Friday, October 29, 2010

கொஞ்சம் பெருமை, நிறைய மகிழ்ச்சி

ஏற்கனவே பார்க்காத சில நண்பர்கள் வலுவில் இழுத்துச்சென்றதால் இரண்டாவது முறையாக எந்திரன் பார்க்க நேர்ந்தது. என்னதான் டான்ஸ், ஃபைட்டுக்கெல்லாம் கூட டூப் போட்டிருந்தாலும் படத்திற்கான ரஜினியின் உழைப்பு என்பது பிரமிப்பானது. கண்ணன் சொன்னது : பட ஷூட்டிங்கில் நிச்சயமாக ஒரு முறையாவது நினைத்திருப்பார் ‘பேசாமல் கண்டக்டராகவே இருந்திருக்கலாமோ?’ அல்லது ‘இந்த படத்தைக் கமிட் செய்தற்குப் பதிலாக இமயமலைக்காவது போயிருக்கலாமோ?’ Hats off to our real Super Star.!
--------------
தயக்கம் நிறைய இருப்பினும் ஒருவித நம்பிக்கையில் அறிவிக்கப்பட்டதுதான் ‘சவால் சிறுகதை’ப் போட்டி. விதம் விதமான கருத்துகளை நண்பர்கள் தெரிவித்திருந்தாலும் 83 கதைகள் போட்டிக்காக வந்ததில் நானும், பரிசல்காரனும் கொஞ்சம் பெருமையிலும், நிறைய மகிழ்ச்சியிலும் இருக்கிறோம். நடுவர்கள் தீவிர பரிசீலனையில் இறங்கியிருக்கிறார்கள். சொன்னபடி வெற்றிபெற்ற கதைகளுடனும் பரிசுகளுடனும் நவ.15ல் சந்திக்கிறோம். நன்றி அனைவருக்கும்.
--------------
மானேஜர்களின் இரண்டே வகையினர்தான் உண்டு. முதல் வகை 'வேலையை விட்டுப் போய்த் தொலையலாமா.?' (அதாவது வேறு வேலைக்குப் போய்த்தொலையலாமா?) என எண்ண வைப்பவர்கள். இன்னொரு வகை 'வேலையையே விட்டுப் போய்த் தொலையலாமா.?' (அதாவது எங்காவது சந்நியாசம் வாங்கிக்கொண்டு அப்படியே போய்ச் சேர்ந்துவிடலாமா?) என நினைக்க வைப்பவர்கள். இதில் நீங்கள் எந்த வகையில் இருக்கிறீர்கள்? அல்லது உங்கள் மானேஜர் எந்த வகையையில் இருக்கிறார் என்பதை கொஞ்சம் திங்க் பண்ணிவைத்துக்கொள்ளுங்கள், இந்த அப்ரைசலுக்குப் பயன்படும்.
---------------
'கிரா' என் ஆதர்சமாக இருந்தும் அவரது 'கோபல்ல கிராமத்'தை இத்தனை நாட்களாக படிக்காமல் இருந்த பாவத்தைப் போக்கிக் கொண்டுவிட்டேன். சென்ற வாரம் ஒரே சிட்டிங்கில் நாவலை முடித்துவிட்டேன். இதன் இரண்டாம் பாகமான சாகித்ய அகாதெமி விருது பெற்ற 'கோபல்லபுரத்து மக்களை'ப் படிக்கத் துவங்கியுள்ளேன். அதையும் முடித்துவிட்டு உணர்வுகளை மொத்தமாகப் பகிர்ந்துகொள்கிறேன்.
----------------
பதிவுலகில் யாரிடமும் மிக நெருக்கமாக வராமலும், அதே சமயம் யாரைவிட்டும் விலகிச் சென்றுவிடாமலும் இருக்கும் செல்வேந்திரன் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர். கொஞ்சமாகவே எழுதினாலும் அவரது பகிர்வுகள் கொஞ்சம் ஹாட்டாகவும், நிறைய ரசனையோடும் இருப்பவை. 'ஹாட்' என நான் குறிப்பிடுவது உண்மைக்கு நெருக்கமாக.. ஆகவே சிலரின் மாற்றுக்கருத்துகளை எப்போதும் அவர் எதிர்கொண்டே வருகிறார். அவர், முடிந்தவரை இழுத்தடித்துக் கொண்டு இருந்துவிட்டு இப்போது வளைத்துப் பிடிக்கப்பட்டதால் இந்த நவம்பரில் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் வைத்து தன் காதலைக் கரம் பிடிக்க இருக்கிறார். மணக்காட்சியைக் காண போக இயலுமா தெரியவில்லை. அவருக்கு நம் மனப்பூர்வமான நல்வாழ்த்துகள்.
----------------
வாசகர் சாட் :
(ஹிஹி.. வாசகர் கடிதம் போடுறதுதான் இப்போதைக்கு ட்ரெண்ட். நானும் போடலாம்னு பாத்தா அப்படி ஒரு வஸ்து நமக்கு வருவதாகத் தெரியவில்லை. அதான் அட்லீஸ்ட் பொன் வைக்கிற இடத்தில் பூ வைக்கிற மாதிரி ஒரு வாசகருடன் சென்ற வாரம் பண்ணிய சாட்டைப் போடுகிறேன். பொறுத்துக்குங்க)

Santhosh: aathi sir.. irukkeengala.?
23:18 me: வணக்கம். சொல்லு்ங்க சந்தோஷ்
Santhosh: Its surprise.
23:21 me: எது?
Santhosh: Pinnuranga sir.
23:24 me: எதை? யாரு?
Santhosh: enga canteenla innikki paruppu soupum, morkulambum. kalakkal combo.
23:25 me: ஓஹோ, தேங்க்ஸ் ஃபார் தி அப்டேட்.
Santhosh: :)
23:26 me: பைபை.
Santhosh: enna sir, athukkulla kilampureenga? naa unga time vest panrana?
23:29 me: சேச்சே. அப்பிடில்லாம் இல்ல, சொல்லு்ங்க சந்தோஷ்
Santhosh: appa neengalum summathan irukkeengala?
23:29 me: ஆமா, அது.. அப்படியில்ல.. இல்லை.
Santhosh: unga blog sooper.
23:31 me: எதைச் சொல்றீங்க சந்தோஷ்.?
Santhosh: bloggathaan solren.
23:32 me: இல்ல எந்த ஆர்டிகிள்னு கேட்டேன்.
Santhosh: ஓகே பைபை.
23:35 me: அலோ.. சந்தோஷ்
23:39 me: அலோ.. அலோ..

.

31 comments:

பரிசல்காரன் said...

ஹை மீ த ஃபர்ஸ்ட்!

பரிசல்காரன் said...

செல்வாவுக்கு எனது வாழ்த்துகளும்.

வாய்யா.. ஒரு எட்டு போய்ட்டு வருவோம்..

(நெஜமாவே ‘எட்டு’தான். எட்டு மணிநேரமாகுமாம் இங்கிருந்து!)

தமிழ்ப்பறவை said...

ச்சாட் நல்லா இருந்தது :)

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துகள் செல்வேந்திரன்..

சுசி said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன்.

ஆதி.. :))))))))))))))

அன்புடன் அருணா said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன் பூங்கொத்துடன்!
சாட்...ஹாஹாஹா! பாவம் நீங்க!

வெறும்பய said...

வாழ்த்துக்கள் செல்வேந்திரன்..

V.Radhakrishnan said...

நன்றாக இருக்கிறது. செல்வேந்திரனின் பக்கம் பார்க்க வேண்டும்.

இனியா said...

chat super thamira!!!

Balaji saravana said...

சாட் கலக்கல் :)
உங்க கிட்ட இருந்து எடுத்த ஒரு தலைப்புல ( கொடுங்கனவு ) ஒரு கவிதை எழுதியிருக்கேன்..
கொஞ்சம் வாங்க அண்ணே..
http://balajisaravana.blogspot.com/2010/10/blog-post_29.html

மின்னுது மின்னல் said...

மேனேஜர் ஆக வாழ்த்துக்கள் :)

பதிவு காதலிக்கு எழுதும் கடிதம் போல் இருக்கு சூப்பர்

சிநேகிதி said...

சாட் ரசிக்கும் படி இருக்கிறது

நர்சிம் said...

செல்வாவுக்கு வாழ்த்துகள்.

சிறுகதைப் போட்டிக்கும் வாழ்த்துகள்

வாசகர் சாட்டுக்கு வாழ்த்துகளோ வாழ்த்துகள்.

நேசமித்ரன் said...

உங்கள் அபௌட் மீ வாசகத்தை மெய்ப்பிக்கிறீர்கள்

அறிவிலி said...

unga blog sooper.

அலைகள் பாலா said...

//innikki paruppu soupum, morkulambum. kalakkal combo.
//
அட்ரஸ் வாங்காம விட்டுடிங்களே

vinu said...

தயக்கம் நிறைய இருப்பினும் ஒருவித நம்பிக்கையில் அறிவிக்கப்பட்டதுதான் ‘சவால் சிறுகதை’ப் போட்டி.

appa inimeaa rivikkum pothuuuu intha thayakkam varaathunnu sollungaa

ரவிச்சந்திரன் said...

வாசகர் சாட் கலக்கல்....

காவேரி கணேஷ் said...

எழுத்துலக மார்கண்டேயன் செல்வாவிற்கு வாழ்த்துக்கள், அதுவும் காதலியை கரம்பிடிக்கும் சந்தோசமே தனி.

வாழ்த்துக்கள் செல்வா..

சிறுகதை போட்டியெல்லாம் சரி, அத்த படிக்கிறவங்களுக்கு ஏதேனும் பரிசு இருக்கா?

Rajalakshmi Pakkirisamy said...

வாழ்த்துகள் செல்வேந்திரன்

சாட் :) :) :)

Cable Sankar said...

aloo.. கணேஷு.. எவன்யா சொன்னது காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்திருக்கிறன் ச்ந்தோஷமா இருப்பான்னு.. :)

Cable Sankar said...

aloo.. கணேஷு.. எவன்யா சொன்னது காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்திருக்கிறன் ச்ந்தோஷமா இருப்பான்னு.. :)

Gopi Ramamoorthy said...

\\83 கதைகள் போட்டிக்காக வந்ததில்\\

அப்போ நான் எளுதினது எல்லாம் கதைன்னு ஒத்துக்குறீங்க. நீங்க ரொம்ப நல்லவர் ஆதி.

பிரதீபா said...

செல்வேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!

சந்தோஷ் பேசறதா சொல்லி நல்லா மோனோ ஆக்டிங் பண்றீங்க(இதையும் கண்டுபுடிச்சிருவோமே).. புது முயற்சி, ரொம்ப ரசிக்கும்படியா இருக்குங்க !!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
நானும் போடலாம்னு பாத்தா அப்படி ஒரு வஸ்து நமக்கு வருவதாகத் தெரியவில்லை
//
மெயில் ஐடீ please..........

Venky said...

ஹை மீ த Last

SELVENTHIRAN said...

கண்ணுக்குத் தெரியாத அன்பின் இழைகளால் எப்போதும் நாம் இழுத்துக்கட்டப்பட்டிருக்கிறோம். கல்யாணத்திற்கு நீர் நிச்சயம் வரவேண்டும். அப்துல்லா அண்ணன் தலைமையில் ஓர் அணியும், தண்டோரா அண்ணன் தலைமையில் மற்றொர் அணியும் திருச்செந்தூர் வர இருக்கிறார்கள்.

வாழ்த்திய சக ஹிருதயர்களுக்கும் என் அன்புகள்...

அன்னு said...

//இல்ல எந்த ஆர்டிகிள்னு கேட்டேன்.//

ஒரு வாசகன் சொல்றதை நம்பாம இப்படியெல்லாம் பின்ன கேள்வி கேட்டா...??

காமெடி...பதிவு இல்ல, சாட்..!! ஹிந்தில 'சாட் தியா'ன்னு சொல்லணும் ...இதுக்கு :))

RVS said...

வாசகர் சாட் நல்லா இருந்தது. அப்படியே வாசகர் மெயில், வாசகர் பதிவு அப்படின்னு ஆரம்பிச்சுட வேண்டியதுதானே. ;-) ;-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி பரிசல். (வீக் டேஸ்ல முடியாது பரிசல் :-( )

நன்றி தமிழ்ப்பறவை.
நன்றி அஹமது.
நன்றி சுசி.
நன்றி அருணா.
நன்றி வெறும்பய.
நன்றி ராதாகிருஷ்ணன்.
நன்றி இனியா.

நன்றி பாலாஜி. (கொஞ்சம் வேலைப்பளு பாலாஜி. நேரமிருக்கையில் நிச்சயம் வருகிறேன்)

நன்றி மின்னல்.
நன்றி சிநேகிதி.
நன்றி நர்சிம்.
நன்றி நேசமித்திரன்.
நன்றி அறிவிலி.

நன்றி பாலா. (:-) )

நன்றி வினு.
நன்றி ரவிச்சந்திரன்.
நன்றி காவேரிகணேஷ்.
நன்றி ராஜலக்ஷ்மி.
நன்றி கேபிள்.

நன்றி கோபி. (:-) )

நன்றி பிரதீபா.
நன்றி யோகேஷ்.
நன்றி வெங்கி.
நன்றி செல்வேந்திரன்.
நன்றி அன்னு.
நன்றி RVS.

Gopi Ramamoorthy said...

\\சொன்னபடி வெற்றிபெற்ற கதைகளுடனும் பரிசுகளுடனும் நவ.15ல் சந்திக்கிறோம். \\

தாமதமாவது தவறே இல்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாவது சொல்ல வேண்டும் அதை என்பது என் கருத்து.