Thursday, October 28, 2010

போர்க்களம்

கம்ப்யூட்டர் கேம்ஸ் பிரியர்கள், குறிப்பாக 'தன்னிலை ஷூட்டர்' வகைகளை விரும்பி விளையாடுபவர்கள் 'கால் ஆஃப் ட்யூட்டி' (Call of Duty) தொடர்களின் பைத்தியமாக இருப்பார்கள். ஒன்றை விளையாடி முடித்துவிட்டால் அடுத்த ரஜினி, கமல் படங்களுக்குக் காத்திருப்பதைப்போல அடுத்த பகுதிக்காக ஒன்றிரண்டு வருடங்கள் காத்திருக்கவேண்டியது வரும். அவர்களால் பிற கேம்களை கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாது. ஏனெனில் 'கால் ஆஃப் ட்யூட்டி'யின் பர்ஃபெக்ஷனும், வீச்சும் அந்த அளவில் வீரியம் கொண்டது.

medal_of_honor

இந்நேரத்தில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான‌ ஒரு செய்தி சொல்கிறேன். இந்த அக்டோபரில் வெளியாகியுள்ள 'மெடல் ஆஃப் ஹானர்' (Medal of Honor) (இதற்கு துணைப்பெயர் வைக்கப்படவில்லை, இந்த கேம் அறிமுகமாகி பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி முதல் அறிமுகத் தலைப்பிலேயே வெளியாகியுள்ளது) மற்றும் கடந்த மார்ச்சில் வெளியான 'பேட்டில் ஃபீல்ட் : பேட் கம்பெனி 2' (Battlefield : Bad company 2) இரண்டும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. இவை இரண்டும் விளையாடும் அனுபவம் கிட்டத்தட்ட 'கால் ஆஃப் ட்யூட்டி'யைப் போலவே உள்ளது. அதையே இவற்றின் பிளஸ் பாயிண்டாகவும், மைனஸ் பாயிண்டாகவும் குறிப்பிடலாம். டெக்னிகலாகவும், கிராஃபிக்ஸிலும் உச்ச அனுபவத்தைத் தருவதில் வெற்றியைத் தொட்டிருக்கிறார்கள்.

battlefield-bad-company-2-hd-wallpaper3

இவ்வேளையில் கால் ஆஃப் ட்யூட்டியின் அடுத்த பகுதி 'பிளாக் ஆப்ஸ்' (Call of Duty : Black Ops) இந்த நவம்பரில் வெளியாக இருப்பது இன்னும் எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Black-Ops-Wallpaper- (4)_760x480

மேற்குறிப்பிட்ட கேம்களையோ அல்லது இவ்வகையைச் சார்ந்த பிற‌ கேம்களையோ விளையாடும் ஆர்வம் கொண்டு புதிதாக முயற்சிப்பவர்கள் 'பிளேஸ்டேஷன் 3' (Sony's Playstation 3) மற்றும் 'X பாக்ஸ் 360' (Microsoft's X Box 360) கான்சோல்களை நாடலாம். என்னைப்போன்ற கொஞ்சம் சிக்கனக்காரர்கள் கணினியில் முயற்சிப்பதாக இருந்தால் அவர்கள் தங்கள் கணினியில் குறைந்த பட்சமாக ‘ரேம்’ (RAM) 1 GB யாகவும்,  கிராஃபிக்ஸ் கார்டு Nvidia Geforce8400 அல்லது அதற்கு மேலான திறன் கொண்டவையாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். Feel and Try to Survive in these Virtual Worlds.!

11 comments:

கலாநேசன் said...

தலைப்பை பார்த்ததும் பதிவுலகம் பற்றியோன்னு நினைத்தேன். விளையாட்டா.....விளையாடுவோம்.

vinu said...

inthaa games laptopla play panna mudiyumaaaaaaaaaaaaaaaaa

பொன்கார்த்திக் said...

@vinu said...

inthaa games laptopla play panna mudiyumaaaaaaaaaaaaaaaaa

you can play i already played lot of versions and completed.

Cable Sankar said...

வெள்ளாட்டு புள்ளைங்கப்பா.. ஹி..ஹி.. நானும்தான்.. ஆனா நான் பொண்ணுங்க ஹீரோவா வர.. டாம்ப் ரைடர் மாதிரிதான் ஆடுவேன்.. எவ்வளவு நேரம் தான் சுட்டுகிட்டே யிருக்கிறது.. ஹி..

கக்கு - மாணிக்கம் said...

என் சிஸ்டம் இப்பி 64 bit ஆ மாறி போச்சு. பழைய கேம்ஸ் எதுவும் தெறக்க மாட்டேங்குது.
நம்ம கூகிள் எர்த் கூட அப்படித்தான்.
இன்னா பண்ணிகிறது வாஜாரே !?!

நர்சிம் said...

ரைட்ட்ட்டு ஆதி

ஆதிமூலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவுக்கு கூட்டம் கம்மியாத்தான் வரும்னு தெரியும். ஆனாலும் இவ்வளவு கம்மியா வரும்னு தெரியாது. ஹிஹி.. அனைவருக்கும் நன்றி.

வினு : முடியும், தகுந்த கிராஃபிக்ஸ் கார்டு இருந்தால்.!

கேபிள் : சுட்டுக்கொண்டே// இந்த கேம்ஸ்ஸை நீங்க பார்த்தது கூட இல்லைன்னு தெரியுது. ஹிஹி.!

சுசி said...

இன்னமும் அந்த பேர் க்ரில்ஸ் பார்த்த.. (உவ்வே.. மனுஷனா அவரு..) அதிர்ச்சி போகலை..

இப்போ இதுவா. ரைட்டுங்க!!

Vijay Armstrong said...

ஆகா..'video games'ஐப் பற்றிய பதிவு, அதுவும் எனக்கு ரொம்ப பிடித்த கேமைப்பற்றிய பதிவு..புதியதாக எதைவாங்குவது என்று காத்துக்கொண்டிருந்தேன். தகவலுக்கு நன்றி..தொடர்ந்து இதைப்பற்றி எழுதுங்கள்..

நான் 'PSP'-யில் விளையாடுவேன்..எந்த பயணத்திலும் அது என்னுடன் இருக்கும்.

DHANS said...

modern warfare 2 ஏற்கனவே முடிச்சாச்சு medal of honor இன்னும் வாங்கல, PS3 கேம்ஸ் காஸ்ட்லியா இருக்கு :(

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி கலாநேசன்.
நன்றி வினு.
நன்றி பொன்கார்த்திக்.
நன்றி கேபிள்.

நன்றி மாணிக்கம். (யாராவது தெரிஞ்சவங்களைக் கேளுங்க, நான் ஸாஃப்ட் ஆள் இல்லை :-))

நன்றி நர்சிம்.
நன்றி சுசி.
நன்றி விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்.
நன்றி தன்ஸ்.
நன்றி வினு.
நன்றி வினு.
நன்றி வினு.
நன்றி வினு.