Friday, October 1, 2010

அரட்டை –அயோத்தியும் எந்திரனும்

கண்ணனிடமிருந்து இன்று மாலை போன் வந்தது.

"அடேய்.. நியூஸ் பாத்தியா?"

"நானே உன்னக் கூப்பிடத்தான் போனேன். அதுக்குள்ள நீ கூப்பிட்டுட்ட.. இங்க கரண்டு போயிடுச்சி. சேஃப்டிக்காக கரண்டு, கேபிளையெல்லாம் புடிங்கிட்டாங்க போலயிருக்கு. நா கலவரம் ஏதும் பண்ணிருவேனோன்னு பயந்துட்டாங்கனு நினைக்கேன்"

"ஆமா.. நீதான? தீர்ப்பக் கேட்டுட்டு உடனே போய் கலவரம் பண்ணப்போறயாக்கும். அவா சோப்பு வாங்க கடைக்கு போவச்சொல்றதுக்கே தார்க்குச்சிய வச்சு குத்தணும் உன்னைய.. கலவரம் பண்ற மூஞ்சியப்பாரு.."

"அத வுடு, என்னாச்சு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமா.?"

"சொன்னாங்க சொன்னாங்க.. என்ன சொன்னாங்கன்னுதான் ஒருத்தனுக்கும் புரியல.."

"ஒழுங்கா சொல்லுடா.."

"நிசமாத்தாண்டா சொல்றேன். மூணு ஜட்ஜுங்கா இருந்தாங்களா? ஆளாளுக்கு ஒண்ணொண்ணு சொல்லிட்டாங்களாம்.."

"அதென்ன கணக்கு? என்ன சொன்னாங்களாம்? பேசிவச்சுக்கிட்டு ஒண்ணா ஒரே மாதி சொல்லமாட்டாங்களாமா.?"

"அப்படில்லாம் இல்ல. அவங்கவங்களுக்கு என்ன தோணுதோ சொல்லலாம். ஒருத்தர் சொல்லியிருக்கார் அந்த இடத்துல கோயில் கட்டிக்கலாம்னு.. மத்தவங்க ரெண்டு பேரும் இடத்த மூணு பங்கு போட்டு ஆளுக்கு ஒண்ணுன்னு வச்சுக்க சொல்லிட்டாங்களாம்.."

"அதென்ன.. ரெண்டு பேரும் ஒரே மாதிரி? அவங்க பேசிவச்சிகிட்டாங்களாமா? ரெண்டு தீர்ப்பு இருக்கே இப்ப என்ன பண்றது?"

"ரெண்டு பேரும் எப்படி ஒரே மாதி சொன்னாங்களோ நமக்குத் தெரியாது. ஆனா இங்கேயும் மெஜாரிட்டி எதுவோ அதுதான் தீர்ப்பு. ரெண்டாவதை ரெண்டு பேர் சொன்னதனால அதான் தீர்ப்பு.."

"ஓஹோ.. மூணு பேரும் மூணு விதமா சொன்னாங்கன்னா என்ன ஆவும்? ஒருத்தர் கோயில் கட்டவும், ஒருத்தர் மசூதி கட்டவும், இன்னொருத்தர் ரெண்டும் வேண்டாம்னும் சொல்லிருந்தாங்கன்னு வச்சுக்கோ.."

"அப்போ அவுங்கள்ல யாரு லீட் ஜட்ஜோ.. அவரு சொன்னதுதான் பைனல்.. அத வுடு அதோட இன்னொண்ணு பாரு.. இந்த ரெண்டாவது ஜட்ஜு ரெண்டு பேரும் ராமரு அங்கதான் பொறந்தாருன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டாங்களாம். அதனால ராமர் சிலைய அங்கிருந்து எடுக்கப்பிடாதுன்னுட்டாங்களாம்"

"அடேடே.. அதெப்படி? ஏதும் பர்த் சர்டிபிகேட் காமிச்சாங்களோ என்னவோ? ஜட்ஜுங்களே இப்படி இருந்தா என்னடா பண்ணுறது? எல்லாம் நம்ப தலையெழுத்து. சரி அத விடு. அதென்ன மூணு பங்கு. ரெண்டு பார்ட்டிங்கதானே மோதிக்கினுருந்ததுன்னு நினைச்சேன்.."

"அதெல்லாமில்ல.. கேஸு 60 வருசமா நடக்குதாம். இந்த பிஜேபிகாரனுங்க அவனுங்க பேமஸாவனுங்கறதுக்காக 92ல மசூதிய இடிக்கப்போயிதான் கேஸு நம்ப எல்லாருக்கும் தெரிஞ்சி பேமஸாயிடுச்சி. ரெண்டு பேரு இல்ல, ஒரு அஞ்சாறு பார்ட்டிங்க எடம் அவங்களோடதுன்னு சொல்லியிருக்காங்க.. இப்ப மூணு பங்கு போடச்சொன்னதால மிச்சமிருக்கறவங்க சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் பண்ணப் போயிட்டாங்களாம்.."

"விளங்கீரும். ஆனா அதும் நல்லதுக்குதான். சுப்ரீம் கோர்ட்டுல இன்னும் ஒரு நூறு வருசம் போச்சின்னு வச்சுக்க.. எல்லாரும் டயர்டாகிருவானுங்க.. நம்மாளுங்க வெளக்கெண்ணெய் மாதிரி தீர்ப்பு சொல்லுவாங்கன்னாலும் இந்தக் கேஸ்ல அதுவே நல்லதாப் போச்சில்ல.. கட்டப்பஞ்சாயத்து மாதி தீர்ப்புல இப்படி பங்கு போடச்சொன்னது ஒரு வகையில நல்லதுதான். ஒண்ணும் பிரச்சினையில்லாம போச்சில்ல இப்ப.. இல்லன்னா கலவரம் கிலவரம்னு ஏதாவது வந்து தொலையப்போவுது.."

"தீர்ப்பு சொன்ன நேரத்துல பாக்கணுமே.. உள்ள ஜட்ஜுங்க வாசிச்சாங்களோ என்னமோ, ரெண்டு வக்கீலுங்க ஜட்ஜ்மெண்ட் காப்பிய கோர்ட்டுக்கு வெளிய எடுத்துகிட்டு வந்து ரிப்போர்ட்டர்ஸுக்கு வாசிக்க ஆரம்பிச்சாங்க.. நம்மாளுங்க லோக்கல் பிக்பாக்கெட் கேஸ்னாலே பலூன் மாதிரி ஊஊஊன்னு ஊதி பெருசா அலறுவாங்க. இதக் கேக்கணுமா? வாசிக்க ஆரமிச்ச வக்கீலுங்க வாயிலயே மைக்கக் கொண்டுபோய் திணிச்சிட்டாங்க. அம்பது பேரு சுத்தி நின்னு கும்மிட்டாங்க. ஒருத்தன் மண்டமேலயே மைக்க கொண்டு இடிக்கான். இன்னொருத்தன் செல்போனில் பதியரானாம். அவரு வாயிலேயே இடிக்கிறான். அவங்க தலை மேலயே ஏறாத கொறைதான்.. கடைசியில சுண்டல் மாதிரி பேப்பரை போட்டுட்டு உள்ளாற ஓடிப்போயிட்டாங்க.. இன்னுமேதான் ஒவ்வொருத்தனும் அதப்படிச்சிப் பாத்து வெளக்கமா சொல்லுவாய்ங்க.. எப்படியும் நாளைக்கு ஆயிடும் முழுசா ஒழுங்கா தெரியறதுக்கு. அதுக்குள்ள ஒவ்வொருத்தனும் வர்ற வரத்து.. முடியல.. ஒருத்தன் அவரு அன்ன சொன்னாரு. இவுரு இன்ன சொன்னாருனு போட்டு காய்ச்சுறாங்க.. சன்நியூஸ்காரன் கீழே போடுறான். 'இடத்தின் மூன்றில் ஒரு பங்கு ராமருக்குச் செல்கிறது'. அடேய்.. அவரா வந்து கேஸ் போட்டுருக்காரு, ஊடு கட்ட எடம் வேணும்னு. எப்பிடி எழுதறானுங்க பாரேன்.. இந்த அழகுல கலவரம் செய்யலாம்னு எவனாவது ரெடியா இருந்திருந்தாம்னு வச்சுக்கோ, எரிச்சல்ல இதெல்லாம் ஒரு பொழப்பான்னு ரெண்டு வடையத் தின்னு டீயைக் குடிச்சுட்டு இதுக்குள்ள வீட்டுக்குப் போயிருப்பான்.."

"என்னையல்லாம் தீர்ப்பு சொல்லச் சொன்னாங்கன்னா.. ஆட்டையக் கலைச்சுட்டு எடம் எல்லாம் கம்பேனிக்குதான் சொந்தம். எல்லாவனும் ஓடிப்போயிடுங்கன்ருவேன். அப்பாலிக்கா அங்க ஒரு தீம் பார்க்கு கட்டச்சொல்லி கவுர்மெண்டுக்கு ஆர்டர் போட்டுருவேன்"

"அட லூசு. ரெண்டர ஏக்கருல கக்கூஸ்தான் கட்டமுடியும். தீம் பார்க்காமில்ல இவுருக்கு.?"

“ஆமா அதென்ன சிலை அங்கேயே இருக்கட்டும்? என்ன சிலை? எங்கேயே இருக்கட்டுமாம்.?”

“அட.. இந்த கேஸெல்லாம் நடந்துகிட்டிருக்கும் போது நைஸா ராமர் சிலைய வச்சு நாம வெயிலுக்கு கொட்டாயி போடுறதில்லையா? அது மாதி எவனோ சும்மா டெம்பரரி கோயில் கட்டிருக்கானுங்க.. யாரு எப்போன்னு எனக்குத் தெரியல..”

"எங்க ஆஃபீஸ்ல மத்தியானத்துக்கு மேல லீவு போட்டுனு ஓடிட்டாங்க நிறைய பேரு.. தீர்ப்பு வேற மாதி இருந்தா சிக்கலாயிருக்குமில்ல..?"

"இருக்கும் இருக்கும்.. ஆனா அதெல்லாம் வடக்கதான். அங்கதான் போலீஸ்லாம் சொத்தப் போலீஸ். அதோட கண்ட்ரோலும் கிடையாது. ஆந்த்ரா, ஒரிஸான்னு இந்தப்பக்கமும் என்னா நடக்கும்னு சொல்ல முடியாது. ஆனா இங்க தமிழ்நாட்டுல மட்டும் ஒன்னியும் பண்ணமுடியாது. கலவரமா? அதெல்லாம் கட்சிக்காரங்க நினைச்சாதான் நடக்கும். மத்தபடி வெளியூர்லயிருந்து எவனாவது வந்து குண்டு வச்சிட்டு ஓடிப்போனாத்தான் உண்டு. அதத்தவிர ஒரு மண்ணும் முடியாது. பிதுக்கிருவான், பிதுக்கி. செண்ட்ரல்ல, எக்மோர்லயெல்லாம் கமாண்டோஸ் நிக்கிறான் பாரு. ஒவ்வொருத்தனும் கில்லி மாதிரி இருக்கான். அவங்களுக்கு லீவு கெடைக்காத கடுப்புல எவனாவது கலவரம் கிலவரம்னு சிக்குனான்னு வச்சுக்கோ.. வாயிலயே குத்தி, பொறமண்டையிலயே போட்டு வழியனுப்பி வச்சிருவாங்க.."

"சரி அத விடு. எந்திரன் பாக்கணும்.. டிக்கெட் ஏதும் புக் பண்ணினியா?"

"முத நாள் முடியல, சனிக்கிழம சாய்ங்காலம் சொல்லிருக்கேன், கிடைக்குதா பாக்கலாம்.. அந்தக் கூத்தப் பாத்தியா சன் நியூஸ்ல.?"

"என்ன கட்டவுட்டுக்கு பால் ஊத்துனாங்களாமா? அத மட்டும் சொல்லாத. பீர் கூட ஊத்தட்டும், இல்ல வேற என்ன வேணா பண்ணட்டும். சாப்பிடுற பொருளக் தரையிலக் கொட்டுறதுதான் கடுப்பாவுது எனக்கு.. லூசுப்பசங்க.."

"அதெல்லாம்தான் காலம் காலமா பண்றாங்களே.. இப்ப ட்ரெண்டு வேற.. தமிழ்நாடு பூரா.. கோயில்கள்ல பால்குடம் எடுக்கறது, காவடி தூக்குறது, மொட்டை போடுறது, தீக்குண்டம் இறங்குகிறது, அங்கப்பிரதட்சணம் பண்றதுன்னு ஒரே கோலாகலமாம். திருச்செந்தூர்ல தங்கத்தேர் இழுக்கறாங்களாமா.. சொல்ல மறந்துட்டேனே.. மண்சோறு சாப்பிடுறாங்களாம்டா.."

"பேஷ் பேஷ்"

"டபுள் தமாக்கா எப்பிடி.. ஒண்ணு பக்தி எப்பிடி முத்துதுன்னு பாரு.. இன்னொண்ணு அதுக்கான காரணத்தைப் பாரு."

"கருமம் கருமம். காரணம் என்ன.. படம் நல்லாயிருக்கணுமாமா? இப்பல்லாம் சாமிய வேண்டுனாத்தான் படம் நல்லாருக்கும்னு நினைக்கிறாங்க போலுக்கு"

"அதுக்கில்லயாம், படம் 500 நாள் ஓடணுமாம்"

"ஓ, டார்கெட் வேற பிக்ஸ் பண்ணிகிட்டாங்களா? இதெல்லாம் சன் பிக்சர்ஸ்காரங்க குடும்பத்தோட பண்ணினாலும் அதுல ஒரு ஞாயமிருக்குது.. ஹூம்.."

"சன்நியூஸ்ல அயோத்தி நியூஸ்க்கு பிறகு உடனே இதுதான். 45, 50 வயசு இருக்கும் அவங்களுக்கு. இதுவரைக்கும் குடும்பத்துக்காக கோயிலுக்கு போயிருப்பானுங்களானு கூட தெரியாது. மண்சோறு சாப்பிட்டுக்கிட்டே பேட்டி குடுக்கிறாங்க.. படம் 500 நாள் ஓடுனா ஆத்தாளுக்கு மாவிளக்கு ஏத்தறேன்னு. எனக்கு வந்த ஆத்திரத்துக்கு நா நேர்ல இருந்திருந்தா அவன் மண்டையிலேயே மாவிளக்கு ஏத்திருப்பேன்.."

"சரி நாம டென்ஷனாயி என்னாவப்போவுது.? வெளியத்தெருவில இது மாதிரி உளறிவைக்காத. உம்மண்டையை உடச்சி மாவிளக்கு ஏத்திறப் போறானுங்க. ஊரு பூரா இப்படித்தான் இருக்கானுங்க.. சரி போன வையி, புட்டுக்கு மாவு திரிச்சிகிட்டு வரச்சொன்னா அப்பவே.. நேரமாச்சு நா போறேன். இல்லைன்னா என்னைய திரிச்சுடுவா. நீ சனிக்கிழமை டிக்கெட்ட மறந்துடாதே.. ப்ரீவியூ பாத்தவங்க சொல்லி வெறுப்பேத்தறாங்க, படம் எண்டெர்டெயினிங்கா.. செமையா இருக்குதாம், ரஜினி பின்னியிருக்காராம்"

"என்னவோ போ, சனிக்கிழம மீட் பண்ணுவோம்"

.

33 comments:

RR said...

அப்படியே எனக்கு ஒரு டிக்கெட் சொல்லிவைங்க அப்பு......

RR said...

Ultimateசெய்திப்பகிர்வு.....அருமையா இருக்கு ஆதி

பாலா அறம்வளர்த்தான் said...

நீங்கள் கண்ணனுடன்(?:-)) பேசியதைப் போன்றே நான் உண்மையிலேயே என் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். இராமர் பிறந்த இடம் என்று நீதிமன்றம் சொன்னது ஆச்சர்யமாக இருக்கிறது - இருந்தாலும் அப்படித்தான் தீர்ப்பு சொல்கிறதா எனவும் தெளிவாக சொல்ல முடியவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை ஆதி :))

தமிழ்க் காதலன். said...

அன்புக்கினிய ஆதி..., உங்க உரையாடல் அருமை. மிகவும் ரசித்தேன். சிரிச்சி ...சிரிச்சி வயிறு வலி வந்துட்டுதுங்கோ..., நல்ல பதிவு. தொடருங்கள். வாழ்த்துக்கள். வாருங்கள்...( ithayasaaral.blogspot.com ).

மாதேவி said...

எந்திரன் :))

நாய்க்குட்டி மனசு said...

அப்படியே எனக்கும் ஒண்ணு. ஏனுங்கோ !நீங்க இந்த படம் பிடிக்கிறவர் தானுங்களே?

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி RR.

நன்றி பாலா. (தனிப்பட்ட இருவருக்கிடையேயான உரையாடல்தானே. செய்தியை சீரியஸாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை)

நன்றி TVR.

நன்றி தமிழ்காதலன்.

நன்றி மாதேவி.

நன்றி நாய்க்குட்டி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அடெய்.. என்னை என்ன சீனியர் பதிவரா ஆக்கிட்டீங்களா.? நானும் நாலு பதிவாப் பாக்குறேன். 10 பின்னூட்டம், 12 பின்னூட்டம் தாண்டமாட்டேங்குது. என்ன கொடுமை இது? பிச்சுபிச்சு.!

shanthi said...

enna aadhi anna ipadi payamuruthi ella pinnoottam keka koodadu solliputen ama ...........!

Kumar said...

காஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ?
http://cyberbuddies.blogspot.com/2010/09/rajini-great-ad-castrol-advertisement.html

மைதீன் said...

ரொம்ப அருமை .நகைச்சுவையாக இருந்தாலும்,சிந்திக்கவும் வைக்கிறது.வாழ்த்துக்கள் நன்றி.

ரமேஷ் வைத்யா said...

attakaasam!

கார்த்திகைப் பாண்டியன் said...

அயோ(க்கிய)த்தி..

தலைவர் படம் பட்டையக் கெளப்புறதெல்லாம் சரி.. ஆனா மண்சோறு, அலகு குத்தல் எல்லாம் செவன் மச்.. இங்க மதுரைலையும்..:-((

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அடெய்.. என்னை என்ன சீனியர் பதிவரா ஆக்கிட்டீங்களா.? நானும் நாலு பதிவாப் பாக்குறேன். 10 பின்னூட்டம், 12 பின்னூட்டம் தாண்டமாட்டேங்குது. என்ன கொடுமை இது? பிச்சுபிச்சு.!//

ஹையா.. அப்படின்னா நானும் சீனியர் பதிவரா.. வண்டில ஏற எப்படில்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு..:-)))

மோனி said...

../Michelle Corner/.. ஹி ஹி

செவ்வாய் கிரகத்தில் இருந்து மூவர் அணி கொண்ட பறக்கும் தட்டு சென்னைக்கு வந்தது.. முதல்வருடன் அமர்ந்து இரவு “எந்திரன்” திரைப்படத்தை இரசிக்க ஆர்வம்.. 1 மணியில் 1 நாள் காணத் தவறாதீர்கள்.

நியூசு பாத்துடுங்கப்பு..

மவ ராசன்...... said...

நமக்கு சமூக சேவைனா ரொம்ப பிடிக்கும்.....

ஜானி வாக்கர் said...

//அடெய்.. என்னை என்ன சீனியர் பதிவரா ஆக்கிட்டீங்களா.? நானும் நாலு பதிவாப் பாக்குறேன். 10 பின்னூட்டம், 12 பின்னூட்டம் தாண்டமாட்டேங்குது. என்ன கொடுமை இது? பிச்சுபிச்சு.!//

எங்க தலைய இப்படி பப்லிக பொலம்ப வச்சுட்டீங்களே !! நியாயமா ?

பரிசல்காரன் said...

நல்லதொரு அலசல். நாட்டில் நிறைய பேர் பேசிக் கொண்டிருக்கும் விஷயம்.

திருப்பூர் வீரபாண்டியில் நேற்று விகடன் வாங்கிக் கொண்டிருந்தபோது கடைக்காரரிடம் ஒரு கபோதி இப்படிச் சொன்னான்:

“ஹூம்.. ஏதோ ஒருவாரம் ஜாலியா பொழுதுபோகும்னு எதிர்பார்த்தேன்.. ஒண்ணுமில்லாம இப்படி புஸ்ஸுன்னு போச்சே..’

அவன் தலைல குண்டு வைக்க...

பரிசல்காரன் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
அடெய்.. என்னை என்ன சீனியர் பதிவரா ஆக்கிட்டீங்களா.? நானும் நாலு பதிவாப் பாக்குறேன். 10 பின்னூட்டம், 12 பின்னூட்டம் தாண்டமாட்டேங்குது. என்ன கொடுமை இது? பிச்சுபிச்சு.!

October 1, 2010 9:30 AM
//


யோவ்... மானத்த வாங்காத.. இந்தப் பொழப்புக்கு.... நீயும் அலகு குத்திக்கலாம்...

பரிசல்காரன் said...

இன்னைக்கு இதுவரைக்கும் இருவது வந்தாச்சு.. போதுமா???

துளசி கோபால் said...

அருமை.

எம் அப்துல் காதர் said...

// இன்னைக்கு இதுவரைக்கும் இருவது வந்தாச்சு.. போதுமா??? //

பத்தாது..!! வாங்கிங்க, இதோ ஒன்னு...!! அதென்ன சிரிப்பு காட்டனும்னே பதிவு போடுவீங்களா தல. ஹி..ஹி.. நல்ல பதிவு பாஸ்!!

ராஜ நடராஜன் said...

//"தீர்ப்பு சொன்ன நேரத்துல பாக்கணுமே..

இந்த பாராவுக்கு சிரிச்சிக்கிறேன்:)

அறிவிலி said...

இப்படி ஒரு வருத்தம் இருக்கா உங்களுக்கு? - 24

? said...

எங்க தாத்தா ராஜ்பவன் இன்னிக்கு இருக்குல்லா அதுலதான் ஒன்னுக்கு போனாருன்னு என்னோட நம்பிக்கை சொல்லுது. அத எனக்கு க்க்கூஸ கட்ட இடம் பிரிச்சு தர முடியுமா

Tech Shankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

by
TSடாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

நர்சிம் said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

அடெய்.. என்னை என்ன சீனியர் பதிவரா ஆக்கிட்டீங்களா.? நானும் நாலு பதிவாப் பாக்குறேன். 10 பின்னூட்டம், 12 பின்னூட்டம் தாண்டமாட்டேங்குது. என்ன கொடுமை இது? பிச்சுபிச்சு.!//

7 & 8 ;);)

Karthik said...

நல்லாருக்குங்ணா. :)

ஈரோடு கதிர் said...

மண்டையில் மாவிளக்கு ஏத்த என்னையும் சேத்துக்குங்க

ஹுஸைனம்மா said...

ம்ம்.. நல்லாருக்கு(!!!) புலம்பல்கள்!! (அட, உங்க பிளாக் பேரும் இதானே??)

denim said...

மிக நல்ல பதிவு

http://denimmohan.blogspot.com/

ஸ்ரீமதி said...

//"தீர்ப்பு சொன்ன நேரத்துல பாக்கணுமே..//

இந்த பாராவிற்கு நல்லா சிரிச்சேன். :-) அருமை :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி சாந்தி.

நன்றி குமார்.

நன்றி மைதீன்.

நன்றி ரமேஷ்.

நன்றி கார்த்திகை. (அட.. உங்களுக்கு என்னையா கொறச்சல்.? நாந்தான் இப்படி கேட்டு வாங்கறதாயிருக்குது. :-))

நன்றி மோனி.

நன்றி மவராசன்.

நன்றி ஜானி. (நீங்கள்லாம் இல்லாம நம்ம கெப்பாசிடியே இப்ப உள்ளவங்க யாருக்கும் தெரியமாட்டீங்குது. ஹிஹி)

நன்றி பரிசல். (இத-அயோத்தி-யை ஒரு எண்டர்டெயினிங்காவே நிறைய பேர் பார்க்கத் துவங்கிட்டாங்க பாருங்களேன். பாருங்களேன்.. நாமும் ஒரு வாரத்துல மறந்தாச்சு.)

நன்றி துளசிமேடம்.

நன்றி காதர்.

நன்றி நடராஜன்.

நன்றி அறிவிலி.

நன்றி ?. (ஹிஹி.. கேஸ் போடுங்க)

நன்றி டெக் சங்கர்.

நன்றி நர்சிம்.

நன்றி கார்த்திக்.

நன்றி கதிர்.

நன்றி ஹுஸைனம்மா.

நன்றி டெனிம்.

நன்றி ஸ்ரீமதி.