Sunday, August 15, 2010

வம்சம் -விமர்சனம்

சினிமாவுக்கான எக்ஸ்ட்ரா லார்ஜ் பில்ட்-அப் இல்லாமல் மீடியமாக ஒரு கிராமத்துக் கதை முடிந்த அளவு லாஜிக் மீறாமல். குறிப்பாக ஒரு நல்ல படத்துக்கு சிறப்பாக அமையவேண்டியதான பாத்திரப் படைப்புகள் சிறப்பாகவே அமைந்துள்ளன. எங்கே மீண்டும் சாதி பெயரைச்சொல்லி மீண்டும் கொம்பு சீவிவிட்டுத் தொலைக்கப்போகிறார்கள் என ஒரு சின்னத் திகில் படத்தின் துவக்கத்தில் தோன்றியது. நல்லவேளையாக அதை அதோடு விட்டார்கள். திருநெல்வேலிப் பக்கங்களில் விழா, பண்டிகைக் காலங்களில் ஒலிக்க இன்னொரு சாதிப்பாடல் கிடைத்துவிட்டது, தவிர்த்திருக்கலாம்.

அற்ப விஷயங்களுக்காகத் துவங்கும் பகை, சில அற்ப மனிதர்களால் எப்படி காலங்கள் தாண்டி தலைமுறைகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது என்பதைக் காண்கிறோம். அதனால் திருவிழாக் காலங்களில் நிகழும் கொலைகள். நிறைய எடுத்துச் சொல்லும்படியாக ரசனையான காட்சியமைப்புகளோடு படத்தின் முதல் பகுதி விறுவிறுப்பாக நகர்கிறது. ஒரு ஆர்வத்தில் சொல்ல வந்த கதை முழுதையும் இயக்குனர் இடைவேளையிலேயே சகல திருப்பங்களோடும் சொல்லி முடித்துவிட இடைவேளைக்குப் பிறகு என்ன செய்வது எனத் தெரியாமல் கிளைமாக்ஸுக்காக நம்மோடு சேர்ந்து காத்திருக்க ஆரம்பிக்கிறார். அதனால் பத்து நாள் திருவிழாவின் பத்து நாட்களையும் டைட்டில் கார்டு சகிதம் பார்க்க வேண்டிவருகிறது. போலவே பலவும்.

7861_1

பின்னணி இசை, எடிடிங், ஒளிப்பதிவு என டெக்னிகல் பகுதிகளில் நிறைவு. நடிப்பைப் பொருத்த வரை யாரையாவது குறை சொல்லவேண்டுமென்றால் ‘அருள்நிதி’யைத்தான் சொல்லவேண்டும். அதுவும் அவரின் முதல் படமென்பதால் ஏற்றுக்கொள்ளலாம். தொடர்ந்து மெருகேற்றிக்கொள்வார் எனவும் தோன்றுகிறது. முதலில் பேசும்போது நன்றாக வாயைத் திறந்து பேசச் சொல்லவேண்டியடிருக்கிறது நமது ஹீரோக்கள் பலரையும். சுனைனாவின் முக லட்சணத்துக்கு முதல் முறையாக காரெக்டரோடு பொருந்திப்போகிறார். அருளின் அம்மா, ஜெயப்பிரகாஷ், கஞ்சாகருப்பு என இன்னும் பலரும் படம் நெடுக நிறைகிறார்கள். அழகான பில்ட்-அப் .:பிளாஷ்பேக்கில் அருளின் அப்பாவாக வரும் கிஷோரிடம் நாம் பரபரப்பாக ஏதாவது எதிர்பார்க்கிறோம், ஆனால் ஏமாற்றமே.. காரணம் இயக்குனர். முதல் பகுதியில் ஹீரோ, எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் ஓடி ஓடி அவர்களைக் கலாய்ப்பது அழகு. பின்பகுதியிலும் ஓரளவு அவ்வாறே காட்டி இயல்பாகச் செய்திருக்கலாம். அல்லது அந்த காரெக்டருக்கு இந்த அளவு ஆக்ஷன் பில்ட்-அப் கொடுத்திருக்கவேண்டாம்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முந்தைய ஒரு தென்மாவட்டக் கிராமத்தையும், அதன் நெடுந் திருவிழாக்களையும், மனிதர்களையும் முடிந்தவரை அதன் இயல்போடு பதிந்த அளவில் ‘பாண்டிராஜு’க்கு இது நிச்சயமாக அடுத்த வெற்றியே.

.

14 comments:

Cable Sankar said...

because of second half the film falls down..

டம்பி மேவீ said...

next weekend parkka poren intha padathai

காவேரி கணேஷ் said...

அவங்க ஊர் பக்கம்னு ஓடி வந்து விமர்சனம் எழுதுறத பாரு..

R Gopi said...

//எங்கே மீண்டும் சாதி பெயரைச்சொல்லி மீண்டும் கொம்பு சீவிவிட்டுத் தொலைக்கப்போகிறார்கள் என ஒரு சின்னத் திகில் படத்தின் துவக்கத்தில் தோன்றியது. நல்லவேளையாக அதை அதோடு விட்டார்கள்.//

கலைவாணி ச்சே களவாணி படத்துக்கப்பறம் அந்த trend மாறிப்போச்சுன்னு நம்புவோமாக. எது எப்படியோ பாண்டிராஜு படத்துல நான் அந்த மாதிரி எதுவும் எதிர்பார்க்க மாட்டேன்.

நான் இன்னும் படமே பாக்கலங்கறது வேற விஷயம்:)

ர‌கு said...

ஷார்ட்டா முடிச்சுட்டீங்க‌..அவ‌ச‌ர‌வ‌ச‌ர‌மா எழுதினீங்க‌ளா

sivakasi maappillai said...

//because of second half the film falls down..

///

same feeling

ஆதிமூலகிருஷ்ணன் said...

கேபிள், மேவீ, கணேஷ் (யாரு எங்கூரு பக்கம்ங்கிறீங்க? :-)), கோபி, ரகு, சிவகாசி..

நன்றி.

கார்க்கி said...

வம்சம் படம் எப்படி இருந்தா எனக்கென்ன? சுனைனா அம்சமா இருக்காங்க இல்ல? அது போதும்

Karthik said...

பசங்க படத்தோட கம்பேர் பண்ணாததை கண்டிக்கிறேன். :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

கார்க்கி, கார்த்திக் (ஹிஹி).. நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பார்த்துடுவோம்

நீர்ப்புலி said...

சுருக்கமாக நிறைந்த விமர்சனம்.

எம்.எம்.அப்துல்லா said...

// காவேரி கணேஷ் said...
அவங்க ஊர் பக்கம்னு ஓடி வந்து விமர்சனம் எழுதுறத பாரு..

//

அண்ணா, அந்த கதைக் களம் எங்க ஊரு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி டிவிஆர்.
நன்றி நீர்ப்புலி.
நன்றி அப்துல்.