Wednesday, August 4, 2010

Define : பெண்கள்

பெண்களைப் பற்றி ஒரு பத்து மார்க் கேள்விக்குப் பதிலாக விளக்கச் சொன்னால் எப்படி இருக்கும்? கொஞ்சம் கஷ்டம்தான் இல்லையா?

‘Define : ஆண்கள்’ என்று என்னிடம் கேள்வி கேட்டால் நான் ஒரு பேப்பரில் ஒரு அரிசி மூட்டையை வரைந்து குச்சி குச்சியாய் கால்கள், கைகள் வரைந்து முட்டை மாதிரியாக ஒரு மண்டையை வரைந்து இதுதான் ஆண் என்று சொல்லிவிடுவேன். ஆனால் பெண்களை வரையறுப்பது (Define) என்றால் அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.

இந்தக் கேள்வியை நூறு ஆண்களிடம் கேட்டால் நிச்சயமாக நூறு வித்தியாசமான பதில்கள் கிடைக்கும். ஆச்சரியகரமாக அனைத்துமே ஏற்புடையதாகத்தான் இருக்கும். அவர்கள் அவ்வளவு சிறப்பான ஒரு உயிரிகள் (Special creatures) என்பதுதான் நிஜம். நடக்கும் போது கொஞ்சம் இட வலமாக கால்கள் பின்ன ஒரு நடை. வலது பாதம் இடப்புறம் பதிய, இடது வலப்புறம் பதியக் காண்பது ஒரு ரசனை. தலைவனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இடம், வலம், மேல், கீழ் என அலைபாய்ந்து கொண்டேயிருக்கும் விழிகள். நேர்கொண்ட நிமிர்ந்த நன்நெஞ்சு ஒரு வகை என்றால் அதன் மாற்று இன்னொரு வகை. இதில் முகம் அவனை நோக்காமல் நிலையில்லாமல் நிலன் நோக்கும், தடுமாறும். அத்தனைக் கள்ளமும் இப்போது உதடுகளில் ஒளிந்து கொண்டிருப்பதைப்போல இதழ்கள் துடித்துக்கொண்டிருக்கும். கைகளும், உடலசைவுகளும் அபிநயங்களின் வகைகளில் இல்லாத புதிதானதொன்றைப் புனைந்துகொண்டிருக்கும்.

சட்.. இதெல்லாம் பொதுவான வரையறைகள். என் பதிலுக்குப் போகலாம்.

5052_Michelle-Rodriguez_Fast-and

எனது வரையறையில் கூடுதலாக பெண்கள் தபுவைப் போல, அனுஷ்காவைப் போல கொஞ்சம் நல்ல உயரமாக இருப்பார்கள். மிஷெலைப் போல தோள்கள் அகன்று கொஞ்சம் ஆண்மையை பிரதிபலிப்பார்கள். மூக்கின் வலது அல்லது இடது மடலில் கண்டிப்பாக மெலிதான ஒரு மச்சமிருக்கும். சிரிப்பு ஒரு துளி உங்கள் உயிரைப் பறிக்கும். பேசும் போது கூடவே அகன்ற வீச்சுடன் கைகளும் சைகை மொழி பேசும். நோக்கம் மட்டும் 'கில்லி' மாதிரியான ஆண்கள் கூட எதிர்நோக்கம் செய்யமுடியாத அளவில் வீரியம் மிகுந்ததாய் இருக்கும். கூந்தல் மட்டும் எப்போதும் கட்டுக்குள் இருக்கவே இருக்காது. அபரிமிதமான செழிப்பில் இடை மட்டும் சிறுத்திருக்கலாம். கால்களும், பாதமும் அப்பழுக்கின்றி ஜொலிக்கும்.மகுடிக்கு அடங்கும் பாம்புகளைப் போல கைப்பிள்ளையிலிருந்து பள்ளிப்பிள்ளைகள் வரை முகத்தின் ஒரு அசைவுக்கு அடங்கி மயங்குவர். அது மயக்கும் மாய வித்தைக்கான சாட்சி. அவளைப் பற்றி சொல்லப்பட்ட விஷயங்களே கோடி இருக்கையில் சொல்லப்படாதவை நூறு கோடியென மயங்க வைப்பாள். நான் சொல்லத் தயங்குபவைக்கு கணக்கில்லை..

ரமா ஊரிலிருந்து வந்துவிட்டார். பூரி செய்யப்போகிறார் என நினைக்கிறேன். கையில் பூரிக்கட்டை. அதற்காகவெல்லாம் பயந்து நான் இந்தப் பதிவை இத்தோடு முடிக்கவில்லை, எனக்கு வேறு வேலையிருக்கிறது. இந்த வரையறையைத் தொடர.. நண்பர்களை அழைக்கிறேன்.

********

கார்க்கி (காதலை ஒரு ஷாம்பெயின் பாட்டிலைப் போல அடக்கிவைத்திருக்கும் இளைஞனின் பார்வையில் பெண்களுக்கான வரையறை எப்படி இருக்கும்?)

சரவணக்குமார் MSK (மாய உலகில் சஞ்சரிக்கும் இன்னொரு காதலனின் பார்வையில்)

பரிசல்காரன் (என்னை விடவும் மூத்த இன்னொரு அங்கிளின் பார்வையில்)

ச்சின்னப்பையன் (என்னைப்போல போராட்டக் களத்தில் இருக்கும் இன்னொரு போராளியின் பார்வையில்)

ராமலக்ஷ்மி மேடம் (ஒரு பஃர்பெக்ட் பெண்மணியின் பார்வையில் ஐடியல் ஆண்களுக்கான வரையறை எப்படி இருக்கும்?)

புன்னகை (கலகலப்பான ஒரு இளைஞியின் பார்வையில் ஆண்கள்)

.

35 comments:

பரிசல்காரன் said...

நல்லா இருக்கறதாத்தான் தோணுது. நீ ஏதோ ஐடியாவுலயே இப்படி பேட்டி, பெண்கள் பத்தின்னு எறங்கிறயோன்னு தோணுதுய்யா...

என்ன நடக்கப்போவுதோ....

கார்க்கி said...

// புன்னகை (கலகலப்பான ஒரு இளைஞியின் பார்வையில் ஆண்கள்/

என்ன கொடுமை சார் இது???

MANO said...

NICE POST...


MANO

இராமசாமி கண்ணண் said...

வெரி நைஸ் போஸ்ட்.. ஒரு சின்ன மேட்டர் இத எழுத சொன்னா.. ஏன் பரிசல் மேல பாத்து சிரிச்சுகிட்டு இருக்காரு :)

பா.ராஜாராம் said...

நோ பால் சிக்ஸ்சர் ஆதி! :-))

பா.ராஜாராம் said...

ஃப்ரீ ஹிட் தான் பயமா இருக்கு. :-)

நல்ல டீம். இனி, கொழுந்து விட்டு எரியும்.

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒரு அரிசி மூட்டையை வரைந்து குச்சி குச்சியாய் கால்கள், கைகள் வரைந்து முட்டை மாதிரியாக ஒரு மண்டையை வரைந்து இதுதான் ஆண் என்றூ சொல்லிவிடுவேன்.//

உங்க சுயமதிப்பு சூப்பரு...

ச்சின்னப் பையன் said...

அவ்வ்.. என் பதிவு போடா விரதம் ‘பெண்களால்’ கலைய வேண்டுமா?

சுசி said...

கவிதையா எழுதறிங்க..

ப்ரஃபைல் ஃபோட்டோ வாஸ்து சூப்பர் போல இருக்கே..

சுசி said...

கவிதையா எழுதறிங்க..

ப்ரஃபைல் ஃபோட்டோ வாஸ்து சூப்பர் போல இருக்கே..

கலாநேசன் said...

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.....

பூரிக் கட்டையை கைமாற்றி விட்ட விதம் அழகு.

பரிசல் பார்த்து பண்ணுங்க....

Mahesh said...

ஆரம்பிச்சுட்டாருய்யா.... பூரிக்கட்டையப் பாத்ததுமே பாத்ரூம்ல ஒளிஞ்சுக்க வேண்டியது... வாங்கடா வாங்கடான்னு மத்தவங்களையும் இழுக்க வேண்டியது...

பரிசல் சொன்னது சரிதான்...

அறிவிலி said...

இந்த பதிவை தொடர்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

ஆதி ஒரு 6 சிக்மா ஆசாமியாக இருப்பதால் Define, Measure, Analyze, Implement and Control( இது முடியாது என்றாலும் கூட)
என்று மேன்மேலும் தொடர வாய்ப்புண்டு.

தராசு said...

நன்னா கேட்டுக்கோங்கோ, கலி முத்திடுத்து.....

Kousalya said...

அழகான கவிதையை படித்த உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை...!

கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டு இருக்கும் போது குறுக்கிட்டு விட்டது அந்த பூரி கட்டை......!!?

sweatha said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Cable Sankar said...

வன்மையாய் கண்டிக்கிறேன்.அவ்வ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

:)

Karthik said...

ஜூப்பர் ஐடியா. MSK அண்ணா எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். :))

புன்னகை said...

Tit for tat??? எழுதுறேன், ஆனா கண்டிப்பா டேமேஜ் இருக்கும்! ;-)

விக்னேஷ்வரி said...

வர வர உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு ஆதி. ரொம்பப் புலம்ப ஆரம்பிச்சுட்டீங்க. பாவமா இருக்கு உங்களைப் பார்க்க.

Anonymous said...

அடக்கடவுளே இதுல தொடர் பதிவுக்கு அழைப்பு வேறயா :)

sivakasi maappillai said...

எனக்கென்னவோ இது ஒரு நாலு பேரை வலையுலகில் இருந்து தூக்குற முயற்சியோன்னு தோணுது

உதாரணத்திற்கு

//கார்க்கி (காதலை ஒரு ஷாம்பெயின் பாட்டிலைப் போல அடக்கிவைத்திருக்கும் இளைஞனின் பார்வையில் பெண்களுக்கான வரையறை எப்படி இருக்கும்?) //

கார்க்கி சும்மாவே ஆடுவான்... கால்ல‌ ச‌ல‌ங்கய‌ க‌ட்றீங்க‌ளே ஆதி (ப‌ய‌ங்க‌ர‌வாதி)

sivakasi maappillai said...

:)))))
இத போட்டு கமெண்ட் போட்டுட்டா பெட்டர்

ப.செல்வக்குமார் said...

///ரமா ஊரிலிருந்து வந்துவிட்டார். பூரி செய்யப்போகிறார் என நினைக்கிறேன். கையில் பூரிக்கட்டை. அதற்காகவெல்லாம் பயந்து நான் இந்தப் பதிவை இத்தோடு முடிக்கவில்லை,///

நான் நம்பிட்டேன் அண்ணா ..!!

நேசமித்ரன் said...

ஆதி பதிவின் சாரம் விடுங்கள் உங்கள் நடையில் மொழியில் காட்டும் மாற்றங்கள் மகிழ்வளிக்கின்றன

தொடர்க

நாய்க்குட்டி மனசு said...

ஆதியின் வலையில் விரும்பி விழப் போகும் அடுத்த நர்.....யார் ?

நர்சிம் said...

ராங் நம்பர்

நர்சிம் said...

//நேசமித்ரன் said...

ஆதி பதிவின் சாரம் விடுங்கள் உங்கள் நடையில் மொழியில் காட்டும் மாற்றங்கள் மகிழ்வளிக்கின்றன

தொடர்க//

அஃதே

அன்பரசன் said...

நானும் ரொம்ப நாளா யோசிச்சுக்கிட்டு இருந்தேன் இந்த தலைப்புல எழுத...
ஆனா வெறும் யோசனையா மட்டும் நிக்குது....

அத்திரி said...

:)))))

கார்க்கி said...

//கார்க்கி சும்மாவே ஆடுவான்... கால்ல‌ ச‌ல‌ங்கய‌ க‌ட்றீங்க‌ளே ஆதி //

சிவகாசி மாப்பிள்ளை, பதிவு எழுடஹ்றவர விட பின்னூட்டம் போடறவஙக்ளாலதான் பாதிப்பு அதிகம்னு வலையுலக வரலாறு சொல்லுதாம்.. ஹிஹிஹிஹி

sivakasi maappillai said...

//சிவகாசி மாப்பிள்ளை, பதிவு எழுடஹ்றவர விட பின்னூட்டம் போடறவஙக்ளாலதான் பாதிப்பு அதிகம்னு வலையுலக வரலாறு சொல்லுதாம்..
///

ஆனா விதை பதிவர் போட்டது...... (சிவாஜி மாதிரி படிக்கவும்)

ஆதிமூலகிருஷ்ணன் said...

கொஞ்சம் பயந்துகிட்டே 'என்னத்த.?' என்ற நினைப்புடன் ஒரு சின்னூண்டு பதிவு போட்டால் பின்னூட்டம் மட்டுமில்லாமல் போன், மெயில் பாராட்டுகளும் செய்து மனிதனை பேஸ்த் அடிக்கச்செய்ய உங்களைவிட்டால் யாரால் முடியும்? ஏன் சினிமாக்காரன்கள் இப்படி மக்களை புரிஞ்சுக்கமுடியாம லூசா அலையுறானுங்கனு ஓரளவு தெரியுது.! :-))

நன்றி பரிசல். (எப்பையா போடப்போறீரு?)

நன்றி கார்க்கி. (புன்னகை, கார்க்கியை கொஞ்சம் கவனித்து அனுப்பவும்)

நன்றி மனோ.
நன்றி இராமசாமி.

நன்றி பாரா. (செமையான பின்னூட்டம். நோ பால் ஒப்பீடு அழகு)

நன்றி வசந்த்.

நன்றி ச்சின்னவர் (பெரிய விச்சுவாமித்திரர் இவுரு.. எழுதும்யா முதல்ல)

நன்றி சுசி.
நன்றி கலாநேசன்.

நன்றி மகேஷ். (இன்னும் சிரிச்சுக்கிட்டிருக்கேன்)

நன்றி அறிவிலி.
நன்றி தராசு.
நன்றி கௌசல்யா.
நன்றி ஸ்வேதா.
நன்றி கேபிள்.
நன்றி வானம்பாடிகள்.
நன்றி கார்த்திக்.
நன்றி புன்னகை.

நன்றி விக்கி. (பொறாம.. ஆங்.!)

நன்றி அம்மிணி. (ஹிஹி)

நன்றி சிவகாசி.
நன்றி செல்வகுமார்.
நன்றி நேசமித்திரன்.
நன்றி நாய்க்குட்டி.
நன்றி நர்சிம்.
நன்றி அன்பரசன்.
நன்றி அத்திரி.

ராமலக்ஷ்மி said...

தாமிரபரணிக் காற்றை இரண்டு வாரம் சுவாசித்துவிட்டு பெங்களூர் திரும்பி வந்தால் தாமிராவிடமிருந்து அழைப்பு.

இருந்திருந்து, ‘தொடர்’ என்றாலே கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாகும் என் போன்ற imperfect பதிவரையா அழைப்பீர்கள்:)?

ஆயினும் அழைத்த அன்புக்கு நன்றி ஆதி.