Friday, August 6, 2010

எனக்காக யார் அழுதது?

 

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஆதிமூலகிருஷ்ணன்.

2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
ஆம். அப்படித் தோன்ற வச்சுட்டாங்க. :-( (தாமிரா கதை தெரியும்ல, எத்தினி வாட்டி சொல்றது?)

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
ஒருத்தர் சொன்னால்கூட பரவாயில்லை என விட்டுவிடலாம். தற்செயலாக எழுதப்பட்ட கடிதங்களின் நடையை தேவையேயில்லாமல் இரு வேறு சந்தர்ப்பங்களில் இரு வேறு எழுத்தாளர்கள் அடுத்தடுத்து புகழ்ந்துவைக்க வந்தது வினை ஜூன்'08 லிருந்து.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
திரட்டிகளில் இணைத்தேன். துவக்கத்தில் தேடித்தேடி பின்னூட்டமிட்டேன். பதில் மரியாதையாக கமெண்ட் போட வருவார்கள் என்ற நம்பிக்கையில். வந்தார்கள். இப்போது நேரக்குறைவால் செய்யமுடியவில்லை.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆம். ஆனால் கற்பனை கலந்து. விளைவு எனில் பதிவுகள் உயிர்ப்போடு கிடைத்திருக்கலாம்.

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
ஆஃபீஸ் டார்ச்சரையும், வீட்டு டார்ச்சரையும் கொஞ்சம் மறப்பதற்காகவே வந்தேன். அதுவும் செவ்வனே நடக்கிறது. அவையும் செவ்வனே நடக்கின்றன.

7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
மூன்று. முதலில் துவக்கப்பட்டது 'முதல் முத்தம்' என்ற கவிதைக்கு மட்டுமான ஒரு வலைப்பூ. இப்போது அப்டேட்டின்றி கிடக்கிறது. இதோ நீங்கள் படித்துக்கொண்டிருப்பது இரண்டாவது. நான் ஃபாலோ செய்பவர்களின் பதிவுகளைத்தொகுக்க மட்டுமே துவங்கப்பட்டது சமீபத்தில் மூன்றாவது.

8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பலரிடம் கோபம் வந்திருக்கிறது, 'இவனெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?' என்று. சிலரிடம் பொறாமை வந்திருக்கிறது, 'நானெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?' என்று. பெயர்களைக் குறிப்பிடுவது சிக்கலை உண்டாக்கும், ஸாரி.

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
இப்போதைய இனிய நண்பர் எம்.எம்.அப்துல்லாவே என்னை முதலில் தொடர்பு கொண்டவர். முதலில் சந்தித்ததும் அவரையே. அவர் பாராட்டியது துவக்க கால ஏதோ ஒரு தங்கமணி பதிவுக்காக.

10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..

யாதொன்றுமில்லை.

என்னையழைத்தது புன்னகை. அவருக்கு நன்றி.

நானழைப்பது..

'அலோ..அலோ.. என்னது எல்லோருமே இந்தத் தொடரை எழுதிட்டாங்களா? நான்தான் கடைசியா.? என்ன கொடுமை சார் இது? ஒரு பிரபல பதிவருக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா நண்பர்களே.. கமெண்ட் போட மட்டும் பிளாக் வச்சிருக்கும் நண்பர்களை முதல் பதிவாக இந்தத் தொடர்பதிவைப் போட அன்போடு அழைக்கிறேன். அப்படியே 'நான் பதிவு துவங்கக் காரணம் ஆதிதான், அவர் ஒரு ஜீனியஸ்' என்றும் பாராட்டினீர்கள் என்றால் உங்கள் முதல் பத்து பதிவுகளுக்கு என் பின்னூட்டங்கள் கேரண்டி

59 comments:

வானம்பாடிகள் said...

இதோ இப்போவே ஒன்னு தொடங்கறேன். பின்னூட்டம் வரலை அப்புறமிருக்கு. ஸ்மைலி நாட் அலவ்ட்:))

சங்கவி said...

:))

நர்சிம் said...

;)

ஆயில்யன் said...

:) :) :)

Cable Sankar said...

இன்னும் மூணு நாள்ல குறும்படம் வெளியாகப்போவுது.. அதை பாத்து யார் யார் அழப் போறாங்களோ..? அவ்வ்வ்வ்..:)

ஆதிக்கு மட்டும் பின்னூட்டம்போடும் நர்சிமுக்கு என் கண்டனங்கள்..:)

நேசமித்ரன் said...

இன்னும் கொஞ்சம் ஆதி டச் இருந்திருக்கலாம் :)

தமிழ்ப்பறவை said...

:-) :-) :-) :-)

ப்ரியமுடன் வசந்த் said...

:(
.
.
.
.
.
.
.
.
.

Mahesh said...

//பலரிடம் கோபம் வந்திருக்கிறது, 'இவனெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?' என்று.//

சரி சரி புரியுது... இருந்தாலும் சபைல வெச்சு சாய்க்காம நாசுக்கா சொன்னதுக்கு.....

தராசு said...

எல்லாம் அவன் செயல்

நாடோடி இலக்கியன் said...

ஆறு ம‌ற்றும் எட்டாவ‌து கேள்விக்கான‌ ப‌தில்க‌ளில் ஆதி, மீதி ரொம்ப‌ பொருப்பா எழுதியிருக்கீங்க‌.

புன்னகை said...

அழைப்பை ஏற்று பதிவைத் தொடர்ந்தமைக்கு நன்றி! வழக்கம் போல, கலக்கல் பதிவு.
//நான்தான் கடைசியா.? என்ன கொடுமை சார் இது? ஒரு பிரபல பதிவருக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா நண்பர்களே..//
இது கொடுமை இல்லைங்க ஆதி. பொது விழாக்களில் வி.ஐ.பிகளின் உரை தான் பெரும்பாலும் நிறைவாக இருக்கும். அதைப் போல தான் இதுவும் :-)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

முழுமையாக அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வானம்பாடிகள்.
நன்றி சங்கவி.
நன்றி நர்சிம்.
நன்றி ஆயில்யன்.

நன்றி கேபிள். (யோவ் சும்மா இரும்யா நீரு, அவரே யோசிச்சு யோசிச்சு வர்றாரு. அது பொறுக்கலையா? உமக்கு)

நன்றி நேசமித்திரன். (தெருவு கோணலா இருந்ததை நீங்க கவனிக்கலைன்னு நினைக்கிறேன், இல்லைன்னா ஒழுங்கா ஆடியிருப்பேன்)

நன்றி தமிழ்பறவை.
நன்றி வசந்த்.

நன்றி மகேஷ். (பலே வெள்ளையத்தேவா.. பாஞ்சாலங்குறிச்சியில் வெள்ளையனா.?)

நன்றி தராசு.
நன்றி இலக்கியன்.

நன்றி புன்னகை. (ஆறுதல் சொல்றாங்களாமாமாம்)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/பலரிடம் கோபம் வந்திருக்கிறது, 'இவனெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?' என்று. சிலரிடம் பொறாமை வந்திருக்கிறது, 'நானெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?' என்று. பெயர்களைக் குறிப்பிடுவது சிக்கலை உண்டாக்கும், ஸாரி./

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இன்வால்வ் ஆகியிருந்தாலும், அரசியல்வாதிகளால்கூட வெளிப்படையாகப் பெயரைச் சொல்ல முடிகிறது. ஆனால், இணையத்தில் அப்படி இல்லை, பாத்தீங்களா? ஆனா, நாம ஊர்ல இருக்கற எல்லாரையும் நொள ஞாயம் பேசுவோம்.

பா.ராஜாராம் said...

:-)

//ஆஃபீஸ் டார்ச்சரையும், வீட்டு டார்ச்சரையும் கொஞ்சம் மறப்பதற்காகவே வந்தேன். அதுவும் செவ்வனே நடக்கிறது. அவையும் செவ்வனே நடக்கின்றன.//

:-))

Sureshkumar C said...

ஆதி... இதோ எனது வலைப்பூ... நம்ம பக்கம் கொஞ்சம் காத்து வாங்க வாங்க... உங்க பக்கம் சுண்டல் விக்கறதுக்கு கூட நான் வாரேன்...

http://www.nallathorveenai.blogspot.com/

Sureshkumar C said...

ஆதி... இதோ எனது வலைப்பூ... நம்ம பக்கம் கொஞ்சம் காத்து வாங்க வாங்க... உங்க பக்கம் சுண்டல் விக்கறதுக்கு கூட நான் வாரேன்...


http://www.nallathorveenai.blogspot.com/

க.பாலாசி said...

//'முதல் முத்தம்' //‘

இந்த லிங்க் வேலை செய்யுதான்னு பாருங்க...

பதில்களை ரசித்தேன்...

சுசி said...

இவ்ளோ பேர் அழரோமே கேக்கலையா உங்களுக்கு??

சுசி said...

முதல் முத்தத்தில என்னவோ தவறு ஆதி.

டம்பி மேவீ said...

"என்னது எல்லோருமே இந்தத் தொடரை எழுதிட்டாங்களா? நான்தான் கடைசியா.? "

எல்லோரும்ன்னு சொல்லாதீங்க பாஸ் ..உங்களுக்கு தெரிந்தவர்கள் எல்லோரும் எழுதிட்டாங்கன்னு சொன்ன நல்ல இருந்திருக்கும் ...

'இவனெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?'

அவங்க பக்கத்து வீட்டுகாரங்க அழுது இருப்பாங்க. அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா ?

இலக்கியவாதி ஆகிடாலே எல்லாம் தெரிஞ்சு இருக்க வேண்டும்ன்னு ஆசைபடுறாங்க ...

இராகவன் நைஜிரியா said...

// ஒருத்தர் சொன்னால்கூட பரவாயில்லை என விட்டுவிடலாம். தற்செயலாக எழுதப்பட்ட கடிதங்களின் நடையை தேவையேயில்லாமல் இரு வேறு சந்தர்ப்பங்களில் இரு வேறு எழுத்தாளர்கள் அடுத்தடுத்து புகழ்ந்துவைக்க வந்தது வினை ஜூன்'08 லிருந்து. //

வினை விதைத்தவர் யாரோ... அறுவடை செய்வது நாங்களாக இருக்கின்றோம்.... அவ்....வ்...

இராகவன் நைஜிரியா said...

// திரட்டிகளில் இணைத்தேன். துவக்கத்தில் தேடித்தேடி பின்னூட்டமிட்டேன். பதில் மரியாதையாக கமெண்ட் போட வருவார்கள் என்ற நம்பிக்கையில். வந்தார்கள். இப்போது நேரக்குறைவால் செய்யமுடியவில்லை. //

இப்போதெல்லாம் பதில் மரியாதை கிடைக்கின்றதா இல்லையா?

இராகவன் நைஜிரியா said...

மீ த 25...

இராகவன் நைஜிரியா said...

// ஆஃபீஸ் டார்ச்சரையும், வீட்டு டார்ச்சரையும் கொஞ்சம் மறப்பதற்காகவே வந்தேன். அதுவும் செவ்வனே நடக்கிறது. அவையும் செவ்வனே நடக்கின்றன. //

நீங்க டார்ச்சரில் இருந்து தப்பிப்பதற்காக மற்றவங்களை டார்ச்சர் பண்ணுவது... ம்ம்ம்ம் நடக்கட்டும்

இராகவன் நைஜிரியா said...

// இப்போதைய இனிய நண்பர் எம்.எம்.அப்துல்லாவே என்னை முதலில் தொடர்பு கொண்டவர். முதலில் சந்தித்ததும் அவரையே. அவர் பாராட்டியது துவக்க கால ஏதோ ஒரு தங்கமணி பதிவுக்காக. //

அப்து அண்ணே...இப்படி பண்ணிட்டீங்களே... இது நியாயமா..

இராகவன் நைஜிரியா said...

// அலோ..அலோ.. என்னது எல்லோருமே இந்தத் தொடரை எழுதிட்டாங்களா? நான்தான் கடைசியா.? என்ன கொடுமை சார் இது? //

இதுவிட கொடுமை... வலைப்பூக்களை ஒழுங்காக நீங்க படிப்பதில்லை என்பதுதான்... இன்னும் நிறையப் பேர் போடவில்லை என்பது தான் உண்மை..

இராகவன் நைஜிரியா said...

// ஒரு பிரபல பதிவருக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா நண்பர்களே.. //

ரொம்ப பிரபலமானால் இதுதான் பிரச்சனையோ?

இராகவன் நைஜிரியா said...

// அப்படியே 'நான் பதிவு துவங்கக் காரணம் ஆதிதான், அவர் ஒரு ஜீனியஸ்' என்றும் பாராட்டினீர்கள் //

இப்பவே நிறைய பேர் என் பேரில் கொலை வெறியில் திரிகின்றார்கள்... இத மட்டும் சொன்னேன் என்றால் என் வலைப்பூவே காணாமல் போய்விடும்...

இராகவன் நைஜிரியா said...

// உங்கள் முதல் பத்து பதிவுகளுக்கு என் பின்னூட்டங்கள் கேரண்டி //

இதுக்காக நாங்க 10 பதிவா ஆரம்பிக்க முடியும்... 10 இடுகை என்று இருக்க வேண்டாமோ?

(நன்றி : பழமை பேசி..)

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இதோ இப்போவே ஒன்னு தொடங்கறேன். பின்னூட்டம் வரலை அப்புறமிருக்கு. ஸ்மைலி நாட் அலவ்ட்:)) //

அதெல்லாம் பின்னூட்டம் போடுவதற்காக வச்சு இருக்கிற வலைப்பதிவர்களுக்கு மட்டும்தான்... நீங்க எல்லாம் பெரிய வலைப்பதிவர்கள்... உங்களுக்கு கிடையாது..

இராகவன் நைஜிரியா said...

// நேசமித்ரன் said...
இன்னும் கொஞ்சம் ஆதி டச் இருந்திருக்கலாம் :) //

ஆதி டச் எல்லாம் வேண்டாம்... தற்காலம் மட்டும் வேண்டும்... பழசெல்லாம் இப்ப எதுக்குங்க..

இராகவன் நைஜிரியா said...

// Cable Sankar said...
இன்னும் மூணு நாள்ல குறும்படம் வெளியாகப்போவுது.. அதை பாத்து யார் யார் அழப் போறாங்களோ..? அவ்வ்வ்வ்..:) //

சிலர் சிரிக்க பலர் அழுதுதானே ஆக வேண்டும்... இது உலக நியதி...

// ஆதிக்கு மட்டும் பின்னூட்டம்போடும் நர்சிமுக்கு என் கண்டனங்கள்..:) //

நானும் என் கண்டணங்களை தெரிவித்துக் கொள்ளுகின்றேன்..

இராகவன் நைஜிரியா said...

// Mahesh said...
//பலரிடம் கோபம் வந்திருக்கிறது, 'இவனெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா?' என்று.//

சரி சரி புரியுது... இருந்தாலும் சபைல வெச்சு சாய்க்காம நாசுக்கா சொன்னதுக்கு..... //

இப்படியெல்லாம் வந்து வாக்குமூலம் கொடுக்கபிடாது... என்னைப் பாருங்க எப்படி சைலண்டா இருக்கேன்னு...

இராகவன் நைஜிரியா said...

// நாடோடி இலக்கியன் said...
ஆறு ம‌ற்றும் எட்டாவ‌து கேள்விக்கான‌ ப‌தில்க‌ளில் ஆதி, மீதி ரொம்ப‌ பொருப்பா எழுதியிருக்கீங்க‌. //

அப்படின்னா மத்த கேள்விகளுக்கு பொருப்பில்லாம எழுதியிருக்கார்ன்னு சொல்ல வர்றீங்களா?

வெடிகுண்டு முருகேசன் said...

பதில் மரியாதையாக கமெண்ட் போட வருவார்கள் என்ற நம்பிக்கையில். வந்தார்கள். இப்போது நேரக்குறைவால் செய்யமுடியவில்லை
//

ஆனா நீங்க பிரபல பதிவரா ஆன பிறகு
தான் யாருக்கும் பின்னுட்டம் போடுவதில்லையாமே :)

இராகவன் நைஜிரியா said...

// புன்னகை said...
அழைப்பை ஏற்று பதிவைத் தொடர்ந்தமைக்கு நன்றி! வழக்கம் போல, கலக்கல் பதிவு.
//நான்தான் கடைசியா.? என்ன கொடுமை சார் இது? ஒரு பிரபல பதிவருக்கு வந்த சோதனையைப் பார்த்தீங்களா நண்பர்களே..//
இது கொடுமை இல்லைங்க ஆதி. பொது விழாக்களில் வி.ஐ.பிகளின் உரை தான் பெரும்பாலும் நிறைவாக இருக்கும். அதைப் போல தான் இதுவும் :-) //

ஆஹா... புன்னகை... கிளம்பி விட்டுடீங்களே... எல்லாம் சரிங்க வி.ஐ.பி அப்படின்னா என்னாங்க?

இராகவன் நைஜிரியா said...

// !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
முழுமையாக அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள் //

இப்படி ஒரு பச்ச புள்ளையா இருக்கீங்களே... உங்களை பார்த்தா பாவமா இருக்கு..

வெடிகுண்டு முருகேசன் said...

நைஜிரியா ராகவன் சார்

நல்லா இருக்கிங்களா??

இராகவன் நைஜிரியா said...

// நன்றி கேபிள். (யோவ் சும்மா இரும்யா நீரு, அவரே யோசிச்சு யோசிச்சு வர்றாரு. அது பொறுக்கலையா? உமக்கு)//

நாங்க கேள்வி கேட்பது உங்களுக்கு பொருக்கவில்லையா?

// நன்றி நேசமித்திரன். (தெருவு கோணலா இருந்ததை நீங்க கவனிக்கலைன்னு நினைக்கிறேன், இல்லைன்னா ஒழுங்கா ஆடியிருப்பேன்) //

ஆதி... இதுக்கு ஒரு கவிதை எழுதிடப் போறாரு...

இராகவன் நைஜிரியா said...

// Sureshkumar C said...
ஆதி... இதோ எனது வலைப்பூ... நம்ம பக்கம் கொஞ்சம் காத்து வாங்க வாங்க... உங்க பக்கம் சுண்டல் விக்கறதுக்கு கூட நான் வாரேன்...

http://www.nallathorveenai.blogspot.com/ //

அண்ணே உங்களுது கவிதைங்க... மீ த எஸ்கேப்பூ..

வெடிகுண்டு முருகேசன் said...

ஆதிமூலகிருஷ்ண
//

பத்து வரிகளில் பெயர் குறிப்பு வரைக

அதிஷா said...

அந்த காலத்தில...ஆவ்வ்வ்

உஜிலாதேவி said...

குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன் http://ujiladevi.blogspot.com

Sukumar Swaminathan said...

:)

V.Radhakrishnan said...

:) ஆதின்னா ஆதிதான்.

மதார் said...

/அப்படியே 'நான் பதிவு துவங்கக் காரணம் ஆதிதான், அவர் ஒரு ஜீனியஸ்' என்றும் பாராட்டினீர்கள் என்றால் உங்கள் முதல் பத்து பதிவுகளுக்கு என் பின்னூட்டங்கள் கேரண்டி/

பின்னூட்டம் எல்லாம் வேண்டாம் , எனக்கு பதிவுலகம் பற்றி தெரிய வந்ததே எனக்கு மெயிலில் பார்வர்ட் ஆகி வந்த உங்கள் தொடர்கதைகளுள் ஒன்று . எதேச்சையாய் எதையோ மௌஸ் கிளிக் பண்ண வந்தது உங்கள் பிளாக் அப்படியே கமெண்ட்ஸ் போட்டவர்களின் போட்டோ என்று கிளிக் பண்ண கிளிக் பண்ண எனக்கு வேறு ஒரு உலகம் இருப்பதே அப்பொழுதுதான் தெரிய வந்தது . சின்ன வயசுல இருந்தே அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்த எனக்கு வளர்ந்த பின் எழுத்தாளராக வர விருப்பம் . படிப்பு வேலை என்று கால ஓட்டத்தில் அது கனவாகியே போய்விடுமோ என்று இருந்த எனக்கு இப்பொழுது நினைவாகிவிட்டது . அந்தக் கதை பெயர் மறந்துடுச்சு அந்தக் கதை மூலம் ப்ளாக் பற்றி தெரிய வைத்த உங்களுக்கு நன்றிகள் .ஜூன் மாதம் எழுத வந்த நானும் ஒரு வருடம் நிறைவு பண்ணிட்டேன் .

மதார் said...

/அப்படியே 'நான் பதிவு துவங்கக் காரணம் ஆதிதான், அவர் ஒரு ஜீனியஸ்' என்றும் பாராட்டினீர்கள் என்றால் உங்கள் முதல் பத்து பதிவுகளுக்கு என் பின்னூட்டங்கள் கேரண்டி/

பின்னூட்டம் எல்லாம் வேண்டாம் , எனக்கு பதிவுலகம் பற்றி தெரிய வந்ததே எனக்கு மெயிலில் பார்வர்ட் ஆகி வந்த உங்கள் தொடர்கதைகளுள் ஒன்று . எதேச்சையாய் எதையோ மௌஸ் கிளிக் பண்ண வந்தது உங்கள் பிளாக் அப்படியே கமெண்ட்ஸ் போட்டவர்களின் போட்டோ என்று கிளிக் பண்ண கிளிக் பண்ண எனக்கு வேறு ஒரு உலகம் இருப்பதே அப்பொழுதுதான் தெரிய வந்தது . சின்ன வயசுல இருந்தே அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்த எனக்கு வளர்ந்த பின் எழுத்தாளராக வர விருப்பம் . படிப்பு வேலை என்று கால ஓட்டத்தில் அது கனவாகியே போய்விடுமோ என்று இருந்த எனக்கு இப்பொழுது நினைவாகிவிட்டது . அந்தக் கதை பெயர் மறந்துடுச்சு அந்தக் கதை மூலம் ப்ளாக் பற்றி தெரிய வைத்த உங்களுக்கு நன்றிகள் .ஜூன் மாதம் எழுத வந்த நானும் ஒரு வருடம் நிறைவு பண்ணிட்டேன் .

வழிப்போக்கன் - யோகேஷ் said...

// ஆஃபீஸ் டார்ச்சரையும், வீட்டு டார்ச்சரையும் கொஞ்சம் மறப்பதற்காகவே வந்தேன். அதுவும் செவ்வனே நடக்கிறது. அவையும் செவ்வனே நடக்கின்றன. //

Great Escape........

கார்க்கி said...

//இது கொடுமை இல்லைங்க ஆதி. பொது விழாக்களில் வி.ஐ.பிகளின் உரை தான் பெரும்பாலும் நிறைவாக இருக்கும். அதைப் போல தான் இதுவும் :/

கொடுமை. அப்ப என்னை கூப்டது?

விக்னேஷ்வரி said...

பெயர்களைக் குறிப்பிடுவது சிக்கலை உண்டாக்கும், ஸாரி.//
:)

அவசரமா எழுதினீங்களா ஆதி...

Mahi_Granny said...

'நான் பதிவு துவங்கக் காரணம் ஆதிதான், அவர் ஒரு ஜீனியஸ்' என்றும் பாராட்டினீர்கள் என்றால் உங்கள் முதல் பத்து பதிவுகளுக்கு என் பின்னூட்டங்கள் கேரண்டி' நல்ல யோசனையாக இருக்கிறதே. ஆனாலும் எழுத மாட்டோமில்ல. " இவங்க எல்லாம் எழுதவில்லை என்று யார் அழுதா " என்று கேட்டிரக்கூடாது இல்லையா? ஒரு தற்காப்புதான் .

Nasrin said...

நான் தங்கள் பதிவுகள் அனைத்தையும் ஒரே மூச்சாக ஒரு நாளில் படித்து முடித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. கண்களை திருப்பவே மனம் வர வில்லை. அதிலும் கல்யாணத்தை பற்றிய தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் நகைச்சுவையாக இருந்தன.

--
محموده نسرين

Anonymous said...

எல்லாரும் ஸ்மைலி போட்டிருக்காங்க
நானும் போடறேன் :):)

புதுகைத் தென்றல் said...

நானும் வந்து படிச்சிட்டேன்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்ல பகிர்வுங்க. நன்றி. உங்க 4 வது கேள்வி பதில்தான்......ஹி.....ஹி...

வால்பையன் said...

'நான் பதிவு துவங்கக் காரணம் ஆதிதான், அவர் ஒரு ஜீனியஸ்'

ராமலக்ஷ்மி said...

:)!