Monday, October 18, 2010

ஆஃபீஸ் Vs அரசியல் மீட்டிங்ஸ்

டாபிக்கை ஆரம்பிக்கும் முன், பெரிசா பில்டப் பண்ணினா தேடி வந்து ஒதைப்பேன்னு ஒரு முக்கிய பதிவர் மிரட்டியுள்ளதால் நேரடியாக விஷயத்துக்குப் போய்விடுவோம்.

10. ஆபிஸ் மீட்டிங்குக்கு கூட்டம் சேர்ப்பது எவ்வளவு கடினமோ அதே கடினம்தான் அரசியல் மீட்டிங்குக்கு ஆள் சேர்ப்பதும். என்ன ஒண்ணு, சைஸ்தான் வித்தியாசம்.

09. அங்கே பேப்பர் விளம்பரம், போஸ்டர், ஆட்டோ அலறல்கள் எனில் இங்கே இண்டர் மெயில்கள், ரிமைண்டர்கள் கடைசி நேர போன்கால்கள். அப்படியும் எதிர்பார்த்த அளவில் கூட்டம் சேராது.

08. அங்கே பிரியாணி, கோட்டர் என்றால் இங்கே பிஸ்கெட்ஸ், டீ. சமயங்களில் மிரட்டல்களும் உண்டு.

07. பேசுபவர்களை உற்றுக் கவனித்தோமானால் கொஞ்சம் பைத்தியம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது இரண்டிலுமே.. தேமே என்று இருந்துவிட்டு கடைசியில் கைதட்டிவிட்டு போய்விடுவது நல்லது.

06. இரண்டு மீட்டிங்குமே யாரோ ஒருத்தரின் பொழுதுபோக்குக்காகவே கூட்டப்படுகிறது. அவர் தன் சாதனைகளாக கருதுவதை பிறருக்கு விளக்கவே இந்தப்பாடு.

05. அல்லக்கைகள் சப்போர்ட் இரண்டுக்குமே ரொம்ப அவசியம்.

04. இரண்டிலுமே கேட்டுக் கொண்டிருப்பவர்கள் தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. குறைந்தபட்சம் கொட்டாவி நிச்சயம்.

03. எப்போதாவது அதிசயமாய் இங்கே திட்டமிடல், அங்கே தேர்தல் பிரச்சாரம் என நடத்தப்படும் மீட்டிங்குகளின் போது பேசுபவர்கள் கேட்பவர்களிடம் பணிந்து செல்வதும் உண்டு.

02. வாய்ஜாலம் மிக்கவர்கள் முன்னேற மிக நல்ல வாய்ப்பாக இருப்பது இவ்வாறான மீட்டிங்குகளே.

01. நோக்கம் துளியளவும் பிரயோஜனம் உள்ளதா என்றால், ஊஹூம்.. ஸாரி, இரண்டிலுமே.!

(மீள்பதிவு).

21 comments:

இராமசாமி கண்ணண் said...

தல பதிவுக்கு அப்புறம் கமெண்டு.. தம்பிக்கு எந்த ஊரு ரஜினி மாதிரி இருக்கற போட்டோவ ஏன் மாத்தீனிங்க.. மொதல்ல அத போட்டுட்டு அப்புறம் பதிவ போடுங்க...

இராமசாமி கண்ணண் said...

இந்த போட்டோல கொஞ்சம் ஆண்பாவம் பாண்டியராஜன் ஜாடை தெரியுது .. மொதல்ல போட்டோவ மாத்தூங்க....

இராமசாமி கண்ணண் said...

ஒரே ஒரு வித்தியாசம் கொஞ்சம் குண்டான பாண்டியராஜன் மாதிரி இருக்கு ....அம்முட்டுதான்

sriram said...

பிரபலம்..
அடுத்த பதிவு அரசியலில் மகளிர் அணி VS ஆபிசில் மகளிர் அணியா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

இ.க..
உமக்கு மட்டும் பதிவு போட்டா எப்படி ஐயா மூக்கில வேர்க்குது..
ஒடனே ஓடி வந்து வடையை பறிச்சிக்கிட்டு போயிடரீங்க??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

vinu said...

இந்த வாரம் என்ன மீள்பதிவு வாரமா????????????????????

Balaji saravana said...

இது டெம்ப்ளேட் மாற்றும் வாஆஆரம்... கூடவே மீல்ஸ் போடும் வாஆஆரம்...
//அஹம் ரஸனையாஸ்மி// :)

shyam said...

Hi, your article review is nice. Your new template is not much attractive than before. But separation of label is good.அஹம் ரஸனையாஸ்மி meaning.I donot know.

தராசு said...

அஹம் மீள்பதிவாஸ்மி

அன்னு said...

//06. இரண்டு மீட்டிங்குமே யாரோ ஒருத்தரின் பொழுதுபோக்குக்காகவே கூட்டப்படுகிறது. அவர் தன் சாதனைகளாக கருதுவதை பிறருக்கு விளக்கவே இந்தப்பாடு.//

இந்த மாதிரி மீட்டிங்குகளுக்காக இப்ப அடிக்கடி கஷ்டத்தை அனுபவிக்கிறது கோவை மக்கள் போலத்தான் தோணுது!!

:((

But, Good post. Thanks for sharing bro.

வானம்பாடிகள் said...

டெம்ப்ளேட் ரசனை:)).

நர்சிம் said...

ஸ்ரீராமா..எத்தன நாள் கொலவெறிய்யா இது??? ;)

ஆதி கடைசி பாயிண்ட் அல்லது முதல் பாயிண்ட் நச்.

நர்சிம் said...

எனக்குத்தான் அப்பிடி. உங்களுக்கு என்ன வந்துச்சு.. டெம்ப்ளேட்ல எஸ்ரா ஸ்டைல்ல புக்கப்பி(ப)டிச்சு போட்டோ பிடிச்சு போட்ற வேண்டியதுதானேய்யா..

உங்க வாசகரின் வேண்டுகோள் இது.

விக்னேஷ்வரி said...

ரெண்டுலேயுமே ரொம்ப அனுபவம்னு தெரியுது. நல்ல ஒப்பீடு. :)

சுசி said...

ஏழாவது சூப்பர்..

என்ன இந்த வாரம் வீடு மாறும் வாரமா??

SanjaiGandhi™ said...

நாட்டாமை தோர்ப்ப மாத்தி சொல்லு...

இரா.சிவக்குமரன் said...

ஹெர்பாலயாஸ் ராடி சேஃப் நிறுவனத்தின் திண்டிவனம்- விநியோகஸ்தருக்கு விற்பனை/சந்தைப் படுத்துதல் துறையில் ஆட்கள் தேவை.

http://www.herbalayasradisafe.com/


தகுதி:

ஏதேனும் ஒரு பட்ட படிப்பு.
இரு சக்கர வாகனம்(செல்லத்தக்க ஓட்டுனர் உரிமத்துடன்).
மொபைல் அல்லது கணிணி உதிரிப் பொருள்கள் சார்ந்த விற்பனை முன் அனுபவம்.

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்திருத்தல் நலம்.

கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.

விற்பனைத் துறையில் விருப்பமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை.


சம்பளம் தகுதியைப் பொறுத்து.(குறைந்தது ஐந்தாயிரத்திலிருந்து...... )


விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 31க்குள் தங்களது முழுவிவரக்குறிப்பினை shivanss@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மெயில் அனுப்பும் போது subject:ல் Resume-Radisafe என்று மறக்காமல் குறிப்பிடவும்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கண்ணன், (முதல் ஆளா வருவதும் இல்லாம கும்முறதுக்குன்னே வர்றாங்கையா..)

ஸ்ரீராம்,

வினு,

பாலாஜி,

ஷ்யாம்,

தராசு, (நேரமில்லை பாஸ்)

அன்னு,

வானம்பாடிகள்,

நர்சிம், (கொலைவெறி தெரியுது)

விக்னேஷ்வரி,

சுசி,

சஞ்சய்,

சிவக்குமரன்..

நன்றி.!

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன கூட்டம் கம்மியா இருக்குது. ஓ, மீள்பதிவா? அப்ப சரி.!

இராமசாமி கண்ணண் said...

ஆதி ஒரு சின்ன மேட்டர்.. நான் ராமசாமிதான்.. கண்ணண் என்னோட அப்பா :)

பரிசல்காரன் said...

செம!