Thursday, October 21, 2010

ரசிகன் : பேர் க்ரில்ஸ் (Bear grylls)

'பேர் க்ரில்ஸ்' (Bear Grylls).. இந்தப் பெயரைக் கேட்டாலே சும்மா ஜிவ்வ்வ்வுங்குது எனக்கு.

ரசிகனாக இருப்பது உண்மையில் ஒரு அதீத ரசனை. பல்துறை கலைஞர்களுக்கு, படைப்பாளிகளுக்கு, விளையாட்டு வீரர்களுக்கு, வரலாற்று நாயகர்களுக்கு.. சமயங்களில் தலைவர்களுக்கும் கூட ரசிகனாக இருக்கிறோம். குறைந்தது யாரொருவரையேனும் ரசிக்காமல் யாரும் இருக்கமுடியாது. ரசித்தலுக்குரிய நபர் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகிறார் என்பதில் இருக்கிறது சூட்சுமம். அவர் எப்படி அந்த விஷயத்தைக் கொண்டு நம்மை மதிமயங்கச் செய்கிறார், வியப்பூட்டுகிறார் என்பது அதன் உள்ளீடு.

man_vs_wild_1

எம்எஸ் அம்மாவோ, லதா மங்கேஷ்கரோ பாடுகையில் கேட்பவனுக்கு இசைமொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியமே இருப்பதில்லை. அவர்கள் பாடுகிறார்கள், அவ்வளவுதான். அதற்கு மேல் அதை விளக்கிக்கொண்டெல்லாம் இருக்கமுடியாது. சூரியன் உதிக்கிறது. மழை பொழிகிறது. போலவே அவர்கள் பாடுகிறார்கள்.

"மீண்டும் வந்துவிட்டார், வல்லவர்.. துணிந்தவர்.. நிபுணர்.." என்று சமீபத்திய டிஸ்கவரி தமிழ் சானலில் விளம்பரம் கண்டிருப்பீர்கள். முதல் முறையாக 'மேன் Vs வைல்ட்' (Man Vs Wild) நிகழ்ச்சியைக் காணும் போதே தெரிந்துவிட்டது, யாரும் விளக்கவேண்டிய அவசியமேயிருக்கவில்லை. இவன் எக்ஸ்ட்ரார்டினரி. வல்லமை, துணிவு, நிபுணத்துவம் என்பன ஒருங்கே ஒருவனுக்கு அமைவது என்பது அரிது. மிகச்சில மனிதர்களுக்குதான் அது வாய்க்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளின் புவியியல் அமைப்புகள், காடுகள், பாலைவனங்கள், கடல், பனிப்பிரதேசம், மலைகள்.. இவற்றின் இயல்புகள், அங்கு வாழும் உயிரினங்கள் குறித்த அறிவு, எதிர்பாராத தருணங்களை சிந்திக்கும் ஆற்றலோடு எதிர்கொள்வது என பிரமிக்க வைக்கிறார் 'பேர் க்ரில்ஸ்'. தொடர்ந்து 'மேன் Vs வைல்டி'ன் பகுதிகளை தவறவிடாமல் பார்க்கத்துவங்கினேன். இண்டெர்நெட்டில் அவர் குறித்து தேடிப்படிக்கத் துவங்கினேன். பிரமிப்பும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

man_vs_wild_12

இப்போது பேர் க்ரில்ஸ் என்ற ப்ரிட்டிஷ்காரனின் ரசிகன் நான்.

‘பேர்’ பிரிட்டிஷ் ராணுவத்தில் 1994ல் தன் பயணத்தைத் துவக்குகிறார். அங்கேயே பல்விதமான பயிற்சிகள். பல உட்பிரிவுகளில் பணியாற்றுகிறார். அட்வென்சர் மிகப் பிடித்தமானதாகிறது. இக்கட்டான ஆபத்துச் சூழ்நிலைகளில் எப்படித் தப்புவது என்பதில் நிபுணத்துவம் பெறுகிறார். அதையே வீரர்களுக்கு பயிற்றுவிக்கும் பயிற்றுனராகவும் ஆகிறார். மலையேறுதல், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், பாராசூட்டில் குதித்தல் போன்றன அவருக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டுகளாக இருக்கின்றன. 1996ல் வாழ்நாளின் பெரிய விபத்தொன்றை பாராசூட்டிலிருந்து குதிக்கும் போது சந்திக்கிறார். பின்னர் தனது 24 வது வயதில் 1998ல் மவுண்ட் எவரெஸ்டில் ஏறி அதைச் செய்த மிக இளம் வயது சாதனையாளராகிறார்.

பிறகு வட அட்லாண்டிக் உறைகடல் பயணம், அனுபவங்கள் பற்றிய புத்தகங்கள், டிவி நிகழ்ச்சிகள் எனத் தொடர்கிறது அவரின் சாதனைப்பயணம். 2006ல் டிஸ்கவரி சானலுக்கான ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சி துவங்கி உலகின் அதிக மக்களால் பார்க்கப்படும் நிகழ்ச்சிகளின் வரிசையில் இணைகிறது. அதன் பின் ‘சானல்4’ க்கான ‘பார்ன் சர்வைவர்’ வெளியாகின்றது. அதன் பின்னும் ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் வெற்றியடைகின்றன. அதைப்போன்ற இயற்கையை எதிர்கொள்ளும் சவால்கள் மட்டுமல்லாது இப்போது ஒளிபரப்பாகத் துவங்கியிருக்கும் ‘ஒர்ஸ்ட் கேஸ் ஸினாரியோ’ (Worst case scenario) வும் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கிறது.

man_vs_wild_8

இந்நிகழ்ச்சிகளின் நோக்கம்தான் இதன் உயர்வைக் பறை சாற்றுகிறது. காடுகள், மலைகளில் சிக்கிக்கொள்ளும் சுற்றுலாப் பயணிகள், கார் மற்றும் வாகன விபத்துகள், விலங்குகளால் ஆபத்து, நெருப்பு, நீர் முதலியவற்றால் நிகழும் உயிராபத்தான சூழல், மற்றும் பலவிதமான எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலைகளில் உலகெங்கும் நாள் தோறும் ஏராளமானோர் உயிரழக்கின்றனர். அதற்கு முக்கியக் காரணமாக அந்தச்சூழலை எதிர்கொள்ளும் மனத்திடமும், புத்திசாலித் தனமான, வேகமான திட்டமிடலும் இல்லாதது முக்கியக்காரணமாக இருக்கிறது. மனிதன் எந்தச் சூழ்நிலையிலும் தப்பிப் பிழைத்திருப்பது எப்படி.? இதற்கான ஒரு பயிற்சியாகவே, விழிப்புணர்வாகவே இவரது நிகழ்ச்சிகள் அமைகின்றன. ஒரு பெரிய பல்துறை நிபுணர் குழுவே இவருக்குப் பின்னால் நின்று துணை புரிவதும் இவரின் வெற்றிக்கு முக்கியக்காரணம் எனினும் ‘பேர் க்ரில்ஸ்’ நம் விழிகளை விரியச்செய்வது நிச்சயமே.!

மேலதிக தகவல்களுக்கு : http://en.wikipedia.org/wiki/Bear_Grylls மற்றும் http://www.beargrylls.com/

.

21 comments:

இராமசாமி கண்ணண் said...

நல்லதொரு பகிர்வு ஆதி அங்கிள்.. நன்றி :)

shyam said...

nice article Mr. aathi.

அன்பரசன் said...

Nice thala..

அன்னு said...

அறிமுகமே அட்டகாசமா இருக்குங்ணா...கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் போலவே. எங்க வீட்டில டீவீ இல்ல. எனவே ஒரு தொடர் எழுதுங்களேன்...ப்ளீஸ்?

வெறும்பய said...

நல்ல பகிர்வு..

Karthik said...

Parkka try panraengna. :-)

Jeeves said...

//இராமசாமி கண்ணண் said...

நல்லதொரு பகிர்வு ஆதி அங்கிள்.. நன்றி :) //


யானும் அவ்வண்ணமே கோரும்

ஜீவ்ஸ்

சுசி said...

முதல் பத்தி.. ரசிகன்யா நீரு.. அப்டின்னு சொல்ல தோணுது.. :))))

கவிதை காதலன் said...

நான் இவரைப்பற்றை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் அசத்தலாய் எழுதி இருக்கிறீர்கள்

வெண்பூ said...

இந்த‌ ஆளு ஒரு எக்ஸ்ட்ரீம் கேஸு.. போன‌ மாச‌ம் ஒரு பாலைவ‌ன‌த்துல‌ கிடைச்ச‌ பாம்பை சுடும‌ண‌ல்ல‌ வேக‌ வெச்சி சாப்பிட்டு இருந்தான், அதுவாவ‌து ப‌ர‌வாயில்ல‌ன்னு பாத்தா போன‌ வார‌ம் ஒரு பாம்பை பிடிச்சி "இது விச‌ம் இல்லை" அப்ப‌டின்னு சொல்லிட்டு அப்ப‌டியே க‌டிச்சி சாப்பிட‌ ஆர‌ம்பிச்சிட்டான்.. உட‌னே அடிச்சி புடிச்சி சேன‌லை மாத்த‌ வேண்டிய‌தா போச்சி..

மங்களூர் சிவா said...

nice article Mr. aathi.

மின்னுது மின்னல் said...

அந்த மாதிரி இடத்துக்கு ஒரு டூரு போடுவோமா ஆதி

பாம்பு சாப்பிடனும் போல இருக்கு :)

சந்தோஷ் = Santhosh said...

ஆதி பதிவு சூப்பரோ சூப்பரு.. உங்களால தான் இது போன்ற அரிய செய்திகளுடனான அரிய பதிவுகளை எழுத முடியும்...

மின்னுது மின்னல் said...

மங்களூர் சிவா said...

nice article Mr. aathi.
//உங்க டச் மிஸ்ஸிங்

வாட் ஹேப்பன் சிவா??

SanjaiGandhi™ said...

ஏகப் பட்ட கெட்ட வார்த்தைகள்.. அநியாயத்துக்கு இரட்டை அர்த்தங்கள்.. பதிவு ஏ1 மாமா.. :))

பரிசல்காரன் said...

உங்கள் ரசனை வட்டம் பிரமிக்க வைக்கிறது ஆதி...!

சரி.. நிகழ்ச்சி வாரத்தின் எந்த நாளில் /எத்தனை மணிக்கு என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமல்லவா?

கார்க்கி said...

ஓசி பின்னூட்டம்.. வச்சிக்கொங்க

Venky said...

WOW EXCELLENT

ஸ்ரீமதி said...

பல்லி சாப்பிடுவாரே அந்த அங்கிளா இவர்?

Anonymous said...

என‌க்கும் அந்த‌ நிக‌ழ்ச்சி ரொம்ப‌ பிடிக்கும்....இவ‌ங்க‌ எல்லாம் நிஜ‌வாழ்வு ஹீரோக்க‌ள்...

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி இராமசாமி.
நன்றி ஷ்யாம்.
நன்றி அன்பரசன்.
நன்றி அன்னு.
நன்றி வெறும்பய.
நன்றி கார்த்தி.
நன்றி ஜீவ்ஸ்.
நன்றி சுசி.
நன்றி காதலன்.
நன்றி வெண்பூ.
நன்றி சிவா.
நன்றி மின்னல்.
நன்றி சந்தோஷ்.
நன்றி சஞ்சய்.

நன்றி பரிசல். (இப்போதைக்கு தினமும் இரவு பத்து மணிக்கு டிஸ்கவரி தமிழில்)

நன்றி கார்க்கி.
நன்றி வெங்கி.
நன்றி ஸ்ரீமதி.
நன்றி மஹா.