Monday, September 20, 2010

சவால் சிறுகதைப் போட்டி

எங்கள் நிறுவனத்துக்காக சென்னை பாரிமுனையில் இருக்கும் ஒரு கடையிலிருந்து சில பொருட்களை தொடர்ந்து வாங்குவது வழக்கம். சில வருடங்களாகவே அந்தக் கடைக்காரருடன் தொலைபேசியில் பேசி வந்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் அந்தக் கடைக்கு முதல் முறையாக நேரில் செல்லவேண்டிய சூழல் வந்தது. போனதும் அங்கே மேனேஜர் போலிருந்த ஒரு நபரைப் பார்த்து 'மிஸ்டர் ராம் இருக்காரா? பார்க்கணும்' எனக் கேட்டேன். 'நான்தான்.. சொல்லுங்க?' என்றார். குரலைக் கேட்டதுமே புரிந்துபோயிற்று. கொஞ்ச நேரம் வாயடைத்துப் போய்விட்டேன். நான் கேட்டது தாடி, டர்பனுடன் கூடிய ஒரு டிபிகல் பஞ்சாபிக் காரரைப் பார்த்து. ஆனால் நான் பார்க்க விரும்பியதோ சென்னைத் தமிழில் விளையாடும் ஒரு மண்ணின் மைந்தனை. எப்படி எந்தச் சுவடுமேயின்றி தமிழை அவரால் பேச முடிந்திருக்கிறது.? ஆச்சரியம் இன்னும் அகலவில்லை எனக்கு.

**********************

சமீபத்திய எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா. சினிமாக்காரர்கள் நன்றாக மேடைப் பேச்சும் பேசவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஏன் இப்படி நம்மைச் சோதிக்கிறார்கள்? இவர்கள் எல்லாம் பேசவில்லை என்று யார் அழுதது? விவேக், சேரன், விஜயகுமார் என பலரும் ஏதேதோ உளறிக் கொட்டிவிட்டு சென்றனர். இவர்களுக்கெல்லாம் உச்சம் இந்த பார்த்திபன். இவருடைய அபத்தத்திற்கு அளவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கலாநிதிக்கு அர்த்தம் சொல்கிறார். க என்றால் கலை, லா என்றால் லாபம், நி என்றால் நிதி, தி என்றால் திறமையாம். அப்புறம் பட நிறுவனம் 'சன் பிக்சர்ஸ்' என்பதால் இவர் இதை கலாநிதிமாறனின் படமாக இதைப் பார்க்கவில்லையாம். முரசொலி மாறனின் 'சன்' படமாக பார்க்கிறாராம். இதைப்போல ரஜினி, ஷங்கரின் அப்பாக்கள் பெயரைச் சொல்லி அவர்களின் 'சன்' படமாகப் பார்க்கிறேன் என்றார். அந்த அப்பாக்களுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

***********************

நண்பர் பரிசல்காரன் 'சவால் சிறுகதை'ப் போட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நானும் அதில் சிறு பங்காற்றுகிறேன். நாங்களிருவரும் அல்லாத பதிவுலகம் சார்ந்த மூவர், நடுவர் குழுவாக இருக்க சம்மதித்துள்ளார்கள். முடிந்த வரை எழுதியவர் யாரென்ற குறிப்பு இல்லாமல் அவர்கள் கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுப்பார்கள். மூன்று கதைகள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும். பரிசாக ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

'விதிமுறைகள் கொஞ்சம் டஃப்பாக இருக்கிறதே பரிசல்' என்ற போது 'நமக்குதான் டஃப்பாக இருக்கும், நம் பதிவுலக நண்பர்கள் நம்மைப்போலல்ல..' என்றார். அவர் கூற்றை உண்மையாக்கும் வகையில் அனைவரும் சுவாரசியமான சிறுகதைகளோடு இந்தப்போட்டியில் கலந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்.

கடைசித் தேதி, போட்டிக்கான சவால் குறிப்புகள், இதர விதிமுறைகளுக்காக பரிசல்காரனின் விரிவான இந்தப் பதிவைக் காணுங்கள்.

************************

சமீபத்தில் சிறுகதை என நினைத்துக்கொண்டு ஒன்றை எழுதி பத்திரிகைத் துறையைச் சார்ந்த என் வெல்விஷர் ஒருவருக்கு அனுப்பி கருத்துக் கேட்டிருந்தேன். "நேரேஷன் நல்லாயிருக்கு.. சரி, போரடிக்காத எழுத்து.. சரி, அப்புறம்.. கதையை எங்கேய்யா, இனிமேதான் அனுப்புவியா?" என்றார். நான் ரொம்ப வீரமாக, "என்ன நக்கலா? நான் சின்னவன்தானே நீங்க சொல்லிக்கொடுத்தாத்தானே தெரியும். அட்லீஸ்ட் பிளாகிலயாவது போடலாமா?" என்றேன். "பிளாக்னா அவ்ளோ மட்டமாப் போச்சா உனக்கு? ஒரு நல்ல படைப்பாளி ஒவ்வொரு தளத்துக்கும் ஒவ்வொரு தரம் எனப் பார்க்கமாட்டான்" என்றார். சூடு இழுத்ததைப்போல இருந்தது. சமாளித்துக்கொண்டு, "சரி, இந்தக்கதையை உங்களை எடிட் பண்ணச் சொன்னா எதையெல்லாம் டிலீட் பண்ணுவீங்க?" என்று கேட்டேன்.

சொன்னார், "மொத்தத்தையும்"

************************

சமீபத்தில் பார்த்த சினிமாக்கள்.. பாஸ்(எ) பாஸ்கரன் மற்றும் ரெஸிடெண்ட் ஈவில்-4. முதலாவதில் சந்தானத்தின் காமெடி ரொம்ப நன்றாகயிருக்கிறது என்று சொன்னார்கள். அதற்காகவெல்லாம் முழு படத்தையும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மொக்கை. இரண்டாவதின் முதலிரண்டு பாகங்கள் எனக்கு ரொம்ப பிடித்தமானவை. அதிலும் முதல் பாகத்தின் ஸ்டைலிஷான ஜோவாவிச்சும், மிஷெலும் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றார்கள். இந்த பாகம் எதிர்பார்த்ததைவிடவும் படு மொக்கைஸ்.!

*************************

இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது. குறள் -1166

- ரமா ஊருக்குப் போயிருக்கிறார்.

.

21 comments:

தமிழ் பிரியன் said...

;-)

அன்பரசன் said...

//"சரி, இந்தக்கதையை உங்களை எடிட் பண்ணச் சொன்னா எதையெல்லாம் டிலீட் பண்ணுவீங்க?" என்று கேட்டேன்.

சொன்னார், "மொத்தத்தையும்"//

:)

பரிசல்காரன் said...

நண்பேண்டா!

நன்றி!!

முடிவில் சொன்ன விஷயம்.. :-)

கார்க்கி said...

உரையாடல் சிறுகதை போட்டிக்கு எழுதியபோதே சொன்னேன் “சிறு”கதையும் இருந்தா நல்லதுன்னு. அவர் சொன்னாத்தான் கேட்பிஙக்ளோ???

Ŝ₤Ω..™ said...

ஆதிண்ணா.. 4வது பகுதியே சிறுகதைண்ணே..

சந்தோஷ் = Santhosh said...

ஆதி சூப்பரு...

ILA(@)இளா said...

//ரமா ஊருக்குப் போயிருக்கிறார்//
அப்புறம் ஏன்யா பதிவு ஜல்லியடிக்குது. ஓஹ், ஊரை ஜாஸ்தியா சுத்துறீங்களோ?

Saravana Kumar MSK said...

:))

நேசமித்ரன் said...

கடைசிப் பகுதி க்ளாஸ் பாஸ்

அந்தப் எடிட்டர் நல்லவேளை என் ப்ளாக் பக்கம் வரலை :)) )))

Gopi Ramamoorthy said...

அந்தப் பேனா ஜோரா இருக்கே (ரைட் சைட்ல இருக்கே)

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

இன்னும் வரப்போகின்ற எந்திரன் விழாக்களில் எவன் எவனெல்லாம் பேசி பேசி நமக்கு ஜன்னி வரவைக்க போறானூங்களோ..!
அன்புடன்,
வெற்றி
http://vetripages.blogspot.com/

நாய்க்குட்டி மனசு said...

இவர்களுக்கெல்லாம் உச்சம் இந்த பார்த்திபன். இவருடைய அபத்தத்திற்கு அளவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது//
i agree; i agree

வர வர பார்த்திபன் பேச ஆரம்பித்தாலே உச்சி மண்டையில சுர்ருங்குது.
பாஸ் (எ) பாஸ்கரன் விமர்சனம் "i see ooonly english film" வகையறாவா? உண்மையா சொல்லுங்க படம் பிடிக்கல...

தராசு said...

//ரமா ஊருக்குப் போயிருக்கிறார். //

அப்படியா, பதிவுல தெரியலையே...

இன்னும் இந்த மாதிரி இவர் தமிழனா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஹிந்தி பேசும் தமிழர்களும் உள்ளார்கள் தல.

மறத்தமிழன் said...

ஆதி,

குஜராத்தி மற்றும் ராஜஸ்தானியர் தான் தமிழை பாடாய் படுத்துகிரார்கள்..
பஞ்சாப்,டெல்லி,ஹரியானா மக்கள் ஓரளவுக்கு நன்றாக தமிழ் பெசுகிறார்கள்..

உங்களுக்கு ரொம்ப தன்னடக்கம்...
திருநெல்வேலி வட்டார கதைகளை நன்றாக எழுதுகிரீர்கள்.

பார்த்திபன் தன்னிடம் வித்யாசமாக எதிர்பார்க்கிறார்கள் என்பதற்காக வரவர
அபத்தமாக விழாக்களில் பேசுகிறார்..தாங்க முடியவில்லை..

சிறுகதைப் போட்டிக்கு வாழ்த்துகள்...

சுசி said...

//ரமா ஊருக்குப் போயிருக்கிறார்.//
வந்ததும் கேட்டதா சொல்லுங்க..

//உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?//
சட்டென்று சிரிப்பு வந்திடிச்சு.. நல்ல வேளை நான் பாக்கலை:))

கதை எங்கே ஆதி??

ஈரோடு கதிர் said...

ட்ரெயிலர் ரீலீசை(!!!) பார்த்தது குத்தமில்லையாம்... பார்த்திபன் கொலை பண்ணனிதுதான் குத்தமாம்..

தனுசுராசி said...

பார்த்திபனின் புலம்பல்கள் அதிகமாகி வருவது வருத்தமே... எப்பூடி இருந்த மனுஷன் எப்பூடி ஆகிட்டாறு.. :(

விக்னேஷ்வரி said...

அதென்ன, வடக்கத்தியர்கள் தமிழ் பேசினால் நாம ஆச்சரியப்படறது... நம்மூர்க்காரங்க எத்தனை பேர் இங்கே வந்ததுக்கப்புறம் சுத்தமான ஹிந்தி பேசறாங்க தெரியுமா.. நம்ம மக்களையும் பார்த்து ஆச்சரியப்படுங்களேன்.

ட்ரெய்லர் நிகழ்ச்சியெல்லாம் பார்த்துட்டுப் பேச்சப் பாரு.. ம்ஹூம்.

அது ஏன் சிறுகதையில் உங்கள் வரிகளை ப்ரமோட் செய்கிறீர்கள்.. #டவுட்டு அண்ணாச்சி.

நாம இன்னும் வளரணுமோ..

நானும் அந்த மொக்கைக்குப் பயந்து போய் தான் பாஸ் படம் இன்னும் பார்க்கல.

ரைட்டு. :)

vinu said...

naanum presenttupaaaaaaaaaaaaaa

Karthik said...

//எப்படி எந்தச் சுவடுமேயின்றி தமிழை அவரால் பேச முடிந்திருக்கிறது.? ஆச்சரியம் இன்னும் அகலவில்லை எனக்கு.

http://www.youtube.com/watch?v=e69E5pPoXsw

இப்பிடி இருக்குமோ? :))

தமிழ்ப்பறவை said...

நல்ல பத்திகள்...மணங்கமழ்கிறது...