Tuesday, November 16, 2010

சவால் சிறுகதைப் போட்டி - விமர்சனங்கள் (3)

சவால் சிறுகதைப்போட்டியின் முடிவுகள் நாளைக்காலை (17.11.10) நண்பர் பரிசல்காரன் வலைப்பூவில் வெளியாகும். இந்தச் சிறிய தாமதத்தைப் பொறுத்துக்கொள்வீர்கள் என நம்புகிறோம். முன்னதாக கலந்துகொண்ட அத்தனை பேரின் ஆர்வத்தையும் மதிக்கும் பொருட்டு நடுவர்களை அனைத்துக்குமான விமர்சனங்களைக் கேட்டிருந்தோம். அவர்கள் தந்த அந்த குறிப்புகளை மூன்று பகுதிகளாக வெளியிடத்திட்டமிட்டு அதன் படியே செய்துள்ளோம். 1-40 கதைகளுக்கான விமர்சனங்கள் இங்கே. 41 –75 கதைகளுக்கான விமர்சனம் இங்கே. 76 –85 கதைகளுக்கான விமர்சனம் இதோ..

_______________

76. காமினியீயீயீயீ – இரும்புத்திரை

போட்டிக்கான‌ வ‌ரிக‌ளுக்கு ச‌ம்ப‌ந்தமே இல்லாத‌ க‌தை.. க‌தையின் ஹீரோ ப‌டிக்கும் ஒரு துண்டு காகித‌த்தில் போட்டிக்கான‌ வ‌ரிக‌ள் வ‌ருவ‌தாக‌ காட்டியிருப்ப‌தும், அந்த‌ வ‌ரிக‌ள் வ‌ரும் இட‌ங்க‌ளும் க‌தையில் ஒட்ட‌வே இல்லை. காமினி என்ப‌தை காமேஸ்வ‌ர‌ன் என்ற‌ அர‌வாணி என்று காட்டியிருக்கும் வித்தியாசமான சிந்தனைக்கு சபாஷ்!

77. சவால் - புதுவை பிரபா

வைர‌த்தை த‌ன் காத‌ல‌ன் சிவா துணையுட‌ன் க‌ட‌த்தும் காமினி, அது சிவாவின் அப்பா பெரிய‌ போலீஸ் அதிகாரி வைர‌க்க‌ட‌த்த‌லைத் த‌டுப்ப‌தில் த‌ன‌து போலீஸின் திற‌மையை சோதிக்க‌ வைக்கும் டிரில்.. அதில் எப்ப‌டி காமினி வெற்றி பெறுகிறார், அத‌ன் மூல‌ம் த‌ன் காத‌லிலும் எப்ப‌டி ஜெயிக்கிறார் என்ப‌தை ந‌ன்றாக‌ சொல்லியிருக்கிறார். யூகிக்க‌ முடியாத‌ க்ளைமாக்ஸ் இத‌ன் ப‌ல‌ம். ந‌ல்ல‌ முய‌ற்சி.

78. சவாலே சமாளி – மிடில்கிளாஸ் மாதவி

மனைவிக்காக வீட்டில் சீரியல் பார்க்கும் கணவன். சீரியலில் வருவதாக
போட்டிக்கான வரிகள். மொத்த கதையுமே ஒரு பக்கக் கதையின் அளவில் பாதிதான்
என்பதே இதை சீரியஸ் முயற்சியாக நினைக்க வைக்கவில்லை.

79. காதல் ரோபோ - ஷைலஜா

ஜோதிடம், அறிவியல், ரோபோ என்று ஒரு கலவை. கதையின் மூன்றாவது வரிக்காக
வலிந்து திணிக்கப்பட்டுள்ள வைர மேட்டர் கதையுடன் ஒட்டவில்லை. ரோபோ மூலம்
காமினி ஆள் மாறாட்டம் நடப்பது ஒரு கதையாகவும், வைரம் சம்பந்தப்பட்டவை
இன்னொரு கதையாகவும் தனித்தனியாக நிற்கின்றன. நல்ல முயற்சி. இன்னும்
நன்றாக செய்திருக்கலாம்.

80. டைமண்ட் – சுபாங்கன்

யூகிக்க‌ முடிகிற‌ திருப்ப‌ங்க‌ளுட‌ன் செல்கிற‌ க‌தை ச‌ட் ச‌ட் என்று எதிர்பாராத‌ திருப்ப‌ங்க‌ளை க்ளைமாக்ஸில் கொடுத்து ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுத்துகிற‌து. காமினிக்கே தெரியாம‌ல் அவ‌ள் ல‌க்கேஜ் மூல‌ம் வைர‌ம் க‌ட‌த்தும் சிவா + ப‌ர‌ந்தாம‌ன் கூட்ட‌ணி. ப‌ர‌ந்தாம‌ன் காமினிக்கு ச‌ர்ப்ரைஸ் கொடுக்க‌, சிவா ப‌ர‌ந்தாம‌னுக்கு ச‌ர்ப்ரைஸ் கொடுக்கிறார். காமினி இவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் ச‌ர்ப்ரைஸ் அதிர்ச்சியை கொடுக்கிறார். ந‌ல்ல‌ முய‌ற்சி.

81. அக்டோபர் 1: கவர் ஸ்டோரி - கோபி ராமமூர்த்தி

ச‌வால் சிறுக‌தைப் போட்டியை மைய‌மாக‌ வைத்தே வ‌ந்திருக்கும் ம‌ற்றொரு க‌தை. ஆனால் இத‌ன் முடிவு நன்று. போட்டி குறித்த‌ பேட்டியை சிற்றித‌ழில் வெளியிட‌ ந‌ட‌க்கும் உரையாட‌ல்க‌ளும் அதைத் தொட‌ர்ந்து உத‌வி ஆசிரிய‌ர் போட்டிக்கான‌ க‌தையையும் எழுதுவ‌து என்று ப்ளைனாக‌வே செல்லும் க‌தை க‌டைசி வ‌ரியில் த‌லைப்பு இந்த‌ க‌தையின் த‌லைப்பே என்று முடிக்கும்போது அட‌ போட‌ வைக்கிற‌து. அப்ப அந்த‌ உ.ஆ. இந்த‌ க‌தையையே எழுதியிருப்பானா? என்று தோன்றும்போது புன்ன‌கைக்க‌ வைக்கிற‌து.

82. கணினி எழுதும் கதை - கோபி ராமமூர்த்தி

க‌தைப்போட்டியை வைத்தே வ‌ந்திருக்கும் ம‌ற்றுமொரு க‌தை. பெரும்பாலான‌ க‌தைக‌ளில் ப‌திவ‌ர் கோபி ஒரு கேர‌க்ட‌ராக‌ வ‌ந்திருப்ப‌தால் இது அவ‌ரே எழுதியிருக்க‌வேண்டும். இந்த‌ க‌தையில் க‌தையை க‌ணிணியில் எழுத‌ ஒரு மென்பொருள் நிறுவ‌ன‌ம் எடுக்கும் முய‌ற்சியும், அத‌ன் முடிவுக‌ளும் என்று ந‌ன்றாக‌ இருக்கிற‌து. முடிவில் கோபிக்கு ப‌ரிசு கிடைப்ப‌தாக‌வும், அத‌ற்காக‌ அவ‌ரை வேலைக்கு எடுக்க‌ க‌ம்பெனி மெயில் அனுப்ப‌வ‌துட‌ன் க‌தை முடிவ‌டைகிற‌து. இவ‌ரின் ம‌ற்ற‌ க‌தைக‌ளுட‌ன் ஒப்பிடுகையில் இது ந‌ல்ல‌ க‌ருவுட‌ன் ந‌ன்றாக‌ டெவ‌ல‌ப் செய்ய்ப்ப‌ட்டிருப்ப‌து தெரிகிற‌து.

ஒரே ஒரு வேண்டுகோள்: கோபி (அ) இந்த‌ க‌தைக‌ளை எழுதிய‌வ‌ர் ம‌ற்ற‌ தீம்க‌ளை வைத்து க‌தை எழுதியிருக்கிறாரா என்று தெரிய‌வில்லை. அப்ப‌டி எழுதியிருந்தால் ம‌கிழ்ச்சியே. இல்லையெனில் முய‌ற்சிக்க‌வும். கார‌ண‌ம் ஒரு க‌ருவையே இத்த‌னை வித‌ங்க‌ளில் யோசிக்க‌ முடிந்த‌வ‌ர் க‌தைக் க‌ருக்காக‌வும் மென‌க்கெட்டால் சிற‌ந்த‌ க‌தைக‌ளைத் த‌ர‌ முடியும்.

83. காமினி - பிரபாகரன்.ஜி.

க‌தை தெளிவாக‌ புரிய‌வில்லை. வைர‌க்க‌ட‌த்த‌லுக்கு காமினி உத‌வுகிறாள் என்ப‌தாக‌ புரிந்துகொள்கிறோம். ப‌ல‌ வ‌ரிக‌ள் புரிய‌வே இல்லை, உதார‌ண‌த்திற்கு
//பேருக்கு ஏத்த படி செல்வம் வெளியே எங்கே இருந்தாலும் வீட்டிற்குள் பொருக்கி வைத்து விடுவார்.//
ம‌றுவாசிப்பில் ச‌ரிசெய்து இருக்க‌லாம்.

84. சிரிக்கும் பெண்ணை நம்பாதே – பார்வையாளன்

ச‌ட்ட‌ச‌பையில் ந‌ம்பிக்கை இல்லா தீர்மான‌ம் எதிர்பாராம‌ல் தோற்க‌டிக்க‌ப்ப‌டுவ‌தில் ஆர‌ம்பித்து அத‌ற்கான‌ கார‌ண‌ங்க‌ளைத் தேடும் நிருப‌ர், அர‌சுக்கு சொந்த‌மான‌ வைர‌ம் அமுக்க‌ப்ப‌டுவ‌து என்று திருப்ப‌ங்க‌ளைக் கொண்ட‌ க‌தை. எக்ஸ்ப்ர‌ஸ் வேக‌த்தில் ஆர‌ம்பிக்கும் க‌தை க‌டைசி ப‌குதியில் கொஞ்ச‌ம் தொய்வ‌டைகிற‌து. க்ளைமாக்ஸை இன்னும் சிற‌ப்பாக‌ எழுதியிருக்க‌லாம் என்ற‌ அள‌விற்கு வித்தியாச‌மான‌ க‌தை + ந‌டை. நல்ல‌ முய‌ற்சி.

85. வைரம் உன் தேகம் - அபி

த‌ன் ப‌ர‌ம்ப‌ரைக்கு சொந்த‌மான‌ கோஹினூர் வைர‌த்தை பிரிட்டிஷ் ம்யூசிய‌த்தில் இருந்து காமினி க‌ட‌த்தி வ‌ரும் க‌தை. காமினி செய்வ‌து த‌வ‌றில்லை என்று விள‌க்கினாலும் அது ச‌ட்ட‌ விரோத‌ம் ம‌ற்றும் போலீஸில் இருந்து த‌ப்பிக்கிறார்கள். அத‌னால் இந்த‌ க‌தை போட்டியில் இருந்து வில‌க்க‌ப்ப‌டுகிற‌து.

பின் குறிப்பு : போட்டியில் கலந்துகொண்ட கதைகள் 84. இதுவரை 83 எனக் குறிப்பிடப்பட்டது தவறு. பரிசலின் கதைத் தொகுப்பு இணைப்பில் கடைசி இரண்டு கதைகளுக்கு 83 என ஒரே எண் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கிறது. விமர்சனப்பதிவுகளில் நீங்கள் 85 கதைகளைக் காணமுடியும். 53ம் எண் கொண்ட ஒரு கதை போட்டிக்குரியதல்ல, தவறுதலாக நடுவர்களுக்கு அனுப்பப்பட்டதாகும்.

.

9 comments:

பாரத்... பாரதி... said...

//அஹம் ரஸனையாஸ்மி//
அருமை...

இரும்புத்திரை said...

எல்லோரையும் போல த்ரில்லர் எழுதணுமா என்று யோசித்து தான் வேறு மாதிரி எழுதினேன். எந்த கதை போட்டிக்கு நான் எழுதினால் மட்டும் இந்த நடுவர்கள் கதைக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிருவாங்க.அடப்போங்கப்பா.இதான் ஊரோடு ஒத்து வாழணும்.

இரும்புத்திரை said...
This comment has been removed by the author.
கலாநேசன் said...

முடிவுகள் நாளையே வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி.

பிரதீபா said...

நாளைக்கா முடிவு சொல்லப் போறீங்க? ஒரே பரபரப்பா இருக்கே !!

பார்வையாளன் said...

இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற கதைகளின் பட்டியலை வெளியிட்டால் நல்லது

இராகவன் நைஜிரியா said...

தேர்வு எழுதுவதைவிட, விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்பாடு கொஞ்சம் கஷ்டம்தான். அதிலும் அரையாண்டு தேர்வுக்கு பின் வரும் விடுமுறைக்குள் அனைத்து விடைத்தாள்களையும் திருத்தி மதிப்பெண் கொடுத்து, ப்ராக்ரஸ் ரிப்போர் எழுதி.. கிட்டதட்ட அதே மாதிரி... நல்ல அனாலிசிஸ்... குட் ஆதி, பரிசல், வெண்பூ, அப்துல்லா & ஜீவ்ஸ்.

Discovery book palace said...

பதிவுலகில் ஒரு புறம் தேவையற்ற அரட்டை , மற்றுமொருபுறம் வீண்வம்புகள் என்று போய்கொண்டிருக்கும் காலத்தில் மிக அவசியமான ஒரு உத்வேகத்தை தரக்கூடிய ( 84 பேரை எழுத தூண்டுவது என்பது சாதாரன காரியமா என்ன?) போட்டியை நடத்தி முடித்துள்ளீர்கள், இந்த போட்டியை ஒருங்கிணைத்த குழுவினருக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

middleclassmadhavi said...

முதலில் ஒரு ஷொட்டு - நான் சீரியசாக எழுதவில்லை என்று சொன்னதற்கு - நான் காமெடியாக எழுதத் தான் முயற்சி செய்தேன்!:)). (http://middleclassmadhavi.blogspot.com/2010/10/short-story-competition) ஆனாலும் ஒரு வருத்தம்- சீரியலில் அந்த 3 வாக்கியங்கள் வந்தாலும், அந்தக் கதைக்கும் ஒரு தொடர்ச்சியும் முடிவும் இருந்ததாக நினைக்கிறேன். என்னை தொடர்ந்து எழுதத தூண்டியமைக்கு நன்றி.