Sunday, August 8, 2010

இரவின் நிறம் -‍குறும்படம்

இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம் நண்பர்களே.. திட்டுவதற்காகவோ அல்லது பாராட்டுவதற்காகவோ இரண்டுக்குமாக சேர்த்துத்தான் நான் அப்படிச் சொல்கிறேன். முதலில் இதெல்லாம் தேவையா என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு ஜிமெயில் ஐடி இருப்பத‌ற்காக பிளாக் ஒன்றை ஆரம்பித்துவிட்டு 'எழுத்தாளர்' என்றெல்லாம் வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டு திரிவதற்கு முன்னால் இது ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. 'இரவின் நிறம்' எப்படி இருந்தாலும் குறும்பட (ஒன்றாவது உருப்படியாக எடுக்கும் வரைக்கும்) முயற்சிகள் தொடரும் என்று உங்களை எச்சரித்து இப்போதைக்கு விடைபெறுகிறேன். நன்றி.

 

 

.

73 comments:

இராமசாமி கண்ணண் said...

கார்க்கி அப்படியே அந்த கேரக்டரா வாழ்ந்துருக்காரு.. டயலாக்லாம் யாருங்க எழுதுனது .. கேமரா கோணங்கள் சூப்பர் ..எங்கேயோ போயிட்டிங்க.. :)

இராமசாமி கண்ணண் said...

கதை யாருங்க எழுதுனது :)

தர்ஷன் said...

கார்க்கி நடிப்பு சூப்பர்

செந்தழல் ரவி said...

சூப்பர் !!

Truth said...

டயலாக் சரியா புரியல. ஆக்சுவலா விஷுவலைசேஷன்(?) நல்லா இருந்தது. அதை மட்டும் தான் பாத்தேன். அதனால டயலாக் நான் கவனிக்கலன்னு தான் சொல்லனும். மொத்தம் மூனு கேமரா யூஸ் பண்ணீங்களா? கார்க்கி எழுந்திருக்கிற சீன் நல்லா படம் புடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

எனக்கு நண்பர்கள் யாருமே இல்லை! படம் எடுக்க முடியல. என்னையும் ஆட்டையில சேத்துக்குவீங்களா?

கார்க்கி said...

எல்லா புகழும் டைரக்டருக்கே

மீ த எஸ்கேப்ப்ப்

கார்க்கி said...

truth, ஒரே கேமராதான்.. அதே மாதிரி 3 தடவ நடிக்கிறதுக்குள்ள தாவூ தீர்ந்தது.

ஆதி தி கிரேட் ஹிஹிஹி

எங்க டீமில் நல்ல தயாரிப்பாளர் இல்லாம கஷ்டப்ப்டறோம். வானா ஜாய்ன் அஸ்?

sharmily said...

//எங்க டீமில் நல்ல தயாரிப்பாளர் இல்லாம கஷ்டப்ப்டறோம். வானா ஜாய்ன் அஸ்?//

அது சரி..,,:)

SurveySan said...

1st 30 seconds சூப்பரா இருந்தது. அப்பாலிக்கா கீழ எறங்கிடுச்சு.

நல்ல முயற்சி. கலக்குங்க.

நேசமித்ரன் said...

முயற்சிகள் தொடரட்டும் ஆதி !

சுசி said...

கை குடுங்க ஆதி.. சூப்பரா இருக்கு.

நடிகர் கார்க்கி கலக்கி இருக்கார் நடிப்பில.

இந்த எச்சரிப்புக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் டைரக்டரே..

எப்போ அடுத்த படம்??

பரிசல்காரன் said...

முயற்சி திருவினையாக்கும்!

ராம்ஜி_யாஹூ said...

அருமை.
குறைகள் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்திற்காக சொல்ல வேண்டும் என்றால்;

முதல் ஷாட்டில் பார்க்க வீடு மாதிரி இருக்கிறது (வெளிப்பார்வையில் ) ,இரண்டாவது ஷாட்டில் இருந்து ஒரு ஹோட்டலாக மாறி விடுகிறது கதை களம்.
ரொம்பவே ஸ்லோ ஆக போகிறது.

ராம்ஜி_யாஹூ said...

பார்த்த உடன் எனக்கு இந்த குறை மனதில் பட்டதற்கும் காரணம் சொல்லி விடுகிறேன்.

கேபிள் சங்கரின் பதிவில் பல நாட்களாக இந்த படத்தின் ட்ரைலர், போஸ்டர் பார்த்து இருக்கிறேன். ட்ரைலரில் இந்த கட்டடத்தின் முகப்பு மட்டும் பார்த்து இருந்தேன்.

எனக்கு பொட்டல் புதூர், முக்கூடல் பகுதியில் இதே போல ஒரு கட்டடம் பார்த்த ஞாபகம். அந்த கிராமம் பற்றிதான் படம் இருக்கும் என நினைத்து இருந்தேன்.

ஆனால் இரண்டாவது காட்சியிலேயே ஹோட்டல்/resort ரூமில் உள்ள வெள்ளை வெளேரென்ற தலையணை உறை பார்த்ததும் நான் ஷாக்காகி போனேன்.

Truth said...

தயாரிப்பாளரா இருக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன். ஆனா தயாரிப்பாளரா மட்டும் இருக்க மாட்டேன் :-)

பரிசல்காரன் said...

சரக்கு பாட்டில் இருக்கும் பொசிஹன் செயற்கையாய் இருக்கிறதென்பதைத் தவிர இந்த முதல் முயற்சியில் பெரிதாய் ஒன்றும் குறைகளில்லை. எழுத்தில் வாசகன் உணர வேண்டிய ட்விஸ்டை திரையில் காண்பிப்பதில் உள்ள சவாலில் நீங்கள் ஜெயித்து விட்டதாகவே எண்ணுகிறேன்.

தொடரட்டும்...

பரிசல்காரன் said...

பொசிஹன் = பொசிஷன்.

மன்னிக்க.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

நல்ல முயற்சி..

ப்ரியமுடன் வசந்த் said...

கேமரா நல்லா எடுத்துருக்கீங்க கதை ஆடியோ சரியா கேட்காததால புரியல?????????

கார்க்கி குட் லக்..!

முகிலன் said...

1. கொஞ்சம் ஆடியோ தெளிவா இருந்திருக்கலாம்.
2. ரெண்டு பேர் பேசுற மாதிரி இருந்தது, நாஞ்சில்நாதன் வாயசைக்கவே இல்லை. அதுனாலயே இது பக்கத்து ரூம்ல கேக்குதோன்னு நினைச்சேன். டிவின்னு மாத்திட்டீங்க. அவ்வளவே ட்விஸ்ட். இதுக்கு பதிலா கொலை செய்யற திட்டத்தை ஒரே ஆள் (கிளியரா) பேசிக்கிட்டே இருக்கிற மாதிரி எடுத்திருந்தா கண்டிப்பா கார்க்கியைக் கொல்ல நாஞ்சில்நாதன் திட்டம் தீட்டுறதா நினைச்சிருப்பேன்.

அடுத்த படம் இன்னும் சிறப்பா கொடுக்க வாழ்த்துகள்.

Sukumar Swaminathan said...

முயற்சி திருவினையாக்கும்... வாழ்த்துக்கள்...

தருமி said...

//ஆடியோ சரியா கேட்காததால புரியல?????????//

கொஞ்சம் கூட புரியலை ....

vanila said...

@ //பொசிஹன் = பொசிஷன்.// இத எப்போ மாத்துனாங்க.. சீமொழி மாநாட்டுலையா.. சொல்லவே இல்ல..


மற்றபடி கார்க்கி பாறைகள்..

வெடிகுண்டு முருகேசன் said...

படப்ப்திவு..
படத்தொகுப்பு..
கதை..?
திரைக்கதை..
வசனம்..
இயக்கம்..

வருங்கால டீ.ஆர். ஆதி :)

வெடிகுண்டு முருகேசன் said...

ஆரம்பத்தில் வரும் ஆல் வழங்கும் என்பதற்கு பதில் ரமா வழங்கும் என போட்டு இருந்தால் ஓட்டு அள்ளியிருக்கும் :)

Nataraj said...

1.58-இல் கார்க்கி ஒரு முக்கால் செகண்டுக்கு காமெராவை பார்க்கிறார். சாம் ஆண்டர்சனை அடுத்து இதை செய்தது நம்ம சகா தான் :)

பரிசல் சொன்ன பாட்டில் பொசிஷன் நானும் நோட் செய்தேன். நல்ல முயற்சி. ஒரே காமெராவில் கார்க்கி அதே போஸில் படுத்து எழுந்திருப்பது சூப்பர்.

அதிஷா said...

படம் ஹாலிவுட் தரம். டயலாக்தான் புரியல.. சப்டைட்டில் போடுங்கப்பா!

sivakasi maappillai said...

கிடைத்த‌ கேப்பில் கிடா வெட்டி இருக்கிறீர்க‌ள்... ந‌ன்றாக‌ இருந்த‌து....

அதிலும் கார்க்கி எனும் மாபெரும் க‌லைஞ்க‌னை த‌மிழுக்கு அறிமுக‌ப‌டுத்திய‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி.... என்ன‌ ந‌டிப்பு.... என்ன‌ ந‌டிப்பு.... ஒலிப்ப‌திவிலும் வித்தை காட்டியுள்ளார்....வாழ்த்துக்க‌ள்... பொண்ணு பாக்கும் நேர‌த்தில் இந்த‌ மாபெரும் அறிமுக‌ம் த்ரிஷா, ஏமி, தீபிகா ம‌ற்றும் ப‌ல‌ தோழிக‌ளின தூக்க‌த்தை கெடுக்க‌ போகிற‌து.... இப்படிக்கு...
தூங்கி ந‌டித்து ப‌ல‌ பெண் இத‌ய‌ங்க‌ளின் தூக்க‌த்தை க‌ளவாடிய‌ வ‌லையுல‌க‌ ரிய‌ல் சூப்ப‌ர் ஸ்டார் கார்க்கி அகில‌ உல‌க‌ மகாராஷ்ட்ரா ர‌சிக‌ர் ம‌ன்ற‌ செய‌லாளர்....

புன்னகை said...

You-tube blocked!!! :((((((((((((

sudhanthira said...

super,your writing .
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு .உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.

vanila said...

sorry "semmozhi".. was a typo..

மின்னுது மின்னல் said...

அந்த கேரக்டரா படுத்துட்டாரு கார்க்கி
:)

குடிச்சிட்டு தான் படுத்து இருக்காருனு முன்னாடியே ஊகிக்க முடிந்தது


முடிவு கலக்கல்

ஏற்காடு டூரின் போது எடுத்ததா ??

குசும்பன் said...

ஆதி லைட் அணைந்ததும் உள்ளே சென்ற பெண் நடிப்பு எல்லாம் வரவே இல்லை:(( எடிட்டிங்கில் போய்விட்டதா?

விக்னேஷ்வரி said...

டைட்டிலெல்லாம் பலமா இருக்கு அண்ணாத்த.

நர்சிம் said...

கலக்கல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர் !! :))

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[ஆனால் ஒரு ஜிமெயில் ஐடி இருப்பத‌ற்காக பிளாக் ஒன்றை ஆரம்பித்துவிட்டு 'எழுத்தாளர்' என்றெல்லாம் வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு திரிவதற்கு முன்னால் இது ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.]]]

வன்மையாகக் கண்டிக்கிறேன் ஆதி..!

எழுத்தாளன் என்பவன் ஏதோ தனியாகவே பிறந்து வளர்ந்து வந்தவனில்லை. எங்கோ ஓரிடத்தில் எழுதிதான் மேலே வந்திருக்கிறான்.

எழுத்தாளன் என்பவன் தானாகவே உருவாகியும்விடவில்லை.

எழுத்துத் திறமை தனக்குள்ளேயே இருப்பதை அவனே கண்டறிந்து அந்தத் திறமையை முழு மூச்சுடன் தனது உழைப்பினால் வளர்த்ததினால்தான் புகழ் பெற்றிருக்கிறான்.

அவர்களுக்கு பத்திரிகைகளில் கிடைத்த வாய்ப்பை வலைப்பதிவுகளில் நமது சக தோழர்கள் இங்கே பகிர்ந்து மேலே வர முயன்று கொண்டிருக்கிறார்கள்..!

இவர்களில் பலர் நிச்சயம் பலரால் பேசப்படக்கூடிய எழுத்தாளர்களாக எதிர்காலத்தில் வருவார்கள்..!

அதற்கான அடிப்படைதான் இந்த வலைத்தளம்..!

ஒரு வலைப்பதிவர், எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லையே.
பன் மொழித் திறமை இருப்பதாலேயே மொழி மாற்றம் செய்தே எழுத்தாளர் என்று பலரும் சொல்லிக் கொள்ளும்போது, சுயமாக தனக்குத் தெரிந்த மொழியில் எழுதுகின்ற, எழுதிப் பழகுகின்ற நமது தோழர்களும் எழுத்தாளர்கள்தான்..!

இதனை சக வலைப்பதிவரான நீங்களே சொல்லியிருப்பது வேதனைக்குரியது..!

Palay King said...

All the Best..

Congrats ...

தராசு said...

ஆபீஸ்ல பார்க்க முடியாது, அப்பாலிக்கா வர்றேன்.

வினையூக்கி said...

@உண்மைத் தமிழன் அண்ணன் !!

ஆதி சகஜமாக குறிப்பிட்டு இருக்கார். அதுவும் தன்னைத்தான் குறிப்பிட்டு இருக்கார். ஆகையால் இதில் சீரியஸ் ஆக வேண்டியது இல்லை அண்ணே!! டேக் இட் ஈசி.

நாமெல்லாம் ரவுடிஸ்தான், சீக்கிரம் ஒவ்வொருத்தரா ஆவி குமுதம் கல்கி என ஜீப்ல ஏறுவோம்:))))

By the way ஆதி, குறும்படம் அருமை.

டம்பி மேவீ said...

ஆதிண்ணே ...குறும்படம் செமைய இருக்கு.... செம சஸ்பென்ஸ் ஆ வசனத்தை கொண்டு போயிட்டு ....அதை டிவி ல இருந்து வந்த சத்தம்ன்னு காட்டிருப்பது நல்ல ஐடியா ....

(சரக்கு பாட்டில் கால் வாசி தானிருக்கு ..மீதி என்னாச்சு ...கார்க்கி கடைசி சீன் ல சரக்கு அடிச்சாரா இல்லையா ??? போன்ற முக்கியமான தகவல்களை எப்ப தருவீங்க )

sivakasi maappillai said...

உண்மை தமிழா

நீங்கள் இட்டது பின்னூட்டமா.. இல்லை பதிவா????

தமிழ் அமுதன் said...

சூப்பர்....!

அந்த ஃபுல் பாட்டில் எதுக்கு சாஞ்சு கெடக்கு..? ;;)

Anonymous said...

பாதிநேரம் ஆடியோ சரியாவே இல்லை. உஸ்ஸுனு ஒரு சத்தம். என் கம்ப்யூட்டர்லதான் அப்படியான்னு தெரியலை

கார்க்கி said...

அனைவருக்கும் நன்றி..

மேவி,,
என்ன டவுட் இது? நல்ல வேளை நான் டூயட் பாடவில்லை :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

அன்பு நண்பர்களே, பிள்ளைகளின் சொப்பு விளையாட்டை ரசிக்கும் மனபாவத்திலேயே இங்கே நீங்கள் பாராட்டியதாகக் கருதுகிறேன். குறும்படம் என்பது பிளாக் அல்ல, தனிநபர் முயற்சி செய்ய. குழு அமைத்திருக்கிறோம். நிஜமாகவே உங்கள் பாராட்டுக்கும், விமர்சனத்துக்கும் தகுதியுள்ள ஒரு படத்துடன் மீண்டும் வருவோம். அனைவருக்கும் நன்றி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@ட்ரூத்

மெயிலுக்கு வாருங்கள்.

@ராம்ஜி

நாங்கள் தர நினைத்த திருப்பம் வேறு. நீங்கள் உணர்ந்த திருப்பம் வேறு. எப்படியோ திருப்பம் இருந்தால் சரிதானே. :-)

@முகிலன்

முன் திட்டம் இல்லாததால் பல குறைகள். அடுத்தடுத்த படங்களில் களைவோம்.

@சுகுமார் சுவாமிநாதன்

விளம்பர ஏற்பாடுகளுக்கு முன்னரே படம் தயாராகிவிட்டதால் நன்றி கார்ட் போடமுடியவில்லை, மன்னிக்க.

@தருமி

அதற்காகத்தான் காலை மிதிச்சதே. டைட்டிலில் கார்க்கி பேரு போட்டிருக்கேன்ல. அவனைத் திட்டவும்.

@வெடிகுண்டு

டிஆரா? இதுக்கு பேசாம நாலு கெட்ட வார்த்தையில திட்டியிருக்கலாம். உண்மையில் எடிடிங், இயக்கம் மட்டுமே நான். பிற குழு முயற்சிகளே. அடுத்த படங்களில் உண்மையான டைடில்கள் போடப்படும்.

@உண்மைத்தமிழன்

உங்கள் கருத்துகள் ஏற்புடையாவை அண்ணன். ஏற்கிறேன். இனி கவனத்துடன் எழுதுகிறேன். இருப்பினும் இதில் என்னையே நான் குறிப்பிட்டுள்ளேன். நீங்கள் சொன்னபிறகே இன்னொரு அர்த்தம் புரிகிறது. அப்படிப் பார்த்தாலும் முழுதும் அது தவறில்லைதானே என்பதும் உறைக்கிறது. நாலு வரிகளில் 40 தவறுகளுடன் எழுதுபவர்களையும் பார்க்கத்தானே அண்ணே செய்கிறோம். :-))

Saravana Kumar MSK said...

//ஆதிமூலகிருஷ்ணன்
August 9, 2010 5:39 PM
அன்பு நண்பர்களே, பிள்ளைகளின் சொப்பு விளையாட்டை ரசிக்கும் மனபாவத்திலேயே இங்கே நீங்கள் பாராட்டியதாகக் கருதுகிறேன்//

சரி, சீரியஸ் பின்னூட்டம்.. :))

முகிலன் சொன்னதோடு, என் பங்குக்கு..
இரண்டு பேர் பேசிக்கொள்வதற்கு பதில், அவர் மனதில் ஓடுகிற மனசாட்சியின் குரலாய், ஒரே குரலாய் இருந்திருக்கலாம்.

நிறைகள் : interesting கதைக்கரு.

குறைகள் : வசனங்கள் தெளிவா கேட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். கொஞ்சம் நிறுத்தி நிதானமா அந்த குரல் பேசியிருக்கலாம். அவசியம் இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் இருக்கணும் (படம் மட்டும்) என்று முடிவு செய்து வேகவேகமாய் ஒப்பிப்பது போல் இருந்தது அந்த குரல்.
நிறுத்தி நிதானமா பேசும்போது கொஞ்சம் பின்னணியில் பயமுறுத்துகிற மர்ம இசை விட்டுவிட்டு போட்டிருந்தா (கொஞ்சம் கிளிஷேவா இருக்கும், இருந்தாலும் நகைச்சுவை முடிவென்பதால் நல்லாத்தான் இருக்கும்), கடைசியில் கார்க்கியை எழுப்பும் போது நன்றாக இருந்திருக்கும்..

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அட!!!
நல்ல தான்யா இருக்கு....

(நான் சொன்னது ப்ளாக் லேபில...)

சும்மா தான் ஆதி!!

வாழ்த்துக்கள்...

கக்கு - மாணிக்கம் said...

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@மாணிக்கம் :
அதான் எப்படியாவது நீங்கள்லாம் படம்னு ஒத்துக்கற ஒரு நல்ல படம் எடுக்கற வரைக்கும் ஓய மாட்டோம்னு சொல்லியிருக்கேன்ல.. அப்புறமும் ஏன் இவ்ளோ கேவலமா திட்டியிருக்கீங்க.. :-((

sivakasi maappillai said...

//அன்பு நண்பர்களே, பிள்ளைகளின் சொப்பு விளையாட்டை ரசிக்கும் மனபாவத்திலேயே இங்கே நீங்கள் பாராட்டியதாகக் கருதுகிறேன்//

இயக்குநர் ஆகிவிட்டால் முதல் வேலை...
வயசை குறைத்து காட்ட முயற்சிப்பது....

ஆல் அங்கிள்ஸ் ஸேம் மென்டாலிட்டி

கக்கு - மாணிக்கம் said...

நண்பர் ஆதி மூல கிருஷ்ணன், சத்தியமாக எனக்கு இங்கு யார் மீதும் கோபம் வர வாய்ப்பே இல்லை. உனகள் மீதா நான் கோபித்து கொள்வேன் ? நம்புங்கள்.
உங்களின் அந்த வரிகள் நிறைய யோசிக்க வைத்தது. நீங்கள் இட்ட பதிவுக்கும் அந்த வரிகளின் எண்ண வெளிப்பாட்டிற்கும் துளியும் தொடர்பில்லை.நீங்கள் இட்டது உங்கள் குறும்படம் பற்றியது. ஆனால் சிறிதும் சம்பந்தமிலாமல்
//ஆனால் ஒரு ஜிமெயில் ஐடி இருப்பத‌ற்காக பிளாக் ஒன்றை ஆரம்பித்துவிட்டு 'எழுத்தாளர்' என்றெல்லாம் வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு திரிவதற்கு முன்னால் இது ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது.//

இவ்வாறு எது உங்களை எழுத தூண்டியது? நீங்கள் மட்டுமே சகலதிற்கும் தகுதியானவர் என்ற எண்ணம் உள்ளதோ! இது ஆதிக்கமான உணர்வு இல்லையா?
இன்றைய நாளில் எல்லாம் மலிவாகி விட்டது. தொழில் நுட்பங்களும் மிக மலிவு ,எல்லோருக்கும் கிடைக்கும்
வகையில் வந்துள்ளது. வளர்ச்சி என்றால் இதுதானே! பால் காரர்கள் கூட இரண்டு செல்போன்கள் வைதுக்கொளுகின்றனர் சென்னையில் இது தவுறு இல்லையே! வைதுக்கொள்ளடுமே !

// பார் ...பால்காரன் கூட செல்போன்கள் வைதுகொல்கிறான் என்ன கலிகாலம் இது // என்று சொல்பவருக்கும் உங்களுக்கும் அதிக வித்யாசம் இல்லாமல் போவானேன்?
எல்லோரும் ஜி மெயில் ஐடி வைதுக்கொள்ளட்டுமே , அதற்காக தானே அது உண்டாக்கப்பட்டது? எல்லோரும் ப்ளாக் ஆரம்பிப்பதும் ஒன்றும் தரம் குறைந்த அல்லது சமூக விரோத செயல் அல்லவே. வாய்ப்புக்கள் உள்ளவர்கள் வருவார்கள் தானே? அதுதானே இயல்பு.பிளாக்கில் எழுதுபவர்கள் எவரும் தங்களை
"எழுத்தாளர்கள் ' என்று எப்போது வெளிப்படுத்தினார்கள்? ஒரு சில ஆஷாட பூதிகள் ,போலிகள் இருக்கிறார்கள் இல்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் ஒரு சிறு பிரிவினர்தான். மற்ற பிற பதிவர்கள் எல்லாம் இங்கே வருவது சக பதிவரிடம் பகிர்ந்து கொள்ளவே அன்றி "எழுத்தாளர் " என்று மானியம் விட்டுக்கொள்ள இல்லை.
ஆனாலும் வலைபூக்களில் இன்றைய 'சராசரி " எழுத்தாளனையும் மிஞ்சும் வண்ணம் எழுதும் திறமையும் ஆற்றலும் உள்ளவர்கள் நிறைய இங்குள்ளனர். ஆனால் அவர்கள் இயல்பாக உள்ளனர்.
//கையில் காம் கார்டர் எடுத்தவனெல்லாம் பெரிய சினிமாடோ கிராபரா //
என்று சொன்னால் உங்களின் உணர்வு எப்படி இருக்கும்? வேண்டாம் அவசியமில்லாமல் பிறரை நாம் நமது அகந்தையால் காயபடுத்துவதும் பின்னால் அநாகரீகமாக இங்கு சண்டையிட்டு ஒருவருக்கு ஒருவர் திட்டி தீர்ப்பதும்
நம்போன்றவர்களுக்கு வேண்டாமே! இதைத்தான் நான் ஒரு குறள் மூலம் சொன்னேன் .
எவரையும் திட்டவோ கோபிக்கவோ நாம் இங்கு கூட வில்லை அல்லவா ? பகிர்தலும், அன்பும், நட்பும் மட்டுமே நமிடையே இங்கு வேண்டும்.அதுவே மகிழ்ச்சியை தரும்.

நன்றி.


--

கக்கு - மாணிக்கம் said...
This comment has been removed by the author.
கக்கு - மாணிக்கம் said...
This comment has been removed by the author.
கக்கு - மாணிக்கம் said...
This comment has been removed by the author.
கக்கு - மாணிக்கம் said...
This comment has been removed by the author.
கக்கு - மாணிக்கம் said...
This comment has been removed by the author.
கக்கு - மாணிக்கம் said...
This comment has been removed by the author.
கக்கு - மாணிக்கம் said...

பின்னூட்டம் சற்று நீண்டுவிட்டதால் ஒவ்வொரு முறையும் பிழைசெய்தி வந்து பின்னர் ஒவ்வொரு முறையும்
publish your comments பட்டனை அமுக்கி அத்தனயும் பதிவாகிவிட ஒன்றை மட்டும் வைத்து விட்டு மீதம் இருந்தவைகளை அகற்றியுள்ளேன்.தவறாக எண்ணவேண்டாம் நண்பர்களே.

ஆதிமூலகிருஷ்ணன் said...

@மாணிக்கம்

அப்ப திட்டியது நிஜம்தானா? அவ்வ்வ்வ்.. உண்மையிலேயே குறள் ரொம்ப சுடுகிறது.

பொய் சொல்வதானால் அண்ணன் உண்மைத்தமிழனுக்கு சொன்னது போல 'இதில் என்னையே நான் குறிக்கிறேன்' என்று சொல்லி எஸ்கேப்பாகலாம்..

ஆனால் மனசாட்சியோடு சொல்வதானால் '4 வரிகளில் 40 தவறுகளோடு' என்று முந்தைய பின்னூட்டத்தில் குறித்தபடி மற்றவர்களையும் நான் சாடியிருப்பதால் உங்கள் திட்டுக்கு உடையவனாகிறேன்.

இருப்பினும் ஜிமெயில் ஐடி வைத்துக் கொள்வதையெல்லாம் நான் குறிப்பிடவில்லை. அதன் அர்த்தம் தேவையான பொறுப்போடும், உழைப்போடும் பிளாகை பெரும்பாலோர் பயன்படுத்துவதில்லை என்பதுதான். இருப்பினும் நானே சரியாகத்தான் இயங்குகிறேனா என்ற சந்தேகத்தில் இருக்கும் போது அந்தக்கிண்டலை செய்ய எனக்குத் தகுதியில்லை என்பதை உணர்கிறேன். தவறுகளை ஒப்புக்கொண்டு உங்கள் அறிவுரைகளை ஏற்கிறேன்.

உங்கள் அன்புக்கு நன்றி மாணிக்கம்.

Karthik said...
This comment has been removed by the author.
ஆதிமூலகிருஷ்ணன் said...

@மாணிக்கம்,

வேறெந்த விஷயங்களையும் கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது. சுயதம்பட்ட ஒலிகள்தான் நாராசமானதாக இருக்கிறது. அதை வெறுக்கிறேன். தேடி வரும் புகழே பெருமைக்குரியது. ஆனால் பதிவுலகெங்கும் உற்சாகமாக ஒலித்துக்கொண்டிருக்கும் தம்பட்ட ஒலிகள் உங்களுக்குக் கேட்கின்றனவா.? என்னையும் மீறி வெளிப்பட்ட வார்த்தைகளின் அடியாழத்தில் ஒளிந்துகொண்டிருந்த சுயபுகழ்ச்சியைக் கூட வெளியே எடுத்து வீசியிருக்கிறீர்கள். அதை மறைக்கத்தான் எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறேன். அதைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தியமைக்கு கொஞ்சம் கடுப்போடு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

அதிஷா said...

ஏய் நிறுத்துங்கப்பா.. இதுக்கு அவங்களே பரவால்ல போல! முடியல.. நாங்கள்லாம் பாவமில்லையா

Karthik said...

Nalla irukkungna.

Karki has given a Oscar deserving performance. :)

--

Deleted my last comment because of a typo. :P

கார்க்கி said...

//Karki has given a Oscar deserving performance. :)
/

enthiran audio release parthu makkal kettu poitaanga

டம்பி மேவீ said...

கார்க்கியை அந்த இடத்தில அவர் தட்டினாரே ........

ஆதிண்ணே நீங்க இந்தமாதிரி ஒரு காட்சியை வைக்கலாமே .... பொண்ணுங்க மனசு என்ன பாடுபடும்.

கார்க்கி ..... கூடிய சீக்கிரம் ஆஸ்கார் உங்க கைகளுக்கு வந்து அதோட பெருமையை காப்பாற்றி கொள்ளும்.

இப்படிக்கு
எந்திரன் விழாவை பார்த்து கெட்டு போனவர் சங்கம்.
சொம்படி தலைவர் மேவி

கக்கு - மாணிக்கம் said...

அன்பு நண்பர் ஆதி மூல கிருஷ்ணன் அவர்களே. உங்களின் நேர்மை உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.
// அதைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தியமைக்கு கொஞ்சம் கடுப்போடு நன்றி சொல்லிக் கொள்கிறேன் //

இதனை படித்துவிட்டு வாய் விட்டுசிரித்தேன்.
அதை சுட்டிக்காட்டியிருக்கலாம் ஆனால் அவமானப்படுத்தும் சிந்தனை எனிடம் துளியும் இல்லை.பிறை அவமானபடுத்துதல் என்ற செயல் ஒரு சங்கிலித்தொடர் போன்ற கேவலமான நிலைமைக்கு சம்பந்தப்பட்ட இருவரையும் இட்டுச்செல்லும் .இதை பதிவுலகில் நாம் நிறைய பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறோம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் என் கருத்துகளை சற்றாவது ஏற்றுகொண்ட உங்களின் தனிமனித நேர்மை மீது எனக்கு மதிப்பு உண்டு.
இதையே உங்களின் மூத்த சகோதரன் சொல்லியிருந்தால்?......... அப்படி நினைத்துகொண்டு ....விட்டுவிடலாம். வேறு யாராவது என்றால் என்னை வசை பாடியே கிழித்திருப்பார்கள்.
மற்றவர்களுக்கு நாம் பேசுவது கடுப்பை கிளப்பும் முன் நாமாக நிறுத்திகொல்வதே நல்லது. இல்லையேல் இவர்கள் அனைவரும் நம்மை வைத்து கும்மி அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்: COME ON CHEER UP AGAIN . ):):):):))))))))
--

தராசு said...

ஸ்ஸோ,தாங்க முடியலடா சாமி.

sivakasi maappillai said...

//வேறெந்த விஷயங்களையும் கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது. சுயதம்பட்ட ஒலிகள்தான் நாராசமானதாக இருக்கிறது. அதை வெறுக்கிறேன். தேடி வரும் புகழே பெருமைக்குரியது. ஆனால் பதிவுலகெங்கும் உற்சாகமாக ஒலித்துக்கொண்டிருக்கும் தம்பட்ட ஒலிகள் உங்களுக்குக் கேட்கின்றனவா.? என்னையும் மீறி வெளிப்பட்ட வார்த்தைகளின் அடியாழத்தில் ஒளிந்துகொண்டிருந்த சுயபுகழ்ச்சியைக் கூட வெளியே எடுத்து வீசியிருக்கிறீர்கள். அதை மறைக்கத்தான் எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறேன். அதைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தியமைக்கு கொஞ்சம் கடுப்போடு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.
//

கோனார் தமிழ் உரை ப்ளீஸ்

குகன் said...

ஆதி, கார்க்கி... உங்கள் உழைப்புக்கும், முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள் !!

உள்ளே நுழையும் கதாபாத்திரம் உதடு அசைக்காததால், இது தான் நடக்கும் என்று யுகிக்க முடிகிறது.

தராசு said...

ஆதி, கார்க்கி மற்றும் நாஞ்சில், அருமையான படம்.

அந்த திட்டத்தை விளக்குபவர் குரல் பின்னணியில் ஒலிப்பதால், எழுதிய தாளைப் பார்த்து செய்தி வாசிப்பாளரைப் போல் வாசிக்கிறது தெரிகிறது. கொஞ்சம் பேச்சு வழக்கு ஏற்ற இறக்கங்கள் இருந்திருக்கலாம்.

அப்புறம் ஆதி தல, அந்த ஜி மெய்ல் ஐடி மேட்டரை ஒரு பாஸிங் க்ளவுட் நு வுட்ரு நைனா....

ஆதிமூலகிருஷ்ணன் said...

பாலகுமாரன், சிவகாசி மாப்பிள்ளை, கார்த்திக், அதிஷா, தராசு, குகன்..

அனைவருக்கும் நன்றி.