Wednesday, August 18, 2010

சில சினிமாக்களும் ஒரு புத்தகமும்

The Expendables

image

நிறைய லாஜிக் பிரச்சினைகளோடு 80களைப் போல ஒரு டிபிகல் ஆக்ஷன் படம்தான் இது. ஒரு தனித்தீவு, சர்வாதிகாரி, அவரை அடக்கிவைத்திருக்கும் முன்னாள் CIA ஏஜெண்ட். அனஃபிஷியல் வேட்டை. இந்நாள் CIA ஏஜென்ட். சில்வஸ்டர் அன்ட் கோ கூலிப்படை. ஆக்ஷன்ஸ் என்று நகர்கிறது கதை. இந்த நார்மல் கதையில் என்ன புதுமை? 10க்கும் மேற்பட்ட முன்னாள், இந்நாள் ஹீரோக்கள் இருக்கிறார்கள். இரண்டு ஆக்ஷன் ஹீரோக்கள் இருந்தாலே தீனி போடமுடியாத நிலையில் இத்தனை பேருக்கு முடியாதுதான் இல்லையா. ஆனாலும் சும்மா எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸில் ஜைஜாண்டிக்காக அத்தனை பேரையும் ஒருசேர பார்ப்பதும் அழகாகத்தான் இருக்கிறது. ஹீரோ, அவர் குழு, வில்லன், CIA ஏஜெண்ட் என ஒரே விஐபி ஆக்டர்ஸ் மயம். பலருக்கும் சும்மனாச்சுக்கும் வேடம்தான். அர்னால்டும், வில்லிஸும் ஒரே ஒரு காட்சியில் தலைகாட்டுகிறார்கள். மேகிங் விடியோவில் இருவரும் வருவதாய் பார்த்த ஒரு ஆக்ஷன் காட்சியைப் படத்தில் எதிர்பார்த்து கொஞ்சம் ஏமாந்தேன். இருப்பதில் இளைஞர்கள் ஜெட்லியும், ஜேஸனும் மட்டுமே. ஸ்கோப் இருப்பது சில்வஸ்டர், ஜேஸன், ஜெட்லி மூவருக்கும்தான். அதிலும் ஜேஸன் ஸ்டேதம் மட்டுமே முந்துகிறார். கதையில்தான் எனினும் எல்லோரும் ஒருவரையொருவர் கலாய்த்துக் கொள்வது ரசனை. அதுவும் ஜேஸனின் தலையை மிக்கி ரூக்ஸ் கிண்டல் செய்யும் இடம் அழகு.

Really a big show.!

***************

Predators

image

சொல்ல வார்த்தைகள் கிடைக்கவில்லை. பிரிடேடர் ஆங்கில சினிமாகளில் மறக்க இயலாத ஒரு படம். அர்னால்டும், அவரது குழுவும் இனம்புரியாத, முகம்தெரியாத எதிரியிடம் மாட்டிக்கொண்டு சின்னாபின்னமாவது பரபர ஆக்ஷன் த்ரில்லர் அனுபவம். இந்தப் படத்திலோ நாம்தான் சின்னாபின்னமாகிறோம். அவ்வ்வ்.. அவ்வளவு மொக்கை.

***************

Wall –E

image

அனிமேஷன் பிரியனான நான் தியேட்டர்களில் மிஸ் பண்ணிய படம். சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது. அனிமேஷன் படங்களை சினிமாவாக அல்லாமல் இன்னொரு மேம்பட்ட ஓவியம் சார்ந்த கலைவடிவமாக நான் காண்கிறேன். கலையும் டெக்னாலஜியும் கைகோர்க்கும் களம். அவற்றை உருவாக்குபவர்களின் ரசனை பிரமிப்பைத் தருவதாக இருக்கிறது. இது வரை எந்த ஒரு அனிமேஷன் படங்களும் சோடை போனதாக நான் கருதவில்லை. அத்தனையுமே ஒவ்வொரு வகையில் சிறப்பானவையே. வால்-இ யும் அவ்வாறான இன்னொரு மறக்கமுடியாத அனுபவம். முகத்தில் வெறும் கண்கள் மட்டுமே இருக்கும் இரண்டு ரோபோக்களிடமிருந்து வெளிப்படும் அன்பு, மகிழ்ச்சி, சோகம் என விதவிதமாக வெளிப்படும் உணர்வுகள் நம்மை ஆக்ரமிக்கின்றன. (நடிப்பை நமது ஆர்டிஸ்டுகள் இந்த பொம்மையைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்)

பூமி குப்பைகளால் நிறைய நூற்றாண்டுகளாக விண்வெளியில் கணினியின் கட்டுப்பாட்டில் முடமாகி வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் பெரும்போராட்டத்துக்குப் பின் மீண்டும் பூமி திரும்பவதாக கதை. அதில் வால்-இ மற்றும் ஈவா என்ற இரண்டு குட்டி ரோபோக்களின் பங்கு.. ரசனை.

****************

Perfume

image

ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு அதீதம் புதைந்துதான் கிடக்கிறது. அனாதையாய் பிறந்து வளரும் அவனுக்கு நுகர்தலில் ஒரு அமானுஷ்ய சக்தி. ஆர்வம். வாழ்க்கை முழுதும் ஒரு வாசனையின் தேடலாகவே அவனுக்கு அமைகிறது. பரிதாபமான அடிமை வாழ்க்கையாய் இளமையைக் கடப்பவன் ஒரு சமயத்தில் ஒரு வாசனைத் திரவியம் தயாரிப்பவரிடம் இணைகிறான். முதல் சந்திப்பிலேயே பெரும் அனுபவம் கொண்ட அவரிடம் அவர் அவரது வாழ்க்கையிலேயே நுகர்ந்திராத ஒரு திரவியத்தை சில நிமிடங்களிலேயே கலந்து தருவதில் தீவிரமடைகிறது அவன் தேடல். அவருடன் நாமும் அந்த வாசனையில் திளைத்து மூழ்குகிறோம். தொடரும் காட்சிகளில் இதுவரை உருவாக்கப்படவேயில்லாத ஒரு அற்புதத்தை உருவாக்க அவன் செய்யும் காரியங்களோடு நாமும் இணைகிறோம். கொடுமையான கொலைகளில் அவனுடன் நாமும் பங்கேற்கிறோம். அழகிய இளம்பெண்களைக் கொன்று பதப்படுத்தி அவன் உருவாக்குகிறான் அந்த அரிய பர்ஃப்யூமை.

எக்ஸ்டஸியின் உச்சத்தில் அதனாலேயே தன்னை அவன் அழித்துக்கொள்வதுடன் முடிகிறது படம். தொடர் எண்ண அலைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது படம் இன்னும். நடிப்பு, ஒளிப்பதிவு, கலை ஆகியன இன்னொரு அனுபவம்.

********************

சினிமா வியாபாரம்

image

நண்பர் கேபிள் சங்கரின் 'சினிமா வியாபாரம்' புத்தகம் 'கிழக்கு' பதிப்பகத்தின் சமீபத்திய பெஸ்ட் செல்லர். அதன் அறிமுக விழா சென்னை தி.நகரில் வரும் சனிக்கிழமை மாலை நிகழவிருக்கிறது. சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்க

கேபிள் சார்பில் நண்பர்களையும், அன்பர்களையும் அன்போடு அழைக்கிறேன். அதோடு நிகழ்வு ஒரு பதிவர் சந்திப்பாகவும் அமையும் எனவும் நம்புகிறோம். அனைவரும் வருக..

.

17 comments:

புதுகைத் தென்றல் said...

me d first

Karthik said...

எக்ஸ்பென்டபிள்ஸ் செம மொக்கை. நேத்துதான் பார்த்து கடுப்பானேன். வால் ஈ ரொம்ப பிடிச்சது. புத்தக விழாவுக்கு வாழ்த்துக்கள்.

Mahesh said...

வால்-ஈ இப்பதான் பாத்தீங்களா? அப்ப டாய் ஸ்டோரி-3, டெஸ்பிகபில் மி எல்லாம் பாக்க இன்னும் ஒரு மாமாங்கம் ஆகும் போல....

நர்சிம் said...

கேபிளுக்கு வாழ்த்துகள். சினிமாக்களுக்கு நன்றி ஆதி.

Saravana Kumar MSK said...

Perfume திரைப்படத்தை பின்னிரவொன்றில் முதன் முதலாக பார்த்து முடித்த போது, என்னை சுற்றியும் நறுமணம். எனது அறையே நறுமணத்தில் நிறைந்திருந்ததாக ஒரு பிரமை. சில காலம் கழித்து மீண்டுமொருமுறை பார்த்த போதும் அறையே வாசனையில் மிதந்திருந்தது.

ஒரு திரைப்படம் மனதில் மகிழ்ச்சியையோ, பயத்தையோ, வருத்தத்தையோ, நெகிழ்ச்சியையோ, கோபத்தையோ தரலாம். ஆனால் போதையையும், மயக்கும் நறுமணத்தையும் தந்தது இத்திரைப்படம். ஆச்சர்யமாக இருக்கிறது இன்னும்..

அன்புடன் அருணா said...

பகிர்தலுக்கு நன்றி!

vinu said...

yep i too watched the wall-E and perfume both are at different perspective some of the best movies i ever seen.

and then about this "xpendable" not plan to watch pa.

சுசி said...

Wall - E பார்த்து ரசிச்சு சிரிச்சேன்..

Perfume பார்த்து பயந்துட்டேன்.. ரசிக்க முடியல..

மீதி இன்னமும் பாக்கல.

கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்.

அதிலை said...

"perfume" படத்தின் கரு பெண்ணின் வாசனையை பிரித்தெடுத்து பாதுகாப்பது... நாயகன் முதன் முதலாய் நுகரும் பெண் வாசனையில் அடிமை ஆகிறான்.. மற்ற வாசனைகளை திரவியங்களாக பிரித்தெடுத்து சேமிக்கும்போது பெண் வாசனையை என் சேமிக்க முடிவதில்லை என்று ஆராய்ச்சி செய்கிறான்..இறுதியில் பெண்ணின் கூந்தலில் மனம் உண்டு என்று (நக்கீரா!!!!!!) கண்டறிந்து.. சில பல அழகிகளை கொன்று.. அவர்தம் கூந்தலின் வாசனையை திரவியிமாக்கி ஆகச்சிறந்த வாசனை திரவியத்தை தயாரிக்கிறான்..... அருமையான படம்..

வால்பையன் said...

பர்ஃப்யூமை பற்றிய விமர்சனம் அருமை!

தேவன் மாயம் said...

பெர்பியூம் ஒரு நல்ல படம்!

Cable Sankar said...

http://cablesankar.blogspot.com/2009/03/perfume2006.html

அதிலை said...

சங்கர் ஜி ...நான் இங்க கமன்ட் போடும்போது..ஒரு dejavu பீல் இருந்தது ..உங்க லிங்க் பார்த்தப்பறம்தான் தெரிஞ்சுது நான் அங்கேயும் இதே மாதிரி கமெண்ட் போட்டிருக்கேன்னு !!!! btw... you both missed to emphasize the base line of the movie!!!

Dalton said...

ஆதியிடமிருந்து நான் எதிர்பார்ப்பது நல்ல பதிவுகளை, நல்ல அனுபவப்பகிர்வுகளை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி தென்றல்.
நன்றி கார்த்திக்.

நன்றி மகேஷ். (இந்தப்படங்கள்லாம் தியேட்டர்ல வர்றதும் தெரியமாட்டேங்குது. போறதும் தெரியம்,ஆட்டேங்குது. நாம ரெடியாவுறதுக்குள்ள தூக்கிடுறானுங்க. ரசனை கெட்ட ஜென்மங்கள்)

நன்றி நர்சிம்.
நன்றி சரவணா.
நன்றி அருணா.
நன்றி வினு.
நன்றி சுசி.
நன்றி அதிலை.
நன்றி தேவன்மாயம்.
நன்றி வால்பையன்.
நன்றி கேபிள்.
நன்றி டால்டன். (பண்ணிடலாம்)

ஸ்ரீவி சிவா said...

Wall-E செம படம். ரொம்ப பிடிச்சிருந்தது.

Perfume வித்தியாசமான படம். Technically sound. அதுலயும் மரண தண்டனைக்கான அரங்கத்தில், Perfume நறுமணத்தில் கவரப்பட்டு எல்லாரும் கலவும் காட்சியை எப்புடித்தான் எடுத்தாய்ங்களோ.

பிரதீபா said...

வ்வ்வ்வால் ஈ ன்னு ஈவா சொல்லுமே செமையா இருக்கும்.. அப்புறம் ஈவா விட்டுட்டு போயிட்டு WALL E பொலம்புமே, அங்கங்கே செண்டி கூட இருக்கும்.. வேற்று கிரஹத்துல மண்ணு எங்கியாச்சும் பாத்தா உடனே கூட்டி பெருக்கற ரோபோக்கள் சூப்பர் இல்லீங்க? நான் ரெண்டு மூணு வாட்டி பாத்தேன், நாளைக்கு மறுபடியும் பாக்கணும் போல இருக்கே..