Tuesday, August 3, 2010

எதிர்பாராது சூழும் ரசனை

இதுவரை பதிவை வெளியிடும் முன்னர் அதை யாரிடமும் காண்பித்து கருத்துக் கேட்டதில்லை நான். முதல் முறையாக சூழல் காரணமாகவும், பதிவின் சப்ஜெக்ட் காரணமாகவும் சமீபத்தில் ஒரு பதிவு குறித்து கருத்து கேட்க நேர்ந்தது. ஸ்பீக்கர் போனில் என்னை வைத்துக் கொண்டே அவர் அதை அவரது மனைவியிடம் காண்பித்து விவாதித்து கருத்துக் கூறினார். அதன்படி பதிவில் நான் சிறு மாற்றமும் செய்தேன். விஷயம் அதுவல்ல.. இது போல ஆரோக்கியமான விவாதம் நிகழ்த்துமளவில் ஒரு திறன்மிக்க தோழியை மனனவியாய் பெற்ற அவரின் அதிர்ஷ்டத்தைப் பாருங்களேன். நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

()()()()()()()()

பதிவுக்கு ரெண்டு மூணு நாளு லீவு விட்டாலே அதாவது பிஸியாக இருந்தாலே எழுதுவதற்கு விஷயங்கள் சேர்ந்து போகுது, எழுதாத நாட்களிலும் வந்து எட்டிப்பார்த்துச் செல்லும் நூற்றுக்கணக்கான (இன்னும் பத்து வருஷத்துக்குள்ள ஆயிரக்கணக்கான அப்படின்னு சொல்லக்கூடிய நிலை வரும்னு நம்புறேன் மகேஷ்) உங்கள் மீது ஒரு தனி பாசமும், கொஞ்சம் கோபமும் வந்துவிடுகிறது. கோபம் எதுக்கா? பதிவு போட்டா மட்டும் நூற்றுக்கணக்கு என்பதை பத்துக்கணக்காக்கி விடுவதால்தான்.

()()()()()()()()

நண்பர்களின் படைப்புகள் பிரபல பத்திரிகைகளில் வரத்துவங்கியுள்ளதால் உள்ளூர எனக்கும் கொஞ்சம் கொலைவெறி எண்ணம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது இப்போது. ம்ஹூம்.. யாரைப்பற்றியும், எதற்காகவும் கவலைப்படத் தயாராகயில்லை நான். சரவணா அன்பைத் தொலைத்ததைப்போல நாம் இரக்கக்குணத்தைத் தொலைத்தால்தான் இது போல சிறுகதை முயற்சிகளில் இறங்கமுடியும் என்று தெரிகிறது.

()()()()()()()()

அடிக்கடி ரயிலில் செல்லும் சூழல் ஏற்படுவதால் சில பல காட்சிகளை காணநேர்கிறது. சமீபத்தில் ஹைதராபாத்திலிருந்து சார்மினார் சென்னை நோக்கி கிளம்பும் கடைசி நிமிடங்களில் நடக்க இயலாமலிருந்த மிக வயதான ஒரு பெண்மணி, உறவினர் ஒருவரின் உதவியுடன் மிகவும் சிரமப்பட்டு வண்டிக்குள் வந்தார். பழுத்த பழமாக இருந்த வரை அலேக்காக தூக்காத குறையாக தோளில் தாங்கி உள்ளே அழைத்து வந்தது ஒரு இருபது வயது கூட நெருங்கியிருக்காத அல்ட்ராமாடர்ன் ‘ஸ்ட்ராங்’ இளம்பெண். அவரை இருக்கையில் அமரவைத்துவிட்டு படபடவென ‘வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்கோ, மாத்திரையை மறக்காதேங்கோ.. நா இன்னும் பத்து நாள்ளே வருவேன் அங்க..’ என்று பொரிந்துவிட்டு அவரின் கால்களை தொட்டு வணங்கியபோது வண்டி கிளம்பியிருந்தது. இவருக்கு துணையாக வந்த இன்னொரு நடுத்தரவயது பெண்ணை நோக்கி ‘அம்மா.. நன்னா பாத்துக்கோ.. போன் பண்ணுவேன்’ என்று கூறியவாறே ஓடிப்போய் மூவிங்கில் ஸ்டைலாக இறங்கி கையசைத்தார். அவர் அந்த வயதான பெண்மணியின் பேத்தியாக இருக்கவேண்டும். இந்த சின்னவயதில் இவ்வளவு பொறுப்போடும், வாஞ்சையோடும் அவர் நடந்துகொண்டது மனதுக்கு மிக மகிழ்வாய் இருந்தது. நம்புங்கள்.. இப்படியும்கூட பெரியவர்கள் மீது அன்பு கொண்டுள்ள அதுவும் அழகான இளம்பெண்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

()()()()()()()()

பொருட்களின் பெயரை அவசரத்தில் மாற்றிச்சொல்வது என்பது நமது பேக்குத்தனத்தின் ஸ்பெஷல். சமீபத்திய உதாரணங்கள் : வீடு மாற்றும் களேபரத்தில் கேஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரை கழற்ற தம்பியிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.. ‘அந்த இன்ஸுலேட்டரை கழற்றி பத்திரமா வைய்யி’ (இன்ஸுலேட்டர் அலுவலகத்தில் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை). அடுத்து புதிய வீட்டில் மாட்டிய லைட் எரியாததால் அதை நோண்டிக்கொண்டிருந்த தம்பியிடம் அடுத்த அறிவுரை, ‘முதல்ல லைட்டரை வெச்சு கரண்ட் வருதா செக் பண்ணிக்க..’

()()()()()()()()

இந்தப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் கதவு தட்டப்படுகிறது. 8 வயதில் பக்கத்து வீட்டு பெண்குழந்தைகள் இரண்டு பேர். ‘அங்கிள், ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் விளையாட வர்றீங்கன்னு சொன்னீங்கள்ல, வர்றீங்களா இப்போ?’ சும்மா ஒரு பேச்சுக்காக எப்போதோ நான் சொன்னது. வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்.

()()()()()()()()

ஃபாலோயர்கள் எண்ணிக்கை 430ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கும் வேளையில் ஆதரவளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் அன்பார்ந்த நன்றி. (அதையேன் கேட்குறீங்க.. 420 ல் பிரேக் அடித்து அப்படியே நின்று வெறுப்பேற்றியது இப்போது தன் பழைய (ஆமை) வேகத்தில் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது.. ஹிஹி..)

()()()()()()()()

நீண்ட நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில் பெருங்களத்தூர் டாஸ்மாக்கில் எதையோ (மளிகைச்சாமான்னு சொன்னா நம்பவா போறீங்க..) வாங்குவதற்காக, அதுவும் மாலை 5.30 பீக் நேரத்தில் நின்றுகொண்டிருந்தபோது கண்ட காட்சி. கிட்டத்தட்ட சாக்கடை போலிருந்த அருகாமை குப்பை மேட்டில் நடுத்தர மதிப்பில் ஒருவர் மல்லாக்கப் படுத்துக்கிடந்தார். ஓரளவு நடுத்தர வர்க்கம் எனும்படியான உடைகள்தான். கிக் தெளிந்து எழும் நேரம் போலிருக்கிறது. ஆகவே உதடுகளில் சின்ன ஒரு ஸ்மைல், முகத்தில் தேஜஸ், கண்கள் இன்னும் விழிக்காவிட்டாலும் கால் மேல் கால் போடப்பட்டு ஸ்டைலாக கால் ஆடிக்கொண்டிருந்தது. கைவசம் காமிரா இல்லாமல் போய்விட்டது.

()()()()()()()()

சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.!

.

33 comments:

ஆதிமூலகிருஷ்ணன் said...

முதன்முறையாக தொகுப்பு பதிவுகளிலிருந்தே ஆங்காங்கே பிட்டுகளைச் சேகரித்து வித்தியாசமாக மீள்பதிவு போட்டிருக்கிறேன்.

ஆகவே இன்றுமுதல் 'மீள்பதிவு ஸ்பெஷலிஸ்ட்' என்று அழைக்கப்படுவேனாக.!

(நேரமில்லை என்று இப்படி முயற்சித்தேன். இதைத் தொகுக்க ஆன நேரத்தில் புதிய பதிவே எழுதியிருக்கலாம்.. ஹும்.!)

நாடோடி இலக்கியன் said...

ஸ்னேக் & லேட‌ர் மேட்ட‌ர் ர‌ச‌னை.

மணிஜீ...... said...

ரீமிக்ஸ்

தமிழ் பிரியன் said...

பிட் ஏதும் என் கண்களுக்கு தெரியலியே.. :(
;-)

vanila said...

ஆகா.. ஆகா... ஆகாகா..

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
ஓடிப்போய் மூவிங்கில் ஸ்டைலாக இறங்கி கையசைத்தார்
//
பல்லாவரத்துல பஸ்லேருந்து இறங்கின பாப்பா பண்ணின மாதிரி இந்த பாப்பாவும் உங்கள பாத்து கையசைக்கும்னு நினைச்சீங்களா????

ஈரோடு கதிர் said...

வாசிக்க இதமான, ரசனையான ஒரு தொகுப்பு..

பரிசல்காரன் said...

//வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான், அதை பயன்படுத்திக் கொள்வதில்தான் மனிதர்கள் வேறு பட்டுப்போய் விடுகிறார்கள்//

எத்தனை உண்மையான வார்த்தைகள்! மிகவும் அருமை ஆதி...

வெடிகுண்டு முருகேசன் said...

. ()()()()()()()()
//

நல்ல கருத்துக்கள் !!
நல்ல நடை !

வெடிகுண்டு முருகேசன் said...

ஸ்னேக்ஸ் அண்ட் லேடர்ஸ் விளையாட வர்றீங்கன்னு சொன்னீங்கள்ல,
//

விளையாடுனீங்களா ??

வெடிகுண்டு முருகேசன் said...

அல்ட்ராமாடர்ன் ‘ஸ்ட்ராங்’ இளம்பெண்
//

இப்படி குறுகுறுனு பார்த்தால் ரமா அடிக்காமல் கொஞ்சவா செய்வாங்க :)

கார்க்கி said...

ஹிஹீ...

திட்டலாம்னு வந்தேன்..நீங்களே ஒத்துக்கிட்டீங்க

வெடிகுண்டு முருகேசன் said...

ஃபாலோயர்கள் எண்ணிக்கை 430ஐ தாண்டி
//

430 பேரும் உங்களை படிக்கிறாங்கனு நினைக்கிறீங்களா??

என்னை போல் மறைமுக வாசகர்கள் நிறைய பேர் இருக்காங்க

தொடர்ந்து எழுதுங்கள்

ராம்ஜி_யாஹூ said...

அருமை.
நான் ஒருமுறை என் பதிவை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வந்து ரமாவிடம் காண்பித்தபோது ‘முதல்ல கடைக்குப் போயி கால்கிலோ புளி வாங்கிட்டுவாங்க.. அத அப்படி ஓரமா வெய்ங்க.. அப்பறமா பாக்குறேன்’

இப்படி கணவன் மனைவி களுக்கு இடையே விருப்பங்களில், சிந்தனைகளில் சிறிய அளவு வேறுபாடுகள் இருக்க வேண்டும், அப்போத்த்டான் வாழ்க்கை சக்கரம் இனிமையாக சுழலும்.

இருவரும் ஒரே கருத்து ஆசை எண்ணம் உடையவர்களாக இருந்தால் அது வெறும் கணக்கு பார்முலா மாதிரி ஆகி விடும்.

வானம்பாடிகள் said...

:). இட்டிலி உப்புமா நல்லாத்தானிருக்கு

யுவகிருஷ்ணா said...

// உள்ளூர எனக்கும் கொஞ்சம் கொலைவெறி எண்ணம் தலைதூக்கிக் கொண்டிருக்கிறது//

இதுபோல அவியல் பதிவுகளை தவிருங்கள். ஆக்ச்சுவலி இது குறுக்குவழி. ரொம்ப நாளைக்கு தாங்காது.

ஏதாவது ஒரே ஒரு பிரச்சினையை எடுத்துக்கொண்டு 250 வார்த்தைகளில் நறுக்கென்று கட்டுரை எழுதுங்கள். அல்லது பிரச்சினையை கருவாக கொண்டு கதை எழுத முயற்சியுங்கள். எழுத்து மொத்தமே இவ்ளோதான்! :-)

BTW, கதைகளுக்கான மவுசு வலையுலகம் தவிர்த்து வெளியுலகத்தில் இப்போ ரொம்ப டல். எனவே கதையையே கட்டுரையாக எழுத முயற்சிக்கலாம். நான் இப்போது தீவிரமாக இதைதான் முயற்சித்து வருகிறேன்.

வெடிகுண்டு முருகேசன் said...

நான் இப்போது தீவிரமாக இதைதான் முயற்சித்து வருகிறேன்
//

இடைஇடையே யாரையாவது வம்பிலுக்கவும் தெரியனும் :)

Mahesh said...

அதானே பாத்தேன்... படிச்ச மாதிரியே இருக்கே.... அதுவும் அந்த ரயில் மேட்டர்....

///(இன்னும் பத்து வருஷத்துக்குள்ள ஆயிரக்கணக்கான அப்படின்னு சொல்லக்கூடிய நிலை வரும்னு நம்புறேன் மகேஷ்)//

இன்னமும் இவிங்களை நம்புதீரா நீரு?

//440ஐத் தாண்டி//

இன்னமும் உங்களை நம்புதா ஊரு?

Karthik said...

//வாழ்க்கையின் எந்த விநாடிகளிலும் ரசனையும், அழகும் நம்மைச் சூழ்ந்துகொள்ளலாம்தான்

அருமை. :)

மங்களூர் சிவா said...

nice.

இராகவன் நைஜிரியா said...

மீள் பதிவுக்கு மீள் பின்னூட்டம் போட எதாவது வழி இருக்கான்னு கண்டுபிடிக்கணும்...

sakthi said...

சில இரவுகளில்
தொலைதூரம் அழைத்துச்செல்கிறாய்
அந்தத் திகைப்பில் இருக்கும்போதே
விடிந்துவிடுமே
என்ற கவலை எழுகிறது எனக்கு.!

arumai

ஆதிமூலகிருஷ்ணன் said...

Thanks to Ilakkiyan, Maniji, Tamil (yOv..), Vanila, Yogesh, Kathir, Parisal, Vedikundu, Karki, Ramji, Vanampadikal, Yuvakrishna (mindla vachikiren boss. :-)), Mahesh, Karthik, Siva, Ragavan, Sakthi.!

வால்பையன் said...

//முதல்ல லைட்டரை வெச்சு கரண்ட் வருதா செக் பண்ணிக்க..//


நல்லவேளை விரல் வச்சு பார்க்க சொல்லல!

:-))

பா.ராஜாராம் said...

நல்ல தொகுப்பு.

கவிதையும் பிடிச்சிருக்கு. அப்புறம்,

புளி வாங்கிட்டீங்களா இல்லையா? :-)

Cable Sankar said...

இது மாதிரியான பதிவுகளை வரவேற்கிறேன். ஆதி.. இண்ட்ரஸ்டிங்..
கதை எழுதுவது காலி என்றெல்லாம் சொல்ல முடியாது.. நிச்சயம் அதற்கான ஒரு மார்கெட் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் என்ன கட்டுரை எழுதி பழகி பத்திரிக்கையாளராகவா ஆகப் போகிறீர்கள்? ஸோ. லக்க் பேச்சை கேட்காதீர்கள். நல்ல கதைகளை உங்களீடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

யுவகிருஷ்ணா said...

//நிச்சயம் அதற்கான ஒரு மார்கெட் இருக்கத்தான் செய்கிறது. //

எங்கே சைதாப்பேட்டை மார்க்கெட்டிலா? :-)

sriram said...

கவுஜ தவிர நீங்க எது எழுதினாலும் படிக்க நான் ரெடி..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Cable Sankar said...

பாருங்க நம்ம பாஸ்டன் ஸ்ரீராம் சொல்லியிருக்கிறத.. அவர் கவிதை தவிர எது எழுதினாலும் ரெடின்னு சொல்லியிருக்காரு.. அமெரிக்க்க்க்க்க்காஆ வரைக்கும் உங்களுடய கதைக்கு மார்கெட் இருக்கு ஆதி நீங்க கவலை படாதீங்க.. லக்கி வேணுமின்னே சைதாப்பேட்டை மார்கெட்னு உங்களை குறுக்கிட்டாரு..:)

அன்பரசன் said...

//420 ல் பிரேக் அடித்து அப்படியே நின்று வெறுப்பேற்றியது//

:)

KKPSK said...

follower on wait..கவலை வேண்டாம்.
கட்டுரை தான் நம்ம சாய்ஸ்.

யுவகிருஷ்ணா said...

கேபிள்!

விளையாட்டுக்கு சொல்லவில்லை. நிஜமாகவே கதைகளுக்கான மவுசு குறைகிறது.

தமிழ் வெகுஜன ரசனையை நீங்கள் குமுதம், விகடனை வைத்து மதிப்பிடலாம்.

நான் சிறுவயதாக இருந்தபோது குமுதத்தில் 5 சிறுகதை, 1 தொடர்கதை வெளிவரும். இன்று?

விரிவாக ஒரு பதிவெழுத இவ்விவாதம் ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி.. வால், பாரா, கேபிள், யுவா, (என்ன இங்க சண்ட? என்ன இங்க சண்ட?), ஸ்ரீராம், அன்பரசன், KKPSK.!