Thursday, August 12, 2010

இம்சைகள் நிரந்தரம்

நேற்று ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வந்த கண்ணனுடன் ஒரு அருமையான செஷன் போச்சுது. வழக்கமா தங்கமணி குறித்த பதிவுகளெல்லாம் போடும்போது என்ன.. ரமாவ கிண்டல் பண்றியா, இந்த கிண்டல் வேலையெல்லாம் உட்டுட்டு ஏதாவது உருப்புடியா எழுதுற வழியப்பாரு என்பான். ஆனா அவன் ஆளோட என்ன பிரச்சினையோ என்னவோ தெரியல நேற்று "என்னடா பெரிய எழுத்தாளன் மாதிரி ஒரே சீரியஸ் பதிவா போட்டுகிட்டிருக்கியே, பழசெல்லாம் மறக்கக்கூடாது ராசா.. எது ஒனக்கு இம்மாம்(?) பேரு வாங்கிக்கொடுத்துதுனு நெனச்சுப்பாரு.. ரசிகர்களெல்லாம் எதிர்பார்த்துக்கிடப்பானுங்க.." என்று என்னை தூண்டிவிட்டுட்டு யாரையோ நினைச்சு "அவள.." என்று பல்லை நறநறவென கடித்தான்.

"அடப்பாவி எல்லாம் ஒழுங்காத்தேனே போய்க்கிட்டிருந்தது, அதுக்குள்ள மீராவோட என்ன பிரச்சினை?". அப்புறம் வழக்கம்போல இருவரும் புலம்பிக்கொண்டோம். அவன் சொன்ன மாதிரி எழுத விஷயங்கள் இருந்தாலும் இந்த வாரம் முழுதும் அலுவலக வேலைப்பளுவில் எழுத நேரம் கிடைக்கவில்லை. ஆகவே மீள்பதிவாக இந்த டாப் 5. த‌ங்க‌ம‌ணிகளின் இம்சைக‌ளை ப‌ட்டிய‌லிட‌ ஆர‌ம்பித்தால் இந்த‌ ப‌திவு ம‌ட்டும‌ல்ல‌ இந்த‌ வ‌லைப்பூவே ப‌த்தாது என‌ நீங்க‌ள் அறிந்திருப்பீர்க‌ள். இது ஏதோ என்ன‌ள‌வில் உண‌ரும் விஷ‌ய‌ங்க‌ளே. 'யுனிக்'கான‌ அவ‌ஸ்தைக‌ள் என‌ ஒவ்வொரு ஆண்க‌ளுக்கும் த‌னித்த‌னியே அனுப‌வ‌ங்க‌ள் இருக்கும். அதை நீங்க‌ள் ஒப்பிட்டுக்கொள்ள‌லாம்.

5. சாப்பாடு

துறை சார்ந்த விஷயங்களில் எழுத என்னிடம் ஒரு விஷயம் உண்டு. அதாவது ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்கிறார்? அதே காரியத்தை இன்னொருவர் எப்படிச்செய்கிறார்? அதே நபர் அதே காரியத்தை இன்னொருமுறை செய்யும்போது எப்படிச்செய்கிறார்? (Gauge R&R) என்பது குறித்த தொழில்நுட்பம். அதை விரிவாக பின்னர் பார்க்கலாம். ரமா நேற்று சாம்பார் என்று அவள் கூறிக்கொள்ளும் ஒன்றை வைத்தார். ஏதோ நல்லாத்தான் இருந்த‌து. அதே ரமாதான். அதே அடுக்களைதான், அதே இடுபொருட்கள்தான்.. இன்றும் சாம்பார் வைக்கிறார். வாயில் வைக்கவே முடியவில்லை. நூறு நாட்கள் வைத்தாலும் அது நூறு விதமான சாம்பாராகத்தான் இருக்கும். தோசை என்ன பண்ணியது? அதைக்கூட ஒரு நாள் புளிப்பு, மறுநாள் சப்பு, ஒருநாள் உப்பு.. இந்த லட்சணத்தில் நீங்கள் சப்பாத்தியைப்பற்றியெல்லாம் கேட்கக்கூடாது.

4. தொண தொணப்பு

என்னங்க, ராஜி வீட்டு பங்ஷனுக்கு போனப்போ நாம எடுத்த போட்டோவில ஊதா கலர் ஸாரியில எடுத்த படம் நல்லாயிருந்துதுன்னு சொன்னீங்கல்ல, அத பெரிசாக்கி பிரிண்ட் போட்டு லேமினேட் பண்ணனும். ‘சரிம்மா, நீ வந்தவுடன் பண்ணிரலாம்.’ இல்லிங்க ஒடனே வேணும், பண்ணி கொரியர் பண்ணுங்க.. ரெண்டு நாளா வேலை ஜாஸ்தியா இருக்குது. ‘சண்டே பண்ணி மண்டே அனுப்பி வைக்கிறேம்மா..’ நான் ஏதாவது சொன்னா உங்களுக்கு உடனே வேலை வந்துடுமே.. ‘இப்ப என்னங்கற? நாளைக்கே பண்ணித்தொலையிறேன்.’ (3 மணி நேரம்கழித்து..) பிரிண்டுக்கு கொடுத்தாச்சா? ‘இன்னும் ஆபீஸ்லதான்மா இருக்கேன்.’ (5 மணி நேரம் கழித்து..) என்ன பண்ணினீங்க.. ‘மணி எட்டாகுதும்மா நாளைக்கு பண்ணிடலாம்’ (மறுநாள் காலை 7 மணிக்கு..) ம‌ற‌ந்துடாதீங்க (11 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..(1 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..

அரை நாள் லீவு போட்டேன்.

3. ப‌ர்சேஸ்

இது யுனிவெர்சல் பிராப்ளம். செருப்பில் என்ன‌ய்யா இருக்கிற‌து? இர‌ண்ட‌ரை ம‌ணிநேர‌ம் ந‌ம்பினால் ந‌ம்புங்க‌ள். ஆர‌ம்பிக்கும் போது ஆவ‌லோடு க‌ல‌ந்துகொண்டு விட்டு அப்புற‌ம் மெதுமெதுவாக‌ சேரோடு செட்டிலானேன். என்னங்க‌ இதுல‌ ஹீல்ஸ் இல்ல‌, இது இதைவிட‌ 50 ரூபா அதிக‌ம், இது டிசைன் ந‌ல்லாயில்ல‌.. என்ன‌ ப‌ண்ண‌லாம். ‘எதையாவ‌து நீயே செல‌க்ட் ப‌ண்ணிக்கோம்மா’ என்ன‌ விட்டுடேன். சொல்லுங்க‌ங்க‌.. ‘இது அழ‌காயிருக்கும்மா, எடுத்துக்கோ..’ அதை ம‌றுத்துவிட்டு வேற‌ எடுத்துக்கொண்டார். மூணாவ‌து நாள் ஊரிலிருந்து போன் வ‌ருகிற‌து. என்ன‌ங்க‌ செருப்பு வாங்கிக்கொடுத்தீங்க‌.. இதுல‌ ஹீல்ஸே இல்ல‌.. என‌க்கு இது வேணாம், இப்ப‌ போனா மாத்திக்கொடுப்பானா?

2. ல‌க்கேஜ்

வீடு நிறைய‌ பொருட்க‌ள், உப‌யோக‌ப்ப‌டுவ‌து, உப‌யோக‌ம‌ற்ற‌து, வீணான‌வை என‌ வீடு நிறைந்திருக்கிற‌து. வீட்டை மாற்றுவ‌தெல்லாம் பிர‌ம்ம‌ பிர‌ய‌த்த‌ன‌மாகிவிட்ட‌து இந்த‌ இர‌ண்டே வ‌ருட‌ங்க‌ளில். நான் வேலை விஷ‌ய‌மாக‌ வெளியூர் செல்கிறேன். இர‌ண்டு நாட்க‌ளுக்கு தேவையான‌ உடை, செபோன் சார்ஜர், பேஸ்ட்,பிரஷ், ஆபீஸ் பைல்க‌ள், தேவைப்ப‌ட்டால் லாப்டாப் அவ்வளவுதான். அத்‌த‌னையும் ஒரே ஒரு பேக்கில், முடிந்த‌து. நானும் ர‌மாவும் ஊருக்குக்கிள‌ம்புகிறோம். சுபாவும் சேர்த்து மூன்றே பேர்தான். இர‌ண்டு பிக் ஷாப்ப‌ர்ஸ், ஒரு பெரிய‌ சூட்கேஸ், ஒரு ட்ராலி பேக், ஒரு அகலமான பிளாஸ்டிக் பை, முடிந்தால் ஒரு கால் மூட்டை அரிசி அள‌வில் ஒரு கோணிப்பையில் பொருட்க‌ள் மூட்டைக‌ட்டிய‌ நிலையில். ர‌யிலில் இருந்து வெளியே ஆட்டோவுக்குள் வ‌ருவ‌த‌ற்குள் ட‌வுச‌ர் கிழிஞ்சுடும்.. என்ன‌தான் இருக்கின்ற‌ன‌ அந்த‌ப்பைக‌ளில்.?

1. ர‌ச‌னை

ஒங்க‌ளுக்கு ம‌ண்டையில‌ ஒண்ணுமே கிடையாதுங்க‌, ஒங்க‌ளை யாரு வாங்க‌ச்சொன்னா, நா வ‌ந்த‌ப்புற‌ம் வாங்கிக்க‌லாம்னு சொன்னேன்ல‌.. பெட் ஸ்ப்ரெட் வாங்கியிருக்கிற‌ ல‌ட்ச‌ண‌த்த‌ப்பாரு..

பால் வெள்ளையில், குட்டிகுட்டியாய் ம‌ல‌ர்ந்திருந்த‌ க‌றுப்புப்பூக்க‌ள் என்னை ப‌ரிதாப‌மாக‌ பார்த்த‌ன‌.

டிஸ்கி : இந்த‌ப்பாயிண்டுக‌ளுக்கு ஓர‌ள‌வு தொட‌ர்புள்ள‌ முந்தைய‌ ப‌திவுக‌ளின் இணைப்புக‌ள் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ப‌டித்திராத‌வ‌ர்க‌ள் சென்று ப‌டித்து பின்னூட்ட‌மிட்டுச்செல்ல‌வும். அப்படிச்செய்பவர்களுக்கு இன்றுமட்டும் ம‌னைவிமாரிட‌ம் எந்த‌ப் பிடுங்கலும் இல்லாம‌ல் இருக்க‌க்க‌ட‌வ‌தாக..!

.

28 comments:

இராமசாமி கண்ணண் said...

சரியான அனுபவசாலிங்க நீங்க :)

நீர்ப்புலி said...

எத்தன வாட்டி படிச்சாலும் சலிக்காது.

மதுரை சரவணன் said...

அருமை... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

:)))))))))))))))

இப்பவே கண்ணக்கட்டுதே.

Vijay said...

வேணா.... அழ்....துறுவேன்.

வானம்பாடிகள் said...

கவுண்டமணி சாத்தின கதவுக்கு பின்னாடி சவுண்ட் விட்ட மாதிரியே ஒரு பீலிங்கு:).

சுசி said...

:)

நேசமித்ரன் said...

பெஸ்ய் பிக்’ஸ் ஆஃப் ஆதி!!!

வெயிட்டிங் ஃபார் நியூ ரிலீஸஸ்

:))

கலாநேசன் said...

வீட்டுக்கு வீடு வாசப்படி

நாய்க்குட்டி மனசு said...

நூறு நாட்கள் வைத்தாலும் அது நூறு விதமான சாம்பாராகத்தான் இருக்கும்.//

ஒரு நாள் நீங்க குழைவா பேசுவீங்க, ஒரு நாள் விரைப்பா, அதுக்கு ஏத்த
மாதிரி தான் சாம்பார் இருக்கும்.
'பால் வெள்ளையில் சின்ன சின்ன கருப்பு பூக்கள்'
வாவ் !!

ஈரோடு கதிர் said...

||கவுண்டமணி சாத்தின கதவுக்கு பின்னாடி சவுண்ட் விட்ட மாதிரியே ஒரு பீலிங்கு:). ||

அதுசரி

கார்க்கி said...

ஹிஹிஹிஹி

புன்னகை said...

//(3 மணி நேரம்கழித்து..) பிரிண்டுக்கு கொடுத்தாச்சா? ‘இன்னும் ஆபீஸ்லதான்மா இருக்கேன்.’ (5 மணி நேரம் கழித்து..) என்ன பண்ணினீங்க.. ‘மணி எட்டாகுதும்மா நாளைக்கு பண்ணிடலாம்’ (மறுநாள் காலை 7 மணிக்கு..) ம‌ற‌ந்துடாதீங்க (11 மணிக்கு..) என்ன பண்ணினீங்க..(1 மணிக்கு..)//
சொன்ன வேலைகளை சொன்ன நேரத்தில் செய்து முடித்தால் உங்களை ஏன் நச்சரிக்கப் போறாங்க? தப்பு உங்க மேல தான் ஆதி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

அமுதா கிருஷ்ணா said...

இதையும் மீறி சிலர் பொண்ணு பார்க்கிறாங்களா???

vanila said...

பெண் பாவம் பொல்லாதது.. ஆதி.

மோகன் குமார் said...

பாவமா இருக்கு!! யார் மேலேன்னு சொல்ல தெரியலை

திருஞானசம்பத்.மா. said...

Out of syllabus.. :-))

கார்க்கி said...

//அமுதா கிருஷ்ணா said...
இதையும் மீறி சிலர் பொண்ணு பார்க்கிறாங்களா?//

:)))

secondpen said...

உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

Anonymous said...

:)

Dalton said...

நன்றாக புலம்பியுள்ளீர்கள் ஆதி.

//அமுதா கிருஷ்ணா said...
இதையும் மீறி சிலர் பொண்ணு பார்க்கிறாங்களா???
//
ஆம், நல்ல புலம்பர் ஆகலாமே (எந்த குழாயை ரிப்பேர் செய்ய என்று கேக்கப்பிடாது)

Dalton said...

ஆதி ஒரு சின்ன அட்வைஸ். வேலைபளுவையே அடிக்கடி காரணம் காட்ட வேண்டாம்.
வேறு என்னென்ன காரணங்கள் எல்லாம் சொல்லலாம் என்று ஒரு இடுகையே போடும் சரக்கு உள்ளவர் ஆயிற்றே நீர்.

Mahesh said...

இன்னும் 10 வருஷம் கழிச்சி பாத்தாலும் இதே நிலைமைதான் இருக்கும்....இடுகையை எவ்வளவு தடவை வேணாலும் மறுபதிப்பு போடலாம்.

குசும்பன் said...

டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஒருபடம் ஒரே தியேட்டரில் 100 நாள் ஓடினால்தான் பெருமை, 100 தியேட்டரில் ஒரு நாள் ஓடினா பெருமை இல்லய்யா வென்று:))

KKPSK said...

//ஆர‌ம்பிக்கும் ... மெதுமெதுவாக‌ சேரோடு செட்டிலானேன்//
ROTFL :)

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
வானம்பாடிகள்
கவுண்டமணி சாத்தின கதவுக்கு பின்னாடி சவுண்ட் விட்ட மாதிரியே ஒரு பீலிங்கு:).
//

ஹா ஹா ஹா..........

ஆதிமூலகிருஷ்ணன் said...

அனைவருக்கும் நன்றி.