Monday, September 27, 2010

ஒரு சினிமா, ஒரு புத்தகம், ஒரு கேம்

ஒரு சினிமா

ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் : மிகவும் புகழ்பெற்ற சிறுவர் கதைகளுள் ஒன்றான இது, உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் சிறப்பு வாய்ந்தது. ‘ஆலிஸின் அற்புத உலகம்’ எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்திருப்பவர் எஸ்.ரா. அந்தக் கதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது இந்தத் திரைப்படம். ஃபேண்டஸி மற்றும் சிறுவர் கதைகள் மீது எனக்கு நிரம்ப ஆர்வம் என்பதால் என் விருப்பப் பட்டியலில் இருந்த படம் இது.

alice-in-wonderland-2010-20090721105728752_640w

சிறு வயதிலிருந்தே விபரீதமான கனவுகளுக்கு ஆட்பட்டிருக்கும் ‘ஆலிஸ்’ தன் மணநாளில் தன் கவனம் ஈர்க்கும் ஒரு முயலின் பின் சென்று, ஒரு மரப்பொந்தில் தவறி வீழ்ந்து ஒரு அற்புத உலகை அடைகிறாள். அது இதுநாள் வரை இவள் கனவில் கண்டு வந்த உலகம். விதவிதமான உயிரினங்களோடு இருக்கும் அந்த மாய உலகில் இவளின் உதவிக்காகக் காத்திருக்கிறாள் வெள்ளை அரசி ஒருத்தி. கொடுங்கோல் செய்யும் சிவப்பு அரசியிடமிருந்து பலத்த போராட்டங்களுக்கும், பற்பல சுவாரசியங்களுக்கும் பிறகு ஆட்சியை கைப்பற்றி வெள்ளை அரசியிடம் தந்து நிஜ உலகுக்கு மீள்கிறாள் ஆலிஸ்.

சிறுவர் சினிமாக்களுக்குதான் 3D என்ற நிலை மாறி இப்போது அனைத்துவிதமான படங்களும் 3D தொழில்நுட்பத்தில் வரத்துவங்கியுள்ளன. சமீபத்திய ஆக்ஷன் த்ரில்லரான ‘ரெஸிடெண்ட் ஈவில்-4’ம் ஒரு 3D படமே. இந்தப் படத்தில் இந்த நுட்பம் மிகவும் பொருத்தமாகவும், வியப்பூட்டுவதாகவும் அமைந்திருப்பது சிறப்பு. சமீபத்தில் ஆலிஸ் ட்ராகனுடன் மோதும் இறுதிக்காட்சியை ஒரு டிவியில் பார்த்தேன். அதற்கும், தியேட்டரில் 3D நுட்பத்தில் பார்த்ததற்கும் இடையே உள்ள வேறுபாடு மலையளவு.

*

ஒரு புத்தகம்

மாவோயிஸ்ட் –அபாயங்களும் பின்னணிகளும் : பா.ராகவன் எழுதிய, கிழக்கு பதிப்பக வெளியீடு இந்தப் புத்தகம். பழம் வரலாற்றின் மீது இல்லாவிடினும் தற்காலிக சமூக, தேசிய அரசியல் நிகழ்வுகளை அறிந்துகொள்வதில் நமக்கு நிச்சயம் ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதற்காகப் படிப்பதற்கான நேரமும் பொறுமையும்தான் இருப்பதில்லை. ஏராளமான புத்தகங்களின், இணையத்தளங்களில் உதவியோடு ஒரு பெரிய வரலாற்றின் சுருக்கத்தை சுவைபட நமக்குத் தந்திருக்கிறார் பா.ராகவன்.

Mஒவொ

சிறு வயதிலிருந்தே ஒவ்வொரு காலகட்டங்களிலும் நக்ஸலைட்டுகளைப் பற்றிக் கேள்விப்பட்டுக்கொண்டேதான் வந்திருக்கிறோம். யார் அவர்கள்? என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இந்தியாவில் இப்படியொரு பெரும் இயக்கத்துக்கான அவசியம் எப்படி வந்தது.? எப்படி இந்தியாவைப் போன்ற ஒரு பெரும் அரசாங்கத்தை அவர்களால் எதிர்கொள்ளமுடிகிறது? போன்ற பல கேள்விகளுக்கு இந்தப் புத்தகம் விடையளிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல முயலலாம்தான். ஆனால் புத்தகமே ஒரு பெரிய சுருக்கம்தான் என்பதால் அதைச் சுருங்கச் சொல்லி அபத்தமாக உணரச் செய்துவிடக்கூடாது என்பதால் புத்தகத்தைப் பரிந்துரைப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். நக்ஸலைட்டுகள் பற்றி மட்டுமல்லாது, தொடர்புடைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றிய தகவல்கள், நேபாளப் புரட்சியின் பின்னணி போன்ற இன்னும் பல விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் காணக் கிடைப்பது சிறப்பு.

*

ஒரு கேம்

கால் ஆஃப் ட்யூட்டி –மாடர்ன் வார்ஃபேர் 2 : கம்யூட்டர் கேம்கள் என்பன ஒரு தனி உலகம் சார்ந்தவை. வரைகலை, விர்சுவல் உலகம், அதனோடு நாம் கொள்ளும் தொடர்பு என பிரமிக்கச்செய்வது இந்தக் கலை. பல்வேறு வகையான கேம்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஷூட்டர் கேம்களின் உச்சம் என்பது ‘கால் ஆஃப் ட்யூட்டி’ சீரிஸ். இந்த வரிசையின் ஏழாவது கேமாக வரும் நவம்பரில் வெளியாகவிருக்கும் ‘கால் ஆஃப் ட்யூட்டி : பிளாக் ஆப்ஸ்’ (Black Ops) -க்காக உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. இப்போதைய கரண்ட் பாகமும் வரிசையின் ஆறாவதுமான கேம், ‘கால் ஆஃப் ட்யூட்டி –மாடர்ன் வார்ஃபேர் 2’. இதை பல மாதங்களுக்கு முன்னமே விளையாடி முடித்துவிட்டேன் ஆயினும் ரொம்ப போர் அடித்தால் நான் அடிக்கடி ‘டைம் ஃபிரேமி’ல் விளையாடத் தேர்ந்தெடுக்கும் ஒரே கேம் இதுவாகத்தான் இருக்கிறது.

original

எந்த வகையில் வேறேந்த கேம்களை விடவும் இது சிறப்பானதாக இருக்கிறது.?அதிஅற்புதமான கிராஃபிக்ஸ் காட்சியமைப்புகள், மிக அழகான திரைக்கதை, புத்திசாலித்தனமான சக வீரர்கள் மற்றும் எதிரிப்படை, விதவிதமான சாகசங்கள், வியக்கவைக்கும் இண்டராக்ஷன், ஒவ்வொரு விநாடியும் போர்க்களத்தின் பரபரப்பு. நிச்சயமாக இதனால் நேரும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரித்துவிடமுடியாது. இதன் கதை மற்றும் கேம் பற்றிய மேலும் சுவாரசியமான தகவல்களுக்கு இந்தத் தளத்தைக் காணலாம். ‘பிளாக் ஆப்ஸ்’ முன்னோட்டம் காண இங்கு செல்லலாம்.

.

15 comments:

கனவுகள் விற்பவன் said...

first!!!!

தமிழ்ப்பறவை said...

படமும், புத்தகப் பகிர்வுக்கும் நன்றி...
கேம் வேணாம்... இதுக்கேல்லாம் நேரம் இருக்கா?

சுசி said...

:))

நேசமித்ரன் said...

ம்ம் நிறைய எதிர்பார்க்கிறோமோ எழுத்து நடை பார்த்துட்டு :)

டம்பி மேவீ said...

நல்ல பதிவு ..நல்ல இருக்கு

நர்சிம் said...

படம் குழந்தையோடு பார்த்தேன். அற்புதம்.

ஈரோடு கதிர் said...

மாவோயிஸ்டுகள் பற்றி நிறையத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
30% இந்தியா அவர்கள் வசம் இருப்பதாக ப்டித்த நினைவு

கார்க்கி said...

ஏழு கூட தண்ணியடிக்கணும்

பரிசல் கூட பாட்டு கேட்கணும்

வெண்பூ கூட பிரியாணி சாப்பிடணும்

உங்க கூட உட்கார்ந்து கேம்ஸ் ஆடணும்..

பரிசல்காரன் said...

கேம்ஸ் மீதான உங்கள் காதல் பிரமிக்க வைக்கிறது ஆதி.. கார்க்கி சொல்வது போல ஒருநாள் பிஎஸ்3யில் உங்களோடு உட்காரவேண்டும்..

DHANS said...

வேறேந்த கேம்களை விடவும் இது சிறப்பானதாக இருக்கிறது.?அதிஅற்புதமான கிராஃபிக்ஸ் காட்சியமைப்புகள், மிக அழகான திரைக்கதை, புத்திசாலித்தனமான சக வீரர்கள் மற்றும் எதிரிப்படை, விதவிதமான சாகசங்கள், வியக்கவைக்கும் இண்டராக்ஷன், ஒவ்வொரு விநாடியும் போர்க்களத்தின் பரபரப்பு. நிச்சயமாக இதனால் நேரும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரித்துவிடமுடியாது.//

super, i am also like this, the only game i used to play repeatedly..

Cable Sankar said...

போன வாரம் ப்ளாக் என்று ஒரு பிஎஸ்2 கேம் வாங்கி வந்தேன் உள்ளே இழுத்துக் கொள்கிறது

ஆதவா said...

கால் ஆஃப் ட்யூட்டி 2002 முதல் பாகத்திலிருந்து ஒன்று விடாமல் விளையாடியிருக்கிறேன். முதல் பாகம் விளையாடும் போதே உலகப்போருக்குள் நுழைந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது. அவ்வளவு ஏன், மாடர்ன் வார்ஃபேருக்காக எனது கணிணியையே புதியதாக்கிக் கொண்டேனெனில் பாருங்களேன்...
அதே போல GTA 4 ம் பிரமாதமானது! இரண்டுமே விற்பனையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது!

அன்புடன்
ஆதவா.

Karthik said...

வீடியோ கேம்ங்கிறதுக்கு தமிழ்ல என்ன? ஹிஹி தலைப்பை பார்த்ததும் தோணினதுங்ணா. ;)

நல்ல பதிவு. :)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கனவு.

நன்றி தமிழ்பறவை.

நன்றி சுசி.

நன்றி நேசமித்திரன். (இருக்கலாமோ? ஹிஹி)

நன்றி மேவீ.

நன்றி நர்சிம்.

நன்றி கதிர்.

நன்றி கார்க்கி.

நன்றி பரிசல்.(நிச்சயம் பண்ணலாம்)

நன்றி தன்ஸ். (வாழ்த்துகள்)

நன்றி கேபிள். (வாழ்த்துகள்)

நன்றி ஆதவா. (வாழ்த்துகள்)

நன்றி கார்த்திக்.

மதுரை சரவணன் said...

arumai. vaalththukkal, nalla vimarsanam, thotarattum