Wednesday, September 1, 2010

என்ன செய்யப் போகிறாய் மினி.? -5 (இறுதிப் பகுதி)

பகுதி –1   பகுதி -2

பகுதி –3   பகுதி -4

மினி, அண்ணாநகர் கெஸ்ட் ஹவுஸுக்கு வந்து சேர்கையில் மாலை ஏழு மணியாகியிருந்தது. ஹாலில் சுனில், பொழுது போகாமல் அந்தப் பெரிய 32 இஞ்ச் எல்ஸிடியில் NDTV யில் மூழ்கியிருந்தான். அந்த பெரிய ஸோபாவில் ஆழமாக பொதிந்திருந்த குமரகுருபரன் வழக்கம்போல தனது லாப்டாப்பில் ஸஃர்பிங்கில் இருந்தான். இந்த ஒரு வார பழக்கத்தில் இருவரும் எந்த பதற்றமும் இல்லாமல் தனது வீட்டில் இருப்பதைப் போல இயல்பாக இருக்கத்துவங்கியிருந்தனர். வெங்கட் தனது பெட்ரூமில் அடைந்திருந்தான்.

மினி ஒரு இறுக்கமான அழகிய சுடிதாரில் இருந்தாள். வந்ததும் அவனது பெட்ரூமுக்குள் செல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் தயங்க, சுனில் டிவியை ஆஃப் செய்துவிட்டு அவளை போகவேண்டாம் என்று சைகை செய்தவாறே வெங்கட்டுக்கு குரல் கொடுத்தான்.

வெங்கட் ரூமிலிருந்து வெளியானதுமே மினி தன்னிச்சையாக ஓடிச்சென்று அவன் கைகளைப் பிடித்து அவனது நெஞ்சோடு நெருங்கினாள். நண்பர்கள் அருகாமையில் இருக்கும் சூழலில் அவளை மெதுவே இடது தோளோடு அணைத்தவன் நெற்றியில் ஒரு முத்தமிட்டான்.

"ஹௌ யு ஃபீல் வெங்கட்.?"

பேச்சற்ற சில நிமிடங்களுக்குப் பின்னர் ஒரு சோபாவை இன்னொன்றின் அருகே இழுத்துப்போட்டு எதிரெதிரே அமர்ந்தனர். தொட்டுக்கொள்ளும் தூரத்தில் இருந்தவர்களுக்கு நடுவே ஒரு அழகிய கண்ணாடி டீப்பாய்.

'குரு இருக்கிறான் இல்ல, நான் வேணா அப்படியே வெளியேபோய் ஒரு தம்மடித்துவிட்டு வரவா, உனக்கு பாதியாவது பிரைவஸி கிடைக்கும்' என்பது போல வெங்கட்டுக்கு சைகை செய்துவிட்டு கண்களினாலேயே குமரகுருவிடம் எச்சரிக்கை செய்துவிட்டு இயல்பாக எழுந்து வெளியே போனான் சுனில். வெங்கட்டும், மினியும் மிக மெதுவே அருகிலிருப்பவர்களுக்கு கேட்காத வண்ணம் பேசிக்கொள்ளத் துவங்கினர். குமரகுரு கொஞ்சம் கவனித்தால் அவர்கள் பேச்சு காதில் விழும் தூரத்தில் அதே சோபாவில் அவனது இருக்கையிலேயே தொடர்ந்து லாப்டாப்பில் கவனமாக இருப்பது போல இருந்தான், ஆனால் அவன் கவனம் முழுதும் இப்போது அவர்கள் மேல் இருந்தது.

வெங்கட் இப்போது எதிரே அமர்ந்திருந்த மினியின் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

"உங்கிட்ட நிறைய பேசணும் மினி, ஆனா நீ ரொம்ப பயந்துபோயிருக்கே.."

"யெஸ் வெங்கட்.!"

"டாக்டர் அமித்ராய் இஸ் ஆன் தி வே. நிச்சயம் இந்த பிரச்சினையை நாம ஃபிக்ஸ் பண்ணத்தான் போறோம். நீ பயப்படாம கொஞ்சம் அமைதியா இருக்கணும். என்னோட கணிப்பில் இன்னும் ஒரு வாரத்துக்குள்ள இதை சால்வ் பண்றோம். அப்புறம் நின்னுபோயிருக்கிற ஃபாக்டரி வேலையை ஸ்டார்ட் பண்ணிட்டு, நாம எங்காவது ஒரு பத்து நாள் ஃபாரின் ட்ரிப் போயிட்டுவரலாம். ஐ நீட் சம் சேஞ்ச்.!!"

"ஷ்யூர்.."

தொடர்ந்து எதையெதையோ சொல்ல நினைப்பதைப்போல தடுமாறி மனதுக்குள் அலைமோதிக்கொண்டிருந்தான் வெங்கட். பின்னர் அவனையே அவன் சமாதானம் செய்து கொண்டதைப்போல இருந்தது. "அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன் மினி. எங்கே போகலாம்னு நீயே முடிவு பண்ணு. அப்புறம் உன்னைப் பார்க்கணும் போல இருந்துச்சு.."

தயங்குவதைக் உணர்ந்த மினி, அதற்கான காரணம் ஒருவேளை குமரகுரு அருகிலிருப்பதாய் இருக்கலாம் என்று எண்ணியதால் தொடர்ந்து கேட்காமல் பேச்சை திசைமாற்றினாள்.

"டாக்டர் அமித்ராய் எப்ப வர்றதா கமிட் பண்ணியிருக்கிறார்?"

"ம்ஹூம், நாளை மறுநாள் இருக்கலாம். அதற்கு முன்னர் திருவண்ணாமலையில் ஒரு நபர் இது மாதிரி விஷயங்களை டீல் பண்ணுகிறார், ரொம்ப நம்பிக்கையான ஆள் என்று தகவல் வந்தது. அவருக்கு எல்லா விஷயத்தையும் அப்டேட் பண்ணியிருக்கோம். அவரும் எப்பவும் வரலாம்.."

"நாம ஏன் ஃபாக்டரியை ஸ்டாப் பண்ணக்கூடாது வெங்கட்.?" மெதுவாக ஆனால் அழுத்தமாகக் கேட்டாள்.

"நோ மினி. இட்ஸ் மை ட்ரீம். சௌத்தின் மிகப்பெரிய கெமிகல் பிளாண்ட்டா அதைக் கொண்டு வரணும்னு எனக்கு பெரிய ஆம்பிஷன் இருக்கு மினி. எல்லாப் பிரச்சினைக்குமே சொல்யூஷன்ஸ் உண்டு. இதையும் சால்வ் பண்றோம். .:பாக்டரி வரத்தான் போகுது.." உறுதியாக முடித்தவன் தொடர்ந்து மினியிடம் குழைந்தான்.

"ஸ்மோக் பண்ணிக்கவா மினி. கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு ஃபீல் பண்றேன்.."

"எத்தினி வாட்டி சொல்றது வெங்கட்? திருந்தவே மாட்டியா நீ.?"

மினி சொல்லிக்கொண்டிருக்கும் போதே குமரகுரு தனது லாப்டாப்பை மூடி இடதுபுறம் போட்டுவிட்டு எழுந்து இவர்கள் அருகில் வந்தான். எதையும் பேசவில்லை. வெங்கட் அவனை ஒரு கேள்விக்குறியான முகத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே குரு தன் சட்டைப்பையிலிருந்த ஒரு மார்க்கர் பேனாவை எடுத்து நடுவிலிருந்த அந்த சிறிய கண்ணாடி டீப்பாயில் இவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டு திரும்பி நிதானமாக கதவை நோக்கி நடக்கத் துவங்கினான். 'இவன் என்ன செய்துகொண்டிருக்கிறான்? இருவரையும் தனிமையில் விட்டுவிட்டு வெளியே போகப்போகிறானா.? என்ன ஆயிற்று இவனுக்கு?' சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு நிகழ்ந்துகொண்டிருந்ததில் வெங்கட் நிதானமாக சிந்திப்பதற்குள் குரு கதவை அடைந்திருந்தான். உட்பக்க லாக்கில் தொங்கிக்கொண்டிருந்த சாவியை கையில் எடுத்தவன், 'ஐ மிஸ் யூ உமா. டேக் ஹிம்..' என்று முனகியவாறே வெளியேற, அந்த ஆட்டோமாடிக் டோர் 'கிளிக்' என்ற சத்தத்துடன் பூட்டிக்கொண்டது.

"குரு.." இறைந்து கொண்டே எழப்போன வெங்கட்டின் முதுகுத்தண்டை மினியின் குரல் சிலிர்க்கவைத்தது.

"எத்தினி வாட்டி சொல்றது வெங்கட்? திருந்தவே மாட்டியா நீ.?" கரகரத்தக் குரலுடன் அவள் கைகள் அந்தப் பேனாவினால் டீப்பாயின் கண்ணாடி மேற்பரப்பில் கிறுக்கத்துவங்கியிருந்தாள்.

"மினீ.." அடுத்து நடக்கப்போவதை அறிந்து அலறியவன் ஒரு மின்னலைப்போல எழுந்தான்.

"எத்தினி வாட்டி சொல்றது வெங்கட்? திருந்தவே மாட்டியா நீ.?" மினியின் குரலா அது.. அல்லது கோபம் கொப்பளிக்கும் உமாசௌந்தரியின் குரலா.?

கிறுக்கிமுடித்த மினி ஆவேசமாக எழுந்து கிழக்குப்புறமான பெரிய கண்ணாடி ஜன்னல்களை நோக்கிப் பாய்ந்தாள். இந்த முறை வெங்கட் தோற்கவில்லை பதறும் நெஞ்சத்துடன் பாய்ந்தவன் மினியைத் தோளோடு அழுத்திப்பிடித்தவன், அவளின் திமிறும் பெரும்பலத்தையும் அடக்கி பேனாவை அவள் கைகளிலிருந்து பிடுங்கி அவளை மீண்டும் சோபாவோடு இருத்தினான்.

"சுனில்.." கத்தியவன் தொடர்ந்து, "மினி, கண்ட்ரோல் யுவர் செல்ப்..!!!" என்று அவள் தோளைப் பற்றி உலுக்கிக் கத்தினான். அவள் கொஞ்சம் அடங்கியதைப்போல தெரியத் தெரிய..

..வெங்கட்..

..கண்ட்ரோலை இழக்கத்துவங்கியிருந்தான், "மினி, கண்ட்ரோல் யுவர் செல்ப்.." அவன் குரல் மாறியிருந்தது. அவள் கிறுக்கியிருந்த டீப்பாயிலேயே தன்னிச்சையாய் அவன் கைகள் அந்தப்பேனாவால் கிறுக்கத் துவங்கியிருந்தன.

“மினி, கண்ட்ரோல் யுவர் செல்ப்..” மினி தன்னை ரியலைஸ் செய்துகொண்டிருந்த அடுத்த ஒரு சில விநாடிகளில் அந்த ஆறாவது தளத்திலிருந்த அதே கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு தலைகீழாகத் தரையை நோக்கி கீழே.. கீழே..

..சென்று கொண்டிருந்தான் வெங்கட்.

DSC00153

முற்றும்.

(பி.கு : எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தேனா? கருத்து கூறுங்கள். அடுத்த விருந்தாக இதைப் போன்றதொரு ஆக்ஷன், கிரைம் மினி தொடரை நண்பர் பரிசல்காரன் தொடர்வார்)

.

38 comments:

Saravana Kumar MSK said...

me the first..

Saravana Kumar MSK said...

படிச்சிட்டு வரேன்..

இராமசாமி கண்ணண் said...

மிச்ச நாலு பேர அநியாயமா கொன்னதுக்கு பதில் மொதல்லயே வெங்கட்ட போட்ருக்கலாம் ஆதி.. இட்ஸ் டூ லேட் டு சே திஸ்.. Anyway really a good story.. Now everyone waiting for Parisal.

இராமசாமி கண்ணண் said...

இன்னொன்னு சொல்லனும்.. கடைசி பார்ட் கொஞ்சம் பெப் கம்மி மிச்ச நால விட... யாரும் எதிர்பார்காத முடிவ கொடுக்கனும்னு நினைச்சிருக்கீங்க.. ஒரு அளவுக்கு வெற்றியும் அடைஞ்சிருக்கீங்க... வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ...

இராமசாமி கண்ணண் said...

நீங்க ரொம்ப பிஸின்னு நிருபிக்க வேண்டி இப்படி நட்ட நடு நைட்லதான் கதய பப்ளிஷ் பன்னனுமா ஆதி :) உங்க ஆட்டதுக்கு அளவே இல்ல..

இராமசாமி கண்ணண் said...

//Posted by ஆதிமூலகிருஷ்ணன் at 3:56 AM //
ஆகா இது நட்ட நடு நைட் கூட இல்லயே.. செப்டம்பர்1 நீங்கதான் மொத பதிவ போடனுன்னு எதுவும் வேண்டுதலா :)

R Gopi said...

வாழ்த்துக்கள். மொத்தத்துல நல்லா இருக்கு. நிறைவுப் பகுதி அவ்ளோ சுவாரஸ்யமா இல்லையே?

Cable Sankar said...

:( போன வாரமே கதை முடிஞ்சிருச்சு..

முகிலன் said...

கேபிள் சங்கர் சொன்னதையே இங்க ரிப்பீட் பண்ணிக்கிறேன்.

♠ ராஜு ♠ said...

:-)

vinu said...

no i can't agree others opinion i felt this one is good.........


rather than a climax, the one which creates the curiocity is more important...........


so i felt this one did.


life giving chances to stop doing mistakes but if we ignore it then we have to pay the price for it.


good aathi, next epponga

sivakasi maappillai said...

நல்லா இருந்தது ஆதி... ஆனாலும் உமா மாதிரி ஒரு நேர்மையான ஆவி அப்பாவிகள் இரண்டு பேரை தீர்த்தது மிகபெரிய லாஜிக் ஓட்டை....


கிரிமினல் ரைட்டர் ஆகிவிட்டீர்கள்.... இராமசாமி சொன்னதை போல் வாழ்த்த வயதில்லை.... வரவேற்கிறன்......


ஆவியின் பேரு ப‌ரிச‌லின் இல்லாள் பேரு..... அவ‌ர‌ வேற தொட‌ர‌ கூப்டிருக்கீங்க‌... ஏதாவ‌து உள்குத்து இருக்கா????

SenthilMohan said...

போன தொடரில் திடீர்னு சில Characters entry ஆகும் போதே நினச்சேன். ஏதோ ஒரு திருப்பம் இருக்குனு. இருந்திடுச்சு. ஈரம் படம் மாதிரி முடிச்சிருக்குறீங்க. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டீர்கள். கன்னி முயற்சியில் வெற்றி பெற்றிருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

SenthilMohan said...

ஆவியோட பேருக்கும், பரிசலை தொடர அழைத்ததற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டோ? (நாராயணா...நாராயணா...)

Thenral said...

Super climax!!!Vaazhthikkal!!!I enjoyed this story!!!

shanthi said...

ம்ம்... கதை ரொம்ப நல்லா இருக்கு னா... அடுத்த கதை எப்பொ?

பிரதீபா said...

என்ன முடிவுன்னு எல்லாருக்கும் போன வாரமே தெரிஞ்சாலும், எப்படிங்கறதுக்காகத் தான் காத்திருந்தோம்... நிச்சயம் ஏமாற்றவில்லை ஆதியண்ணே (பூரிக்கட்டையால ஒரு கொலை நடக்கும்ன்னு எதிர்பாத்தேன், குறைந்தபட்சம் மினி ஆவியா மாறி வெங்கியோட தலைல குட்டியே சாகடிப்பால்ன்னு பாத்தேன்.. ஹி ஹி, சொந்த அனுபவமும் இருக்கணும்லா?)

கொலைக்கு முன்னாடி கிறுக்கின கிறுக்கல்கள் மாதிரி இறுதியிலும் ஒரு 'ஸ்டாப்' கிறுக்கல்.. ம்ம்.

வாழ்த்துக்கள். இன்னும் இது மாதிரி, இதை விட நல்லதா அடுத்ததை எதிர்பாக்கிறோம்.

பரிசலாருக்கு வாழ்த்துக்கள்.

Rajalakshmi Pakkirisamy said...

Excellent

நர்சிம் said...

சிறப்பு

கார்க்கி said...

mm

மொத்தமா படிச்சா இன்னும் நலல இருக்கும்ன்னு நினைக்கிறேன்..

சிலர் சொன்னது போல கதை போன வாரமே முடிஞ்சிடுச்சு..

ஆனா அதுக்குன்னு வெங்கட்ட சாவடிச்சிட்டு கதை சொன்னா, அது ஏமாத்துறது போல இருக்கும்..

எது எப்படியோ? இப்ப மினி என்ன செய்றாங்க? ஹிஹிஹி

பாலா அறம்வளர்த்தான் said...

நன்றாக இருந்தது ஆதி!!!

அநியாயமாக ரெண்டு அப்பாவிகளை ஒரு நேர்மையான ஆவி கொல்லுமா? சரி... ஆவி என்ன கடவுளா? வெங்கட்டை கொல்ல முற்படும்போது தவறுதலாக கொல்லப்பட்டார்கள் எனக் கொள்வோம். ஓ அப்படியும் சொல்ல முடியாதா? பிரதீபா, கேபிள், கார்கி என எல்லோருமே "போன வாரமே முடிஞ்சது" என்று எந்த லாஜிக்கில் சொல்கிறார்கள் - இந்த கதையே போன வாரம் தானே நீங்கள் ஆரம்பித்தீர்கள். போன பகுதியைத தான் போன வாரம் என - இவர்கள் எவ்வவளவு லாஜிக் மீறுகிறார்கள்? (உங்களுக்கு point எடுத்துக் கொடுத்துள்ளேன் Treat உண்டுதானே?)

நான் ரசித்த கமெண்டுகள்:

1 . பூரிக்கட்டையால் எதிர்பார்த்த கொலை (நிச்சயம் மிஸ் பண்ணிவிட்டீர்கள் பாஸ் - அதைபோன்றதொரு கொலையை வேறு யாரும் எழுதிவிட முடியாது:-))
2 . ஆவியின் பெயருக்கும் பரிசலை அழைத்ததற்கும் போட்ட முடிச்சு - நீங்களே எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள் இல்லையா?

சுசி said...

ரொம்ப நல்லாருந்துது ஆதி.. தெரிஞ்ச முடிவுதான்னாலும் அதை எழுதின விதம் அசத்தல்.

சும்மா விறுவிறுன்னு கொண்டு போய்ட்டிங்க. மொத்தமா படிக்கும் போது இன்னும் நல்லா இருக்கு.

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

சந்தோஷ் = Santhosh said...

ஆதி மத்த மூணு கொலையை ஏன் செய்தாங்க?

sivakasi maappillai said...

// கார்க்கி said...

எது எப்படியோ? இப்ப மினி என்ன செய்றாங்க? ஹிஹிஹி
//
அஞ்சு பேரு செத்துருக்காங்க... இந்த நேரத்துலயும் உனக்கு கிளுகிளுப்பு கேக்குது....ஹூம்.... சீக்கிரம் கல்யாணம் நடக்கட்டும்.... அப்ப இதெல்லாம் தோணாது

எம்.எம்.அப்துல்லா said...

கதையின் முடிவு எதிர்ப்பார்த்ததுதான். ஆனாலும் முதல் நாலு பாகத்தில் நல்ல ஸ்பீட்.

வாழ்த்த வயதிருக்கு.வேற வழியில்லாம வணங்குகின்றேன்.

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு. :)

P.K.K.BABU said...

VERY OLD STORY NARRATION OK SORRY RAJESHKUMAR SORRY AADHI..........

அறிவிலி said...

முடிவும் அருமைதான்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சரவணா. (என்ன படிச்சிட்டு ஓடிப்போயிட்டயா? அடப்பாவமே..)

நன்றி இராமசாமி. (யோவ்.. என்ன நான் ஆன்மீக சொற்பொழிவா ஆத்தியிருக்கேன்.? வணங்குறாராம்ல.. :-))

நன்றி கோபி. (முடிஞ்சது அவ்வளவுதான்னு விடுவீங்களா?)

நன்றி கேபிள். (யாராவது இல்லைன்னாங்களா ஓய்? இறுதிப்பகுதி வெறும் எக்ஸிகியூஷனுக்காகத்தான்னு முடிவு பண்ணி அதுபோலவே செய்திருக்கேன். தட்ஸ் ஆல்)

நன்றி முகிலன்.
நன்றி ராஜு.

நன்றி வினு. (இன்னொரு தொடரா? அடப்போங்கங்க..)

நன்றி சிவகாசி. (ரொம்ப லாஜிக் பாத்தா போரடிச்சுடும். வெங்கட்டுக்கு மிக வேண்டியவர்களின் இழப்பு என்ற கோணத்தில் அணுகலாம்)

நன்றி செந்தில்.
நன்றி தென்றல்.
நன்றி சாந்தி.

நன்றி பிரதீபா. (ஆவிக் கதையிலும் பூரிக்கட்டையா? நல்ல எதிர்பார்க்குறீங்கப்பா.. ஹிஹி)

நன்றி ராஜலக்ஷ்மி.
நன்றி நர்சிம்.

நன்றி கார்க்கி. (டாய், ஓடிப்போயிரு)

நன்றி பாலா. (மேலே லாஜிக் சொல்லியிருக்கேன். உங்கள் கவுண்டர் லாஜிக்கும் நல்லாத்தான் இருக்குது. :-))

நன்றி சுசி. (ரொம்ப ஊக்கமாக இருந்தது உங்கள் ஆர்வம்)

நன்றி சந்தோஷ். (ஆங்.. அவங்களுக்கு பொழுது போகலையாம்)

நன்றி அப்துல்லா. (யோவ்..)

நன்றி வானம்பாடிகள்.

நன்றி பாபு. (ரைட்டு விடுங்க. ஏதோ முடிஞ்சதை பண்ணுகிறோம். இதுக்கே நாக்கு தள்ளிடுச்சு)

நன்றி அறிவிலி.

sriram said...

நல்ல முயற்சி ஆதி,
ஒரே மூச்சில் படித்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.
போன பகுதியோட கதை முடிஞ்சி போச்சு. அடிக்கடி கதை எழுதுங்க.

ஹி ஹி எனக்கும் வாழ்த்த வயதில்லை, அதனால வணக்கமுங்கோ..


//கிரிமினல் ரைட்டர் ஆகிவிட்டீர்கள்//

சிவகாசி மாப்ள - அது க்ரைம் ஸ்டோரி ரைட்டர், கிரிமினல் ரைட்டர் இல்ல. பாவம் ஆதி அவர கிரிமினல் ஆக்கிடாதீங்க.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.

வெண் புரவி said...

வித்தியாசமான ப்ளாட்.... நல்லா வந்து இருக்கு..
மேலும் தொடருங்கள, காத்திருக்கிறோம் படிக்க.்

பரிசல்காரன் said...

அந்த ஃப்ளாஷ் பேக்கைத் தூக்கி இங்க போட்டிருக்கலாம்! ஆனா செமயான பலபேரால ஞாபகம் வெச்சிருக்கப்படப்போற (அப்பாடா) தொடர்!

பின்னூட்டங்கள் பற்றி-

என்னமா யோசிக்கறாங்கப்பா மக்கள்ஸ்!
நல்லவேளை, பரிசல் பேரு ஆனந்தவிகடன்ல வரதுக்கும், இதுல ஆ.வின்னு வர்றதுக்கும் ஏதாவது உள்/சைடு/வெளி/நேர்க்குத்து இருக்கான்னு கேட்காமப் போனாங்களே...

:)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஸ்ரீராம்.

நன்றி வெண்புரவி. (கதை முஞ்சிச்சி)

நன்றி பரிசல். (உங்கள் தொடருக்கான ஆர்வத்துடன் வெயிட்டிங் பரிசல். சீக்கிரம் தொடங்குங்கள்)

rajeshwaran said...

"எத்தினி வாட்டி சொல்றது வெங்கட்? திருந்தவே மாட்டியா நீ.?"

intha dialogue situationku alaga match atchu..

story interestinga ponathala climaxum romba interesta irukumnu ethirpakarathu thappu ila.. (namathu makkal)

Good climax and good twist..

A memorable thrilling crime story..

வானவன் யோகி said...

என்ன...ஏதாவது..அசப்பில்...
திரைக்கதை...(மூலக்கதை)...
மாதிரி...எழுதி..
முன்னோட்டம் விட்டுப் பாக்குறீங்களா?!!

கதைய..இவ்வளவு...இழுத்ததால..
தான்...

அதே நேரம் நாங்கள்ளாம்...
பலகோடி..செலவழித்து..எடுக்கிற.. படத்துலயே ”கதய”காணோம்னு சொல்ற...."கருத்து கந்ச்சாமி"ன்னு உங்களுக்கு...சொல்லிக்கிறோம்..

மொதல்லயே மண்டயடி குடுக்க விரும்பாததால...

எதுக்கும்..இன்னம்..ரெண்டு...மூணு..கதை எழுதுங்க..

அப்பறம்..அதப்பாத்துட்டு...
அடிக்கிறோம்...பாருங்க...தந்தி!!!!!????

வணங்காமுடி...! said...

தலைவா, ஒரே ஒரு குறையைத் தவிர, கதை ரொம்ப ரொம்ப அற்புதம். அநியாயமா செத்துப்போன அந்த நாலு பேருக்கும், கட்டப்போற பேக்டரிக்கும் ஏதாவது ஒரு வகைல தொடர்பு இருக்குற மாதிரி காட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். நல்லவனுக்கு நல்லதே நடக்கணும்னு நினைக்கிற ஆளுங்களாச்சே நாம. அதான். ஹிஹிஹி.

--சுந்தர்
ருவாண்டா

விக்னேஷ்வரி said...

செம க்ரேட் த்ரில்லர். ஹார்ட் பீட் ஹை ஆகிடுச்சுங்க.

Vijay Armstrong said...

நல்லக் கதை, விறுவிறுப்பான நடை. இதில் டாக்டரின் மரணம் நிகழும் இடம் இதய துடிப்பை அதிகரித்தது. நான்கு பாகங்களும் நேர்த்தியாக இருந்தது. ஆனால்..

முடிவு போதவில்லை. நண்பர்களைக் கொல்லுவதன் மூலம் வெங்கட்டுக்கு பயம் ஏற்படுத்தி தொழிற்சாலையை மூட வைப்பது தான் நோக்கம் என்று கொண்டால் - இந்த சதியில் சம்பந்தப்படாத'டாக்டர் மற்றும் டிரைவர்' இறந்து வெங்கட் ஏன் உயிர்த்து இருக்கவேண்டும்? அவன் என்ன அவ்வளவு நல்லவனா?

வெங்கட்டை கொன்றால் தொழிற்சாலை நிறுத்தப்படும் என்றால் அதை முதலிலேயே செய்திருக்கலாம். அதுதான் நியாயமும் கூட. ஆனால் கதை நகராது.

இந்த கதைக்கு வேறு ஏதோ ஒரு முடிவு இருக்கிறது. அதைக் கண்டுபிடியுங்கள்.

உ.தா: 1.உமா மினியின் உறவினராக/தோழியாக இருக்கலாம். மினியின் நலன் கருதி வெங்கட் உயிர்த்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

2. மினி இந்த கொலைகளைச் செய்யலாம். ஏதேனும் 'சைண்டபிக் கருவிகளை'ப்(ஸ்பிரே/உணவுப்பொருளில் கலந்த விஷப்பொருள்) பயன்படுத்தி கொல்லப்படுபவர் தாங்களே கொன்று கொள்ளும்படி தூண்டினாள் என்பதாக. ஆனால் ஏன்? சமுதாயச் சிந்தனை, மினியின் தோழி/உறவினர் அல்லது அவளின் அப்பாவும் அதேப்போன்று தொழிற்சாலையை கட்டிக்கொண்டிருக்கிறார் என்று ஏதேனும் காரணம் காட்டலாம்.

3. வெங்கட்டின் அப்பா - தன்னை மீறும் மகனின் செயலைத் தடுக்கவும், அவனின் நண்பன் மற்றும் தன்னை பின்னால் காட்டி கொடுத்துவிட சாத்தியம் கொண்டவர்கள் என கருதியவர்களை அல்லது தன் நிழல் உலக இரகசியங்களை தெரிந்தவர்களை இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொன்றார். ஒரே கல்லில் இரண்டு மாங்க.

4. பொறுத்துப் பார்த்த உமா தன்னை கொன்ற வெங்கட்டை அதே தொழிற்சாலையின் துவக்க நாளில் கெமிக்கல் தொட்டியில் கொல்லுவது(இது ரொம்ப பழசு என்றாலும்)

மற்றபடி..தொடர் நன்றாக இருந்தது. உங்கள் எழுத்து நன்றாக இருந்தது என்று நான் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறேன்.(நான் ரொம்ப லேட்டு)