Tuesday, November 9, 2010

27

வினோத் ஒரு சுவாரசியமான மனிதன். அவனுடன் வேலை பார்க்கும் போது வேலைப் பளுவே தெரியாது. கிண்டலும் கேலியுமாக அவன் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். அவனிடம் இப்படியொரு கதை இருக்கும் என நான் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை.

அவன், இங்கே நாங்கள் வேலை பார்க்கும் கம்பெனிக்கு அருகில் ஒரு அறையில் தங்கியிருந்தான். அப்பா, அம்மா, தங்கை என்ற அவனது எளிய குடும்பம் சொந்த ஊரான மதுரையில் இருக்கிறது. அவனது அப்பா ஏதோ பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு பின்னாலேயே சென்று ஆசிரியர்களிடம் பிள்ளையைப் பற்றி விசாரித்து வருவதைப்போல இவன் எங்கள் கம்பெனியில் வேலைக்குச் சேரும் போது கூடவே வந்திருந்தார். அதன் பின்னும் கூட மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது சாக்கு வைத்து இவனைக் காண வந்துவிடுவார். வருவதுமல்லாமல் எங்கள் மேலாளரைப் பார்த்து ஐந்து நிமிடங்கள் பேசி விட்டுத்தான் செல்வார். அதைக் காட்டி இவனைக் கிண்டல் செய்வது எங்களுக்கு ஒரு சுவாரசியம்.

இப்படியான சூழலில் வினோத்துக்கும் எனக்கும் இடையே உருவான நட்பு, அவன் எங்கள் வீட்டுக்கு வந்துசெல்லுமளவில் வளர்ந்திருந்தது. என் வீட்டுக்கு மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை வருவான். மாலை நேரத்தில் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்துவிட்டு செல்வான். வீட்டில் நிலைமை சுமுகமாக இருந்தால் அப்படி அவன் கிளம்பும் போது நானும் கூடவே கிளம்பிவிடுவேன். சினிமாவுக்குச் செல்வதோ, பக்கத்து டாஸ்மாக்கில் ஒரு பியர் அடிப்பதோ நடக்கும். கொஞ்ச காலமாக தனித்துவிடப்பட்டுள்ளோமோ என்ற சந்தேகத்திலிருக்கும் போதே ரசனையான இவனது நட்பு எனக்கு புத்துணர்ச்சியை அளிப்பதாக இருந்தது.

சமீபத்தில் ஒரு நாளில் பக்கத்தில் இருந்த ஒரு டாஸ்மாக்கின் மொட்டைமாடியில் அமர்ந்திருந்தோம். எங்கள் முன் இரண்டு பியர் பாட்டில்களும் கொஞ்சம் சைட் டிஷ்களும் இருந்தன. மழை வரும் போல இருந்ததால், அந்த டாஸ்மாக் குடிச்சாலையின் சுத்தமற்ற, இரைச்சலான சூழலும் கூட கொஞ்சம் மட்டுப்பட்டதாக இருந்தது. மழை பெய்தாலும் கீழே போகாமல் இருந்துவிடவேண்டியதுதான் என நினைத்துக்கொண்டேன்.

அப்போதுதான் வினோத்தைக் கவனித்தேன். என்னாச்சு இவனுக்கு? அவன் மூடிவைத்திருந்த தன் இடது உள்ளங்கையையே பார்த்துக்கொண்டிருந்தான். மெதுவாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு மத்தியமமாக இருந்தது.

"என்னது கையில்?" என்றேன்.

கையை விரித்தான். உள்ளங்கையில் இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளும், சில நாணயங்களும் இருந்தன.

"ரூபாய். அதுக்கென்ன இப்போ? எதுக்கு சிரிப்பு?"

"இது எவ்வளவு தெரியுமா?"

"எவ்ளோ?"

"இருபத்தேழு ரூபாய்"

"சரி..."

ஒரு பெருமூச்சு விட்டான், "இல்ல கேகே.. உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டிருக்கேன். கொஞ்சம் பர்சனல், இது வரைக்கும் யார்கிட்டயும் சொன்னதில்ல.."

நான் கொஞ்சம் வியப்போடும், ரகசியம் என்றபடியால் தன்னிச்சையாக எழுந்த ஆர்வத்தோடும் அவனைப் பார்த்தேன். சில விநாடிகள் அமைதியாக இருந்தவன் மெதுவாகத் துவங்கினான்.

"என் ஆஃபீஸ் ஐடி நம்பர் 2327.."

"அதுக்கென்ன இப்போ?"

"பொறுங்க, நேரடியாவே விஷயத்துக்கு வர்றேன், 27 ங்கிற நம்பர் என்னை வாழ்க்கை பூரா துரத்திகிட்டிருக்கு கேகே. என்னோட ஸ்கூல், காலெஜ், ஆஃபீஸ் ஐடி நம்பர்கள், இப்ப நான் தங்கியிருக்கிற வீட்டு நம்பர் எல்லாத்திலயுமே இந்த 27 இருக்கும். சம்திங் ஸ்ட்ரேஞ்ச். இந்த மாதிரி எண்கள் மட்டுமில்ல, என்னோட போன் நம்பர், பாங்க் அக்கவுண்ட் நம்பர், ட்ரைவிங் லைசன்ஸ் நம்பர், பாஸ்போர்ட் எல்லாத்திலயும் இந்த நம்பர் இருக்கு. இந்த மாதிரி நிரந்தர எண்கள் மட்டுமில்ல, இன்னும் கூர்ந்து கவனிச்சா என்னோட சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்கள்லயும், நான் பார்க்கக்கூடிய இடங்களிலும் உதாரணமா எக்ஸாம் ரெஜிட்ரேஷன் நம்பர்ஸ், ட்ரெயின் டிக்கெட்ஸ் மாதிரி கடந்துபோற விஷயங்களிலும் இது இருக்கும். கூட்டுத்தொகை மாதிரியெல்லாம் நான் பாக்குறதில்லை. விஸிபிளாகவே அது இருக்கும்.."

என் அப்பா ஒரு கடவுள் மறுப்பாளர். எங்கள் வீட்டில் தொங்கிக்கொண்டிருந்த பெரியாரின் போட்டோவை பார்த்து விபரம் தெரியும் வரை அவரை என் சொந்த தாத்தா என்றே நினைத்து வளர்ந்தவன் நான். அப்படியிருக்க வினோத்தின் கதையை கொஞ்சம் எள்ளலோடும், கொஞ்சம் வியப்போடும் கேட்டுக்கொண்டிந்தேன்.

"உனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கா வினோத், எல்லாமே தற்செயல் என்ற முடிவுக்குதான் நான் வரவேண்டும்" ஆச்சரியத்தோடே சொன்னேன்.

"இருங்க கேகே, நான் இன்னும் முடிக்கலை, என்னோட ஜாதகத்துலயும் ஒரு முக்கியமான விஷயம் இருக்குதாம்.. நான் என் 27வது வயசுல இறந்து போயிடுவேன்கிறதுதான் அது. எங்க அப்பா, அம்மா வருசக்கணக்கா இதையே திங்க் பண்ணி திங்க் பண்ணி பைத்தியமாகுற நிலைமைக்கு வந்துட்டாங்க.. கடைசியா சுயநலமா ஒரு முடிவு எடுத்திருக்காங்க. நான் ஒரே பையன்கிறதால எனக்கு உடனே கல்யாணம் பண்ணிவைச்சு ஒரு பேரனோ, பேத்தியோ பாத்துடணும்ங்கிறது அவங்க முடிவு.."

நான் என்ன சொல்வதென புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். தொடர்ந்தான்.

"ஆனா, நான் கல்யாணம் பண்ணிக்கப்போறதில்லை கேகே. எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கான்னு கேட்டா எனக்கு சொல்லத்தெரியலை. நான் சாமி கும்பிடறதில்லை. ஆனாலும் ரொம்பக் குழப்பமா இருக்கேன். இன்னொரு பொண்ணோட வாழ்க்கையில ரிஸ்க் எடுக்க எனக்கு மனசில்லை.. என்னோட பிறந்தநாள் தெரியுமா உங்களுக்கு.?"

"அ..அ.. இருபத்தேழா?"

சிரித்தான். "27.06.1984, நாளைக்கு என்னோட பிறந்தநாள்.. இருபத்தாறாவது பிறந்தநாள். இருபத்தேழில் எண்டராகிறேன்.."

நான் சிரிப்பதா, சீரியஸாவதா புரியாமல் குழம்பினேன்.

"என்ன இப்பிடிச் சொல்றே.."

"எஸ் கேகே, இன்னும் 365 நாளிருக்கு இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு தெரியறதுக்கு.. எல்லாமே தற்செயல்தானா? இல்லை அந்த தற்செயலே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதானா எனத் தெரிஞ்சுடும்.. என்னைப் பொறுத்தவரைக்கும்.."

"என்ன சொல்றதுன்னே புரியலை, இப்போதைக்கு ஒண்ணுதான் தோணுது. சும்மான்னா நீ அப்படிக் கவனிச்சிருக்கவே மாட்டியோ? ஜாதகம் ஒரு டுபாகூர். அதுல அப்படி 27ன்னு எவனோ உளறினதால நீ எல்லாவற்றையும் கூர்ந்து கவனிச்சுக்கிட்டே வந்திருக்கறதாத்தான் தோணுது. இருக்கற நம்பர்ஸ் மொத்தமே பத்துதான். இது நம்பர்களால் ஆன உலகம், நம்மைச்சுற்றிலும் பூராவும் நம்பர்கள்தான். ரெண்டு நம்பர்ஸ் சேர்ந்து வர எவ்வளவோ வாய்ப்பிருக்குது. ஒவ்வொருத்தரும் இப்படிக் கவனிக்க ஆரம்பிச்சா இது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் தெரியலாம். அதனால இத அப்படியே மறந்துட்டு பாசிடிவ் எண்ணங்களை வளர்த்துக்க.."

"உங்களுக்கே தெரியும், நான் அப்படித்தான் இதுவரை இருந்திருக்கேன், இனியும் அப்படித்தான் இருப்பேன்.." அழகாய்ச் சிரித்தான்.

அன்றிலிருந்து மூன்றாவது நாள் மாலை அலுவலக நண்பர்கள் ஆறேழு பேர் அஞ்சப்பர் போய் நன்றாக கட்டிக்கொண்டு அருகிலிருந்த ஒரு தியேட்டருக்கு வந்தோம். வேறென்ன? வினோத்தின் பிறந்த நாள் ட்ரீட்டுதான். அப்போதுதான் ரிலீஸ் ஆகியிருந்த படமாகையால் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அடித்துப்பிடித்து டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்து எங்கள் இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம். விளக்குகள் அணைக்கப்பட்டு டைட்டில் ஓடத்துவங்கியிருந்தது. உட்கார்ந்ததுமே எனக்கு வலதுபுறம் அமர்ந்திருந்த வினோத் என்னைச் சுரண்டினான்.

திரும்பினேன். கொஞ்சம் குனிந்து தனது மொபைலின் ஒரு பட்டனை அழுத்தி அதன் திரையின் வெளிச்சத்தில் அவனது இருக்கையின் வலது புற கைப்பிடியின் கீழ்ப்பலகையைக் காண்பித்தான். அவனது இருக்கை எண்.

27.

இப்போது மெலிதான புன்னகையுடன் சினிமாவைப் பார்க்கத்துவங்கியிருந்தான் அவன்.

.

37 comments:

அமுதா கிருஷ்ணா said...

எனக்கு 8 ஆம் நம்பரில் இப்படி நம்பிக்கை உண்டு..சிலருக்கு இப்படி நிஜமா நடக்கும். எப்பவும் பஸ்ஸில், ட்ரையினில் 8 ஆம் நம்பர் சீட் கிடைக்கும்...

தராசு said...

//அந்த டாஸ்மாக் குடிச்சாலையின் //

நம்ம கடைக்கு என்னமா பேர் வைக்கறாய்ங்கப்பா...

அசத்தல் கதை தல..

சுசி said...

கடைசில லேபல் பாத்ததும்.. அப்பாடா..

vinu said...

iiiiiiiiiiiiiiiiiiiiiya me the heroooooo


[appudeena innum 2 monthsla naan sethuppoveannnaaaa enna ennakum 27 running now he he he ]

அன்பரசன் said...

கேட்கவே வித்தியாசமா இருக்கே.

Dhosai said...

nalla padhivu.. andha beer'oda name enna.?

ILA(@)இளா said...

அருமையான கதை..

அப்புறம், தக்காளி ரசம் வெச்சவங்களைப் பார்த்திருக்கேன், மிளகு ரசம் வெச்சவங்களைப் பார்த்திருக்கேன். அதென்ன அஹம் ரசம் வெச்சவங்க?

இனியா said...

27 ஆவது பின்னூட்டத்தை நண்பர் வினோத் எழுதுவாரா?

அனுஜன்யா said...

வெகுஜனக்கதையின் சாமுத்திரிகா லட்சணங்களுடன் இருக்கிறது என்று ஒற்றை வரியில் உள்ளூர புகைச்சலுடன் சொல்லிக் கொள்கிறேன். அது என்னப்பா, கதையில் கே.கே. என்று வந்தாலே கூடவே சுவாரஸ்யமும் சேர்ந்து கொள்கிறது!

எனக்குப் பிடிச்சிருக்கு. வாழ்த்துகள் ஆதி.

அனுஜன்யா

பி.கு.: சென்ற வாரம் ஒரு மாலை இள வெய்யில் நேரம் உங்க அலுவலகம் இருந்த சாலை வழி சென்றேன். பெரிய்ய்ய வளாகம். தப்பித்த நீங்கள் சொல்ல விழையும் 'நன்றி'க்கு என் புன்னகைதான் பதில் :)

வானம்பாடிகள் said...

பிரமாதம் ஆதி

கார்க்கி said...

சொன்ன இடத்தில் மாற்றங்கள் செய்தமைக்கு நன்றி

அனுஜன்யா,
தல... சென்னையா????????/

தமிழ்ப்பறவை said...

ரொம்ப பிடிச்சது ஆதி... :)

பிரதீபா said...

அட !!

அன்னு said...

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்...

சிவா said...

எங்க அப்பாவிற்கும் இதே போல் நம்பிக்கை! 9 ஆம் நம்பர் அவரைத் துரத்துவதாக!

பாலா அறம்வளர்த்தான் said...

சுவாரஸ்யமாக எழுதி இருக்கிறீர்கள் பாஸ்!!!
கடைசியில் சொல்ல வருவது என்ன? - ஒரு Rational person கூட ஆச்சர்யப் பட வைக்கிற 'தற்செயலோ' என்பதா?

'Deep Simplicity' என்ற அறிவியல் புத்தகம் படித்திருக்கிறீர்களா?

Rajasurian said...

சே கதைதானா? நான் லேபில் பார்க்காமல் நிஜமோன்னு நினைச்சு திகிலாயிட்டேன். பின்னூட்டம் பார்த்து பின் லேபிள் பார்த்துதான்...
அப்பாடா...
அசத்தலான எழுத்து :)

Sukumar Swaminathan said...

நல்லவேளை 27ம் பிறந்தநாளை இப்பத்தான் கடந்தோம்ங்கிற அளவிற்கு பயம் வர வச்சிட்டீங்க... எக்ஸ்லன்ட்
இதையே கார்க்கியை வச்சு ஒரு குறும்படமா எடுத்திருந்தா எப்படி இருந்திருக்கும்? (அட நெசமாதாங்க சொல்றேன்)

தமிழ்ப்பறவை said...

//தையே கார்க்கியை வச்சு ஒரு குறும்படமா எடுத்திருந்தா எப்படி இருந்திருக்கும்? (அட நெசமாதாங்க சொல்றேன்)//
சரியாச் சொன்னீங்க.. நல்லாப் பொருந்தும். குறும்படத்திற்கேற்ற கதைதான்.ஆதி ப்ளீஸ் நோட் த பாயிண்ட்...

Karthick B said...

Suspense Thriller story .. Idha appadiyae thodar kadhaya podalamae .. Almost with storyline there is a movie called "The Number 23" casted by Jim Carrey . Its a wonderful movie too..

Karthick B

MSK said...

ஆதி அண்ணா..
The Number 23 (2007) என்றொரு படமிருக்கிறது. நாயகனை (jim carrey), எண் 23 துரத்தி துரத்தி அடிக்கும். உண்மையில் எண் 23 ஒருவரை பிடித்துவிட்டால், அவர் அவ்ளோதான் என்பார்கள். ( 2012-ல் உலகம் அழியும் என்பதும் இந்த எண் 23 கணக்கில் சரியாக வரும்.)
என்னையும் இந்த எண் 23 துரத்துவதாக சில சமயம் உணர்வேன்.. ஆனால் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை கிடையாது என்பதால், வேண்டுமென்றே என் கவிதைகளில் எண் 23-ஐ பயன்படுத்திக்கொண்டேயிருப்பேன். :)
http://en.wikipedia.org/wiki/23_enigma

பாலா சக்திதரன் said...

கதை படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. வினோத் மேல் ஒரு வித பரிதாபம்(soft corner) வருவதை தடுக்கமுடியவில்லை.

அமெரிக்காவில் 13ஆம் எண் ராசியில்லா எண்ணாக கருதபடுகிறது. அதிலும் 13ஆம் தேதி வெள்ளி கிழமையில்
வருமேயானால் அந்த நாள் மிகவும் துரதிருஷ்டவசமான நாளாக கருதபடுகிறது. சில விமானங்களிள் 13ஆம் எண்
இருக்கை இருக்காது.

MSK said...

23 வது பின்னூட்டம், என்னிடமிருந்து.. :)

MSK said...

அப்பறம் இன்னொன்னு அண்ணா..
blog எழுதுவதை நிறுத்தினால் கையை உடைப்பேன்.. :) அந்த எண்ணமே வரக்கூடாது உங்களுக்கு..

arul said...

MSK...நான் காலை உடைப்பேன் . அப்ப தான உக்காந்த எடத்துலயே எழுதி தள்ளுவாரு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அமுதா.

நன்றி தராசு.

நன்றி சுசி.

நன்றி வினு.

நன்றி அன்பரசன்.

நன்றி தோசை. (ரொம்ப முக்கியம். :-) )

நன்றி இளா. (அது பெஸல். உங்களுக்கு சொல்லமுடியாது)

நன்றி இனியா.

நன்றி அனுஜன்யா. (ஜில் பின்னூட்டம். அப்புறம் அதென்ன அநியாயம். ஊருக்கு வந்துட்டு சொல்லாம கொள்ளாம ஓடினா பரவாயில்லை. வாசல் வரைக்கும் வந்துட்டு சொல்லாம போயிருகீங்க.. திஸ் இஸ் டூ பேட். இந்த அழகில் இளவெயில் நேரம்னு கவிதை வேறயா.?)

நன்றி வானம்பாடிகள்.

நன்றி கார்க்கி. (உதை வாங்காமல் ஓடிப்போய்விடவும்)

நன்றி தமிழ்ப்பறவை.

நன்றி பிரதீபா.

நன்றி அன்னு.

நன்றி சிவா..

நன்றி பாலாஅறம்வளர்த்தான். (கரெக்டா சொன்னீங்க. நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் வாசித்ததில்லை)

நன்றி ராஜசூரியன்.

நன்றி சுகுமார். (ட்ரை பண்ணிடவேண்டியதுதான் :-) )

நன்றி கார்த்திக்.

நன்றி MSK. (அங்கே எழுத்தோ, சினிமாவோ ரொம்ப பெரிய களம், எண்ணற்ற கிரியேட்டர்ஸ் என்பதால் நாம் எதை எழுதினாலும் ஏற்கனவே அதே மாதிரி அவனுங்களும் செய்திருப்பதாய் தெரியவருகிறது. சே.!)

நன்றி சக்திதரன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

நன்றி அருள். (உடைக்குறதுல போட்டியாய்யா.. :-) )

கவிதை காதலன் said...

சில நம்பிக்கைகளுக்கு காரணம் சொல்ல முடியாது.. ஆனாலும் அவைகள் நம்மை வழி நடத்தி செல்லும். அது மனசுக்கு மட்டுமே புரியும் பாஷை..

டைட்டிலும் 27. கமெண்டும் 27.. ஆச்சர்யம் தான். நான் தான் 28வது......

Rajalakshmi Pakkirisamy said...

Good One

இனியா said...

நன்றி அருள். (உடைக்குறதுல போட்டியாய்யா.. :-) )

:):) too good

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு ஆதி.

Margie said...

//"27.06.1984, நாளைக்கு என்னோட பிறந்தநாள்.. //

//அன்றிலிருந்து மூன்றாவது நாள் மாலை அலுவலக நண்பர்கள் ஆறேழு பேர் அஞ்சப்பர் போய் நன்றாக கட்டிக்கொண்டு அருகிலிருந்த ஒரு தியேட்டருக்கு வந்தோம்.//

Continuity ???

என்னை 3 மற்றும் 3 -ன் products-ம் துரத்துகிறது

விக்னேஷ்வரி said...

இண்ட்ரெஸ்டிங் ரைட்டப்.

நர்சிம் said...

எழுதிய விதம் அருமை ஆதி.. நடுவில் சில இடங்களில் கட்டுரைத்தன்மை இருக்கோ??

Dinesh said...

இண்ட்லி-யில் 27வது ஓட்டு என்னோடது...

அப்போ எனக்கு எதுனா ஆகிடுமா ?

Mahesh said...

இன்ட்லி-ல 27 ஒட்டு !!!

ஆதிமூலகிருஷ்ணன் said...

கவிதைக்காதலன், ராஜலக்ஷ்மி, இனியா, ரவிஷங்கர், மார்கி, விக்னேஷ்வரி, நர்சிம் (ஆமாதான். என்ன பண்ணலான்றீங்க.. ஹிஹி..), தினேஷ், மகேஷ்..

நன்றி.