Wednesday, September 1, 2010

டூவர்ட் டிட்டிலும் சுபாவும் (400வது பதிவு)

ஒரு அழகிய இரவு நேர படுக்கையில் நானும் சுபாவும் பேசிக்கொண்டிருந்தோம்..

சுபா : "இதாரு?"

நான் : "அப்பா"

"அப்பா பேரு?"

"தாமிரா"

"அதாரு?"

"அம்மா"

"அம்மா பேரு?"

"ரமா"

"இதாரு?"

"தம்பி"

"தம்பி பேரு?"

"சுபா"

"அதென்னுவு.?"

"ஃபேன்" (Fan)

"அது பேரு?"

"....."

***************************

கால் விரல்களில் மெல்லிய சொடுக்குகள் விழுந்தன. கூச்சத்தோடு சிரித்துக்கொண்டிருந்தான். தொடர்ந்து கை விரல்களில் முயன்றேன். ம்ஹூம், பட்டுப்போன்ற விரல்களில் சொடுக்குகள் விழுவதாய் இல்லை. ஆர்வத்தோடு அதற்கான காரணமாகக் கூறினான், "பேட்ரி இல்ல.. சார்ச் போடுனும்"

செல்போன்கள், காமிராக்கள், ரிமோட் கார்கள்.. சத்தமிடும் பொருட்கள் யாவும் பேட்டரியில் இயங்கும் ஒரு குழந்தை உலகின் தன்னிச்சையான முடிவு.

***************************

அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்த காலை நேரம். அவனது கவனம் ஈர்க்கும் பொருட்கள் பெரும்பாலும் அவனுக்கு மறுக்கப்படுபவையே. அவற்றில் பீரோவும் ஒன்று. உடையை எடுத்துக்கொண்டதும் வந்து பீரோவின் கதவை அடைக்கவிடாமல் பிடித்துக்கொண்டு ஆராயத் துவங்கினான்.

குரலில் போலியாய் பதற்றத்தைக் கொண்டு, "தம்பி, கதவ அடைச்சுடு. பல்லி வந்துடும்.."

கதவை அடைத்துவிட்டு என்னைப் பார்த்தான். நீ சொல்லும் காரணம் தவறு என்பதைப்போல ஒரு உணர்வுடன் பரபரப்புடன் சொல்கிறான், "மியாவ் வந்து அப்பா சட்டைய தூக்கிட்டுப்போயிரும்.."

***************************

'சூப்பர் வொய்ஸ்' போகும் போது "பயிர் இஞ்சின் போடு, ஆங்ங்..", 'தி பயர் என்ஜின்' போகும் போது "ஆங்ங்.. ஜாக்கிச்சா போடு..", 'ஜாக்கி சான் அட்வென்சர்ஸ்' போகும் போது, "அலாடின் போடு.. ஆங்ங்..", 'அலாவுதீன்' போகும் போது "டூவர்ட் டிட்டில் போடு, ஆங்ங்ங்..", 'ஸ்டூவர்ட் லிட்டில்' போகும் போது, "ஆங்ங்.. ச்சூப்பர் உய் போடு”.. சமாதானப் படுத்துவதற்குள் நம்மைப் படுத்திவிடுகிறான். ..முடியலை..

***************************

கிச்சனுக்குள் ஒரு தவளைக் குட்டி எப்படியோ வந்துவிட்டிருந்தது. ‘ஆவ்வ்..’ என்று அலறி ரமா ஓடி விட எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் அதை யார் விரட்டுவது என்று. இரண்டு பேருக்குமே இது போன்ற பூச்சிகள், ஜந்துகளிடம் சகிப்புத்தன்மை குறைவாக இருந்ததே பிரச்சினை. ஆணின் வீட்டுப் பொறுப்புகள் யாவை? பெண்ணின் பொறுப்புகள் யாவை என சப்ஜெக்ட் சூடாகி விவாதம் நீண்டு சண்டையாகும் போலத் தெரிந்தது. சுபா குழப்பமாக எங்களை பார்த்தபடி இருந்தான். அவனால் சண்டையை நிறுத்தினோம். ‘இதற்கு நான் அந்தத்  தவளையுடனே மோதிவிடுவேன்’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே ரமா கிச்சனுக்குள் போனார்.

இடுப்பில் கை வைத்தவாறே என்னை நோக்கி அடுக்களையை நோக்கி கை நீட்டியவாறே நீ போய் தவளையைப் பிடிக்குறதுதானே என்ற அர்த்தத்தில் கோபமாகக் கத்தினான், “தவை.. அப்பா புடி..”

தவளை பிடிப்பது நம் வேலைதான் போலிருக்கிறது.

****************************

அமைதிக்கு அமைதி, கோபத்துக்கு கோபம் என்பதாய் இருக்கிறது சுபாவின் பதில். வாயில் திணிக்கப்பட்ட உணவை நம் மீது துப்பியதற்கு “டேய்..”  என கத்தினால் ஏதோ கத்திய வில்லனுக்கு எதிராக நம் ஹீரோக்கள் கத்துவதைப்போல அடுத்த விநாடியே “யேயேயேய்ய்ய்ய்... சத்த முச்சு” என்கிறான். அவ்வ்வ்வ்வ்..

.

54 comments:

Jey said...

400க்கு வாழ்த்துக்கள்.

ரசிச்சி படிச்சேன் அண்ணாச்சி.
என் வீட்டு குட்டீஸ் கூத்தும், கிட்டதட்ட இது மதிரிதான்.
என்ன தவளை, கரப்பான், பல்லி இத்யாதிகள் என் டிபார்ட்மெண்டு....:)

Jey said...

400க்கு வாழ்த்துக்கள்.

ரசிச்சி படிச்சேன் அண்ணாச்சி.
என் வீட்டு குட்டீஸ் கூத்தும், கிட்டதட்ட இது மதிரிதான்.
என்ன தவளை, கரப்பான், பல்லி இத்யாதிகள் என் டிபார்ட்மெண்டு....:)

ராமலக்ஷ்மி said...

நானூறுக்கு நல்வாழ்த்துக்கள்!

அருமையான் அப்டேட்ஸ்:)!

//"ஃபேன்" (Fan)

"அது பேரு?"

"....." //

அதனுடைய ப்ராண்ட் பேரை சொல்றதுதானே:)?

இராமசாமி கண்ணண் said...

400க்கு வாழ்த்துகள்.. கோகுலாஷ்டமி வாழ்த்துகள் :)

எறும்பு said...

வாழ்த்துக்கள் for 400 posts

R Gopi said...

400க்கு வாழ்த்துக்கள்.

ப்ரியன் லாரா மாதிரி பீல் பண்றீங்களா?

\\சமாதானப் படுத்துவதற்குள் நம்மைப் படுத்திவிடுகிறான். ..முடியலை.. \\

இது ப்ளாக் ரீடர்ல வரிசையா புதுப்பதிவு வரும்போது எனக்கும் நடக்கும்

\\தவளை பிடிப்பது நம் வேலைதான் போலிருக்கிறது.\\

குரங்கும் பிடிக்க வேண்டியிருக்கும். எப்படின்னு இங்க போய்ப் பாருங்க

http://ramamoorthygopi.blogspot.com/2010_09_01_archive.html

ப்ரியமுடன் வசந்த் said...

ரசனையான நடை

//"அதென்னுவு.?"

"ஃபேன்" (Fan)

"அது பேரு?"

"....."//

சுபா என்ற இலக்கியவாதி உருவாகிறான்

பா.ராஜாராம் said...

:-)))

ஆதி, உயிரோட்டம்!

அப்புறம், நானூறுக்கு வாழ்த்துகள் பாஸ்!

இதே போல இன்னொரு நானுறு சீக்கிரம் எழுதப் பாருங்க. குழந்தைகள் வளர்ந்துவிட்டால், முடியாது. அல்லது இப்படி இடுகைக்காவது அப்பப்ப குழந்தைகள் பெத்துக்கோங்க. :-)

தமிழ்ப்பறவை said...

ரசித்தேன்... 400 க்கு வாழ்த்துக்கள்.. ஒரு வழியாக மினி தொடர் முடிஞ்ச்சிடுச்சு போல...:-)

பழமைபேசி said...

நானூறாவது இடுகைக்கு வாழ்த்துகள்!

பரிசல்காரன் said...

400க்கு வாழ்த்து நண்பா!

Cable Sankar said...

400 வாழ்த்துகக்ள்.

sriram said...

வாழ்த்துக்கள் ஆதி..
நானூறு கண்டு நான் கண்ட ஊரில் நல்லிலக்கியம் படைக்கும் நல்லவருக்கு வாழ்த்துக்கள்.

//இப்படி இடுகைக்காவது அப்பப்ப குழந்தைகள் பெத்துக்கோங்க. :-) //

பாரா அண்ணே இது நியாயமா?? குழந்தை என்ன குல்பி ஐஸா - தோணும்போதெல்லாம் வாங்க?? :):)
(நானும் ஸ்மைலி போட்டுட்டேன்)

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் ஆதி:)) சூப்பர் சுபா

சுசி said...

நானூறுக்கு வாழ்த்துக்கள்.

முதல்ல சுபாவுக்கு சுத்திப் போடுங்க ஆதி. அப்டியே என் அண்ணா பையன் உருவத்தில சுபா குறும்பை ரசிச்ச்ச்ச்சுப் படிச்சேன்..

வழிப்போக்கன் - யோகேஷ் said...

வாழ்த்துக்கள் ஆதி.....

சங்கவி said...

400க்கு வாழத்த்துக்கள்...

சுபாவின் குரும்பு எங்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தியது...

Balaji saravana said...

வாழ்த்துக்கள் ஆதி :)

Mahesh said...

நானூறுக்கு வாழ்த்து... நான் ஊருக்கு வரும்போது !!!

Dalton said...

அகநானூறு புறநானூறு வரிசையில்
ஆதியின் புலம்பல்கள்நாநூறு
நாலாயிர (ஆ)திவ்யப் பிரபந்தமாக விரிவடைய
வாழ்த்துகள் (தவளையை அடிக்கத் தயங்கிய தானயத் தலைவனாக பரினமித்ததர்க்கும் சேர்த்து)

பனங்காட்டு நரி said...

/// சுபா : "இதாரு?" நான் : "அப்பா" "அப்பா பேரு?" "தாமிரா" "அதாரு?" "அம்மா" "அம்மா பேரு?" "ரமா" "இதாரு?" "தம்பி" "தம்பி பேரு?" "சுபா" "அதென்னுவு.?" "ஃபேன்" (Fan) "அது பேரு?" "....."/////

ஹா ஹா ஹா பல்பு !!!!!!

400 க்கு வாழ்த்துக்கள் சார்

Dalton said...

//
பனங்காட்டு நரி said...

/// சுபா : "இதாரு?" நான் : "அப்பா" "அப்பா பேரு?" "தாமிரா" "அதாரு?" "அம்மா" "அம்மா பேரு?" "ரமா" "இதாரு?" "தம்பி" "தம்பி பேரு?" "சுபா" "அதென்னுவு.?" "ஃபேன்" (Fan) "அது பேரு?" "....."/////

ஹா ஹா ஹா பல்பு !!!!

//அது பேரு பல்பு இல்ல, ஃபேன் (Fan).
இப்ப பல்பு உங்களுக்குத்தான்.

Dalton said...

//'சூப்பர் வொய்ஸ்' போகும் போது "பயிர் இஞ்சின் போடு, ஆங்ங்..", 'தி பயர் என்ஜின்' போகும் போது "ஆங்ங்.. ஜாக்கிச்சா போடு..", 'ஜாக்கி சான் அட்வென்சர்ஸ்' போகும் போது, "அலாடின் போடு.. ஆங்ங்..", 'அலாவுதீன்' போகும் போது "டூவர்ட் டிட்டில் போடு, ஆங்ங்ங்..", 'ஸ்டூவர்ட் லிட்டில்' போகும் போது, "ஆங்ங்.. ச்சூப்பர் உய் போடு”.. சமாதானப் படுத்துவதற்குள் நம்மைப் படுத்திவிடுகிறான். ..முடியலை..//

இது இன்னா மேட்டருன்னு ஒன்னும் பிரியல தலிவா.
ஒரு கோனார் நோட்ஸ் கெடச்சா நல்லா இருக்கும்!!

முகிலன் said...

சுபாவுக்கு சுத்திப் போடுங்க ஆதி..

எல்லாப் பசங்களும் இப்பிடி அப்பாவை டர்ராக்குறதுக்குனே திரியிறாய்ங்க போல

R Gopi said...

அப்புறம் தவளைய யார் புடிச்சா? எப்ப புடிச்சீங்க? உட்கார்ந்திருக்கும்போதா, நிக்கும்போதா இல்ல படுத்திருக்கும்போதா? (இது பரிசலோட பதிவுலேர்ந்து சுட்ட மேட்டர்)

அன்புடன் அருணா said...

400க்கு பூங்கொத்து வாழ்த்துக்கள்!

Dalton said...

புரிஞ்சிருச்சி தல
முன்னது சுபாவின் மொழியில், பின்னது படத்தின் ஒரிஜினல் டைட்டில்
...........
அப்பறம் ஆளாளுக்கு 'சுத்தி' போடசொல்லுராங்கன்னு சுபாவை சுத்தி போட்டுடாதிங்க, மயக்கம் வந்துவிடும். (அல்லது ஆணி புடுங்க/அடிக்க சுத்தி இல்லாமல் போய்விடும் :-))

கலாநேசன் said...

400க்கு வாழ்த்துக்கள்.

மழலை மொழி அழகு. வீட்டுக்கு வீடு வாசப்படி...

நாய்க்குட்டி மனசு said...

யப்பா!! நானூறாவது பதிவா? முதல்ல உங்களை(!) சுத்திப் போடுங்க.
குழந்தையின் விரல்களில் சொடக்கு எடுக்காதீங்க ஆதி, அதுவே பழக்கம் ஆகும் போது நரம்புகள் பலவீனம் ஆகும்

அன்பரசன் said...

வாழ்த்துக்கள் 400..

கோவி.கண்ணன் said...

400 க்கு நல்வாழ்த்துகள் ஆதி

புதுகைத் தென்றல் said...

ஆஹா சூப்பர்,
மருமகன் கலக்கறாரு போல இருக்கு. இதெல்லாம் அனுபவிக்க கொடுத்து வெச்சிருக்கணும் ஃப்ரெண்ட். வாழ்த்துக்கள். அப்புறம் 400க்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

சுபாவுக்கு வாழ்த்துக்கள்.

....

நானூறுக்கும் வாழ்த்துக்கள்.

Ŝ₤Ω..™ said...

400 அடிச்சதுக்கு வாழ்த்துக்கள் அண்ணே..
பதிவு செம கலக்கல்.. ரசிச்சு படிச்சேன்.. குட்டீஸ் எது செய்தாலும் கவிதை தான் இல்ல??

vinu said...

congrats mamooooooo


appuram oru halfayum thaandi poittu irrukkeenga oru quater aavathu tret illaiya............

ஹுஸைனம்மா said...

400க்கு வாழ்த்துகள்.
(மீள் பதிவு எத்தனை? :-)))) )

//"ஆங்ங்.. ச்சூப்பர் உய் போடு”.. //

இன்னும் ரிமோட் உங்ககிட்டதான் இருக்கா? ஆச்சர்யம்!!

//ராமலக்ஷ்மி said...
அதனுடைய ப்ராண்ட் பேரை சொல்றதுதானே:)?//

அவன் அம்மாகிட்ட கேட்டிருந்தா சொல்லிருப்பாங்க. :-)))

Karthik said...

400க்கு வாழ்த்துக்கள்ங்ணா. :)

கார்க்கி said...

400kku எல்லாம் வாழ்த்த முடியாது

இந்த ஒரு பதிவுக்கு எவ்ளோ வேணும்னாலும் வாழ்த்தலாம்..

மாங்கு மாங்கு புனைவு எழுதுனின்ங்களே.. இந்த ஒரு பதிவ விட அது நல்லா இருந்துச்சுன்னு ஒருத்தர சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்!!

ஜெயந்தி said...

400க்கு வாழ்த்துக்கள்! சின்னப் பிள்ளைகள் இருந்தாலே வீடு சொர்க்கம்தான்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்திய, வாழ்த்தவிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

மங்களூர் சிவா said...

வாழ்த்துகள் ஆதி:)) சூப்பர்.

நாடோடி இலக்கியன் said...

//இந்த ஒரு பதிவுக்கு எவ்ளோ வேணும்னாலும் வாழ்த்தலாம்..//

அதே.

சந்தோஷ் = Santhosh said...

sweet ஆதி...பயபுள்ளைக்கு சுத்தி போடுங்க..

மோகன் குமார் said...

400க்கு வாழ்த்துகள்.

திருஞானசம்பத்.மா. said...

நானூறு இடுகைகளுக்கு வாழ்த்துகள்..

பாலா அறம்வளர்த்தான் said...

வாழ்வியல் ரசிகனையா நீர்!!! சுபா பற்றி அடிக்கடி எழுதவும். (நல்லா சாப்பிடுகிறானா? ரொம்ப கவலைப் பட்டுக் கொண்டிருந்தீர்களே?)

400 க்கு வாழ்த்துகள்.

MANO said...

அத்தனையும் கவிதை.

மனோ

vanila said...

மினி, சுபா, 400 .. வாழ்த்துக்கள் .. விஜய் டி.வி, யில் "என் பெயர் மீனாட்சி'"ன்னு ஒரு சீரியல் வரப்போகுது.. அதுக்கு promo's காண்பிக்கறாங்க.. அம்பை மணிமுத்தாற அவ்வளவு அழகா shoot பண்ணியிருப்பாங்க.. அத (promo's) பார்க்கின்ற பொழுதெல்லாம் உங்கள் ஞாபகம் வரும் ஆதி.. அந்த முன்னோட்டத்துக்க்காகவும் சேர்த்து இந்த பின்னூட்டம்..

பிரதீபா said...

இதே ஷ்ஷ்ஷ்ஷ் தான் எல்லாக் குழந்தைங்களும் திருப்பிக் குடுக்கறாங்க.. இந்தப் பொடுசுங்க இருக்கே, நம்மள வித்துரும்..

வள்ளி said...

//"பேட்ரி இல்ல.. சார்ச் போடுனும்"//

வாவ்.... வியக்கின்றேன் :)

Rajalakshmi Pakkirisamy said...

Cho sweet :)

ILA(@)இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன்

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... எல்லாமே அழகு.

நீங்களும் ஜீனியர் அப்டேட்ஸ் போட ஆரம்பிச்சாச்சா.. குட். ரெகுலரா எழுதுங்களேன் இதை.

விக்னேஷ்வரி said...

பை த வே, 400 ஐக் கடந்து விட்டதுக்கு வாழ்த்துகளும்.