Wednesday, October 20, 2010

இது வரை ட்விட்டியது

நேரமில்லைன்னா எப்படியெல்லாம் பதிவு போடவேண்டியிருக்கிறதப்பா.. அப்படியே நம் இலக்கியப் படைப்புகள் (?) எங்கெங்கேயோ சிதறிப்போகாமல் ஒரே இடத்தில் குவித்து வைத்தாற் போலவும் ஆயிற்று.. ஹிஹி.!

டிவிட்ஸ் 1-45 லிருந்து சில :

*இது நம் முதல் ட்விட்.. நாசமாப் போக.!

*காலை ஆறு மணிக்கே பக்கத்து வீட்டில் போரிங் போடுறேன்னு எழுப்பிட்டானுங்க.. பயங்கர சத்தம், அதிர்வு. இன்னும் இந்த டெக்னாலஜி முன்னேறவேயில்லையா?

*காலை எழுந்ததும் புக்கு. பகல் முழுதும் பிளாக்கு. மாலை வந்தால் ட்விட்டு : ஆஃபீஸ்ல சீட்டு டும்மா ஆயிடும்டியேய்..!!

*அசந்து மறந்து/ ஆஃபீஸ் ஜிம்/ 5 kg தம்பிள்ஸ்/ முக்கிக்கொண்டு நாலு தடவை/ பக்கத்துல ஒரு பயபுள்ள/ 70 kg தம்பிள்ஸ்/ இரும்படிக்கிற இடத்தில் ஈ.

*பக்கத்துல டிவி சீரியல் ஓடுது. ஒவ்வொரு வசனத்துக்கு நடுவுல மீஜிக் போடுறானுங்க. என்னமா நேரத்த ஓட்டுறானுங்கடாப்பா.. நாசமாப் போக.

*சுபாவின் முதல் நாள் ப்ரிகேஜி இனிதே துவங்கியது. பிரிகேஜி மிஸ் பூங்குழலியை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.

*கவிதைகளை விடவும் அதிக ரசனையையும், உழைப்பையும் கேட்கிறது ட்விட்.

*கவிதைகளை விடவும் சிறப்பான, சுதந்தரமான, அடர்த்தியான வடிவம் ட்விட்.

*ட்விட் ஒரு அழகான இலக்கிய வடிவம். ஆனால் பிளாகைப் போலவே அல்லது எல்லாவற்றையும் போலவே ட்விட்டரிலும் மொக்கையே ஆட்சி புரிகிறது.

*மனைவியை தேர்ந்தெடுக்க அவர் நல்லவரா, கெட்டவரா குழப்பமெல்லாம் தேவையேயில்லை. உங்களிடமிருப்பது பிரச்சினைக்குரியவர் என்ற ஒரே ஒரு ஆப்ஷன்தான்.

*ஒடம்புக்கு முடியாம ரொம்ப யோசிச்சு ஆபீஸுக்கு லீவு போட்டு, ரெஸ்ட் எடுக்க படுக்கையில் விழுந்தவுடன் ஒரு தனி புத்துணர்வு ஏற்படுதே, எப்படி?

*மானேஜர் இம்சை தாங்கமுடியவில்லை. மாற்றிவிடலாமா என சில மாதங்களாக யோசித்துக்கொண்டிருந்தேன். திடீர் ஞானோதயமாக மனைவி நினைவில் வந்தார்.

*ஆனாலும் ரொம்ப அநியாயமா கனவு வருதுங்க. ஒண்ணு என்றாலும் பரவாயில்லை. ஒரே நேரத்துல ‘கிழக்கு’ல இருந்து என்னோட மூணு புக்கு போடறாங்களாம்.

*ஞாயிறு இரவு துன்பகரமானது. தூங்கிவிட்டால் இது பாழாய்ப்போன திங்களாக விடிந்துவிடுமென்பதால் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கிறேன்.

*என்னதான் அழகியல், இலக்கியம், இருப்புச்சட்டி என்று பேசினாலும்.. எடுத்தோமா, படித்தோமா, முடித்தோமா என்ற அனுபவத்தைத் தருபவை கிரைம் நாவல்களே.

*வாழ்வதற்கான முதல் காரணமாகவும், தேவையாகவும் இருப்பது ரசனை (ஹிஹி.. தத்துவம் சொல்லி ரொம்ப நாளாச்சுது)

*இதுவரை லீவ் எடுத்துவிட்டு கணினியில் அப்ளை செய்யாதவர்கள் 23ம் தேதிக்குள் செய்துவிடவும். தவறினால் நாங்கள் செய்துவிடுவோம் # HR Mail.

.

டிவிட்டரிலும் நம்மை ஃபாலோ செய்து இம்சைகளைப் தவறவிடாமலிருக்க.. twitter.com/thaamiraa

.

22 comments:

ஆயில்யன் said...

//ஞாயிறு இரவு துன்பகரமானது. தூங்கிவிட்டால் இது பாழாய்ப்போன திங்களாக விடிந்துவிடுமென்பதால் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கிறேன்.//


எவ்ளோ சுதாரிப்பா இருக்கீங்க பாஸ் நீங்க வெரிகுட் :) #ஹிஹிஹிஹிஹிஹி

தமிழ்ப்பறவை said...

ஃபாலோ பண்்ணிக்கிட்டுதான் இருக்கோம். டிவிட்டுதான் வரமாட்டேங்குது உங்ககிட்ட இருந்து:)

அன்புடன் அருணா said...

அட!இப்பிடில்லாம் பதிவு போடலாமா???

சுசி said...

சுபாவுக்கு வாழ்த்துக்கள்..

முதல் ட்விட் சூப்பரேய்..

ஞாயிறு விழிப்பு :))))

பரிசல்காரன் said...

//*ஒடம்புக்கு முடியாம ரொம்ப யோசிச்சு ஆபீஸுக்கு லீவு போட்டு, ரெஸ்ட் எடுக்க படுக்கையில் விழுந்தவுடன் ஒரு தனி புத்துணர்வு ஏற்படுதே, எப்படி?///

அன்றைக்கே மிகவும் ரசித்த ட்விட்.

ஆதி-

ட்விட்டில் ஆக்டிவாக இல்லையென்றால் உங்களையெல்லாம் கணக்கிலே சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் சாமியோவ்...

கபர்தார்...!

Cable Sankar said...

mம்க்கும்.. ட்விட்டிட்டாலும்..

அன்பரசன் said...

//நேரமில்லைன்னா எப்படியெல்லாம் பதிவு போடவேண்டியிருக்கிறதப்பா..//

:)

இராமசாமி கண்ணண் said...

so நீங்களும் ட்விட்டரீங்களா... ஏங்க இன்னும் போட்டோவ மாத்தாம வெச்சிருக்கீங்க.. இந்த போட்டோவ மாத்தேலேன்னா அடுத்த பதிவுலேந்த் அங்கிள் ஆதின்னு கூப்ட்ருவேன் பார்த்துகுங்க :)

philosophy prabhakaran said...

Twitter, Facebook பற்றி அதிகம் தெரியவில்லை... நான் இன்னும் ஆர்குட்டிலேயே இருக்கிறேன்... எனவே twitter, facebook பற்றி தெரிந்துக்கொள்ள ஏதாவது சுட்டி இருந்தால் உதவுங்களேன்...

டம்பி மேவீ said...

அண்ணே எனக்கு ஆபீஸ் போனால் தான் புத்துணர்ச்சியா இருக்கு ....

நல்ல பதிவுண்ணே ..

நாங்களும் டிவிட்டர் ல இருக்கிறோம் . ஆனால் ஞாயிறு மட்டும் தான் உலா வர முடித்து இப்பெல்லாம்

Balaji saravana said...

மீள்பதிவு ( ட்விட்டர் - ப்ளாக் ) நியூ பார்மட்?!
:)

Mahesh said...

//ஒரே நேரத்துல ‘கிழக்கு’ல இருந்து என்னோட மூணு புக்கு போடறாங்களாம்.//

வேஸ்ட்டு... கனவு காணக்கூட தெரியல.... நாங்கள்லாம் 30 புக்கு போட்டு "புக்கர்" ப்ரைசெல்லாம் வாங்கியாச்சு.

தியாவின் பேனா said...

ஆகா ரொம்ப நல்லாயிருக்கு

ஜானி வாக்கர் said...

//பிரிகேஜி மிஸ் பூங்குழலியை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது.//

தொட்டில் பழக்கம் ....
அப்பா ஓவர் ஜொள்ளு விடாதீங்க என்று வாரிசு அறிவுரை சொல்லுற அளவுக்கு நிலமை போகாதுன்னு நெனைக்குறேன்.

நர்சிம் said...

//*என்னதான் அழகியல், இலக்கியம், இருப்புச்சட்டி என்று பேசினாலும்.. எடுத்தோமா, படித்தோமா, முடித்தோமா என்ற அனுபவத்தைத் தருபவை கிரைம் நாவல்களே//

சூப்பர்.

ஒப்பேத்தலேதான்.

நானும் கடைய திறக்கவே முடியல.

பார்ப்போம்.

முரளிகண்ணன் said...

கலக்கல் டுவிட்டுகள்

நாடோடி இலக்கியன் said...

kalakkal.
:)

மறத்தமிழன் said...

ஆதி,

சில ட்விட்டுகளில் உங்க டச் தெரிகிறது.

அப்படியே உங்க கனவு நனவாக வாழ்த்துகள்...

Ibrahim A , said...

"ட்வீட் சாப்பிடுங்க!" என்ற தலைப்பில் நானும் கொஞ்சம் இது போல முயன்றிருக்கிறேன்
நேரமிருந்தால் படித்து பாருங்கள்.

http://rojavinkadhalan.blogspot.com/2010/10/blog-post.html

கார்க்கி said...

வீட்டுல திட்டுறாங்கன்னு சொன்னிங்க.. நீஙக் ட்விட்டுறத சொலல்லயே

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி ஆயில்யன்.

நன்றி தமிழ்ப்பறவை. (பிளாக்குக்கே
நாக்கு தள்ளுது பாஸ். நேரமில்லை)

நன்றி அருணா.

நன்றி சுசி.

நன்றி பரிசல். (முடியல பரிசல். போவுது விடுங்க)

நன்றி கேபிள்.

நன்றி அன்பரசன்.

நன்றி இராமசாமி.

நன்றி பிரபாகரன். (யாருகிட்ட என்ன கேள்வி கேக்குறீங்க? ஹிஹி)

நன்றி மேவீ.

நன்றி பாலாஜி.

நன்றி மகேஷ். (ஹிஹி)

நன்றி தியா.

நன்றி ஜானி.

நன்றி நர்சிம்.

நன்றி முரளி.

நன்றி இலக்கியன்.

நன்றி மறத்தமிழன்.

நன்றி இப்ரஹீம்.

நன்றி கார்க்கி.

ஆதிமூலகிருஷ்ணன் said...

.