Tuesday, September 14, 2010

கடிதம் ‍-குறும்படம்

ஒரு வழியாக எந்திரனை 24ம் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டார்கள் என்பதால் மேலும் அவர்களை பயமுறுத்தாமல் இன்றைக்கே நம் படம் வெளியாகிறது. என்ஜாய்.!

படம் மொக்கை, ஒலிப்பதிவு மொக்கை, எடிடிங் மொக்கைனு தனித் தனியா பிரிச்சு சொல்லிக்கிட்டிருக்க வேண்டாம். ஏன்னா அது எங்களுக்கே தெரியும். ஹிஹி..‌

இந்தப் படத்தைப் பார்த்து டென்ஷனானவர்கள், சும்மா செமையாக உருவாகியிருக்கும் இந்த‌ த்ரில்லர் குறும்படத்தைப் (வேற யாரோ பண்ணியதுங்க) பார்த்து மனதைத் தேற்றிக்கொள்ளவும்.

.

66 comments:

மணிகண்டன் said...

padam super :)-

மணிகண்டன் said...

padam super :)-

மணிகண்டன் said...

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த குறும்படத்தின் லிங்க்கை அனுப்பியுள்ளேன். அவர் இது குறித்தான பார்வையை எழுதுவார் என்ற நம்பிக்கையுடன்.

மணிகண்டன் said...

மற்றபடி கவித்துவமான பல காட்சிகளுடன் ஒன்றி போகமுடிந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இது போன்று பல படங்கள் எடுக்க கோருகிறேன். மற்றபடி, இந்த படத்தின் வசனகர்த்தாவாக எழுத்தாளர் அனுஜன்யா அவர்களை பயன்படுத்தி இருக்கலாம். ஒரு இலக்கிய முத்திரையும் கிடைத்திருக்கும். அடுத்த முறை பதிவர் ஜெயமோஹனை முயற்சித்து பார்க்கவும். நன்றாக வரும்.

Ŝ₤Ω..™ said...

படம் சூப்பராத் தான் இருக்கும்.. எதுக்கும் ஒருக்கா பாத்துட்டு மீண்டு(ம்) வந்து(தா) பின்னூட்டறேன்..

மணிகண்டன் said...

நான் நீங்கள் பரிசல் பதிவில் அறிவித்திருக்கும் போட்டிக்கு கதை அனுப்பி உள்ளேன். அக்கதையையும் அடுத்த படத்திற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்குரிய அனைத்து உரிமைகளையும் நான் துறந்து உங்களுக்கு அளிக்கிறேன்.

Saravana Kumar MSK said...

நல்ல கருத்துச் செறிவான குறும்படம்.

மனதின் நீள அகல பரிமாண அடுக்குகளில் நீந்தி களித்ததை போலொரு உணர்வு.

நிச்சயம் மனித மனதை, அதன் ஆழ வெளிகளின் அத்துணை மாயப்புள்ளிகளையும் ஒருங்கிணைக்க கூடிய, வரம்பெற்ற ஒருவரால் மட்டுமே இக்குறும்படத்தை இயக்கியிருக்க முடியும்.

("ஒரு ராசியில் ஒன்பது லக்கினங்களும் உச்சம் பெற்ற ஒருவன்.. ஒருவன்" வசனம் ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல)

Joseph said...

நல்ல படம், டெக்னிக்கல்லி ரொம்ப முன்னேறிட்டிங்க.
தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்.

Saravana Kumar MSK said...

//டெக்னிக்கல்லி ரொம்ப முன்னேறிட்டிங்க.//

ஆமாம். படம் தெளிவா இருந்தது. கூடவே வசனங்களும்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

@மணிகண்டன், சரவணா..

ங்கொய்யால.. முதலிலேயே இப்பிடி வந்து கும்மினிங்கன்னா அடுத்து வர்றவங்கள்லாம் பின்னிடுவாங்கையா. கும்முறதா இருந்தா கொஞ்ச நேரம் கழிச்சு வர்றதுதானே. முதல் நாலு பின்னூட்டம் சம்பிரதாயமா 'நல்லாருக்குது'னு இருக்குணும்யா. போச்சு, போச்சு.!

ILA(@)இளா said...

படம் எடுக்கப்பட்டவிதம் அருமை. வழக்கம் போல மொக்கை concept, போடாங்...

Saravana Kumar MSK said...

//முதல் நாலு பின்னூட்டம் சம்பிரதாயமா 'நல்லாருக்குது'னு இருக்குணும்யா//

அப்போ அத நீங்க டிஸ்கில சொல்லியிருக்கலாம் இல்ல..

தமிழ் பிரியன் said...

இப்படியா பண்றது.. போங்கப்பா.. இது போங்காட்டம்.. :(

சுசி said...

ஆதி முதல்ல கை குடுங்க.. உங்க முயற்சிக்கும் இந்த படத்தில இன்னும் கூடியிருக்கிற உங்க ஒளிப்பதிவுத் திறமைக்கும் பாராட்டுக்கள்.

கார்க்கி பாக்கெட்ல கடிதத்தை மடிச்சு வச்சிட்டு ஒரு துள்ளலோட கிளம்புவது கலக்கல்..

அப்புறம் அவராலேயே கடிதம் படிக்கும்போது சிரிப்பை அடக்க முடியலேன்னா எங்களால??

ஒலிப்பதிவு தான் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கு.

எல்லாருக்கும் பாராட்டுக்கள்.

தமிழ் பிரியன் said...

மியூஸிக் மட்டும் சூப்பர்! ஹீரோ முரளி ரேஞ்சுக்கு ஸ்கூல் போவார் போல இருக்கே.. ;-))) ஒரு இளமையா வெண்பூ, அப்துல்லா, நர்சிம்ன்னு ஹீரோவா போட்டு இருக்கலாம்... ;-)

தமிழ் பிரியன் said...

\\@ சுசி..
அப்புறம் அவராலேயே கடிதம் படிக்கும்போது சிரிப்பை அடக்க முடியலேன்னா எங்களால??\\

சிரிக்கலைன்னா இன்னும் கொஞ்சம் தத்ரூபமா வந்து இருக்கும்..:)

Ŝ₤Ω..™ said...

என்னன்னு சொல்ல.. எப்படி சொல்ல.. வாழ்த்துக்கள் அண்ணே.. அடுத்த படத்துக்கும் என் கால்ஷீட் ரெடி..

Ŝ₤Ω..™ said...

உன்னைத்தான்
தேடுகிறது
கோடம்பாக்கம்..

நீ
இருப்பதோ
தாம்பரம்..

நீ
எடுப்பதோ
குறும்படம்..

உன்
படத்திற்கு முன்
எந்திரன்
பப்படம்..

தர்ஷன் said...

உண்மையிலேயே ஒரு நேர்த்தி தெரிகிறது. நல்ல கதைகளோடு சீரியசாகவே முனையலாம். கார்க்கியின் நடிப்பு விஜயை ஞாபகப்படுத்துகிறது.

தமிழ் அமுதன் said...

ஏதோ கடசீல சேட்டை பண்ண போரீங்கன்னு தெரியுது அதுக்குன்னு
இப்ப்டியா..?

குட்.. டோட்டலா நல்லா இருக்கு..!

Saravana Kumar MSK said...

//அடுத்த கட்டமாக ஒரு புது கேமரா வாங்கினார் என் இயக்குனர். நல்லதாக ஒரு எடிட்டிங் மென்பொருள் வாங்கினார். ஆன் த ஸ்பாட் டப்பிங்கை மாற்றி, பிண்னனி குரல் சேர்க்க முடிவு செய்தோம். அதற்கு தேவையான மைக்கும் வாங்கியிருக்கிறோம். அதை எல்லாம் இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறோம்.// - கார்க்கி பதிவில் இருந்து..

ரொம்ப சீரியசாவே இறங்கியிருக்கீங்க போல.. வாழ்த்துக்கள்.. அடிச்சு ஆடுங்க.. :)

ப்ரியமுடன் வசந்த் said...

கேமரா,இசை,எடிட்டிங்,கதை சூப்பரு..

அதேங்க ரஜினியிலிருந்து கார்த்தியிலிருந்து கார்க்கிவரைக்கும் நல்லா நடிக்கிற நடிகர்களுக்கு முன்வழுக்கை விழுது?????

கடிதம்ன்னு கார்க்கி முன்னாடி ஒரு போஸ்ட் எழுதியிருந்ததும் ஞாபகம் வந்திச்சு :)))

செல்வேந்திரன் said...

ஆக்கம்!

☀நான் ஆதவன்☀ said...

ஆதி கேமரா இசை எடிட்டிங்னு நல்லா இருந்தாலும்....படம் செம மொக்கை :(

நாளைய இயக்குனர் போட்டிக்கு ஈக்வலா எதிர்பார்த்தேன் :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆதி..படம் ஃபைன்..

ஆனால் கார்க்கி..கடிதத்தில் "R" என ஆரம்பிக்கையிலேயே ஓரளவு ஊகிக்க முடிகிறது..(ஒருவேளை..அது கார்க்கி என்பதாலா? :))

பாராட்டுகள்

செல்வேந்திரன் said...

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இந்த குறும்படத்தின் லிங்க்கை அனுப்பியுள்ளேன். அவர் இது குறித்தான பார்வையை எழுதுவார் என்ற நம்பிக்கையுடன்.

ஹா ஹா அட்டகாசம் மணி!

Sukumar Swaminathan said...

ஒளிப்பதிவு சூப்பர்.. கார்க்கியின் முகபாவனைகள் இம்முறை மெருகேறியுள்ளது. கிளைமாக்ஸ் எதிர்பாராதது... முயற்சி ஒருநாள் திருவினையாக்கும்... வாழ்த்துக்கள்...

ப்ரியமுடன் வசந்த் said...

யப்பேய்ய்ய்ய்ய்.....

கருப்பு மஞ்சள் சிவப்பு செமய்யா இருக்குங்க....

Ŝ₤Ω..™ said...

அண்ணே.. எழுத்தாளர் டிஸ்கி பஸ்கோவிற்கு இந்த படத்தின் சுட்டியை அனுப்பி இருக்கிறேன்.. அவர் இது குறித்தான பார்வையை எழுதுவார் என்ற குருட்டு நம்பிக்கையில்..

☀நான் ஆதவன்☀ said...

சென் கொஞ்ச நேரம் வந்தாலும் கலக்கல் :)

☀நான் ஆதவன்☀ said...

சென் கொஞ்ச நேரம் வந்தாலும் கலக்கல் :)

எம்.எம்.அப்துல்லா said...

// கேமரா,இசை,எடிட்டிங்,கதை சூப்பரு.

//

ங்கொய்யால இசை அப்துல்லான்னு டைட்டில்ல ஏன்யா போடலை????

கார்க்கி said...

அபார ஆதரவு போல..

நன்றி மகக்ளே!!

அடுத்த படம் நோ மொக்கை..

சீரியஸ் முயற்சிதான்.

சந்தோஷ் = Santhosh said...

ஆதி இந்த படத்துல புதுசா ஒரு பையனை அறிமுகம் செய்து இருக்கிங்க.. பையன் பேரு என்னா சொல்லுங்க அடுத்த ரசினி அவர்தான்னு.. எதிர்காலம் ரொம்ப பிரைட்டா இருக்கு...

சென் சங்கத்துக்கு அமொண்டு சரியா வந்துடணும்

நியோ said...

இனிய அனுபவம் தந்தது உங்கள் குழுவினரின் படைப்பு!
காதல் கடிதமெழுத யோசிக்கும் பொழுது புகை பிடிக்காமைக்கும்,வண்டியில் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிந்தமைக்கும் இயக்குனருக்கு நன்றிகள்!
படமாக்கிய காமிரா,டப்பிங் மைக் விலை குறித்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.நண்பரொருவர் கேட்கச் சொன்னார்.
கடிதமெழுதும் பொழுது ஒலித்த இசை இனிமை.ஆனால் கொஞ்சம் நேரம் அதிகம் கேட்டால் தூங்கி விடுவேன் போலிருந்தது ...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்;குறிப்பாக இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளருக்கும்!
நன்றி!

பா.ராஜாராம் said...

உண்மையிலேயே நல்லாத்தான் இருக்கு ஆதி.

மேட்டர் எதிர்பார்த்ததுதான் என்றாலும், கார்க்கியின் expressions நிறைய இடங்களில் மிக துல்லியம். குறிப்பாக, கண்ணாடியின் முன்பாக எழுதும் தோரணையில், பக்கத்தில் உள்ள புகைப் படங்களை பார்த்து (இங்கு உம்ம டச்சும் தான்) சின்ன தலையாட்டல், nice.

பரிசல்காரன் said...

நல்ல முயற்சி!

எதிர்பார்த்ததை விட காமிரா கோணங்களும், கார்க்கியின் உடல்மொழியும் நன்றாக வந்திருக்கிறது.

இறுதிக் காட்சியில் ’சென்’னின் நடிப்பும் யதார்த்தம்.

உங்களின் எல்லா முயற்சியும் சிறக்க அனைவரின் ஆதரவும் உண்டு.

நர்சிம் said...

வாழ்த்துகள் ஆதி & கோ.

நர்சிம் said...

//தர்ஷன் said...

உண்மையிலேயே ஒரு நேர்த்தி தெரிகிறது. நல்ல கதைகளோடு சீரியசாகவே முனையலாம். கார்க்கியின் நடிப்பு விஜயை ஞாபகப்படுத்துகிறது.//

இதனால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் கார்க்கி. ;)

நாய்க்குட்டி மனசு said...

technical aspects நல்ல முன்னேற்றம்.
பேச்சு தெளிவாக இருக்கிறது. பாராட்டு.
நல்ல தொடக்கம், தொடருங்கள்.
விரைவில் சின்னத் திரையில் எதிர்பார்க்கிறோம்.

sivakasi maappillai said...

//தர்ஷன் said...
கார்க்கியின் நடிப்பு விஜயை ஞாபகப்படுத்துகிறது.//


ஏய் இன்னான்றே எங்க கார்க்கி நடிக்கவே இல்லேன்றியா.... வூடு போய் சேரமாட்டே...

இணைய‌ த‌ல‌வ‌லி கார்க்கி ர‌சிக‌ர் ம‌ன்ற‌ம்
மகாராஷ்ட்ரா கிளை (எங்க‌ளுக்கு வேறுஎங்கும் கிளைக‌ள் கிடையாது)

vinu said...

உங்களோட முந்தைய பதிவில் நானொரு பிழை கண்டுபிடுத்து போட்டதற்கு எனக்கு எந்த வித சன்மானமோ இல்லை அது சரி என்ற உங்கள் ஒப்புதல் வாகுமூல்மோ நீங்கள் தெரிவிக்கவில்லை என்பதை மிகவும் வருத்ததோடும், வன்மையான கண்டனத்தொடும் இங்கு பதிவு செய்கிறேன்.............

அப்புறம் உங்க புதிய படத்துக்கு ப்ரீய ரெண்டு preview டிக்கெட் கிடைக்குமா, ஹி ஹி ஹி ஹி

ஈரோடு கதிர் said...

ஒளிப்பதிவு வெகு அருமை ஆதி

குசும்பன் said...

டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் என்னையும் குறும்படம் எடுக்கவைக்காம விட மாட்டீங்க போல!

ஆமா முதல் சீனில் ஜன்னலுக்குள் இருந்து கார்க்கி எட்டி பார்க்கும் பொழுது, Zooல் வாழைபழத்துக்காக எட்டி பார்க்கும் .........மாதிரியே ஒரு பீல் வருதே அந்த நடிப்பு கிங்காங்கில் இருந்து உருவியதா?:))

Rajeswari said...

:)) nice...ice cream parlour!

பிரதீபா said...

அட சாமி.. நீங்கெல்லாம் ஜகஜ்ஜால ஜிக்கர்கள் !! இந்த மாதிரி ஒரு யோசனை யாருக்கு வரும்? என்ன கதை என்ன கதை !!
Voice Sync அங்கங்கே சரியில்லைன்னாலும் recording நல்லா இருக்குங்க.. இந்த தடவை SLR ல படம் காட்டிட்டீங்க.
உண்மையா சொல்லப் போனா ஒரு நல்ல ஒன் லைனர் ஸ்டோரி.

ஹீரோக்கு சம்பள பாக்கிங்களா டைரக்டர் சார்? சந்தோஷமாவே இருக்கா மாட்டேங்கறாரே?
உங்க கிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

ஹுஸைனம்மா said...

கல்வித் துறை எவ்வளவோ முன்னேறினாலும், இன்னமும் தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் ஒரு லீவ் லெட்டர் எழுதுவதுகூட கவிதை எழுதுவதைவிட கஷ்டமாகத்தான் இருக்கிறது என்பதைச் சொல்ல ஒரு குறும்படம் எடுத்த உங்கள் சமூகக் கண்ணோட்டத்துக்குப் பாராட்டுகள்!!

Karthik said...

நெஜமாவே மேக்கிங் நல்லாதான் இருக்கு. உங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம். நோ ஸ்மைலி.

//நர்சிம் said...
//தர்ஷன் said...
உண்மையிலேயே ஒரு நேர்த்தி தெரிகிறது. நல்ல கதைகளோடு சீரியசாகவே முனையலாம். கார்க்கியின் நடிப்பு விஜயை ஞாபகப்படுத்துகிறது.//

இதனால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் கார்க்கி. ;)//

தாறுமாறாக வழிமொழிகிறேன். :))

வெறும்பய said...

கவிதைத் தனமான தொடக்கம்.. காமெடியான முடிவு... ரொம்ப நல்லாயிருக்கு...

வணங்காமுடி...! said...

பார்த்தேன்

ரசித்தேன்

அழுதேன்

ஆபீஸ்ல அழ வச்ச உங்களை....(நற.. நற..)

--சுந்தர்
ருவாண்டா

வணங்காமுடி...! said...

50 -வது பின்னூட்டம் என்னுதுதான்.... ஹோ...

--சுந்தர்
ருவாண்டா

Raghav said...
This comment has been removed by the author.
Raghav said...

"உன்னைத்தான்
தேடுகிறது
கோடம்பாக்கம்..

நீ
இருப்பதோ
தாம்பரம்..

நீ
எடுப்பதோ
குறும்படம்..

உன்
படத்திற்கு முன்
எந்திரன்
பப்படம்.."

ஆனா baby இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கற வர யாரும் உன்ன அசச்சுக்க முடியாது! அசச்சுக்க முடியாது!!!!

Raghav said...

முதல் படத்துல dialogue புரியல இதுல dialogue இல்ல :)

நிச்சயமா அருமையான முயற்சி... இன்னும் நிறைய சுட்டு தள்ளுங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி மணி. (கொலைவெறித் தாக்குதல்)

நன்றி சென். (கவிதை நான் கேட்டனா.. போய்யா யோவ்)

நன்றி சரவணா. (ஒரு ராசியில் வசனத்துக்கு இன்னும் சிரிச்சிகிட்டிருக்கேன்)

நன்றி ஜோஸப்.

நன்றி இளா. (ஹிஹி.. விடு தல)

நன்றி தமிழ். (நீங்க சொன்னவங்களை ஹீரோவாப் போட்டேன்.. அவ்வ்.. கார்க்கியைப் போட்டதுக்கே இந்தக் கும்மு)

நன்றி சுசி. (அடுத்து கரெக்ட் பண்ணிக்கலாம்)

நன்றி தர்ஷன்.
நன்றி தமிழமுதன்.
நன்றி வசந்த்.

நன்றி செல்வா. (ஹுக்கும்)

நன்றி ஆதவன். (ஹிஹி)

நன்றி டிவிஆர்.
நன்றி சுகுமார்.

நன்றி அப்துல். (சரின்னு சொல்லிட்டு ஓடிப்போனதுக்கெல்லாம் பெயரா? போரும்யா..)

நன்றி கார்க்கி.

நன்றி சந்தோஷ். (குடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா ங்கொய்யா)

நன்றி நியோ. (சீரியஸா பாராட்டியதற்கு நன்றி. குறிப்பிட்டு பாராட்டிய ரெண்டுமே நாந்தான். அதுக்கும் நன்றி. அப்புறம் தூங்கிவிடாமல் முழுதும் பார்த்தமைக்கும் பெஸல் நன்றி. மேல் விபரங்களுக்கு மெயிலுக்கு வரலாம்)

நன்றி பாரா.
நன்றி பரிசல்.
நன்றி நர்சிம்.

நன்றி நாய்க்குட்டி. (சின்னத்திரையா? அடப் போங்க மேடம்.! அப்புறம் ஆபீசுக்கு யார் போறது? ஹ்ஹி)

நன்றி சிவகாசி.

நன்றி வினு. (நா.ம.அ படம் பற்றிதானே? நீங்க சொன்னது தப்பு. இந்தா அழகில் கண்டனம் வேறா?)

நன்றி கதிர்.

நன்றி குசும்பன். (நீ படம் எடுக்கப்போறியா? விளையாடாத மாமா)

நன்றி ராஜேஸ்வரி.
நன்றி பிரதீபா.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி கார்த்திக்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி வெறும்பய.
நன்றி வணங்காமுடி.
நன்றி ராகவ். (ஹிஹி)

அமுதா கிருஷ்ணா said...

excellent letter..

தாரணி பிரியா said...

போன படத்தை விட நல்லா இருக்குங்க :)

அன்பரசன் said...

த்ரில்லர் படம் மாதிரி பயமா இருக்குங்க

george said...

போற போக்க ஜூனியர் NTR க்கு பட வாய்ப்பு இருக்காது போல ?

vinu said...

நன்றி வினு. (நா.ம.அ படம் பற்றிதானே? நீங்க சொன்னது தப்பு. இந்தா அழகில் கண்டனம் வேறா?)


இல்லை அந்த திரைப்படத்தில் கடைசி சண்டைக்காட்சியில் மூன்று எதிரிகள் மட்டுமே உயிரோடு இருக்க நீங்கள் 4 பேரோடு சண்டை போடுவதாக குறிப்பிட்டு இருந்ததைதான் நான் சுட்டினேன்

vinu said...

அப்புறம் இன்னும் டிக்கெட் கிடைக்கலை பா கொஞ்சம் arrange பண்ணி தர முடியுமா [நம்ம கார்கி(தள) நடிச்ச படத்துக்குதான் ]

Anonymous said...

Nallarukku..

அறிவிலி said...

படம் நல்லாருக்கு.

அந்த ஆங்கில வசனங்களுக்கு தமிழ்ல சப் டைட்டில் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்.இப்ப பாருங்க கடிதத்துல என்ன எழுதியிருந்துன்னு எனக்கு புரியாமயே போயிருச்சு.மாஸ்ஸ ரீச் பண்ணனும்ல.

அறிவிலி said...

படம் நல்லாருக்கு.

அந்த ஆங்கில வசனங்களுக்கு தமிழ்ல சப் டைட்டில் போட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும்.இப்ப பாருங்க கடிதத்துல என்ன எழுதியிருந்துன்னு எனக்கு புரியாமயே போயிருச்சு.மாஸ்ஸ ரீச் பண்ணனும்ல.

விக்னேஷ்வரி said...

நிஜமாவே நிறைய முன்னேற்றங்கள். கதையும், ஹீரோவும் தான் மைனஸ் ஆதி. பேசாம நீங்களே நடிங்களேன். கார்க்கி மாதிரி வயசான ஆளுங்களை விட நீங்க நடிச்சா நல்லாருக்கும் தானே!