Tuesday, November 16, 2010

சவால் சிறுகதைப் போட்டி - விமர்சனங்கள் (2)

'சவால் சிறுகதைப் போட்டி'யின் முதல் நாற்பது கதைகளுக்கான விமர்சனங்களை நண்பர் பரிசல்காரனின் வலைப்பூவில் இந்தப் பதிவில் காணலாம்.

----------------------------------------

41. கேரக்டர் காமினி - அன்னு

பதிவுலகையும் போட்டியையுமே மையக்கருவாக வைத்து வந்திருக்கும் மற்றுமொரு கதை இது. இதே கருவுடன் சிறப்பாக செய்திருக்க முடியும்.

ஆனால் போட்டி விதிமுறைகளின் படி கதையில் கனவு வரக்கூடாது. ஆனால் பாதியில் சிவா எழும்போது எல்லாம் காமினியில் கனவில் வருவது போல் சித்தரித்திருப்பதால் இந்த கதை போட்டியில் இருந்து வெளியேற்றப்படுகிறது


42. நண்பண்டா - இம்சை அரசன் பாபு

நல்ல கரு.. காமினி என்ற இன்ஸ்பெக்டர் வைரத்தை பிடிக்க அதை மீட்க அவள் மகளைக் கடத்தும் கடத்தல் கும்பல். எப்படி அவளது கணவனின் நண்பனின் சமயோஜிதத்தால் அனைவரும் காப்பாற்றப்படுகிறார்கள், கடத்தல் கும்பல் எப்படி பிடிபடுகிறது என்று அழகாக சொல்லியிருக்கிறார். வாரமலர் ஸ்டைல் நடையை மட்டும் கொஞ்சம் மாற்றி இருக்கலாம்.

43. ஜெயித்தது யார் - கோபி ராமமூர்த்தி

சவால் போட்டியையே மையமாக வைத்து வந்துள்ள கதைகளில் ஒன்று. சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் என்பதைத் தவிர்த்து சொல்வதற்கு எதுவும் இல்லை. போட்டிக்கான வரிகளை எழுதி மேலும் கீழும் பத்திகளை சாண்ட்விச் செய்து வந்துள்ள கதைகளில் இதுவும் ஒன்று.


44. வைர விழா - R V S

நல்ல கருவை அழகாக டெவலப் செய்திருக்கிறார்.. கதை முடிந்தது என்று நினைக்கும் வேளையில் ஹீரோயினே மீண்டும் திருட என்று விறுவிறுப்பாக ஆரம்பித்தது நல்ல முயற்சி.


45. நவம்பர் 5 versus நவம்பர் 15 - கோபி ராமமூர்த்தி

சவால் போட்டியையே மையமாக வைத்து வந்துள்ள கதைகளில் இன்னொன்று. அறிவிக்கப்படாத பி.ஆர்.ஓ-வாக இந்தக் கதைப் போட்டிக்கு இந்தக் கதையாசிரியர் இருந்திருக்கிறார் என நினைக்கிறோம். சவால் சிறுகதைப் போட்டிகள் குறித்தே எழுதப்பட்ட ஆறேழு கதைகளையும் எழுதியவரேதான் இந்தக் கதையையும் எழுதியிருக்க வேண்டும் என நடுவர்களாகிய நாங்கள் யூகிக்கிறோம். பரிசலே எழுதியிருக்கக் கூடும் என்பதும் எங்கள் எண்ணம்.


46. நடுநிசி மர்மம் - இரகுராமன்

நல்ல கதை, நடையும் நன்றாகவே உள்ளது. ரிப்போர்ட்டர்கள் காமினியும் சிவாவும் மருத்துவர்கள் இருவர் ஆராய்ச்சிக்காக பிச்சைக்காரர்களை உபயோகிப்பதைப் படமெடுத்து, அதை தங்கள் பாஸ் பரந்தாமனிடம் சேர்ப்பது என்று நல்ல விறுவிறுப்பாக செல்கிறது.

47. காமினி சி(வா)த்த மாத்தி யோசி - கே.ஜி.ஒய். ராமன்

பரந்தாமன் வரி ஏய்க்க வைரக் கடத்தலுக்கு காமினி உதவுகிறார். காமினியை கெட்டவளாக காட்டக்கூடாது என்ற போட்டியின் விதி மீறப்பட்டிருக்கிறது. எனவே இந்த கதை போட்டியில் இருந்து விலக்கப்படுகிறது.

48. காமினி - நசரேயன்

காமினியும் சிவாவும் வைரம் கடத்துகிறார்கள். சிரிக்க வைக்கிற நடைக்கு சபாஷ்.

ஆனால் காமினியை கெட்டவளாக காட்டக்கூடாது என்ற போட்டியின் விதி மீறப்பட்டிருக்கிறது. எனவே இந்த கதையும் போட்டியில் இருந்து விலக்கப்படுகிறது.

49. பரமு (எ) பரந்தாமன் - நான் ஆதவன்

ஒரு அக்ரஹாரத்தில் நாடகம் நடத்த செய்யப்படும் ஏற்பாடுகளையும் குழப்பங்களையும் சொல்லும் சற்றே பெரிய சிறுகதை. போட்டிக்கான வரிகள் கதையின் முக்கிய ஓட்டத்தில் இல்லாமல் அதற்குள் வரும் நாடகத்தில் இருப்பதாகக் காட்டியிருப்பதால் ஒட்டவில்லை. ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் நகைச்சுவைகள் நன்றாக இருக்கிறது. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.


50. காமினி, சிவா, பரந்தாமன், டாக்டர் மற்றும் நான் - நந்தகுமார் குருஸ்வாமி

சிறுகதைப்போட்டியையே வைத்து இருவர் பேசிக்கொள்கிறார்கள், இதை கதையாக கருத முடியுமா என்றே தெரியவில்லை. ஒரு பதிவாக வேண்டுமானால் ஏற்கலாம். மன்னிக்கவும். ஆனால் இவரிடம் முயன்றால் நல்ல நடையோட்டத்தில் கதை சொல்லும் திறமை இருக்கிறதாகப் படுகிறது.


51. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்

வைரக்கடத்தலில் ஈடுபட்டு மருத்துவமனையில் இருக்கும் மாலினியிடம் இருந்து அவளது தங்கை வைரத்தை எடுத்து பரந்தாமனிடம் சேர்க்கிறார் என்ற ஒன்லைனர் நன்றாக இருக்கிறது. கதையின் முதல் பாதியும் விறுவிறுப்பான நடையுடன் அருமையாக இருக்கிறது. இரண்டாவது பாதியை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் அருமையாக வந்திருக்கும். கதை சட்டென்று பாதியில் முடிந்தது போல ஒரு தோற்றம்.

நல்ல முயற்சி!


52. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா


ஒரு குடும்பத்தின் பரம்பரை வைரத்தைக் கடத்த நடக்கும் முயற்சியும் அதை அந்த வீட்டின் பெண்கள் முறியடிப்பதையும் பற்றிய கதை. சொல்ல வந்த கருத்தை அழகாக சொல்லி, போட்டிக்கு தேவையான வரிகளை சிறப்பாக உபயோகித்து வந்துள்ள சில கதைகளில் இதுவும் ஒன்று.


53. அழிவை நோக்கி விடியல் - ராஜகோபால்

போட்டிக்கான எந்த வரியும் கதையில் இல்லாததால் போட்டியை விட்டு இந்த கதை விலக்கப்படுகிறது. இந்தக் கதையை எங்களுக்கு வெறுமனே அனுப்பி வைத்தமைக்காக பரிசலுக்கு எங்கள் குட்டு.

54. விக்ரமுக்கு ஒரு சவால் - இரகுராமன்

போட்டியின் வரிகளை வரிசையாக எழுதி அதற்கு மேலும் கீழும் கதையை சாண்ட்விச் செய்து வந்திருக்கும் மற்றொரு கதை. கதைப்போட்டியைப் பற்றியே எழுதப்பட்டிருக்கும் கதைகளில் ஒன்றும் கூட...


55. திருடி - சாம்ராஜ்ப்ரியன்

காமினி, சிவா என்ற சிறுவர்களின் விளையாட்டை வைத்து போட்டிக்கு தேவையான வரிகளை கதைக்குள் நுழைத்திருக்கிறார். வித்தியாமான முயற்சி என்ற வகையில் பாராட்டுகள்.

56. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? - பார்வையாளன்

கதை எழுதும் ஆசிரியனுக்கும் கதையில் உள்ள ஒரு கதாபாத்திரத்துக்குமான உரையாடல் என்று சிறப்பாகவே வந்திருக்கிறது. கடைசியில் கதை முடியும்போது போட்டிக்கான வரி இன்னொரு முறை வருவது “அட” போட வைக்கிறது. வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தரும் கதை இது. பாராட்டுகள்

57. காமினி - அப்பாவி தங்கமணி

எமோஷனல் குடும்பக் கதை. தன் கணவன் கையாலேயே சுட்டுக் கொல்லப்பட்ட தன் குழந்தை உயிருடன் இருப்பதாக நினைத்துக் கொள்ளும் மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதை. போட்டிக்கான மூன்றாவது
வரி கதையுடன் ஒட்டவில்லை, வலிந்து திணிக்கப்பட்டதாக தோன்றுகிறது. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம்.


58. சிவா - ஸ்டார்ஜன்

பணவெறியில் தன் மகளையே கொல்லத் துணிந்து அவளை வைரக்கடத்தலிலும் ஈடுபடுத்தும் தகப்பனை மகளே கொல்கிறார். வழக்கத்தை விட கொஞ்சம் வித்தியாசமான இந்த கதையின் நடையை இன்னும் மெருகேற்றி இருக்கலாம்.

59. தொலைந்து போன நிஜங்கள் - HVL

காமினி தன் கணவன் சிவா மற்றும் அவனது சித்தப்பாவும் வைரக்கடத்தலில் ஈடுபடுத்துகிறார்கள். கிளைமாக்ஸில் வழக்கம்போல போலீஸ். போட்டிக்கான மூன்று வரிகளையும் அப்படியே ப்ளைனாக விவரித்து வந்துள்ள கதை.


60. காம்ஸ் - விசா

காமினியைக் காதலிக்கும் மூவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க அவளின் தந்தை சிறுகதைப் போட்டி வைக்கிறார். அது இந்த போட்டியைப் போன்றே விதிமுறைகள். இன்னும் நன்றாக முயற்சித்து இருக்கலாம்.


61. காம் + இனி = காமினி, கா + மினி = காமினி கோபி ராமமூர்த்தி

உலகில் அமைதி நிலவ காமினி அவதாரங்களை கடவுள்கள் படைக்கிறார்கள் என்ற ரீதியில் வித்தியாசமான சிந்தனை. போட்டிக்கான வரிகளை ஒட்ட வைத்தது போல மூன்று நிகழ்ச்சிகள் இரண்டிரண்டு வரிகளுடம் இருப்பது கொஞ்சம் அந்நியமாக படுகிறது, வித்தியாசமான கரு!


62. காமினி கொஞ்சம் சிரியேன் - கே. ஜி. கௌதமன்

மேடை நாடகங்களைப் போல சின்ன சின்ன ஜோக்குகளைக் கோர்த்து நடுநடுவே போட்டிக்கான வரிகளை எழுதி கதையை எழுத முயற்சித்திருக்கிறார். மிகவும் அவசரத்தில் எழுதியது போல் சட் சட்டென்று காட்சிகள் மாறி சீக்கிரமே முடிந்து விடுகிறது. வித்தியாசமான முயற்சி, நன்றாக செய்திருக்கலாம்.


63. காணாமல் போன கதை - நந்தா

எதிர்காலத்தில் கதை காணாமல் போன ஒருவன் துப்பறியும் நிறுவனம் மூலம் அதைத் தேட முயற்சிக்கிறான் என்று வித்தியாசமான களத்தில் சிறப்பாக ஆரம்பித்தாலும், முடிவு அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. இன்னும் சிறப்பாக செய்திருக்கவேண்டிய களம்.


64. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்

அமானுஷ்யம் கலந்து வேகமான நடையுடன் எழுதப்பட்டிருக்கும் கதை. ஆனால் தட்டச்சியதும் ரொம்ப வேகம் போல, எழுத்துப்பிழைகள் மிக அதிகம். ஒரு முறை ரிவ்யூ செய்து எழுத்துப்பிழைகளை சரிசெய்து நடையை இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருந்தால் அருமையாக இருந்திருக்கும். எதிர்பாராத முடிவு இந்த மைனஸ்களை ஓரளவுக்கு சரி செய்து விடுகிறது.


65. உண்மை சொன்னாள் - பிரியமுடன் ரமேஷ்

குழந்தைகளின் நடவடிக்கையில் இருந்து பெரியவர்கள் பாடம் கற்றுக் கொள்ளும் குடும்ப / சமூகக் கதை. தெளிவான நடை. நல்ல முயற்சி.


66. அதே நாள் அதே இடம் - சத்யா

காமினியின் காதலனாக சிவா நடித்து காமினியை வைரக் கடத்தலுக்கு உபயோகிக்க, போலீஸாரால் துரத்தப்படும் மற்றொரு கொலைகார கும்பலின் கார் மோதி கெட்டவர்கள் சாக, காமினி தப்பிக்கிறார். போலீஸ் ஆபிசர் சங்கர் கதையும் காமினி கதையும் தனித்தனியாக வர க்ளைமாக்ஸில் அழகாக இரண்டையும் முடிச்சி போட்டிருப்பது நன்றாக இருக்கிறது. நல்ல கதை, விறுவிறுப்பான நடை, யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ்.

67.பிரக்ஞை - ஸ்ரீதர் நாராயணன்

சீரியல் பார்க்கும் கணவனை ஓயாமல் திட்டும் மனைவி. போட்டிக்கான வரிகள் சீரியலில் வருவது போன்று வந்திருக்கும் மற்றொரு கதை. ஆனால் முடிவில் மனைவி மறதி நோயால் பாதிக்கப்பட்டவர் என்பதும் சீரியல் பார்க்க வைப்பது என்று நல்ல ட்விஸ்ட். ஒரே அறைக்குள் மொத்தமே மூன்று கேரக்டர்களுடன் கிரிஸ்ப்பாக இருக்கிறது. க்ளைமாக்ஸில் பதில் இருந்தாலும் சீரியல் குறித்து அவர்கள் பேசிக்கொள்வது கொஞ்சம் இழுவையாகவே இருக்கிறது.

சிறப்பான முயற்சி.

68. காடு வித்து கழனி வித்து - கிரி

டைரக்டர் கம் ப்ரொட்யூசர் சினிமா எடுக்க படும் கஷ்டங்களும், திருட்டு விசிடி வேண்டாம் என்ற மெஸேஜுடனும் வந்திருக்கும் கதை. கொஞ்சம் வித்தியாசமாக இந்த கதையில் அவர்கள் எடுக்கும் ஷாட்களில் போட்டிக்கான வரிகள்


69. எந்திரன் - நீச்சல்காரன்

கதை குழப்பம்.. ஒவ்வொருவரும் எந்திரன் எந்திரன் என்று பேசும்போது யார் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. இன்னும் சிறப்பாக முயற்சித்து இருக்கலாம். டாபிகலாக இருப்பது கதையின் ப்ளஸ்!


70. கம் ஆன், காமினி - அனு

குறிப்புகளை வைத்து வைரம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கதையும் எதிர்பாராத முடிவும் நன்றாக இருக்கிறது. தொய்வில்லாத நடையும், அடுத்தது எப்படி கண்டுபிடிப்பாரோ என்ற எதிர்பார்ப்பும் கதையை சிறப்பாக கொண்டு செல்கின்றன. நல்லதொரு கதை.

71. காமினியின் கென்னல் டைமண்ட் - கதிர்


காமினியை நாயாக சித்தரித்து நாய்களின் காதலைப் பற்றி பேசும் கதை. உண்மையில் கதையின் தலைப்பில் கென்னல் என்பதும் அங்கங்கே நாய்களைப் பற்றிய விவரிப்பும் இல்லாமல் படிப்பவர்களை காமினி என்பது பெண் என்றே நினைக்க வைத்து முடிவில் நாய் என்பதாக காட்டி இருந்தால் அட்டகாசமான ஒரு எதிர்பாரா முடிவு கதை கிடைத்திருக்கும். பாதி கதை வரை அப்படியே நினைக்கவைக்கிறது. இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம். நல்ல முயற்சி.

72. மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி - கிரகம்

தெலுங்கானா பிர‌ச்சினையை மைய‌மாக‌ வைத்து எதிர்கால‌த்தில் ந‌ட‌ப்பதாக‌ புனைய‌ப்ப‌ட்டுள்ள‌ க‌தை. வித்தியாச‌மான‌ க‌ள‌ம், சின்ன‌ சின்ன‌தாய் வித்தியாச‌மான‌ சிந்த‌னைக‌ள் என்று ந‌ன்றாக‌வே எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து. தெலுங்கானா கோரிக்கைக்காக‌ போராடுப‌வ‌ர்க‌ள் முத‌ல்வ‌ரைக் கொல்ல‌ முய‌ற்சிப்ப‌தும் அது முறிய‌டிக்க‌ப்ப‌டுவ‌தும் என்று வித்தியாச‌மான‌ க‌தைக்க‌ருவை இன்னும் சிற‌ப்பாக‌ டெவ‌ல‌ப் செய்திருக்க‌லாம். ஆங்காங்கே லேசான‌ தொய்வு தெரிகிற‌து. எழுத்துப் பிழைக‌ளையும் ச‌ரி செய்திருக்க‌லாம். ந‌ல்ல‌ முய‌ற்சி,

73. சிகப்பு கலர் புடவை - கவிதா கெஜானனன்


சாமானிய‌ர்க‌ளை மிர‌ட்டி வைர‌க்க‌ட‌த்த‌லுக்கு உப‌யோக‌ப்ப‌டுத்தும் ப‌ர‌ந்தாம‌னை காமினியும் சிவாவும் பிடிக்கிறார்க‌ள் என்ற‌ ஒன்லைன‌ர் ந‌ன்றாக‌வே டெவ‌ல‌ப் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. க‌தையின் போக்கு கொஞ்ச‌ம் மெதுவாக‌ இருப்ப‌தும், யூகிக்க‌ முடிகிற‌ முடிவும் மைன‌ஸ். எழுத்துப்பிழைக‌ளை த‌விர்த்திருக்க‌லாம்.

74. அம்மா அருள் காமி-நீ! - மாதவன்

காமினி பெய‌ர்க்கார‌ண‌த்தில் இருந்து க‌தை தொட‌ங்குகிற‌து. டாக்ட‌ராக‌ வேலை செய்யும் காமினி திருடு போன‌ அம்ம‌ன் ந‌கைக‌ளை க‌ண்டுபிடித்து சேர்ப்ப‌தாக‌ செல்கிற‌து க‌தை. ஆங்காங்கே புன்ன‌கைக்க‌ வைக்கும் வ‌ரிக‌ள் ப‌ல‌ம். த‌னித்த‌னியாக‌ நிற்கும் ஒட்டாத‌ ந‌டை, நீண்ட‌ விள‌க்க‌ங்க‌ள், எழுத்துப்பிழைக‌ள் எல்லாம் மைன‌ஸ். ஆனாலும் நடைக்கு ஒரு ஷொட்டு!


75. காமினியிலும் எந்திரன் - ராஜகுரு பழனிசாமி

இதே கதையை ஏற்கனவே விமர்சித்திருக்கிறோம். இரண்டாவதாகவும் வேறு தலைப்பில், வேறு எண்ணிடப்பட்டு வந்திருக்கிறது. எப்படி என்று தெரியவில்லை.

ஒருவரே ஒரு கதைக்கு மேல் எழுதலாம் என்பது விதிதான். ஆனால் ஒரே கதையை இரண்டு முறை எழுதக் கூடாது என்று சொல்லவில்லையே என்று கேட்பீர்களானால்..

பரிசல்தான் பதில் சொல்ல வேண்டும்.


_______________________ ________________ ________________

மற்ற கதைகளின் விமர்சனங்களும், முடிவு அறிவிக்கப்படும் நேரமும் இன்று மாலைக்குள் என் பதிவில் எதிர்பார்க்கலாம்.

நன்றி.

.

இந்தச் சிறுகதைப் போட்டி எங்களுக்கு தந்த சவால் குறித்து நான் எழுதியது பரிசல்காரனின் இந்தப் பதிவில்...


.

24 comments:

இராமசாமி கண்ணண் said...

வாரமலர் ஸ்டைல் நடையை மற்றும் மாற்றி இருக்கலாம்.
---

அதுல என்னங்க பிராப்ளம்..

இராமசாமி கண்ணண் said...

அந்த நடையையும் ரசிக்கிறவங்க இருக்காங்களாயா :)

HVL said...

ரொம்ப நன்றி! எனக்கும் என்னோட கதைய பத்தி இப்போ தான் தெரியுது!

நசரேயன் said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

வழிப்போக்கன் - யோகேஷ் said...

சவால் போட்டியை போட்டியாளர்களுக்கு சமமாக சவாலாக எடுத்துக்கொண்டு செயல்படுத்திய பொறுப்பாளர்கள் : பரிசல் , ஆதி.
நடுவர்குழு நண்பர்கள் : வெண்பூ, அப்துல்லா, ஜீவ்ஸ்
பங்கு பெற்ற போட்டியாளர்கள்.
பரிசு பெறப்போகும் வெற்றியாளர்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

aru(su)vai-raj said...

விமர்சனங்களுக்கு நன்றி. " 75 .காமினியிலும் எந்திரன்" என்ற கதையை எழுதி அனுப்பியவன் என்ற முறையில் சொல்கின்றேன். முதல் எழுதிய கதையில் சில மாற்றங்கள் செய்து, இறுதியில் இரு பத்திகள் இணைத்துத்தான் அனுப்பியிருந்தேன். பரிசல் அவர்களும் இது தெரிந்துதான், இதற்கு வேறு எண்ணிட்டு, நடுவர்களிடம் அனுப்பியிருப்பார். இந்த விமர்சனத்திலிருந்தே தெரிகிறது, நடுவர்கள் கதையை கவனத்துடன் வாசிக்காமல் மேலோட்டமாக வாசித்திருப்பது.

aru(su)vai-raj said...

மேலும் 36 வது (எனது) கதையின் ஒருவரி விமர்சனத்தைக் கண்டால், நடுவர்களுக்கு அக்கதை ஓட்டம் புரியவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறதே தவிர .... மேலும் சில கதைகளின் விமர்சனத்தை வாசித்தாலும் இதே எ:.பக்ட் தான்...

Madhavan said...

//74. அம்மா அருள் காமி-நீ! - மாதவன்

// ஆங்காங்கே புன்ன‌கைக்க‌ வைக்கும் வ‌ரிக‌ள் ப‌ல‌ம்.
ஆனாலும் நடைக்கு ஒரு ஷொட்டு!//

நன்றி..

// நீண்ட‌ விள‌க்க‌ங்க‌ள், எழுத்துப்பிழைக‌ள் எல்லாம் மைன‌ஸ்.//

வள வளாவை குறைத்திருக்கலாம்....
எழுத்துப் பிழை -- கவனமின்மை மற்றும் உங்களுக்கு அனும்பும் அவசரம்..

எனக்கு பரிசு கிடைக்க வில்லைஎன்றாலும்(!).. ஒரு திருப்தி / தன்னிறைவு கிடைத்துவிட்டது.
வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாபு அனு மற்றும் ப்ரியமுடன் ரமேஷ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Gopi Ramamoorthy said...

http://ramamoorthygopi.blogspot.com/2010/11/blog-post_15.html

வெறும்பய said...

பாபு அனு மற்றும் ப்ரியமுடன் ரமேஷ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Gopi Ramamoorthy said...

போட்டி முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது போன்ற பதிவுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன. எனக்கு இந்த நேரத்தில் விமர்சனங்கள் தேவை இல்லை. போட்டியின் முடிவுகள்தான். கலந்து கொண்டவன் என்கிற உரிமையில் கேட்கிறேன்.

இந்த வாரத்துக்குள் வெளியாகும், இன்று மாலைக்குள் என்று முடிவு வெளியாகும் என்று அறிவிப்போம் என்று நீங்கள் அடுத்தடுத்து சொல்லிக் கொண்டே போவது எனக்குப் பிடிக்கவில்லை. போதும் இந்த பில்ட் அப். எரிச்சல் உண்டாகிறது

நீச்சல்காரன் said...

பிரம்மாண்ட உழைப்பை தந்து போட்டி நடத்தியதற்கு பாராட்டுக்கள். உங்கள் விமர்சனத்தை ஏற்கிறேன். வைரக்கடத்தல் பற்றிய ஆதார சிடி மற்றும் வைரம் பதிக்கப்பட்ட எந்திர துப்பாக்கி இந்த இரண்டின் பாஸ்கோட் எந்திரன் என்கிற ஒரே பெயர். அந்தப் பெயர் குழப்பத்தால் நடக்கும் கதை என்கிற மையத்தை சரியாக சொல்லப்படாததற்கு வருந்துகிறேன்

பிரியமுடன் ரமேஷ் said...

//65. உண்மை சொன்னாள் - பிரியமுடன் ரமேஷ்

குழந்தைகளின் நடவடிக்கையில் இருந்து பெரியவர்கள் பாடம் கற்றுக் கொள்ளும் குடும்ப / சமூகக் கதை. தெளிவான நடை. நல்ல முயற்சி.

பாராட்டுக்கு நன்றி.. கொஞ்சம் விரிவான விமர்சனமாக எதிர்பார்த்தேன்..

வாழ்த்து தெரிவித்த ரமேஷ் மற்றும் ஜெயந்த் இருவருக்கும் எனது நன்றிகள்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

அமைதி கொள்ளுங்கள் மிஸ்டர்.கோபி ராமமூர்த்தி.

போட்டியின் பால் நீங்கள் கொண்ட அதீத ஈடுபாடே இவ்வாறு உங்களை எரிச்சல் படுத்துகிறது என உணர்கிறோம். எங்கள் நிலையையை இன்றைய 'பரிசல்காரன்' பதிவில் தெளிவாகவே சொல்லியிருக்கிறோம் என நம்புகிறேன். 15ம் தேதி அறிவிக்கவேண்டிய முடிவுகள் நாளை 17ம் தேதி வெளியாகப் போகின்றன. முன்னதாக கலந்துகொண்ட அனைவரின் பங்கேற்பையும் மதிக்கும் பொருட்டு விமர்சனங்கள் வெளியாகின்றன.

நிச்சயமாக உங்கள் ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்கும் எங்கள் அன்பும், நன்றியும்.

RVS said...

//நல்ல கருவை அழகாக டெவலப் செய்திருக்கிறார்.//
நன்றி... ஆத்தா நான் பாசாயிட்டேன்...
பிளஸ் டூவில் ஆயிரத்துக்கு மேல் மார்க் வருமா என்று எங்கும் மாணவனாய் காத்திருக்கிறேன்...
ரிசல்ட் எப்போ?

பதிவுலகில் பாபு said...

பிரியமுடன் ரமேஷ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

இரா.சிவக்குமரன் said...

நேரமிருந்தா pdf கோப்பா கொடுக்க முயற்சி பண்ணுங்க ஆதி! என்னோடது dial-up இணைப்பு. எங்க பகுதியில அகண்ட அலைவரிசை இணைப்பு இல்ல.

பார்வையாளன் said...

"ஆனால் தட்டச்சியதும் ரொம்ப வேகம் போல, எழுத்துப்பிழைகள் மிக அதிகம்"

கவனமாக இருந்து இருக்க வேண்டும்... இந்த குறைகளுக்கு வருந்துகிறேன்...

பரிசு அறிவிப்பதற்கு முன் அனைத்து விமர்சனங்களையும் வெளியிடுவது மிக மிக மிக பாராட்டத்தக்கது...
இதனால் உங்கலுக்கு அதிக பனி சுமை என்றாலும், கலந்து கொண்ட அனைவருக்கும் ஒரு நிறைவை தரும்...

கவிதா | Kavitha said...

எவ்வளவு (எழுத்து)ப்பிழை இருக்கிறதோ அவ்வளவு குறைச்சிக்கிட்டு மிச்சத்தை எனக்கே கொடுத்துடுங்க.. :))

தப்பு இல்லாம நானு தமிழை எழுதிட்டா.. அப்புறம் மண்டபத்தில் வாங்கினதுன்னு ஊரே சொல்லும்.. :)) இதுக்காகவே நான் திருந்த மாட்டேன் :)

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் ஆதி,பரிசல், ஜீவ்ஸ், வெண்பூ & அப்துல்லா. 70 க்கும் மேற்பட்ட கதைகளைப் படித்து, அதை விமர்சனம் செய்வது என்பது ஒரு சுலபமான வேலை கிடையாது. அதற்கு நிறைய உழைப்பும், பொறுமையும் தேவைப்படும். ஹாட்ஸ் ஆஃப் டு யூ ஆல்.

விஜி said...

@கவிதா, மண்டபத்தில் எழுதி வாங்கும் காப்பிரைட் நான் தான் வச்சிருக்கேன்.. தரமுடியாது :)

Nundhaa said...

நன்றி. வாழ்த்துகள்.

அனு said...

என் கதையின் விமர்சனத்திற்கு ரொம்ப நன்றி!!
--------------------
@ரமேஷ் & வெறும்பய

//பாபு அனு மற்றும் ப்ரியமுடன் ரமேஷ் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்//

உங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கொரு ஸ்பேஷல் நன்றி பார்சல்!!!