Friday, August 20, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -1

வெங்கட் சாமிநாதனின் புத்தம் புதிய பென்ஸ் E 350, ஜிஆர்டியில் நுழையும் போது நேரம் மாலை 5 மணியிருக்கலாம். சற்று நேரத்துக்கெல்லாம் ஜிஆர்டியின் ‘ஹை டைமி’ல் இருக்கும் முக்கால் வட்ட வடிவ சோபா ஒன்றின் ஒரு முனையில் அமர்ந்திருந்தான் அவன். அதே சோபாவின் மறுபுறம் அவனுக்கு நேரெதிரே ப்ரவீன் உட்கார்ந்திருந்தான். நடுவே சிக்கியிருந்த அழகிய கண்ணாடி டீப்பாயின் மேல் இரண்டு டிஸைனர் கிளாஸ்களில் பிளாக் லேபிள் நிரம்பியிருந்தது. இன்னும் பிற உணவுப்பண்டங்களும் அருகே பரவியிருந்தன.

வெங்கட்டைப் பார்த்தாலே தெரிந்துவிடும், அவனது செல்வச்செழிப்பு. உடைகள், அலட்சியமாக சோபாவில் கிடந்த செல்போன், கைக்கடிகாரம் ஒவ்வொன்றும் அதை பறைசாற்றுவதாக இருந்தன. எல்லாவற்றையும் மீறிய ஒரு எளிமையான இயல்பு அவனிடமிருந்தது. அவனுக்கு ஒரு 27 வயதிருக்கலாம். ஷேவ் செய்து திருத்தப்பட்டிருந்த மீசை, கொஞ்சம் அதிகமாக வளர்ந்து தோளைத் தொட்டுக்கொண்டிருந்த ஹேர்ஸ்டைல் ஆகியன அவனை இன்னும் கவர்ச்சிகரமாக ஆக்கியிருந்தன.

வெங்கட் தனது முதல் ரவுண்டை கையில் எடுத்த போது ப்ரவீன் தனது நோக்கியா N97ல் ஒரு அவசர அலுவலக மெயிலை அனுப்பிக்கொண்டிருந்தான்.

"அதை அப்புறம் பாக்கக்கூடாதாடா?"

"எம்கே’ல இருந்து வந்த என்கொயரி. ரொம்ப அர்ஜண்ட். இதோ முடிஞ்சுட்டது. அவ்வளவுதான்.."

போனை ஸ்லைட் செய்து அருகே போட்டவன் அவனது கிளாஸை கையிலெடுத்தான். ப்ரவீன் அந்த நீல நிற ஃபுல் டிஷர்டில் வெங்கட்டையும் விட இன்னும் மிளிர்ந்தான். மீசையில்லாத ஆனால் ஒரு வாரத்துக்கும் மேலாக ஷேவ் செய்யப்படாத முகம். ஒரு யுவதியை இவர்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொன்னால் நிச்சயமாக அவள் திணறித்தான் போவாள்.

“வெங்கி, எல்லாம் பிளான் படி முடிஞ்சுடுமா? கவர்ன்மெண்ட் அப்ரூவல்ஸ்தான் கெஸ் பண்ணமுடியலை. அதை மட்டும் நீ ஸ்பெஷலா கேர் எடுத்துகிட்டு பிளான் பண்ணின டைமுக்குள்ள முடிச்சுட்டன்னா அடுத்த ஜூலைல ரிப்பன் கட் பண்ணிடலாம். சிவில் ஒர்க்கெல்லாம் பிரச்சினையே இல்லை. நான் எதிர்பார்த்ததை விட பிரமாதமா போய்கிட்டிருக்கு..”

“இதெல்லாம் நாளைக்கு ஆஃபீஸ்ல பேசிக்கலாமே.. இங்கே ஏன் இழுத்துகிட்டு வர்றே.? இப்ப அடுத்த ரவுண்ட் சொல்லு..”

“ரைட்பா.. இது சரியில்லையே.. சிக்கன் ஏதாவது சொல்லவா.?” அட்டெண்டருக்கான சிக்னலை விரல்கள் செய்தன.

“ம்..”

“ஹைத்ராபாத் எப்ப போறே? ஒரு மாசத்துக்கு மேல ஆச்சே.. மேடம் பொறுத்துக்கறாங்களா.?” விஷமமாய்ச் சிரித்தான் ப்ரவீன்.

“பிய்க்கிறா..” பதிலுக்குச் சிரித்தான்.

அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கட்டும். அதற்குள் அவர்களது பின்னணி பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்.

வெங்கட்டின் அப்பா ஒரு பிரபலமான தொழிலதிபர். ஸ்ரீபெரும்புதூரின் ஒரு மிகப்பெரிய ஸிங்க் பிளேட்டிங் தொழிற்சாலை அவருடையது. இந்த வயதிற்குள்ளாகவே அதன் இணை இயக்குனராக பொறுப்பேற்றிருந்தான் வெங்கட். சென்ற வருடம் தொழிற்சாலை விரிவாக்கம் குறித்து எழுந்த விவாதத்தில் அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் அதே ஃபாக்டரியில் இரண்டு மடங்கு உற்பத்தியை பெருக்கும்படியாக இன்னொரு யுனிட்டை உருவாக்கும் யோசனையை முன்வைத்தார். இவனோ அதற்கு மாறாக ஸிங்க் பிளேட்டிங்குக்குத் தேவையான ஸோடியம் ஹைட்ராக்ஸைடை உற்பத்தி செய்யும் இன்னொரு புதிய தொழிலை முன்வைத்து அதற்கான புதிய யுனிட்டை உருவாக்கவேண்டும் என்றான். கடைசியில் இவனது யோசனையையே அவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் வந்தது. அதற்கான தீவிர ஏற்பாடுகளில்தான் வெங்கட் கடைசி 6 மாத காலமாக இரவு பகல்களைத் தொலைத்துக்கொண்டிருந்தான்.

ப்ரவீன், வெங்கட்டின் கல்லூரித் தோழன். ப்ரவீனின் அதீத கெமிகல் அறிவும், ஆர்வமும் அவனை இவனது நண்பனாக்கியிருந்தது. தனது தொழிற்சாலையில் டெவலப்மெண்ட் பிரிவின் ஒரு முக்கியப்பொறுப்பில் தன் அருகிலேயே வைத்துக்கொண்டிருந்தான்.

“ஏன் இன்னும் இழுத்துகிட்டிருக்க.? பேசாம கல்யாணம் பண்ணிக்கிறதுதானே.. முடிவு பண்ணியாச்சுல்ல.. அப்புறம் என்ன?”

“என்ன பிளான் பண்ணிக்கிட்டிருக்கோம். இப்போ போயி கல்யாணம், அது இதுன்னு என்ன விளையாடுறயா?”

“அது வேறடா. ரெண்டையும் தனித்தனியா ஹேண்டில் பண்ணனும். பண்ணிகிட்டா மெண்டலி இன்னும் ஃப்ரீனெஸ் கிடைக்கும். பிஸினெஸ்லயும் ஷார்ப்பா இருக்கலாம்..”

“கிழியும். போடா நீயும் உன் லாஜிக்கும்.. ஏன் நீ பண்ணிக்கிறதுதானே?”

சிரித்துக்கொண்டே “கவனமாகத்தான் இருக்கே.. சரி, அப்ப எப்பதான் பிளான் பண்ணியிருக்கே, அதைச் சொல்லு”

“30 வயசுலதான். ஒண்ணும் அவசரமில்ல.. மினிகிட்டயும் சொல்லிட்டேன். ஒண்ணும் பிரச்சினையில்ல. இப்ப பிராப்ளம் அவ இப்பவே சென்னை வரணுங்கறா. அவளையும் இங்கே வச்சுகிட்டு வேலையைப் பார்க்கமுடியாது. அதான் யோசிக்கிறேன்..”

“பரவாயில்ல வரச்சொல்லு, பாத்துக்கலாம்..”

சொல்லிக்கொண்டேயிருந்த ப்ரவீனின் குரலில் ஒரு மாற்றம். அவனது கைகள் அவனது பாக்கெட்டிலிருந்த பார்க்கர் பேனாவை எடுத்து டீப்பாயின் மேலிருந்த ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து நிதானமாக விரித்து அதில் ஏதோ கிறுக்கத் துவங்கியிருந்தன.. தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான் அடித்தொண்டையில் சுத்தமாக மாறிப்போயிருந்த குரலில்..

“பரவாயில்ல வரச்சொல்லு, பாத்துக்கலாம்..” நிதானமாக சொல்லிக்கொண்டிருந்தான். அது அவன் குரலே அல்ல.

வெங்கட் குழப்பமானான்.

“ப்ரவீன், என்ன பண்றே.. ஆர் யூ இன் கண்ட்ரோல்.?”

“பரவாயில்ல வரச்சொல்லு, பாத்துக்கலாம்..” அமானுஷ்யமாக ஒலித்தது அவன் குரல்.

முதுகு சில்லிட்டது வெங்கட்டுக்கு.

“பரவாயில்ல வரச்சொல்லு, பாத்துக்கலாம்..”

வெங்கட் சீட்டிலிருந்து எழுந்தேவிட்டிருந்தான், உரத்த குரலில் கத்தினான், “ப்ரவீன்..” அருகிலிருந்தவர்கள் இவர்களை வினோதமாகப் பார்க்க, ஒரு அட்டெண்டர் அருகே வர யோசித்தவாறே வந்தார்.. ‘எனி பிராப்ளம் ஸார்.?’ அவரைக் கவனிக்காமல் வெங்கட் மீண்டும் ப்ரவீனை நோக்கி,

“ப்ரவீன்.. வாட்ஸ் ஹாப்பனிங்?”

“பரவாயில்லை வரச்சொல்லு, பாத்துக்கலாம்..” எதையோ கிறுக்கி முடித்தவன் டிஷ்யூ பேப்பரை கசக்கி வெங்கட்டை நோக்கி எறிந்தவன் அடுத்து செய்த காரியம் அங்கிருந்த யாரும் எதிர்பாராததாக, அனைவரையும் உறைய வைப்பதாக இருந்தது. விருட்டென எழுந்தவன் பார் கவுண்டரின் மேல் இருந்த ஒரு பியர் பாட்டிலை இடது கையால் திருப்பிப்பிடித்து கவுண்டரின் விளிம்பில் ஓங்கித் அடித்தான். கண்ணாடிச் சில்லுகள் பறக்க, பியர் நுரைத்துக் கொப்பளிக்க, விபரீதம் உணர்ந்து அவனை நெருங்கி யாரும் தடுக்கும் முன்பே கொலையாயுதமாய் மாறியிருந்த பாட்டிலை உச்சபட்ச வேகத்தில் தன் கழுத்திலேயே இறக்கினான். இடது புறமாக தோள்பட்டையும் கழுத்தும் இணையும் இடத்தில் ஆக்ரோஷமாக இறங்கியது அந்த பாட்டில் ஒரு மல்ட்டி பாய்ண்டர் கத்தியைப்போல. ரத்தம் பீறிட்டுக் கொப்பளித்துச் சிதற ப்ரவீன் அப்படியே தரையில் சரிந்தான். அது அந்த இடத்தையே விபரீதக் களமாக்கியிருந்தது. எல்லாம் வினாடிகளிலேயே நிகழ்ந்து முடிந்திருந்தது.

“ப்ரவீன்..” வெங்கட்டின் குரல் அந்தக்கூடமெங்கும் ஒலித்துச் சிதறியது.

அவனது கைகளிலிருந்து அருகே கீழே விழுந்த டிஷ்யூ பேப்பரில் இப்படி கிறுக்கப்பட்டிருந்தது.

DSC00109

தொடரும்..

(பி.கு : ‘புலம்பல்களி’ன் முதல் தொடரான இது, ஐந்தே அத்தியாயங்களில் முடியப்போகிற சற்றே பெரிய ஒரு கதையின் மினி தொடராகும். கருத்துகள் கூறவும்)

.

43 comments:

ராமலக்ஷ்மி said...

முதல் அத்தியாயமே விறுவிறுப்பு.

முதல் தொடருக்கு வாழ்த்துக்கள்:)!

sivakasi maappillai said...

வாழ்த்துக்கள்

Mohan said...

ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.

வெண்பூ said...

Good start... ந‌ல்லாத்தான் இருக்கு.. பாராட்டுக‌ள்

வெங்க‌ட் சாமிநாத‌ன் அப்ப‌டின்ற‌ பேர்ல‌ ஒரு எழுத்தாள‌ர் இருக்காரு தெரியுமா?

எம்.எம்.அப்துல்லா said...

//கருத்துகள் கூறவும்) .

//

கூறமுடியாது.

வெண்பூ said...

அப்துல்லா,

காப்பி ப‌ண்ணி போடுற‌தாவ‌து ந‌டுவுல‌ எதாவ‌து வ‌ரியை காப்பி ப‌ண்ண‌க்கூடாது? க‌ரெக்டா க‌ட‌சி வ‌ரிய‌ காப்பி பேஸ் ப‌ண்ணியிருக்கீங்க‌ளே, ஆதி ஃபீல் ஆக‌ மாட்டாரு!!!!

நாடோடி இலக்கியன் said...

விறுவிறுப்பு.

//க‌ருத்து கூற‌வும்/

தொட‌ர் முடிய‌ட்டும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி சிவகாசி. (எதுக்கு?)

நன்றி மோகன்.

நன்றி வெண்பூ. (ஊர்லதான் இருக்கீரா இல்லையா? பிளாக் பக்கமே வரமாட்டீங்கறீங்களே சார்?)

நன்றி அப்துல். (நமக்கு வர்றதெல்லாம் ராங்கி புடிச்சதாகவே இருக்குது.)

நன்றி இலக்கியன். (ஆரம்பிச்சா முடிக்கத்தானே செய்யணும்.:-))

Balaji saravana said...

அட்டகாசமான ஆரம்பம் ஆதி!
காத்திருக்கிறேன், தொடருங்கள்...

நாடோடி இலக்கியன் said...

ஹா ஹா ,
தொட‌ர் முடிய‌ட்டும் க‌ருத்து கூறுகிறேன் என்று சொல்ல‌ வ‌ந்தேன்.

R Gopi said...

\\இது, ஐந்தே அத்தியாயங்களில் முடியப்போகிற சற்றே பெரிய ஒரு கதையின் மினி தொடராகும். கருத்துகள் கூறவும்) .\\

எதுவா இருந்தாலும் மினிய ( எந்த மினிய நான் சொல்றேன்னு எனக்கே புரியல) முழுசாப் பார்த்ததுக்கப்புறம்தான் சொல்லமுடியும்:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

பாபு said...

eppadi irukeenga?

சந்தோஷ் = Santhosh said...

ஆதி நல்ல விறுவிறுப்பான துவக்கம்..

கே.ஆர்.பி.செந்தில் said...

நன்றாக இருக்கிறது தொடருங்கள்

arul said...

Nalla irukku aathi....

I can smell the ascent of rajeshkumar in the starting.

மறத்தமிழன் said...

ஆதி,

நல்ல ஆரம்பம்.
கதை நல்லா நேரா போய்ட்டு இருக்குதேன்னு பாத்தா திடீர்னு
ஹேர்பின் பென்ட் மாதிரி திருப்பம்...

தொடருங்கள்....

Dalton said...

முதல் தொடரின் முதல் அத்தியாயம் மிக நன்றாக இருக்கிறது. தொடர்கதையும் நன்றாகவே எழுதுகிறீர்கள். எஞ்சிய நான்கு அத்தியாயங்களையும் பார்த்துவிட்டு தங்களுக்கு 'வலைப்பூ சுஜாதா' என்ற பட்டம் கொடுக்கலாம் என முடிவு செய்துள்ளேன். பட்டம் வெல்வீரா பார்ப்போம்....

மின்னுது மின்னல் said...

நல்ல விரு|விருப்பு|
சுபா வ்ர்ணனை !!

Dalton said...

//அதே ஃபாக்டரியில் இரண்டு மடங்கு உற்பத்தியை பெருக்கும்படியாக இன்னொரு யுனிட்டை உருவாக்கும் யோசனையை முன்வைத்தார். இவனோ அதற்கு மாறாக ஸிங்க் பிளேட்டிங்குக்குத் தேவையான ஸோடியம் ஹைட்ராக்ஸைடை உற்பத்தி செய்யும் இன்னொரு புதிய தொழிலை முன்வைத்து அதற்கான புதிய யுனிட்டை உருவாக்கவேண்டும் என்றான்//

டெக்னிக்கல்-ஆ சில விஷயங்களை தொட்டிருப்பதால் 'வலைப்பூ சுஜாதா'என்ற பட்டம்.

பி.கு. - மற்ற நான்கு பாகங்களின் ஓட்டத்தைப் பொருத்து பட்டம் மாறலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

sriram said...

சூப்பர் ஆரம்பம் ஆதி..
விவரணை மட்டும் கொஞ்சம் குறையுங்க.. இன்னும் வேகம் கூடும்.

நான் முன்னர் சொன்னது போல, கதை எழுதுங்க, படிக்க நாங்க ரெடி..

அடுத்த பகுதிக்கு ஆவலுடன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

மணிகண்டன் said...

kadaisi paaraa kkal sema interesting. carry on.

அன்புடன் அருணா said...

அப்புறம்!!

சங்கவி said...

நல்ல இன்ட்ரஸ்ட்டா போகுது....

மங்களூர் சிவா said...

ஆரம்பமே அசத்தல், விறுவிறுப்பு.

வானம்பாடிகள் said...

புலம்பலா? அலறலால்ல இருக்கு:)

Saravana Kumar MSK said...

ராஜேஷ் குமார் எழுதின மாதிரி இருக்கு. உங்க மொழிநடையே இல்லை. :((
இல்ல ஒரு வேளை, இந்த மாதிரி கிரைம் நாவல் எழுதனும்ன்னா இந்த நடையில்தான் எழுதணுமா?

Saravana Kumar MSK said...

கதையை பற்றிய கருத்தை, தொடர் முடியும் போது சொல்கிறேன்..
படத்தில் என்ன? ஏதோ கெமிஸ்ட்ரி பார்முலாவா?

முரளிகுமார் பத்மநாபன் said...

செம்ம ஸ்டார்ட்ன்னா , இதே ப்ளோல போங்க, இதே விறுவிறுப்பை கடேசி வரைக்கும் தக்கவச்சிடுங்க, பிச்சிக்கும்....


கல்யாணம் பொண்டாட்டி இல்லாம ஆரம்பிக்கவே மாட்டிங்களா?

//பி.கு. - மற்ற நான்கு பாகங்களின் ஓட்டத்தைப் பொருத்து பட்டம் மாறலாம் அல்லது இல்லாமல் போகலாம்.//
இது செம்ம கவுண்ட்டர் .. :-))

வழிப்போக்கன் - யோகேஷ் said...

Good Start Aadhi.....

rajeshwaran said...

its interesting...

story makes the expectation to read the next part..

its good. carry on....

சுசி said...

அசத்தல் ஆதி..

அவ்ளோ விறுவிறுப்பா இருக்கு.. தொடரும்னு படிச்சதும் வெங்கட் குரல விட சத்தமா ஆதின்னு கத்தணும் போல இருந்துது.. :))))

தொடருங்க.. பாராட்டுக்கள்.

அருண் said...

waiting for the next episode.

அருண் said...

waiting for the next episode.

தெய்வசுகந்தி said...

Interesting!!!!!!

நர்சிம் said...

மிக மிக விறுவிறு. நல்லா எழுதி இருக்கீங்க ஆதி.

Joseph said...

ஆரம்பம் மிக விறுவிறுப்பா இருக்கு.
மிக நல்ல முயற்சி, தொடருங்கள். அதிக அளவு இடைவெளி இல்லாம 3 நாளைக்கு ஒரு அத்தியாயம் என்ற அளவில் வெளியிட்டால் நல்லது.

கடைசியா கிறுக்கி போட்ட டிஸ்யூ பேப்பர்ல இருக்கதா போட்ருக்க எழுத்துக்கள், எதிர்பார்ப்பை அதிகமாக்கிட்டு. கெமிக்கல் ஃபார்முலாவ வைச்சு ஏதோ சொல்லியிருக்கானோ?

பாலா அறம்வளர்த்தான் said...

ஜிவ் வுன்னு கிளம்புது ஆதி.
Tissue பேப்பர் போட்டோ உத்தி நன்றாக இருக்கிறது. இனி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது உங்கள் கையில் :-)

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர்.. தொடரவும்

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

great,

plz continue!!!

i think u like Black label very much, isn't it?

Mahesh said...

இன்னாதிது? முதுகுத்தண்டுல சில்லுங்குது.... கலக்கு தல...

பரிசல்காரன் said...

யோவ்... கையக் குடு... செம ஸ்டார்டிங்.

மைல்டா ஆரம்பிச்சு, ஃபாண்டஸி மாதிரி போய் க்ரைம்ல நின்னுருக்கு. அதும் அந்த கிறுக்கலை படமாப் போட்ட உத்தி அபாரம்!

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பாலாஜி சரவணா.
நன்றி கோபி.
நன்றி டிவிஆர்.

நன்றி பாபு. (நல்லாயிருக்கேன் பாஸ். கதையைப் படிச்சிங்களா? இல்லையா? :-))

நன்றி சந்தோஷ்.
நன்றி செந்தில்.
நன்றி அருள்.
நன்றி மறத்தமிழன்.

நன்றி டால்டன். (எத்தனி பேரு இப்படி கிளம்பியிருக்கீங்க? :-))

நன்றி மின்னல்.
நன்றி ஸ்ரீராம்.
நன்றி மணிகண்டன்.

நன்றி அருணா. (திகில் கதை எழுதுனா பயப்படணும்ங்க.. ஏதோ கூலா அப்புறம்ங்கிறிங்க.. நீங்க என்ன ஆடிக்காத்துல அவல் திங்கிறவங்களா? :-))

நன்றி சங்கவி.
நன்றி சிவா.
நன்றி வானம்பாடிகள்.

நன்றி MSK. (இப்பிடில்லாம் பாத்தா ஒன்னியும் எழுதமுடியாது. எல்லாமே யாராவது எழுதுன மாதிரியேதான் இருக்குது எனக்கு. என்ன பண்றது?)

நன்றி முரளிகுமார்.
நன்றி யோகேஷ்.
நன்றி ராஜேஷ்வரன்.
நன்றி சுசி.
நன்றி அருண்.
நன்றி சுகந்தி.
நன்றி நர்சிம்.

நன்றி ஜோஸப். (வீட்ல நெட் புட்டுகிச்சு பாஸ். இல்லைன்னா அடுத்த பாகம் போட்டிருப்பேன். ஸாரி.)

நன்றி பாலா.
நன்றி உழவன்.
நன்றி பாலகுமாரன்.
நன்றி மகேஷ்.
நன்றி பரிசல்.