் முகத்தை அடைகிறது அவள் பார்வை. என்ன தைரியம் இந்தச் சின்னப்பெண்ணுக்கு.. அருகிருக்கும் பெண்கள் அறியாது உதடுகளைச் சுழித்து, பாதியளவு வலது கையை தூக்கிக் கையசைக்கிறாள். விடையிறுக்கிறாள்.

‘இவ்வுலகம் பெரிது, இனி நீயும் நானும் சந்திக்கமாட்டோம் என்றுதான் நினைக்கிறேன் தோழி. போய் வா. பை பை.!’

.

39 comments:

Kathir said...

தோழி அப்டேட்ஸ்..??

கனவுகள் விற்பவன் said...

Wat is this????கார்க்கீஈஈஈஈஈ!!!! இங்க சீக்கிரம் வாஆஆஆஆஆஆஆ!!!

Kathir said...

இதெல்லாம் இருக்கட்டும்..
எச்சரிக்கை சீரிஸ் 47 லயே இருக்குது.
வேகமா 50 அடிக்க வாழ்த்துக்கள்.
50வது பதிவு சிறப்புப் பதிவா இருக்கட்டும்.. Live streaming மாதிரி ஏதாவது..

;))

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு பாஸ் இந்த ஊது வத்திப் புகை காற்றில் கரையும் நடை

நீண்ட நாளுக்குப் பிறகு மறுவாசிப்புக்கு சொல்லும் ஒரு இடுகை உங்களிடம் இருந்து நடைக்காக :)

//நீங்களே ஆமாம் என மண்டையை ஆட்டுகிறீர்கள். இப்படி எதிர்பார்த்ததால் கூட என் வாழ்க்கையில் ‘பார்த்தல்’ மிகக்குறைவாக இருந்திருக்கலாம்//

இங்கிருந்து ...

ரிஷபன்Meena said...

பார்த்தல் ரிடர்ன் ஆகனும்னா முக்கியமா கடவுள் நம்ம முகத்தில் கைவைக்காமல் இருந்திருக்க வேண்டும்.

சுசி said...

அச்சச்சோ..

ஐயோ பாவம்..

பா.ராஜாராம் said...

அற்புதம் ஆதி!

loved one!

பிரதீபா said...

வித்யாசமான நடை + அருமையான உணர்வு !

rk guru said...

Good post.....congrats

நாய்க்குட்டி மனசு said...

இவ்வுலகம் பெரிது, இனி நீயும் நானும் சந்திக்கமாட்டோம் என்றுதான் நினைக்கிறேன் தோழி. போய் வா. பை பை.!’//

அந்த தைரியத்தில தான சின்ன பிள்ளைங்க இந்த விளையாட்டு விளையாடுது. சைட் அடிக்கிறதுக்கு என்ன அழகான பெயர் 'பார்த்தல்' எல்லாம் தங்கமணி 'பார்த்தா' தெரியும்.

பாலா அறம்வளர்த்தான் said...

நன்றாக இருக்கிறது ஆதி!!! உங்களுக்கு என்று ஒரு தனி மொழி நடை மெல்ல உருவாகிக் கொண்டிருக்கிறது ஆதி.
கொஞ்சம் காமெடியை குறைத்திருந்தால் (அதனால் வரும் ஆங்கில வார்த்தைகளையும்) இன்னும் நன்றாக வந்திருக்குமோ எனத் தோன்றியது.

எல்லாம் சரி - அந்த 'க்ளைமேக்ஸ்' பொய்தானே? :-)

தராசு said...

நல்ல ஃப்ளோ தல.

ஆரம்ப வரிகள்ல ரொம்ப சீரியஸா எதோ ஒரு மேட்டர் சொல்லப் போறீங்கன்னு தோணிச்சு.

அப்புறம் படிச்சா, நல்லாருக்கு.

Mohan said...

ஒரு வேளை அந்த பொண்ணு உங்க இரசிகையோ! இன்னைக்கு இந்தப் பதிவைப் பார்த்துட்டு அந்த பெண் புன்முறுவல் கூட பூக்கலாம்!

shortfilmindia.com said...

ஆதி.. அருமையான நடை..

//பொங்கும் பாலைப் போன்று வழியும் அழகு.//

இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லியே..:)

Mahesh said...

வர வர எழுத்துல மெருகு கூடுது தல... அருமையா இருக்கு !!!


"குளிர்சாதனப் பேருந்து" - சரியல்லன்னு தோணுது. "குளிர்சாதனம் பொருத்தப்பட்ட" சரி. அல்லது "குளிரூட்டப்பட்ட"... என்ன சொல்றீங்க??

நாடோடி இலக்கியன் said...

ந‌ல்லாயிருக்கு ஆதி.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
‘இவ்வுலகம் பெரிது, இனி நீயும் நானும் சந்திக்கமாட்டோம் என்றுதான் நினைக்கிறேன் தோழி. போய் வா. பை பை.!’
//
"நாளைக்கும் இந்த பஸ் இதே நேரத்துக்குத்தான் பல்லாவரம் வருமா?" அப்டீன்னு பஸ் கண்டக்டர்ட நீங்க விசாரிசிக்கிட்டு இருந்ததா உங்களுக்கும் எனக்கும் தெரிஞ்ச வஸ்தாது ஒருத்தர் சொன்னாரு. ...

(மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற பேருந்துக்கு இணையான எழுத்து நடை... )

கார்க்கி said...

அடங்கொய்யால..

நம்புங்க சகா. சைதையில் இறக்கிவிடுறதா இருந்த திட்டத்த்த மாத்தி ஸ்பென்சர்ல இறக்கிவிட்டதால தானே இந்த வாய்ப்பு உங்களுக்கு?

அதான் சொல்ரேன். தோழிக்கும் கார்க்கிக்கும் நிறைய தொடர்பு இருக்குன்னு :)

கார்க்கி said...

//கார்க்கீஈஈஈஈஈ!!!! இங்க சீக்கிரம் வாஆஆஆஆஆஆஆ!/

வந்துட்டேன் பாஸ்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கதிர். (சீக்கிரம் எழுதுவேன் நண்பரே)

நன்றி கனவுகள் விற்பவன்.

நன்றி நேசமித்திரன். (எல்லாமே மறுவாசிப்புக்குத் தூண்டும் பதிவுகளாக எழுத ஆசைதான், நடந்தால்தானே ஆச்சு?)

நன்றி ரிஷபன்.
நன்றி சுசி.
நன்றி பாரா.
நன்றி பிரதீபா.
நன்றி குரு.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி பாலா.
நன்றி தராசு.

நன்றி மோகன். (ஓவர் கற்பனை)

நன்றி கேபிள்.

நன்றி மகேஷ். (வாங்க வாங்க, உங்களைத்தான் தேடிகிட்டிருந்தேன்)

நன்றி இலக்கியன்.

நன்றி யோகேஷ். (அவ்வள்ளவு ஸ்லோவாகவா இருந்தது?)

நன்றி கார்க்கி.

☀நான் ஆதவன்☀ said...

:))) நல்லாயிருக்கு ஆதி. வீட்ல படிக்க மாட்டாங்கன்ற தைரியமா :))

//31 வயதான நண்பர் 'ஜெய்கணேஷ்' (BE, MBA) க்கு அவரது பெற்றோர் விருப்பப்படி அவரது சாதியிலேயே //

எஸ்கேப்பிஸமா? :)

வானம்பாடிகள் said...

தலைய தூக்கி பார்த்ததுக்கே 11ன்னு கணக்கு பண்ணியாச்சின்னா என்னா லுக்கு அது:)). பா.ரா. சொன்னா மாதிரி i too luved it:)

பரிசல்காரன் said...

நம் போன்ற இளைஞர்களின் அன்றாட வாழ்வில் நிகழும் ஒரு சாதாரண விஷயத்தை இவ்வளவு அழகாக எழுத்தில் வடிக்க முடியுமா?

உங்களால் முடிந்திருக்கிறது.

பதிவின் குறை: இது சீரியஸா, காமெடியா என்று கொஞ்ச நேரம் குழப்புகிறது..

புன்னகை said...

ரமா அக்கா ஊரில் இல்லையோ? :-)

புன்னகை said...

//நான் அவளைப் பார்க்கிறேன். அவள் தளம் பார்க்கிறாள். நான் வேறெங்கோ பார்ப்பதைப்போல நடிக்குங்கால் அவள் எனைப் பார்க்கிறாள்.//
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
அப்படி இருக்கு! நல்லா இருந்தா சரி! :-)

Anonymous said...

உங்க வீட்ல பூரிக்கட்டையெல்லாம் உபயோகிச்சு ரொம்பநாளாயிடுச்சு போலிருக்கு :)

விக்னேஷ்வரி said...

ரசனையான பதிவு.
கடைசில அந்தப் பொண்ணு ரமான்னு சொல்லி முடிச்சுடுவீங்களோன்னு பயந்தேன். நல்ல வேளை. நல்லா இருந்தது.

ஒரு சைட்டை வெச்சு என்னா போஸ்ட்டு...

கார்க்கி கூட தலம் சுற்றிப் பார்த்துட்டு வந்து தோழி போஸ்ட்டா..

பிரதீபா said...

பரிசல் //நம் போன்ற இளைஞர்களின்// அப்படீன்னு சொல்லி இருக்கறார்.. யாரு இங்க இளைஞர்?

வன்மையாகக் கண்டிக்கிறேன்.:)

Palay King said...

நடிக்குங்கால் !!!!

இனியா said...

thamira,

ennanga... ippadi varan theda aarambithuvitteergaL?

அன்புடன் அருணா said...

ரமா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!!!:)

sriram said...

நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆதவன்.
நன்றி வானம்பாடிகள்.

நன்றி பரிசல். (சீனியர் பாராட்டுகையில் இருக்கும் குளுகுளுவே தனிதான்)

நன்றி புன்னகை. (கண்டுபுடிச்சிட்டீங்களே.. பெரிய தமிழறிஞிதான் நீங்கள் போங்கள்..)

நன்றி அம்மிணி.
நன்றி விக்கி.

நன்றி பிரதீபா. (இந்த வயசுப்பிரச்சினையே விடவே மாட்டேங்கிறாங்கப்பா.. சே)

நன்றி கிங்.
நன்றி இனியா.
நன்றி அருணா.
நன்றி ஸ்ரீராம்.

Saravana Kumar MSK said...

class narration bro..

அமுதா கிருஷ்ணா said...

இனி அடிக்கடி ஏசி பஸ்ஸும் ஸ்பென்சருமா?

அமுதா கிருஷ்ணா said...

ஆதி இந்த பதிவினை படித்து மிக பிடித்ததால் பதிலுக்கு ஒரு பதிவினை எழுதி உள்ளேன். படித்து விட்டு திட்டிப் போகவும்..

தமிழ்ப்பறவை said...

rasithaen aathi..suya eLLaL seythu paaraattu vaangkuvathil vaLLaL neer...

appuRAm 'cycle' kathai paththi.....
aarampam pidithirunthathu...mudivai nokkip pohaiyil suruthi iRangi vittathu..
ithanai oru pathivaakap paarkkaamal NeengaL ezuthi irunthaal nanRaaka vanthirukkum ena ninaikkiRaen.

மவ ராசன்...... said...

//நம் போன்ற இளைஞர்களின்//HA HA HA HA HA HA
AYYO AYYO ,,.....


SUPER COMEDY THALA...

Dalton said...

ஐயனே, உம் பதிவில் சில பிழைகள் உள.

1. //அதற்குக் காரணங்கள் பலப் பல.//

இங்கு பலப் பல என்பதில் இடைவெளி வந்துள்ளது. பலப்பல அல்லது பற்பல என்று தான் வர வேண்டும்.

நன்னூல் நூற்பா;
பல சில எனும் இவை தம்முன் தாம்வரின்
இயல்பும், மிகலும், அகரம் ஏக
லகரம் றகரம் ஆகலும் பிறவரின்
அகரம் விகற்பம் ஆகலும் உள பிற

2. //என்னிடமும் ஒரு புள்ளி (சே.. பாயிண்ட்டுங்க) உள்ளது//
பாயிண்ட்டு என்பதை 'குறிப்பு' என பெயர்த்தல் வேண்டும்

3. //அந்த எண்ணத்தை உடனே ‘ஆல்ட்+டெலிட்’ செய்துவிட்டு//
'ஷிப்ட்+டெலிட்’ என இருந்திருக்க வேண்டும்

பிழையான பதிவு என்பதால் பரிசுக்கு அருகதை இல்லை